Jump to content

75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட வேண்டும் : ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட வேண்டும் : ஜனாதிபதி

image_3c17883c0a.jpg

• தேவையான செலவினங்களை மதிப்பிடும் போது நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து
கவனம் செலுத்த வேண்டும்

குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்றது.

அதன்படி, 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பெப்ரவரி 02 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதற்கமைய சிறப்பு தலதா பூஜை மற்றும் மஹாபிரித் சொற்பொழிவு, சர்வமத நிகழ்வுகள், சுதந்திர சதுக்கத்தில் கலாசார நிகழ்ச்சி, காலி முகத்திடலில் நடைபெறும் பாரம்பரிய சுதந்திர தின பிரதான நிகழ்வு, தேசிய பூங்காக்கள் மற்றும் தேசிய மிருகக்காட்சிசாலை போன்றவற்றுக்கு இலவச அனுமதி, யாழ் கலாசார மையம் திறப்பு, கண்டி பெரஹர, தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை வரையிலான சிறப்பு சைக்கிள் சவாரி போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்குத் தேவையான செலவுகளை மதிப்பிடும்போதும் நடைமுறையில் அதற்கான செலவுகளை மேற்கொள்ளும்போதும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து கவனம் செலுத்துவது, அரசியல் தலைமை மற்றும் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அதற்கேற்ப செலவினங்களைக் குறைத்து செயற்படுமாறும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு ஒதுக்கப்பட்ட பண ஒதுக்கீடு தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு நிலவுவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அது குறித்து அவதானம் செலுத்தி அதற்கான செலவினங்களை குறைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“ நாம் 75 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட வேண்டும். அதை செய்யாவிட்டால் சுதந்திர தின கொண்டாட்டத்தை கூட நடத்த முடியாது என்று உலகம் நினைக்கும். அதே போன்று நாம் சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் கவர வேண்டும். நம் நாட்டைப் பற்றி நல்லதொரு எண்ணத்தை உருவாக்க வேண்டும். எனவே முடிந்தவரை செலவுகளைக் குறைத்து இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.

சுதந்திர தின விழாவுடன் இணைந்து நகர்ப்புற காடுகளை உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துபாயில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் (COP28) கலந்து கொள்வதற்கு முன் இந்த நடவடிக்கைகளைத் தொடங்க எதிர்பார்க்கிறோம். மேலும், சில புதிய நிறுவனங்களும் தொடங்கப்பட உள்ளன. அது தொடர்பிலான சட்டங்களை இயற்றி பணிகளை ஆரம்பிக்க ஆகஸ்ட் மாதம் ஆகலாம். மேலும், காலநிலை மாற்றம் குறித்த பல்கலைக்கழகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம், இது நாட்டுக்கு நீண்டகால நன்மைகளை கொண்டு வரும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நடவடிக்கைகளுக்கு முழுமையாக செலவழிப்பதற்கு திறைசேரியில் பணம் இல்லை. எனவே, முக்கிய நடவடிக்கைகளுக்கு பணம் ஒதுக்கும் போது, ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, பாதுகாப்பு, வெளிவிவகாரம், கல்வி, புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள், வெகுசன ஊடகம், நிதி ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திறைசேரி உள்ளிட்ட துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/75-ஆவது-சுதந்திர-தினத்தை-பெருமையுடன்-கொண்டாட-வேண்டும்-ஜனாதிபதி/175-311471

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

71 ஆம் ஆண்டு சிங்கள இளைஞர்களை கொலை செய்தோம் நாட்டின் ஜனநாயகத்தை காக்க,2009 ஆண்டு வரை தமிழ் இளைஞர்களை கொலை செய்தோம் இறையான்மையை காக்க 
இருந்தும் கொண்டாடுவோம் 75 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெருமையுடன்.....நாங்கள் கிழட்டு சிங்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் ஆரம்பம்

By T. SARANYA

29 JAN, 2023 | 09:29 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நேற்றிலிருந்து எதிர்வரும் 3 ஆம் திகதி வரையும் , சுதந்திர தினத்தன்றும் கொழும்பில் வாகன போக்குவரத்துக்களை மட்டுப்படுத்தி , வீதிகளை மூடுதல் மற்றும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்காக பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் நேற்று முதல் அதிகாலை 5 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை விசேட வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர தினம் வரை இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறையிலிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வாகன போக்குவரத்தினை மட்டுப்படுத்தல்

காலிமுகத்திடல் வீதி, காலி முகத்திடல் சுற்று வட்டத்திலிருந்து என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் வரை மற்றும் சைத்திய வீதி பிரதேசம் வரை போக்குரத்து மட்டுப்படுத்தப்படும்.

கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்று வட்ட திசைக்கு மற்றும் கொள்ளுபிட்டி புகையிரத நிலைய வீதிக்கு பிரவேசித்தல் , புனித மைக்கல் சுற்று வட்டத்தில் காலி வீதி பகுதிக்கு பிரவேசித்தல் , ரொட்டுன்டா சுற்று வட்டத்திலிருந்து காலி வீதி திசைக்கு பிரவேசித்தல் , செரமிக் சந்தியிலிருந்து என்.எஸ்.ஏ.சுற்று வட்ட திசைக்கு பிரவேசித்தல் மட்படுத்தப்பட்டுள்ளது.

யோர்க் வீதியிலிருந்து இலங்கை வங்கி மாவத்தைக்கு பிரவேசித்தல் , யோர்க் வீதியிலிருந்து செத்தம் வீதிக்கு பிரவேசித்தல், யோர்க் வீதியிலிருந்து முதலிகே மாவத்தைக்கு பிரவேசித்தல் , யோர்க் வீதியிலிருந்து பாரொன் ஜயதிலக மாவத்தைக்கு பிரவேசித்தல்மட்படுத்தப்பட்டுள்ளது.

காண் மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்திலிருந்து வை.எம்.பி.ஏ. சுற்று வட்ட திசைக்கு பிரவேசித்தல் , செனோர் சந்தியிலிருந்து ஒக்கொட் மாவத்தை, சி.டி.ஓ. சந்திக்கு பிரவேசித்தல் , காமினி சுற்று வட்டத்திலிருந்து டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தைக்கு பிரவேசித்தல், கொம்பனித்தெருவிலிருந்து ரீகல் சந்திக்கு பிரவேசித்தல் மட்படுத்தப்பட்டுள்ளது.

மாகன் மாகர் மாவத்தை, பாலதக்ஷ மாவத்தை சந்தியிலிருந்து காலி முகத்திடல் மற்றும் பாலதக்ஷ மாவத்தைக்கு பிரவேசித்தல் , காலி வீதி பம்பலப்பிட்டி சந்தியிலிருந்து கொள்ளுபிட்டி திசைக்கு பிரவேசித்தல், கடற்கரை வீதி பம்பலப்பிட்டி புகையிரத பாதை சந்தியிலிருந்து கொழும்பிற்கு பிரவேசித்தல் , தும்முல்ல சந்தியிலிருந்து பௌத்தாலோக்க மாவத்தை ஊடாக ஆர்.ஏ.டி. மெல் மாவத்தைக்கு பிரவேசித்தல் , ஆனந்த குமாரசிங்க மாவத்தை, மல்பார சந்தியிலிருந்து லிபர்டி சுற்றுவட்ட திசைக்கு பிரவேசித்தல் மற்றும் லிபர்டி சுற்றுவட்டத்தின் புனித மைக்கல் சுற்றுவட்ட திசைக்கு பிரவேசித்தல் மட்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட வீதிகள் மூடப்படும் போது அல்லது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் போது அந்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் போக்குவரத்து உத்தியோகத்தர்களின் ஆலோசனைப்படி பயணம் செய்ய முடியும். அத்தோடு குறித்த வீதிகளில் நெறிசலை தவிர்ப்பதற்காக சாரதிகள் மற்றும் பொது மக்கள் கீழ் குறிப்பிடப்படும் மாற்று வீதிகளை பயன்படுத்த முடியும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பஸ், இலகு வாகனங்கள்

காலி வீதியிலிருந்து கோட்டை, புறக்கோட்டை பகுதிக்கு பிரவேசிக்கும் வாகனங்கள் பம்பலப்பிட்டி சந்தியிலிருந்து தெற்கிற்கு திரும்பி பௌத்தாலோகமாவத்தை, தும்முல்ல சந்தி, தேஸ்டன் வீதி ஊடாக செல்ல முடியும்.

கொள்ளுபிட்டி சந்தியிலிருந்து தெற்கிற்கு திரும்பி, லிபர்ட் சுற்று வட்டம், தர்மபால மாவத்தை ஊடாக கோட்டை, புறக்கோட்டைக்கு செல்ல முடியும்.

ஒல்கொட் வீதி, கார்மிக வித்தியாலய சந்தி, சங்கராஜ மாவத்தை, பஞ்சிகாவத்தை வீதி மருதானை பால சந்தி, காமினி சுற்று வட்டம் ஊடாக கோட்டை, புறக்கோட்டையிலிருந்து வாகனங்கள் வெளியேற முடியும்.

