Jump to content

ரஷ்யா: புதின் அறிவித்த கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிக்க காட்டுக்குள் ஒளிந்துகொண்ட ஐ.டி இளைஞர்


ஏராளன்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா: புதின் அறிவித்த கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிக்க காட்டுக்குள் ஒளிந்துகொண்ட ஐ.டி இளைஞர்

கட்டுரை தகவல்
 • எழுதியவர்,பென் டொபையாஸ்
 • பதவி,பிபிசி நியூஸ்
 • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஆடம் கலினின்

பட மூலாதாரம்,ADAM KALININ

கடந்த ஆண்டு செப்டம்பரில் அணி திரட்டல் குறித்த அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட போது, ஒரு வாரம் சிந்தித்த ஆடம் கலினின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காட்டிற்குள் குடிபெயர்ந்துவிடலாம் என முடிவெடுத்தார். தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஆடம் கலினின், தொடக்கத்தில் இருந்தே போருக்கு எதிராக உள்ளார். தன்னுடைய குடியிருப்பு சுவரில் போர் வேண்டாம் என்ற சுவரொட்டியை ஒட்டியதற்காக அபராதமும் இரண்டு வாரம் தடுப்புக் காவல் தண்டனையும் பெற்றார். போரில் பின்னடவை சந்தித்துக் கொண்டிருந்த ரஷ்யா, போரில் பங்கேற்க 3,00,000 ரஷ்ய ஆண்களுக்கு அழைப்பு விடுத்தபோது போர்க்களத்திற்குச் சென்று யுக்ரேனியர்களை கொல்ல ஆடம் கலினின் விரும்பவில்லை. ஆனால், அதற்காக மற்றவர்களைப் போல அவர் நாட்டை விட்டு வெளியேறவில்லை. நண்பர்கள், நிதிச் சூழல், தனக்குத் தெரிந்ததைக் கைவிடுதல் ஆகிய மூன்று நிலைமைகள் அவரைத் தொடர்ந்து ரஷ்யாவிலேயே இருக்கச் செய்தன. ''எனக்கு வசதியான நிலையில் இருந்து வெளியேறுவது கடினமாக இருக்கும். இங்கு உண்மையில் வசதியாக இல்லை, ஆனால் இங்கிருந்து வெளியேறுவது உளவியல்ரீதியாக கடினமாக இருக்கும்,’’ என ஆடம் கலினின் பிபிசியிடம் தெரிவித்தார்.

எனவே, தன்னுடைய மனைவியிடம் தெரிவித்துவிட்டு காட்டிற்குச் சென்ற அவர், கடந்த நான்கு மாதங்களாக அங்குதான் முகாம் அமைத்து வாழ்கிறார்.

இணைய வசதிக்காக மரத்தில் ஆன்டனாவைவும் மின்சாரத்திற்காக சூரிய ஒளித் தகடுகளையும் கலினின் பொருத்தி வைத்துள்ளார். -11 டிகிரி செல்ஷியஸ் வரை குளிரை எதிர்கொள்ளும் ஆடம் கலினின், மனைவி கொண்டு வந்து தரும் உணவுப் பொருட்களை வைத்து உயிர் வாழ்கிறார். காட்டிற்குள் வசிப்பதே போரில் பங்கேற்பதற்கான அழைப்பைத் தவிர்ப்பதற்கு தனக்குக் கிடைத்த சிறந்த யோசனை என்று அவர் கூறுகிறார்.

ஆடம் கலினின் தங்குமிடம்

பட மூலாதாரம்,ADAM KALININ

அதிகாரிகளால் நேரில் சந்தித்து போருக்கான அழைப்பாணையை அவரிடம் கொடுக்க முடியவில்லை என்றால், போருக்குச் செல்லும்படி அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. காட்டிற்குள் வாழ்ந்தாலும் கலினின் தன்னுடைய பழைய வாழ்க்கையையே வாழ்கிறார். தன்னுடைய பழைய வேலையிலேயே தொடரும் அவர், தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்கிறார்.

