Jump to content

ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதை 

ஆஸ்கர்

பட மூலாதாரம்,NETFLIX/GUNEETMONGA

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கருக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த ஆவணப்படம்.

தாயைப் பிரிந்து குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம்.

நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார். 

 
Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

“இன்றைய ஆஸ்கர் பரிந்துரை அன்பு கொண்ட கதைகள் மற்றும் ஒரு பெரிய தொலைக்குப் பார்வைக்கு சளைக்காமல் தங்களை அர்ப்பணிக்கும் நபர்கள் மீதான எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அப்பாவித்தனமும் நேர்மையும்தான் எல்லைகளைத் தாண்டி, யானை விஸ்பரர்களை ஊட்டி என்ற சிறிய நகரத்திலிருந்து சினிமாவின் மிகப்பெரிய மேடைக்கு பயணிக்க வைத்தது” என்று தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பதிவில் குனீத்மோங்கா குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cyewjedpygeo

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கருக்கு சென்ற `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்`  : பொம்மன், பெள்ளி இப்போது என்ன செய்கிறார்கள்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,திவ்யா ஜெயராஜ்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்
யானை, ஆவணப்படம், முதுமலை

பட மூலாதாரம்,KARTIKIGONSALVES/INSTAGRAM

 
படக்குறிப்பு,

`எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படம்

தமிழகத்தின் முதுமலை பகுதியில்  யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும்  பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.  

காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ்.

தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன், வால் வெட்டுபட்டு,  இறக்கும் தருவாயில் ஒரு குட்டி யானை காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது. காப்பகத்தில் இருந்த பலரும் இனி அதை காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என ஒதுங்கி கொள்ள பொம்மன் மட்டுமே அதனை என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி தன்னுடன் அழைத்து வருகிறார்.

யானையை வளர்ப்பதற்கு அவருக்கு துணையாக பெள்ளியும் வருகிறார். அந்த யானைகுட்டிக்கு ரகு என பெயர் சூட்டி தனது குழந்தையை போலவே பராமரித்து வந்த அவர், தான் சொன்னது போலவே அந்த குட்டியை இயல்பான உடல்நிலைக்கு தேற்றிவிட்டார். அதன்பின் அவருக்கு துணையாக வந்த பெள்ளிக்கு அம்மு என்ற பெண் குட்டி யானையை பராமரிக்க கொடுக்கிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் 50 வயதை கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

 

பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள். இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் இத்தகைய நிபந்தனையற்ற அன்புதான் `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. ஆஸ்கருக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இப்போது இந்த ஆவணப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இத்தனை பெரிய வரவேற்பு தங்களின் கதைக்கு கிடைக்குமென பொம்மன், பெள்ளி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.  எப்போதும்போல் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல்  முதுமலையில் தங்களது அன்றாட வேலையை பார்த்து வருகின்றனர்.

பொம்மன், பெள்ளியிடம் பேசுவதற்காக  பிபிசி தமிழ் அவர்களை தொடர்புகொண்டபோது  பொம்மன் யானையுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தார். `நேரம் ஆகிருச்சு சீக்கிரம் கிளம்பு` என்று பெள்ளியின் குரல் மட்டும் பிண்ணனியில் ஒலித்தது. யானையுடன் சென்றுக்கொண்டே பொம்மன் நம்மிடம் பேச துவங்கினார். ஆனால் இப்போது அவருடன் இருக்கும் யானையின் பெயர் ரகு அல்ல கிருஷ்ணா!

யானை, ஆவணப்படம், முதுமலை

பட மூலாதாரம்,KARTIKIGONSALVES/INSTAGRAM

 
படக்குறிப்பு,

யானைகளுடன் பொம்மன், பெள்ளி

`இந்த ஆவணப்படத்தை எடுத்த கார்த்திகி என்னும் பெண் எனக்கு நீண்டநாட்களாக தெரிந்தவர்தான். அவரும் அவருடைய நண்பர்களும் அடிக்கடி முதுமலை வருவார்கள். அப்படி ஒருமுறை ரகுவை நான் எடுத்து வளர்க்க துவங்கிய காலத்தில் அவர்கள் வந்திருந்தார்கள். அப்போதுதான் இந்த குட்டியானையுடன் சேர்த்து உங்களை ஒரு படம் எடுக்கிறோம் என கூறி இந்த ஆவணப்படத்தின் படபிடிப்பை அவர்கள் ஆரம்பித்தனர்` என்று பிபிசியிடம் பேச துவங்குகிறார் பொம்மன்.

` இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து  இந்த படப்பிடிப்பை மேற்கொண்டனர். ஒவ்வொரு முறை வரும்போது வெவ்வேறு எண்ணிக்கையிலான  ஆட்கள் வருவார்கள். அவ்வபோது முதுமலைக்கு வரும் அவர்கள் காலையில் சிறுது நேரம், மாலையில் சிறுது நேரம் என படப்பிடிப்பை தொடர்ந்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் மும்பையிலிருந்து வந்தவர்கள் என நினைக்கிறேன்` என்றும்  அவர் குறிப்பிடுகிறார்.

சர்வதேச அளவில் முக்கியமான விருதாக கருதப்படும் ஆஸ்கருக்கு தற்போது இந்த ஆவணப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்தான கேள்வியை பிபிசி தமிழ் அவரிடம் முன்வைத்த போது, `அவர்கள் எங்களை படம் பிடித்து வந்த நேரத்தில்  நாங்கள் அதனை மிகவும் சாதாரணமாகத்தான் நினைத்தோம். இது இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது எங்களை பார்ப்பதற்கு எங்கள் வீட்டிற்கு நிறைய பேர் வருகிறார்கள், எங்களிடம் பேட்டி காண்கிறார்கள். காட்டிற்குள் நாங்கள் எப்போதும் போல எங்களது வேலையை பார்த்துவந்தோம். எங்களை இன்று உலகம் முழுக்க பார்க்க செய்திருக்கிறார்கள். இது அனைத்திற்கும் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்` என்று நெகிழ்கிறார் பொம்மன். 

