Jump to content

”13ஐ நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அதனை நீக்கி விடுங்கள்”: சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

”13ஐ நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அதனை நீக்கி விடுங்கள்”: சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி!

அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் அதனை நீக்கி விட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குகங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள். அதனை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அபப்டியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும்.

ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்.

நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை.

அதனை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் நாம் அதனை நீக்க வேண்டும். அரசியலமைப்பில் வைத்துக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சரியானதல்ல.

யுத்தம் முடிவடைந்தபோது பெருமளவிலான காணிகள் அரசாங்கத்திடம் இருந்தன. பின்னர் அவை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரினால் பகிர்ந்தளிக்க்ப்பட்டன. எனினும் காணிகள் பகிர்ந்தளிக்கும்போது பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க நாம் பாதுகாப்புத் தரப்பினரிடம் அதனை கையளிக்க வேண்டும். அது தொடர்பான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

காணி ஆணைக்குழுவை நாம் விரைவில் நியமிக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதமளவில் அதற்கான சட்டமூலத்தை நாம் பாராளுமன்றத்தில் முன்வைக்கலாம். இதில் 09 பேரை மாகாண மட்டத்திலும் ஏனைய 12 பேரை ஜனாதிபதி சார்பாக நியமிக்கவும் நான் நினைத்துள்ளேன்.

அடுத்ததாக தேசிய காணி கொள்கையொன்றும் அறிமுகம் செய்யப்படும். காணி ஆணைக்குழுவால் தேசிய காணிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டின் 30 சதவீத்த்திற்கும் அதிகமான காணிகள் வனப்பகுதிகளாக மதிப்பிடப்பட்டுள்ளன. எவ்வித முறையான திட்டமும் இல்லாமலேயே அவசரமாக காணிகள் வனங்களாக உள்வாங்கப்பட்டுள்ளன. ஆறுகள் ஆரம்பமாகும் இடங்களில் நாம் வனங்களை உருவாக்குவோம். நாம் வனங்களை அதிகரிப்போம். எனவே நாம் உருவாக்கும் தேசியக் கொள்கையடிப்படையில் அந்த 30 சதவீதம் எங்கே இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை நாம் காணி ஆணைக்குழுவிடம் ஒப்படைப்போம். 30சதவீத காடுகளை உருவாக்குவதில் நானும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும். அதற்கான திருத்தமொன்றைக் கொண்டு வந்து வேண்டுமானால் அதனை தோற்கடித்து மாகாண பொலிஸ் ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்தலாம். இரண்டில் ஒன்றை செய்ய வேண்டும். நாம் செய்யக்கூடியவை பற்றிய யோசனைகளை தருகின்றேன்.அது பற்றிய உங்கள் கருத்துக்களை என்னிடம் முன்வையுங்கள் நான் இதனை எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைப்பேன். உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால், 04 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை வழங்கினால், அவற்றையும் உள்ளடக்கி நாங்கள் முன்னோக்கிச் செல்வோம். இந்த நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் உட்பட ஏனைய குழுக்களுடன் இணைந்து வாழ வேண்டும். நமது தேசிய கீதத்தில் “ஒரு தாயின் மக்கள்” என்பதை நாம் பாதுகாத்தால், நம் நாடு ஒற்றுமையுடன் முன்னேற முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இன்று தமிழ் மக்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இப்போது சிங்கள மக்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பொருளாதார, அரசியல் பிரச்சனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படிப்படியாக தீர்த்து வைப்போம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
 

http://www.samakalam.com/13ஐ-நடைமுறைப்படுத்த-முடிய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

”13ஐ நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அதனை நீக்கி விடுங்கள்”: சர்வகட்சி மாநாட்டில்

 

நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை.

 

"யுத்தம் முடிவடைந்தபோது பெருமளவிலான காணிகள் அரசாங்கத்திடம் இருந்தன. பின்னர் அவை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரினால் பகிர்ந்தளிக்க்ப்பட்டன. எனினும் காணிகள் பகிர்ந்தளிக்கும்போது பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க நாம் பாதுகாப்புத் தரப்பினரிடம் அதனை கையளிக்க வேண்டும். அது தொடர்பான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

காணி ஆணைக்குழுவை நாம் விரைவில் நியமிக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதமளவில் அதற்கான சட்டமூலத்தை நாம் பாராளுமன்றத்தில் முன்வைக்கலாம். இதில் 09 பேரை மாகாண மட்டத்திலும் ஏனைய 12 பேரை ஜனாதிபதி சார்பாக நியமிக்கவும் நான் நினைத்துள்ளேன்."


 

 

அண்மையில் தமிழர் தரப்பு இந்தியாவுடன் அதின்மூன்று பற்றிப்பேசியது அப்போது கஜேந்திரகுமார் கூறியதாக அறியப்படுவது என்னவெனில் ப்தின்மூன்றாவது அரசியல் அமைப்பின் திருத்தச்சட்டமூலத்தில் இருக்கும் ஏறத்தாழ இருபத்து இரண்டு சரத்துக்கள் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் முரணானது என வழக்குப்போடப்பட்டு அவைக்கான தீர்புகள் வழக்குத்தாக்கல் செய்தவர்களுக்காகவே வந்திருக்கின்றன என அதாவது இலண்டன் மாநகரசபைக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள்கூட பதின்மூன்றுக்கு இல்லை என ரணில் கூறுவது பதின்மூன்றினைப் நாடாளுமன்றில் தாக்கல் செய்த ஆரம்பப்புள்ளியையாகும். 

