Jump to content

பிபிசி ஆவணப்பட திரையிடல்: ஜே.என்.யூ. வளாகத்தில் மின் தடை, கல் வீச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி ஆவணப்பட திரையிடல்: ஜே.என்.யூ. வளாகத்தில் மின் தடை, கல் வீச்சு

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அபிநவ் கோயல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 17 நிமிடங்களுக்கு முன்னர்
மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவணப்பட திரையிடலின் போது மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

ஆவணப்படத்தைப் பார்த்த மாணவர்கள் கல் வீச்சுக்குப் பிறகு ஜே.என்.யூ. வாயில் வரை பேரணியாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர். மாணவர்கள் யார்? கற்களை வீசியது யார் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. கல்வீச்சில் சில மாணவர்கள் காயமடைந்தனர். சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சில மாணவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். 

நர்மதா மாணவர் விடுதியின் முன்புள்ள ஜே.என்.யூ. மாணவர் சங்க அலுவலகத்தில் இரவு 9 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படுதாக இருந்தது. இதுகுறித்து ஒரு நாள் முன்னதாகவே ஜே.என்.யூ. மாணவர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

மாணவர் சங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆவணப்படத்தை திரையிட அனுமதி பெறப்படவில்லை, ஆகவே அந்நிகழ்ச்சியை மாணவர்கள் ரத்து செய்ய வேண்டும் என்று ஜே.என்.யூ. நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனை மீறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. 

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

ஆவணப்பட திரையீட்டிற்கு முன்பாக மின்தடை

ஆவணப்படம் திரையிடப்படவிருந்த இடத்தில் இரவு 8 மணி முதலே மாணவர்கள் கூடத் தொடங்கி விட்டனர். ஆனால், ஆவணப்பட திரையீட்டிற்கு முன்பாக இரவு 8.30 மணியளவில் ஒட்டுமொத்த வளாகத்திலும் மின்தடை ஏற்பட்டது. 

அங்கே கூடியிருந்த மாணவர்கள், நிர்வாகமே மின்சாரத்தை துண்டித்துவிட்டதாக குற்றம்சாட்டினர். ஆவணப்பட திரையீட்டிற்கு சற்று முன்னதாக மின் தடை ஏற்பட்டது ஏன் என்பதற்கு ஜே.என்.யூ. நிர்வாகம் சார்பில் எந்தவொரு பதிலும் இல்லை. 

ஆவணப்படத்தை பார்க்க கூடியிருந்த மாணவர்களிடையே, செல்போன் வெளிச்சத்தில் இரவு 9.10 மணியளவில் ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் அய்ஷே கோஷ் உரையாற்றினார். 

"உண்மை வெளியே வந்துவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். நீங்கள் மின்சாரத்தை தடை செய்யலாம், எங்களிடம் இருந்து திரையை, லேப்டாப்பை பறித்துக் கொள்ளலாம், ஆனால் எங்களது கண்களையும், உத்வேகத்தையும் உங்களால் பறிக்கவே முடியாது," என்று அவர் கூறினார். 

பிபிசியிடம் பேசிய அவர், "பொதுவெளியில் ஆவணப்படம் திரையீட்டை வேண்டுமானால் மோதி அரசு தடுக்கலாம். ஆனால், பொதுமக்கள் அதனை பார்ப்பதை தடுக்க முடியாது" என்றார். 

பி.பி.சி.யின் "இந்தியா: தி மோதி க்வெஸ்டின்" ஆவணப்படத்தை பகிரும் இணைய இணைப்புகளை நிக்குமாறு யூடியூப் மற்றும் ட்விட்டருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

இருளில் மாணவர்கள் மீது கல்வீச்சு

மின்தடை காரணமாக, பெரிய திரையில் ஆவணப்படத்தை திரையிட முடியவில்லை. ஆனால், அங்கே கூடியிருந்த மாணவர்களுக்கு கியூஆர் குறியீடு அச்சிடப்பட்ட ஏ4 பேப்பர்களை மாணவர்கள் சங்கத்தினர் விநியோகிக்கத் தொடங்கினர். அதன் உதவியுடன், மாணவர்கள் அவர்களது செல்போன் வாயிலாக ஆவணப்படத்தை பார்க்க முடிந்தது. 

மாணவர் சங்க அலுவலகத்திற்கு வெளியே தரை விரிப்பில் அமர்ந்திருந்த மாணவர்கள் ஆவணப்படத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், அது சரிவர வேலை செய்யாததால், சில மாணவர்கள் லேப்டாப் மற்றும் ஒலிபெருக்கிகளை கொண்டு வந்தனர். 

அந்நேரத்தில், மாணவர் சங்க அலுவலகத்திற்கு வெளியே சுமார் 300 மாணவர்கள் கூடியிருந்ததாக தோராய மதிப்பீடுகள் கூறுகின்றன. சாதாரண உடையணிந்த டெல்லி காவல்துறை அதிகாரிகளும் அவர்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். 

ஆவணப்பட திரையீட்டிற்கு திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மாலை 7 மணிக்கே பாதுகாப்பு அதிகாரிகள் உலவிக் கொண்டிருந்தனர். சிலரது கைகளில் டெல்லி காவல்துறை தொப்பி இருந்ததை தெளிவாகக் காண முடிந்தது. 

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

இரவு 9.40 மணியளவில் மாணவர் சங்க அலுவலகத்திற்கு வெளியே, மாணவர்கள் சிறுசிறு குழுக்களாக சேர்ந்து பிபிசியின் "இந்தியா: தி மோதி க்வெஸ்டின்" ஆவணப்படத்தை லேப்டாப்பில் பார்க்கத் தொடங்கினர். 

மாணவர்கள் 6-7 குழுக்களாக சேர்ந்து ஆவணப்படத்தை பார்க்கத் தொடங்கினர். சிலர் லேப்டாப்பை தரையில் வைத்திருந்தனர். லேப்டாப்பை சற்று உயரத்தில் வைத்திருக்க சிலர் அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் நாற்காலிகளை பயன்படுத்தினர். 

சில மாணவர்கள் லேப்டாப்புடன் பெரிய ஒலிபெருக்கிகளையும் வைத்திருந்தனர். 

இரவு 10.20 மணியளவில், ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கற்கள் விழத் தொடங்கின. அதன் அருகே அமைந்துள்ள டெஃப்லாஸ் உணவகத்தில் இருந்து அந்த கற்கள் வீசப்பட்டன. 

கல் மட்டுமல்ல, செங்கற்களும் கூட வீசப்பட்டன. கல்வீச்சு தொடங்கியதுமே ஆவணப்படம் பார்ப்பதை பாதியில் அப்படியே நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு மாணவர்கள் ஓட முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. 

கல்வீச்சு தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் மாணவர் சங்க அலுவலகத்திற்கு வெளியே மாணவர்கள் கூடியிருந்த இடம் காலியாகிவிட்டது. ஆவணப்பட திரையிடலுக்காக அங்கே கூடிய மாணவர்கள் ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயிலுக்கு ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர். 

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

ஜே.என்.யூ. பிரதான வாயிலில் மாணவர்கள் மீது மீண்டும் கல்வீச்சு

ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயில் மாணவர் சங்க அலுவலகத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருக்கிறது. இரவு 11 மணியளவில் மாணவர்கள் கங்கா உணவகத்தை கடந்து பிரதான நுழைவு வாயிலை அடைய முற்படுகையில், அங்கேயும் கல்வீச்சு மீண்டும் தொடங்கிவிட்டது. 

கங்கா உணவகம் பக்கம் இருந்து சுமார் 20-30 மாணவர்கள் கொண்ட குழு கற்களை வீசிக் கொண்டிருந்தது. மற்ற மாணவர்கள் பிடிக்க முயன்ற போது புதர்களுக்குள் சென்று அவர்கள் ஒளிந்து கொண்டனர். 

பிபிசி இந்தியிடம் பேசிய ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயிலில் இருந்த மாணவர் பிரவீன், "ஷூ அணிந்த காலால் அவர்கள் எட்டி உதைத்தார்கள். என்னையும் அவர்கள் உதைத்தனர். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். நீ போய்க் கொண்டே இரு என்று அவர்கள் கூறினர்." என்றார். 

