Jump to content

கனடாவில் இலங்கைத் தமிழருக்கு 17 1⁄2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இலங்கைத் தமிழருக்கு 17 1⁄2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

lead_large.jpg ** ADVANCE FOR SUNDAY, JAN. 27 ** Prisoners reach through the bars in the F Cellhouse at the Oklahoma State Penitentiary in McAlester, Okla., where they are housed in old-fashioned cells with metal bars, Friday, Jan. 18, 2008. Sometimes they use small mirrors to get a glimpse of their neighbors and the correctional officers. (AP Photo)

கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கியில் சந்தேக நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன.

அதன்படி படுகொலை குற்றச்சாட்டில் பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்ய துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கு முன்னர் 5 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் , மேலும் ஆறரை ஆண்டுகள் சிறை வைக்கப்படவுள்ளார்.

அதேவேளை சந்தேகநபர் கனேடிய பிரஜாவுரிமை கொண்டவர் இல்லை என்பதனால் , தண்டனைக்காலம் முடிந்ததும் அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

https://akkinikkunchu.com/?p=236368

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கியில் சந்தேக நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன.

அதன்படி படுகொலை குற்றச்சாட்டில் பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை செய்ய துப்பாக்கியை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கு முன்னர் 5 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் , மேலும் ஆறரை ஆண்டுகள் சிறை வைக்கப்படவுள்ளார்.

2019 இல் நடந்த சம்பவத்துக்கு எப்படி 5 ஆண்டுகள் சிறைவைத்திருக்க முடியும். இப்போ 2023 தானே.

17 1/2 ஆண்டுகளில் 5 (?) ஆண்டுகளே போனாலும் மிகுதி 12 1/2 ஆண்டுகள் தானே. எப்படி மிகுதி ஆறரை ஆண்டுகள் வரும்.

கூட்டிகழிச்சுப்பார்த்தாலும் கணக்கு இடிக்குதே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

2019 இல் நடந்த சம்பவத்துக்கு எப்படி 5 ஆண்டுகள் சிறைவைத்திருக்க முடியும். இப்போ 2023 தானே.

Quote

Correct (2018?)

17 1/2 ஆண்டுகளில் 5 (?) ஆண்டுகளே போனாலும் மிகுதி 12 1/2 ஆண்டுகள் தானே. எப்படி மிகுதி ஆறரை ஆண்டுகள் வரும்.

Quote

11.5 + 6 = 17.5 not  correct 
தனியாக கொடுக்கப்பட்டாலும், சமகால தண்டனை அனுபவிப்பு ஆக மொத்த தண்டகாலம் 11.5 - 5 = 6.5 மிச்சம் 

கூட்டிகழிச்சுப்பார்த்தாலும் கணக்கு இடிக்குதே 🤣

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையும் இல்லை, வாலும் இல்லை. 

தண்டனை கொடுக்கப்பட்டவரது பெயரும் இல்லை. 

அட நம்ம் அக்கினிக்குஞ்சு 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தலையும் இல்லை, வாலும் இல்லை. 

தண்டனை கொடுக்கப்பட்டவரது பெயரும் இல்லை. 

அட நம்ம் அக்கினிக்குஞ்சு 🤣

என்ன அபார வாசனை முகர்ப்பு  உங்களுக்கு?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

என்ன அபார வாசனை முகர்ப்பு  உங்களுக்கு?🤣

பட்டி என்கிறீர்கள் 🤣

மனிதர்களைவிட மேலானதுதானே 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

பட்டி என்கிறீர்கள் 🤣

மனிதர்களைவிட மேலானதுதானே 😉

நான் எழுதுவதற்கு தான் நான் பொறுப்பு

உங்கள் கற்பனை புனைவுகளுக்கு அல்ல 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

தலையும் இல்லை, வாலும் இல்லை. 

தண்டனை கொடுக்கப்பட்டவரது பெயரும் இல்லை. 

அட நம்ம் அக்கினிக்குஞ்சு 🤣

கனடாவில் தண்டனை கொடுத்தாலும் பேரை வெளியே விடமாட்டார்களா! நீங்கள்தான் கண்டுபிடித்துத் தரவேண்டும்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.