Jump to content

வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர் பாபர் அஸாம் ! வீராங்கனை நட்டாலி சிவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர் பாபர் அஸாம் ! வீராங்கனை நட்டாலி சிவர்

By VISHNU

26 JAN, 2023 | 03:37 PM
image

(என்.வீ.ஏ.)

வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி .கிரிக்கெட் வீரருக்கான சேர் ஜோன் கார்பீல்ட் விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றெடுத்தார்.

வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேவோ விருது இங்கிலாந்தின் நட்டாலி சிவருக்கு கிடைத்துள்ளது.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் இர்ணடாவது தொடர்ச்சியான தடவையாக வென்றெடுத்துள்ளார்.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் தனதாக்கிக்கொண்டார்.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் நட்டாலி சிவர் வென்றெடுத்தார்.

வருடத்தின் அதிசிறந்த மகளிர் இருபது 20 கிரிக்கெட் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் தஹிலா மெக்ரா தெரிவானார்.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மத்தியஸ்தராக இங்கிலாந்தின் ரிச்சர்ட் இலிங்வேர்த் தெரிவானார்.

https://www.virakesari.lk/article/146760

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியகுமார் யாதவ் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி இ20 கிரிக்கெட் வீரரானார்

By VISHNU

26 JAN, 2023 | 10:01 AM
image

(என்.வீ.ஏ.)

2022க்கான அதிசிறந்த ஐசிசி ஆடவர் இருபது 20 கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் வென்றெடுத்துள்ளார்.

கடந்த வருடம் துடுப்பாட்டத்தில் அவர் வெளிப்படுத்திய அபரிமிதமான ஆற்றல்கள் அவருக்கு இந்த விருதை வென்று கொடுத்துள்ளது.

31 போட்டிகளில் விளையாடிய சூரியகுமார் யாதவ் 46.56 என்ற சராசரியுடனும் 187.43 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மொத்தமாக 1164 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் கொண்டுள்ளார். அதில் 2 சதங்களும் 9 அரைச் சதங்களும் அடங்கியிருந்தன.

2022க்கான அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஏனைய விருதுகள் இன்று (26) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/146709

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாபர் அஸாமுக்கு வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரர் விருது உட்பட 2 விருதுகள்

By VISHNU

26 JAN, 2023 | 05:32 PM
image

(என்.வீ.ஏ.)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் இரண்டு விருதுளை வென்று பாராட்டைப் பெற்றுள்ளார்.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோர்பஸ் விருதை வென்றெடுத்த பாபர் அஸாம், வருடத்தின் அதி சிறந்த சர்வதேச ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் தனதாக்கிக்கொண்டார். 

சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட் வீரர்  விருதை தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக பாபர் அஸாம் வென்றெடுத்தது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

2022ஆம் ஆண்டில் மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் அற்புதமாக பிரகாசித்ததன் மூலம் இந்த இரண்டு விருதுகளையும் பாபர் அஸாம் சொந்தமாக்கிக்கொண்டுள்ளார்.

கடந்த வருடம் மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 44 போட்டிகளில் விளையாடிய பாபர் அஸாம், 54.12 என்ற சராசரியுடன் 2,598 ஓட்டங்களைக் குவித்தார். அதில் 8 சதங்களும் 17 அரைச் சதங்களும் அடங்கின.

2022ஆம் ஆண்டில் பாபர் அஸாம் பல தனிப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியதுடன் ஒரே வருடத்தில் மூவகை கிரிக்கெட்களில் 2,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே ஒரு வீரர் என்ற கௌரவத்தைப் பெற்றார்.

9 டெஸ்ட் போட்டிகளில் 17 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள், 7 அரைச் சதங்கள் அடங்கலாக 1.184 ஓட்டங்களையும் (சராசரி 69.64) 9 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 சதங்கள், 5 அரைச் சதங்கள் அடங்கலாக 679 ஓட்டங்களையும் (சராசரி 84.87), 26 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம், 5 அரைச் சதங்கள் அடங்களாக 735 ஓட்டங்களையும் (சராசரி 31.95) பாபர் அஸாம் மொத்தமாக பெற்றார்.

டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அணி என்ற வகையில் பாகிஸ்தான் சாதிக்காதபோதிலும் பாபர் அஸாமின் துடுப்பிலிருந்து ஓட்டங்கள் குவிவதில் பஞ்சம் ஏற்படவில்லை.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடும் அழுத்தத்துக்கு மத்தியில் பாபர் அஸாம் குவித்த சதம் வருடத்தின் அதிசிறந்த இன்னிங்ஸ் துடுப்பாட்டமாக அமைந்தது எனலாம்.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 506 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கிட்டத்தட்ட 6 ஆட்ட நேர பகுதிககளில் பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸில் பெறவேண்டியிருந்தது. முதலிரண்டு விக்கெட்கள் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 21 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், துணிவை வரவழைத்துக்கொண்டு 10 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் 425 பந்துகளை எதிர்கொண்டு 196 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தானை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

இதனிடையே அப்துல்லா ஷபிக்குடன் 3ஆவது விக்கெட்டில் 228 ஓட்டங்களையும் மொஹமத் ரிஸ்வானுடன் 5ஆவது விக்கெட்டில் 115 ஓட்டங்களையும் பாபர் அஸாம் பகிர்ந்தார்.

