Jump to content

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டி20 பெண்கள் உலக கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

18 பிப்ரவரி 2023, 16:04 GMT
புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்
அமி ஜோன்ஸ்

பட மூலாதாரம்,MIKE HEWITT/GETTY

 
படக்குறிப்பு,

ஒரு பந்தை விரட்டிய இங்கிலாந்து வீராங்கனை அமி ஜோன்ஸ்

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் டி20 பெண்கள் உலகக் கோப்பை பி பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன் சேர்த்திருந்தது. பிறகு பேட்டுடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த இங்கிலாந்து ஆல் ரவுன்டர் நாட் சைவர் பிரன்ட் ஆட்ட நாயகியாக அறிவிக்கப்பட்டார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரிகள் அடங்கும்.

இந்திய அணியில், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவர் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் விளாசியிருந்தார். இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 34 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

 

முன்னதாக இந்திய கேப்டன் ஹரமன்பிரீத் டாஸ் ஜெயித்து பௌலிங்கை தேர்வு செய்திருந்தார்.

இந்திய இன்னிங்ஸ் - ஏமாற்றிய கேப்டன்

இந்தியா பேட் செய்யத் தொடங்கிய உடனேயே, 4வது ஓவரின் கடைசி பந்தை வேகமாக அடிக்க முயன்ற ஷெஃபாலி வர்மா மிட் ஆன் திசையில் பிடிபட்டார். இங்கிலாந்து பௌலர் பெல் வீசிய பந்து அது. 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் ஷெஃபாலி.

ஸ்மிருதி மந்தனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஸ்மிருதி மந்தனா

இதையடுத்து 10-வது ஓவரின் முதல் பந்தில் நம்பிக்கை வீரர் ஜெமிமா ரோட்ரிக்யூஸ் 13 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.

ரேணுகா சிங் தாக்கூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

5 விக்கெட் வீழ்த்திய ரேணுகா சிங் தாக்கூர்

அடுத்த ஓவரிலேயே இந்தியாவுக்கு பேரிடி காத்திருந்து. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் வெறும் 4 ரன் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்திருந்தார். அது இந்திய அணியின் மூன்றாவது விக்கெட். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 63. இங்கிலாந்து பௌலர் சாரா கிளென் 4 ஓவர் வீசி, 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். லாரன் பெல், சோஃபி எக்லஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.

இங்கிலாந்து இன்னிங்ஸ் - ஜொலித்த சைவர், அமி

இந்திய கேப்டன் முதல் பௌலிங்கை தேர்வு செய்தது மிகச்சரி என்று தோன்றும்படி இங்கிலாந்தின் பேட்டிங் சொதப்பலாகத் தொடங்கியது. இந்திய அணியின் ரேணுகா முதல் ஓவரை வீச வந்தார். மூன்றாவது பந்திலேயே இங்கிலாந்து ஓப்பனர் டேனி வேட் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தமது அடுத்த இரண்டு ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரேணுகா.

தமது இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே அவர், இங்கிலாந்தின் அலிஸ் கேப்சேவை பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார். தமது மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் இங்கிலாந்தின் மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்வுமன் சோஃபியா டங்க்ளேவையும் வீழ்த்தினார் ரேணுகா. முதல் 5 ஓவரில் இங்கிலாந்து 29 ரன்கள் மட்டுமே சேர்த்து மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது.

விளாசும் பிரன்ட்

பட மூலாதாரம்,MIKE HEWITT/GETTY

 
படக்குறிப்பு,

விளாசும் நாட் சைவர் பிரன்ட்

இதன் பிறகு நிதானித்துக்கொண்ட இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் - நேட் சைவர் பிரன்ட் இணை கவனமாக விளையாடி விக்கெட்டைப் பாதுகாத்ததோடு வேகமாக ரன் குவிக்கவும் தொடங்கினர். 10 ஓவரில் இங்கிலாந்து 72 ரன்கள் சேர்த்தது. இந்த இணை 4வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. ஹீதர் நைட் 23 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ஆனால், நேட் சைவர் தன் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் இங்கிலாந்து 151 ரன்களை எடுத்தது. இந்தியாவின் ரேணுகா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிகா பாண்டே தமது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார்.

https://www.bbc.com/tamil/sport-64689854

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

பையா... இந்த மகளிர்  போட்டியில்...   ஸ்ரீலங்கா, இந்தியா ஒன்றும் பங்கு பற்றவில்லையா. அடுத்தமுறை இந்த ஐசிசி  மகளிர்  போட்டி நடக்கும் போது...   @குமாரசாமி தாத்தாவையும், அமெரிக்கன் @ஈழப்பிரியன் தாத்

பையன்26

இல‌ங்கை ம‌க‌ளிர் அணி ப‌ல‌ம் இல்லா அணி த‌மிழ் சிறி அண்ணா   இந்தியா ம‌க‌ளிர் அணி ப‌ல‌மா அணி........ ஆண்க‌ளுக்கு வைக்கும் ஜ‌பிஎல்ல‌ போல‌ பெண்க‌ளுக்கும் ப‌ல‌ கோடிய‌ கொட்டி பெரிய‌ தொட‌ர் வைக

ஈழப்பிரியன்

இன்னும் துடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்த்து தாத்தா என்று அழைத்ததற்கு எமது அணியின் சார்பில் மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மைதானத்தில் பந்து பொறுக்கும் @பையன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ம‌க‌ளிர் அணி இங்லாந் ம‌க‌ளிர் அணியிட‌ன் தோல்வி.............😏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான போட்டியில் அற்புத ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றியீட்டியது இங்கிலாந்து

19 FEB, 2023 | 07:12 AM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென். ஜோர்ஜ் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (18) நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி 151 ஓட்ட இலக்கை தக்கவைத்து 11 ஓட்ட வெறறியை ஈட்டிக் கொடுத்தனர்.

இதன் மூலம் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலாவது தோல்வியைத் தழுவியது.

அத்துடன் இந்தியாவுக்கு எதிரான மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து 6 - 0 என தனது வெற்றிக் கணக்கை  அதிகரித்துக் கொண்டது.

_2__1802_amy_jones_eng_v_ind_w_t20wc.jpg

இன்றைய போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் தனது 3ஆவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டிய இங்கிலாந்து கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்துகொண்டுள்ளது.

ஸ்ம்ரித்தி மந்தனாவும் ரிச்சா கோஷும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு உற்சாகத்தைக் கொடுத்த போதிலும் அது போதுமானதாக அமையவில்லை. ரேனுகா சிங்கின் 5 விக்கெட் குவியலும் பலன்தராமல் போனது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது.

ஐந்தாவது ஓவரில் இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தபோது 3ஆவது விக்கெட் சரிந்தது. ஆனால், அதன் பின்னர் நெட் சிவர்-ப்றன்ட், அணித் தலைவி ஹீதர் நைட், அமி ஜோன்ஸ், சொஃபி எக்லஸ்டோன் ஆகியோர் சுமாரான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

_1__1802_nat_sciver-brunt_eng_vs_ind.jpg

நெட் சிவர்-ப்றன்ட் 50 ஓட்டங்களையும் ஹீதர் நைட் 28 ஓட்டங்களையும் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பைக் கொடுத்தனர்.

தொடர்ந்த நெட் சிவர்-ப்றன்ட்டும் அமி ஜோன்ஸும் 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர இங்கிலாந்து நல்ல நிலையை அடைந்தது.

_3__1802_renuka_singh_ind_vs_eng.jpg

அமி ஜோன்ஸ் 27 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 40 ஓட்டங்களைக் குவிக்க, சொஃபி எக்லஸ்டோன் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இந்திய பந்துவீச்சில் ரேணுகா சிங் 4 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றி, இந்த வருட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய வீராங்கனை ஏஷ்லி கார்ட்னருக்கு அடுத்ததாக 2ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களுக்கு 140 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

_5__1802_richa_gosh_ind_vs_aus.jpg

ஒரு பக்கத்தில் ஸ்ம்ரித்தி மந்தனா அதிரடியாக ஓட்டங்களைப் பெற்றபோதிலும் மறுபக்கத்தில் விக்கெட்கள் சரிந்தது இந்தியாவுக்கு பாதகத்தைத் தோற்றுவித்தது.

