Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதானி குழுமத்தை அசைத்துப் பார்க்கும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உள்நோக்கம் கொண்டதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதானி குழுமத்தை அசைத்துப் பார்க்கும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உள்நோக்கம் கொண்டதா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,தினேஷ் உப்ரேதி
  • பதவி,பி.பி.சி. செய்தியாளர்
  • 29 ஜனவரி 2023, 03:51 GMT
    புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்
அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் நிதியியல் தடயவியல் நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் குறித்து பல தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த அறிக்கை ஆதாரமற்றது என்று மறுக்கும் அதானி குழுமம் சில கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வகை அச்சம் நிலவி வருகிறது.

அதானி குழுமம் குறித்த இந்த அறிக்கை ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்டது.

இந்தத் தேதி முக்கியமானது, ஏனென்றால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 27 அன்று, கௌதம் அதானியின் நிறுவனம் பங்குச் சந்தையில் இரண்டாம் நிலை பங்குகளை வெளியிட இருந்தது. இதுவொரு சிறிய பிரச்னை அல்ல. இதுவரை இல்லாத மிகப்பெரிய தொகையான ரூ.20,000 கோடிக்கான எஃப் பி ஓ.

இந்திய ஊடகங்களில் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது, அமெரிக்காவின் நிதியியல் தடயவியல் ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க்.

 

கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்திடம் இந்த அறிக்கையில் இந்நிறுவனம் கேட்டுள்ள 88 கேள்விகளே இதற்குக் காரணம். இதில் உள்ள பல கேள்விகள் மிகவும் தீவிரமானவை மற்றும் நேரடியாக அதானி குழுமத்தின் கார்ப்பரேட் நிர்வாகத்தைக் குறிவைக்கக் கூடியவை.

இந்த அறிக்கை வெளியானவுடன், அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. குழுமத்தின் பங்குகளில் பெருமளவில் விற்கப்பட்டன. சிறிது நேரத்தில் அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் ப்ரமோட்டர்களின் சந்தை மூலதனம் பல லட்சம் கோடிகள் இழப்பைச் சந்தித்தது.

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் குறியீட்டின்படி, கௌதம் அதானியின் நிகர மதிப்பு 18 சதவீதம் குறைந்துள்ளது. ஃபோர்ப்ஸ் இதழின் உலக கோடீஸ்வரர்களின் நிகழ்நேரப் பட்டியலின்படி, அவர் பணக்காரர்களின் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஓர் ஆய்வறிக்கையால்,

  • கௌதம் அதானி மற்றும் அவரது குழுமம் கேள்விக்குள்ளாகிறது.
  • அதானி குழுமத்தின் முதலீடுகள் ஆட்டம் காண்கின்றன.
  • அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
  • உலகின் நான்காவது பெரும்பணக்காரராக இருந்த அதானி ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
  • முதலீட்டாளர்களுக்கு அதானி குழுமம் அளித்த விளக்கத்தில் சில கேள்விகளுக்குப் பதில்.

இந்த அறிக்கையை நிராகரித்த அதானி குழுமம், இது முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பின்னணியில் இந்திய தேசியக் கொடியுடன், வீடியோ செய்தியளித்த அதானி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுகேஷிந்தர் சிங், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு அதானி குழுமத்தைத் தொடர்பு கொள்ளவோ அல்லது சரிபார்க்கவோ இல்லை என்று கூறினார்.

அதானி குழுமத்தின் சட்டத் தலைவர் ஜதின் ஜலுந்த்வாலா, “ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக அதானி குழுமம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் தண்டனை பெற்றுத் தரக்கூடிய சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது” என்று கூறினார்.

அதேநேரத்தில், ஹிண்டன்பர்க் நிறுவனம், அதன் அறிக்கை சரியானது என்று வலியுறுத்துகிறது. ஹிண்டன்பர்க், "இதுவரை அதானி எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. மேலும், நாங்கள் எதிர்பார்த்தது போல், அதானி மிரட்டல் தொனியில் பேசுகிறார்," என்று ட்வீட் செய்துள்ளது.

“106 பக்கங்கள், 32,000 வார்த்தைகள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகள் அடங்கிய, இரண்டாண்டு ஆராய்ச்சியில் உருவான அறிக்கையை "ஆராய்ச்சி செய்யப்படாதது" என்று ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் அதானி குறிப்பிட்டார்.

மேலும் இதை அமெரிக்க, இந்திய சட்டங்களின் அடிப்படையில், தண்டனைக்குரிய குற்றமாக இதை எடுத்துச் செல்லும் வழிவகைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.”

"அதானி நிறுவனத்தின் சட்ட நடவடிக்கை அச்சுறுத்தலைப் பொருத்தவரை, நாங்கள் அதை வரவேற்கிறோம் என்பதைத் தெளிவாகக் கூறிக் கொள்கிறோம். எங்கள் அறிக்கை சரியானது என்பதே எங்கள் வாதம். மேலும் எங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட எந்த சட்ட நடவடிக்கையும் ஆதாரமற்றதாகவே இருக்கும்."

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

"அதானி இதில் தீவிரமாக இருந்தால், அவர் அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் ஆவணங்களின் நீண்ட பட்டியல் உள்ளது. சட்ட நடவடிக்கையின் போது அவரிடம் இவற்றைக் கோருவோம்."

இருப்பினும், இந்த 88 கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஹிண்டன்பர்க்கிடமும் இரண்டு முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

முதலாவதாக, தன்னை 'ஆக்டிவிஸ்ட் ஷார்ட் செல்லிங்' நிறுவனம் என்று கூறிக்கொள்ளும் ஹிண்டன்பர்க், கோடிக்கணக்கான லாபம் ஈட்டுவதற்காக அவ்வாறு செய்யவில்லையா என்ற கேள்வி. இரண்டாவது கேள்வி இந்த அறிக்கை வெளியான காலம் குறித்தது. அதானி எண்டர்பிரைசஸின் ரூ.20,000 கோடி எஃப்.பி.ஓ வெள்ளிக்கிழமை வெளியாவதற்கு முன்பு இது வேண்டுமென்றே வெளியிடப்பட்டதா?

ஷார்ட் செல்லிங் என்றால் என்ன?

இது குறித்த முழு விவரங்களையும் புரிந்து கொள்வதற்கு முன், ஹிண்டன்பர்க்கின் நோக்கம் குறித்த ஐயமும் எழுப்பப்படுகிறது.

உண்மையில், அந்நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லர் என்று அழைக்கப்படுகிறது. தன்னிடம் இல்லாத பங்குகளை விற்பது தான் ஷார்ட் செல்லிங் எனப்படும். (இது என்ன, பங்குகளே இல்லாதபோது எதை விற்பது என்று நீங்கள் மலைக்கலாம்.)

ஒரு ஷார்ட் செல்லர், 100 ரூபாய் பங்குகள் 60 ரூபாய்க்கு இறங்கும் என்று எதிர்பார்த்தால், அவர் ஒரு தரகரிடம் கடன் வாங்கி அதை மற்ற முதலீட்டாளர்களுக்கு விற்கலாம், அவர்கள் அதை 100 ரூபாய்க்கு வாங்கத் தயாராக உள்ளனர். இந்தப் பங்கு 60க்குக் குறையும்போது, ஷார்ட் செல்லர் அதை வாங்கித் தரகரிடம் திருப்பித் தருவார். இதன் மூலம் ஒவ்வொரு பங்கிலும் ரூ.40 லாபம் ஈட்ட முடியும்.

ஹிண்டன்பர்க் எழுப்பிய தீவிர கேள்விகள்

அதானி குழுமம் வெளிநாடுகளில் உள்ள தனது பல நிறுவனங்களை வரி ஏய்ப்புக்குப் பயன்படுத்தியதா?

வரி புகலிட நாடுகளில் (மொரீஷியஸ் மற்றும் பல கரீபியன் நாடுகளில் - இந்த நாடுகளில் வணிகத்திற்காக டெபாசிட் செய்யப்பட்ட அல்லது முதலீடு செய்யப்பட்ட பணத்தின் ஆதாரத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும், இந்த நாடுகளில் வரியும் மிகக் குறைவு அல்லது வரியே இல்லை.) அதானி குழும நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட பல ஷெல் நிறுவனங்கள் உள்ளன.

இந்தக் கேள்விக்கு அதானி குழுமம் நேரடியான பதில் எதையும் அளிக்கவில்லை. ஆனால், "கார்ப்பரேட் நிர்வாகத்தைப் பொருத்தவரை, குழுமத்தின் நான்கு பெரிய நிறுவனங்கள் வளர்ந்து வரும் சந்தைகளில் மட்டும் அல்லாமல், அந்தப் பிரிவு அல்லது துறையில் முதல் ஏழு நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளன. " என்று கூறியுள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன்

  • சுங்க வரி ஏய்ப்பு, போலி இறக்குமதி ஆவணங்களைத் தயாரித்து, சட்டவிரோத நிலக்கரி இறக்குமதி என்ற பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், கௌதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநராக ஆக்கப்பட்டது ஏன்?
  • கௌதம் அதானியின் மைத்துனர் சமீர் வோரா ஏன் முக்கியமான பதவியில் இருக்கிறார்?
  • பினாமி நிறுவனங்கள் மூலம் வைர வியாபாரத்தில் அவரது பெயர் அடிபட்ட பிறகும் சமீர் அதானி ஆஸ்திரேலியா பிரிவின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டது ஏன்?

கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியிடம் அரசு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் மூலம் அதானி நிறுவனங்களில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ததாகவும், அதில் ஹவாலா பணமும் அடங்கும் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் மூலம் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்த்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

88 ஹிண்டன்பர்க் கேள்விகளில் 21 கேள்விகள் ஏற்கனவே பொது களத்தில் உள்ளவை என்று அதானி குழுமம் கூறுகிறது. ஹிண்டன்பர்க் தனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கூறுவதும் பொய் என்றும், 2015 முதல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது என்றும் அதானி நிறுவனம் கூறுகிறது.

அதானி குழுமத்தின் சில நிறுவனங்களின் தணிக்கையாளர்கள் குறித்த கேள்வி - அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகியவை மிகச் சிறிய மற்றும் இணையதளம் கூட இல்லாத ஒரு நிறுவனத்தால் தணிக்கை செய்யப்பட்டது. இது நான்கு கூட்டாளிகளையும் 11 பணியாளர்களையும் கொண்டுள்ளது மேலும் இந்த தணிக்கை நிறுவனம் மேலும் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தை மட்டுமே தணிக்கை செய்கிறது. அதானி எண்டர்பிரைசஸ் 156 துணை நிறுவனங்களையும், பல கூட்டு நிறுவனங்களையும் கொண்டிருக்கும் நிலையில், தணிக்கை மேலும் கடினமாகிறது என்று ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.

இதற்கு, அதானி குழுமத்தின் பதில் என்னவென்றால், பட்டியலிடப்பட்ட ஒன்பது நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் ஆறு பெரிய தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்படுகின்றன. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் தணிக்கையை ஆறு பெரிய ஆடிட்டர்களில் ஒருவரிடம் ஒப்படைக்கும் திட்டமும் உள்ளது என்பது தான்.

வருமானம் மற்றும் இருப்புநிலைக் குறிப்பில் குளறுபடி? அதானி குழுமத்தின் சில நிறுவனங்களில் வருமானம் அதிகமாகக் காட்டப்பட்டு இருப்புநிலைக் குறிப்பில் முறைகேடு நடந்ததாக ஹிண்டன்பர்க் தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் பதில் என்னவென்றால், பட்டியலிடப்பட்ட ஒன்பது நிறுவனங்களில் ஆறு, குறிப்பிட்ட துறையின் வருமானம், செலவு மற்றும் விரிவாக்கத்திற்கான செலவினங்களுக்காகப் பரிசீலனையில் உள்ளன. இது வழக்கமான நடைமுறை தான் என்பது தான்.

அதானி குழுமத்திற்கு அதிக கடன் சுமை? ப்ரமோட்டர்கள் பங்குகளை அடகு வைத்துக் கடன் வாங்கியுள்ளதாகவும், அதானி குழுமத்தின் மீது பெரும் கடன் சுமை இருப்பதும் பெரும் பிரச்சனையாக உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமம்: இந்த கடன், ப்ரமோட்டர்கள் வைத்திருக்கும் நான்கு சதவீத பங்குகளுக்கும் குறைவாகவே உள்ளது.

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானி குழுமத்தின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கடன் சுமை குறித்து முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளனர். பங்குச் சந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலின்படி, மார்ச் 2022 இறுதிக்குள், அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை ரூ.1.88 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன.

அதானி குழுமத்தின் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கடன் அவற்றின் பங்குகளை விட அதிகமாக இருப்பதாக Refinitiv குழுமத்தால் வெளியிடப்பட்ட தரவு காட்டுகிறது. அதானி க்ரீன் எனர்ஜிக்கு ஈக்விட்டியை விட 2000 சதவீதம் கடன் அதிகம்.

இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களின் பங்குகள் அதே துறையின் போட்டி நிறுவனங்களை விட மிக அதிக விலையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு 85 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில், "எங்கள் விசாரணை அறிக்கையை நீங்கள் புறக்கணித்தாலும், அதானி குழுமத்தின் நிதிக் கணக்குகளை உன்னிப்பாக ஆய்வு செய்தாலும், அதன் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 85% வரை சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்குக் காரணம் பங்குகளின் மதிப்பீடு வானளவு உயர்ந்தது. " என்று கூறியுள்ளது.

அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி

ஹிண்டன்பர்க் தனது அறிக்கை இரண்டு வருட ஆய்வுக்குப் பிறகு தயாரிக்கப்பட்டதாகவும், இதற்காக அதானி குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் நிர்வாகிகளுடன் மேலும் பலரிடம் பேசி, பல ஆவணங்களின் அடிப்படையில் அமைந்ததாகவும் கூறுகிறது.

முதலீட்டுத் துறையில் பல தசாப்தங்களாக அனுபவம் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. நிதி ஆராய்ச்சி நிறுவனம் அனைத்தும் இப்படிக் கூறிக்கொண்டாலும், இந்த நிறுவனத்தின் சிறப்பு என்ன?

நிறுவனம் தனது இணையதளத்தில் முதலீட்டு முடிவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் மூலங்களிலிருந்து ரகசியத் தகவல்களைப் பற்றிய புலனாய்வு விசாரணை மற்றும் ஆராய்ச்சியையும் நடத்துகிறது என்று எழுதியுள்ளது. இந்த நிறுவனத்தின் பெயருக்குப் பின்னால் ஒரு சிறப்புக் கதையும் உள்ளது.

விபத்தின் பெயரில் நிறுவனம் பெயரிடப்பட்டது ஏன்?

இந்நிறுவனத்திற்கு ஹிண்டன்பர்க் சம்பவத்தின் பெயரிடப்பட்டது. 1937 ஹிண்டன்பர்க் விபத்தில் 35 பேர் இறந்தனர்.

ஹிண்டன்பர்க் ஒரு ஜெர்மன் விமான விண்கலம். இது தீயில் எரிந்து நாசமானது. ஹைட்ரஜன் பலூன்களில் முன்பு விபத்துகள் நடந்ததால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று ஆய்வு நிறுவனம் நம்புகிறது.

இந்த விண்கலத்தில் விமான நிறுவனம் 100 பேரை வலுக்கட்டாயமாக உட்கார வைத்தன. ஹிண்டன்பர்க் விபத்தைப் போலவே, பங்குச் சந்தையில் ஏற்படும் முறைகேடுகள் மீது தாங்கள் ஒரு கண் வைத்திருப்பதாக நிறுவனம் கூறுகிறது. அவற்றை அம்பலப்படுத்தி

முன்னுக்கு கொண்டு வருவதே நோக்கமாகும் என்று அந்நிறுவனம் கூறிக்கொள்கிறது.

ஹிண்டன்பர்கின் செயல்பாடு

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் தன் அறிக்கைகள் மற்றும் பிற நடவடிக்கைகளின் மூலம் முன்னரே பல நிறுவனங்களின் பங்குகளின் விலைகளை இறக்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளம் கூறியுள்ளது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஹிண்டன்பர்க் 2020 ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. அறிக்கை வெளியிடப்பட்ட அடுத்த நாளிலேயே அந்த நிறுவனத்தின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன.

அடுத்த ஆறு மாதங்களில் இந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 26 சதவீதத்துக்கும் மேல் சரிவைப் பதிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதானி குழுமத்தைப் பொருத்தவரை, அறிக்கை வந்த பிறகு, இரண்டு வர்த்தக அமர்வுகளில் நிறுவனங்களின் பங்குகள் 25% க்கும் அதிகமாக சரிந்துள்ளன.

இருப்பினும், அதானி குழுமப் பங்குகளின் ஷார்ட் செல்லர் என்று தன்னைத் தானே ஹிண்டன்பர்க் ஒப்புக்கொண்டுள்ளதால், இந்த ஆய்வு அறிக்கைக்குப் பின்னால் ஒரு 'அஜெண்டா' இருப்பதாக எவரும் எளிதில் கூறலாம் என்று ஒரு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஆசிஃப் இக்பால் கூறுகிறார்.

"இந்த அறிக்கையின் மூலம் ஹிண்டன்பர்க் நேரடியாக நிதி ரீதியாக லாபம் பெறும். எனவே இதற்கு உள் நோக்கம் இருக்கலாம் என்ற வாதம் மறுக்க முடியாதது. ஆனால் அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள், பெரும் கடன்கள், அதிக மதிப்பீடுகள் இவை குறித்து நீண்ட காலமாகப் பல முதலீட்டாளர்கள் பேசிவருகிறார்கள். " என்று ஆசிஃப் கூறுகிறார்.

பங்குச் சந்தை ஆய்வாளர் அருண் கெஜ்ரிவாலும் ஹிண்டன்பர்க்கின் நோக்கம் குறித்துக் கேள்விகளை எழுப்புகிறார். "பங்கு ஆர்வலருக்குப் பணம் சம்பாதிப்பது நோக்கமாக இருக்காது. பங்குகளை ஷார்ட் செய்து, பின்னர் கேள்வி எழுப்புவது வெளிப்படையாக மிரட்டல் போக்கு தான். இதற்கு ஒரு ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது, அதனிடம் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த 88 கேள்விகளை செபியிடம் கேட்டிருக்க வேண்டும்”

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

2020ம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் பெரும் தொழிலதிபர்கள் பிரதமர் மோடி சந்தித்த போது எடுக்கப்பட்ட படம்.