 

அவரது சக பணியாளர்கள் பகுதி அணி திரட்டல் அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து வெளியேறி கஜகஸ்தான் சென்றனர். ஆனால், பைன் மரங்களுக்கு இடையே அவர் அமைத்திருக்கும் உயர்திறன் கொண்ட ஆன்டெனா காரணமாக தகவல் தொடர்பு பிரச்னை கலினினுக்கு ஏற்படவில்லை. வெளியே சுற்றுவதை மிகவும் விரும்பும் கலினின், தன்னுடைய கடந்தகால விடுமுறைகளை தெற்கு ரஷ்யாவில் முகாம் அமைத்துக் கழித்துள்ளார். எனவே காட்டுக்குள் செல்ல வேண்டும் என்று அவர் முடிவெடுத்த போதே அதற்குத் தேவையான பொருட்கள் அவரிடம் ஏராளமாக இருந்தன. புத்தாண்டை முன்னிட்டு இந்த முகாமிற்கு வந்து இரண்டு நாட்கள் செலவழித்த அவரது மனைவி, கலினின் உயிர் பிழைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகிறார். ஒவ்வொரு மூன்று வாரத்திற்கும் ஒருமுறை இருவரும் தனியாகச் சந்திக்க வாய்ப்புள்ள இடத்திற்கு அவர் உணவுப் பொருட்களைக் கொண்டு வருகிறார். பின்னர், அதை அங்கிருந்து எடுத்துச் செல்லும் கலினின் அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் சேகரித்து வைத்து, சில தினங்களுக்கு ஒருமுறை அங்கு சென்று எடுத்து வருகிறார். தற்காலிக விறகு அடுப்பைப் பயன்படுத்தி கலினின் காட்டில் சமையல் செய்கிறார்.

முகாம்

பட மூலாதாரம்,ADAM KALININ

"என்னிடம் ஓட்ஸ், டீ, காபி, சர்க்கரை உள்ளது. போதுமான புதிய பழங்களும் காய்கறிகளும் இல்லை என்றாலும், இருப்பவை மோசமாக இல்லை," என்கிறார் கலினின். முதன்முதலில் காட்டிற்குள் வந்ததும் ஐந்து நிமிடத்தில் சென்றடையக் கூடிய வகையில் இரண்டு முகாம்களை அவர் தனித்தனியே அமைத்தார். ஒன்று, இணைய வசதியுடன் கூடிய வேலை பார்ப்பதற்கான இடம். மற்றொன்று உறங்குவதற்குப் பாதுகாப்பான இடம். குளிர்காலம் நெருங்கியதும் வானிலை காரணமாக இரண்டு இடங்களையும் ஒன்றிணைத்தார். சமீபத்தில், வெப்பநிலை -11 டிகிரி செல்ஷியஸாக ஆக குறைந்தது. இது அவர் எதிர்பார்த்ததைவிட அதிகம். தற்போது பனி உருகத் தொடங்கியுள்ளதால், தற்போது இருக்கும் இடத்திலேயே தங்க கலினின் திட்டமிட்டுள்ளார். தனக்கு தற்போது வரை அழைப்பு வரவில்லை என்றாலும், நிலைமை தொடர்ந்து மாறி வருவதால் எதிர்காலத்தில் அழைப்பு வரலாம் என்று கலினின் அஞ்சுகிறார்.

அதிகாரபூர்வமாக, கலினின் போன்ற தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பகுதி அணி திரட்டல் வரைவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவில் இத்தகைய விதிவிலக்குகள் புறக்கணிக்கப்பட்டதாகப் பல அறிக்கைகள் உள்ளன. கார்கிவ் பகுதியில் யுக்ரேனின் மின்னல் எதிர்த்தாக்குதலில் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்ய துருப்புகள் இழந்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று அணி திரட்டல் அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்டார். மேற்கு நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவை பாதுகாக்க இந்த அணி திரட்டல் நடவடிக்கை அவசியம் என புதின் தெரிவித்தார். ஆனால் அந்நாட்டில் இதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். லட்சக்கணக்கான மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியதால் ரஷ்யாவின் எல்லைகளில் குழப்பமான சூழல் நிலவியது. அணி திரட்டல் நடவடிக்கை பல ரஷ்ய குடும்பங்களின் வீட்டு வாசலுக்கு போரைக் கொண்டு வந்தது. திடீரென மகன்கள், தந்தைகள், சகோதரர்கள் குறுகிய அறிவிப்பில் மோசமான ஆயுதங்கள் மற்றும் குறைந்த பயிற்சியுடன் போர்க்களத்தில் நிறுத்தப்பட்டனர்.