ஷபாலி வர்மா (8), ஜெமிமா ரொட்றிகஸ் (13), அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (4) ஆகியோர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்து விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

மந்தனாவும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வீராங்கனை ரிச்சா கோஷும் 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தபோதிலும் மந்தனா ஆட்டமிழந்ததும் இந்தியாவின் வெற்றி வெகு தூரத்துக்கு சென்றுவிட்டது.

41 பந்துகளை எதிர்கொண்ட மந்தனா 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார். ரிசச்சா கோஷ் 34 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் சாரா க்லென் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/148539

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதியில் முதல் அணியாக நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா

Published By: NANTHINI

19 FEB, 2023 | 01:41 PM
image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 8ஆவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் தனது 4 போட்டிகளிலும் வெற்றியீட்டிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டது.

வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென் ஜோர்ஜ் விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை (18) இரவு நடைபெற்ற 1ஆம் குழுவுக்கான போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலம் அரை இறுதியில் விளையாட அவுஸ்திரேலியா தகுதி பெற்றது.

அப்போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக தென் ஆபிரிக்கா அரை இறுதி வாய்ப்பை பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் தென் ஆபிரிக்கா ஒரு வெற்றியை மாத்திரம் பெற்றுள்ளது. 

நேற்றைய போட்டியில் தஹ்லியா மெக்ரா குவித்த அதிரடி அரைச்சதம் அவுஸ்திரேலியாவின் வெற்றியின் முக்கிய பங்காற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப வீராங்கனைகளான லோரா வுல்வார்ட் (16), தஸ்மின் ப்றிட்ஸ் (45) ஆகிய இருவரும் 9 ஓவர்களில் 54 ஓட்டங்களை பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

_1__1802_tasmin_britz_sa_vs_aus.jpg

அதன் பின்னர் தென் ஆபிரிக்காவின் விக்கெட்கள் சரிய அதன் ஓட்டவேகம் சுமாராகவே இருந்தது.

ஆரம்ப வீராங்கனைகளை விட அணித் தலைவி சுனே லூயிஸ் 20 ஓட்டங்களையும் நாடின் டி கேர்க் ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

_2__1802_geogia_wareham_aus_vs_sa.jpg

பந்துவீச்சில் ஜோர்ஜியா வேயார்ஹாம் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 16.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அவுஸ்திரேலியா 7ஆவது ஓவரில் 40 ஓட்டங்களை பெற்றிருந்தபோது 3ஆவது விக்கெட்டை இழந்ததால் தென் ஆபிரிக்கா மகிழ்ச்சியில் துள்ளியது.

ஆனால், ஏஷ்லி கார்ட்னர், தஹ்லியா மெக்ரா ஆகிய இருவரும் நிதானத்துடனும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்கச் செய்தனர்.

தஹ்லியா மெக்ரா 33 பந்துகளில் 10 பவுண்டறிகளுடன் 57 ஓட்டங்களை குவித்தார்.

_3__1802_tahlia_megrath_aus_vs_sa.jpg

அதனைத் தொடர்ந்து களம் புகுந்த க்றேஸ் ஹெரிஸ் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 4 ஓட்டங்களை பவுண்டறி மூலம் பெற்றுக்கொடுத்தார். மறுபக்கத்தில் ஏஷ்லி கார்ட்னர் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

_4__1802_ashleigh_gardner_aus_vs_sa.jpg

https://www.virakesari.lk/article/148565

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச‌ரி இல‌ங்கை ம‌க‌ளிர் அணி நாட்டுக்கு திரும்ப‌ வேண்டிய‌து தான்...........நியுசிலாந் ம‌க‌ளிர் அணியோடு ப‌டுதோல்வி..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்திடம் படுதோல்வி அடைந்து மகளிர் டி20 உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது இலங்கை

Published By: DIGITAL DESK 5

20 FEB, 2023 | 09:22 AM
image

(நெவில் அன்தனி)

பார்ல், போலண்ட் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற 1ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்திடம் 102 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்த இலங்கை, உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.

அதேவேளை, இரண்டு அணிகளதும் கடைசி லீக் போட்டியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கான வாயிலை அண்மித்துள்ளது.

இக் குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் பங்காளாதேஷிடம் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்தால் நியூஸிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் அவ்வணி அவுஸ்திரேலியாவுடன்  குழு 1 இலிருந்து 2ஆவது அணியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைக் குவித்தது.

_4__1902_bernadine_bezuidenhout_nz_vs_sl

ஆரம்ப விக்கெட்டில்  பேர்னடின் பெஸுய்டென்ஹூட்டுடன்  46 ஓட்டங்களைப் பகிர்ந்த சுஸி பேட்ஸ், 2ஆவது விக்கெட்டில்  அமேலியா கேருடன் மேலும் 110 ஓட்டங்களைப்  பகிர்ந்து நியூஸிலாந்து அணியைப் பலமான நிலையில் இட்டார்.

இந்த 3 துடுப்பாட்ட வீராங்கனைகளும் இலங்கை பந்துவீச்சாளர்களை இலகுவாக எதிர்கொண்டு ஓட்டங்களை வேகமாக குவித்தனர்.

_3__1902_suzie_bates_nz_vs_sl.jpg

அமேலியா கேர் 48 பந்துகளில் 6 பவுண்டறிகளுடன் 66 ஓட்டங்களையும் சுஸி பேட்ஸ் 49 பந்துகளில் 6 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களையும் பேர்னடின் பெஸுய்டென்ஹூட் 20 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்ற அச்சினி குலசூரிய, இனோக்கா ரணவீர ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

_2__1902_amelia_kerr_nz_vs_sl.jpg

163 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 15.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்து முதல் சுற்றுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

அணித் தலைவி சமரி அத்தபத்து (19), மல்ஷா ஷெஹானி (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

_5__1902_nz_vs_sl.jpg

நியூஸிலாந்து பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட 6 வீராங்கனைகளும் விக்கெட்களைக் கைப்பற்றினர். அவர்களில் அமேலியா கேர் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லீ தஹூஹூ 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/148609

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை வீழ்த்திய போதிலும் அரை இறுதி வாய்ப்பை இழந்தது மேற்கிந்தியத் தீவுகள்

Published By: DIGITAL DESK 5

20 FEB, 2023 | 01:53 PM
image

(என்.வீ.ஏ.)

பாகிஸ்தானுக்கு எதிராக பார்ல், போலண்ட் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டியது.

தனது கடைசி லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டியபோதிலும் அவ்வணியினால் அரை இறுதிக்கு முன்னேற முடியாமல் போனது.

இதன் காரணமாக அக் குழுவிலிருந்து இங்கிலாந்து அரை இறுதியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றது.

_2__2002_aliya_riyas_pak_vs_wi.jpg

இதேவேளை, இந்தியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (20) நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் 2ஆவது அணியாக அக் குழுவிலிருந்து அரை இறுதிக்கு முன்னேறும்.

ஒருவேளை இந்தியா தோல்வி அடைந்து இங்கிலாந்துடனான போட்டியில் பாகிஸ்தான் எதிர்பாராத வெற்றியை ஈட்டினால் பாகிஸ்தானுக்கு அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அது சாத்தியப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும் பாகிஸ்தானும் ஓட்டங்களைப் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன.

அப் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருந்தபோதிலும் நிதா தார், அணித் தலைவி பிஸ்மா மாறூவ் ஆகியோர் ஆட்டமிழந்ததும் மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டத்தின் பிடியை தனதாக்கிக்கொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.

ரஷாடா வில்லியம்ஸ் (30), ஷேர்மெய்ய் கெம்பல் (22), அணித் தலைவி ஹேலி மெத்யூத் (20) ஆகிய மூவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவிச்சில் நிதா தார் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

_3__2002_west_indies_celebrate_vs_pak.jp

117 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆலியா ரியாஸ் (29), நிதா தார் (27), பிஸ்மா மாறூவ் (26) ஆகிய மூவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அவர்களால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போனதால் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ஹேலி மெத்யூஸ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

https://www.virakesari.lk/article/148646

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்வேர்த் லூயிஸ் முறைமையில் அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

Published By: DIGITAL DESK 5

21 FEB, 2023 | 09:56 AM
image

(என்.வீ.ஏ.)

அயர்லாந்துக்கு எதிராக ஜீகுவேபேர்ஹா, சென் ஜோர்ஜ் விளையாட்டரங்கில் திங்களன்று (20) மழையினால் தடைப்பட்ட 2ஆம் குழு போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 5 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, 3ஆவது அணியாக மகளிர் இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா, ஸ்ம்ரித்தி மந்தனாவின் அதிரடி துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைக் குவித்தது.