முன்னரே கேள்வி எழுந்தது

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஃபின்ச் குழுமத்தின் நிறுவனமான கிரெடிட்-சைட்ஸ், அதானி குழுமத்திற்கு பெரும் கடன் சுமை இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பல நிறுவனங்களின் பங்குகளின் விலையும் குறைந்துள்ளது.

ஆனால் அதானி குழுமத்தின் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான சில அதிகாரிகளுடன் பேசி, ஒரு மாதத்திற்குள் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

குழுமத்தின் கடன் அளவு, அதை நிர்வகிக்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவில்லை என்று கூறப்பட்டது. குழுமத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு முக்கியமாக கடன் மூலம் நிதி வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்பட்டது.

அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி பவர் ஆகிய இரண்டு குழு நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் அதானி குழும நிர்வாகத் தரப்பு வாதத்தைக் கேட்டபின் கிரெடிட் சைட்ஸ் கடன் தளங்களால் திருத்தப்பட்டன. இருப்பினும், திருத்தம் செய்யப்பட்ட போதிலும், அதானி குழும நிறுவனங்கள் மீதான தங்கள் பரிந்துரைகளை கிரெடிட் சைட்ஸ் மாற்றவில்லை.

கௌதம் அதானிக்கு பின்னடைவு

2022 ஆம் ஆண்டில், உலகின் முதல் 10 பணக்காரர்களில் கௌதம் அதானியின் சொத்து மட்டுமே அதிகரித்துள்ளது.

இதுவரை 2023 ஆம் ஆண்டில், முதல் 10 பணக்காரர்களில் பில்லியன் கணக்கில் நஷ்டத்தைச் சந்தித்த ஒரே நபரும் இவரே. சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என்டிடிவி உட்பட, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்குப் பலியாகின.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின் சமீபத்திய தரவரிசையில், கௌதம் அதானி நான்காவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹிண்டன்பர்க் அறிக்கையால் முதலீட்டாளர்களுக்கு அபாயமா?

அதானி குழுமத்தின் பங்குகளைத் தவிர, இந்த ஆய்வு அறிக்கையின் தாக்கம் சந்தையிலும் காணப்பட்டதாகச் சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அறிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, அதானி குழுமத்திற்கு பதிலாக செபியிடம் இருந்து மக்கள் பதில்களை அறிய விரும்புகிறார்கள்.

இது போன்ற அறிக்கைகள் குறுகிய காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் பங்கு ஆய்வாளர் ஆசிப் இக்பால் கூறுகிறார்.

ஆசிப் கூறுகையில், “நிறுவனத்தின் அடிப்படை வலுவாக இருந்து, இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் சரியாக பதிலளித்தால், முதலீட்டாளர்களின் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். ஆனால், அதானி குழுமம் பெரியதாகவும், அதன் மீதான கடன் சுமை அதிகமாகவும் இருப்பதால், இதன் தாக்கம் சில வங்கிகளின் மீதும் நிச்சயம் இருக்கும்.” என்கிறார்.

சந்தை ஆய்வாளர் அருண் கெஜ்ரிவால் கூறுகையில், "இந்த அறிக்கையின் தாக்கத்தைப் பொருத்தவரை, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ.வில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி. மேலும் வங்கிகளில் இருந்து சில கடனை அடைப்பதற்காக நிறுவனம் இந்த எஃப்.பி.ஓ. வெளியிட்டுள்ள நிலையில், அது பலனளிக்காத சூழலில், சில பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்று விளக்குகிறார்.

அதானி குழுமத்திற்கு நெருக்கடி

பட மூலாதாரம்,REUTERS/AMIT DAVE

ஏயுஎம் கேபிட்டலின் ஆராய்ச்சித் தலைவர் ராஜேஷ் அகர்வால், ஆராய்ச்சி அறிக்கையில் உள்ள சில குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்று நம்புகிறார். "ஹிண்டன்பர்க்கின் ஆய்வு அறிக்கை அதானி குழும நிறுவனங்களில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதனால் பாதிக்கப்படலாம், ஆனால் அவர்கள் சொந்த ஆராய்ச்சி குழுவை வைத்திருப்பதால், அவர்கள் முதலீடு அல்லது விற்பனை முடிவுகள் இது போன்ற அறிக்கைகளின் அடிப்படையில் அமைவதில்லை. " என்று ராஜேஷ் கூறுகிறார்.

ராஜேஷ் கூறுகையில், "கடந்த காலங்களிலும் பங்கு விலைகள் குறித்துக் கேள்விகள் எழுந்தன. ஆனால் இது அதானி குழுமத்தின் பங்குகளிக்கு மட்டுமல்ல. இந்த அறிக்கை முதலீட்டாளர்களின் உணர்வை நிச்சயமாகப் பாதித்துள்ளது. அதனால் தான், அதானி குழுமத்தைத் தவிர, சில வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் விற்கப்பட்டன.” என்றார்.

ஹிண்டன்பர்க்கின் அறிக்கை குறித்து அமெரிக்க முதலீட்டாளர் பில் அக்மேன் தனது பதிலைத் தெரிவித்துள்ளார். ஹிண்டன்பர்க்கின் அறிக்கை 'மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றும் நன்கு ஆய்வு செய்யப்பட்டது' என்று அக்மேன் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், அதானி குழுமத்தை தாமே சுயாதீனமாக ஆய்வு செய்யாததால், அதை முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மற்ற முதலீட்டாளர்களை அவர் எச்சரித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c4n8npnvee2o

Link to comment
Share on other sites

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அரசாங்க நடவடிக்கைகளில் மிகப் பெரிய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தும். அதானியும் மோடியுடன் நெருக்கமானவர். 

அம்பானி, அதானி ஆகியோரின் மொத்த உற்பத்தித் திறன் இந்தியாவின் மொத்த உற்பத்தித் திறனில் 4 வீதமாம். இந்தியாவின் 25 வீதமான புதிய முதலீடுகளை இந்த இருவரின் நிறுவனங்கள் கொண்டுள்ளன. இது கடந்த 4 வருடத்துக்கு முன் நாலில் ஒரு பங்காக இருந்ததாம். இந்த வளர்ச்சி இந்தியாவைப் பொறுத்தளவில் ஆபத்தானது. முதலீடுகளைப் பெறுவதற்கு இவர்கள் நிச்சயம் அரசியல் பலத்தையும் பாவித்திருப்பார்கள்.

பங்குச் சந்தையின் வீழ்ச்சி இவர்களின் சொந்தப் பண இழப்பு இல்லை. இலட்சக் கணக்கான சிறு முதலீட்டாளர்களே பணத்தை இழந்திருப்பார்கள். 

  • Like 1
  • Thanks 1
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஜர்பஜானில் அண்மைய முதலீட்டு கூட்டத்துக்கும் இந்த அறிக்கைக்கும் தொடர்பிருக்குமா .?

22 உயர் அதிகாரிகளில் 17 பேர் உறவுக்காரர்.

75% இற்கும் அதிகமான பங்குகள் உறவினர் பெயரில் தொடங்கிய நிறுவனங்கள் வசம்.

SEBI என்ன பார்த்துகொண்டு இருந்தது.

Nikola Corp இற்கு நடந்த கதிதான் இவருக்கும்.

பாவம் ஒய்வூதிய பணத்தில் முதலிட்ட அப்பாவி உழைக்கும் வர்க்கம். 

LIC இந்த அறிக்கைக்குப்பின்னரும் மலிவுதானே என்று 300 கோடி முதலிட்டதை என்னவென்று சொல்வது.

Short Position மூலம் பெரும் லாபம் காணப்போகிறது Hindenburg Research

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்திய நாடுகளில் தனியார் முதலீடுகளும், தனியார் நிறுவனங்களுமே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கின்றது. ஆனால்  ஒரு சிறிய விடயத்திற்கும் லஞ்சம் கேட்கும் நாட்டில் தனியார் துறை என்பது ஊழல் நிறைந்ததாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முதல்வன் said:

LIC இந்த அறிக்கைக்குப்பின்னரும் மலிவுதானே என்று 300 கோடி முதலிட்டதை என்னவென்று சொல்வது.

lic தான் பலத்த அடிவாங்க போவதாக இந்திய மீடியாக்கள் அலறுகின்றன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

பங்குச் சந்தையின் வீழ்ச்சி இவர்களின் சொந்தப் பண இழப்பு இல்லை. இலட்சக் கணக்கான சிறு முதலீட்டாளர்களே பணத்தை இழந்திருப்பார்கள். 

இப்படியான நாடுகளில் பெரிய அநீதியே இது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?

அதானி vs ஹிண்டன்பர்க் நடப்பது என்ன?

பட மூலாதாரம்,REUTERS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு இது சிக்கலான நேரம். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தையே அசைத்திருக்கிறது.

 இந்த ஆய்வறிக்கை என்ன கூறுகிறது, இதற்கு அதானி குழுமம் கூறும் பதில் என்ன, அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்தா, எஸ்.பி.ஐ. போன்ற வங்கிகளுக்கும், எல்.ஐ.சி.க்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?

106 பக்கங்கள், 32,000 சொற்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்டது ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை. 

 சுருக்கமாகச் சொல்வது என்றால் அதானி குழுமம் "கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க். 