யானை, ஆவணப்படம், முதுமலை

பட மூலாதாரம்,KARTIKIGONSALVES/INSTAGRAM

 
படக்குறிப்பு,

பொம்மன், பெள்ளி

யானை பராமரிப்பில் தனக்கு இருக்கும் அனுபவத்தையும் பிபிசியிடம் பகிர்ந்துகொள்ள துவங்கிய அவர், ` எனது  அப்பா, தாத்தா என என்னுடைய முன்னோர்கள் அனைவரும் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வந்தவர்கள்தான். என் அப்பாவின் இறப்புக்கு பிறகு எனக்கு போஸ்டிங் வழங்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டிலிருந்து நான் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். யானைகள் தான் என்னுடைய உலகம்` என்று கூறுகிறார். 

 

அவர் தொடர்ந்து பேசும்போது, ` யானைகளை நம்முடைய சொந்த குழந்தைகள் போல் பார்த்துகொள்ள வேண்டும். நம்முடைய குழந்தைகள் கூட ஒருசில நேரம் நாம் சொல்வதை கேட்டுகொள்ளும். ஆனால் யானைகுட்டிகள் அப்படியல்ல. அதிகமாக குறும்பு செய்ய கூடியவை அவை. ஆனால் அது எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் அதை நாம் பொறுமையாக கையாள வேண்டும். இல்லையென்றால் அது நம்மிடம் கோபித்துகொள்ளும். அதேப்போல் காயமடைந்து வரும் குட்டியானைகளை அதிக கவனத்துடன் கையாள வேண்டும். அப்படி காப்பகத்தில் மற்றவர்களிடம் கொடுக்கபட்ட சில குட்டியானைகள் உயிர்பிழைக்கவில்லை. ஆனால் அதனை சரியாக கையாள்வேன் என்பதால் என்னிடம் காயமடைந்த குட்டி யானைகளை நம்பி ஒப்படைப்பார்கள். 

அப்படித்தான் ரகுவும் என்னிடம் வந்தது. ஆனால் ரகுவை வளர்ப்பதற்கு எனக்கு  இன்னொருவருடைய உதவியும் தேவைப்பட்டது. அதற்காக நான் பலரிடம் பேசிபார்த்தேன். ஆனால் இந்த யானை பிழைக்காது இது உனக்கு தேவையில்லாத வேலை என அனைவரும் பின்வாங்கிவிட்டனர். அப்போதுதான் பெள்ளி என்னுடன் நம்பிக்கையாக வந்தார்.

ரகுவை நாங்கள் நல்லபடியாக வளர்த்து கொண்டு வந்தபின், பெள்ளியிடம் அதிகாரிகள் அம்மு என்ற குட்டியானையை ஒப்படைத்தனர். யானைகளை வளர்ப்பதற்காகத்தான் நானும், பெள்ளியும் ஒன்றாக இயங்க  துவங்கினோம். அதன்பின் எங்களுக்குள் ஏற்பட்ட புரிதல் காரணமாக திருமணம் செய்துகொண்டோம். எங்களை சேர்த்து வைத்தது கூட இந்த யானைகள்தான் ` என்று மகிழ்கிறார் பொம்மன்.

யானை, ஆவணப்படம், முதுமலை

பட மூலாதாரம்,KARTIKIGONSALVES/INSTAGRAM

இவை அனைத்திற்கும் பிறகுதான் பொம்மனுக்கு பெள்ளிக்கும் சோதனை காலம் ஏற்பட்டது. ரகு வளர்ந்த பின் அதிகாரிகள் அதை மற்றொருவரிடம் ஒப்படைத்துவிட்டனர். அது `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்திலேயே பதிவு  செய்யப்பட்டிருக்கும்.  அதேப்போல் தற்போது பெள்ளியிடம் இருந்த அம்மு என்ற யானையை பொம்மி என பெயர் மாற்றம் செய்து வேறொருவருக்கு வனத்துறை அதிகாரிகள் கொடுத்துவிட்டனர்.

இதுகுறித்து பேசிய பொம்மன், `கிட்டதட்ட 10 ஆண்டுகளாக நாங்கள் ரகுவை வளர்த்து வந்தோம். ஆனால் இப்போது அது எங்களிடம் இல்லை. அதேப்போல் அம்மு சென்றதிலிருந்து பெள்ளி மிகவும் வருத்தமாக இருக்கிறார். நாங்கள் ஒரு குடும்பமாக இருந்தோம். ஆனால் இப்போது எல்லாம் வெறுமையாக மாறிவிட்டது. இப்போது என்னிடம் கிருஷ்ணா என்ற யானையை கொடுத்துள்ளனர். அது வயதில் மூத்த யானை. என்னுடைய வயதிற்கு அதனை வளர்ப்பது சற்று கடினமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட அது என்னை தாக்கிவிட்டது. உடலில் இன்னும் அந்த வலி இருக்கிறது` என்கிறார் அவர். 

கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பொம்மன் இதுவரை பல யானைகளை வளர்த்திருக்கிறார். மொத்தமாக எத்தனை யானைகளை வளர்த்திருப்போம் என்பது குறித்த சரியான கணக்கு எதுவும் அவருக்கு தெரியவில்லை. இன்று தங்களை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் சர்வதேச அரங்கம் வரை சென்றிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் ரகுவும், அம்முவும் தங்களிடமிருந்து  பிரிக்கப்பட்டிருப்பது பொம்மனையும், பெள்ளியையும் வெகுவாக பாதித்திருக்கிறது. 

`எங்களுடைய வாழ்விற்கும், நாங்கள் உண்ணும் உணவிற்கும், எங்களுடைய மகிழ்ச்சிக்கும் யானைகளே காரணம். ஏனெனில் யானைகள்தான் எங்களுடைய  தெய்வங்கள் ` என தீர்க்கமாக முடிக்கிறார் பொம்மன்.

https://www.bbc.com/tamil/articles/c4ne5ee83zwo

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2023 at 10:20, ஏராளன் said:

ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதை 

ஆஸ்கர்

பட மூலாதாரம்,NETFLIX/GUNEETMONGA

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கருக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த ஆவணப்படம்.

தாயைப் பிரிந்து குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம்.

நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார். 