ஸ்ம்ரித்தி மந்தனா 56 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 87 ஓட்டங்களை விளாசி இந்தியா பலமான நிலையை அடைய உதவினார். சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் மந்தனா பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.

முதலாவது விக்கெட்டில் ஷஃபாலி வர்மாவுடன் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த மந்தனா, 2ஆவது விக்கட்டில் அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோருடன் மேலும் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஷஃபாலி வர்மா 24 ஓட்டங்களையும் ஹார்மன்ப்ரீத் 13 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட ஜெமிமா ரொட்றிகஸ் 19 ஓட்டங்களைப் பெற்றார்.

அயர்லாந்து பந்துவீச்சில் லோரா டிலேனி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

156 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 8.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது கடுங்காற்றுடன் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

அயர்லாந்தின் ஆரம்பம் சிறபப்பாக அமைய வில்லை. அமி ஹன்டர் (1), ஓலா ப்ரெண்டர்காஸ்ட் (0), ஆகிய இருவரும் முதலாவது ஓவரிலேயே ஆட்டம் இழந்தனர். (1 - 2 விக்.)

ஆனால், அதன் பின்னர் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடிய கெபி லூயிஸ், அணித் தலைவி லோரா டிலேனி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு சவால் விடுத்தனர்.

_1__2002_smrithi_mandhana_ind_vs_ire.jpg

அவர்களது துரதிர்ஷ்டம் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் வெற்றி இலக்கு 60 ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்தியா 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

கெபி லூயிஸ் 5 பவுண்டறிகள் உட்பட 32 ஓட்டங்களுடனும் லோரா டிலேனி 3 பவுண்டறிகள் அடங்கலாக 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

இன்று 2 போட்டிகள்

எட்டாவது ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் கடைசி 2 முதலாம் சுற்று போட்டிகள் கேப் டவுனில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.

_3__2002_gaby_lewis_ire_vs_ind.jpg

அவற்றில் 1ஆம் குழுவுக்கான கடைசி முதலாம் சுற்று போட்டி தென் ஆபிரிக்காவுக்கு தீர்மானம் மிக்க போட்டியாக அமையவுள்ளது. பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள அப் போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் அணிகள் நிலையில் 2ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். தோல்வி அடைந்தால் அதன் அரை இறுதி கனவு தகர்ந்துவிடும்.

இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியா ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் நியூஸிலாந்துக்கும் தென் ஆபரிக்காவுக்கும் இடையில் இரண்டாவது அணியாக எந்த அணி அரை இறுதிக்கு செல்லும் என்ற போட்டி நிலவுகிறது.

2002_india_vs_ire.jpg

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

அப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆம் குழுவுக்கான கடைசி முதலாம் சுற்று போட்டி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும். இக் குழுவிலிருந்து இங்கிலாந்தும் இந்தியாவும் அரை இறுதிக்கு தெரிவாகிவிட்டதால் இந்தப் போட்டி அவ்வளவு முக்கியத்துவம் பெறாது.

https://www.virakesari.lk/article/148712

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்மிரிதி மந்தனாவின் எழுச்சியும் இந்திய அணியின் 'டாட்பால்' சிக்கல்களும்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அபிஜீத் ஸ்ரீவஸ்தவா
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 21 பிப்ரவரி 2023, 06:54 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி தனது குரூப் ஆட்டங்களில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்தை வீழ்த்தி 6 புள்ளிகளைப் பெற்றது.

அதே சமயம் பரபரப்பான ஒரு ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. இதனால் குரூப்-2 ல் இந்திய அணி 2 வது இடத்தில் உள்ளது.

இப்போது அரையிறுதியில், மகளிர் கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த அணியான ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே, ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்லும் மிகப்பெரிய போட்டியாளர்களாக கருதப்பட்ட மூன்று அணிகளில் இந்திய அணியும் ஒன்று.

கோப்பையை வெல்ல இறுதிப் போட்டிக்குள் நுழைவது அவசியம். இப்போது அதற்கு ஒரு படி மட்டுமே மீதமுள்ளது.

ஹர்மன்பிரீத் கெளர் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வருவதற்கு, ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வென்றாக வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல.

எனவே டீம் இந்தியா அதிக நம்பிக்கை வைத்திருக்கும் வீராங்கனைகள் பற்றி பேசலாம்.

இவர்களில் சிலர் அரையிறுதியில் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவார்களேயானால், வலுவான கிரிக்கெட் வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணியை கடந்து செல்வது அவ்வளவு சிரமமாக இருக்காது.

பேட்டிங்கில் ஹர்மன்ப்ரீத் புரிந்த சாதனை

அயர்லாந்துக்கு எதிரான பந்தயத்தில், மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் புரிந்த சாதனை பற்றிப்பேசுவோம்.

அந்தப்போட்டியில் ஹர்மன்ப்ரீத் கெளர் 13 ரன்கள் எடுத்து, மகளிர் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த சாதனை படைத்த முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை இவர்தான்.

இவருக்கு முன் மூன்று வீராங்கனைகள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை நியூசிலாந்தின் சூஜி பேட்ஸ் படைத்துள்ளார். இந்த வலது கை ஆல்ரவுண்டர் 143 சர்வதேச டி20 போட்டிகளில் 3820 ரன்கள் எடுத்துள்ளார். இந்த டி20 உலகக் கோப்பையிலும் சூஜி பேட்ஸ் நான்கு இன்னிங்ஸ்களில் 137 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேக் லைனிங் 130 போட்டிகளில் 3346 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மறுபுறம், ஹர்மன்ப்ரீத் கெளருக்கு சற்று மேலே வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீராங்கனை ஸ்டெபானி டெய்லர் 113 போட்டிகளில் விளையாடி 3166 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கெளர் மூவாயிரம் ரன்களை எடுத்துள்ளார். அதனால் அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது. ஆனால் இந்த போட்டியில் அவர் இதுவரை அத்தனை சிறப்பாக மட்டை வீசவில்லை.

மகளிர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுவரை அவர் 16, 33, 4, 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் அதாவது நான்கு இன்னிங்ஸ்களில் 16.50 சராசரியில் மொத்தம் 66 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹர்மன்பிரீத் தனது 150 டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் சராசரியாக 27.83 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இந்த உலகக் கோப்பையில் அவர் எடுத்த ஸ்கோர் சராசரிக்கும் குறைவாக உள்ளது.

ஹர்மன்ப்ரீத் இந்திய அணியின் வலுவான அடித்தளமாக இருந்து வருகிறார். மேலும் அரையிறுதியில் அவரது அதிரடி பேட்டிங் அணிக்கு மிகவும் தேவை.

அரையிறுதிக்கு முன்னதாக, அதிகரிக்கும் டாட் பால் தொடர்பாக இந்திய அணி உழைக்க வேண்டும் என்று அயர்லாந்துடனான போட்டிக்குப் பிறகு அவர் கூறினார்.

இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியின் போது இந்திய அணியின் இன்னிங்ஸில் 51 டாட் பால்கள் இருந்தன. அதாவது அந்த பந்துகளில் எந்த ரன்னையும் அணி எடுக்கவில்லை. அயர்லாந்து அணிக்கு எதிரான டாட் பால் எண்ணிக்கை 41 ஆகும்.

ஒரு சில பேட்டர்களைத் தவிர, ஹர்மன்ப்ரீத் உட்பட எல்லா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஸ்ட்ரைக் சுழற்சி சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக அதை மேம்படுத்த ஏதாவது செய்தாகவேண்டும்.

மகளிர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

உச்சத்தை அடைந்த மந்தனா

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 155 ஸ்டிரைக் ரேட்டில் 87 ரன்கள் எடுத்தார்.

ஸ்மிருதியின் டி20 வாழ்க்கையில் இதுவே சிறந்த ஸ்கோர் ஆகும்.

115 போட்டிகளில் 2800 ரன்களை குவித்த மந்தனாவின் 22வது அரை சதம் இதுவாகும். இங்கிலாந்துக்கு எதிராகவும் அவர் அரைசதம் அடித்தார்.

