Jump to content

வட இந்தியர்கள் உங்களை விரட்டிவிரட்டி அடிப்பார்கள் அப்போது என்னை தேடுவீர்கள்- சீமான் பேச்சு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியர்கள் உங்களை விரட்டிவிரட்டி அடிப்பார்கள் அப்போது என்னை தேடுவீர்கள்- சீமான் பேச்சு

10-19.jpg

வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள் எனவும், தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

மறைந்த புலவர் தமிழ்கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. வேலுநாச்சியாரின் பேரன் நான் வந்தால் அவளுக்கு மிகப்பெரிய கோயிலை கட்டி தமிழில் ஓதுவார்களை வைத்து தமிழில் குடமுழுக்கு நடத்துவேன். என் அப்பத்தா வேலுநாச்சியாருக்கு ஏதோ மரப்பாச்சி பொம்மை போல் ஒரு சிலை உள்ளது, ஆனால் யார் யாருக்கோ சிலைகள் எழுப்பப்பட்டுள்ளது. ஒரே நாள் இரவில் அந்த சிலைகளை எல்லாம் மொத்தமாய் சாக்கில் கட்டி நடுக்கடலில் வீசுவேன். அப்போது இங்கிருந்த சிலையை காணவில்லை, சமாதியை காணவில்லை என போராட்டம் நடைபெறும்.

வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள். தமிழகத்தின் எல்லா இடத்திலும் அடிப்பார்கள், ஒருநாள் நடக்கும். இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் அறம், இருந்துட்டு போரான் பா, வாழ்ந்துட்டு போரான் பா என வந்தோர்களை வாழவைக்கும் தமிழர்களின் அறம் தான் இந்த வீழ்ச்சிக்கு காரணம். தங்களை தற்காத்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு இப்போது தான் தமிழர்களுக்கே தோன்றியிருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், சமத்துவத்தையும், சம இட ஒதுக்கீடையும் எப்போது ஏற்படுத்துவீர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என எப்படி அரசே அறிவிக்கமுடியும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்களிடம் ஜிஎஸ்டி வசூலீக்கப்படாமலா இருக்கிறது, இது என்ன இட ஒதுக்கீடு, இது என்ன சமூக நீதி என்று கேள்வியெழுப்பினார்.

முக்குலத்தோர்க்கு மூன்று அமைச்சரை கொடுத்தீர்கள். அப்படி கொடுக்காமல் அவரவர்களின் வலிமைக்கேற்ப அமைச்சரவை கொடுக்கப்பட வேண்டும். கோனார் சமுதாயத்திற்கு இரண்டு அமைச்சர் கொடுத்துள்ளீர்கள், ஆனால் உங்கள் வீட்டிலேயே இரண்டு அமைச்சர்களை வைத்துள்ளீர்கள், எடுத்துக் கொடுக்காமல் எண்ணி கொடுக்க வேண்டும். வட இந்தியர்கள் உங்களை வீழ்த்துவதற்குள் விழித்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

https://akkinikkunchu.com/?p=236571

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதே விரட்டியடிக்க தொடங்கி விட்டார்களாம்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இப்போதே விரட்டியடிக்க தொடங்கி விட்டார்களாம்..

சென்ற மாதம்  ஒரு என்ஜினியரை... அடித்தே கொன்று இருக்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=844921023273386 👈

👆 இராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து என்பது பொய். இங்கு வரும் தொழிலாளிகள் பெரும்பாலும் பீகார் ஒரிஸ்ஸா மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வருகிறார்கள். 200, 300 க்கு எல்லாம் வேலை செய்வது இல்லை. 700,800 க்குத்தான் வேலை செய்கிறார்கள். நம் ஆட்கள் துபாயில் போய் கொத்தனார் பிட்டர் எலக்ட்ரிக் வேலை மற்றும் ஏன் ஆடு ஒட்டகம் கூட மேய்க்கிறார்கள். ஒரு படத்தில் வடிவேல் சொல்வதுபோல் கக்கூஸ் கழுவும் வேலையும் செய்கிறார்கள். எல்லாம் பணத்திற்காக. நம் ஊரைவிட துபாயில் அதிகம் கிடைக்கிறது என்று இவர்கள் அங்கே செல்கிறார்கள். அதுபோல் வடக்கில் ஒரு நாளைக்கு 300,400 தான் கிடைக்கும். இங்கு 700,800 கிடைக்கிறது. எனவே அவர்கள் இங்கு படையெடுக்கிறார்கள்.ஆனால் அவர்கள் யாரும் டாஸ்மாக் செல்வதில்லை. கிடைக்கும் பணத்தை அப்படியே சேமித்து ஊருக்கு அனுப்புகிறார்கள்.

R Muthukumara Samy

May be an image of 4 people and text that says 'த்்தவார் ரானு; சுட்ட வடை f/suttavadaiya ஆட்கள் பற்றாக்குறையால் தியை வடமாநிலத்தை சேர்ந்த ஆண்கள் நாள் தால் பற்ற லாலாபேட்டையில் முகாம் இத நடவுப்பணியில் ஈடுபடுகின்றனர் லாலாபேட்டை, செப்.25- பேட்டை, பிள்ளபாளையம், வல்லம் கொம்பாடிபட்டி Herbal Powd BAWjEM பானிபூரி மூத்தகுடி கை குடு பானி பூரிகாரா நீ விவசாயம் பண்ணு, நான் டாஸ்மாக் போயிட்டு வரேன்'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவதாக வெளியான வீடியோ தவறானது" - திருப்பூர் காவல்துறை

தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவதாக வெளியான வீடியோ தவறானது - திருப்பூர் காவல்துறை
28 ஜனவரி 2023, 10:37 GMT
புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்

திருப்பூரில் தமிழர் ஒருவரை வட மாநில தொழிலாளர்கள் கும்பலாகச் சேர்ந்து துரத்தி தாக்குவதாகச் சொல்லப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த வீடியோ காட்சியில் நடந்த சம்பவம் திருப்பூரில் உள்ள வேலம்பாளையம் திலகர் நகர் பகுதியில் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்தச் சம்பவம் இரண்டு நபர்களுக்கு மத்தியில் டீ கடையில் நடந்த வாய்த்தகராரால் நடைபெற்றது என்றும் அவர்கள் இருவேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இனவாதத்தைத் தூண்டும் வகையில் வீடியோ பரப்பப்படுகிறது என்றும் திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பிபிசி தமிழிடம் உறுதி செய்துயுள்ளார்.