 

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

“இன்றைய ஆஸ்கர் பரிந்துரை அன்பு கொண்ட கதைகள் மற்றும் ஒரு பெரிய தொலைக்குப் பார்வைக்கு சளைக்காமல் தங்களை அர்ப்பணிக்கும் நபர்கள் மீதான எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அப்பாவித்தனமும் நேர்மையும்தான் எல்லைகளைத் தாண்டி, யானை விஸ்பரர்களை ஊட்டி என்ற சிறிய நகரத்திலிருந்து சினிமாவின் மிகப்பெரிய மேடைக்கு பயணிக்க வைத்தது” என்று தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பதிவில் குனீத்மோங்கா குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cyewjedpygeo

இப்படி ஒரு ஆவணப்படம் வந்தது எனக்கு இன்றுதான் தெரிந்தது. சிறு வயதில் மாத்தளையில்  நிறய யானைகளை தினமும் பாப்போம். அக்கம் பக்கத்து வீடுகளில் யானைகளை வேலைக்காக வளர்த்தார்கள். இந்த படத்தின் பின்னணியை வாசித்துப் பார்த்தேன். முதுமலை காட்டில் தாயை இழந்த  இந்த இரு யானைக்குட்டிகளை காட்டுநாயக்கன் பழங்குடி கணவன் மனைவி வளர்த்து வரும் கதை. Netflix இல் பார்க்கலாம் என்று இருக்கிறேன்

Edited by nilmini
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

THE ELEPHANT WHISPERERS - ஒரு பார்வை. பல இடங்களில் கண் கலங்கி. மனம் உளறியது.
காட்டில் வழி தவறி விடும் யானை குட்டி அடுத்தடுத்து இரண்டு காட்டிலாகா அதிகாரிகளால் பொம்மன் பெல்லி இணையரிடம் தரப்படுகிறது. அவர்கள் அதை வளர்த்து ஆளாக்கி அவர்களிடமே கொடுக்க வேண்டும் என்பது தான் நடைமுறை. ஆனால் சொந்த குழந்தைகளாகவே ஆகி விடும் அவைகளை பிரிய முடியாமல் அந்த இணையரின் ஆற்றாமை காடதிரும் மௌனம்.

யானை.... உருவத்தில் தான் அத்தனை பெரிதாக இருக்கிறது. உள்ளம் ரொம்ப இலகு. அதற்கு பேசுவது புரிகிறது. கேட்கறது. பதில் கூட பேசுகிறது. அழுகிறது.. சிரிக்கிறது.. பசிக்கையில் பசிக்கிறது என்று கேட்கறது. அதன் மொழி நாம் அறியவில்லை என்பதற்காக அதற்குப் பேச வராது என்று முடிவுக்கு வரக்கூடாது. அதற்கு அதன் மொழி தெரிகிறது. அதை தெரிந்து கொண்ட பொம்மனும் பெல்லியும் அளாவுகிறார்கள். அன்பு செய்கிறார்கள். பார்த்து பார்த்து உணவளிக்கிறார்கள். குளிக்க வைக்கிறார்கள். பொட்டு வைத்து சடை போட்டு விடுகிறார்கள்.
மூத்தவன் ரகு. இளையவள் அம்முக்குட்டி.

குட்டியில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தடுமாறும் யானை குட்டி ஒரு குழந்தை. அதற்கு விவரம் தெரிவதில்லை. பெல்லியின் கையை பற்றிக் கொண்டு தாயின் அரவணைப்பில் தன்னை தக்க வைத்துக் கொள்வதில் கிடைக்கும் ஆசுவாசத்தை அப்பப்பா மனம் சிலிர்ப்பதை.... மௌனம் சிரிப்பதை உள்ளூர உணர முடிகிறது.

அவைகளோடு பந்து விளையாடுவதும்.. நீரில் குளிக்க வைக்கையில்... ஒத்துழைத்து தானும் நீருக்குள் மூழ்கி எழுந்து....யானைகளின் சேட்டைகளை பார்க்க பார்க்க முக்தி பெறுகிறோம் நாம்.

மேல படுத்தீன்னா பாரு... தள்ளி படு என்று அதனிடம் பேசும் பெல்லி ஒரு முதிர்ந்த சிறுமி. எப்போதும் சிரித்த முகத்தில் தாய்மை பூக்கிறது.

அதனிடம் விளையாட்டு காட்டி தூங்க வைத்து... அவர்கள் அதன் தலையோடு தலை வைத்து தடவி கொடுத்தபடியே பேசுவதும் கொஞ்சி கொள்வதும்... பார்க்க கண்கள் துளிர்க்கும். ரகுவை பிரிய நேருகையில் அந்த அந்த இணையரோடு அம்முக்குட்டியும் தவித்து போவதை பார்க்க முடியவில்லை. அம்முக்குட்டி அங்கும் இங்கும் அலைந்து கத்தி கூச்சலிடும் காட்சி கலங்கடித்து விடுகிறது. பொம்மன் இது பற்றி பேச பேசவே அழுகிறார். நாமும் அவரோடு விசும்புகிறோம்.

பிரிந்த சென்ற பிறகும் காட்டுக்குள் எங்காவது பார்க்க நேரிட்டால்.. ஓடி வந்து உடன் நின்று கொள்ளும் ரகு... பாசக்காரன்.

பிடிக்காத உணவை வாய்க்குள் வைத்து தள்ளினாலும்.. கொஞ்ச நேரம் வாய்க்குள் வைத்து விட்டு பிறகு துப்பி விடும் சிறு பிள்ளையாக இருக்கும் யானைகளையா.... யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் என்று செய்தி வாசிக்கிறோம் நாம். அவைகள் உலகம் வேறு. அதற்குள் நாம் போகாமல் இருந்தால் அவைகள் நம் உலகத்துள் நிச்சயம் வராது.

அம்முக்குட்டி இவர்களிடம் வந்து சேர்க்கையில் எலும்பும் தோலுமாக இருக்க அதற்கு ஓட்டம் கொடுத்து.. சோறு கொடுத்து... பால் கொடுத்து வளர்த்து பலப்படுத்திய இந்த இணையரை சுற்றுவட்டாரத்தில் யானையின் அப்பா அம்மா என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். அது எங்களுக்கு பெருமை தான் என்று கூறும் இவர்கள்... வேறு வேறு கணவன் மனைவி என்பதும்... இருவருக்கும் இணையர் இல்லை என்பதும்... இந்த யானைகளின் வழியே அவைகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் காட்சியும் நம்மை நெகிழ்த்தி விடுகிறது. அதுவும் திருமணம் முடிந்து நால்வரும் வரிசையாக நின்று மாலையும் கழுத்துமாக போட்டோ எடுத்துக் கொள்ளும் காட்சி பேரழகு. பேரன்பின் தத்துவம் பிறக்கும் இடமாக இவர்கள் வாழ்விடத்தைக் காண்கிறேன்.