 

 இந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.

 அதானி நிறுவனங்களுக்கு "கணிசமான கடன்" இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமம் ஹிண்டர்பர்க் அறிக்கைக்கு கூறும் பதில் என்ன?

இந்த அறிக்கையை நிராகரித்த அதானி குழுமம், இது முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.

 88 ஹிண்டன்பர்க் கேள்விகளில் 21 கேள்விகள் ஏற்கனவே பொதுத் தளத்தில் உள்ளவை என்று அதானி குழுமம் கூறுகிறது. 

 ஹிண்டன்பர்க் தனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வின் அடிப்படையில் அறிக்கையை தயாரித்திருப்பதாகக் கூறுவது தவறு என்றும், 2015 முதல் வெவ்வேறு தருணங்களில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது என்றும் அதானி நிறுவனம் கூறுகிறது.

 இந்த அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் குற்றச்சாட்டுக்கு ஹிண்டன்பர்க் கூறும் பதில் என்ன?

"ஆய்வறிக்கையில் நாங்கள் முன்வைத்த எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் அதானி குழுமம் பதிலளிக்கவில்லை.’’ என்று கூறியிருக்கிறது ஹிண்டன்பர்க்.

  நாங்கள் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை கைவசம் வைத்திருக்கிறோம். அதானி குழுமம் விரும்பினால், அமெரிக்க நீதிமன்றங்களில் கூட வழக்கு தொடுக்கலாம். அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார்” என்று சவால் விடும் ரீதியில் பதில் கொடுத்திருக்கிறது ஹிண்டன்பர்க்.

ஹிண்டன்பர்க் என்பது என்ன? அது என்ன செய்கிறது?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இயங்குகிறது ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம். 

உண்மையில், அந்நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லர் என்று அழைக்கப்படுகிறது. தன்னிடம் இல்லாத பங்குகளை விற்பது தான் ஷார்ட் செல்லிங் எனப்படும். 

பங்குகளின் விலை குறையும் என்று கணித்தால், அதை குறித்த நேரத்தில் தரகர் மூலமாக வாங்கி விற்று லாபம் ஈட்டுவதைத்தான ஷார்ட் செல்லிங் என்கிறார்கள்.  

முதலீட்டுத் துறையில் பல தசாப்தங்களாக அனுபவம் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுகிறது. 

பங்குச் சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதே தங்களது நோக்கமாகும் என்று அந்நிறுவனம் கூறிக்கொள்கிறது.

 தன் ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகளின் மூலம் முன்னரே பல நிறுவனங்களின் பங்குகளின் விலைகளை இறக்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளம் கூறியுள்ளது.

 ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஹிண்டன்பர்க் 2020 ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

அதானி vs ஹிண்டன்பர்க் நடப்பது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன்

ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமத்துக்கு என்ன பாதிப்பு?

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டே நாட்களில் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அந்த குழுமத்திற்குட்பட்ட 7 நிறுவனங்களின் பங்குகளும் சரமாரியாக சரிந்துள்ளன.

 குறிப்பாக, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோடல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய 3 நிறுவனங்களின் பங்குகளும் 20 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளன. அதானி குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 18.5 சதவீத அளவுக்கு சரிவு கண்டுள்ளன.

 

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தில் அடங்கிய 7 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு சுமார் 3.92 லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அதானி குழுமம் ஒட்டுமொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது சுமார் ரூ. 4.2 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பை இழந்துள்ளது.

பணக்காரர் பட்டியலில் அதானி சரிந்தது ஏன்?

அதானி குழுமத்திற்கு ஏற்பட்டுள்ள சரிவு அதன் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பை கடுமையாக பாதித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 7.87 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

 இரண்டே நாட்களில் அவரது சொத்து மதிப்பு ரூ.1.85 லட்சம் கோடி குறைந்துள்ளது. இதனால், உலக பணக்காரர்கள் வரிசையிலும் ஏழாவது இடத்திற்கு கௌதம் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதானி vs ஹிண்டன்பர்க் நடப்பது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சரிவைத் தடுக்க அதானி குழுமம் எடுத்த நடவடிக்கை பலன் தந்ததா?

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் பங்குச்சந்தையில் பின்னடைவைச் சந்தித்தாலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் திரட்டுவதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி பங்கு வெளியீட்டில் இறங்கியது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் பங்குச்சந்தையில் அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட கடுமையான சரிவு இங்கும் எதிரொலித்தது.

 அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் எதிர்பார்த்தபடி அந்த நாள் அமையவில்லை. பங்குச்சந்தை நிலவரத்தால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்ட, முதல் நாளான வெள்ளிக்கிழமை ஒரு சதவீத பங்குகள் மட்டுமே சப்ஸ்கிரைப் செய்யப்பட்டதாக மும்பை பங்குச்சந்தை இணையதள தரவுகள் கூறுகின்றன. 

எதிர்க்கட்சிகள் என்ன கூறுகின்றன?

 "இந்திய நிதிச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய இரண்டுமே அதானி குழுமத்தில் ஏராளமான முதலீடுகளை செய்துள்ளன. இதனால், அதானி குழுமத்திற்கு எழுந்துள்ள நெருக்கடி நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மையிலும், அந்த பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது," என்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி ராஜா ஆகியோர் இதுபற்றி கவலை வெளியிட்டுள்ளார்கள்.

எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ.யில் மக்களின் சேமிப்புப் பணம் என்னவாகும்?

இதுபற்றிய உறுதியான கருத்தைக் கூறுவதை பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் தவிர்க்கிறார்கள். 

 அதே நேரத்தில் அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எஸ்.பி.ஐ. தலைவர் தினேஷ்குமார் காரா விளக்கம் அளித்துள்ளார். "அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ. முதலீடு ஒன்றும் அச்சப்படத்தக்க அளவுக்கு இல்லை. ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள அளவுக்கும் குறைவாகவே முதலீடு செய்துள்ளோம். அதனால், இப்போதைய நிலையில் எங்களுக்கு எந்தவொரு கவலையும் இல்லை." என்று அவர் கூறியுள்ளார்.

 ஆனாலும், இந்த பங்குச்சந்தை நிகழ்வுகள் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதி, எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்வதில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.300 கோடி, எஸ்.பி.ஐ. தொழிலாளர் ஓய்வூதிய நிதி ரூ.100 கோடி, எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனம் ரூ.125 கோடி என்ற அளவில் அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.

 

அதானி குழும பங்குகளின் வீழ்ச்சியால், எல்.ஐ.சி. நிறுவனம் இரண்டே நாட்களில் ரூ.16,580 கோடி ரூபாயை இழந்துள்ளது. அதாவது, எல்.ஐ.சி. வசமுள்ள அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு அந்த அளவுக்கு இறக்கம் கண்டுள்ளது.

அதானி vs ஹிண்டன்பர்க் நடப்பது என்ன?
 
படக்குறிப்பு,

பங்குச்சந்தை நிபுணர் சோம.வள்ளியப்பன்

பங்குச்சந்தை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இது குறித்து பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பனிடம் பேசிய போது, "எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் அளவில் மிகப்பெரியவை. அதனுடன் ஒப்பிடுகையில், அதானி குழுமத்தில் அவற்றின் முதலீடு என்பது சிறிய அளவுதான். “ என்று கூறியிருக்கிறார்.

 பங்குச்சந்தையின் தற்போதைய நிகழ்வுகளால் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒருவேளை நஷ்டத்தை சந்தித்தாலும், அவை அந்நிறுவனங்களை பெரிய அளவில் பாதிக்காது என்றே கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்தின் எதிர்காலம் என்னவாகும்?

அதானி குழுமத்தை சந்தேக மேகங்கள் சூழ்ந்திருப்பதால், அதில் முதலீடு செய்ய பெரு முதலீட்டாளர்களிடையே தயக்கம் நிலவும் என்று சோம வள்ளியப்பன் கூறுகிறார்.  ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உண்மையா? இல்லையா? என்பதைக் காட்டிலும் அதன் அடிப்படையில் செபி அமைப்போ, இந்திய ரிசர்வ் வங்கியோ என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே மிகவும் முக்கியம்.  அதைப் பொறுத்தே அதானி குழுமம் மற்றும் அதன் பங்குகளின் எதிர்காலம் அமையும் என்கிறார் சோம வள்ளியப்பன்.

https://www.bbc.com/tamil/articles/cxrn2609r6zo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'திட்டமிட்டுக் கொள்ளை' - ஹிண்டன்பர்க் விமர்சனம்; அதானி பங்குகள் மீண்டும் சரிவு

அதானி vs ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் மூன்றாவது நாளாக கடும் சரிவை எதிர்கொண்டுள்ளன. 

அதானி குழுமம் தனது மதிப்பை செயற்கையாக உயர்த்திக் காட்டியது, பங்குச்சந்தைகளில் திருகு வேலைகளை செய்தது என்று ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைத்த குற்றச்சாட்டுகளின் விளைவுகளை இன்றும் பங்குச்சந்தைகளில் காண முடிந்தது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமத்தின் மீது எழுந்துள்ள சந்தேக மேகங்கள் இன்னும் விலகாததால் முதலீட்டாளர்கள் அதன் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்த வண்ணம் உள்ளனர். இதனால், பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையில் இருக்கின்றன. 