முகாம்

பட மூலாதாரம்,ADAM KALININ

எனினும்கூட, ரஷ்யாவிற்குள் எதிர்ப்பு போராட்டங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால், மக்கள் தங்களுக்கு என்ன நேரும் என்று பயப்படுவதே இதற்குக் காரணம் என கலினின் கூறுகிறார். "எங்களிடம் ஒரு சர்வாதிகார அரசு உள்ளது. அது மிகவும் சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் நம்பமுடியாத வேகத்தில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது போருக்கு எதிராக ஒருவர் பேசினால், அரசு அந்த சட்டங்களைப் பயன்படுத்தும்," என்கிறார் கலினின். கலினின் காட்டு வாழ்க்கை அவரை இணையத்தில் பிரபலமாக்கியுள்ளது. தன்னுடைய தினசரி வழக்கம், முகாமை சுற்றியுள்ள பகுதிகள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை டெலிகிராமில் அவர் பதிவிட்டு வரும் நிலையில், 17,000 பேர் அவரைப் பின்தொடர்கின்றனர். தன்னுடைய பழைய வாழ்க்கையை தான் அதிகம் இழக்கவில்லை என்று அவர் கூறுகிறார். ஆனால், தன்னுடைய மனைவியை அதிகம் தவறவிடுவதாகவும், அடிக்கடி அவரைப் பார்க்க விரும்புவதாகவும் கூறுகிறார். எனினும், போர்க்களத்திற்கோ சிறைக்கோ செல்வதைவிட இது சிறந்தது என்கிறார் கலினின். ''நான் மிகவும் மாறிவிட்டேன், நான் தவறவிட்ட விஷயங்கள் மறைந்துவிட்டன. முன்பு எனக்கு முக்கியமானதாகத் தோன்றிய விஷயங்கள் தற்போது முக்கியமானதாக இல்லை. எங்களைவிட மோசமான நிலையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்,” என்கிறார் கலினின்.

