Jump to content

இருமல் மருந்து உயிரிழப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இருமல் மருந்து உயிரிழப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தல்

By T. SARANYA

25 JAN, 2023 | 10:26 AM
image

கடந்த ஆண்டு இருமல் மருந்துகளை பயன்படுத்தியதனால் நிகழ்ந்த குழந்தைகள் உயிரிழப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை  எடுக்குமாறு  உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் அருந்திய குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர வைத்துள்ளது. 

இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. 

இந்தியாவில் அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த  இருமல் மருந்து குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்தது. 

இந்த மருந்து குடித்து உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் தரம் குறைந்த இருமல் மருந்துகளை தயாரித்து அளித்த மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/146630

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

இந்தியத் தயாரிப்பு  🤣

ஐரோப்பாவிற்கு இந்திய தயாரிப்பு மருந்துகள் தானே அதிகமாக வருகின்றது!?!?!?!?!
 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஐரோப்பாவிற்கு இந்திய தயாரிப்பு மருந்துகள் தானே அதிகமாக வருகின்றது!?!?!?!?!
 

ஜெய் ஹிந்த் 🤣.

பிகு

இல்லை என நினைக்கிறேன். எல்லா சாமானிலும் இந்தியா, சீனா, பங்களதேஷ் என இருந்தாலும் மருந்து அதிகம் யூகே/ஈயுவாக இருப்பதை அவதானித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • டென்மார்க் மசூதி- துருக்கிய தூதரகம் முன்பு குரான் எரிப்பு! இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் கோபன்ஹேகன் மசூதிக்கு அருகிலும், டென்மார்க்கில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியேயும் முஸ்லிம்களின் புனித நூலின் பிரதிகளை எரித்துள்ளார். டேனிஷ் மற்றும் சுவீடிஷ் குடியுரிமை பெற்ற தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான ராஸ்மஸ் பலுடன், ஏற்கனவே ஜனவரி 21ஆம் திகதி ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு போராட்டத்தை நடத்தி துருக்கி அரசாங்கத்தை கோபப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் ஒரு மசூதியின் முன்பும், கோபன்ஹேகனில் உள்ள துருக்கிய தூதரகத்தின் முன்பும் முஸ்லிம்களின் புனித நூலான குர்ரானை எரித்தார். மேலும், சுவீடன் நேட்டோவில் அனுமதிக்கப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடருவதாக உறுதியளித்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து டென்மார்க் தூதர் துருக்கிய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு துருக்கிய அதிகாரிகள் இந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை வன்மையாகக் கண்டித்துள்ளனர், இது ஒரு வெறுப்புக் குற்றத்தை தெளிவாகக் கொண்டுள்ளது’ என கூறினர். தூதரிடம், டென்மார்க்கின் அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அனுமதி ரத்து செய்யப்படும் என்று துருக்கி எதிர்பார்க்கிறது என்றும் கூறப்பட்டது. துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் பின்னர் பலுடானை இஸ்லாத்தை வெறுப்பவர் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது மற்றும் அவர் ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு சுவீடன், ஃபின்லாந்துடன் சேர்ந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது, ஆனால் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் துருக்கி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். எனினும், சமீபத்திய எதிர்ப்புகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன. அதற்கு முன்பே, குர்திஷ் ஆயுதக் குழுக்கள், ஆர்வலர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என்று கருதும் பிற குழுக்களை ஒடுக்க இரு நாடுகளுக்கும் துருக்கி அழுத்தம் கொடுத்தது. https://athavannews.com/2023/1322114
  • குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்த விவகாரம்: தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு அபராதம்! ஒரு குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்ததற்கு வழிவகுத்த தவறுகளுக்காக தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு 800,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாமில் உள்ள குயின்ஸ் மெடிக்கல் சென்டரில் (க்யூஎம்சி) அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 15 செப்டம்பர் 2019ஆம் ஆண்டு பெற்றோர்களான சாரா மற்றும் கேரி ஆண்ட்ரூஸிற்கு பிறந்த குழந்தை இறந்தது. 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூத்த மருத்துவச்சி டோனா ஒகென்டன் தலைமையில் மகப்பேறு பராமரிப்பு குறித்து பல குடும்பங்களால் கவலைகள் எழுப்பப்பட்டதை இதுதொடர்பில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இதற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, நேற்று (வெள்ளிக்கிழமை) நகரின் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையில், தீங்கு மற்றும் இழப்பை ஏற்படுத்திய பாதுகாப்பான பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்கத் தவறியதாக, தேசிய சுகாதார சேவை அறக்கட்டளை இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது. இதன்போது, தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு 800,000 பவுண்டுகள் அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி கிரேஸ் லியோங் தீர்ப்பளித்தார். https://athavannews.com/2023/1322150
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • https://www.facebook.com/100001034390116/posts/pfbid02erYLr4AFaaNQikWP1rFPxi2tQZ4BjYqyxuQS9E6b7dkPmeASKq6FNbV9F22JwNqol/https://www.facebook.com/1797810269/posts/pfbid0STW3dCxy77fUJewMZqDSRRs3ESrNNZMrRNcxiuPixU3Hmbz76vhDmCw4NZgcug2kl/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.