கடந்த ஜனவரி 14ஆம் தேதி திலகர் நகர் பகுதியில் ஒரு டீ கடையில் தமிழ் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர்.

அப்போது, மோதல் ஏற்பட்ட இருதரப்பில் ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார். புகை மற்றொருவர் மீது பட்டதால், இரண்டு நபர்களுக்கு இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக நடந்த சம்பவம்தான் அந்த வீடியோவில் உள்ளது என்று காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு கூறினார்.

''ஒரு கட்டத்தில் ஒரு நபர் மற்றொருவரைத் தாக்க முற்பட்டுள்ளார். அதனால், மற்றொருவர் தான் பணிபுரியும் இடத்திற்குச் சென்று தனது நண்பர்களை அழைத்து வந்தார்.

அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஒருவரும் காயம் அடையவில்லை. சில நிமிடங்கள் மட்டுமே அங்கு சலசலப்பு நடைபெற்றது.

ஆனால் சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் ஜனவரி 26ஆம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் என்று பகிரப்படுகிறது. இதில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.

இந்த வீடியோவை உள்நோக்கத்துடன் பரப்புவதைத் தவிர்ப்பது நல்லது என்று தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்,'' என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும், சனிக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த சம்பவம் குறித்துப் புலனாய்வு செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திலகர் நகர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் அரிதாக நடைபெறும் தகராறு என்றும் இதே சம்பவம் ஒரே இனத்தைச் சேர்ந்த நபர்களுக்கு இடையில் நடந்திருந்தால் கவனம் பெற்றிருக்காது என்றும் திருப்பூர் காவல் ஆணையர் கூறுகிறார். 

இந்தச் சம்பவத்தில் தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுக்கு, தொழில் போட்டி, வேலைவாய்ப்பு, முன்விரோதம் என எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

ஆனால் இதுபோன்ற அரிதான சம்பவங்கள்கூட இரண்டு தரப்பு மக்கள் மத்தியில் விரிசல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, திருப்பூர் நகரத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்களிடம் இதுகுறித்துப் பேசி வருவதாகவும், இரண்டு தரப்பு தொழிலாளர்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை நடத்தும் திட்டம் இருப்பதாகவும் கூறினார்.

சமூக ஊடகங்களில் தொடர்ந்து இந்த வீடியோ பரவி வருவதால், பல அரசியல் தலைவர்களும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய 'நாம் தமிழர்' தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பூரில் தமிழர்களை வட இந்தியர்கள் தாக்கியதாகச் சொல்லப்படும் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

''இந்தச் சம்பவம் ஒரு தொடக்கம்தான். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பல இடங்களில் நடக்கும்போதுதான் நீங்கள் சீமானை தேடுவீர்கள். இதுபோன்ற நபர்களை ஆதரிக்க இங்கு ஒரு கூட்டம் இருக்கிறது. இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொன்ன கூட்டம் அது,'' என்று பேசியுள்ளார்.

"தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவதாக வெளியான வீடியோ தவறானது" - திருப்பூர் காவல்துறை

பட மூலாதாரம்,TIRUPUR POLICE

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட மாநிலத்தவர்களின் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது", என்று தெரிவித்தார்.

மேலும், "தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காட்டிற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள். கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா பணிகளிலும் பெருமளவு வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்க்கிறார்கள்," என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

''நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், வெளி மாநிலத்தவர்கள் சென்று தங்க, அந்த மாநிலங்களின் உள் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வட மாநில தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த சர்ஜித் இந்த வீடியோ மோசமான உதாரணம் என்கிறார்.

''பல காலமாக வட மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வேலைக்காக வருகிறார்கள். சமீபகாலமாக எங்களை மோசமாகச் சித்தரிக்கும் வீடியோக்களை பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

இதுபோன்ற வீடியோவை வெளியிடக்கூடாது. எங்கள் ஊரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பலர் இங்கே இரண்டு தலைமுறைகளாக வாழ்கின்றனர்,'' என்கிறார் சர்ஜித்.

https://www.bbc.com/tamil/articles/cev0v2qzpwzo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் 100 ரூபாய்க்கு வேலை செய்கிறார்களா? - உண்மை நிலவரம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வட மாநில தொழிலாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சமீபத்தில் ‘பரிதாபங்கள்’ என்ற பிரபல யூடியூப் சேனலில் வட மாநிலத் தொழிலாளர் குறித்த ஒரு கேலி வீடியோ ‘வடக்கு ரயில் பரிதாபங்கள்’ என்ற பெயரில் வெளியானது.

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழர்களை விரட்டியடித்ததாக சமூக ஊடகங்களில் ஒரு காணொளி வைரலானது. ஆனால், அது தேநீர் கடையில் நடந்த தகராறின் விளைவு என்றும் வேலை சம்பந்தப்பட்ட பிரச்னை எதுவும் அதில் இல்லை என்றும் திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர் தெரிவித்தார்.

இந்நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பெரும் சம்பளம் குறித்து சில நாட்களாக இருந்து வந்த சர்ச்சையும் பேசுபொருளாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ரூ. 100- 200க்கு வேலை செய்வதாகவும், தமிழர்கள் அதே வேலைக்கு ரூ. 1,000 வரை கூலி கேட்பதாகவும் கிண்டலாக அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

மிகக் குறைவான ஊதியமும் அன்றாட உணவும் வட மாநில தொழிலாளர்களுக்கு போதும் என்பதாகவும் அதனால் அவர்களையே தமிழ்நாட்டில் அதிகமாக வேலைக்கு எடுப்பதாகவும் இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் சித்தரித்திருந்த அந்த வீடியோ, இன்று வரை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்ட வசனத்தை வேறு பலரும் டப் செய்து புதிய வீடியோக்களை செய்து தங்கள் சேனல்களில் பகிர்கின்றனர். வேறு சிலர் பல்வேறு துறைகளுக்கென அதை மாற்றி பகிர்ந்து வருகின்றனர். குறிப்பிட்ட வீடியோ, வட மாநிலத்தவர்கள் குறித்தே எடுக்கப்பட்டிருந்தாலும், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். உண்மையில் வெளிமாநில தொழிலாளர்கள் இவ்வளவு குறைவான ஊதியத்திற்கு வேலை பார்க்கிறார்களா? தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில், ஆடை உற்பத்தி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வெளிமாநிலத்தவர்களுக்கும் அதே வேலையில் ஈடுபடும் தமிழர்களுக்கும் இடையே உள்ள ஊதிய வித்தியாசம் என்ன?