மற்றொரு ஜே.என்.யூ. மாணவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் விடுதிக்குச் சென்று கொண்டிருந்தேன். 5-6 பேர் சேர்ந்து ஒரு பையனை அடித்துக் கொண்டிருந்தனர். அங்கே காவலாளிகள் நின்று கொண்டிருந்தார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் என்று அவரிடம் கூறினேன். ஒருவன் என்னிடம் ஓடி வந்தான். என் அருகில் வந்ததும் என் முகத்தில் குத்தினான்" என்று தெரிவித்தார். 

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

கற்களை வீசியது யார்?

ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயில் அருகே 2 இல்லது 3 முறை கல்வீச்சு நிகழ்ந்தது. கற்களை வீசிய கும்பல் முகமூடி மற்றும் துணிகளால் முகத்தை முடியிருந்தது. 

அவர்களை கடந்து சென்ற மாணவர்களால், 'செல்போன் டார்ச் லைட்களை ஒளிரவிட வேண்டாம்' என்று குரலை தெளிவாக கேட்க முடிந்தது. 

இந்த களேபரங்கள் நடந்த போது ஜே.என்.யூ. காவலாளிகள் அங்கே நின்றிருந்தாலும், ஒருவர் கூட எதுவும் செய்யவில்லை. சில நேரங்களில் காவலாளிகள் ஜே.என்.யூ. வளாகத்தில் இருந்து வெளியேறினர். 

ஜே.என்.யூ. வளாகத்திற்கு வெளியே பல வாகனங்கள் நின்றிருந்த டெல்லி காவல்துறையினரும் மவுனமாகவே இருந்தனர். 

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயிலில் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அங்கிருந்த ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் அய்ஷே கோஷ், "இப்போது மின்சாரத்தை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. ஆவணப்பட திரையீட்டை தடுத்து நிறுத்த கல்வீச்சை நாடலாம் என்னும் அளவுக்கு ஜே.என்.யூ. நிர்வாகம் தரம் தாழ்ந்து போகும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை," என்று விமர்சித்தார். 

ஏ.பி.வி.பி. (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) சங்கத்தினர் கற்களை வீசியதை தான் பார்த்ததாக அவர் குற்றம்சாட்டினார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.

ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவரின் குற்றச்சாட்டுக்கு ஏ.பி.வி.பி.யிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. 

ஆவணப்படத்தை மீண்டும் திரையிடப் போவதாக ஜே.என்.யூ. மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளையில், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் சங்கமும் ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதுகுறித்த சுவரொட்டிகளையும் அந்த மாணவர் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர். 

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

இரண்டு அத்தியாய ஆவணப்படம்

’இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ என்ற இரண்டு அத்தியாய ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியுள்ளது. இதன் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டது. 

முதல் அத்தியாயத்தில் நரேந்திர மோதியின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை காட்டப்பட்டது. அதில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னேறி குஜராத்தின் முதலமைச்சர் பதவியை அடைவது வரை சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆவணப்படம் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசியால் பெறப்பட்ட, வெளியிடப்படாத அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. நரேந்திர மோதி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த வன்முறையில் குறைந்தது 2000 பேர் இறந்தது குறித்து இந்த ஆவணப்படத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

2002ல் குஜராத்தில் வன்முறைச் சூழலை ஏற்படுத்தியதற்கு மோதிதான் நேரடிப் பொறுப்பு என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.

வன்முறைக்கு தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் மோதி தொடர்ந்து வன்மையாக மறுத்து வருகிறார். ஆனால் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகத்திற்காக அறிக்கை எழுதிய பிரிட்டிஷ் தூதாண்மை அதிகாரியிடம் பிபிசி பேசியபோது, அவர் தனது அறிக்கையை தொடர்ந்து பற்றி நிற்பதாகத் தெரிவித்தார்.

குஜராத் வன்முறையில் பிரதமர் மோதிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறிவிட்டது. செய்தியாளர் கூட்டத்தில் இந்த ஆவணப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி "எங்கள் கருத்துப்படி இது ஒரு துஷ்பிரச்சாரம் என்று நான் தெளிவுபடுத்துகிறேன். மக்கள் ஏற்கனவே நிராகரித்த ஒரு வகையான கதையை முன்வைப்பதே இதன் நோக்கம்,” என்று கூறினார்.

இந்த ஆவணப்படம் துஷ்பிரச்சாரம் மற்றும் காலனித்துவ மனப்பான்மையால் ஈர்க்கப்பட்டதாக அரசுடன் தொடர்புடைய பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், முழுமையான ஆய்வுக்குப் பிறகு பிபிசியின் தலையங்க விதிமுறைகளின்படி இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டதாக பிபிசி கூறுகிறது.

முன்னதாக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கேரளாவில் உள்ள சில கல்வி வளாகங்களில் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். மேலும், பல பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர். 

https://www.bbc.com/tamil/articles/c14wj5x4eleo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோதி குறித்த பிபிசி ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட மறுப்பு: செல்போன், லேப்டாப்பில் பார்த்த மாணவர்கள்

பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ ஆவணப்படம்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய பிரதமர் மோதி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் அவர்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். பாதுகாப்பு கருதி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவண படம் பல்கலைக்கழக வளாகங்களில் திரையிடப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொதுவெளியில் திரையிடக்கூடாது என தெரிவித்திருந்த நிலையில் விடுதி அறைகளில் திரையிடப்படும் என அறிவித்தனர்.  அதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்க முடியாது என அறிவித்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்ட  பிபிசி ஆவணப் படத்தை பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே கூடி பார்த்தனர்.

 

 

இதே போன்று கேரளா மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மாஹே பிராந்தியத்திலும் பிபிசி வெளியிட்ட மோதி ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு(DYFI) சார்பில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர். அதை அவர்களது பேஸ்புக் பக்கத்திலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்தனர்.

 

மின்சாரம் , வைஃபை துண்டிப்பு

இதுகுறித்து புதுவை பல்கலைக்கழகத்தில் பிபிசி வெளியிட்ட மோதி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களில் ஒருவரை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. 

ஆராய்ச்சி மாணவரான அவர் பேசுகையில், " பிபிசி வெளியிட்ட மோதி குறித்த ஆவணப்படத்தை திரையிட இருப்பதாக இந்திய மாணவர் சங்கம் சார்பில்  அறிவித்தனர். ஆனால் அதற்கு பல்கலைக்கழகம் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கவில்லை. மேலும் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் பல்கலைக்கழகம் முழுவதும் மின்சாரம் மற்றும் வைஃபை(wifi) இணைய வசதி துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்டர் கேட் அருகே சுமார் 300 மாணவர்கள் இணைந்து எங்களது தொலைபேசி மற்றும் மடிக்கணினியில் பிபிசியின் ஆவணப்படத்தை பார்த்தோம்.

 

அப்போது ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 10 பேர் எங்களுக்கு எதிராக ஜெய் ஸ்ரீ ராம், மோதி மோதி, சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்தியில் எங்களை பார்த்து சுட்டுக் தள்ளுங்கள் என்று கத்தினர். மேலும் இரு தரப்பினரும் இடையே மோதல் ஏற்பட இருந்த நிலையில் பல்கலைக்கழக தனியார் காவலர்கள் பாதுகாத்தனர். தற்போது மின் இணைப்பு வந்துள்ளது. ஆனால் இணைய வசதி வரவில்லை," என்று ஆராய்ச்சி மாணவர் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ ஆவணப்படம்

டெல்லி ஜே.என்.யூ. வளாகத்திலும் திரையிடல்

முன்னதாக, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிபிசியின் ஆவணப் படம் நேற்று திரையிடப்பட்டது. நர்மதா மாணவர் விடுதியின் முன்புள்ள ஜே.என்.யூ. மாணவர் சங்க அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படுதாக இருந்தது. இதுகுறித்து ஒரு நாள் முன்னதாகவே ஜே.என்.யூ. மாணவர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

மாணவர் சங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆவணப்படத்தை திரையிட அனுமதி பெறப்படவில்லை, ஆகவே அந்நிகழ்ச்சியை மாணவர்கள் ரத்து செய்ய வேண்டும் என்று ஜே.என்.யூ. நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனை மீறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. 

பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ ஆவணப்படம்

ஆவணப்படம் திரையிடப்படவிருந்த இடத்தில் இரவு 8 மணி முதலே மாணவர்கள் கூடத் தொடங்கி விட்டனர். ஆனால், ஆவணப்பட திரையீட்டிற்கு முன்பாக இரவு 8.30 மணியளவில் ஒட்டுமொத்த வளாகத்திலும் மின்தடை ஏற்பட்டது. 

அங்கே கூடியிருந்த மாணவர்கள், நிர்வாகமே மின்சாரத்தை துண்டித்துவிட்டதாக குற்றம்சாட்டினர். ஆவணப்பட திரையீட்டிற்கு சற்று முன்னதாக மின் தடை ஏற்பட்டது ஏன் என்பதற்கு ஜே.என்.யூ. நிர்வாகம் சார்பில் எந்தவொரு பதிலும் இல்லை. 

ஆவணப்படத்தை பார்க்க கூடியிருந்த மாணவர்களிடையே, செல்போன் வெளிச்சத்தில் இரவு 9.10 மணியளவில் ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் அய்ஷே கோஷ் உரையாற்றினார். 

"உண்மை வெளியே வந்துவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். நீங்கள் மின்சாரத்தை தடை செய்யலாம், எங்களிடம் இருந்து திரையை, லேப்டாப்பை பறித்துக் கொள்ளலாம், ஆனால் எங்களது கண்களையும், உத்வேகத்தையும் உங்களால் பறிக்கவே முடியாது," என்று அவர் கூறினார். 

பிபிசியிடம் பேசிய அவர், "பொதுவெளியில் ஆவணப்படம் திரையீட்டை வேண்டுமானால் மோதி அரசு தடுக்கலாம். ஆனால், பொதுமக்கள் அதனை பார்ப்பதை தடுக்க முடியாது" என்றார். 

மின்தடை காரணமாக, பெரிய திரையில் ஆவணப்படத்தை திரையிட முடியவில்லை. ஆனால், அங்கே கூடியிருந்த மாணவர்களுக்கு கியூஆர் குறியீடு அச்சிடப்பட்ட ஏ4 பேப்பர்களை மாணவர்கள் சங்கத்தினர் விநியோகிக்கத் தொடங்கினர். அதன் உதவியுடன், மாணவர்கள் அவர்களது செல்போன் வாயிலாக ஆவணப்படத்தை பார்க்க முடிந்தது. 

இரவு 10.20 மணியளவில், ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கற்கள் விழத் தொடங்கின. அதன் அருகே அமைந்துள்ள டெஃப்லாஸ் உணவகத்தில் இருந்து அந்த கற்கள் வீசப்பட்டன. 

கல் மட்டுமல்ல, செங்கற்களும் கூட வீசப்பட்டன. கல்வீச்சு தொடங்கியதுமே ஆவணப்படம் பார்ப்பதை பாதியில் அப்படியே நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு மாணவர்கள் ஓட முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. 

கல்வீச்சு தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் மாணவர் சங்க அலுவலகத்திற்கு வெளியே மாணவர்கள் கூடியிருந்த இடம் காலியாகிவிட்டது. ஆவணப்பட திரையிடலுக்காக அங்கே கூடிய மாணவர்கள் ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயிலுக்கு ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர். 

https://www.bbc.com/tamil/articles/c90ked472lqo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம் – திருமாவளவன்

By RAJEEBAN

25 JAN, 2023 | 04:45 PM
image

பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசி யின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மூலகொத்தாலத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் விசிக தலைவரும், எம்பியுமான  தொல் திருமாவளவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது..

 

மொழிப்போர் தியாகிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம். மோடி அரசு இந்தியா முழுவதும் ஒரே மதம் இருக்க வேண்டும் ஒரே மொழி இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் செயல் திட்டங்களை வரையறுத்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியை திணிப்பதற்கும் சமஸ்கிருதமயமாதலை தீவிரப்படுத்துவதற்கும் கோடான கோடி ரூபாயை இந்திய அரசு ஒதுக்கீடு செய்து வேலை செய்து வருகிறது.

பிராந்திய மொழி பேசக் கூடியவர்களை இந்தி பேசக் கூடியவர்களாக மாற்ற வேண்டும் என்கிற அடிப்படையிலே செயல்பட்டு வருவது மிக மோசமான ஒரு பாசிசப்போக்கு இந்த நாளில் இந்த பாசிச போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ் மொழி மட்டும் அல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும், அலுவல் மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும் தமிழை மட்டும் கூறவில்லை, தமிழுக்கு மட்டும் நாம் கோரிக்கை விடுக்கவில்லை இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன.அவை அனைத்தும்  இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற வேண்டும்.

 

lபிரதமர் மோடிக்கு எதிராக வன்முறை, வெறியாட்டம் குறித்த ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டு உலகம் தழுவி அளவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது, தன்னுடைய குற்றத்தை உணர்ந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மோடி விலக வேண்டும். எந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பை அவர் விதைத்திருக்கிறார், வன்முறையை தூண்டி இருக்கிறார், ஒரு மிகப்பெரும் இனக் கொலையை செய்வதற்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதை இன்றைக்கு பிபிசி ஆதாரங்களோடு வெளியிட்டு இருக்கிறது.

ஒரே தேர்தல் ஒரே தேசம் என்கிற முழக்கத்தை முன் வைக்கிறார்கள். இவையெல்லாம் மிகவும் ஆபத்தான பாசிச அரசியல் என்பதால் தான் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் ஓங்கி உரத்து முழங்கி வருகிறோம்.

அந்த அடிப்படையில் தான் அந்த  கருத்தின் பிரதிநிதியாக இருக்கிற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்ப பெற வேண்டும். அவர் தமிழ்நாட்டில் ஆளுநராக நீடிப்பது நல்லது அல்ல தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழ்நாட்டுக்கும் முரணாக இருக்கும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். ஆளுநரின் அழைப்பை புறக்கணிக்கிறோம் அதில் பங்கேற்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

ஈரோடு தொகுதி இடை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மக்கள் நீதி மையம் ஆதரவு அளித்திருப்பதை வரவேற்கிறோம். மேலும் இந்த வீடியோவை இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசி யின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட முயற்சிகளை மேற்கொள்வோம்” திருமாவளவன் எம்பி  என கூறினார்.

https://www.virakesari.lk/article/146678

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கப்பட்ட பி.பி.சி ஆவணப் படத்தின் முக்கிய உண்மைகள்!

- ஆசிஷ் ரே

 

185858-ldmmidxlws-1674192777.jpg

குஜராத் கலவரச் சதியில் இருந்து தப்பித்துக் கொண்ட நரேந்திர மோடியை மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பிபிசியின்  இரு ஆவணப்படங்கள் அதிகார அழுத்தால் நீக்கப்பட்டுவிட்டன! ஆயினும், அவற்றில் சொல்லப்பட்டவற்றின் சாராம்சத்தை பிரண்ட் லைனில் ஆசிஷ் ரே எழுதியுள்ளார்! இதோ அதன் தமிழாக்கம்!

”மோடி உள்ளிட்ட இந்துத்துவவாதிகளுக்கு இந்த கலவரத்தில் உள்ள நேரடி தொடர்புகளை பிபிசி ஆவணப்படம் தோலுரித்து காட்டுவதால், பதறிய மத்திய பாஜக அரசு அவரசரகால சட்டங்களை வைத்து இதை முடக்கியுள்ளது. இது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, சட்ட விரோதமும் கூட” என இந்தியாவின் அனைத்து எதிர்கட்சிகளும் கண்டித்துள்ளன!

இந்த கலவரம் குறித்து, இங்கிலாந்தில் 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா வெளிப்படுத்திய கருத்துக்கள், குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி பேசுவோரின் வீடியோக்கள் மட்டுமின்றி மோடியின் பேட்டியையும் உள்ளடக்கிய  இந்த ஆவணப்படத்தை இனி பார்க்க முடியாது. எனவே, அந்த ஆவணப்படத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்ற சாரம்சத்தை இங்கே நாம் பார்ப்போம்!