இந்த உலகக் கோப்பையில் இதுவரை மந்தனா மூன்று இன்னிங்ஸ்களில் 149 ரன்கள் எடுத்துள்ளார், இது இந்த போட்டியில் எந்த வீரரையும் விட அதிகமாகும் அதாவது இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற பெருமையை தற்போது மந்தனா பெற்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. மந்தனா மீண்டும் அரையிறுதியில் இந்தியாவுக்கு வேகமான மற்றும் வலுவான தொடக்கத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷெஃபாலி வர்மா ஃபார்மில் வருவது எவ்வளவு முக்கியமானது?

இளம் வயதிலேயே கேப்டனாக உலகக் கோப்பையை வென்ற அனுபவம் கொண்ட சில நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஷெஃபாலி வர்மாவும் ஒருவர். கடந்த மாதம், 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்காக அவர் வென்றார்.

அவர் அணியில் தொடக்க ஆட்டக்காரராக உள்ளார். ஸ்மிருதி மந்தனாவின் பேட் ஒரு முனையில் அதிரடியாக உள்ள அதே நேரம் ஷெஃபாலியின் பேட் பெரிய ஸ்கோருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது.

ஷெஃபாலி ஃபார்மில் வருவது மிகவும் முக்கியம். இந்த பேட்ஸ்மேனுக்கு இருக்கும் பந்தை அடிக்கும் திறன் அணியில் மிகச் சில வீரர்களுக்கே உள்ளது.

தனது செயல்திறனின் பலத்தில் ஷெஃபாலி 2020 இல் ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். அதே ஆண்டில் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் டாப் ஸ்கோரர் அவர் ஆவார்.

மந்தனா மற்றும் ஷெஃபாலி ஜோடி தொடக்க ஆட்ட ஜோடியாக எவ்வளவு ஆபத்தானது என்பதை அவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் நிகழ்த்திய சாதனையிலிருந்து அறியலாம்.

இதுபோன்ற சூழ்நிலையில் அரையிறுதியில் இந்த ஜோடியிடம் இருந்து வலுவான தொடக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிச்சா கோஷ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அடங்கிய மிடில் ஆர்டர்

இப்போது அணியின் மிடில் ஆர்டருக்கு வருவோம். கேப்டன் ஹர்மன்பிரீத், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரின் தோள்களில் இந்தப்பொறுப்பு உள்ளது.

ஹர்மன்ப்ரீத் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் (53 ரன்கள்) அடித்து ஜெமிமா ஆட்டநாயகி ஆனார். இருப்பினும், அடுத்த மூன்று பந்தயங்களில் 1, 13 மற்றும் 19 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் தொடக்க ஆட்டக்காரராக டி20 யில் அறிமுகமான ஜெமிமா, தற்போது முதல் விக்கெட் வீழ்ந்த பிறகு ஆடுகளத்திற்கு வருகிறார். அதாவது எண்-3 இல் பேட்டிங் செய்கிறார்.

கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் விளையாடிய அல்லது விளையாடிக்கொண்டிருக்கும் இந்த பொஸிஷன் எந்த அணிக்கும் மிகவும் முக்கியமானது. எனவே அரையிறுதியில் அவரது பேட் உறுதியான அதிரடி இன்னிங்ஸை ஆடுவது அவசியம்.

மறுபுறம், ரிச்சா கோஷ் அயர்லாந்திற்கு எதிராக எந்த ரன்னையும் எடுக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தைய மூன்று போட்டிகளில் அவர் ஆட்டமிழக்காமல் 31, 44 மற்றும் 47 ரன்கள் எடுத்தார்.

34 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிச்சா, மெல்ல மெல்ல நம்பகமான பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், போட்டியின் போக்கை மாற்றும் திறன் கொண்டவராகவும் ஆகிவருகிறார். இந்த வேகமான கிரிக்கெட்டில் அவரது ஸ்டிரைக் ரேட்டான 135.55ல் இருந்து இது தெரிகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தாக்கூர் கிரிக்கெட்டில் தனது பெயரை உயர்த்தும் வகையில் பந்துவீசி வருகிறார்.

தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் தனது பந்துகளில் அவருக்கு ஸ்விங் கிடைக்கிறது. மிகப்பெரிய பேட்ஸ்மேன்களை திணறச்செய்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார்.

இமாச்சலப் பிரதேசத்தின் ஷிம்லாவைச் சேர்ந்த ரேணுகா தாக்கூர், தனது வாழ்க்கையில் 31 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி அதே எண்ணிக்கையிலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ரேணுகா இந்த உலகக் கோப்பையின் முதல் நான்கு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் கொடுத்து 5 பேரை அவுட் ஆக்கினார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதன் மூலம், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக ஐந்து விக்கெட்டுகளை (மகளிர் அல்லது ஆண்) வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ரேணுகாவின் இந்த ஸ்விங் பந்துகள் விக்கெட்டைத் தாக்கும் போது அவை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். அவர் அரையிறுதியிலும் எதிரணியை திணற அடித்து விக்கெட்டுகளை சாய்ப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தப் போட்டியில் இதுவரை இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்ரகருக்கும் இது பொருந்தும்.

இந்தப் போட்டியில் தனது 100 விக்கெட்டுகளை நிறைவு செய்து அனுபவமிக்க பந்துவீச்சாளராக திகழும் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மாவும் அணியில் இருக்கிறார். இந்தப் போட்டியில் இதுவரை அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய வீராங்கனைகளின்ஆட்டத்திறனைப் பொருத்து அரையிறுதியின் முடிவு இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c2q9gp3z0rwo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா இங்லாந் தென் ஆபிரிக்கா இந்தியா
இவை சிமி பின‌லில்

இந்தியா ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் KAUR தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு...........இவ‌ள் ராசியான‌ க‌ப்ட‌ன் கிடையாது.............வ‌ரும் ப‌ந்தை திண்டு த‌ள்ளும் பிற‌க்கு அவுட் ஆகி போகும்..............இதே நிலை தொட‌ர்ந்தால் சிமி பின‌லில் தோத்து நாடு திரும்புவின‌ம்.............இந்தியா ம‌க‌ளிர் அணியின் சுழ‌ல் ப‌ந்து ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரை இறுதியில் தென் ஆபிரிக்கா ; மொத்த எண்ணிக்கையில் இங்கிலாந்து சாதனை

Published By: DIGITAL DESK 5

22 FEB, 2023 | 10:46 AM
image

(என்.வீ.ஏ.)

பங்களாதேஷுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற 1ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா, கடைசி அணியாக  அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

அரை இறுதியில் விளையாட வேண்டுமானால் கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற அழுத்தத்துக்கு மத்தயில் களம் இறங்கிய வரவேற்பு நாடான தென் ஆபிரிக்கா சகல துறைகளிலும் பங்களாதேஷை விஞ்சும் வகையில் விளையாடி வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்துகொண்டது.

2102_tasmin_brits_sa_vs_bang.jpg

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 114 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களைப் பெற்று மிகவும் இலகுவாக வெற்றிபெற்றது.

ஆரம்ப வீராங்கனைகளான லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைக் குவித்து வெற்றி இலக்கைக் கடக்க உதவினர்.

லோரா வுல்வார்ட் 56 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 66 ஓட்டங்களுடனும் தஸ்மின் ப்றிட்ஸ் 4 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் பெரும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி நிகார் சுல்தானா 30 ஓட்டங்களையும் சோபனா மோஸ்தரி 27 ஓட்டங்களையும்    பெற்று துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசித்தனர்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் மாரிஸ்ஆன் கெப் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அயாபொங்கா காகா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

சாதனை நிலைநாட்டிய இங்கிலாந்துக்கு இலகுவான வெற்றி

2102_danny_wyatt_eng_vs_pak__1_.jpg

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கடைசி முதல் சுற்றுப் போட்டியில் சாதனை நிலைநாட்டிய இங்கிலாந்து 114 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஓட்டங்கள் ரீதியாக ஈட்டப்பட்ட மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

இதன் மூலம் தோல்வி அடையாத 2ஆவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. மற்றைய குழுவில் அவுஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாகத் திகழ்கிறது.

2102_amy_jones_eng_vs_pak.jpg

பாகிஸ்தானுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களைக் குவித்தது.

இதன் மூலம் மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவுசெய்து இங்கிலாந்து புதிய சாதனை நிலைநாட்டியது.

தாய்லாந்துக்கு எதிராக கென்பெராவில் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்கா 3 விக்கெட்களை இழந்து குவித்த 195 ஓட்டங்கள் இதற்கு முன்னர் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையாக இருந்தது.

இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 5ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 33 ஓட்டங்களாக இருந்தபோது அதன் 2ஆவது விக்கெட் சரிந்தது.

எனினும் நெட் சிவர் ப்றன்ட் 2 சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இங்கிலாந்தை பலப்படுத்தினார்.

3ஆவது விக்கெட்டில் டெனி வியட்டுடன் 74 ஓட்டங்கபை; பகிர்ந்த நெட் சிவர் ப்ரன்ட், 5ஆவது விக்கெட்டில்  அமி ஜோன்ஸுடன் மேலும் 100 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

நெட் சிவர் ப்றன்ட் 40 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 12 பவுண்டறிகள, ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களை விளாசினார்.

டெனி வியட் 33 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களையும் அமி ஜோன்ஸ் 31 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் பாத்திமா சானா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

மிகவும் கடினமான 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படு தோல்வியுடன் தென் ஆபிரிக்காவிலிருந்து விடைபெறுகிறது.

பின்வரிசை வீராங்கனை தூபா ஹசன் 28 ஓட்டங்களைப் பெற்றார். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவர் அநாவசியமாக இரண்டாவது ஓட்டத்தைப் பெற விளைந்து ரன் அவுட் ஆனார். அவருக்கு அடுத்ததாக பாத்திமா சானா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் பாகிஸ்தானின் நிலை மேலும் சங்கடத்திற்குள்ளாகி இருக்கும்.

இங்கிலாந்து பந்துவீச்சில் கெத்தரின் சிவர் ப்ரன்ட் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சார்ளி டீன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அரை இறுதிகள்

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 1ஆவது அரை இறுதிப் போட்டி வியாழக்கிழமையும் (23), இங்கிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2ஆவது அரை இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமையும் (24) கேப் டவுன் விளையாட்டரங்கில் நடைபெறும்.

https://www.virakesari.lk/article/148811

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
172/4
(15.3/20 ov, T:173) 135/5

IND WMN need 38 runs in 27 balls.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய‌ ம‌க‌ளிர் அணியின‌ர் தோல்வி

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு இந்திய‌ன் ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் ந‌ல்லா விளையாடி இருந்தா..............ர‌ன் அவுட் ஆகாம‌ இருந்தா அவுஸ்ரேலியாவை வென்று இருக்க‌லாம்

 

இன்று இந்தியாவுக்கு ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கிடைக்க‌ வில்லை.......................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T20 மகளிர் WC: தோனி பாணியில் ரன் அவுட்டான ஹர்மன்ப்ரீத்; கானல் நீரான இந்தியாவின் உலக கோப்பை கனவு

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

23 பிப்ரவரி 2023

மகளிர் டி20 உலக கோப்பை கனவு இந்திய அணிக்கு இந்த முறையும் நனவாகவில்லை.

விறுவிறுப்பான அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது இந்திய அணி. 2019 உலக கோப்பை அரையிறுதியில் தோனி ரன் அவுட்டானது பலருக்கும் நினைவில் இருக்கலாம். அதே பாணியில் ஹர்மன் ப்ரீத் கவுர் ரன் அவுட்டானது ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக புரட்டிப் போட்டது.

'பலம்' வாய்ந்த ஆஸ்திரேலியா

அரையிறுதிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா விளையாடிய கடைசி 21 டி20 ஆட்டங்களில் ஒன்றை தவிர்த்து அனைத்திலுமே வெற்றி கண்டிருக்கிறது. அந்த ஒரு ஆட்டம் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. அதுவும் சூப்பர் ஓவரில்தான்.

கடைசியாக நடந்த 2020 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா. அந்த கசப்பான சம்பவத்திற்கு மாற்று மருந்தை தேட இந்தியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விவரித்தனர்.

 

5 முறை டி20 உலக கோப்பையை வென்றது மட்டுமின்றி, 2018ல் இருந்து இதுவரை ஆஸ்திரேலியா 63 டி20-ல் 54 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி ஒரு பலம் வாய்ந்த அணியாக வலம் ஆஸ்திரேலியாவை அரையிறுதி ஆட்டத்தில் எதிர்கொண்டு வருகிறது இந்திய அணி.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா.

ராதா யாதவ் வீசிய 8வது ஓவரில் ஹீலே 25 ரன்களில் விடைபெற்றார். ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 52 ரன்களில் முடிவுக்கு வந்தது.

பின்னர் வந்த கேப்டன் லேன்னிங் மூனேவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் இந்திய அணி பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். மூனே 54 ரன்களில் விடைபெற, அடுத்து வந்த கார்டனர் தனது பங்கிற்கு 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து விடைபெற்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் லேன்னிங் 49 ரன்கள் எடுத்தார்.

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் 'சொதப்பல்' பவுலிங்

இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடவில்லை. கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 103 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் இந்தியா 61 ரன்களை வாரி வழங்கியது. குறிப்பாக டெத் ஓவர்களில் இந்தியா கடுமையாக சொதப்பியது.

கடைசி ஓவரை வீசிய ரேனுகா, முதல் பந்தில் யார்கர் போட முயற்சிக்க, அது ஃபுல்டாசாக மாறியது. லேனிங் எந்தவித பொறுமையும் காட்டாமல் சிக்சருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தும் ஃபுல்டாசாக மாறா, அதையும் சிக்சருக்கு தட்டிவிட லேனிங் தயங்கவில்லை. அந்த ஓவரில் மட்டும் ஆஸ்திரேலியா 18 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ரேனுகா 4 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.

இதேபோல ஃபீல்டிங்கில் இந்தியா கணிசமான ரன்களை இழந்தது. லேன்னிங் 1 ரன் எடுத்திருந்தபோது அவர் வழங்கிய கேட்சையும் இந்தியா நழுவவிட்டது. இதேபோல மூனே 36 ரன்கள் எடுத்திருந்தபோதும் கேட்ச் வாய்ப்பை நழுவிப்போனது. இந்தியாவின் மோசமான ஃபீல்டிங்கால் இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் ரன்களை சேர்க்க உதவினர்.

தோனி பாணியில் ரன் அவுட்டான ஹர்மன்ப்ரீத்

கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

173 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தது.

ஷஃபாலி வர்மா 9, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிரிதி மந்தனா 2, யாஷ்டிகா பாடியா 4 என ஒற்றை இலக்க ரன்களில் டாப் ஆர்டர்கள் சரிந்தன. இந்தியா 28 ரன்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்தது.

ஜெமிமா ரோட் ரிகஸ் - கேப்டன் ஹர்மன் ப்ரீத் ஜோடி ஆஸ்திரேலியாவை துணிச்சலுடன் எதிர்கொண்டனர். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 93 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் ரோட்ரிகசும் ஹர்மன் ப்ரீத் கவுரும் பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்தனர்.

ஆட்டம் இப்படியே நகர்ந்தால் இந்தியா வென்றுவிடும். இதில் யாரேனும் ஒருவர் கடைசி வரை நின்று ஆட வேண்டும் என வர்ணனையாளர் குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே 43 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெமிமா ஆட்டமிழந்தார்.

32 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹர்மன் ப்ரீத், 52 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். 2019 50 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான தோனி ரன் அவுட்டானது பலருக்கும் நினைவில் இருக்கும்.

அதே பாணியில் 2 ரன்கள் ஓட முயற்சித்தபோது ஹர்மன் ப்ரீத்தின் பேட் கிரவுண்டில் இடித்து நூலிழையில் ரன் அவுட்டானார்.

ஹர்மன் ப்ரீத் மட்டுமின்றி இதனை யாருமே துளியும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடியில் இந்தியாவின் ஆட்டம் தலைகீழாக மாறியது. அதிருப்தியடைந்த

ஹர்மன் ப்ரீத், தனது பேட்டை கீழே வீசி, களத்தில் இருந்து ஏமாற்றத்துடன் விடைபெற்றார்.

போராடி தோற்ற இந்திய அணி

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

ஹர்மன் ப்ரீத்தை வெளியேற்றிய பிறகு ஆஸ்திரேலியாவின் கை ஓங்கத் தொடங்கியது. ரிச்சா கோஷ் 14 ரன்களில் விடைபெற, அவரைத் தொடர்ந்த வந்த வீராங்கனைகளாலும் அதிரடி காட்ட முடியவில்லை.