நான்காவது இன்னிங்ஸில் தனி நபருக்கான அதிக ஓட்டங்களைப் பெற்ற அணித் தலைவர் என்ற சாதனையை நிகழ்த்திய பாபர் அஸாம் ஆட்டமிழந்து சென்றபோது அரங்கில் குழுமியிருந்த இரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து பாராட்டினர்.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் 2009க்குப் பின்னர் ஐசிசி ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தானை அஸாம் வழிநடத்தியிருந்தமை அவரது திறமைக்கு கிடைத்த மற்றொரு சான்றாகும்.

https://www.virakesari.lk/article/146781

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ பெண் கிரிக்கேட்டில் இங்லாந்துக்கு ப‌ல‌ விளையாட்டில் பெருமை சேர்த்து இருக்கு

 

ந‌ட‌ந்து முடிந்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ பின‌லில் த‌னியாக‌ நின்று விளையாடி வெற்றிக்கு அருகில் வ‌ந்து அவுஸ்ரேலியாவிட‌ம் தோல்வி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனை நட்டாலி சிவர்; ஒருநாள் கிரிக்கெட் விருதையும் தனதாக்கினார்

By VISHNU

26 JAN, 2023 | 10:08 PM
image

(என்.வீ.ஏ,)

சர்வதேச கிரிக்கெட் பேரவை விருதுகளில் 2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் வீராங்கனை உட்பட 2 பிரதான விருதுகளை இங்கிலாந்தின் சகலதுறை வீராங்கனை நட்டாலி சிவர் வென்றெடுத்தார்.

சர்வதேச கிரிக்கெட் விருதுகளுக்கு உரியவர்களை ஐசிசி இன்று வியாழக்கிழமை (26) வெளியிட்டது.

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட் விராங்கனைக்கான ரஷேல் ஹேஹோ ஃப்ளின்ட் விருதை வென்றெடுத்த நட்டாலி சிவர், வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் உரித்தானார்.

பாகிஸ்தானின் பாபர் அஸாமைப் போன்று மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசித்ததன் மூலம் வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை நட்டாலி சிவர் வென்றெடுத்தார்.

2014இல் சாரா டெய்லர் இந்த விருதை வென்ற பின்னர் ஆங்கிலேய பெண் ஒருவர் இந்த விருதை வென்றெடுப்பது இதுவே முதல் தடவையாகும்.

மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் 2022ஆம் ஆண்டு வெற்றிநடை போட்ட இங்கிலாந்து அணியில் நிலையான வீராங்கனையாக இடம்பெறுவரும் நட்டாலி சிவர், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மகளிர் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மிகவும் அவசியமான வேளையில் அரைச் சதம் குவித்து அசத்தினார்.

அத்துடன் வருட மத்தியில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 169 ஓட்டங்களைக் குவித்தார்.

கடந்த வருடம் 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 242 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற அவரது சராசரி 121.00ஆக இருந்தது. அத்துடன் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

16 மகளிர் சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸ்களில் 2 சதங்கள், 5 அரைச் சதங்கள் உட்பட 833 ஓட்டங்களைக் (சராசரி 59.50) குவித்த சிவர், 11 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

13 மகளிர் சர்வதேச இருபது 20 இன்னிங்ஸ்களில் 271 ஓட்டங்களைப் பெற்றார்.

நியூஸிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண (50 ஒவர்) இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 357 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சார்பாக தனி ஒருவராக போராடிய நட்டாலி சிவர் 148 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ஆனால், அப் போட்டியில் 71 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

https://www.virakesari.lk/article/146786

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தின் ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீரர் ஜென்சன், அதிசிறந்த வீராங்கனை ரேணுகா சிங்

By VISHNU

26 JAN, 2023 | 10:07 PM
image

(என்.வீ.ஏ.)

2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீரராக தென் ஆபிரிக்காவின் மார்க்கோ ஜென்சனும் ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ரேனுகா சிங்கும் தெரிவாகியுள்ளனர்.

தென் ஆபிரிக்காவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2021ஆம் ஆண்டு அறிமுகமான மார்க்கொ ஜென்சன் (22 வயது) கடந்த வருடம் 8 டெஸ்ட் போட்டிகளில் 19.02 என்ற சராசரியுடன் 36 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அனுபவம் பெற்ற பந்துவீச்சாளர்களான தென் ஆபிரிக்காவின் கெகிசோ ரபாடா (47 விக்கெட்கள்), அவுஸ்திரேலியாவின் நெதன் லயன் (47 விக்கெட்கள்), இங்கிலாந்தின் ஜெக் லீச் (46 விக்கெட்கள்), ஸ்டுவர்ட் ப்றோட் (40 விக்கெட்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 2022இல்  ஜென்சன்  5ஆம் இடத்தைப் பெறறார். 

