Jump to content

இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!


Recommended Posts

இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன.

இந்தியா - மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை.

விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான சுகோய் மற்றும் மிராஜ் இரண்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் போர் விமானங்கள்.

மிராஜ் விமானமானது ஃபிரான்ஸ் நாட்டிலிருந்தும், சுகோய் விமானமானது ரஷ்யாவிடமிருந்தும் வாங்கப்பட்டவை.

இரண்டுமே நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டவை. இவை இரண்டுமே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

விமானங்களிலுள்ள கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் தகவல்களை வைத்து விமானத்தில் கோளாறு ஏற்பட்டதா? பறந்த உயரம், வேகம் போன்றவற்றை கொண்டு விபத்திற்கான காரணம் கண்டறியப்படும் என்று கூறப்படுகிறது. விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடங்களில் மீட்புப்பணிகளை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்சியின் போது விபத்துக்குள்ளான இந்திய விமானப் படை விமானங்கள்: ஒரு விமானி பலி

விமான விபத்து

பட மூலாதாரம்,ANI

28 ஜனவரி 2023, 10:20 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய விமானப் படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 போர் விமானங்கள் விபத்திற்கு உள்ளானதில், விமானத்தில் இருந்த 3 விமானிகளில் ஒருவர் பலியானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திய விமானப் படையின் விமான தளத்திலிருந்து, இன்று காலை வழக்கமான பயிற்சிக்காக சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 வகை போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

நடுவானில் அதிவேகமாக பறந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் நடந்துள்ளது.

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் இந்திய விமானப் படை விமானி ஒருவர் பலியானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் ஹனுமந்த் ராவ் சாரதியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக எல்லா வான் போராளிகளும், சகோதரர்களும் நிற்பதாக இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

"குவாலியரில் இருந்து காலையில் புறப்பட்ட மிராஜ் மற்றும் சுகோய் விமானங்களில் மொத்தம் மூன்று விமானிகள் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு விமானியின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன," என்று மொரேனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான சுகோய்-30 போர் விமானத்தில் 2 விமானிகளும், மிராஜ்-2000 விமானத்தில் ஒரு விமானியும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

மொரேனா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசுதோஸ், "விமானங்கள் நடுவானில் மோதின என உறுதி செய்ய மறுத்து விட்டார். இந்திய விமானப் படையின் முழு விசாரணைக்குப் பிறகே விபத்து எப்படி நடந்தது என அறிய முடியும்," என்று அவர் கூறினார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து மிராஜ்-2000 போர் விமானத்தை இயக்கிய விமானியின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மத்திய பிரதேசம் - ராஜஸ்தான் மாவட்ட எல்லையில் நடந்த இந்த விபத்தில் சிதைந்த விமானத்தின் சில பாகங்கள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுகோய்-30, மிராஜ்-2000

பட மூலாதாரம்,BBC/PRAHLAD_SEN

இதுகுறித்து பேசிய பரத்பூர் டி.எஸ்.பி, "காலை 10-10.15 மணியளவில் விமான விபத்து பற்றிய தகவல் கிடைத்தது. இங்கு வந்த பிறகு, அது இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு காணப்படும் பாகங்களை வைத்து, இது போர் விமானமா அல்லது சாதாரண விமானமா என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை." 

இந்த விபத்து குறித்த தகவலை இந்திய விமானப் படை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட டிவிட்டர் பதிவில், விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

விமான விபத்து தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதற்கட்ட தகவல்களை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் கேட்டு அறிந்து கொண்டதாகவும், தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தக் கூறியுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இன்று காலை நடந்த இந்த விபத்து குறித்து உள்ளூர் காவல்துறைக்கு 10 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இது தனியார் ஜெட் என தகவல் வெளியான நிலையில், விசாரணைக்கு பிறகு இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள் என தெரிய வந்துள்ளது.

விமான விபத்து தொடர்பாக தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், உள்ளூர் நிர்வாகம் மூலமாக மீட்பு பணிகளை விரைந்து நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c9e4exppkryo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு வேறு மாநிலங்களில் விழுந்த இந்தியப் போர் விமானங்கள்; ஒரே விபத்தா? அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

https://www.facebook.com/watch/?v=1586504331851544

Link to comment
Share on other sites

கடந்த 5 வருடங்களில் 24 விமானப்படை விமானிகளை இழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.