சிறு குழந்தைகளைப் போல தான் எது கிடைத்தாலும் எடுத்து வாய்க்குள் ...போடுவதும். அப்படி முள்ளோடு சேர்ந்த புல்லை அம்முக்குட்டி வாய்க்குள் போட்டு விட அதை பார்த்து விட்ட ரகு... மெல்ல தும்பிக்கையை அதன் வாயில் விட்டு எடுத்து வெளியே போடுகிறது. யாருக்கு அறிவில்லை என்று கேட்க தோன்றும் காட்சி இது.

இதற்கிடையே மூங்கிலால் ஆன வீட்டு வாசலில் சாவகாசமாக நடந்து போகும் ..பன்றிகள். இந்த பக்கம் யானை விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் குரங்கு குடும்பங்கள்... அவைகள் தின்னாமல் போட்டவைகளை இவைகள் எடுத்து தின்பதும்... என பார்க்கவே அத்தனை அழகு. கேமராவுக்கு போஸ் கொடுக்கும் மான்கள்.... மயில்கள் என்று காடென்பது கவிதை. கருணை உள்ளோருக்கு வாசிக்க வாய்க்கிறது.

தேவைக்கு தான் காட்டில் இருந்து எடுப்போம். எங்களுக்கு உரிமை உண்டு. கால காலமாக காட்டைக் காப்பாற்றும் எங்களை காடு தானே காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் இந்த இணையர்... தென்னிந்தியாவில் முதல் முறையாக தனித்து விடப்பட்ட இரு யானைகளை வெற்றிகரமாக வளர்ந்த இணையர் என்ற பெருமைக்கு உள்ளானவர்கள்.

வணங்குவோம்.

Director: Kartiki Gonsalves
Distributed by: Netflix
Language : Tamil

- கவிஜி 

 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அக்கா. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2023 at 09:15, nilmini said:

இப்படி ஒரு ஆவணப்படம் வந்தது எனக்கு இன்றுதான் தெரிந்தது. சிறு வயதில் மாத்தளையில்  நிறய யானைகளை தினமும் பாப்போம். அக்கம் பக்கத்து வீடுகளில் யானைகளை வேலைக்காக வளர்த்தார்கள். இந்த படத்தின் பின்னணியை வாசித்துப் பார்த்தேன். முதுமலை காட்டில் தாயை இழந்த  இந்த இரு யானைக்குட்டிகளை காட்டுநாயக்கன் பழங்குடி கணவன் மனைவி வளர்த்து வரும் கதை. Netflix இல் பார்க்கலாம் என்று இருக்கிறேன்

நீங்கள் எழுதியதால் நானும் பார்த்தேன்.

நன்றாக இருந்தது.
நன்றி சகோதரி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

நானும் கடந்த மாதம் பார்த்தேன். யானைக் குட்டியினது காட்சிகளும் அந்த தம்பதிகளின் காதலும் அழகாக இருந்தன. 

யானைப் பாகன்கள் யானையுடன் கதைப்பதற்கு என்று ஒரு மொழி வைத்துள்ளனர். இதனை இலங்கையில் சிங்களப் பகுதிகளிலும் கண்டுள்ளேன். பொல்காவலை என்று ஊரில் உள்ள ஆற்றில் குளிக்க கூட்டிக் கொண்டு வரும் யானைகளின் பாகன்கள் யானையுடன் இவ்வாறான மொழியில் தான் கதைப்பர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைகளின் காதலன் பொம்மன் - 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' தம்பதி இப்போது என்ன செய்கின்றனர்?

காணொளிக் குறிப்பு,

யானைகளின் காதலன் பொம்மன் - எலிபெண்ட் விஸ்பரர்ஸ் தம்பதி இப்போது என்ன செய்கின்றனர்?

5 பிப்ரவரி 2023, 04:41 GMT
புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்

2017ஆம் ஆண்டு தாயைப் பிரிந்த ஒரு குட்டி யானை உடம்பில் பல காயங்களுடன் இறக்கும் தறுவாயில் காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்த பலரும் இனி அதைக் காப்பாற்றுவது கடினம் என ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

அங்கு யானைகளைப் பராமரிக்கும் பணியில் இருந்த பொம்மன் அதைத் தன்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி அந்தக் குட்டியைப் பராமரிக்கத் துவங்குகிறார். யானையை வளர்ப்பதில் பொம்மனுக்குத் துணையாக பெள்ளி என்ற பெண்ணும் வருகிறார்.

ரகு என்று பெயரிடப்பட்ட அந்த யானைக் குட்டி, நாளடைவில் அவர்களது குழந்தையாகவே மாறிப் போகிறது. அவர்களது பராமரிப்பில் அது உடல்நலம் தேறி இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு பொம்மி என்ற இன்னொரு யானைக்குட்டியும் அவர்களது பராமரிப்பின் கீழ் வருகிறது.

 

யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

2022ஆம் ஆண்டு பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும் அவர்கள் பராமரித்து வந்த யானைக்குட்டிகளுக்கும் இருந்த பிணைப்பைப் பற்றி கார்த்திகி கோன்சால்வேஸ் என்ற புகைப்படக் கலைஞர் 'The Elephant Whisperers' என ஓர் ஆவணப்படத்தைத் தயாரித்து NETFLIX தளத்தில் வெளியிடுகிறார்.

அப்படம் இந்த வருடம் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில், ஆவணக் குறும்படப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டின் ஒரு மூலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்த காட்டுநாயக்கர் பழங்குடியின தம்பதிகளான பொம்மன்-பெள்ளியை உலகம் முழுவதும் அறிமுகம் செய்திருக்கிறது.

ஆஸ்கர் விருதை எதிர்நோக்கியுள்ள இந்தக் குடும்பத்தைச் சந்திக்க நேரில் சென்றோம்.

ஆவணப்படம் எடுக்கப்பட்டபோது பொம்மன், பெள்ளி தம்பதி பராமரித்து வந்த ரகு மற்றும் பொம்மி யானைகள் தற்போது இவர்களின் வளர்ப்பில் இல்லை. அவை தற்போது வேறு பாகனின் பராமரிப்பில் உள்ளன.