மோடியை மீண்டும் கூண்டில் ஏற்றும் பிபிசியின் புதிய ஆவணப்படம்!

“இந்தியா: மோடி ஒரு கேள்விக்குறி  எனும் பொருள் தரும் தலைப்பில், இரண்டு பகுதிகளைக் கொண்ட ஓர் ஆவணப்படத்தின் முதற்பகுதி, பிரிட்டனில் ஜனவரி 17 அன்றும்  இரண்டாம் பகுதி ஜனவரி 23 அன்றும் ஒளிபரப்பாயிற்று. 2002 – ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் அன்றைய முதல்வர் மோடி குற்றமிழைத்துள்ளார் என பிரித்தானிய அரசு கூறியுள்ளது கலவரம் முடிந்தவுடன், 2002 – ல் பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் ஒரு புலனாய்வு விசாரணையை மேற்கொண்டது.

அவ்விசாரணை அறிக்கைக்கு பின்வருமாறு தலைப்பிடப் பட்டது: “குஜராத் இனக்கலவரம்”.  “வன்முறையின் நீட்சி, அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் மிகவும் மோசமானதாக இருந்தது.  குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர். பரவலாக, இசுலாமியப் பெண்கள் திட்டமிட்டுக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். 1, 38, 000 பேர் உள்நாட்டு அகதிகளாயினர். இந்துக்கள் வாழும், இந்து – இசுலாமியர்கள் கலந்து வாழும் பகுதிகளில் இருந்த இசுலாமியர்களின் வியாபாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன”.

indiatrainfire-tile-1656053641-167431535

மேலும் அது கூறுகிறது: “அரசியல் உள்நோக்கத்துடன் பல மாதங்கள் முன்பாகவே இவ்வன்முறை திட்டமிடப்பட்டது. இந்துக்கள் வாழும் இடங்களில் இருந்து, இசுலாமியர்களைத் துடைத்தெறிவதே இலக்கு. இந்து தீவிரவாத அமைப்பான வி ஹெய்ச் பியின் தலைமையில் நடைபெற்ற வன்முறையை, மாநில அரசு ஆதரித்தது. மோடி முதலமைச்சராக நீடிக்கும் வரை மறுசீரமைப்பு என்பது இயலாத ஒன்று”.

“இந்துக்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இவ் வன்முறையில், ஓர் இனத்தை அழித்தொழிக்கும் எல்லா அம்சங்களும் இருந்தன. மாநில அரசு, இக்கொடிய சூழலை உருவாக்கியிருக்காவிட்டால்,  வி ஹெய்ச் பியால் இந்த அளவு பேரழிவை உண்டாக்கியிருக்க முடியாது”.

இறுதியாக இவ்வறிக்கை கூறுகிறது: “இந்த அழிவிற்கு நரேந்திர மோடியே நேரடியாகப் பொறுப்பானவர்”.

இதற்கு இணையான ஓர் ஆய்வை, ஐரோப்பிய ஒன்றியமும் நடத்திற்று. குஜராத் மாநில அரசின் அமைச்சர்கள் இவ்வன்முறையில் தீவிரமாகச் செயல்பட்டதாகவும், காவல்துறையின் மூத்த அதிகாரிகள் இவ் வன்முறையைத் தடுப்பதில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் இவ்வாய்வு குறிப்பிடுகிறது. மேலும், 2002 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 – ஆம் நாள், காவல் துறையின் மூத்த அதிகாரிகளை மோடி சந்தித்ததாகவும், கலவரத்தைத் தடுக்க வேண்டாம் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், நம்பத்தக்க மனிதர்கள் இத்தகவல்களை தங்களிடம் கூறியதாகவும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

ஆனால், இக்கூட்டம் நடந்ததையே காவல்துறை மறுக்கிறது என்றும் இவ்வறிக்கை பதிவு செய்துள்ளது.

7vyw8gw4f2xbxdlu_1656226442.jpg நேர்மையான அதிகாரிகள் சஞ்சய் பட் மற்றும் ஸ்ரீகுமார்

மோடியின் ஆதரவாளர்கள், இவற்றை மறுப்பதையும் இவ்வாவணப்படம் பதிவு செய்துள்ளது. குஜராத் மாநில உளவுத்துறையின் அப்போதைய தலைவராக இருந்த நேர்மைக்கு பேர் போன ஆர் பி ஸ்ரீகுமாரும், மற்றுமொரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட்டும் மோடி மேற்கூறியவாறு உத்தரவிட்டதாகக் கூறினர்.  ஆனால், முதலமைச்சரின் தரப்பினர் ஸ்ரீகுமாரோ அல்லது பட்டோ இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை என அதிரடியாக மறுத்தனர். கடந்த 2022 – ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் செய்திகளை திரித்துக் கூறினர் என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால், வேறு ஒரு வழக்கின் காரணமாக, பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கலவரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இஷான் ஜாஃப்ரியின் வீடு இந்து மத வெறியர்களால் சூழப்பட்டதையும், அப்போது அவர் மோடியைத் தொலைபேசியில் அழைத்ததையும், மோடி அவரது அழைப்பை ஏற்கவில்லை என்பதையும், பிறகு ஜாஃப்ரி கொல்லப்பட்டதையும் இதில் நேரடியாகத் தொடர்புடைய நபர் கூறியுள்ளார்.

இக்காலகட்டத்தில், குஜராத் அரசில் அமைச்சராக இருந்த ஹாரன் பாண்டியா மோடி மேற் கூறியவாறு உத்தரவிட்டதாக இவ்வாவணப்படத்தில் பதிவு செய்திருந்தார். ஆனால், அவர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது மறுக்கப்படுகிறது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமண்ய ஸ்வாமி, ஹாரன் பாண்டியாவின் இறப்பு பற்றிக் கூறுகையில், “அது கொடூரமானதும், மர்மமானதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

64009038-97fc-11ec-8be6-4325a30d7e20_164 சிதைக்கப்பட்ட சிறுபான்மையினர் குடியிருப்புகள்!

குஜராத் கலவரம் பற்றிய இப்படத்தை பிபிசி இப்போது ஏன் வெளியிடுகிறது?

தற்சமயம் பிரிட்டன் அரசு இந்திய அரசுடன் ஒரு வணிக ஒப்பந்தத்தை கையெழுத்திட இருக்கிறது. பிரிட்டனில் உள்ள தொலைகாட்சி பார்க்கும் ஒவ்வொருவரும் செலுத்தும் அனுமதித் தொகையின் மூலம் “ராயல் சார்ட்டர்” எனும் அமைப்பின் கீழ் இயங்கிவரும் ஒரு பொது ஒளிபரப்பு நிறுவனமாக உள்ளது பிபிசி.

பிரிட்டனின் பிரதமராக இருந்த டோனி பிளேயரின் அமைச்சரவையில் வெளிநாட்டு செயலராக இருந்த ஜாக் ஸ்ட்ரா என்பவர்தான் இந்தப் புலனாய்வுக்கு உத்தரவிட்டார். அதற்கு முன்பாக உள்நாட்டுச் செயலராக இருந்த அவர், 2000 – ஆவது ஆண்டு சுதந்திரமான தகவல் சட்டத்தை நிறுவினார். 2015 – ஆம் ஆண்டு, அச்சட்டத்தை மறுஆய்வு செய்யும் அமைப்பின் ஓர் உறுப்பினராக அவர் செயல்பட்டார். பிரிட்டனின் தகவல் ஆணையத்துடன் ஸ்ட்ராவுக்கு இருந்த நெருக்கமே, இத்தகைய மறைமுகமான புலனாய்வு அறிக்கையை வெளிக் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கக் கூடும்.

மற்ற ஊடகங்களுடன் ஒப்பிடுகையில், பிரிட்டன் நிர்வாகத்தில் அதிகச் செல்வாக்கு உடையதாக பிபிசி விளங்குகிறது. வேறு எந்த ஊடகம் கோரியிருந்தாலும், இந்தியாவி மோடி உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் தற்சமயம், இரு நாடுகளுக்கு இடையே அரசாங்க உறவில் இது மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால், இத் தகவல்கள் வெளிவராமல் தடுக்கப்பட்டிருக்கும்.