தனி ஆளாக போராடிய தீப்தி சர்மா 20 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 167 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 7 முறையாக மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது ஆஸ்திரேலிய அணி.

https://www.bbc.com/tamil/articles/c9emk3nm7ggo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

ஹர்மன்ப்ரீத் கவுர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

24 பிப்ரவரி 2023, 04:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர்

அந்த ரன் அவுட் இந்திய ரசிகர்களின் மனதை மீண்டும் ஒருமுறை உடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியொரு ரன் அவுட்டையும், தோல்வியையும் இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ரன் அவுட் ஆகி வெளியேறும்போது மட்டையைத் தூக்கி எறிந்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் ஹர்மன்ப்ரீத் கவுர். இது அவரது வாழ்நாளில் மிகவும் மோசமான நாள்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. தன்மீதே அவர் கோபம் கொள்ள நேர்ந்தது.

“இதைவிட துரதிருஷ்டசாலிகளாக நாங்கள் இருக்க முடியாது” என ஹர்மன்ப்ரீத் சிங் தனது பேட்டியின்போது குறிப்பிட்டார். தேவையே இல்லாமல் தாம் ரன் அவுட் ஆன விதத்தைத்தான் அவர் ‘கெடுவாய்ப்பு’ என்ற வகையில் பேசினார்.

ஆட்டம் முடிந்த பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்புக்கு கறுப்புக் கண்ணாடி அணிந்து வந்த அவர், “எனது அழுகையை நாடு பார்க்க வேண்டாம் என்பதற்காக” கண்ணாடி அணிந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

 

சமூக வலைத்தளங்களிலும் இந்திய ரசிகர்கள் அவரைப் போலவே தங்களது துயரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும் இந்திய பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகமுக்கியமான நாள்தான். வெல்வதற்கு வாய்ப்புக் குறைவு என்று கருதப்பட்ட ஆஸ்திரேலிய அணிக்கு தோல்விபயத்தைக் காட்டிவிட்டுத்தான் இந்தியப் பெண்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

173 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்துவதற்கு வேகத்தை ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத்தும் இந்திய அணிக்குக் கொடுத்தார்கள். 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது அவர்களது பேட்டிங்.

ஹர்மன்ப்ரீத் 52 ரன்கள் எடுத்திருந்தபோது, ரன்அவுட் ஆனதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கத் தொடங்கியது. இரண்டாவது ரன்னை எடுப்பதற்கு ஹர்மன்ப்ரீத் ஓடியபோது க்ரீஸுக்கு வெளியே பேட் சிக்கிக் கொண்டதால் அவர் ரன் அவுட் ஆனார்.

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி வீராங்கனைகள் முக்கியமான கேட்ச்களை தவறவிட்டது, மோசமான பீல்டிங் எனத் தொடங்கி ஒரு ரன் அவுட்டில் வாய்ப்பை படிப்படியாக இழந்தார்கள்.

கடைசி 2 ஓவர்களில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இருந்தபோதுகூட கடைசி வரிசை வீராங்கனைகளால் அந்த ரன்களை எடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் வியக்கவைத்த பீல்டிங்கும் இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

கடைசியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்துக்குச் செல்வது ஆஸ்திரேலிய அணிக்கு இது ஏழாவது முறை. கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவைத் தோற்கடித்து கோப்பை வென்றது ஆஸ்திரேலியா.

“இது சிறந்த வெற்றிகளுள் ஒன்று” என்று ஆஸ்திரேலிய கேப்டன் லேன்னிங் கூறினார்.

என்ன நடந்தது?

அரையிறுதிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா விளையாடிய கடைசியாக ஆடிய 21 டி20 ஆட்டங்களில் ஒன்றை தவிர்த்து அனைத்திலுமே வெற்றி கண்டிருக்கிறது. அந்த ஒரு ஆட்டம் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. அதுவும் சூப்பர் ஓவரில்தான்.

கடைசியாக 2020-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா. அந்த கசப்பான சம்பவத்திற்கு மாற்று மருந்தை தேட இந்தியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றே கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விவரித்தனர்.

5 முறை டி20 உலக கோப்பையை வென்றது மட்டுமின்றி, 2018ல் இருந்து இதுவரை ஆஸ்திரேலியா 63 டி20-ல் 54 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி ஒரு பலம் வாய்ந்த அணியாக வலம் ஆஸ்திரேலியாவை அரையிறுதி ஆட்டத்தில் எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனாலும் அது ஒன்றும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக அமையவில்லை.

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்த்தது. ராதா யாதவ் வீசிய 8-ஆவது ஓவரில் ஹீலே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 52 ரன்களில் முடிவுக்கு வந்தது.

பின்னர் வந்த கேப்டன் லேன்னிங் மூனேவுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் இந்திய அணி பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். மூனே 54 ரன்களில் விடைபெற, அடுத்து வந்த கார்டனர் தனது பங்கிற்கு 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து விடைபெற்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் லேன்னிங் 49 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவின் சுமார் பவுலிங், மோசமான பீல்டிங்

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடவில்லை. கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 103 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் இந்தியா 61 ரன்களை வாரி வழங்கியது. குறிப்பாக டெத் ஓவர்களில் இந்தியா கடுமையாக சொதப்பியது.

கடைசி ஓவரை வீசிய ரேனுகா, முதல் பந்தில் யார்கர் போட முயற்சிக்க, அது ஃபுல்டாசாக மாறியது. லேனிங் எந்தவித பொறுமையும் காட்டாமல் சிக்சருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தும் ஃபுல்டாசாக மாற, அதையும் சிக்சருக்கு தட்டிவிட லேனிங் தயங்கவில்லை.

அந்த ஓவரில் மட்டும் ஆஸ்திரேலியா 18 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ரேனுகா 4 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.

இதேபோல ஃபீல்டிங்கில் இந்தியா கணிசமான ரன்களை இழந்தது. லேன்னிங் 1 ரன் எடுத்திருந்தபோது அவர் வழங்கிய கேட்சையும் இந்தியா நழுவவிட்டது. இதேபோல மூனே 36 ரன்கள் எடுத்திருந்தபோதும் கேட்ச் வாய்ப்பை நழுவிப்போனது. இந்தியாவின் மோசமான ஃபீல்டிங்கால் இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் ரன்களை சேர்க்க உதவினர்.

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவை திணறவைத்த இந்திய ஜோடி

173 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தது.

ஷஃபாலி வர்மா 9, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிரிதி மந்தனா 2, யாஷ்டிகா பாடியா 4 என ஒற்றை இலக்க ரன்களில் டாப் ஆர்டர்கள் சரிந்தன. இந்தியா 28 ரன்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்தது.

ஜெமிமா - கேப்டன் ஹர்மன் ப்ரீத் ஜோடி ஆஸ்திரேலியாவை துணிச்சலுடன் எதிர்கொண்டது. 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 93 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் ரோட்ரிகசும் ஹர்மன் ப்ரீத் கவுரும் பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்தனர்.

ஆட்டம் இப்படியே நகர்ந்தால் இந்தியா வென்றுவிடும். இதில் யாரேனும் ஒருவர் கடைசி வரை நின்று ஆட வேண்டும் என வர்ணனையாளர் குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே 43 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெமிமா ஆட்டமிழந்தார்.

அங்குல இடைவெளியில் பறிபோன இந்திய அணியின் வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியர்களின் மனதை உடைத்த ‘ரன் அவுட்’

32 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹர்மன் ப்ரீத், 52 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். 2019 50 ஓவர் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான தோனி ரன் அவுட்டானது பலருக்கும் நினைவில் இருக்கும்.

அதே பாணியில் இரண்டாவது ரன்னை ஓடினார் ஹர்மன்ப்ரீத், கிரீஸுக்குள் பேட்டை வைக்க முயன்றபோது அதற்கு சில அங்குலங்கள் முன்னதாகவே பேட் தரையில் இடித்துவிட்டு முன்னோக்கி நகரவில்லை. இதனால் கிரீஸுக்குள் செல்வதற்கு முன்பாகவே ரன் அவுட் ஆனார்.

ஹர்மன் ப்ரீத் மட்டுமின்றி இதனை யாருமே துளியும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடியில் இந்தியாவின் ஆட்டம் தலைகீழாக மாறியது. அதிருப்தியடைந்த

ஹர்மன் ப்ரீத், தனது பேட்டை கீழே வீசி, களத்தில் இருந்து ஏமாற்றத்துடன் விடைபெற்றார்.