ஏனைய கனரக வாகனங்கள்

வெள்ளவத்தை டபிள்யு.ஏ.சில்வா மாவத்தையிலிருந்து தெற்கிற்கு திரும்பி பழைய ஹெவ்லொக் வீதி, மாயா சுற்று வட்டம், ஹெவ்லொக் வீதியூடாக கோட்டை, புறக்கோட்டை திசைக்கு பயணிக்க முடியும்.

ஒல்கொட் மாவத்தை ஊடாக கார்மிக வித்தியாலய சந்தியில் சங்கராஜ மாவத்தை பஞ்சிகாவத்தை வீதி, மருதானை பால சந்தி, காமினி சுற்று வட்டம், டீ.பி.ஜாயா மாவத்தை ஊடாக கோட்டை, புறக்கோட்டையிலிருந்து வெளியேற முடியும் என்று பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/146940

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

75 ஆவது சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனம் ; யாழிலிருந்து மட்டக்களப்புக்கு ஆர்ப்பாட்டப் பேரணி

By T. SARANYA

28 JAN, 2023 | 04:41 PM
image

(ஆர்.ராம்)

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தனை கரிநாளாக பிரகடனம் செய்துள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரையில் மூன்று நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர்.

இந்தப் பேரணிக்கு, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத்தளத்தில் செயற்படுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் தரப்பினரும் பூரண ஆதரவினை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை சுதந்திரமடைந்து 75ஆண்டுகள் நிறைவுக்கு வருகின்றபோதும், குறித்த காலத்தில் தமிழ் மக்கள் சமமாக மதிக்கப்படாத நிலைமையே நீடிக்கின்றது.

இந்நிலையில் எதிர்வரும் சுதந்திர தினத்தினை கரிநாளாக நாம் பிரகடனப்படுத்தியுள்ளாம். வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்ரூபவ் நீதிக்காக போராடும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை கோரியும் இந்த ஆர்ப்பாட்டப்பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியானதுரூபவ் யாழ்.பல்கலைக்கழத்திலிருந்து சுதந்திரதினத்தன்று காலையில் புறப்படவுள்ளதோடு, அங்கிருந்து யாழ்நகருக்குச்சென்று பின்னர் கிளிநொச்சி நோக்கி பயணிக்கவுள்ளது. முதலாம் நாள் பயணம் கிளிநொச்சியில் நிறைவுக்கு வரவுள்ளதோடு, இரண்டாவது நாள் பயணம் அங்கிருந்து ஆரம்பித்து வவுனியா, நோக்கி செல்லவுள்ளது. பின்னர் இறுதி நாளில் ஆர்ப்பாட்டப்பேரணியானது, மட்டக்களப்பில் நிறைவுக்கு வரவுள்ளது. இதன்போதுரூபவ் பிரகனடமும் வெளியிடப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/146947

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச கண்காட்சி!

75ஆவது சுதந்திர தினத்தையோட்டி இலவச கண்காட்சியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அருங்காட்சிய திணைக்களம் ஆகியவை இணைந்து இதனை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

அதன்படி பெப்ரவரி 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தேசிய அருங்காட்சியகத்தில் குறித்த கண்காட்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரிய பல விடயங்களை மக்களுக்கு கண்டுகொள்ள முடியுமெனவும் பௌத்த சமய அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன  குறிப்பிட்டுள்ளார்.
 

https://athavannews.com/2023/1322202

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இவர் கொண்டாட்டத்தில் பிடிவாதமாக இருக்கிறார். அவர்கள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டு தங்கள் செல்வாக்கை காத்தனர்.  இவரோ நாடு வங்குரோத்தில் இருக்கும்போது சுதந்திர தினத்தை  கொண்டாடவேண்டுமென ஒற்றைக்காலில் நிக்கிறார். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதத்தில் செல்வாக்கை உயர்த்த முயற்சிக்கின்றனர். மக்களோ நடுத்தெருவில் போராடுகின்றனர். அவர்களையும், உணர்வுகளையும் அடக்கி அதன்மேல் நின்று கொண்டு சுதந்திர தினக்கொண்டாட்டமாம். முட்டாள்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட வேண்டும் : ஜனாதிபதி

உலகம் முழுக்க புளுத்த கடனை வைச்சுக்கொண்டு பெருமையாய் சுதந்திர தினம் கொண்டாட வேணுமாம்......தமிழினம் சுதந்திரம் இல்லாமல் திரிய இவருக்கு பெருமைப்படுற சுதந்திர தினம் வேணுமாம்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.