தவிர இப்போது காணி அதிகாரங்கள் தொடர்பாக புதிய சட்டமூலம் கொண்டுவரப்படப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக விரைவில் 13ஐ தூக்கி கடாசி இந்தியாவை பொத்திக்கொண்டிருக்க வைக்க வேண்டும். சும்மா 13 ...13 என்று வயசு போன  கிழவியின் பல்லை பிடித்து ஆட்டுவது போல ஆட்டிக்கொண்டு  
மனுசனுக்கு 13 என்றாலே பத்திக்கொண்டு வருகுது 

Edited by அக்னியஷ்த்ரா
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்னியாஷ்ரா........அது செல்லாத நோட்டு ........! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்த நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் உட்பட ஏனைய குழுக்களுடன் இணைந்து வாழ வேண்டும்.

13 ஐ நீக்குவதற்கு இதன் மூலம்  ரணில்  பிள்ளையார் சுழி போட்டுவிட்டார். அப்படியே அதை நடைமுறப்படுத்தவேண்டி வந்தாலும்  காணி, பொலீஸ் அதிகாரங்களை முடக்குவதற்கும் குறுக்கு வழிகள் உண்டு என்பதையும் தெட்ட தெழிவாக உணர்த்தியிருக்கிறார்.

இலங்கையில் தமிழரை ஒரு தேசிய இனம் என்ற உண்மையைச் சொல்வதற்கு நாட்டின் ஜனாதிபதிக்கே விருப்பமில்லை.
(செய்தியாளரின் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறாகவும் இருக்கலாம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர்கள் கோரும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன்" - ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

பட மூலாதாரம்,PMD SRI LANKA

27 ஜனவரி 2023, 08:56 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மாகாணங்களுக்கு போலீஸ், காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வகையிலான, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இந்த சர்வகட்சி மாநாடு நடைபெற்றது.

ஜனாதிபதியின் அழைப்பு

இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத் திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடும் நோக்கில் இந்த சர்வகட்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று முன்தினம் (25) அறிவித்திருந்தது.

 

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்க மேம்பாட்டு வேலைத்திட்டம் குறித்தே, சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

'தமிழர்கள் கோரும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தியே தீருவேன்" - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

பட மூலாதாரம்,PMD SRI LANKA

சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்த தலைவர்கள்

பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தி, இந்த சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்திருந்தது.

''அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்வு திட்டத்தை வழங்க ஜனாதிபதி முன்வரவில்லை என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. அதனாலேயே, சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எந்தெந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. ஆனால், ஜனாதிபதியின் அனைத்து விடயங்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அதனாலேயே பிரதான எதிர்கட்சி என்ற வகையில் நாம் மாநாட்டைப் புறக்கணித்தோம்," என ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளர் உமாச்சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளர் உமாச்சந்திரா பிரகாஷ்

பட மூலாதாரம்,UMACHANDRAA PRAGASH/ FACEBOOK

 
படக்குறிப்பு,

ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளர் உமாச்சந்திரா பிரகாஷ்

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியும் இந்த மாநாட்டில் நேற்றைய தினம் கலந்துகொள்ளவில்லை.

''முதலில் அரசாங்கத்திற்குள் ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும். அதிகாரப் பகிர்வு தொடர்பிலான ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைக்கு, ராஜபக்ஸ தரப்பினர் விருப்பமா?

தினேஷ் குணவர்தன விருப்பமா? பிரசன்ன ரணதுங்க விருப்பமா? முதலில் இவர்களுக்கு இடையில் இணக்கப்பாடொன்று எட்டப்பட வேண்டும். அரசாங்கத்தின் பக்கத்தில் தேசிய பிரச்னைக்குத் தீர்வை வெளிப்படுத்தும் சட்டமூலமொன்று முன்வைக்க வேண்டும்.

அது முன்வைக்கப்பட்ட பின்னர், கலந்துரையாடல்களை நடத்த முடியும். போலியாக தேநீர் அருந்தி விட்டு, கேக் துண்டொன்றை சாப்பிட்டு, கலந்துரையாடி சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு நாம் இணைய மாட்டோம்," என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்

பட மூலாதாரம்,JVP

 
படக்குறிப்பு,

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்

சர்வகட்சி மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டொலோ கட்சியும் பங்கேற்றவில்லை.

இந்த விடயம் தொடர்பில் டொலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடம் பிபிசி தமிழ், வினவியது. ''அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்னை என முக்கியமான பொது விடயங்களைக் கூறியிருந்தோம்.

நாம் கோரிய ஒரு விடயம்கூட நடக்கவில்லை. சும்மா இருந்து பேசிவிட்டுச் செல்லக்கூடாது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வந்து, 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு சொல்லியிருக்கின்றார்.

அது சம்பந்தமாகவே இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கலாம். சொல்லப்பட்ட விடயங்கள் ஒன்றுமே நடக்காத இடத்தில் பேச்சுவார்த்தைக்குச் செல்வது வீணானது. இந்த முக்கிய விடயங்கள் நடந்தால்தான், இனப் பிரச்னைக்கான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியும்," என செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கின்றார்.

டொலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்

பட மூலாதாரம்,SELVAM ADAIKALANATHAN

நேற்றைய சர்வகட்சி மாநாட்டில் புளொட் அமைப்பு கலந்துகொள்ளாமை குறித்து, அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் பிபிசி தமிழ் வினவியது.

''நாங்கள் முழுமையாகப் புறக்கணிக்கவில்லை. அவர் சொன்ன விடயங்களான காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்களை முதலில் செய்து முடித்துவிட்டதன் பின்னர், நாம் கலந்துகொள்வோம். அதுவரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்," என தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிடுகின்றார்.

மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இந்த சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்திருந்தது.

இது தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

''தேசிய இனப்பிரச்னை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் பேசுங்கள்,' என நாம் திரும்ப, திரும்ப ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் கோரினோம்.

“எமது பிரச்னைகள் பற்றிப் பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள். ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துகளைத் தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்ரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் தொடர்புகளில் வடகிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம். ஆனால், மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகள் இன்று 'தோட்ட வரம்புகளுக்கு' வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்து தரப்பினரும் அறிய வேண்டும்.

தேசிய இனப்பிரச்னை என்பது இன்று வடக்கு, கிழக்கை மட்டும் மையமாகக் கொண்டதல்ல, அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஓர் எதிரணி கட்சியாக இருந்தாலும்கூட, 'தேசிய இன பிரச்னை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கிறதா' என நாம் கேள்வி எழுப்பவில்லை.

தேசிய இன பிரச்னையே இந்நாட்டின் பிரதான பிரச்னை. இந்நாட்டின் எந்தவோர் அரசு தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு. இந்தக் கருத்தை நாம் நமது வடகிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாற்றி கொண்டுள்ளோம். ஆகவே, இன்று ஜனாதிபதி விக்ரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்," என மனோ கணேசன் கூறுகின்றார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
 
படக்குறிப்பு,

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் நிலைப்பாடு

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

''இந்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதிக்கு முன்னர், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கியிருந்தார். எனினும், இதுவரை அவர் எதையும் செய்யவில்லை.

அதுகுறித்து எமது கவலையை வெளியிட்டோம். எனினும், இந்த விடயங்களை தான் நிச்சயமாகச் செய்வேன் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்தார். 13வது திருத்தம் அரசியலமைப்பில் இருக்கின்ற காரணத்தால், அதை அமல்படுத்தும் பொறுப்பு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட தனக்கு உள்ளதாக அவர் கூறுகின்றார்.

அதனால், அதை நிறைவேற்றுவேன் எனக் கூறினார். காணி விடுவிப்பு தொடர்பிலும் விரிவாகத் தெளிவூட்டினார். இதை ஒரே நாளில் நடைமுறைக்குக் கொண்டு வர முடியும் என நான் கூறினேன். இதை அமலுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து ஆவணங்களும் இருக்கின்றமையால், ஒரு நாள் போதுமானது," என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர்

பட மூலாதாரம்,ATHURALIYA RATHANA THERO/FB

 
படக்குறிப்பு,

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர்

நல்லிணக்கம் என்ற பெயரில் இனவாதத்தைத் துண்டும் வகையில் சர்வகட்சி மாநாட்டு பேச்சுவார்த்தை அமைந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் குறிப்பிடுகின்றார். ''குறிப்பாக ஒரு விடயத்தைக் கூற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், போலீஸ், காணி அதிகாரங்களை வழங்குவதா என்பது தொடர்பில் இல்லை பேச வேண்டும்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் யாராக இருக்கட்டும். விவசாயம் செய்யத் தயார் என்றால், அவர்களுக்கு காணிகளை வழங்குங்கள். காணி அதிகாரம் இல்லை. நல்லிணக்கம் என்ற பெயரில், இல்லாத ஓர் இனவாதத்தைத் துண்டும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

நல்லிணக்கம் இல்லை, நல்லிணக்கத்தை இல்லாதொழிக்கும் ஒரு திட்டம் இது. மக்களுக்கு காணி வழங்க வேண்டுமே தவிர, இனவாதமாக காணிகளைப் பகிர்ந்து அளிக்கக்கூடாது. வடக்கு மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு யாரும் எதிர்ப்பு கிடையாது.

ஆனால், காணி அதிகாரம் என்பது வேறொரு விடயம். மக்களிடையே வைராக்கியத்தைத் துண்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. இதை நாம் செய்யக்கூடாது." என அத்துரெலிய ரத்தன தேரர் குறிப்பிடுகின்றார்.

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PMD

முதலில் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே, தேசிய பிரச்னைக்குத் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவிக்கின்றார்.

''13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஒவ்வொருவரின் கருத்துகளையும் பெற்றுக் கொண்டார்கள். அதனால், விரைவில் நல்லதொரு விடயம் இடம்பெறும். கலந்துரையாடலில் நன்மை உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் இருக்கின்றார்கள். நன்மை இல்லை என அவர்கள் கூறி வருகின்றார்கள். நாடு தொடர்பிலும், நாட்டின் பொருளாதாரம் தொடர்பிலும் சிந்தித்து கருத்துகளைத் தெரிவித்தால், நான் நினைக்கின்றேன். இந்த விடயத்தில் நன்மை இருக்கின்றது என நினைக்கின்றேன்.

தேசிய பிரச்னைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க, முதலில் 13வது திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்," என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவிக்கின்றார்.

நாட்டை பிளவுப்படுத்தும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறுகின்றார்.

