Jump to content

யாழில் இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு!

January 26, 2023
 

spacer.png

இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இந்தியா படையினரின் அணிவகுப்பு மரியாதையை அடுத்து, யாழ் இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனினால் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ் இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டது.


 

https://globaltamilnews.net/2023/186745/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருகூத்தென்று கடந்து செல்லவேண்டியதுதான் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வளர்ச்சியில் பிரதான பங்காளியாக இந்தியா - குடியரசு தின நிகழ்வில் சபாநாயகர் தெரிவிப்பு

By T. SARANYA

26 JAN, 2023 | 04:24 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் வளர்ச்சியில் பல்வேறு வழிகளிலும் பிரதான பங்காளியாக இந்தியா திகழ்கின்றது. இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இவ்வுறவுகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்தார்.

இந்தியாவின் 74 ஆவது குடியரசு தினம் ,இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இலங்கையின் பங்காளியாகவே இந்தியா செயற்பட்டு வருகின்றது. இலங்கை சவால்களை எதிர்கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா துரிதமாக பதிலளித்தது. கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாதவாறு இந்தியா 4 பில்லியன் பெறுமதியான கடன் மற்றும் ஏனைய உதவிகளை இலங்கைக்கு வழங்கியது.

இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டில் முதலாவதாக கடன் மறுசீரமைப்பிற்கு இணங்குவதாக எழுத்து மூலம் சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவித்தது. இந்தியாவின் ஒத்துழைப்புக்கள் இலங்கை மக்களுக்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளன. அவற்றில் சுவசெரிய அம்புலன்ஸ் சேவையைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.

அதே போன்று கொவிட் தொற்று தீவிரமடைந்த காலப்பகுதியிலும் தடுப்பூசிகளை வழங்கி இலட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு இந்தியா வழங்கிய தடுப்பூசிகள் ஏதுவாய் அமைந்தன. இந்தியா இலங்கையின் மிகப் பெரிய முதலீட்டு ஆதாரமாகவும் திகழ்கின்றது.

அத்தோடு வர்த்தக பங்காளியாகவும் விளங்குகிறது. மேலும் சுற்றுலாத்துறையிலும் முதலீட்டு ஆதாராமாகவும் இந்தியா விளங்குகிறது. இவ்வாறு பல்வேறு வழிகளிலும் இலங்கையின் வளர்ச்சியில் பிரதான பங்காளியாக இந்தியா காணப்படுகிறது. இவ்வாண்டு இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன.

இந்திய மற்றும் இலங்கை மக்களுக்கிடையில் இந்த உறவு தொடரும் என்று நம்புகின்றோம். இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்களும் இதன் மூலம் மேம்படுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் அயல் நாட்டுக்கு முதலிடம் கொள்கையின் அடிப்படையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.

ஜீ20 மாநாட்டுக்கு  இந்தியா வெற்றிகரமான தலைமைத்துவத்தை வழங்கும். பிரதமர் மோடி தெற்காசிய நாடுகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். 74 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இலங்கைக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/146765

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.