https://www.bbc.com/tamil/articles/c0vpj9llyj5o

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜெனீவா உடன்படிக்கை ஜெனீவா உடன்படிக்கை' என அழைக்கப்படுவது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும். இரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுக்கின்றது.இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன.மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்புகளையும் வரையறுக்கிறது மற்றும் உயிர் இரசாயன ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் உடன்படிக்கை(1899 ஆண்டு முதல் ஹேக் மாநாடு, 1907 ஆம் ஆண்டு இரண்டாம் ஹேக் மாநாடு) படி நுண்ணுயிரிகள்,நச்சு வாயுக்களை பயன்படுத்தி போர் செய்வதை தடை செய்கிறதது. வரலாறு.தொகு இதன் வரலாறு செஞ்சிலுவை சங்கத்தின (Red Cross); வரலாற்றுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தந்தையான கென்றி டுனான்ற்(Jean Henri Dunant) 1864 ல் யுத்தத்தில் காயமடையும் போர் வீரர்கள்பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த முதலாவது உடன்படிக்கையை பிரதான ஐரேப்பிய வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. 1906 ல் இரண்டாவது உடன்படிக்கையில் முக்கிய அம்சங்கள் விரிவாக்கப் பட்டதுடன் கடலில் ஏற்படும் போர்களுக்கும் இவை பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1929 ல் மூன்றாவது உடன்படிக்கையின்போது யுத்தக் கைதிகளைக் கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை 1948 ஆகஸ்டு 23 – 30 வரையான காலப்பகுதியில்; சுவீடன் நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 ஆகஸ்ட் 12 ல் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது. இவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ நாடு கடத்தல், ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை பாலியல் தாக்குதல்களுக்குஉள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி கூட்டுத்தண்டணை வழங்குதல், பழி வாங்குதல், நியாயமின்றி சொத்துக்களை அழித்தல், இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்பு வந்த குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சிகள், விடுதலைப்போராட்டங்கள் காரணமாக மீண்டும் இவ் உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போகும் நிலமை ஏற்பட்டது. இதன் விளைவாக 1977 ஜூன் 8 ல் 1949உடன்படிக்கைகளுடன் மேலும் 2 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டது. ஆயினும் அமேரிக்கா, பிருத்தானியாபோன்ற நாடுகள் 1977 உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்து விட்டன. அங்கீகரிக்கப்பட்ட பிரேரணைகள்தொகு 1864 ல் முதலாவது உடன்படிக்கைதொகு 1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது. 2. எல்லாத்தரப்பைச் சேர்ந்த வீரர்களும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும். 3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும். 4. இந்த உடன் படிக்கையின் கீழ் பணிபுரியும் ஆட்களையும் உபகரணங்களையும் இனம்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும். 1929 ல் மூன்றாவது உடன்படிக்கைதொகு 1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவும். 2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கவும். 3. கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவது. 1949 ல் நான்காவது உடன்படிக்கைதொகு 1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது. 2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது 3. யுத்த கைதிகளை நடத்தும் விதம் பற்றியது 4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது. 1977 உடன்படிக்கையின் சாரம்தொகு சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் கரந்தடிப் போராளிகள் (கொரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது. நடைமுறை படுத்தல்தொகு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அமலாக்க அதிகாரம்தொகு ஜெனீவா உடன்படிக்கை மற்றும் பிற ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை விசாரிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா. அரிதாகவே ஜெனீவா உடன்படிக்கை தொடர்பான தனது அதிகாரத்தை செயல்படுத்துகிறது அதனால் பெரும்பாலான பிரச்சினைகள் பிராந்திய ஒப்பந்தங்கள் மூலம் அல்லது அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படும். அதிகாரங்களை பாதுகாத்தல்தொகு இந்த நடவடிக்கையினை பாதுகாத்தல் ஆயுத மோதலில் பகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது.போரின் போது அந்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இரு கட்சிகளுக்கிடையே நடுநிலையான பேச்சுவார்த்தையை நடத்துகிறது. போர் குற்றங்கள்தொகு உடன்படிக்கையின் அனைத்து மீறல்களும் சமமாக கருதப்படுவதில்லை எனினும் மிக மோசமான குற்றங்களை எதிர்த்து ஒரு சட்ட வரையறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இது கல்லறை மீறப்படுதல்(Grave breaches) என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஜெனீவா உடன்படிக்கை மாநாட்டின் மூலம் போர் குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பின்வரும் நடவடிக்கைகள் பூற்குர்ரங்கள் என வரையறுக்கப்படுகின்றன,அவை வேண்டுமென்றே கொலை,சித்திரவதை அல்லது உயிரியல் சோதனைகள் செய்தல் வேண்டுமென்றே உடல் அல்லது சுகாதார கேடுகளை விளைவித்தல் எதிரி படைகளுக்காக வேலை செய்ய நிர்பந்திதல் வேண்டுமென்றே ஒரு நியாயமான போர் குற்றம் விசாரணைக்கு மறுத்தல் நான்காம் ஜெனிவா உடன்படிக்கை பின்வருபவற்றயும் போர் குற்றமாக கருதுகிறது அவை  பிணைய கைதிகளாக பிடித்தல் தேவையில்லாத இராணுவ நடவடிக்கைகளுக்காக வேண்டுமென்றே ஒருவரின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தல் சட்டவிரோத நாடுகடத்தல் மற்றும் இடப்பெயர்த்தல் இதன் மீதான விசாரணைகளை ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழியாக நடத்தப்படும்.     மேற்கோள்கள்     https://ta.m.wikipedia.org/wiki/ஜெனீவா_உடன்படிக்கை
  • ஜெனீவா உடன்படிக்கையை புரிந்துகொள்வதற்கு அரசியல் அறிவு தேவையில்லை  கந்தையா அண்ணர், எழுத வாசிக்கத் தெரிந்தாலே போதும். 
  • இஸ்ரேல் பல பாலஸ்தீனர்களை வீடற்றவர்களாக ஆக்குகிறது, யாரும் கண்டிக்கத் துணியவில்லை…    
  • இது ஒரு மிக சிறந்த சிந்தனை   🤪 உங்கள் காலத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சனை முடித்து வைக்கப்படும் 🤣.  எப்படியென்றால்   நீங்கள் விரும்பும்படி வடக்கு கிழக்குலிருந்து தமிழர்கள் வெளியேற்றி    😂 அந்த பேச்சுவார்த்தை குழுவுக்கு நீங்கள் தான் தலைவர்     .......உங்களது இந்த இரண்டாவது இலக்க கருத்துகள் போர் குற்றம் நடந்தது என்பதை ஐயம்திரிபுற சந்தேகம் இல்லாமல் உறுதிப்படுத்தியுள்ளது  நன்றிகள் பல கோடி  கபிதன்..தயவுசெய்து யார் போர் குற்றவாளிகள் என்பதையும் சொல்லிவிடுங்கள். ...போறவழிக்கு புண்ணியங்கள் கிடைக்கும்   தமிழர்கள் தங்கள் சொந்த பூமியான வடக்கு கிழக்கு. இல் இருப்பதும் வந்தேறி ரஷ்யான் உக்ரேனில். இருப்பதும் உங்களுக்கு ஒன்றாக....அதாவது ஒத்த நிகழ்வாக தெரியுமானால்  உங்கள் அரசியல் அறிவு பூச்சியமாகும்.....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.