ரகு, பொம்மிக்குப் பிறகு பெள்ளி யானை வளர்க்கும் பணியில் இல்லை. பாகன் பொம்மன் தற்போது கிருஷ்ணா என்கிற யானையைப் பராமரித்து வருகிறார்.

பொம்மன், பெள்ளி யானைகளுடன் ஒரே குடும்பமாக வாழ்ந்த காலகட்டம், ஆவணப்படத்தில் நடித்த அனுபவம், ஆஸ்கர் பற்றி கேள்விப்பட்டவுடன் ஏற்பட்ட உணர்வு போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பு: மோகன்

 

ஒளிப்பதிவு: மதன் பிரசாத்

 

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

எலிபெண்ட் விஸ்பரர்ஸ் தம்பதி இப்போது என்ன செய்கின்றனர்?
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2023 at 09:38, ஏராளன் said:

இணைப்பிற்கு நன்றி அக்கா. 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ஆஸ்கர் விருது கெடச்ச இந்த நேரத்துல கூட ரகு இல்லையே!” – நெகிழும் பொம்மன் பெள்ளி

ஆஸ்கர் விருது

பட மூலாதாரம்,KARTIKIGONSALVES/INSTAGRAM

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.

"ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் யானை ரகு கூட இல்லையே என்றுதான் வருத்தமாக இருக்கிறது," என்று பிபிசி தமிழிடம் பேசியபோது பொம்மன் நெகிழ்ந்து கூறினார்.

தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம்.

 

நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கியிருக்கிறார். குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.

தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியுளது. `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.

காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும் அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.

தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன், வால் வெட்டுபட்டு, இறக்கும் தருவாயில் ஒரு குட்டி யானை காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது. காப்பகத்தில் இருந்த பலரும் இனி அதை காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என ஒதுங்கி கொள்ள பொம்மன் மட்டுமே அதனை என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி தன்னுடன் அழைத்து வருகிறார்.

யானையை வளர்ப்பதற்கு அவருக்கு துணையாக பெள்ளியும் வருகிறார். அந்த யானைகுட்டிக்கு ரகு என பெயர் சூட்டி தனது குழந்தையை போலவே பராமரித்து வந்த அவர், தான் சொன்னது போலவே அந்த குட்டியை இயல்பான உடல்நிலைக்கு தேற்றிவிட்டார். அதன்பின் அவருக்கு துணையாக வந்த பெள்ளிக்கு அம்மு என்ற பெண் குட்டி யானையை பராமரிக்க கொடுக்கிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் 50 வயதை கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஆஸ்கர் விருது

பட மூலாதாரம்,KARTIKIGONSALVES/INSTAGRAM

பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள். இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் இத்தகைய நிபந்தனையற்ற அன்புதான் `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இப்போது இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளது.

ஆனால் இத்தனை பெரிய வரவேற்பு தங்களின் கதைக்கு கிடைக்குமென பொம்மன், பெள்ளி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும்போல் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் முதுமலையில் தங்களது அன்றாட வேலையை பார்த்து வருகின்றனர்.

ஆஸ்கர் பரிந்துரையில் இடம்பெற்றபோது பொம்மன், பெள்ளியிடம் பேசுவதற்காக பிபிசி தமிழ் அவர்களை தொடர்புகொண்டபோதும் பொம்மன் யானையுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தார். `நேரம் ஆகிருச்சு சீக்கிரம் கிளம்பு` என்று பெள்ளியின் குரல் மட்டும் பிண்ணனியில் ஒலித்தது.

யானையுடன் சென்றுகொண்டே பொம்மன் நம்மிடம் பேசியபோது, “இந்த ஆவணப்படத்தை எடுத்த கார்த்திகி என்னும் பெண் எனக்கு நீண்டநாட்களாக தெரிந்தவர்தான். அவரும் அவருடைய நண்பர்களும் அடிக்கடி முதுமலை வருவார்கள். அப்படி ஒருமுறை ரகுவை நான் எடுத்து வளர்க்க துவங்கிய காலத்தில் அவர்கள் வந்திருந்தார்கள். அப்போதுதான் இந்த குட்டியானையுடன் சேர்த்து உங்களை ஒரு படம் எடுக்கிறோம் எனக் கூறி இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பை அவர்கள் ஆரம்பித்தனர்,” என்று கூறினார்.

ஆஸ்கர் விருது

பட மூலாதாரம்,KARTIKIGONSALVES/INSTAGRAM

“இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து இந்தப் படப்பிடிப்பை மேற்கொண்டனர். ஒவ்வொரு முறை வரும்போது வெவ்வேறு எண்ணிக்கையிலான ஆட்கள் வருவார்கள். அவ்வபோது முதுமலைக்கு வரும் அவர்கள் காலையில் சிறுது நேரம், மாலையில் சிறுது நேரம் என படப்பிடிப்பைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் மும்பையிலிருந்து வந்தவர்கள் என நினைக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சர்வதேச அளவில் முக்கியமான விருதாகக் கருதப்படும் ஆஸ்கற் தற்போது இந்த ஆவணப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

அதுகுறித்துப் பேசியவர், “அவர்கள் எங்களை படம் பிடித்து வந்த நேரத்தில் நாங்கள் அதை மிகவும் சாதாரணமாகத்தான் நினைத்தோம். இது இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காட்டிற்குள் நாங்கள் எப்போதும் போல எங்களது வேலையைப் பார்த்துவந்தோம். எங்களை இன்று உலகம் முழுக்க பார்க்கச் செய்திருக்கிறார்கள். இது அனைத்திற்கும் இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்,” என்று நெகிழ்கிறார் பொம்மன்.

ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்துப் பேசிய பொம்மன், “என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆஸ்கர் விருதைப் பெறும் என்று எதிர்பாக்கவே இல்லை. மிக மகிழ்ச்சியாக உள்ளது.

ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ரகுவும் அம்முவும் தற்போது எங்களுடன் இல்லை என்பதும் சிறிது வருத்தமாக உள்ளது,” என்றார்.

இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் தனது விருது ஏற்புரையில், “இன்று நான் இங்கு நிற்கிறேன். நமக்கும் நமது இயற்கை உலகுக்கும் இடையே உள்ள புனிதமான பிணைப்பைப் பற்றிப் பேசுவதற்கு பழங்குடி சமூகங்களின் மரியாதைக்காகவும் மற்ற உயிரினங்களுடன் நாம் பகிர்ந்துகொள்ளும் பச்சாதாபத்திற்காகவும் இறுதியாக சகவாழ்வுக்காகவும் பேசுகிறேன்,” என்று கூறினார்.