''13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசப்பட்டது. 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தக்கூடாது என நான் கூறினேன். இது நாட்டைப் பிளவுப்படுத்தும் என்பதற்காகவே இதுவரை இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இதை நடைமுறைப்படுத்தவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் இதை நடைமுறைப்படுத்தினால், நிச்சயமாக நாடு பிளவுபடும். அவரும் வரலாற்றில் இணைவார். 13வது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளமையால், அதை அமல்படுத்தும் பொறுப்பு தமக்கு உள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்," என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பில் 37 ஆண்டுகளாகக் காணப்படுகின்ற 13வது திருத்தத்தைத்தான் நிச்சயம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வகட்சி மாநாட்டில் நேற்றைய தினம் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

பட மூலாதாரம்,SARATH WEERASEKARA/FB

 
படக்குறிப்பு,

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு, யாராவது 22வது திருத்தமொன்றை புதிதாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்து, 13வது திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டும் எனக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க, அவ்வாறன்றி தன்மீது கோபப்படுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

''நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நான் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும்.

இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள்.

அதை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தனிப்பட்ட பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதை நீக்க முடியும்.

அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தைத் தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அபப்டியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்," என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான அ.நிக்சன்
 
படக்குறிப்பு,

அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான அ.நிக்சன்

இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான அ.நிக்சனிடம், பிபிசி தமிழ் வினவியது. ''சர்வகட்சி மாநாடு என்பது ஒரு ஏமாற்று வேலை. 13ஐ பற்றி கதைத்துள்ளார். அவ்வளவு தான். 13ஐ நடைமுறைப்படுத்த, ஏன் சர்வகட்சி மாநாட்டை நடத்த வேண்டும். அரசியலமைப்பில் உள்ள 13ஐ நடைமுறைப்படுத்து வேண்டியது தானே.

இதை நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு. அரசாங்கம் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுவொரு நகைப்புக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது.

காணி, போலீஸ் அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன. வடக்கு மாகாணத்தில் தமிழர்களே போலீஸ் உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும்.

சட்டத்தில் நடைமுறையில் உள்ள விடயத்தை அமல்படுத்துவதற்கு, ஜனாதிபதியின் அதிகாரங்கள் தேவையில்லை. ஏனெனில், இது ஏற்கெனவே சட்டத்தில் உள்ள விடயம். நிறைவேற்று அதிகாரம் உள்ளமையால், ஜனாதிபதிக்கு அதை அமல்படுத்த முடியும்.

இதற்கு சர்வகட்சி மாநாடு தேவையற்ற ஒன்று. அத்துடன், 13ஐ நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, நாடு எந்த வகையிலும் பிளவுப்படாது," என அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cw0xv70pyv7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை.

உண்மை.

4 hours ago, கிருபன் said:

காணி ஆணைக்குழுவை நாம் விரைவில் நியமிக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதமளவில் அதற்கான சட்டமூலத்தை நாம் பாராளுமன்றத்தில் முன்வைக்கலாம். இதில் 09 பேரை மாகாண மட்டத்திலும் ஏனைய 12 பேரை ஜனாதிபதி சார்பாக நியமிக்கவும் நான் நினைத்துள்ளேன்.

 

நரி 13 இல் உள்ள மாகாண காணி அதிகாரங்களை மீண்டும் மத்திக்கு எடுக்க சதி செய்கிறது

 

4 hours ago, கிருபன் said:

அடுத்ததாக தேசிய காணி கொள்கையொன்றும் அறிமுகம் செய்யப்படும். காணி ஆணைக்குழுவால் தேசிய காணிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 

4 hours ago, கிருபன் said:

மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும். அதற்கான திருத்தமொன்றைக் கொண்டு வந்து வேண்டுமானால் அதனை தோற்கடித்து மாகாண பொலிஸ் ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்தலாம்.

பொலிஸ் அதிகார விடயத்திலும் அதையே செய்ய விழைகிறது நரி 

48 minutes ago, vanangaamudi said:

 

4 hours ago, கிருபன் said:

இந்த நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் உட்பட ஏனைய குழுக்களுடன் இணைந்து வாழ வேண்டும்.

13 ஐ நீக்குவதற்கு இதன் மூலம்  ரணில்  பிள்ளையார் சுழி போட்டுவிட்டார். அப்படியே அதை நடைமுறப்படுத்தவேண்டி வந்தாலும்  காணி, பொலீஸ் அதிகாரங்களை முடக்குவதற்கும் குறுக்கு வழிகள் உண்டு என்பதையும் தெட்ட தெழிவாக உணர்த்தியிருக்கிறார்.

இலங்கையில் தமிழரை ஒரு தேசிய இனம் என்ற உண்மையைச் சொல்வதற்கு நாட்டின் ஜனாதிபதிக்கே விருப்பமில்லை.
(செய்தியாளரின் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறாகவும் இருக்கலாம்)

 

100%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான நிலைப்பாடு  முதல்முதலாக சிங்களத்திலிருந்து???

செய்  அல்லது இல்லையென்றாவது  சொல்...

இனி சிங்களம்  அடிபடட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

மிகச்சரியான நிலைப்பாடு  முதல்முதலாக சிங்களத்திலிருந்து???

செய்  அல்லது இல்லையென்றாவது  சொல்...