அதானி குழுமத்தில் 5 நிறுவன பங்குகளின் மதிப்பு சரிவு

கடந்த புதன்கிழமையன்று ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக இன்றும் அதானி குழுமத்தில் மொத்தமுள்ள 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன. 

 

 

வாரத்தின் முதல் வேலை நாளான இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே, அதிகபட்சமாக அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் பங்குகளின் மதிப்பு ஒரு கட்டத்தில் 20 சதவீதம் சரிந்து, ரூ. 2,347 ஆக இருந்தது. 

அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பங்குகள் 18.66 சதவீதமும், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் 16.11 சதவீதமும், அதானி பவர், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 5 சதவீதமும் சரிவை கண்டன. 

அதானி vs ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் பங்குகள் ஏறுமுகம்

அதானி குழுமத்திற்குட்பட்ட 7 நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எகானமிக் ஜோன் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே ஏறுமுகமாக இருந்தது. 

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகள் 6.15 சதவீதம் ஏற்றம் கண்டு 2,931.95 ரூபாயாக இருந்தது. அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எகானமிக் ஜோன் லிமிடெட் பங்கு மதிப்பு 3.58 சதவீதம் உயர்ந்து 620 ரூபாயானது. 

ஏ.சி.சி., அம்புஜா பங்குகள் ஏற்றம் - என்.டி.டி.வி. பங்குகள் சரிவு

அதானி குழுமம் தவிர, கௌதம் அதானிக்குச் சொந்தமான மற்ற நிறுவனங்களான ஏ.சி.சி. லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டின் பங்குகளும் சிறிய அளவில் ஏற்றம் கண்டன.

அண்மையில் அதானி வாங்கிய என்.டி.டி.வி. லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு குறைந்துள்ளது. 

அதானி எண்டர்பிரைசஸ் கூடுதல் பங்கு வெளியீடு நிலவரம்

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவைச் சந்தித்தாலும் கூட, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்ட கூடுதல் பங்குகளின் விலை குறைக்கப்படவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமையன்று திட்டமிட்டபடி, ரூ.20,000 கோடி மூலதனம் திரட்டும் பொருட்டு கூடுதல் பங்கு வெளியீட்டில் இறங்கிய அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அந்த நாள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. சுமார் ஒரு சதவீத பங்குகள் மட்டுமே சப்ஸ்கிரைப் ஆயின. 

பங்குச்சந்தையில் வீழ்ச்சிப் பாதையில் இருந்த அதானி குழுமத்தில் முதலீடு செய்ய தயக்கம் நிலவியதால், இன்றைய தினம் அதானி எண்டர்பிரைசஸ் வெளியிட்ட கூடுதல் பங்கின் விலை 10 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஒருவேளை கூடுதல் பங்கு வெளியீட்டில் இருந்து கூட அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பின்வாங்கக் கூடும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர். 

ஆனால், கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கிய அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கூடுதல் பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே விட்டுள்ளது. அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தாலும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் மதிப்பு உயர்வு கண்டது. 

அதானி vs ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இந்தியா மீதான தாக்குதல் இது" என அதானி குழுமம் சாடல்

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் இதுவரை எதிர்கொண்டிராத நெருக்கடியில் சிக்கியுள்ளது. பங்குச்சந்தை நிலவரம் சாதகமாக இல்லாத சூழலில், "ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள பொய்யான கூற்றுகள் இந்தியா மீதான  தாக்குதல்" என்று அதானி குழுமம் சாடியுள்ளது. 

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்கு பதிலளித்து 413 பக்கள் கொண்ட விளக்க அறிக்கையை அதானி குழுமம் வெளியிட்டுள்ளது. 

உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும், ஒழுங்கு விதிகள்படி தேவையானவற்றை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 

"இந்திய சட்டங்கள் மற்றும் கணக்கியல் தரநிலைகளின் கீழ் 'தொடர்புடைய தரப்புகள்' எனத் தகுதிபெறும் நிறுவனங்களுடன் நாங்கள் மேற்கொண்ட அனைத்து பரிவர்த்தனைகளும் எங்களால் முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன," என்று தனது அறிக்கையில் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. 

அடிப்படையில் "ஷார்ட் செல்லராகவும்" செயல்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பங்கு விற்பனையில் ஆதாயம் ஈட்டும்  நோக்கில் ஆதாரங்களை குறிப்பிடாமல் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக  அதானி குழுமம் விமர்சித்துள்ளது. 

மேலும் அந்த அறிக்கையில், "இதில் ஆதாயம் பெறும் நோக்கமே நிறைந்துள்ளது. ஷார்ட் செல்லர் என்று ஒப்புக் கொண்டுள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், நிதிச் சந்தையில் பொய்யான தோற்றத்தை உருவாக்கி எண்ணற்ற முதலீட்டாளர்களை நஷ்டப்படுத்தி அதன் மூலம் பெரும் ஆதாயத்தை அடைவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது- 

ஹிண்டன்பர்க் கடும் எதிர்வினை

அதானி குழுமத்தின் விளக்க அறிக்கைக்கு உடனடியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் பதில் கொடுத்துள்ளது. நாங்கள் வெளியிட்ட விரிவான அறிக்கையில் எழுப்பியிருந்த 88  கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. 

"இந்தியா துடிப்பான ஜனநாயக நாடாகவும், பிரகாசமான எதிர்காலம் கொண்ட வல்லரசாக வளரும் நாடாகவும் திகழ்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.  அதானி குழுமத்தால் இந்தியாவின் எதிர்காலம் பின்னுக்குத் தள்ளப்படுவதாக நம்புகிறோம்.

இந்தியாவை திட்டமிட்டுக் கொள்ளையடிக்கையில் அந்நிறுவனம் தன் மீது தேசக் கொடியை போர்த்திக் கொண்டுள்ளது," என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. 

அதானி vs ஹிண்டன்பர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானி குழுமத்தை கலங்கடிக்கும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை

அதானி குழுமம் குறித்து 106 பக்கங்கள், 32,000 சொற்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்ட ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதானி குழுமம் "கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது" என்று குற்றம் சாட்டி, 88 கேள்விகளை முன்வைத்துள்ளது ஹிண்டன்பர்க். 

 மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.

 அதானி நிறுவனங்களுக்கு "கணிசமான கடன்" இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக, பங்குச்சந்தையில் அதானி குழுமம் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. இரண்டே நாட்களில் அதானி குழுமத்தின் மதிப்பு ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாக குறைந்துவிட்டது. அதன் விளைவாக, கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் குறைந்து போனதால், உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

https://www.bbc.com/tamil/articles/c512y7zr1n7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரைசியாவை எதிர்த்து இந்தியா ஒரு அறிக்கை விட்டால் காணும் நிலைமை தலைகீழ் ஆகும் .அதுக்காக அதானி குழுமம் சுத்தமானவர்கள் கிடையாது இன்னமும் வீம்பு காட்டினால் வட இந்தியர்கள் கோமணத்துடன் நிக்க வேண்டி வரும் . இந்த உலக அரசியல் நல்லாத்தான் இருக்கு நாம் அழிந்தபோது வட இந்தியர்கள் இருந்த நிலையில் நான் இருக்கிறேன் பொப் கோனும் கையுமாய் .

ஆனாலும் தமிழ் பிபிசி ஓவராதான் வட இந்தியர்களுக்கு ..... விடுது .இந்தியா வல்லரசு எனும் கனவு காண்பதிலேயே அழிந்து  போகும் பல்வேறு மொழி ஜாதி இனம் கொண்ட தேசம் முதலில் வல்லரசுக்கு உள்ள தகுதி என்ன என்பதை தேடி பார்க்கணும் .

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானி குழுமத்தில் செய்த முதலீட்டின் பலன் என்ன? எல்.ஐ.சி. விளக்கம்

எல்.ஐ.சி.

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 ஜனவரி 2023, 15:09 GMT
புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்

அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த சில நாட்களில் பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், அதில் செய்துள்ள முதலீடுகளின் நிலை என்ன என்பது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் விளக்கமளித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய தொழில் - வணிகக் குழுமமான அதானி குழுமம் குறித்து 106 பக்கங்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்ட ஆய்வறிக்கை ஒன்றை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது.

அதானி குழுமம் "கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது" என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதிலிருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து கடும் சரிவை எதிர்கொண்டன. இதையடுத்து, அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்திருந்த பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் நிலை குறித்து கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.

 

எல்.ஐ.சி. குறித்த கேள்வியும் விளக்கமும்

குறிப்பாக, இந்தியாவின் மிகப் பெரிய அமைப்புசார் முதலீட்டு நிறுவனமும், மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமுமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதானி குழுமத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது, அந்த முதலீடுகளின் நிலை என்ன என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இது தொடர்பான ஒரு விளக்கத்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஜனவரி 30ஆம் தேதியன்று வெளியிட்டது.

"எல்ஐசி பொதுவாக தனது குறிப்பிட்ட முதலீடுகள் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால், அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்து ஊடகங்களிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் சில தகவல்கள் பரவிவருகின்றன. ஆகவே அதானி குழும நிறுவனங்களில் பங்குகளிலும் கடனாகவும் எந்த அளவுக்கு முதலீடுசெய்திருக்கிறோம் என்பதை  பகிர்ந்துகொள்கிறோம்.