ஜார்க்கண்ட், ஒடிசா, பிகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு அதிகமான அளவில் வருகின்றனர். ஆரம்பத்தில் கட்டுமான தொழில், ஆடை உற்பத்தித் தொழிலில் மட்டுமே அனைத்து வேலைகளிலும் ஈடுபட்ட இவர்கள், தற்போது உணவகங்கள், செக்யூரிட்டி பணி, லிஃப்ட் ஆப்பரேட்டர் என, அனைத்து வித பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அதேபோன்று, ஆரம்பத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அதிகளவில் வேலை செய்துவந்த வெளிமாநிலத்தவர்கள், தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளனர். இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ (PIB) ஏப்ரல், 2022-இல் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட்டில் 34.87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுள் பெண்கள் 7.13 லட்சம் பேர், ஆண்கள் 27.74 லட்சம் பேர்.

"ரூ.100-200க்கு வேலை செய்வது இல்லை"

கட்டுமானம், ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருவோரிடம், வெளிமாநில தொழிலாளர்களின் ஊதிய நிலைமை குறித்துப் பேசினோம். சென்னையில் செயல்பட்டுவரும் கேலக்சி டெகார்ஸ் என்னும் கட்டுமானத் துறை நிறுவனத்தைச் சேர்ந்த என்.தமிழரசு என்பவர் பிபிசி தமிழிடம் பேசினார். “ரூ. 100-200க்கு எல்லாம் யாரும் வேலை செய்வது இல்லை. ஆனால், கட்டுமான தொழிலில் வேலை செய்யும் தமிழர்களுக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கும் இடையே ஊதியத்தில் சிறு வித்தியாசம் இருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வாங்கும் ஊதியத்தில் 70% ஊதியமே வெளிமாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. உதாரணமாக, கட்டுமான தொழிலை பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு ரூ. 800-850 வரை வெளிமாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அதனை நேரடியாக அவர்களிடம் தராமல் அவர்களை அழைத்துவரும் ஏஜெண்ட்டுகளிடம் வழங்குவோம். அவர்கள் 200-250 ரூபாய் வரை பிடித்துக்கொண்டு தொழிலாளர்களிடம் வழங்குவார்கள்” என்கிறார்.

தமிழரசு

பட மூலாதாரம்,TAMILARASU

படக்குறிப்பு,

தமிழரசு

ஊதியம் தவிர்த்து, கட்டுமான தொழில்கள் நடைபெறும் இடங்களில் தங்கி வேலை செய்பவர்களுக்கு உணவு சமைப்பதற்கான பொருட்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்குவதாகவும், அதை வைத்து தொழிலாளர்கள் சமைத்துக்கொள்வார்கள் என்றும் கூறுகிறார் தமிழரசு. தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிமாநிலத்தவர்களே என்கிறார் தமிழரசு.

"சிறிய ஊதிய வித்தியாசம் தான்"

திருப்பூர் மாவட்டத்தில் ஆடை உற்பத்தித் தொழில் செய்துவரும் ராஜன் கூறுகையில், “ஆடை தொழிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இணையாகவே வெளிமாநில தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகின்றது. சில இடங்களில் ஊதிய வித்தியாசம் சிறிதளவே இருக்கும். இந்த தொழிலில் வெளிமாநிலத்தவர்களுக்கு ஒருநாள் ஊதியம் 1,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது” என்கிறார். 30 தொழிலாளர்கள் வரை வைத்து சிறிய அளவில் தொழில் செய்துவரும் ராஜனின் நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர்கள் யாரும் வேலையில் சேர்க்கப்படவில்லை.

“சிறிய நிறுவனம் என்பதால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். பெரிய நிறுவனங்களில் அப்படியில்லை. பாதிக்கும் மேலானோர் வெளிமாநிலத்தவர்களே” என்கிறார்.

அதேபோன்று, திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த ஆர். சுப்பிரமணி என்பவர் கூறுகையில், “ஒருநாளைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஸ்திரி ரூ.1,000-1,100 வாங்குகிறார் என்றால், வெளிமாநில தொழிலாளர்கள் ரூ. 900 வாங்குகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த உதவியாளர்கள் ரூ. 800-900 வாங்கினால், வெளிமாநிலத்தவர்கள் ரூ. 700 வாங்குகின்றனர். மிகக்குறைவான ஊதிய வித்தியாசமே இருக்கிறது” என்கிறார். இவருடைய நிறுவனத்தில் பணிசெய்யும் 30 பேரில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

"சுரண்டல் அதிகம்"

கடின உழைப்பு, நேரம் தவறாமை இவை இரண்டையும் வெளிமாநிலத்தவர்கள் கடைபிடிப்பதாக நிறுவனங்களின் தரப்பில் பேசியவர்கள் கூறுகின்றனர். இதுபோக, 8 மணிநேரத்தைக் கடந்து 12 மணிநேரம் வரைகூட வேலை செய்வது, வாரத்தில் ஒருநாள் மட்டுமே விடுப்பு எடுப்பது, பண்டிகை நாட்களில் விடுமுறை கேட்காதது, உரிமைகள் குறித்து கேட்பதற்கு சங்கம் இல்லாதது, பணியில் பாதுகாப்பின்மை நிலவினால் கேள்வி கேட்காதது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் வெளிமாநிலத்தவர்களை அதிகம் பணியில் அமத்துவதாக, நிறுவனங்கள் தரப்பில் கூறுகின்றனர். மேற்கண்ட காரணங்கள் அனைத்தும் வெளிமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான சுரண்டலே என்கிறார், தொழிலாளர் நல வழக்குகளை கையாண்டு வரும் வழக்குரைஞர் பிரதாபன் ஜெயராமன்.