இனி சிங்களம்  அடிபடட்டும்

விசுகு இது நழுவுற பேச்சு.

இத்தனை காலம் உங்கள் கையில் அதிகாரமிருக்கும் போது ஏன் இந்தக் கதை வரவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

மிகச்சரியான நிலைப்பாடு  முதல்முதலாக சிங்களத்திலிருந்து???

செய்  அல்லது இல்லையென்றாவது  சொல்...

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

சும்மா, 37 வருடமா, புலிகள், பயங்கரவாதம் என்று மாவை போட்டு பிசையிற மாதிரி, 13 ஐ போட்டு பிசையோ, பிசை என்று பிசைஞ்சாச்சு.

இனி, புலிகள், பயங்கரவாதம் கதை இல்லை.

வெளிநாட்டு அழுத்தம். ஒன்று அரசியல் அமைப்பில் இருக்கும் 13ஐ அமுல் செய். அல்லது தூக்கி எறி.

ரணில் நிலைப்பாடு மிக சரியானது. எதிர்ப்போர், தனி மனு கொண்டு வந்து பாரளுமன்றில், 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேத்த வேண்டும். அப்போது, எதிர்ப்பின் பின்னால் இருப்பவர்கள் யார் என்று தெரிந்து விடும்.

வெட்டு ஒண்டு, துண்டு ரெண்டு என்ற நிலை எமக்கும் நல்லது. சர்வதேசத்துக்கு அடுத்த நகர்வு குறித்த தெளிவும் கிடைக்கும்.

இந்த வகையில் சிங்களவர்கள் சிக்குவார்கள் என்று தெரிந்தே, முதலில் 13ஐ அமுல் படுத்த கோருங்கள். பின்னர் சமஸ்டி குறித்து பேசலாம் என்று தமிழர் தரப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

ரணில் இந்த வகையில் எமக்கு உதவுகிறார் என்றே நினைக்கிறேன்.

11 minutes ago, ஈழப்பிரியன் said:

விசுகு இது நழுவுற பேச்சு.

இத்தனை காலம் உங்கள் கையில் அதிகாரமிருக்கும் போது ஏன் இந்தக் கதை வரவில்லை?

இது நழுவுற பேச்சு போல எனக்கு தெரியவில்லை.

ரணில் இருபக்க அழுத்தம். ஒன்று பொருளாதார அழுத்தம். அதில் தாமதித்தால் கோத்தா போல விரட்டி அடிக்கப்படுவார்.

இரண்டாவது, இனப்பிரச்சனை குறித்து இந்தியா உள்பட சர்வதேச அழுத்தம். கனடா தடை ஒரு உதாரணம்.

இரண்டாவது, முதலாவதுடன் இணைந்துள்ளது. 😎

.

Edited by Nathamuni
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

சும்மா, 37 வருடமா, புலிகள், பயங்கரவாதம் என்று மாவை போட்டு பிசையிற மாதிரி, 13 ஐ போட்டு பிசையோ, பிசை என்று பிசைஞ்சாச்சு.

இனி, புலிகள், பயங்கரவாதம் கதை இல்லை.

வெளிநாட்டு அழுத்தம். ஒன்று அரசியல் அமைப்பில் இருக்கும் 13ஐ அமுல் செய். அல்லது தூக்கி எறி.

ரணில் நிலைப்பாடு மிக சரியானது. எதிர்ப்போர், தனி மனு கொண்டு வந்து பாரளுமன்றில், 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேத்த வேண்டும். அப்போது, எதிர்ப்பின் பின்னால் இருப்பவர்கள் யார் என்று தெரிந்து விடும்.

வெட்டு ஒண்டு, துண்டு ரெண்டு என்ற நிலை எமக்கும் நல்லது. சர்வதேசத்துக்கு அடுத்த நகர்வு குறித்த தெளிவும் கிடைக்கும்.

இந்த வகையில் சிங்களவர்கள் சிக்குவார்கள் என்று தெரிந்தே, முதலில் 13ஐ அமுல் படுத்த கோருங்கள். பின்னர் சமஸ்டி குறித்து பேசலாம் என்று தமிழர் தரப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

ரணில் இந்த வகையில் எமக்கு உதவுகிறார் என்றே நினைக்கிறேன்.

இது நழுவுற பேச்சு போல எனக்கு தெரியவில்லை.

ரணில் இருபக்க அழுத்தம். ஒன்று பொருளாதார அழுத்தம். அதில் தாமதித்தால் கோத்தா போல விரட்டி அடிக்கப்படுவார்.

இரண்டாவது, இனப்பிரச்சனை குறித்து இந்தியா உள்பட சர்வதேச அழுத்தம். கனடா தடை ஒரு உதாரணம்.

இரண்டாவது, முதலாவதுடன் இணைந்துள்ளது. 😎

 

நன்றி  ஐயா

நோர்வேயில்  எதுவுமே  தரமாட்டார்கள்

அவர்களிடம்  இல்லை  என்று  புலிகள்  தெரிந்தபின் வெறுப்பின் உச்சக்கட்டமாக

கேட்கப்பட்டது  தான்

சரி  என்ன  தரப்போகிறீர்கள்

என்ன உங்களிடம்  இருக்கு தமிழருக்கு  கொடுக்க  என்ற கேள்வி...