தயாரிப்பாளர் குணீத் மோங்கா தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வெற்றிச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய தயாரிப்புக்கான முதல் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ். இதற்கு முன்பு 1969இல் வெளியான தி ஹவுஸ் தட் ஆனந்தா பில்ட், 1979இல் வெளியான ஆன் என்கவுன்டர் வித் ஃபேசஸ் ஆகிய இரண்டு படங்கள், சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்திய மக்கள் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் வெற்றியைப் பாராட்டி வருகின்றனர்.

“நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்,” என்று ஒரு பயனர் பாராட்டியுள்ளார். மற்றொருவர், “இந்த விருதை தனது தாய்நாடான இந்தியாவுக்கு அர்ப்பணித்ததற்காக” இயக்குநரை பாராட்டியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c7215jg01mvo

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொம்மன், பெள்ளி: ''நீலகிரி மலையில் இருந்து முதல் முறையாக சென்னை வந்தோம்'' - 'யானை பாகன்' தம்பதி நெகிழ்ச்சி

பொம்மன் - பெள்ளி யானை தம்பதி
 
படக்குறிப்பு,

சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கெளரவிக்கப்படும் பொம்மன், பெள்ளி

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 12 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் காட்டுநாயகன் சமூகத்தைச் சேர்ந்த யானை பாகன் தம்பதியான பொம்மன் - பெள்ளியின் உண்மை கதையை வெளிக்கொண்டு வந்த 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதை அடுத்து, யானை பாகன் தம்பதியை தமிழ்நாடு அரசு இன்று கெளரவித்தது.

இதையொட்டி இந்த தம்பதி முதன் முதலாக நீலகிரி மலையில் இருந்து சென்னை நகருக்கு வந்த அனுபவத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதியை அழைத்து இருவருக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். அத்துடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவர் வழங்கினார்.

முதுமலை யானைகள் காப்பகத்தில் பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் பொம்மன், பெள்ளி, இதுவரை நீலகிரி மலையை தவிர பிற வெளியூர்களுக்கு அதிகம் சென்றதில்லை என்றும் முதன் முறையாக சென்னை நகர்ப்புறத்துக்கு வந்து முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது மிகவும் வியப்பைத் தந்தாக கூறுகின்றனர்.

 

பிபிசி தமிழிடம் பேசிய பொம்மனும் பெள்ளியும், தங்களது வாழ்க்கை கதையை ஆவணப்படமாக உலக மக்கள் பலரும் பார்த்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ந்ததாக தெரிவித்தனர்.

''நாங்கள் யானை குட்டியை வளர்த்த கதையை உலகம் முழுவதும் பலரும் பார்க்கிறார்கள். எங்களைப் பற்றிய படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது என்பது மிகவும் பெருமையாக உள்ளது. மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. சென்னை நகருக்கு முதல் முறையாக வந்திருக்கிறோம். முதல்வரை நேரில் சந்திப்போம் என்பதை நாங்கள் கனவில் கூட நினைத்ததில்லை,'' என்று இருவரும் கூறினர்.

யானை பராமரிப்பு தம்பதி பொம்மன் பெள்ளி

தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி எப்படி பராமரித்தனர் என்பதை மையமாகக் கொண்டதுதான் தி எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆவணப்படம். அதில் யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தும் காட்சிகளை பலரும் வியந்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 

யானை ரகுவை பற்றிப் பேசிய பொம்மன், ''முதலில் எங்களிடம் யானை குட்டி வந்தபோது மோசமாக காயமடைந்த நிலையில் இருந்தது. மருத்துவர்கள், அதிகாரிகள் எங்களிடம் யானையை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என விளக்கினார்கள். எங்கள் குடும்ப உறுப்பினராகத்தான் ரகுவை பார்த்தோம். நாங்கள் டீ குடித்தால், ரகுவுக்கு ஒரு டப்பாவில் பாலை ஊற்றிக் கொடுப்போம். எங்களில் ஒருவராக யானை குட்டி வளர்ந்ததால், எங்கள் பேரன், பேத்திகள் எங்களை பார்க்க வரும்போது, யானைக் குட்டி அவர்களுடன் விளையாடும்,'' என யானையுடன் இருந்த நினைவுகளை பகிர்ந்தார்.

இந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சேர்ந்த ஒரு கலவையான மொழியில் யானையுடன் பேசியதாகவும், அதற்கு யானை கட்டுப்படும் என்றும் கூறுகிறார் பெள்ளி.

''ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் யானையை எப்படி பராமரிக்கிறோம் என்று அவ்வப்போது வந்து படம் எடுப்பார்கள், அதுதான் படமாக வரப்போகிறது, அந்த படத்திற்கு விருது கிடைக்கப்போகிறது என்று அப்போது தெரியாது. இந்த படம் விருது பெற்ற பின்னர், எங்களை போன்ற யானை பராமரிப்பாளர்களின் வாழ்க்கையைப் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி,'' என்கிறார் பெள்ளி.

பெள்ளியிடம் பாசமாக தலையை சாய்த்து யானை படுத்துக்கொள்ளும் காட்சி வைரலாக சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. ''யானைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் எங்களுக்கு மன கஷ்டமாக இருக்கும். இப்போது ரகு யானை கும்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது எங்களுக்கு கிடைத்த வெற்றி,'' பெள்ளி.