பிரதாபன் ஜெயராமன்

பட மூலாதாரம்,PRATHABAN JAYARAMAN

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “வெளிமாநில தொழிலாளர்கள் கேள்வி கேட்காமல் இருப்பதாலேயே சுரண்டல் அதிகமாக நடப்பதற்கு வழிவகுக்கிறது. தமிழர்கள் நியாயமான கூலி கேட்கும் விழிப்புணர்வை அடைந்திருக்கின்றனர். வட மாநிலத்தவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களில் வாழ்வாதாரம் இன்மையால், குறைவான ஊதியமே போதுமானதாக இருப்பதாக கருதுகின்றனர். உண்மையில், அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவான சம்பளமே வெளி மாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஒருநாளைக்கு 12 மணிநேரம் கடந்தும் அவர்கள் வேலை செய்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் அவர்களை பதிவு செய்ய வேண்டும். அது முறையாக நடைபெறுவதில்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என்பதை ஒவ்வொரு நிறுவனமும் பதிவு செய்ய வேண்டும். அதனை நிறுவனங்கள் செய்வதில்லை. இதனால் அவர்களை சுரண்டுவது மிக எளிதாக இருக்கிறது. அவர்களின் பாதுகாப்புக்கென சங்கங்கள் இல்லை. வீட்டு வேலைக்காக வரும் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களும் கண்காணிக்கப்படுவதில்லை” என்றார். "வைரலான வீடியோவில் வருவதுபோன்று 100 ரூபாய்க்கு வேலை செய்வதெல்லாம் மிக மிக அரிது. சில இடங்களில் வேலையைப் பொறுத்து அத்தகைய குறைவான சம்பளம் இருக்கலாம்" என்கிறார் பிரதாபன்.

வடமாநில தொழிலாளர்கள்

பட மூலாதாரம்,DIBYANGSHU SARKAR

தமிழ்நாட்டுக்கு வருவது ஏன்?

சென்னையில் 22 ஆண்டுகளாக வேலை செய்துவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜெய்ஸ்வால் பிபிசி தமிழிடம் கூறுகையில், “கட்டுமான தொழில்களில் ஒருநாளைக்கு எங்களுக்கு ரூ.850 வரை சம்பளம் கிடைக்கிறது. கட்டுமான தொழிலில் அனைத்துவிதமான வேலைகளையும் நாங்கள் செய்கிறோம்” என்றார். கட்டுமான தொழிலில் பல்வேறு வேலைகள் செய்து தற்போது மேஸ்திரியாக உள்ளார் இவர். கட்டுமான தொழில்களுக்கு வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அனுப்பும் ஏஜெண்ட்டாகவும் இருக்கிறார். 50 ரூபாய் கமிஷன் பிடித்துக்கொண்டே தொழிலாளர்களுக்கு மீத ஊதியத்தை வழங்குவதாக கூறுகிறார் அவர். தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் புலம்பெயர்வது குறித்து கேட்டபோது, “வட மாநிலங்களில் வேலையில்லை. அதனால் தான் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களுக்கு இடம்பெயர்கிறோம்” என, தெரிவித்தார் ஜெய்ஸ்வால். “வெளிமாநில தொழிலாளர்கள் வருகையால் உள்ளூரில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில குடியிருப்புகளில் பெரும்பான்மையாக வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் ‘எங்களுக்கே வேலை கொடுங்கள், மற்றவர்களுக்குக் கொடுக்காதீர்கள்’ எனக்கூறுகின்றனர்” என்றார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன்.

https://www.bbc.com/tamil/articles/cgexe5npv5eo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'Nainar MC Just now :ஏலே இன்னும் 10 வருஷம் தான் -அதுக்கு அப்புறம் தமிழ்நாடே 'வடநாடு' ah மாறிடும்... TALKIES @Nainar MC'

இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ (PIB) 
ஏப்ரல், 2022-இல் வெளியிட்ட தகவலின்படி, 
தமிழ்நாட்டில் 34.87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். 
இவர்களுள் பெண்கள் 7.13 லட்சம் பேர், ஆண்கள் 27.74 லட்சம் பேர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பூர் மோதல் வீடியோ:  வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது - மேலும் பலருக்கு வலைவீச்சு

திருப்பூர்  மோதல் - 2 பேர் கைது
5 மணி நேரங்களுக்கு முன்னர்

திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் - தமிழ் இளைஞர்கள் சண்டை தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் அருகே திலகர் நகர் பகுதியில் வட மாநில - தமிழ் இளைஞர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிலை அதிகரித்து வருவது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்வினை புரிந்தனர். 

வட மாநிலத் தொழிலாளர்கள் மீதான கசப்புணர்வைத் தூண்டும் வகையில் இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் காவல்துறை உடனே முன்வந்து விளக்கம் அளித்தது.

"வட மாநிலத் தொழிலாளர்கள் - தமிழ் இளைஞர்கள் மோதல் நடந்தது ஜனவரி 14-ம் தேதி. டீக்கடையில் புகைப் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறுதான் இருதரப்பு மோதலாக உருப்பெற்றுள்ளது. ஆனாலும், சிறு சலசலப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. யாருக்கும் காயம் இல்லை," என்று நிலைமையை தெளிவுபடுத்தியதோடு, இந்த வீடியோவை உள்நோக்கத்துடன் பரப்பக் கூடாது என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டது. 

தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுக்கு, தொழில் போட்டி, வேலைவாய்ப்பு, முன்விரோதம் என எந்தத் தொடர்பும் இல்லை என்றும் திருப்பூர் காவல்துறை தெளிவுபடுத்தியது. 

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக, பிகாரைச் சேர்ந்த ரஜத்குமார், பரேஷ்ராம் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

அவர்கள் மீது ஐபிசி 147 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148 (ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294 (பி) பொது இடத்தில் அவதூறாகப் பேசி  பிரச்சனை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மோதல் - 2 பேர் கைது

பட மூலாதாரம்,TIRUPUR POLICE

இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளிட்ட வேறு சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோதல் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள் யார் என்பது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பிபிசி தமிழிடம் பேசிய போது, "ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது. தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் நிகழும் முன்னேற்றங்கள் உடனுக்குடன் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்." என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c72rv75qyv7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2023 at 16:13, ஏராளன் said:

"தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவதாக வெளியான வீடியோ தவறானது" - திருப்பூர் காவல்துறை

தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவதாக வெளியான வீடியோ தவறானது - திருப்பூர் காவல்துறை
28 ஜனவரி 2023, 10:37 GMT
புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்

திருப்பூரில் தமிழர் ஒருவரை வட மாநில தொழிலாளர்கள் கும்பலாகச் சேர்ந்து துரத்தி தாக்குவதாகச் சொல்லப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த வீடியோ காட்சியில் நடந்த சம்பவம் திருப்பூரில் உள்ள வேலம்பாளையம் திலகர் நகர் பகுதியில் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்தச் சம்பவம் இரண்டு நபர்களுக்கு மத்தியில் டீ கடையில் நடந்த வாய்த்தகராரால் நடைபெற்றது என்றும் அவர்கள் இருவேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இனவாதத்தைத் தூண்டும் வகையில் வீடியோ பரப்பப்படுகிறது என்றும் திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பிபிசி தமிழிடம் உறுதி செய்துயுள்ளார்.