அதன் பிறகு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தாலும் கடைசி நிலை ஆட்டக்காரர்களால் அதை வெற்றியாக மாற்ற முடியவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c19zlyxrr3go

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின‌லில் தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்ரேலியா

 

முத‌ல் விளையாட்டில் இல‌ங்கை ம‌க‌ளிர் அணியிட‌ம் தோத்த‌ தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி பிற‌க்கு அனைத்து விளையாட்டிலும் வென்று பின‌லுக்கு வ‌ந்து விட்ட‌து

 

பின‌லில் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி வென்றால் ம‌கிழ்ச்சி...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது தென் ஆபிரிக்கா

25 FEB, 2023 | 07:04 AM
image

(நெவில் அன்தனி)

கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபது 20 மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்து இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா, உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிபெற்று  வரலாறு படைத்தது.

இருபாலாருக்கும் நடத்தப்படும் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்கா விளையாட தகுதிபெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகலதுறைகளிலும் பிரகாசித்த தென் ஆபிரிக்கா, இந்த வெற்றி மூலம் இங்கிலாந்தின் வெற்றி அலைக்கு முடிவு கட்டி அவ்வணியை உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேற்றியது.

லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் அயபொங்கா காகா, ஷப்மின் இஸ்மாயில் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் தென் ஆபிரிக்காவை வெற்றியுடன் கூடிய வரலாறுபடைக்க உதவினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்தது.

_2__2402_tasmin_britz_sa_vs_eng.jpg

லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த லோரா வுல்வார்ட் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 53 ஓட்டங்களையும் அடுத்து ஆட்டம் இழந்த தஸ்மின் பிறிட்ஸ் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களையும் குவித்தனர்.

மாரிஸ்ஆன் கெப் 13 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

 

இங்கிலாந்து பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

165 ஓட்டங்கள் என்ற எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று 6 ஓட்டங்களால் இறுதி ஆட்ட வாய்ப்பை தவறவிட்டது.

_2a__2403_wyatt_eng_vs_sa.jpg

அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்த டெனி வியட், சொஃபியா டன்க்லி ஆகிய இருவரும் 31 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அதே மொத்த எண்ணிக்கையில் சொஃபியா டன்க்லி 28 ஓட்டங்களுடனும் அலிஸ் கெப்சி ஓட்டம் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டெனி வியட் 11ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

_2b__2402_nat_sciver-brunt_eng_vs_sa.jpg

இதனைத் தொடர்ந்து நெட் சிவர்-ப்றன்ட், அணித் தலைவி ஹீதர் நைட் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

_4__2402_ismail_sa_vs_eng.jpg

ஆனால் நெட் சிவர்-ப்றன்ட் 34 பந்தகளில் 5 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் மேலும் 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. கடைசி ஓவரில் ஹீதர் நைட் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் தென் ஆபிரிக்கா வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அயாபொங்கா காகா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷப்னிம் இஸ்மாயில் 27 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

_3__2402_khaka_sa_vs_eng.jpg

வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கும் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டி கேப் டவுன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/149092

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது தென் ஆபிரிக்கா

25 FEB, 2023 | 07:04 AM
image

(நெவில் அன்தனி)

கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபது 20 மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்து இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா, உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிபெற்று  வரலாறு படைத்தது.

இருபாலாருக்கும் நடத்தப்படும் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்கா விளையாட தகுதிபெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகலதுறைகளிலும் பிரகாசித்த தென் ஆபிரிக்கா, இந்த வெற்றி மூலம் இங்கிலாந்தின் வெற்றி அலைக்கு முடிவு கட்டி அவ்வணியை உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேற்றியது.

லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் அயபொங்கா காகா, ஷப்மின் இஸ்மாயில் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் தென் ஆபிரிக்காவை வெற்றியுடன் கூடிய வரலாறுபடைக்க உதவினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்தது.

_2__2402_tasmin_britz_sa_vs_eng.jpg

லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த லோரா வுல்வார்ட் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 53 ஓட்டங்களையும் அடுத்து ஆட்டம் இழந்த தஸ்மின் பிறிட்ஸ் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களையும் குவித்தனர்.

மாரிஸ்ஆன் கெப் 13 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

 

இங்கிலாந்து பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

165 ஓட்டங்கள் என்ற எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று 6 ஓட்டங்களால் இறுதி ஆட்ட வாய்ப்பை தவறவிட்டது.

_2a__2403_wyatt_eng_vs_sa.jpg

அதிரடி வேகத்தில் ஓட்டங்களைக் குவித்த டெனி வியட், சொஃபியா டன்க்லி ஆகிய இருவரும் 31 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அதே மொத்த எண்ணிக்கையில் சொஃபியா டன்க்லி 28 ஓட்டங்களுடனும் அலிஸ் கெப்சி ஓட்டம் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டெனி வியட் 11ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

_2b__2402_nat_sciver-brunt_eng_vs_sa.jpg

இதனைத் தொடர்ந்து நெட் சிவர்-ப்றன்ட், அணித் தலைவி ஹீதர் நைட் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

_4__2402_ismail_sa_vs_eng.jpg

ஆனால் நெட் சிவர்-ப்றன்ட் 34 பந்தகளில் 5 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததும் மேலும் 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. கடைசி ஓவரில் ஹீதர் நைட் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததும் தென் ஆபிரிக்கா வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அயாபொங்கா காகா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷப்னிம் இஸ்மாயில் 27 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

_3__2402_khaka_sa_vs_eng.jpg

வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கும் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டி கேப் டவுன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/149092

நேற்று விளையாட்டை நேர‌டியா பார்த்தேன் கைபேசியில் இருந்து
என‌து விருப்ப‌ம் தென் ஆபிரிக்க‌ வெல்ல‌னும் என்று.............க‌ட‌சி ஓவ‌ர் வ‌ரை இங்லாந் ம‌க‌ளிர் அணியின‌ர் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணிக்கு ப‌ய‌ம் காட்டிச்சின‌ம் க‌ட‌சி ஓவ‌ரின் இங்லாந்  ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் அவுட் ஆன‌ பிற‌க்கு தான் நின்ம‌தியா இருந்த‌து.............தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி இங்லாந் ம‌க‌ளிர் அணி தான் பின‌லுக்கு வ‌ருவின‌ம்.............இம்முறை தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி த‌ற‌மைய‌ பின‌லில் வெளிக் காட்டினால் கோப்பைய‌ வெல்லலாம்...................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
RESULT
Final, Cape Town, February 26, 2023, ICC Women's T20 World Cup
156/6
(20 ov, T:157) 137/6

AUS WMN won by 19 runs

 

PLAYER OF THE MATCH
Beth Mooney, AUS-W
74* (53)
beth-mooney
ribbon-icon-red.svg
PLAYER OF THE SERIES
110 runs • 10 wkts
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா: 19 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி

வெற்றிக் களிப்பில் ஆஸ்திரேலியா.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வெற்றிக் களிப்பில் ஆஸ்திரேலியா.

26 பிப்ரவரி 2023, 15:08 GMT
புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது.

19 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா கோப்பையைப் பறிகொடுத்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்த நிலையில்

இரண்டாவது பேட் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 137 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.

லாரா வோல்வார்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அதிரடியாக விளையாடிய லாரா வோல்வார்ட், கடைசிவரை நிற்க முடியாமல் வீழ்ந்தபோது.

ஆரம்பத்தில் மிக மெதுவாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா, பிறகு ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாப்பிரிக்காவின் மற்ற எந்த வீரரும் பெரிதாக சோபிக்காத நிலையில், அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த லாரா வோல்வார்ட் அவுட்டானது தென்னாப்பிரிக்காவுக்கு பேரடியானது. அவர் 48 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

இது தவிர ச்லீ ட்ரையான் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆஸ்திரேலியாவின் பெத் மூனி அடித்த 74

பெத் மூனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வெற்றிக்கு வழிகாட்டிய பெத் மூனி

ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார்.

இரண்டு அணிகளிலும் அரையிறுதியில் விளையாடிய அதே அணியே மாற்றமின்றி களமிறங்கியது.

ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்வுமன் பெத் மூனி 74 ரன் அடித்தார்.

இதன் மூலம் பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இரு முறை அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் பெத்.

தென்னாப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில், மரிசானே காப் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

5 முறை உலக சாம்பியனாக இருந்துள்ள, நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 156 ரன் எடுத்து சவாலான இலக்கை நிர்ணயித்தது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

விக்கெட்டை இழந்த ஜார்ஜியா வாரேஹெம்.