அதானி குழும நிறுவனங்களில் பங்குகளாகவும் கடனாகவும் 35,917.31 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் அதானி குழும நிறுவன பங்குகள் 30,127 கோடி ரூபாய் மதிப்பிற்கு வாங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியன்று அவற்றின் மொத்த சந்தை மதிப்பு 56,142 கோடி ரூபாய்," என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

எல்.ஐ.சி.யை கடந்து போகும் பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானியில் செய்த முதலீடு எவ்வளவு

மேலும் இது பற்றி விளக்கியுள்ள எல்.ஐ.சி.,

"அதானி குழும நிறுவனங்களில் மொத்தமாக 36,474.78 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் பல்வேறு காலகட்டங்களில் செய்யப்பட்டவை. எல்ஐசி வைத்துள்ள அதானி கடன் பத்திரங்களின் தர மதிப்பீடு AA என்ற அளவிலோ அல்லது அதற்கு மேலேயோதான் இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான IRDAI நிர்ணியித்த விதிகளுக்கு உட்பட்ட தர மதிப்பீடு இது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, எல்ஐசி ஒட்டுமொத்தமாக 41.66 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகித்துவருகிறது. அதில், அதானி குழுமத்தில் செய்யப்பட்ட மொத்த முதலீடு 0.975% மட்டுமே," என்று தெரிவித்துள்ளது.

எல்.ஐ.சி. பில்டிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"முதலீடு செய்துள்ள சொத்துகளின் சந்தை மதிப்பு எந்த திசையில் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், எல்ஐசி நீண்டகால நோக்கில்தான் முதலீடுகளைச் செய்கிறது. எல்ஐசி வாரியமும் அதன் நிர்வாகமும் இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரது நலனையும் பாதுகாக்கும் வகையில் எப்போதும் செயல்படும்" என எல்ஐசியின் அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழுமம் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. இரண்டே நாட்களில் அதானி குழுமத்தின் மதிப்பு ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாக குறைந்துவிட்டது. அதன் விளைவாக, கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் குறைந்து போனதால், உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த அவர் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/c04d7vg8ynlo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு: நேசக்கரம் நீட்டும் அபுதாபி

அதானிக்கு நேசக்கரம் நீட்டும் அபுதாபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

31 ஜனவரி 2023, 06:30 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானது முதலே அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், மூன்றே நாட்களில் அதானி குழுமம் 5.3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இக்கட்டான நிலையில் இருக்கும் அதானி குழுமத்திற்கு அபுதாபியில் இருந்து நேசக்கரங்கள் நீண்டுள்ளன.

 

அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது முதலே இந்திய பங்குச்சந்தையில் கரடி ஆதிக்கம் செலுத்துகிறது.

உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்த கௌதம் அதானியின் நிறுவன பங்குகள் ஒட்டுமொத்தமாக சரிவைச் சந்தித்தது பங்குச்சந்தை செயல்பாடுகளிலும் எதிரொலித்தது. 

 

பணக்காரர்கள் வரிசையில் 8வது இடத்திற்கு சரிவு

பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் வணிகத்தைத் தொடங்குவதும், சிறிது நேரத்திலேயே அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகளும் வீழ்ச்சியால் சென்செக்ஸ் சரிவை சந்திப்பதும் கடந்த சில நாட்களாக வாடிக்கையாகிவிட்டது.

அதானி குழுமம் மட்டுமின்றி, கௌதம் அதானிக்கு சொந்தமான மற்ற நிறுவனங்களான ஏ.சி.சி. லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட், என்.டி.டி.வி. லிமிடெட் ஆகியவையும் பங்குச்சந்தையின் இந்தப் போக்கில் இருந்து தப்பவில்லை. 

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியான பிறகு, பங்குச்சந்தையில் வணிகம் நடந்த ஜனவரி 25, 27 மற்றும் 30 ஆகிய மூன்றே நாட்களில் மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.5.31 லட்சம் கோடி சரிந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. அதானிக்குச் சொந்தமான மற்ற நிறுவனங்களின் இழப்பையும் கணக்கில் கொண்டால், அவரது தொழில், வர்த்தக சாம்ராஜ்யத்தின் மதிப்பில் ரூ.5.6 லட்சம் கோடி ரூபாய் வீழ்ந்திருக்கிறது.

அதானி குழுமத்தின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், அதில் பெரும் பகுதியைத் தன் வசம் வைத்துள்ள கௌதம் அதானியின் சொத்து மதிப்பும் கணிசமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதனால், உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்கும் கீழே அவர் சரிந்துவிட்டதாக ப்ளூம்பெர்க் பட்டியல் கூறுகிறது. 11-வது இடத்தில் இருக்கும் கௌதம் அதானி தற்போதைய நிலை தொடர்ந்தால், வெகு விரைவில் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை மற்றொரு இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் இழப்பார் என்று அது கணித்துள்ளது.

அதானிக்கு நேசக்கரம் நீட்டும் அபுதாபி

பட மூலாதாரம்,REUTERS

இந்தியா மீதான தாக்குதல் இது - அதானி குழுமம்

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து அதானி குழுமம் 413 பக்க விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

"ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ள பொய்யான கூற்றுகள் இந்தியா மீதான  தாக்குதல்" என்று அதானி குழுமம் சாடியிருந்தது. 

மேலும் அந்த அறிக்கையில், "ஷார்ட் செல்லர் என்று ஒப்புக் கொண்டுள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம், நிதிச் சந்தையில் பொய்யான தோற்றத்தை உருவாக்கி எண்ணற்ற முதலீட்டாளர்களை நஷ்டப்படுத்தி அதன் மூலம் பெரும் ஆதாயத்தை அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று அதானி குழுமம் குற்றம் சாட்டியிருந்தது. 

"திட்டமிட்டு கொள்ளை" என ஹிண்டன்பர்க் பதிலடி

அதானி குழுமத்திற்கு உடனே பதிலளித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், நாங்கள் எழுப்பியிருந்த 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை என்று கூறியது.

"இந்தியாவை திட்டமிட்டுக் கொள்ளையடிக்கையில் அந்நிறுவனம் தன் மீது தேசிய கொடியைப் போர்த்திக் கொண்டுள்ளது," என்பது போன்ற கடுமையான வார்த்தைகளையும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பயன்படுத்தியிருந்தது. 

அதானி குழுமம் விரிவான விளக்க அறிக்கை வெளியிட்ட பின்னரும்கூட பங்குச்சந்தையில் அதன் பங்குகள் சரிவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அதானி குழுமத்தின் விளக்கம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கப் போதுமானதாக இருக்கவில்லை என்பதையே நேற்றைய (திங்கட்கிழமை) பங்குச்சந்தை வர்த்தகமும் தெளிவுபடுத்தியது. நேற்று மட்டும் அதானி குழுமம் தன் சந்தை மூலதன மதிப்பில் ரூ.1.4 லட்சம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது.

அதானி குழும பங்குகள் தொடர் சரிவை சந்தித்தது மட்டுமின்றி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட கூடுதல் பங்குகளும் முதலீட்டாளர்களின் வரவேற்பைப் பெறவில்லை.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20,000 கோடி மூலதனம் திரட்ட, சுமார் 4.4 கோடி பங்குகளை வெளியிட்டுள்ள நிலையில், நேற்றைய பங்குச்சந்தை வர்த்தக முடிவில் வெறும் 3 சதவீத பங்குகளை வாங்க மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

அதானிக்கு நேசக்கரம் நீட்டும் அபுதாபி

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன்

அபுதாபியில் இருந்து நீளும் நேசக்கரங்கள்

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் பங்குச்சந்தையில் நேரிட்ட சரிவை தடுத்த நிறுத்த அதானி குழுமம் பலவாறான உத்திகளைக் கைக்கொண்டு வரும் சூழலில்தான், அபுதாபியில் இருந்து உதவிக்கரங்கள் நீண்டுள்ளன. 

அபுதாபி அரச குடும்பத்திற்கு நெருக்கமான இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி ரூ.3,260 கோடி ரூபாயை அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

"அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் வலுவான அடிப்படை மீது எங்களுக்குள்ள நம்பிக்கையின் பேரில்தான் அதானி குழுமத்தில் முதலீடு செய்யும் ஆர்வம் வந்தது.

நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சிக்கான சாத்தியங்களையும், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஆதாயம் தரும் வாய்ப்புகளையும் பார்க்கிறோம்," என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சயீது பசார் ஷூயிப்  தெரிவித்துள்ளார். 

இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி, அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிறுவனம். இந்நிறுவனம் அதானி குழுமத்தில் ஏற்கெனவே கடந்த ஆண்டு ரூ.20,425 கோடியை முதலீடு செய்திருக்கிறது.

தற்போது, அதானி எண்டர்பிரைசஸில் மேலும் முதலீடு செய்வதன் மூலம் அதானி குழுமத்தில் தனக்குள்ள பங்குகளை அந்நிறுவனம் மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. 

பங்குச்சந்தையில் அதானி பங்குகள் இன்றும் சரிவு

ஐ.ஹெச்.சி. போன்ற உலகளவில் பெரிய நிறுவனத்தின் முதலீட்டை ஈர்த்துள்ள போதிலும், இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் இடையே இழந்துவிட்ட நம்பிக்கையை அதானி குழுமத்தால் மீட்க முடியவில்லை. இன்றைய வர்த்தக நிலவரமும் அதானி குழுமத்திற்கு சாதகமாக இல்லை. 