நான்  அதிலிருந்து  இன்னும்  நகரவில்லை

இன்று சிங்களம் சிக்கியிருக்கும்  பொருளாதார மற்றும் தடைகள் சார்ந்த சகதிக்குள்ளிருந்து வெளிவர 

தானாகவே இதைத்தான்  தருவோம் என்கின்றனர்

இனி அவர்கள்  அடிபடட்டும்

நாம் அடுத்த கட்டங்களுக்கு  நகரலாம்

தமிழர்களின் நேரமிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

சும்மா, 37 வருடமா, புலிகள், பயங்கரவாதம் என்று மாவை போட்டு பிசையிற மாதிரி, 13 ஐ போட்டு பிசையோ, பிசை என்று பிசைஞ்சாச்சு.

இனி, புலிகள், பயங்கரவாதம் கதை இல்லை.

சரியான கருத்து.


இனியும் சர்வதேசம்,இந்தியா என இழுபடாமல் சிங்களத்துடன் பேசி ஒரு முடிவிற்கு வந்துவிட வேண்டும். சகுனி இந்தியாவை நம்பிக்கொண்டிருந்தால் அழுத கண்ணீரும் சோறும் தான் மிஞ்சும்.சர்வதேசமும் இந்தியாவை மீறி எதுவும் செய்யாது. சொந்த நாட்டுக்குள்ளேயே பிரச்சனைகளை முடிப்போமாயின் சகுனியின் நச்சரிச்சல்களும்,தடைகளும் இருக்க வாய்ப்பும் இல்லை.

மாவீரர்களை மனதில் நிறுத்தி சில விட்டுக் கொடுப்புகளை கொடுத்து பிரச்சனைகளை ஒவ்வொன்றாக,படிப்படியாக தீர்க்க முயலலாம்.

 எமது உறவுகளுக்கு அரசியல் தலையீடு இல்லாத உதவிகளையும் செய்ய முடியும் என நினைக்கின்றேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தார்மீக உரிமை கிடையாது - விமல் வீரவன்ச

By VISHNU

27 JAN, 2023 | 04:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும், அரச வளங்களை தனியார்மயப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தார்மீக உரிமை கிடையாது, ஏனெனில் அவர் மக்கள் பிரதிநிதியல்ல, மக்களாணை இல்லாத பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகாரத்த மாநாட்டு மண்டபத்தில்  26 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு மிகுதியாக உள்ள வளங்களை தனியார்மயப்படுத்த அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தியுள்ளது. 

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச நிறுவனங்களை முழுமையாக தனியார் தரப்பினருக்கு விற்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

நாடு வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இயற்கை காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை, திட்டமிட்ட வகையில் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு முதல்காலாண்டு பகுதியில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் இலங்கை ரூபாவின் பெறுமதியை தளம்பல் நிலையில் பேணாவிட்டால் இந்திய கடனுதவி திட்டம் இலங்கைக்கு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டார்.

இதன் பின்னரே ரூபா தளம்பல் நிலைக்கு நிலைப்படுத்தப்பட்டது, இதனால் பணவீக்கம் அதிகரித்து நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் சூழல் தோற்றம் பெற்றது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை வெளி தரப்பினர் தமது சுய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியை காண்பித்து நாட்டுக்கு எதிரான பல விடயங்களை செயற்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்தால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரச வளங்களை தனியார் மயப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தார்மீக உரிமை கிடையாது ஏனெனில் அவர் மக்கள் பிரதிநிதியல்ல, பாராளுமன்றத்தின் 134 உறுப்பினர்களின் பிரதிநிதி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மக்களாணை கிடையாது, ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலை அறிந்து செயற்பட வேண்டும். தனக்கு மக்களாணை உள்ளதா என்பதை அறிய வேண்டுமாயின் அவர் ஏதாவதொரு தேர்தலை தாராளமாக நடத்தலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/146819

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

மிகச்சரியான நிலைப்பாடு  முதல்முதலாக சிங்களத்திலிருந்து???

செய்  அல்லது இல்லையென்றாவது  சொல்...

இனி சிங்களம்  அடிபடட்டும்

இல்லை அண்ணா. ரணில் - 13 ஐ நீக்க போராடுங்கள் என சமிக்ஞை கொடுக்கிறார்.

கூடவே காணி, பொலிஸ் அதிகாரங்களை “தேசிய ஆணை குழு” மூலம் கொழும்பில் வைத்து கொண்டு,  உள்ளதை எல்லாம் உருவி விட்டு, யானை தின்ற விளாம்பழம் போல ஒரு திட்டத்தை 13 என திணிக்கப்போகிறார்.

7 hours ago, ஈழப்பிரியன் said:

விசுகு இது நழுவுற பேச்சு.

இத்தனை காலம் உங்கள் கையில் அதிகாரமிருக்கும் போது ஏன் இந்தக் கதை வரவில்லை?

நழுவுற பேச்சு மட்டும் இல்லை, ரோட்டு கூட்டும் அதிகாரம் கூட இல்லாத ஒரு சபையை - இதுதான் 13 என கொடுத்து, மேற்கு, இந்தியா, புலம்பெயர் தமிழர் எல்லாருக்கும் தீர்வு கொடுத்து விட்டேன் என சொல்லி, கதையை முடிக்கப்போகிறார்.

இதை சுமந்திரன் புழுகி, புழுகி நான் கஸ்டபட்டு தீர்வு எடுத்து தந்துட்டேன் என தம்பட்டம் அடிக்கப்போறார்.