கடந்த ஜனவரி 14ஆம் தேதி திலகர் நகர் பகுதியில் ஒரு டீ கடையில் தமிழ் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர்.

அப்போது, மோதல் ஏற்பட்ட இருதரப்பில் ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார். புகை மற்றொருவர் மீது பட்டதால், இரண்டு நபர்களுக்கு இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக நடந்த சம்பவம்தான் அந்த வீடியோவில் உள்ளது என்று காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு கூறினார்.

''ஒரு கட்டத்தில் ஒரு நபர் மற்றொருவரைத் தாக்க முற்பட்டுள்ளார். அதனால், மற்றொருவர் தான் பணிபுரியும் இடத்திற்குச் சென்று தனது நண்பர்களை அழைத்து வந்தார்.

அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஒருவரும் காயம் அடையவில்லை. சில நிமிடங்கள் மட்டுமே அங்கு சலசலப்பு நடைபெற்றது.

ஆனால் சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் ஜனவரி 26ஆம் தேதி நடந்த தாக்குதல் சம்பவம் என்று பகிரப்படுகிறது. இதில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.

இந்த வீடியோவை உள்நோக்கத்துடன் பரப்புவதைத் தவிர்ப்பது நல்லது என்று தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்,'' என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும், சனிக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த சம்பவம் குறித்துப் புலனாய்வு செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திலகர் நகர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் அரிதாக நடைபெறும் தகராறு என்றும் இதே சம்பவம் ஒரே இனத்தைச் சேர்ந்த நபர்களுக்கு இடையில் நடந்திருந்தால் கவனம் பெற்றிருக்காது என்றும் திருப்பூர் காவல் ஆணையர் கூறுகிறார். 

இந்தச் சம்பவத்தில் தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுக்கு, தொழில் போட்டி, வேலைவாய்ப்பு, முன்விரோதம் என எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

ஆனால் இதுபோன்ற அரிதான சம்பவங்கள்கூட இரண்டு தரப்பு மக்கள் மத்தியில் விரிசல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, திருப்பூர் நகரத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்களிடம் இதுகுறித்துப் பேசி வருவதாகவும், இரண்டு தரப்பு தொழிலாளர்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை நடத்தும் திட்டம் இருப்பதாகவும் கூறினார்.

சமூக ஊடகங்களில் தொடர்ந்து இந்த வீடியோ பரவி வருவதால், பல அரசியல் தலைவர்களும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய 'நாம் தமிழர்' தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பூரில் தமிழர்களை வட இந்தியர்கள் தாக்கியதாகச் சொல்லப்படும் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

''இந்தச் சம்பவம் ஒரு தொடக்கம்தான். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பல இடங்களில் நடக்கும்போதுதான் நீங்கள் சீமானை தேடுவீர்கள். இதுபோன்ற நபர்களை ஆதரிக்க இங்கு ஒரு கூட்டம் இருக்கிறது. இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொன்ன கூட்டம் அது,'' என்று பேசியுள்ளார்.

"தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவதாக வெளியான வீடியோ தவறானது" - திருப்பூர் காவல்துறை

பட மூலாதாரம்,TIRUPUR POLICE

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட மாநிலத்தவர்களின் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது", என்று தெரிவித்தார்.

மேலும், "தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காட்டிற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள். கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா பணிகளிலும் பெருமளவு வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்க்கிறார்கள்," என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

''நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், வெளி மாநிலத்தவர்கள் சென்று தங்க, அந்த மாநிலங்களின் உள் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள வட மாநில தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த சர்ஜித் இந்த வீடியோ மோசமான உதாரணம் என்கிறார்.

''

42 minutes ago, ஏராளன் said:

திருப்பூர் மோதல் வீடியோ:  வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது - மேலும் பலருக்கு வலைவீச்சு

திருப்பூர்  மோதல் - 2 பேர் கைது
5 மணி நேரங்களுக்கு முன்னர்

திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் - தமிழ் இளைஞர்கள் சண்டை தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் அருகே திலகர் நகர் பகுதியில் வட மாநில - தமிழ் இளைஞர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிலை அதிகரித்து வருவது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்வினை புரிந்தனர். 

வட மாநிலத் தொழிலாளர்கள் மீதான கசப்புணர்வைத் தூண்டும் வகையில் இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் காவல்துறை உடனே முன்வந்து விளக்கம் அளித்தது.

"வட மாநிலத் தொழிலாளர்கள் - தமிழ் இளைஞர்கள் மோதல் நடந்தது ஜனவரி 14-ம் தேதி. டீக்கடையில் புகைப் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறுதான் இருதரப்பு மோதலாக உருப்பெற்றுள்ளது. ஆனாலும், சிறு சலசலப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. யாருக்கும் காயம் இல்லை," என்று நிலைமையை தெளிவுபடுத்தியதோடு, இந்த வீடியோவை உள்நோக்கத்துடன் பரப்பக் கூடாது என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டது. 

தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுக்கு, தொழில் போட்டி, வேலைவாய்ப்பு, முன்விரோதம் என எந்தத் தொடர்பும் இல்லை என்றும் திருப்பூர் காவல்துறை தெளிவுபடுத்தியது. 