2002-riots-kids-1.jpg குஜராத் கலவரத்தில் படுகாயமடைந்த குழந்தைகள்!

இதைப்பற்றி ஸ்ட்ரா கூறுகையில்,  “இது அதிர்ச்சியளிக்கிறது. முதல்வராக இருந்த மோடி, காவல்துறை தனது கடமையை செய்ய விடாது தடுத்தார் என்பதும், இந்து தீவிரவாதிகளை கலவரம் செய்ய அவர் ஊக்குவித்தார் என்பதும், தீவிரமான குற்றச்சாட்டுகள். இந்து – இசுலாமிய மதங்களைச் சார்ந்த இருதரப்பு மக்களையும் பாதுகாக்க வேண்டிய காவல் துறையை, அரசியல் காரணங்களுக்காக, செயல் படவிடாமல் செய்தது என்பது அசாதாரணமான எடுத்துக்காட்டு. வெளிப்படையாக மோடியின் செல்வாக்கின் மீது விழுந்த களங்கங்கள் இவை” என்கிறார்.

இந்த ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளும், நேர்காணல்களும் ஆவணக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்றாலும், அவை மோடியை  ஓர் இனவாதியாவே சித்தரிக்கின்றன. “இக்கலவரங்களின் மூலமாக குஜராத் இந்துக்களின் ஆதரவைப்பெறும் நோக்கில், 2002 – இல் தேர்தலை அறிவித்த மோடியின் மனநிலை மிகுந்த அச்சுறுத்தலைத் தருவதாக இருந்தது” என்று பிபிசியின் பெண் நெறியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண் நிருபர் மோடியுடன் நடத்திய உரையாடல்;

பி.பி.சி. நிருபர்; “தங்களது உறவினர்களைக் கொன்ற மனிதர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாத நிலையில், தங்களது வீடுகளுக்குத் திரும்பச் செல்லப் பயப்படும், இன்னும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும், மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?”

மோடி;  “உங்களுடைய ஆய்வை என்னால் ஏற்கமுடியாது. நீங்கள் தரும் தகவல்களையும் என்னால் ஏற்க முடியாது. இது தவறாக வழி நடத்தும் தகவல்.  இவற்றை எங்கிருந்து நீங்கள் எடுத்தீர்கள் என்று எனக்குத் தெரியாது”.

பி.பி.சி நிருபர்; “இவையெல்லாம் தனிநபர்கள் கொடுத்து, வெளியான ஆய்வறிக்கைகள்…”

இடைமறித்து ஆவேசப்படுகிறார் மோடி.

மோடி; “எந்த அரசாங்கத்தின் உள்விவகாரத்திலும் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் மனதளவில் மிக மிகத் தெளிவாக இருக்கிறேன். அவர்கள் செய்துள்ளது மிகவும் தவறானது”.

பி.பி.சி. நிருபர்; “வேறு ஏதாவது வித்தியாசமாக நீங்கள் செய்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா….?”

மோடி ; “ஆம், ஊடகங்களைக் கையாள்வதில் நான் மிகவும் பலவீனமாக இருந்திருக்கிறேன்….”

இந்த ஒட்டுமொத்த உரையாடலின் போதும், பேட்டி எடுத்த பெண்மணியை நோக்கி, தனது இடது ஆட்காட்டி விரலை மிகுந்த கோபத்துடன் ஆட்டிக் கொண்டே மோடி பேசினார்.

இந்து அடிப்படைவாதக் குழுக்களின் அழைப்பை ஏற்று, 2003 – இல் மோடி பிரிட்டனுக்கு வந்தார். ஆனால், அவரது வருகையை பிரிட்டன் அரசு எதிர்த்தது. அரசு அலுவலகம் தெரிவித்தது:  “அவர் பிரிட்டனுக்கு வருவதை நாங்கள் அறிந்திருந்தோம். மேன்மைக் குரிய அரசியின் அழைப்பிலோ அல்லது அரசின் பேரிலோ அவர் இங்கு வரவில்லை. எனவே அவருடன் எந்தத் தொடர்பையும் நாங்கள் வைத்திருக்கவில்லை”.

unnamed.jpg சொந்த மண்ணிலே அகதிகளாக்கப்பட்ட இஸ்லாமியர்கள்!

2019 – ஆம் ஆண்டு, ஒரு விபத்தில் இறந்து போன சத்யப்ரதா பால், அப்போது இந்தியத் தூதரகத்தின் துணை அதிகாரியாக இருந்தார். “அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்ஹா, அப்போதைய பிரதமராக இருந்த வாஜ்பாயைச் சந்தித்து, மோடியின் வருகை விரும்பத்தகாத ஒன்று என்றும், அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று” என்றும் அவர் எழுதியிருந்தார். ஆனால், சங்கப் பரிவார் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, அவரது வருகை நிகழ்ந்தது. மோடி பிரிட்டனில் இருந்த போது, இலண்டன் நீதிமன்றத்தில், அவரைக் கைது செய்ய ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது மயிரிழையில் தவறிப் போனது.

இதில் தொடர்புடைய இம்ரான் கான் என்னும் பிரித்தானிய வழக்கறிஞர் கூறினார்: “நாம் இப்போது எதை அறிகிறோமோ, எத்தகைய தகவல்கள் நம்மிடம் இருக்கின்றனவோ, அவை அப்போது நம்மிடம் இருந்திருந்தால், மோடி கைது செய்யப்படுவதற்கான அரசாணை, அப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும்”.

2005 – ஆம் ஆண்டு வாக்கில், மோடி பிரிட்டனுக்கு வருவதை, பிரிட்டன் அரசு தடை செய்திருந்தது. அரசாங்க ரீதியாக, அது தனது எதிர்ப்பைக் காட்டியது. அதே சமயத்தில் தான், அமெரிக்க அரசும் அவருக்கு விசா வழங்க மறுத்திருந்தது.

இந்தியாவிலுள்ள முப்பதுக்கும் மேற்பட்டவர்கள், தங்களுடைய பாதுகாப்புக் கருதியும், அச்சத்தாலும் இந்த ஆவணப்படத்தில் பங்கு பெறுவதற்கு மறுத்து விட்டனர். இப் படத்தில் உள்ள குற்றச்சாட்டுகள் பற்றி, கருத்து தெரிவிக்க இந்திய அரசு மறுத்து விட்டது.

“வரலாறு திருப்பி எழுதப் படுகிறது” என்கிற வரியுடன் இந்த ஆவணப்படம் நிறைவடைகிறது. இதன் இரண்டாவது பகுதி, ஜனவரி 24 அன்று ஒளிபரப்பப்பட உள்ளது. 2019 – ஆம் ஆண்டு, மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபின் நடந்தவை பற்றி இது பேசும்.

வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அரித்தம் பக்க்ஷி இந்த பிபிசி ஆவணப்படம் பற்றிக் குறிப்பிடுகையில், ”முக்கியத்துவம் இல்லாத ஒரு சொல்லாடலைப் பரப்பவே, இது வடிவமைக்கப் பட்டுள்ளது” எனக் கூறி, இதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

கட்டுரையாளர்; ஆசிஷ் ரே

இலண்டன் பிபிசி மற்றும் சி என் என் ஆகிய நிறுவனங்களின் ஆசிரியர்.

நன்றி; Frontline 

ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்; முனைவர் தயாநிதி.

 

 

https://aramonline.in/12155/gujarat-riots-bbc-documentary/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோதி குறித்த பிபிசி ஆவணப்படம் தமிழ்நாடு, கேரளாவில் திரையிட்ட மாணவர்கள் - பல இடங்களில் வலுத்த எதிர்ப்பு

பிபிசி ஆவணப்படம், மோதி
3 மணி நேரங்களுக்கு முன்னர்

கோத்ரா கலவரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதியின் பங்கு குறித்து பிபிசி - 2 சேனல் தயாரித்த India: The Modi Question ஆவணப் படத்தை, தமிழ்நாடு, கேரளாவில் பல பகுதிகளில் மாணவர் அமைப்புகள் திரையிட்டனர்.