7 hours ago, Nathamuni said:

இந்த வகையில் சிங்களவர்கள் சிக்குவார்கள் என்று தெரிந்தே, முதலில் 13ஐ அமுல் படுத்த கோருங்கள். பின்னர் சமஸ்டி குறித்து பேசலாம் என்று தமிழர் தரப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இங்கே ரணில் சொல்வது 13 அல்ல. 13 இல் உள்ள எமக்கு தேவையான சகலதையும் உறிஞ்சி விட்டு வெறும் சக்கையை 13 என எம் தலையில் கட்ட போகிறார்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சரியான கருத்து.


இனியும் சர்வதேசம்,இந்தியா என இழுபடாமல் சிங்களத்துடன் பேசி ஒரு முடிவிற்கு வந்துவிட வேண்டும். சகுனி இந்தியாவை நம்பிக்கொண்டிருந்தால் அழுத கண்ணீரும் சோறும் தான் மிஞ்சும்.சர்வதேசமும் இந்தியாவை மீறி எதுவும் செய்யாது. சொந்த நாட்டுக்குள்ளேயே பிரச்சனைகளை முடிப்போமாயின் சகுனியின் நச்சரிச்சல்களும்,தடைகளும் இருக்க வாய்ப்பும் இல்லை.

மாவீரர்களை மனதில் நிறுத்தி சில விட்டுக் கொடுப்புகளை கொடுத்து பிரச்சனைகளை ஒவ்வொன்றாக,படிப்படியாக தீர்க்க முயலலாம்.

 எமது உறவுகளுக்கு அரசியல் தலையீடு இல்லாத உதவிகளையும் செய்ய முடியும் என நினைக்கின்றேன்.

இதை வாசித்து அர்ஜூன் அண்ணா, கற்பகதரு போன்றோர் கடைசியாக தாம் சொல்லிய வழிக்கே திரு குமாரசாமி வந்துவிட்டார் என மன சாந்தி அடைவார்கள் என நம்புகிறேன்.

பிகு:

உங்கள் மனமாற்றத்தை, நிலைமாற்றத்தை நானும் வரவேற்கிறேன்.

ஆனால் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கையோடு பேசுவது ஏமாற்றத்தில்தான் முடியும்.

அதேபோல் நாங்களும், இலங்கையும் விரும்பினாலும் கூட இந்தியாவை விலத்தி நடக்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இல்லை அண்ணா. ரணில் - 13 ஐ நீக்க போராடுங்கள் என சமிக்ஞை கொடுக்கிறார்.

கூடவே காணி, பொலிஸ் அதிகாரங்களை “தேசிய ஆணை குழு” மூலம் கொழும்பில் வைத்து கொண்டு,  உள்ளதை எல்லாம் உருவி விட்டு, யானை தின்ற விளாம்பழம் போல ஒரு திட்டத்தை 13 என திணிக்கப்போகிறார்.

நழுவுற பேச்சு மட்டும் இல்லை, ரோட்டு கூட்டும் அதிகாரம் கூட இல்லாத ஒரு சபையை - இதுதான் 13 என கொடுத்து, மேற்கு, இந்தியா, புலம்பெயர் தமிழர் எல்லாருக்கும் தீர்வு கொடுத்து விட்டேன் என சொல்லி, கதையை முடிக்கப்போகிறார்.

இதை சுமந்திரன் புழுகி, புழுகி நான் கஸ்டபட்டு தீர்வு எடுத்து தந்துட்டேன் என தம்பட்டம் அடிக்கப்போறார்.

இங்கே ரணில் சொல்வது 13 அல்ல. 13 இல் உள்ள எமக்கு தேவையான சகலதையும் உறிஞ்சி விட்டு வெறும் சக்கையை 13 என எம் தலையில் கட்ட போகிறார்.