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக, பிகாரைச் சேர்ந்த ரஜத்குமார், பரேஷ்ராம் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

அவர்கள் மீது ஐபிசி 147 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148 (ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294 (பி) பொது இடத்தில் அவதூறாகப் பேசி  பிரச்சனை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மோதல் - 2 பேர் கைது

பட மூலாதாரம்,TIRUPUR POLICE

இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளிட்ட வேறு சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோதல் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள் யார் என்பது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பிபிசி தமிழிடம் பேசிய போது, "ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது. தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் நிகழும் முன்னேற்றங்கள் உடனுக்குடன் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்." என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c72rv75qyv7o

நேற்று, வட மாநில தொழிலாளர் இல்லை, அது தவறான செய்தி என்றார்கள்.
இன்று… இரு வட மாநில தொழிலாளர் கைது என்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சி என்றாலே… பொய்களை பரப்பி,  
மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2023 at 18:25, தமிழ் சிறி said:

நேற்று, வட மாநில தொழிலாளர் இல்லை, அது தவறான செய்தி என்றார்கள்.
இன்று… இரு வட மாநில தொழிலாளர் கைது என்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சி என்றாலே… பொய்களை பரப்பி,  
மக்களை முட்டாளாக்கி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

அடிச்சா திருப்பி அடிக்கும் ப‌ழ‌க்க‌ம் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளிட‌ம் இல்லை சிறி அண்ணா

த‌மிழ‌க‌ம் ஒன்றும் த‌மிழீழ‌ம் போல் வீர‌ம் விளைந்த‌ ம‌ண் கிடையாது

கூத்தாடிக‌ளின் ப‌ட‌ங்க‌ளுக்கு பால் ஊத்தும் த‌றுத‌லைக‌ள் வாழும் மானில‌ம் தான் த‌மிழ் நாடு

சீமானின் பேச்சை கேட்டு ப‌ல‌ர் திருந்தின‌ மாதிரியும் தெரியுது அவ‌ர்க‌ள் திருந்த‌ இன்னும் நிறைய‌ இருக்கு 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பையன்26 said:

பையா,  தமிழக இளைஞர்களை….
திட்டமிட்டே போதையிலும், சினிமாவிலும் மினக்கெட வைத்துள்ளது திராவிடம்.
அதிலும்… பலருக்கு, தமிழே தெரியாதது பெரும் சோகம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

பையா,  தமிழக இளைஞர்களை….
திட்டமிட்டே போதையிலும், சினிமாவிலும் மினக்கெட வைத்துள்ளது திராவிடம்.
அதிலும்… பலருக்கு, தமிழே தெரியாதது பெரும் சோகம்.

நித‌ர்ச‌ன‌ உண்மை
த‌மிழ் நாட்டில் க‌ட‌சியாய் நின்ர‌ போது
பாம‌சிக்கு போனேன் இந்த‌ மாத்திரை இங்கு கிடைக்குமா என்று கேட்டேன் அத‌ற்கு அவ‌ர் ஆங்கில‌த்தில் பதில் சொன்னார்.............நான் உங்க‌ளிட‌ம் த‌மிழில் தானே கேட்டேன் ஏன் என‌க்கு ஆங்கில‌த்தில் சொல்லுறீங்க‌ள் என்று..............பிற‌க்கு அவ‌ர் வாயால் த‌மிழ் வ‌ந்த‌து...............ஆனால் அங்கு இருக்கும் ப‌ல‌ருக்கு ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌தை பெருமையாய் நினைக்கின‌ம் நான் அத‌ அவ‌மான‌மாய் பார்க்கிறேன்...............என்னை பாதுகாத்துகொள்ளும் அள‌வுக்கு ஆங்கில‌ம் க‌ற்று இருக்கிறேன்

த‌மிழில் அழ‌காய் கேட்க்க‌ ஆங்கில‌த்தில் ப‌தில் சொல்லுவ‌து பெருமை இல்லை பெருத்த‌ அவ‌மான‌ம்

எழுத்து பிழை விட்டு த‌மிழ் எழுதினாலும் என‌க்கு எல்லாமே என் த‌மிழ் தான் ❤️🙏🙏🙏

அத‌ற்கு பிற‌க்கு தான்
டெனிஸ் ம‌ற்றும் ஆங்கில‌ம் 😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பையன்26 said:

தமிழகத்தில் திரையுலகம் பொதுவாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே தமிழில் மட்டும் கதையுங்கள் என சினித்திரையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'உதவி செய்யுங்கள் ஐயா, நாங்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் வீடு, நிலம், உடமைகள் எல்லாம் இழந்தோம் எங்கள் வயது வந்த பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதால் தங்களால் இயன்ற பொருள் பணம் உதவி செய்ய வேண்டுகிறோம் டாக்டர். ரூ. 101 கொடுத்துள்ளார் ரூ. 5 Smar 29% Dsuon Uision பகொடுத்து தவ வேண் டுகிறோம் NAMMA TIRUPPUR MEMES 1 *திருப்பூர் மக்கள்'

உதவி செய்யுங்கள். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட மாநில தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? எங்கிருந்து எதற்காக தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்?

தமிழ்நாட்டில் வேலை செய்யும் பிற மாநில தொழிலாளர்கள் குறித்து தற்போது அதிகம் பேசப்படுகிறது.

சென்னை போன்ற மாநகரங்களில் முதலில் காணப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவி, தெற்கே கன்னியாகுமரி மீன்பிடி தொழில் வரையிலான எல்லா தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன என்ற பேச்சுகளை அதிகம் கேட்க முடிகிறது.

பொதுவாக வட இந்தியத் தொழிலாளர்கள் என்று சொல்லப்பட்டாலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களான இவர்கள் இந்தியாவின் எந்தெந்த மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்? எதற்காக வருகின்றனர்? உண்மை நிலவரம் என்ன என்று பார்ப்போம்.

தற்போதைய சூழலில் புலம்பெயர் தொழிலாளிகள் ஒரிசா, பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் என பொதுவாக பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாநிலங்களிலிருந்து அதிகம் வருகிறார்கள்.

இவர்களை பொதுவாக "வட இந்திய தொழிலாளர்கள்" என்ற பெயரில் அழைத்தாலும் அதிகம் கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களாகவே இவர்கள் உள்ளனர்.

காரணம் என்ன?

புலம்பெயர்தலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன அதில் முக்கிய காரணம் வேலை வாய்ப்பு. மேலும் சில இடங்களில் இயற்கை பேரழிவு, சாதிய பாகுபாடு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளற்ற நிலை ஆகிய காரணங்களுக்காக வெளி மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பணி செய்கின்றனர்.

தனியாக வருவது, பழகியவர்கள் தெரிந்தவர்கள் மூலமாக வருவது, முகவர்கள், நிறுவனங்களால் பணியமர்த்தப்படுவது என பல்வேறு வழிகளில் இத்தொழிலாளர்கள் வருகின்றனர்.