ஐ.ஹெச்.சி. முதலீடு செய்தி எதிரொலியாக, பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் தொடங்கியபோது அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகள் சற்று ஏற்றம் கண்டன. அதானி டோடல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி வில்மர் ஆகிய அதானி குழுமத்திற்கு உட்பட்ட பிற நிறுவன பங்குகளும் தொடர்ந்து குறைந்தே வந்தன. 

அதானிக்கு நேசக்கரம் நீட்டும் அபுதாபி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் கிடைத்த ஏற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதானி குழுமத்தின் மீதான பங்குச்சந்தையின் போக்கில் அந்நிறுவன பங்குகளும் பின்னர் கீழே இறங்கிவிட்டன. 

அதிகபட்சமாக அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 10 சதவீதம் சரிவு கண்டன. ஒரு கட்டத்தில் அதானி வில்மர் பங்குகள் 5 சதவீதமும், அதானி பவர் பங்குகள் 4.99 சதவீதமும், அதானி கிரீன் பங்குகள் 3.6 சதவீதமும் மதிப்பு குறைந்திருந்தன.

https://www.bbc.com/tamil/articles/cz9vdmn6zy1o

Link to comment
Share on other sites

அரேபியர்கள் இந்திய பொருளாதாரத்துக்குள் நுளையப் பார்க்கிறார்கள். இயலாக் கட்டத்தில் மத்திய அரசு அதானிக்குக் கடன் வழங்கும். அக் கடன் சுமை ஏழை மக்களைச் சென்றடையும்.

இலங்கை வடபகுதியில் அதானி பாரிய மின் உற்பத்தித் திட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாகச் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தனர். அது என்ன ஆகுமோ தெரியாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானி குழுமத்துக்கு 'உயிர் கொடுக்கும்' அபுதாபி நிறுவனத்தின் பின்னணி என்ன?

அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் 3,260 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

 

இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் 20,000 கோடி ரூபாய் ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபரில்(FPO) முதலீடு செய்துள்ளது.

 

 

திங்கட்கிழமை பங்குச்சந்தை முடிவில், இந்த FPO பங்குகளில் 3% மட்டுமே வாங்கப்பட்டிருந்தன.

 

ஆனால் இதற்குப் பிறகு அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது.

'அதானி குழுமத்தின் மீதான எங்கள் ஆர்வத்திற்கு காரணம் அதானி எண்டர்பிரைசஸின் பொருளாதார ஆரோக்கியத்தின் மீதுள்ள நம்பிக்கைதான். இந்த நிறுவனத்தில் நீண்ட கால வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சையத் பஸர் ஷுயேப் கூறினார்.

 

அதானி குழுமம் எல்லா தரப்பிலிருந்தும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

அபுதாபி நிறுவனத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,REUTERS/AMIT DAVE

ஹிண்டன்பர்க் அறிக்கை நஷ்டம் விளைவித்ததா?

அமெரிக்க தடயவியல் நிதி நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் மீது நிதி முறைகேடுகள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் முன்வைத்தது.

அதன்பிறகு அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மூன்று வணிக நாட்களில் அதாவது ஜனவரி 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 29 சதவிகிதம் சரிவை பதிவு செய்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

இது இந்திய மதிப்பில் சுமார் 5.6 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை மாலை இது தொடர்பாக 413 பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் என்று அது கூறியது.

இருப்பினும் இதற்குப் பிறகும் அதானி குழுமங்களின் பங்குகள் திங்கள்கிழமை சரிந்து, அதன் சந்தை மூலதனத்தில் 1.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அபுதாபியின் IHC நிறுவனத்தின் முதலீட்டு அறிவிப்புக்குப் பிறகு வேறு சில குடும்ப நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.

துபாய் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள சில குடும்ப நிறுவனங்களும் அதானி குழுமத்தின் FPO இல் 9000 கோடி ரூபாய் முதலீடு செய்யக்கூடும் என்று இந்து பிசினஸ் லைன், செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

அபுதாபி நிறுவனத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதானி குழுமத்தில் ஐ.ஹெச்.சி. முதலீடு புதிதல்ல

அபுதாபியின் அரச குடும்பத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்வது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு இந்தக்குழு, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களில் இரண்டு பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் சகோதரர் ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் இந்த நிறுவனத்தின் தலைவர்.

இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் அபுதாபியின் பங்குச் சந்தையின் வெற்றிப் படிக்கட்டுகளில் வேகமாக ஏறியுள்ளது. இந்த நிறுவனம் அபுதாபியின் பங்குச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்துள்ளது.

இந்த நிறுவனம் இந்த ஆண்டு வெளிநாடுகளில் தனது முதலீட்டை 70 சதவிகிதம் அதிகரிக்க முயற்சிக்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கை கூறுகிறது.

வெளிநாட்டு முதலீடுகளை செய்யும் போது இந்த நிறுவனம், தூய்மையான எரிசக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த விரும்புகிறது.

ஆனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்ததில் இருந்தே இந்த நிறுவனம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அபுதாபி நிறுவனத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

40 பணியாளர்களைக் கொண்ட நிறுவனம்

 

 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிறுவனத்தில் நாற்பது பேர் மட்டுமே பணிபுரிந்தனர் என்று இந்த நிறுவனம் தொடர்பான ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனத்தின் பெயரை பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த நிறுவனம் மீன் வளர்ப்பில் இருந்து உணவு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகம் வரை செயல்பட்டு வந்தது என்று பைனான்சியல் டைம்ஸில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் இப்போது அபுதாபியில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த குழுமத்தின் சந்தை மூலதனம் 240 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.

சந்தை மூலதனத்தைப் பொருத்தவரை இந்த நிறுவனம், சர்வதேச நிறுவனங்களான சீமென்ஸ் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 42,000 சதவிகிதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கில் இந்த நிறுவனம் இப்போது செளதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

அபுதாபி நிறுவனத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம்,IHC

 
படக்குறிப்பு,

இண்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி

வானளாவிய வெற்றியின் ரகசியம் என்ன?

 

 

 

 

 

 

 

இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனியின் மகத்தான வெற்றிக்கான காரணம் புரியாத புதிர் தான். உலகின் பிற நாடுகளில் இந்த நிறுவனத்தின் பொருளாதார வெற்றியைப் பற்றி குறைவான தகவல்களே கிடைக்கின்றன.

அதே நேரம் அபுதாபியின் பொருளாதார உலகத்துடன் தொடர்புடைய நபர்களிடமும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து அதிக தகவல்கள் இல்லை.

இந்த நிறுவனம் எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தது என்பது யாருக்கும் தெரியாது என்று வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஒரு சர்வதேச வங்கியாளர், பைனான்சியல் டைம்ஸ் உடனான உரையாடலில் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சையத் பாஸர் ஷுயேப், இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தை ’சிறப்பானது’ என்று விவரிக்கிறார்.

"நாங்கள் எந்த விதமான டிவிடெண்டும் தருவதில்லை. 2020, 2021-ம் ஆண்டுகளில் கிடைத்த லாபம், திரும்ப முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு மாபெரும் நிறுவனத்தை உருவாக்க முயற்சித்து வருகிறோம்... உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற முயற்சிக்கிறோம்,"என்று அவர் கூறினார்.

இருப்பினும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் வணிகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே’மங்கலாகும் கோடு’ என்று சிலர் இந்த நிறுவனத்தை பார்க்கின்றனர்.

நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் இந்த மாபெரும் வளர்ச்சியைப் பற்றிய கவலைகள் இருக்கும் காரணத்தால் துபாய் அதிகாரிகள் தங்கள் பங்குச் சந்தையை ADX உடன் இணைக்கும் வாய்ப்பில் இருந்து பின்வாங்கத்தொடங்கியுள்ளனர் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c3g3xdlpg52o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி-பிபிசி+அதானி-ஹிண்டன்பேர்க்: காவிகளுக்கு எதிராக பாவாடைகளின் தாக்குதலா?

AVvXsEiPTBQ5hsKIgKeF_sXcNryXB1eOOZzQ4yV2Vj5athyOKQ4kseq6G_YGHkzo6UKBJnLY1XpVWeCF_UbAuhd-zBUvvvrEY05C4bf5mwaJk5I70FpJFj_DFTPrKiSXclnQyl2sDRLB5q0OKm4_EaVS_c7buHtjEFyWlXymAaG7ATNL9utFJGpfjZS8ECutlg=w400-h379

 

மோடிக்கு எதிராக பிபிசி ஆவணப்படம் வெளியிட்ட போது கொதித்த அதே ஆட்கள் அதானிகளுக்கு எதிராக ஹிண்டன்பேர்க் அறிக்கை வெளியிட்ட போது கொதிக்கின்றார்கள். பல மோடி ஆதரவாளர்களும் எதிர்ப்பாளரக்ளும் அதானி மீதான தாக்குதல் மோடி மீதான தாக்குதல் என்கின்றார்கள். மோடியைப் பற்றி விமர்சிப்பவர்கள் அதானியின் வீழ்ச்சி மோடியின் வீழ்ச்சி என்கின்றார்கள். கௌத்தம் அதானி தனக்கு எதிரான தாக்குதல் இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் என்கின்றார். அதானி குடும்பத்தினர் ஊழல், பணச்சலவை (Money Laundering), வருமான வரி மோசடி, தவறாக வங்கிக் கடன் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. பல அரச விசாரணைகளும் நடை பெற்றன. அவை ஏதும் அவரது செல்வப் பெருக்கத்திற்கு தடையாக அமையவில்லை.