ஷப்னிம் இஸ்மாயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வாரேஹெம் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில்.

https://www.bbc.com/tamil/articles/c4nzd3l38evo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌வ‌ர்பிலேக்க‌ தென் ஆபிரிக்க‌ ம‌க‌ளிர் அணி ஆமை வேக‌த்தில் ஆடின‌ ப‌டியால் தான் தோல்வி

தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணியின‌ர் வெல்வ‌து சீ என்டு கிட‌க்கு

 

இனி வ‌ரும் ம‌க‌ளிர் கிரிக்கேட்டில் இந்திய‌ ம‌க‌ளிர் அணியின‌ர் முன் நிலைக்கு வ‌ர‌க் கூடும்...............

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா மகளிர் அணி 6 ஆவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது

26 FEB, 2023 | 11:06 PM
image

(நெவில் அன்தனி)

வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 19 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தோல்வி அடையாத அணியாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியா சுவீகரித்த 6ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும்.

aus_celebrate_6th_world_cup_win.jpg

பெத் மூனியின் அற்புதமான அதிரடி துடுப்பாட்டமும் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் அதன் வெற்றிக்கு அடிகோலின.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 157 ஓட்டங்கள் எனும் கடினமான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

_1__2602_FINAL_Beth_Mooney_of_Australia_

இந்த இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா தனது சொந்த மண்ணில் வெற்றிபெற்று உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாறு படைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 5ஆவது ஓவர் நிறைவில் மொத்த எண்ணிக்கை வெறும் 17 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீராங்கனை தஸ்மின் ப்றிட்ஸ் (10) ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து லோரா வூல்வார்ட், மாரிஸ்ஆன் கெப் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 46 ஓட்டங்களாக உயர்த்தியபோது மாரிஸ்ஆன் கெப் 11 ஓட்டங்களுடனும் மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 8 ஓட்டங்கள் சேர்ந்தபோது அணித் தலைவி சுனே லூஸ் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். (54 - 3 விக்.)

சுனே லுஸ், லோரா வுல்வார்ட் ஆகிய இருவரும் இரண்டு மனதுடன் இல்லாத ஒரு ஓட்டத்தை எடுக்க முயற்சித்தபோது லுஸ்ஸை வுல்வார்ட் திருப்பி அனுப்பினார். ஆனால், துடுப்பாட்ட எல்லைக்கோட்டை வுல்வார்ட் அடைவதற்கு முன்னர் மூனி எறிந்த பந்தைக் கொண்டு அலிசா ஹீலி அவரை ரன் அவுட் ஆக்கினார்

இதன் காரணமாக தென் ஆபிரிக்கா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டதுடன் ஓட்ட வேகமும் கணிசமாக குறைந்தது.

தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு கடைசி 7 ஓவர்களில் மேலும் 84 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அது தென் ஆபிரிக்காவுக்கு இமாலய இலக்காக அமைந்தது.

எனினும் மறுபக்கத்தில் துணிச்சலை வரவழைத்து அதிரடியில் இறங்கிய லோரா வுல்வார்ட் 48 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ் அடங்கலாக 61 ஓட்டங்களைக் குவித்து தென் ஆபிரிக்காவுக்கு சற்று தெம்பை ஊட்டினார்.

_2__2602_Laura_Wolvaardt_of_South_Africa

ஆனால், மொத்த எண்ணிக்கை 109 ஓட்டங்களாக இருந்தபோது அவர் ஆட்டம் இழந்ததும் தென் ஆபிரிக்காவில் முதாலாவது உலகக் கிண்ண சம்பியன் வெற்றிக் கனவு கலைந்து போனது.

லோரா வுல்வார்டும் க்ளோ ட்ரையொனும் 4ஆவது விக்கெட்டில் 35 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவரைத் தொடர்ந்து க்ளோ ட்ரையொன் 25 ஓட்டங்களுடனும் ஆனெக் பொஷ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க தென் ஆபிரிக்காவின் வெற்றி வெகு தொலைவுக்கு சென்றுவிட்டது.

நாடின் டி க்ளார்க் 8 ஓட்டங்களுடனும் சினாலோ ஜஃப்டா 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மெகான் ஷூட், ஏஷ்லி கார்ட்னர், டார்சி ப்றவுன், ஜெஸ் ஜொனாசன் ஆகியோர் கட்டுப்பாட்டுடன் பந்துவீசிதலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

_3__2602_Players_of_Australia_celebrate_

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீராங்கனை பெத் மூனி மிகத் திறமையாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவை பலமான நிலையில் இட்டார்.

அலிசா ஹீலியும் பெத் மூனியும் வேகமாகத் துடுப்பெடுத்தாடி 5 ஓவர்களில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்திருந்தபோதுஅவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அலிசா ஹீலி 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து பெத் மூனியுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஏஷ்லி கார்ட்னர் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து 29 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் க்றேஸ் ஹெரிஸ் (10), அணித் தலைவி மெக் லெனிங் (10) எலிஸ் பெரி (7), ஜோர்ஜியா வெயார்ஹாம் (0) ஆகியோர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க விளைந்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.ஷ

ஆனால், மறுபக்கத்தில் மிக அற்புதமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி 53 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் உட்பட 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

_1__2602_World_Champs_Meg_Lanning_of_Aus

இதனிடையே எலிஸ் பெரியுடன் 15 பந்துகளில் 33 ஓட்டங்களை பெத் மூனி பகிர்ந்ததால் மொத்த எண்ணிக்கை 150 ஓட்டங்களைக் கடந்தது.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: பெத் மூனி, தொடர்நாயகி: ஏஷ்லி கார்ட்னர்.

https://www.virakesari.lk/article/149207

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2023 at 18:32, பையன்26 said:

ப‌வ‌ர்பிலேக்க‌ தென் ஆபிரிக்க‌ ம‌க‌ளிர் அணி ஆமை வேக‌த்தில் ஆடின‌ ப‌டியால் தான் தோல்வி

தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணியின‌ர் வெல்வ‌து சீ என்டு கிட‌க்கு

இனி வ‌ரும் ம‌க‌ளிர் கிரிக்கேட்டில் இந்திய‌ ம‌க‌ளிர் அணியின‌ர் முன் நிலைக்கு வ‌ர‌க் கூடும்...............

பையா... இந்த மகளிர்  போட்டியில்...  
ஸ்ரீலங்கா, இந்தியா ஒன்றும் பங்கு பற்றவில்லையா.
அடுத்தமுறை இந்த ஐசிசி  மகளிர்  போட்டி நடக்கும் போது... 
 @குமாரசாமி தாத்தாவையும், அமெரிக்கன் @ஈழப்பிரியன் தாத்தாவையும்   
யாழ்களத்திலும் ஒரு போட்டி நடத்த சொல்லுங்கோ. 😂 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பையா... இந்த மகளிர்  போட்டியில்...  
ஸ்ரீலங்கா, இந்தியா ஒன்றும் பங்கு பற்றவில்லையா.
அடுத்தமுறை இந்த ஐசிசி  மகளிர்  போட்டி நடக்கும் போது... 
 @குமாரசாமி தாத்தாவையும், அமெரிக்கன் @ஈழப்பிரியன் தாத்தாவையும்   
யாழ்களத்திலும் ஒரு போட்டி நடத்த சொல்லுங்கோ. 😂 

இல‌ங்கை ம‌க‌ளிர் அணி ப‌ல‌ம் இல்லா அணி த‌மிழ் சிறி அண்ணா

 

இந்தியா ம‌க‌ளிர் அணி ப‌ல‌மா அணி........

ஆண்க‌ளுக்கு வைக்கும் ஜ‌பிஎல்ல‌ போல‌ பெண்க‌ளுக்கும் ப‌ல‌ கோடிய‌ கொட்டி பெரிய‌ தொட‌ர் வைக்கின‌ம்...............இனி வ‌ரும் ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையில் இந்தியா கோப்பையை தூக்க‌ வாய்ப்பு இருக்கு.............

இந்த‌ இர‌ண்டு தாத்தாக்க‌ளும் ஆண்க‌ள் என்றால் தான் அசைவின‌ம் பெண்க‌ள் உம் என்று அதே இட‌த்தில்

அது ச‌ரி ம‌க‌ளிர் அணியில் விளையாடும் பிள்ளைக‌ள் இவைக்கு பேத்தி  மாதிரி லொல்🤣😁😂..............

Edited by பையன்26
  • Haha 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.