பெரும்பாலும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுவந்த வெளி மாநில தொழிலாளிகள் தற்போது பெரிய உணவகங்கள் தொடங்கி சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வண்டி, நட்சத்திர விடுதிகள், சலூன் கடைகள் பல்வேறு சிறு வணிக நிறுவனங்களிலும் வேலைக்கு அமர்ந்துவிட்டனர். சிற்றுண்டிக் கடை போன்ற சிறுவணிகங்களில் அவர்களே ஈடுபடுவதும் உண்டு. மாநகராட்சி தூய்மை பணியில்கூட அவர்களைப் பார்க்கமுடிகிறது. பாரம்பரிய தொழிலாக சொல்லப்பட்ட மீன்பிடி தொழில் வரையிலும், அவர்கள் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் உள்ளனர்.

இதற்கான காரணம் என்பது இருதரப்பிலும் ஏற்பட்ட சூழ்நிலைகளாக உள்ளது. அதாவது ஒருபுறம் வாய்ப்பு தேடி வரும் வெளி மாநில தொழிலாளிகள், மறுபுறம் தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட பணிகள். அதனால் ஏற்பட்ட காலியிடங்கள். இவைகளே தமிழ்நாட்டுக்குள் வடமாநிலத் தொழிலாளிகளின் இந்தப் பரவலுக்குக் காரணம்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, கன்னியாகுமரி மீன்பிடி தொழில் என அனைத்திலும் தமிழ்நாட்டுத் தொழிலாளிகளின் போதாமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை தற்போது வெளி மாநிலத் தொழிலாளர்கள் நிரப்பி வருகின்றனர்.

"தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்ட மக்கள் திருப்பூருக்கு வந்து தங்கி இங்கே பணி செய்தார்கள். ஆனால் இப்போது அடுத்த தலைமுறை மக்கள் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர். திருப்பூரில் தற்போது 50 சதவீத அளவில் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.

திருப்பூர் ஆடை தயாரிப்பு துறையில் சுமார் 3 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் இருக்கின்றனர். தையல், செக்கிங், ப்ராசசிங் என பல்வேறு துறைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்" என தெரிவிக்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம்.

மீன்பிடி தொழிலில் வெளிமாநில தொழிலாளர்கள் ஈடுபடும் நிலை ஏற்பட்டதற்கும் கிட்டதட்ட இதே காரணத்தைதான் முன்வைக்கிறார் தெற்காசிய மீனவர் தோழமையின் பொதுச் செயலாளர் சர்ச்சில்.

"மீன்பிடி தொழில்களில் இருக்கும் கடினங்களையும் ஆபத்துக்களையும் கருதி அடுத்த தலைமுறையினர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க சென்றனர். படித்து அதற்கேற்ப வேலை வாய்ப்புகளை தேடிச் சென்றனர். மீன்பிடி தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது அந்த நேரத்தில்தான் வட இந்திய தொழிலாளர்கள் இங்கே வந்தனர். முதலில் அவர்கள் உதவியாளர்களாக வந்தனர். பின் பயிற்சிப் பெற்று மீனவர்களாக தொழில் செய்ய தொடங்கினர்," என்கிறார் சர்ச்சில்.

தமிழ்நாட்டு மக்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறதா?

வட இந்திய தொழிலாளர்கள் எங்கும் உள்ளனர். அவர்களால் தமிழ்நாட்டு மக்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன என்ற கூற்றுகளை சமீபமாக நாம் பார்க்க முடிகிறது. புலம்பெயர் தொழிலாளிகள் குறித்தான விவாதம் திருப்பூரில் நடந்த தொழிலாளர் மோதல் சம்பவத்திற்குப் பிறகு மேலும் அதிகரித்தன.

ஹோட்டல்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் பல்வேறு இடங்களில் ஏற்படும் ஆட் பற்றாக்குறை காரணமாகவே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதாக நிறுவனங்களின் தரப்பில் சொல்லப்படுகிறது. மறுபுறம் இவர்களுக்கான ஊதியம் என்பது குறைவே. அதுவே நிறுவனங்கள் இவர்கள் பணியில் அமர்த்துவதன் முக்கிய காரணம் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்.

"வட இந்திய தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலியில் பெரும் வித்தியாசம் உள்ளது. அவர்களுக்கு கிட்டதட்ட உள்ளூர் பணியாளர்கள் பெறும் ஊதியத்தில் பாதியளவே ஊதியமாக கிடைக்கிறது. முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை பணியமர்த்துவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது," என்கிறார் அமைப்புச்சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் ஆலோசகர் கீதா.

ஆனால், வேறுபலரும் ஊதிய வேறுபாடு, கேலி வீடியோக்களில் பரப்பப்படுவது போல அவ்வளவு அதிகம் இல்லை என்கிறார்கள்.

மறுபுறம் பல இடங்களில் இவர்களுக்கான பணி குறித்த போதிய தகவல்கள் கொடுக்கப்பட்டு அழைத்து வரப்படுவதில்லை என்கின்றார் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பணியாற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த பால முருகன்.

"பல புலம்பெயர் தொழிலாளிகள் ஏமாற்றித்தான் அழைத்து வரப்படுகிறார்கள். பெரும்பாலனவர்களுக்கு இவர்களை அழைத்து வரும் முகவர்கள் சரியான தகவல்களை சொல்லி அழைத்து வருவதில்லை," என்கிறார் அவர்.

வெளி மாநிலத்தவர்களை பணியமர்த்துவதன் காரணம் என்ன?

விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருவது, கடின உழைப்பு போன்ற காரணங்களால் வடமாநிலத்தவரை வேலைக்கு எடுப்பதாக நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகின்றன.

பணியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

அதேபோல வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழில்கள் முடங்கும் நிலையும் ஏற்படுகிறது என்கின்றனர்.

"தமிழ் ஊழியர்கள் வாரம் நான்கு நாட்களுக்கு மட்டுமே வேலை செய்கின்றனர். ஆனால் எங்களுக்கு மாதம் 26 நாட்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் உண்டு.