பொம்மன், பெள்ளியை கெளரவித்ததுடன், முதுமலை மற்றும் தெப்பக்காடு யானை காப்பகத்தில் உள்ள 91 பணியாளர்களுக்கும் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் யானை பராமரிப்பாளர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு ரூ. 9.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஆனைமலையில் உள்ள யானைகள் முகாமை மேம்படுத்த ரூபாய் ஐந்து கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு அறிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cx0ndxqq7k0o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஒஸ்கார் எதிரொலி: ஸ்டாலின் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்புகள்

Published By: RAJEEBAN

15 MAR, 2023 | 02:51 PM
image

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றுள்ளதால் அதனை மேலும் ஊக்கப்படுத்திடும் வகையில் தமிழ்நாடு யானைகள் முகாமில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 95-வது   ஒஸ்கார்விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. வண்ணமயமான அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுஇ அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் ஆஸ்கர் விருதினை பெற்றனர். ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் ஆஸ்கார் விருது வென்றதை இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

download_-_2023-03-15T021627.376.jpg

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்  ஒஸ்கார்ர் விருது வென்ற ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி தம்பதியனரை இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுப் பத்திரமும் பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்துஇதி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது என்பதால் அதனை மேலும் ஊக்கப்படுத்திடும் வகையில்இ தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணியாற்றி வரும் மொத்தம் உள்ள 91 பணியாளர்களுக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/150592

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கர் விருது பெற்ற பட இயக்குநர் கார்த்திகிக்கு ரூ.1 கோடி பரிசு: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

964149.jpg ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் பட இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸுக்குரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் வனத் துறை அமைச்சர் மதிவேந்தன், துறை செயலர் சுப்ரியா சாஹு.
 

சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப் பட இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸுக்குரூ.1 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்ட‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம், குறும்படப் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த குறும்படத்தை கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கியுள்ளார். தமிழக வனத்துறையின் பராமரிப்பாளர்களால் யானை குட்டிகள் வளர்க்கப்படும் முறையை இந்தப் படம் விவரிக்கிறது.

தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பணியாற்றிவரும் பொம்மன் மற்றும் பெள்ளி ஆகிய யானை பராமரிப்பாளர்கள் 6 மாத வயதில் முகாமுக்கு கொண்டு வரப்பட்ட ‘ரகு’ யானைக் குட்டியை எவ்வாறு கவனத்துடன் பராமரித்தனர் என்பதை இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

மேலும், அதே முகாமில் காப்பாளர்களால் வளர்க்கப்பட்ட மற்றொரு யானை குட்டியான ‘அம்மு’ பராமரிக்கப்பட்ட கதையையும் விவரிக்கிறது.

https://www.hindutamil.in/news/tamilnadu/964149-rs-1-crore-prize-for-oscar-winning-film-director-karthiki-cm-stalin-presented-1.html

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட இயக்குனருக்கு பிரித்தானிய மன்னர் சார்ல்ஸிடமிருந்து விருது

Published By: DIGITAL DESK 3

03 JUL, 2023 | 09:46 AM
image
 

இந்தியாவில் தமிழகத்தில் நீலகிரியைச் சேர்ந்த பழங்குடியின வாலிபர்கள் 2 பேருக்கும், ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட இயக்குனருக்கும் பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

பிரித்தானிய ராணி கமிலாவின் சகோதரரும், மறைந்த வன பாதுகாவலருமான மார்க் ஷண்டால் உருவாக்கப்பட்ட 'எலிபெண்ட் பேமிலி' என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆசிய காடுகளில் யானைகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. 

இந்நிறுவனம் ஆசிய காடுகளில் வனவிலங்குகள் மற்றும் காடுகளை பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்பை தரும் நபர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

FzxtyxtX0AE2_X6.jpg

அந்தவகையில், இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 'எலிபெண்ட் பேமிலி' நிறுவனம் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் மன்னர் 3-ம் சார்ல்ஸ் மற்றும் ராணி கமிலா இந்த விருதுகளை வழங்கினர்.

இந்தியாவில் உள்ள 'ரியல் எலிபெண்ட் கலெக்டிவ்' என்ற தன்னார்வ நிறுவனம், இங்கிலாந்தின் 'எலிபெண்ட் பேமிலி' நிறுவனத்துடன் இணைந்து நீலகிரி மலைப்பகுதியில் அதிகம் காணப்படும் லந்தானா கேமரா என்ற உண்ணி செடியை கொண்டு முழு அளவிலான யானை சிலைகளை உருவாக்கி வருகிறது. பெட்டா குரும்பா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் லந்தானா யானை சிலைகள் உருவாக்கப்படுகின்றன.

 இந்த கைவினை பொருள்கள் சுற்றுச்சூழலில் இருந்து ஆக்கிரமிப்பு உயிரினங்களை அகற்றுவதுடன் வனத்தை சார்ந்துள்ள சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது. இந்நிலையில் லந்தானா யானை சிலைகளை உருவாக்கும் கைவினை கலைஞர்களின் பிரதிநிதிகளாக நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ரமேஷ் மாறன் (வயது 32), விஷ்ணு வர்தன் (29) இருவருக்கும் மதிப்பு மிக்க 'மார்க் ஷண்ட்' விருதை மன்னரும், ராணியும் வழங்கினர்.

elephant-1688184601.jpg

மேலும், இந்த விழாவில் ஒஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படத்தை இயக்கிய நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் இயக்குனரான கார்த்திகி கொன்சால்வஸ் 'தாரா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவருக்கு யானை சிலை வழங்கப்பட்டது.

முதுமலையில் உள்ள தெப்பாக்காடு யானைகள் முகாமை சுற்றி பயணிக்கும் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பை மனதைக் கவரும் வகையில் வழங்கியதன் மூலம் சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஒஸ்கார் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

https://www.virakesari.lk/article/159090

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பொம்மன் - பெள்ளி தம்பதியிடம் கார்த்திகி கொன்சால்வ்ஸ் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டாரா? - ஆஸ்கர் இயக்குநரின் விளக்கம்

பொம்மன் பெள்ளி
 
படக்குறிப்பு,

பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாகக் கொண்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற குறு ஆவணப்படம், சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளைப் பராமரிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் பொம்மன், பெள்ளி தம்பதி.

இவர்களை மையமாகக்கொண்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற குறு ஆவணப்படம், சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்தது.

ஆவணப்படத்தின் மையக்கருவாக உள்ள பொம்மன் - பெள்ளி தம்பதி, இந்த ஆணவப்படத்தை எடுத்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மீது, பரபரப்பான பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில், யானைகளை பராமரித்து வரும் தம்பதி தான் பொம்மன்-பெள்ளி.

காட்டுக்குள் தாயைப் பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன் இறக்கும் தருவாயில் மீட்கப்பட்ட ஒரு குட்டி யானை, இந்த தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

 
பொம்மன் பெள்ளி
 
படக்குறிப்பு,

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில், யானைகளைப் பராமரித்து வரும் தம்பதி தான் பொம்மன்-பெள்ளி.