அதற்கு இன்றைய பொருளாதார சிக்கல் அவருக்கு சாதகமானது அல்ல. தமிழர் தரப்பு மிகவும் கூர்மையுடன் உழைக்க வேண்டும். பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு எந்தவொரு அதிகாரமுமில்லை என்கிறார்கள் ஆனால் கூட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிகின்றனர். அவரோ செய்வேன் என்கிறார், சொன்னதை செயலில் காட்டி நிரூபிக்க  பின்னடிக்கிறார். செய்வேன் என்பவர் நீக்குங்கள் என்பது பற்றி ஆலோசனை வழங்குகிறார். வடக்கு கிழக்கு இணைப்பு பிரிவு பற்றி பேசினார்கள் ஒருகாலத்தில், நீதிமன்றம் போய் பிரித்துக்கொண்டார்கள். அதிலிருந்து மீள முனைப்பு காட்டவில்லை அடங்கி விட்டார்கள் நம்மவர்.  இருந்ததை பிரிக்கும் போது எழாத எதிர்ப்பு, பிரித்ததை இணையுங்கள் என்று கேட்கும்போது இரத்த ஆறு ஓடுமென எச்சரிக்கிறார்கள். இன்று பதின்மூன்றும் அதே நிலையிலிருக்கிறது. மொத்தத்தில் இதுவும் வெகு சீக்கிரம் நீதிமன்றம் போய் இல்லாமல் விடைபெற்றுவிடும். ஆக நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பிரச்சனைகளை தீர்க்க நாட்டில் சட்டங்களும் இல்லை, நீதிமன்றங்களும் பிரிப்பதற்கே உதவுகின்றன. இனப்பிரச்சினையை தீர்ப்பதில் உண்மையில் நம்மவர்க்கோ, பெரும்பான்மையினர்க்கோ, சர்வதேசத்துக்கோ விருப்பமில்லை. இதை வைத்து ஆதாயம் தேடுவதையும், பிச்சையெடுப்பதையும், மூக்கை நுழைக்கவுமே விரும்புகின்றனர். நம்ம தலைமை உண்மையாக, திறமையாக செயற்பட்டிருந்தால் இந்தளவுக்கு நிலைமை சிக்கலாகி வெளியார் தலையீடு வந்திருக்காது. இவர்களே சிங்களத்துக்கு வழியும் சொல்லி, வழி விட்டும் கொடுத்துவிட்டு இந்தியாவையும் அழைத்து வந்து செருகி விட்டதும் இவர்களே. கரையில் இருக்கும் போது காப்பாற்ற முடியாதவர்கள் நடுக்கடலில் போன பின் காப்பாற்ற முடியுமா? காகித கப்பல்களை நம்பி  கரை சேர துடிக்குமினம் நாம்!  சாகிறோம் காப்பாற்றுங்கள் என்று கையெடுத்துக்கும்பிட்டோம் மனித நேயத்துக்காக உழைக்கிறோம் எனக்காட்டி கொள்ளும் அமைப்புகளிடம், என்ன நடந்தது? கைகழுவி விட்டு சென்று வேடிக்கை பாத்து அறிக்கை விட்டு கூடியிருந்து பேசுகிறார்கள். காப்பாற்ற முடிந்ததா இல்லை அதற்கு முடிவு விடிவு வைக்கத்தான் முடிந்ததா இவர்களால்? எதுவும் முடியாது, தடுத்துப்பாத்தோம், தட்டிப்பாத்தோம், இடித்துப்பாத்தோம் ஒன்றும் நடக்கேல்லையே எங்களையே கெடுத்துக்கொண்டோமே. இனி என்ன செய்வது? எங்களை அழிப்பதற்காக தூங்காது திட்டம் தீட்டுபவனிடம் அடைக்கலம் கேட்டு காத்திருக்கிறோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆனால் மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கையோடு பேசுவது ஏமாற்றத்தில்தான் முடியும்.

இந்தியாவை மீறி யார் மத்தியஸ்துக்கு வருவார்கள்?

விடுதலைப்புலிகள் இருக்கும் போதும் எரிக் சொல்கையும் ஒவ்வொரு  விடுதலைப்புலிகள்- சிங்கள தரப்பு பேச்சுவார்த்தையின் பெறுபேறுகளை/ முடிவுகளை இந்திய அரசுக்கு நேரடியாக சென்று அறிவிப்பது வழக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவை மீறி யார் மத்தியஸ்துக்கு வருவார்கள்?

விடுதலைப்புலிகள் இருக்கும் போதும் எரிக் சொல்கையும் ஒவ்வொரு  விடுதலைப்புலிகள்- சிங்கள தரப்பு பேச்சுவார்த்தையின் பெறுபேறுகளை/ முடிவுகளை இந்திய அரசுக்கு நேரடியாக சென்று அறிவிப்பது வழக்கம்.

ஓம். எப்படி பார்த்தாலும் எமக்கு கஸ்டம்தான்.

தனியே சிங்களவரோடு பேசினாலும் ஆப்பு.

மத்தியஸ்தம் எண்டு இந்தியா வந்தாலும், சிங்களவர் இப்போ அடிப்பதை போல் ஆப்பு அடித்தால் இந்தியா சும்மா பார்த்து கொண்டுதான் இருக்கும். ஆகவே அதுவும் ஆப்புத்தான்.

கிட்டதட்ட இலங்கை எமக்கு வைத்துள்ள செக்மேட்.

இதை உடைக்கும் ஒரே வழி நம்மில் ஒரு கட்சி சீனாவை நெருங்குவதாக இருக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்தியாவை மீறி யார் மத்தியஸ்துக்கு வருவார்கள்?

விடுதலைப்புலிகள் இருக்கும் போதும் எரிக் சொல்கையும் ஒவ்வொரு  விடுதலைப்புலிகள்- சிங்கள தரப்பு பேச்சுவார்த்தையின் பெறுபேறுகளை/ முடிவுகளை இந்திய அரசுக்கு நேரடியாக சென்று அறிவிப்பது வழக்கம்.

எரிக்சொல்ஹெய்ம் சமாதான தூதுவர் வேலை செய்ய வரவில்லை, கொண்டோடி வேலையே செய்தவர். இப்போ குழப்பி வேலை செய்கிறார்.   எல்லா நாடுகளும் எங்களை வைத்துப் பரிசோதனை நடத்துகின்றன. 

முடிந்தால்; இந்தியா தமிழருக்கு செய்யும் சகுனி வேலையை அதன் பக்கம் திருப்பி அதை தலை புழுத்த நாய் போல ஓட வைத்தால்தானுண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம்!

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தை இரத்து செய்வதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கும் வரை, அதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

13 ஆவது திருத்த சட்டத்தை நீக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தனிப்பட்ட பிரேரணையை முன்வைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லையெனில், அதனை நடைமுறைப்படுத்த நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதியரசர் குழாம் முன்வைத்துள்ள தீர்ப்பிற்கமையவே செயற்படுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1322084

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இதை வைத்து தேர்தலுக்கு தயாராகிறார் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.