பிபிசி - 2 சேனல் தயாரித்த India: The Modi Question ஆவணப் படத்தை இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் மாணவர் இயக்கங்களும் பொது இடங்களில் திரையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் இந்த ஆவணப் படத்தைத் திரையிடப்போவதாக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால், சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்காத நிலையில், அந்தக் கட்டடத்திற்கு முன்பாக அமர்ந்த மாணவர்கள் தங்களது மடிக்கணினியில் அந்தப் படத்தைத் திரையிட முடிவுசெய்தனர்.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் கதவுகள் மூடப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான காவல் துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் குவிக்கப்பட்டிருந்தனர். பல்கலைக்கழகத்திற்குள் நுழைவோர் விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

நூற்றாண்டு விழா அரங்கத்திற்கு முன்பாக சுமார் 30 மாணவர்கள் கூடியிருந்த நிலையில், அங்கு வந்த பல்கலைக்கழக பாதுகாவலர்கள், அங்கு கூட்டமாக அமர்ந்து எந்தப் படத்தையும் திரையிட அனுமதி கிடையாது என்று மாணவர்களிடம் தெரிவித்தனர். ஆனால், மாணவர்கள் அதனை ஏற்காமல் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிறகு, தங்களது மடிக்கணினி ஒன்றில் அந்த ஆவணப் படத்தை திரையிட்டு ஒன்றாக அமர்ந்து பார்த்தனர். பல்கலைக்கழக பாதுகாவலர்கள் மாணவர்களைக் கலைந்து செல்லும்படி கூறியபோதிலும் அவர்கள் தொடர்ந்து படம் பார்த்தனர்.

படத்தை பார்த்து முடித்த பிறகு, மாணவர்கள் சேர்ந்து அமர்ந்து ஒர் ஆவணப் படத்தைப் பார்ப்பதை பல்கலைக்கழக நிர்வாகம் ஏன் தடுக்கிறது எனக் கேள்வி எழுப்பினர்.

மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தைப் பார்க்க பல்கலைக்கழகம் தடை விதித்ததற்கு இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை கட்சி அலுவலகத்திலும் இன்று பிற்பகலில் பிபிசியின் ஆவணப் படம் திரையிடப்பட்டது.  ஜனவரி 26ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியில் விக்டோரியா விடுதியில் மாணவர்கள் ஆவணப் படத்தை ஒன்றாக அமர்ந்து பார்த்தனர்.

ஜனவரி 25ஆம் தேதியன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் இந்தப் படத்தைத் திரையிட முயன்றனர். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்தின் எதிர்ப்பை அடுத்து திரையிடல் நடக்கவில்லை.

பிபிசி ஆவணப்படம், மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் கட்சிக் கிளைகளில் இந்தப் படத்தைத் திரையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது.

"பிபிசியின் ஆவணப் படத்தைக் கண்டு பா.ஜ.க. அரசு பதறுவது ஏன்" என்ற ஒரு கலந்துரையாடல் சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. பேராசிரியர் அ. மார்க்ஸ், ஓவியர் மருது, சுபகுணராஜன், பத்திரிகையாளர் ஜெயராணி உள்ளிட்டோர் இந்த உரையாடலில் கலந்து கொண்டனர்.

கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலும் பிபிசியின் இந்த ஆவணப் படம் திரையிடப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தின் சங்குமுகம் கடற்கரையில் இந்தப் படத்தை கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி திரையிட்டது. இன்னும் சில நாட்களில் மாநிலம் முழுவதும் இந்தப் படத்தைத் திரையிடப் போவதாக அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சங்குமுகம் கடற்கரையில் இந்தப் படம் திரையிடப்பட்டபோது சாதாரணமாக கடற்கரைக்கு வந்தவர்களும் அமர்ந்து அந்தப் படத்தைப் பார்வையிட்டனர். காவல்துறையினரும் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பிபிசி ஆவணப்படம், மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் அப்போது கடற்கரையில் இருந்தனர். சங்க பரிவார அமைப்புகளைச் சேர்ந்த சிலரும் அப்போது அங்கு இருந்தனர். ஆனால், கூட்டத்தைப் பார்த்ததும் அவர்கள் ஏதும் செய்யவில்லை" என கேரள காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான ஜி.எஸ்.பாபு பிபிசியிடம் தெரிவித்தார்.

பொத்தன்கோடு, நெடுமன்காடு போன்ற சில இடங்களில் இந்த ஆவணப் படத்தைத் திரையிடுவதை சிலர் தடுக்க முயன்றதைத் தவிர, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் கேரளாவில் நடக்கவில்லை. படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமையன்று இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்புகள் இந்த ஆவணப் படத்தை திரையிட பல இடங்களில் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியபோது, இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தது. சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cprngxdz9zlo

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களை நன்கு அறிந்தவர் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தில் அமெரிக்கா

By T. SARANYA

31 JAN, 2023 | 09:50 AM
image

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசியின் சர்ச்சைக்குரிய தொடர் குறித்து தகவல் தெரிவிப்பதில் அமெரிக்கா விலகியிருக்கிறது. இந்த ஆவணப்படம் தனக்குத் தெரியாது, ஆனால் வொஷிங்டனையும் புது டெல்லியையும் இரண்டு செழிப்பான, துடிப்பான ஜனநாயக நாடுகளாக இணைக்கும் பகிரப்பட்ட மதிப்புகளை நன்கு வெளிப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு கவலைகள் இருக்கும்போது, நாங்கள் குரல் கொடுத்துள்ளோம். அதைச் செய்வதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் எங்கள் உறவின் இதயத்தில் இருக்கும் அந்த மதிப்புகளை முதலில் வலுப்படுத்த விரும்புகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா-அமெரிக்க உறவு பன்முகத்தன்மை கொண்டது. விதிவிலக்காக ஆழமான மக்கள்-மக்கள் உறவுகள் தவிர நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளும்  உள்ளன என்றார். அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு எதிராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க இந்த ஆவணப்படம் வழிவகுக்குமா என்ற கேள்விக்கு, 'அந்த விதிமுறைகள் மூலம் நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. நான் உள்நாட்டு அரசியலைப் பற்றி சிந்திக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

தெற்காசியாவில் பிராந்திய ஸ்திரத்தன்மையை நீண்டகாலமாக வொஷிங்டன் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு உரையாடலின் வேகம், நோக்கம் மற்றும் தன்மை ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான விவகாரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கான பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் 'விருப்பத்தை' இந்தியா நிராகரித்ததாகக் கூறப்படும் கேள்விக்கு, தெற்காசியாவில் பிராந்திய ஸ்திரத்தன்மையைக் காண வொஷிங்டன் நிச்சயமாக விரும்புவதாக பிரைஸ் கூறினார்.

https://www.virakesari.lk/article/147070

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BBC Full Documentary Video Explained | Modi: The India Questions Row | BJP Communal Divisive Agenda

Tamilkural Exclusive - Punnaivalavan explains BBC Modi Documentary - Part 2 and BBC Full Documentary Video, Modi: The India Questions Explained with BJP Communal Divisive Agenda.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசியின் சர்ச்சைக்குரிய தொடர் குறித்து தகவல் தெரிவிப்பதில் அமெரிக்கா விலகியிருக்கிறது. இந்த ஆவணப்படம் தனக்குத் தெரியாது

குஜராத்தில் செய்த கொடுமைகளுக்காகவே மோடியை அமெரிக்க விசா கொடுக்காமல் வைத்திருந்தார்கள்.

பிரதமர் ஆகிய பின்பே அனுமதி கொடுத்திருந்தனர்.

அதிபர் ஆகிவிட்டால் கிரிமினல்கள் ஒன்றாகிவிடுவார்களோ என்னமோ?

இப்போது எமக்கு தெரியாதென்று எப்படி சொல்வது?

இணைப்புக்கு நன்றி @ஏராளன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வருடமும்  பிபிசி என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? ரஷ்யா விவகாரத்தில் மேற்குலகுக்கு  சாதாகமாய் தாளம் போட்டு இருந்தால் மேற்க்கு கண்ணை மூடிக்கொண்டு இருந்து இருக்கும் குஜராத்தாவது கலவரமாவது எப்ப நடந்தது ? என்று இருந்து இருப்பினம் . 