அனுபவம் குறைந்தவர்களில் அவர் முதலிடம் வகிப்பதுடன் இலங்கையின் ப்ரபாத் ஜயசூரிய (3 போட்டிகளில் 29 விக்கெட்கள்) 2ஆம் இடத்தில் உள்ளார். ஜயசூரிய ஒட்டுமொத்த நிலையில் 10ஆம் இடத்தை  வகிக்கிறார்.

வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ள ஜென்சன், துடுப்பாட்டத்திலும் சளைத்தவர் அல்லர். பின்வரிசை துடுப்பாட்ட வீரரான அவர், 16 இன்னிங்ஸ்களில் ஒரு அரைச் சதத்துடன் 277 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

ரேணுகா சிங்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் 2021ஆம் ஆண்டு அறிமுகமான ரேணுகா சிங், கடந்த வருடம் பந்துவீச்சில் அற்புதமாக செயற்பட்டார்.

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் பல வெற்றிகளுக்கு ரேணுகா அடிகோலியதுடன் மொத்தமாக 40 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் காரணமாகவே ஐசிசி வளர்ந்துவரும் வருடத்தின் அதிசிறந்த வீராங்கனையாக ரேணுகா தெரிவானார்.

கடந்த வருடம் 7 மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14.88 என்ற சராசரியுடன் 18 விக்கெட்களையும் 22 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 23.95 என்ற சராசரியுடன் 22 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

இது இவ்வாறிருக்க இணை உறுப்பு நாடுகளுக்கான ஐசிசி வளர்ந்து வரும் வீரருக்கான விருதை நமீபியா அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸும் ஐசிசி வளர்ந்துவரும் வீராங்கனைக்கான விருதை ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஈஷா ஓஸாவும் வென்றெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/146789

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ்: ஐசிசி டெஸ்ட் அணித் தலைவரும் அவரே!

By NANTHINI

27 JAN, 2023 | 04:59 PM
image

(என்.வீ.ஏ.)

2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை இங்கிலாந்து அணித் தலைவரும் சகலதுறை வீரருமான பென் ஸ்டோக்ஸ் வென்றெடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கடந்த வருடம் வேறு யாரையும் விட சகல துறைகளிலும் பிரகாசித்ததற்காகவே பென் ஸ்டோக்ஸுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

கடந்த வருடம் 15 டெஸ்ட் போட்டிகளில் 26 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக்ஸ் 2 சதங்கள், 4 அரைச் சதங்கள் உட்பட 870 ஓட்டங்களை குவித்தார்.

அதேபோன்று 20 இன்னிங்ஸ்களில் பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் 26 விக்கெட்களை வீழ்த்தியதுடன் 10 பிடிகளையும் எடுத்துள்ளார். இதன் மூலம் அவரது சகலதுறை ஆற்றல் வெளிப்பட்டது.

இங்கிலாந்தின் டெஸ்ட் அணித் தலைமைப் பதவியை பென் ஸ்டோக்ஸ் ஏற்ற பின்னர் 10 போட்டிகளில் 9இல் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

நியூஸிலாந்தையும் தென் ஆபிரிக்காவையும் டெஸ்ட் தொடர்களில் தனது சொந்த மண்ணில் வெற்றிகொண்ட இங்கிலாந்து, பிற்போடப்பட்ட இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, அத்தொடரை 2 - 2 என சமப்படுத்தியது. 

அதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த இங்கிலாந்து, அங்கு 3 - 0 என முழுமையான வெற்றியை ஈட்டி தொடரை கைப்பற்றியது.

பென் ஸ்டோக்ஸ் அணித் தலைவராவதற்கு முன்னர் விளையாடப்பட்ட 4 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததுடன், 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியையே ஈட்டியிருந்தது.

வருடத்தின் ஐசிசி டெஸ்ட் அணி

கடந்த வருடம் அணித் தலைவராக 9 டெஸ்ட்களில் இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்த பென் ஸ்டோக்ஸ் வருடத்தின் ஐசிசி டெஸ்ட் அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் அணியில் 3 இங்கிலாந்து வீரர்களும், 4 அவுஸ்திரேலிய வீரர்களும், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த தலா ஒரு வீரரும் இடம்பெறுகின்றனர்.

டெஸ்ட் அணியில் உஸ்மான் கவாஜா (அவுஸ்திரேலியா), க்ரெய்க் ப்றத்வெய்ட் (மேற்கிந்தியத் தீவுகள்), மார்னுஸ் லபுஸ்சான் (அவுஸ்திரேலியா), பாபர் அஸாம் (பாகிஸ்தான்), ஜொனி பெயார்ஸ்டோவ் (இங்கிலாந்து), பென் ஸ்டொக்ஸ் (தலைவர் - இங்கிலாந்து), ரிஷாப் பன்ட் (இந்தியா), பெட் கமின்ஸ் (அவுஸ்திரேலியா), கெகிசோ ரபாடா (தென் ஆபிரிக்கா), நெதன் லயன் (அவுஸ்திரேலியா), ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து)

https://www.virakesari.lk/article/146857

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.