அந்த யானைக்கு ‘ரகு’ எனப் பெயரிட்ட இவர்கள், தங்களது குழந்தையைப் போல அதை வளர்த்து, தங்களின் அதீத அன்பு கலந்த கவனிப்பால் யானையின் ஆரோக்கியத்தைத் தேற்றினர்.

பிறகு, இதேபோன்று அம்மு என்ற பெண் குட்டி யானையும் இவர்களிடம் பராமரிக்க கொடுக்கப்பட்டது.

இரண்டு யானைகளை அன்போடு பராமரித்து காப்பாற்றிய பொம்மன் – பெள்ளி தம்பதியின் வாழ்க்கை மற்றும் யானைகளுடனான அவர்களின் பாசப்பிணைப்பை மையமாக வைத்து, கார்த்திகி கொன்சால்வ்ஸ் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்‘ என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார்.

அது நெட் ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உலக அளவில் பிரபலமானதோடு ஆஸ்கர் விருதையும் வென்று சாதனை படைத்தது.

பிரதமர், குடியரசுத்தலைவர் பாராட்டு..

பொம்மன் பெள்ளி தம்பதியை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியதுடன், தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசளித்து, பெள்ளிக்கு காவடி (பாகனுக்கு உதவியாக யானையைப் பராமரிக்கும் பணி) அரசு வேலையும் கொடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி சனிக்கிழமை, முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மூ, பொம்மன் – பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

இப்படியான நிலையில், பொம்மன் – பெள்ளி தம்பதி ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மீது பரபரப்பான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

 
பொம்மன் பெள்ளி
 
படக்குறிப்பு,

பொம்மன் – பெள்ளி தம்பதி நல்லெண்ண அடிப்படையில் (Good will gesture) ரூ.2 கோடி ரூபாய் கேட்டு, ஷிக்யா என்டர்டெயின்மென்ட், இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் ஆகியோருக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

பொம்மன் – பெள்ளியின் குற்றச்சாட்டுகள் என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய பொம்மன் – பெள்ளி தம்பதி, ‘‘நாங்கள் சாதாரணமாக எங்கள் வேலைகளைச் செய்து, யானைகளைப் பராமரித்து வந்தோம்.

இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எங்களைச் சந்தித்து குறு ஆவணப்படம் எடுப்பதாகக் கூறி, எங்களைப் படம் பிடித்தார்கள். இந்தப் படம் விருது (ஆஸ்கர்) பெறும் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அவர் சொல்லியதைச் செய்தோம்,’’ என்றனர்.

‘படப்பிடிப்பின் போது இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எங்களிடம், ‘உங்கள் இருவருக்கும் வீடு கட்டித் தருகிறேன், வீட்டிற்குப் பொருட்கள், வாகனம் வாங்கித் தருகிறேன்; பணம் கொடுக்கிறேன்,’ என்று பல வாக்குறுதிகளை" அளித்ததாக பொம்மன், பெள்ளி கூறுகின்றனர்.

ஆனால் அவர்கள் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களைப் பார்த்தபோது எந்தப் பணமும் தங்களுக்கு வரவில்லை என்பதை அறிந்ததாகவும் அதுகுறித்து இயக்குநர் கார்த்திகியிடம் கேட்டதாகவும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, படப்பிடிப்பின்போது தங்களிடம் இயக்குநர் கார்த்திகி 40 ஆயிரம் ரூபாய் வரை கடனாகப் பெற்றதாகவும் அதையும் திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் பொம்மன், பெள்ளி இருவரும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பேசிய அவர்கள், ‘‘முதல்வர் கொடுத்த ரூ.1 லட்சம் மற்றும் அரசு வேலையைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. படப்பிடிப்பு எடுக்கத் தொடங்கியது முதல் இன்று வரை எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை கார்த்திகி கொன்சால்வ்ஸ் நிறைவேற்றவில்லை, பணமும் கொடுக்கவில்லை. அவர் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை,’’ என்று கூறுகிறார் பொம்மன்.

இப்படியான நிலையில், பொம்மன் – பெள்ளி தம்பதி நல்லெண்ண அடிப்படையில் (Good will gesture) ரூ.2 கோடி ரூபாய் கேட்டு, ஷிக்யா என்டர்டெயின்மென்ட், இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் ஆகியோருக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

இயக்குநரின் விளக்கம் என்ன?

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் குறு ஆவணப்படத்தின் இயக்குநர் தரப்பு விளக்கம்
 
படக்குறிப்பு,

இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் குறு ஆவணப்படத்தைத் தயாரித்த ஷிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் பிபிசி தமிழுக்கு அளித்த விளக்கம்

பொம்மன் – பெள்ளியின் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்க பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது, இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் வாட்ஸ் ஆப் வாயிலாகப் பதிலளித்தார்.

அப்போது, ‘‘பொம்மன் – பெள்ளி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய், அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை,’’ என்று கூறினார்.

மேலும், இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் ஆவணப்படத்தை தயாரித்த ஷிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் பிபிசி தமிழுக்கு விளக்கமளித்துள்ளனர்.

அதில், ‘‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் தயாரித்ததன் நோக்கமே, யானைகள் பாதுகாப்பு, வனத்துறை மற்றும் பொம்மன் – பெள்ளியின் அளப்பரிய முயற்சிகளை வெளிக்காட்டுவதே," என்று கூறினர்.

இந்த குறு ஆவணப்படம் பாகன்கள் (Mahouts) மற்றும் அவர்களது உதவியாளர்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தங்கள் விளக்கத்தில் குறிப்பிட்டனர்.

மேலும், "ஆவணப்படம் வெளியான பிறகு, தமிழக முதல்வர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள, 91 பாகன்களையும் மேம்படுத்த பரிசளித்துள்ளார். இந்த ஆவணப்படம் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களால் கொண்டாடப்படுகிறது.

அகாடமி விருது பெற்றது தேசத்தின் பெருமை என்பதுடன், இது பொம்மன் – பெள்ளி போன்ற பாகன்களுக்குப் பெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது," என்று தெரிவித்தனர்.

அதோடு, "அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. இந்தக் கதையின் பங்களிப்பார்கள் அனைவரது மீதும் நாங்கள் ஆழ்ந்த மரியாதை வைத்துள்ளோம்,’’ என்றும் தெரிவித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cev8q7ywkx1o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.