ஆனால் இம்முறை ஆட்சியில் இருந்து ஆளை  அகற்றுவது என்றே முடிவோடை இறங்கி உள்ளார்கள் போல் உள்ளது. வங்கிகணக்கில் 15 லட்சம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று மறுபடியும் வர முடியாது அவ்வளவுக்கு லோக்கல் உள்ளூர் மரியாதை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

இவ்வளவு வருடமும்  பிபிசி என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? ரஷ்யா விவகாரத்தில் மேற்குலகுக்கு  சாதாகமாய் தாளம் போட்டு இருந்தால் மேற்க்கு கண்ணை மூடிக்கொண்டு இருந்து இருக்கும் குஜராத்தாவது கலவரமாவது எப்ப நடந்தது ? என்று இருந்து இருப்பினம் . 

ஆனால் இம்முறை ஆட்சியில் இருந்து ஆளை  அகற்றுவது என்றே முடிவோடை இறங்கி உள்ளார்கள் போல் உள்ளது. வங்கிகணக்கில் 15 லட்சம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று மறுபடியும் வர முடியாது அவ்வளவுக்கு லோக்கல் உள்ளூர் மரியாதை .

பெருமாள் உண்மையாகவே இதைத் தான் நானும் நினைத்தேன்.

யாரோ பெரிய தொகையை தள்ளிப் போட்டாங்களோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் உண்மையாகவே இதைத் தான் நானும் நினைத்தேன்.

யாரோ பெரிய தொகையை தள்ளிப் போட்டாங்களோ?

அவங்கள சொல்ல சொல்ல தாங்கள் ஏதோ உலகின் மூன்றாவது உலக வல்லரசு என்ற நினைப்பில் ரஷஷியா விடம்  இருந்து மலிவு விலை எண்ணெய் அது இது என்று வழமைபோல் வியாபாரம் செய்து கொண்டு இருக்க மேற்குலகு பார்த்து கொண்டு இருபான்களா ?

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

குஜராத்தில் செய்த கொடுமைகளுக்காகவே மோடியை அமெரிக்க விசா கொடுக்காமல் வைத்திருந்தார்கள்.

பிரதமர் ஆகிய பின்பே அனுமதி கொடுத்திருந்தனர்.

அவங்கள் அமெரிக்கா விரும்புவதே இப்படியானவர்களைத்தான் தங்களுக்கு சாதகமான அரசியல் இல்லையென்றால் பழைய விடயத்தை கிண்டி கிளறி ஆளை நாடு நாடாய் ஓடவைக்கலாம் போட்டு தள்ளுவது அந்த காலம்.கோத்தா ஓடலையா சிங்கபூரில் இருந்து உறுதி மொழி கொடுத்து இருப்பார் சைனா பக்கம் போகமாட்டேன் என்று ரணில் வந்தபின் அமைதி ராணிலும்  சைனாவை நாடினால் அல்லது ரஸ்சியா பக்கம் ஆடினால் கோத்தா போல் கோமனம் கட்ட கூட நேரம் இல்லாமல் ஓடவேண்டி  வரும் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

அவங்கள சொல்ல சொல்ல தாங்கள் ஏதோ உலகின் மூன்றாவது உலக வல்லரசு என்ற நினைப்பில் ரஷஷியா விடம்  இருந்து மலிவு விலை எண்ணெய் அது இது என்று வழமைபோல் வியாபாரம் செய்து கொண்டு இருக்க மேற்குலகு பார்த்து கொண்டு இருபான்களா ?

 

அவங்கள் அமெரிக்கா விரும்புவதே இப்படியானவர்களைத்தான் தங்களுக்கு சாதகமான அரசியல் இல்லையென்றால் பழைய விடயத்தை கிண்டி கிளறி ஆளை நாடு நாடாய் ஓடவைக்கலாம் போட்டு தள்ளுவது அந்த காலம்.கோத்தா ஓடலையா சிங்கபூரில் இருந்து உறுதி மொழி கொடுத்து இருப்பார் சைனா பக்கம் போகமாட்டேன் என்று ரணில் வந்தபின் அமைதி ராணிலும்  சைனாவை நாடினால் அல்லது ரஸ்சியா பக்கம் ஆடினால் கோத்தா போல் கோமனம் கட்ட கூட நேரம் இல்லாமல் ஓடவேண்டி  வரும் .

மேற்கின் அணுகுமுறையை தெளிவாக சொல்லி உள்ளீர்கள்.

விபரணத்தை பார்தீர்களா? ஐ பிளேயரில் உள்ளது. முதல் 15 நிமிடம் பார்த்தேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம். தரவுகள் துல்லியமாக உள்ளது.

ஆனால் கோட்டா போல மோடியை அசைப்பது கடினம் என நினைக்கிறேன். அடுத்த தேர்தலிலும் வெல்வார் என்பதே என் கணிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

ஆனால் கோட்டா போல மோடியை அசைப்பது கடினம் என நினைக்கிறேன். அடுத்த தேர்தலிலும் வெல்வார் என்பதே என் கணிப்பு.

அப்படி என்றால் ஓரு  விபத்து .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

அப்படி என்றால் ஓரு  விபத்து .

இதுக்கு வாய்ப்பிருக்கு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' - இந்திய பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து

01 FEB, 2023 | 11:15 AM
image

குஜராத் கலவரத்திற்கு நரேந்திர இந்திய பிரதமர் மோடி நேரடி பொறுப்பு என்று பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து வெளியிட்டுள்ளது.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-அமைச்சராக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானார். இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. 

இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-அமைச்சரையும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை சம்பவம், குடியுரிமை திருத்தச்சட்டம் உட்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த 21-ம் திகதி தடை விதித்தது. 

இங்கிலாந்து உட்பட பல்வேறு வெளிநாடுகளில் பிபிசி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவில் தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து பிபிசி எடுத்துள்ள ஆவணப்படம் குறித்து ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மரியா சகரொவா, 

சுதந்திரமான கொள்கைகளை கொண்டுள்ள ரஷியா மட்டுமின்றி சக்திவாய்ந்த பிற உலக நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். சில ஆண்டுகளுக்கு பின், இங்கிலாந்து அரசாங்கத்துடனும் பிபிசி சண்டையிட்டது என்பது தெரியவந்தது. சில குழுக்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்புக்கு எதிரான கருவியாக பிபிசி செயல்பட்டது. பிபிசி-க்கு அதற்கேற்ப பதிலடி கொடுக்க வேண்டும்' என்றார்.

தினத்தந்தி

https://www.virakesari.lk/article/147155

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி ஆவணப்படம் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

பிபிசி ஆவணப்படம் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பிபிசி ஆவணப்படம் மீதான தடைக்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் என்.ராம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி மொஹூவா மொய்த்ரா மற்றும் பலர், பிபிசி ஆவணப்படத்தை இணைத்து பதிவிட்டிருந்த தங்களுடைய ட்வீட்களை நீக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் இதைத் தெரிவித்துள்ளது.

“மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள். மத்திய அரசிடம் இருந்து பதில் வர வேண்டும். அடுத்த ஏப்ரலில் விசாரணை மேற்கொள்வோம்,” என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று உத்தரவிட்டுள்ளது.

ட்வீட்டுகளை நீக்குமாறு விதிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான அசல் கோப்புகளைச் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கூறியதுடன், “இடைக்கால உத்தரவு மற்றும் ஏப்ரல் மாதத்தில் அடுத்த தேதி இல்லை” என்றும் கூறியது.

 

“பிரதிவாதிகள், மத்திய அரசு மற்றும் பிறருக்கு அசல் பதிவுகளை, அடுத்த விசாரணை தேதியில், ஏப்ரல் மாதத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்,” என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது.

என்.ராம், பிரசாந்த் பூஷன் ஆகியோர் தரப்பு வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர், டாக்டர் சந்தர் உதய் சிங், இது பொதுவெளியில் உத்தரவுகளை வைக்காமல் அவசரகால அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்ட வழக்கு என்று கூறினார். அந்த ட்வீட்டுகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

முதல் மனுவை பத்திரிகையாளர் என்.ராம், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் கூட்டாகத் தாக்கல் செய்தனர்.