50 சதவீத வேலையாட்கள் தட்டுப்பாடு என்பதால் ஊதியம் கொடுப்பதில் பெரிய வித்தியாசம் இல்லை. வெளிமாநில தொழிலாளர்களை நம்பிதான் நாங்கள் உள்ளோம். அவர்கள் மாதம் பூராவும் வேலை செய்கின்றனர். அவர்களால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவது இல்லை. திருப்பூருக்கு வரும் வட இந்திய தொழிலாளிகள் ஒரு மாதத்தில் தொழிலை கற்று கொள்கின்றனர். அவர்கள் அதிகம் வேலை செய்கின்றனர் அதற்கேற்ப அவர்கள் சம்பாதித்துக் கொள்கின்றனர்.

வட இந்திய தொழிலாளர்கள் இல்லை என்றால் திருப்பூர் இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஆனால் இது ஏதோ ஒரு நாளில் நடந்தது இல்லை. 10 வருடங்களுக்கும் மேல் நடந்த மாற்றம் இது" என்கிறார் முத்துரத்தினம்.

"வட இந்தியர்கள் மீன் பிடிக்க வராத பட்சத்தில் இங்கே பல படகுகள் மீன்பிடிக்க செல்ல முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கிட்டதட்ட ஒவ்வொரு மீன்பிடி படகிலும் 5 முதல் 7 வட இந்தியர்கள் வரை இருப்பார்கள்," என்கிறார் சர்ச்சில்.

ஒரு தொழிலாளி மாநிலம்விட்டு மாநிலம் செல்லும்போது அவரின் உழைப்பு அதிகமாகிறது. முழுத்திறனையும் வெளிப்படுத்துகின்றனர். ஒருவர் அவரின் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு இடம்பெயரும்போது அவரின் பணித்திறன் அதிகரிக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது இந்தியாவுக்கான ஒரு நேர்மறையான விஷயம் என்கிறார் முன்னாள் அமைச்சரும் மனித வள நிறுவனத்தை நடத்தியவருமான மாஃபாய் பாண்டியராஜன்.

மனித உரிமை மீறல்கள்

கட்டுமானப் பணியாளார்கள்

பட மூலாதாரம், Getty Images

இவர்களுக்கான வாய்ப்புகள் இங்கே வழங்கப்பட்டாலும் இவர்களுக்கான குறைந்த ஊதியம், அதிக பணி நேரம், பணிபுரியும் இடத்தின் சூழ்நிலை மற்றும் குடியிருப்பு வசதி குறைபாடுகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து புலம்பெயர் தொழிலாளார்கள் நலனுக்காக செயல்படும் செயற்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.

"பிகார் போன்ற மாநிலங்களில் 60 லிருந்து 100 ரூபாய் வரை கூலி தரப்படுகிறது. இங்குள்ள ஊதியம் அவர்களுக்கு சொர்க்கம். ஆனால் இங்கு கேள்வி என்ன வென்றால் அங்கு பெறுவதைக் காட்டிலும் அதிகம் பெறுகிறார்களா என்பது இல்லை. அவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அது கொடுக்கப்படுகிறதா என்பதுதான்," என்கிறார் பால முருகன்

ஊதிய வேறுபாடு சிக்கல் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்னைகளை களைய "கட்டுமான வேலைகளில் பெரிய முதலாளிகளாக இருந்தாலும் சிறிய முதலாளிகளாக இருந்தாலும் 50 சதவீத அளவில் உள்ளூர் பணியாளர்களுக்கு அதில் வேலை கொடுக்க வேண்டும். அந்த வகையில் உள்ளூர் தொழிலாளிக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் தொழிலாளிகளுக்கும் நியாயமான ஊதியம் கிடைக்கும்," என்கிறார் கீதா

இதில் என்ன சிக்கல்?

வேலைவாய்ப்பு என்ற கோணத்தை தவிர பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டுக்கு இது வேறொரு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் பால முருகன்.

புலம்பெயர்ந்த தொழிலாளிகள்

பட மூலாதாரம், Getty Images

"ஐந்து ஆண்டு கழித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் கார்டு பெறுவார்கள். ஆனால் இவர்கள் சம்பாதிக்கும் பணம் ஊருக்கு அனுப்பப் படும். இங்கிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு பெரிதாக செலவு செய்வதில்லை. இவர்கள் சம்பாதிப்பது ஊருக்கு அனுப்பப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் பெரிதாக பணப்புழக்கம் இருக்காது. அப்போது இங்குள்ள சிறு வியாபாரங்கள் பெரிதும் அடி வாங்கும். பல கோடி ரூபாய் பணப்புழக்கம் இங்கு குறையும். உடனடியாக அதன் தாக்கம் தெரியாது. மிக மோசமாக உள்ளூர் வியாபாரம் பாதிக்கப்படும். பொருளாதாரம் புத்தாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும். எனவே அதற்கு உண்டான விஷயங்களை இப்போதே கவனிக்க வேண்டும்." என்கிறார் அவர்.

தீர்வு என்ன?

"தமிழ்நாட்டிலும் மக்களுக்கு வேலை தேவைப்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் ஏன் வருவதில்லை என்றால், இங்கு படித்தவர்களுக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இருந்து வருகிறவர்களுக்கு இங்கு கிடைக்கும் ஊதியமே ஒப்பீட்டளவில் அதிகமாகத் தெரிகிறது," என்கிறார் பாலமுருகன்.

"அரசுப் பணிகளிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகின்றனர் என்பதே தற்போது முக்கிய கவலையாக இருக்கிறது. அரசுப் பணிகளில் உள்ளூர் ஆள்களுக்கே 90 சதவீதம் வாய்ப்பு தரவேண்டும் என்ற அரசாணை முந்தைய அரசாங்கம் கைவிட்டது. மாநில மக்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது ஒரு நியாயமான விஷயம்," என்கிறார் கீதா.

தமிழ்நாட்டில் தற்போது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் தகவல்களை பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர அவர்களுக்கான நான்கு சேவை மையங்களும் இயங்கி வருவதாக தெரிவிக்கிறார் பால முருகன்.

ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரியும் மாநிலத்தோடு சமூக ரீதியாக ஒன்றிணைய மாநில அரசு மற்றும் மத்திய அரசு பயிற்சிகளை வழங்க வேண்டும், மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் மாஃபாய் பாண்டியராஜன்.

"தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி கட்டாயமாக 200 நாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் தினக்கூலிக்காக தொழிலாளர்கள் புலம்பெயர்கின்றனர். எனவே இந்த பிரச்னையை அதன் வேரிலிருந்து நாம் அணுக வேண்டும்,"என்கிறார் கீதா.

https://www.bbc.com/tamil/india-64593021

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.