இரண்டாவது மனுவை வழக்கறிஞர் மனோகர் லால் ஷர்மா தாக்கல் செய்தார்.

 

“இதுவோர் அசாதாரண வழக்கு. பொதுவெளியில் உத்தரவுகளை இடாமல், அவசரகால அதிகாரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ட்வீட்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவொரு தீவிரமான பிரச்னை,” என்று அவர் கூறினார்.

ரகசிய உத்தரவின் அடிப்படையில், பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் மற்றும் பலர் நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர் என்று கூறியதுடன் சந்தர் உதய் சிங் இந்தப் பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார்.

அந்த ஆவணப் படங்களை மக்கள் பார்க்கிறார்கள் என்பதும் உண்மை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

பிபிசி ஆவணப்படம் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

சந்தர் உதய் சிங், “லட்சக்கணக்கான அதிகாரிகள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம். ஆனால், இங்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்தார்.

பிபிசியின் ‘இந்தியா: மோதி கேள்வி’ என்ற ஆவணப்படத்தை பொதுமக்கள் அணுகுவதைத் தடுக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

முன்னதாக ஜனவரி 30ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றம், மனுக்களின் தொகுப்பை பிப்ரவரி 6ஆம் தேதி, திங்கள் கிழமையன்று விசாரிப்பதாக நிர்ணயித்திருந்தது. ஆனால், இன்று உச்ச நீதிமன்றம் அதன் காரணப் பட்டியல் மூலம், மனுக்கள் விசாரணையின் தேதியை மாற்றவே அது விசாரணைக்கு முன்பாகவே வந்தது.

என்.ராம், பிரசாந்த் பூஷன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய் சிங், ஜனவரி 30ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய யஷ்வந்த சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்பு, என்.ராம் மற்றும் பிரசாந்த பூஷனின் ட்வீட் எப்படி அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி நீக்கப்பட்டன என்பதையும் ஆவணப்படத்தை திரையிட்டதற்காக ராஜஸ்தானின் அஜ்மீரில் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் கூறினார்.

பிபிசி ஆவணப்படம் குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காணொளி துணுக்குகள், ட்வீட்டுகளை தடுப்பதற்கு ‘அவசரகால அதிகாரங்களை’ பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை இது. தயவு செய்து பரிசீலிக்கவும்,” என்று உச்சநீதிமன்றத்தில் சந்தர் உதய் சிங் மனு அளித்திருந்தார்.

2002 குஜராத் கலவர வழக்குகள் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்குத் தடை விதித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்த வழக்கறிஞர் மனோகர் லால் ஷர்மாவின் பொதுநல வழக்கையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

இந்தத் தடை தவறானது, அரசமைப்புக்கு விரோதமானது எனக் கூறி, வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஷர்மாவின் மனு பிபிசி ஆவணப்படத்தின் மீதான தடையை நீக்கக் கோரியது. குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதற்கு ஆவணப்படத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.

வழக்கறிஞர் ஷர்மா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆவணத் தொடரின் இரு பகுதிகளையும் ஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியது.

கடந்த காலங்களில் நடந்த தவறை மறைக்க மத்திய அரசு முயலக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஷர்மா தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஷர்மாவின் மனு, பிபிசி ஆவணப்படத்தின் மீதான தடையை நீக்குமாறு கோரியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ckmdn2vlkpzo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி ஆவணப்படத்தை தமிழாக்கம் செய்து திரையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
6 பிப்ரவரி 2023, 07:25 GMT
பிபிசி ஆவணப்படம் திரையிடல்

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL / TWITTER

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

2002ஆம் ஆண்டின் குஜராத் கலவரம் குறித்த பிபிசி 2வின் ஆவணப்படத்தை தமிழாக்கம் செய்து சென்னையில் வெளியிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இரு பாகங்களையும் நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்தும் நின்றும் பார்த்தனர்.

குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டில் நடந்த இந்து - முஸ்லிம் கலவரம் குறித்தும் அதில் அப்போதைய முதலமைச்சரும் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோதியின் பங்கு குறித்தும் பிபிசி 2 தயாரித்து, வெளியிட்டுள்ள ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் குறித்து பா.ஜ.க. கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இந்தப் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்வது பல்வேறு விதங்களில் தடுக்கப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த ஆவணப்படத்தை காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற கட்சிகள் பொதுமக்களுக்கு திரையிட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலும் இடதுசாரிகளும் வேறு சில சமூக அமைப்புகளும் இந்தப் படத்தை பொது இடங்களில் திரையிட்டு வருகின்றனர்.

 
பிபிசி ஆவணப்படம் திரையிடல்

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL / TWITTER

இந்த நிலையில், மொழிப்போர் தியாகிகள் தினத்தன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்த ஆவணப்படத்தை தமிழ்ப்படுத்தி வெளியிடப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

"பிரதமர் மோதி குறித்து ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டு உலகம் தழுவிய அளவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் உண்மை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தனது குற்றத்தை உணர்ந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மோதி விலக வேண்டும். எந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பை அவர் விதைத்திருக்கிறார், வன்முறையைத் தூண்டி இருக்கிறார், ஒரு மிகப்பெரும் இனக் கொலையை செய்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை இன்றைக்கு பிபிசி ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது.

பிபிசியையும் அச்சுறுத்தி இருக்கிறார்கள். இந்த வீடியோவை இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட முயற்சிகளை மேற்கொள்வோம்," என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அந்த ஆவணப்படத்தைக் கடந்த சில நாட்களில் தமிழ்ப்படுத்தும் முயற்சிகளை அந்தக் கட்சி மேற்கொண்டது. தமிழ்ப்படுத்தப்பட்ட ஆவணப்படம், ஞாயிற்றுக்கிழமையன்று அக்கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள அம்பேத்கர் திடலில் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர் து. ரவிக்குமார், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாமுவேல் ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வஹிதா நிஜாம், மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோ. சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பிபிசி ஆவணப்படம் திரையிடல்

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL / TWITTER

இரவு சுமார் எட்டு மணியளவில் திரையிடப்பட்ட இந்தப் படத்தை 300க்கும் மேற்பட்டவர்கள் நின்றபடியும் அமர்ந்தபடியும் பார்த்தனர். படத்தைத் திரையிடுவதற்கு முன்பாக விழாவில் பங்கேற்ற தலைவர்கள் பேசிய நிலையில், படம் திரையிட்டு முடித்த பிறகு, திருமாவளவன் பேசினார்.

"இவர்கள் பேசுவது மத அடிப்படையிலான தேசியவாதம். அதற்கு பாகிஸ்தானை எதிரியாகக் காட்ட முடியாது. பிரிட்டிஷ்காரனை எதிரியாகக் காட்ட முடியாது. ஆகவே, முஸ்லிம்களை எதிரியாகக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

இந்து தேசியவாதத்தை எதற்காகக் கட்டமைக்க விரும்புகிறார்கள்? இந்த தேசத்தை இந்து ராஷ்ட்ரா என அறிவிக்க வேண்டும். அதுதான் இவர்களது நோக்கம். இந்த தேசத்தின் அரச மதமாக இந்து மதத்தை அறிவிக்க வேண்டும் அதுதான் அவர்கள் நோக்கம். இந்தச் சிந்தனைக்கு வித்திட்டவர்கள் கோல்வால்கர், ஹெட்கேவார் ஆகிய சித்பவன பிராமணர்கள், சங்கபரிவார ஆசான்கள்.

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் நாம் எப்படி செயல்படப் போகிறோம் என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி. ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நம் முன்னால் ஒரு சவாலாகக் கிடக்கிறது. இதை எதிர்கொள்ள நாம் தயாராவோம்," என்று தெரிவித்தார்.

பிபிசி ஆவணப்படம் திரையிடல்

பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL / TWITTER

இந்த ஆவணப் படத்தை பாண்டிச்சேரியிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் திரையிடப் போவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்தார். மேலும், வேறு சில இயக்கங்கள் இந்த மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆவணப்படத்தின் பிரதிகளைக் கேட்டிருப்பதாகவும் அவர்களுக்கும் இதை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-64534287

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.