தடையை மீறிய அதானியின் எரிபொருள் வியாபாரம்

உக்ரேன் போரில் மோடியின் நிலைப்பாட்டை மேற்கு நாடுகள் என்று சொல்லப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. மேற்கு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்த இரசியாவிடமிருந்து அதானி எரிபொருளை குறைந்த விலையில் வாங்கி அதை உலகச் சந்தையில் விற்பனை செய்வதையும் மேற்கு நாடுகள் விரும்பவில்லை. உலகச் சந்தையில் எரிபொருள் விலை பீப்பாய் ஒன்று $100இற்கு மேல் இருக்கும் போது அதானியின் நிறுவனம் இரசியாவில் இருந்து $33இற்கு வாங்கி அதை இந்திய மக்களுக்கு மலிவு விலையில் விற்காமல் உலகச் சந்தையில் விற்று அதானியின் நிறுவனங்கள் பெருமளவு இலாம் ஈட்டியுள்ளன.

கிருத்தவர்களுக்கு எதிரான இந்துத்துவா?

இந்தியாவில் உள்ள கிருத்தவ அமைப்புக்களுக்கு எதிராக மோடி அரசு செயற்படுவதாக குற்றச் சாட்டு உண்டு. கிருத்த போதகர்களை பாவாடைகள் என பல மோடியின் பாரதியக் ஜனதாக் கட்சியைச் சேர்ந்த பலர் கேலி செய்கின்றார்கள். கிருத்தவ மதத்திற்கு இந்துக்கள் மாற்றப்படுவதை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். பிரித்தானிய சஞ்சிகையான Spectator 2022 டிசம்பர் நத்தார் பண்டிகைக் காலத்தில் “கிருத்துவம் மீதான இந்தியாவின் போர்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையையும் வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவில் என்றும் இல்லாத அளவு கிருத்தவர்களிக்கு எதிராக அதிக அளவு தாக்குதல்கள் 2022-ம் ஆண்டு நடந்துள்ளன எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நண்பேண்டா

மோடியும் அதானி குடும்பமும் இணைந்தே வளர்ந்தார்கள். மோடி குஜராத் முதல்வராக இருக்கும் போது அதானி இந்தியாவில் பெரிய செல்வந்தராக இருந்தார். மோடி இந்தியத் தலைமை அமைச்சரான பின்னர் அவர் உலகில் பெரிய செல்வந்தரானார். மோடி தலைமை அமைச்சராக 2014-ம் ஆண்டு பதவி ஏற்றபோது அதானி குடும்பத்தின் சொத்து $2.8 பில்லியனாக இருந்தது. அது இப்போது $119 பில்லியனாக அதிகரித்துள்ளதுவ் அதானி குடும்பத்தினர் ஊழல், பணச்சலவை (Money Laundering), வருமான வரி மோசடி, தவறாக வங்கிக் கடன் பெறுதல் போன்றவற்றில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. பல அரச விசாரணைகளும் நடை பெற்றன. அவை ஏதும் அவரது செல்வப் பெருக்கத்திற்கு தடையாக அமையவில்லை. அதானி தனது சொத்து மதிப்பை கடந்த மூன்று ஆண்டுகளில் $100பி ஆல் உயரத்தியுள்ளார். அவருக்கு சொந்தமான ஏழு நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிப்பின் மூலம் அவரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அவரது நிறுவனங்களின் பங்கு விலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 819%ஆல் அதிகரித்துள்ளது.

கடன் ஏய்ப்பு

மற்றச் சந்தைகளைப் போலவே பங்குச் சந்தையிலும் பங்கு விலைகளை விற்பனையாளர்களும் வாங்குபவர்களும் முடிவு செய்கின்றனர். ஆனால் அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்கள் தம் பங்குகளை விற்பனை செய்யும் போது அவற்றை மற்ற அதானி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றன. இதனால் அப்பங்குகளின் விலைகள் மிகைப்படுத்தப்படுகின்றன. அதானி குழுமத்திற்கு சொந்தமாக பல் வேறு நாடுகளில் பல நூறு நிறுவனங்கள் இருப்பதால் அது இலகுவாகின்றது. அதானி குடும்பத்தினரின் நிறுவனங்களின் பங்கு விலைகளை மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. அதானியின் நிறுவனம் Aயில் அதானியின் நிறுவனம் B முதலீடு செய்து அதன் பங்குகளை வாங்கி தனது சொத்தாக கணக்கு காட்டும். போலியாக நிறுவனம் Aயின் பங்குகளின் விலைகள் மிகைப்படுத்திக் கட்டப்படும். அதனால் நிறுவனம் Bயின் சொத்துக்களின் பெறுமதி மிகைப்படுத்தப்படும். அதை ஈடாக வைத்து இந்திய அரச வங்கிகளில் பெருமளவு கடனை நிறுவனம் B பெற்றுக் கொள்ளும். இப்படிப் பல கடன்களைப் பெறுவதால் அதானியின் நிறுவனங்களின் தற்காலிக சொத்துக்களுக்கு ஈடாக தற்காலிக கடன்கள் உள்ளன. பொதுவாக சொத்துக்களின் பெறுமதி கடன்களின் பெறுமதியிலும் ஒன்றரைப் மடங்கிற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்பது நிதித்துறை நியமமாகும்.

பணச் சலவையும் வரி ஏய்ப்பும்

இந்தியாவில் இருந்து நிறுவனம் C வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது அதை நேரடியாகச் செய்வதாக கணக்கு காட்டாமல் மொறிசியஸ் தீவுகளில் உள்ள அதானி நிறுவனம் Dயிற்குமிகவும் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வதாக கணக்குக் காட்டப்படும். இதனால் நிறுவனம் Cயின் இலாபம் பெருமளவு குறைத்துக் காட்டப்படும். மொறிசியஸ் தீவுகளில் உள்ள நிறுவனம் D சந்தை விலையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கணக்கு காட்டப்படும். மொறிசியஸ் தீவில் உள்ள நிறுவனம் D பெருமளவு இலாபம் ஈட்டும். அதற்கு அங்கு வரி விலக்கு உண்டு. இதனால நிறுவனம் Dயிடம் பெருமளவு நிதிக் கையிருப்பு இருக்கும். அதை இந்தியாவிற்கு அந்நிய முதலீடு என்னும் பெயரில் கொண்டு வரப்படும். சில அந்நிய முதலீட்டுக்கு வரி விலக்கு வழங்கப்படுவதும் உண்டு. இதைப் பணச்சலவை என்பார்கள். 2014இல் இரண்டு நாட்களில் 270 நிறுவனங்களை உருவாக்கினார்கள் அதானி சகோதரர்கள். அவற்றில் 125 இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டன. விநோத் ஷாந்திலால் அதானி வெளிநாடுவாழ் இந்தியச் செல்வந்தர் (Richest NRI) ஆவார். ஹிண்டன்பேர்க் ஆய்வகம் செய்த புலன் விசாரணையை ஒரு நிதித் தடயவியல் விசாரணை (Financial Forensic Inquiry) எனச் சொல்லலாம்.

நியதிசார் தாராண்மைவாத ஒழுங்கு Rule Based Liberal Order

உலக அரங்கில் முதலாளிகள் ஒழுங்கான முறையில் போட்டியிட்டு தம் செல்வத்தை பெருக்குவதற்கு என உருவாக்கப்பட்டது தான் நியதிசார் தாராண்மைவாத ஒழுங்கு. எந்த ஒரு முதலாளியும் அரச சலுகையைப் பெற்றுக் கொண்டு உலகச் செல்வந்தராக வருவதை தாராண்மைவாதிகள் விரும்புவதில்லை. மோடியையும் அதானியையும் தாராண்மைவாதிகள் விரும்பத்தகாத வகையில் நடந்து கொள்கின்றார்கள். தாராண்மைவாதிகள் மதக் குரோதத்தை விரும்புவதில்லை. அதிலும் தம் சொந்த மதத்திற்கு எதிரான செய்ற்பாடு என்றால் கொதித்துப் போவார்கள். அந்தக் கொதிப்பின் விளைவுகளாக பிபிசி மோடிக்கு எதிராக ஒளிபரப்பிய ஆவணப்படத்தையும் ஹிண்டன்பேர்க் நிறுவனம் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியிட்ட அறிக்கையையும் பார்க்க வேண்டி உள்ளது.

சீனாவைக் கருத்தில் கொண்டு இந்தியாவுடன் நேரடியாக மேற்கு நாடுகள் மோத விரும்பாமல் மறைமுகமாக மோதுகின்றன. பிபிசியின் ஆவணப்படம் இந்து மத வெறியர்கள் மத்தியில் மோடிக்கு இருக்கும் செல்வாக்கை உயர்த்தும் என்பது பிபிசியிற்கும் தெரியும் மேற்கு நாடுகளுக்கும் தெரியும். ஆனால் அந்த ஆவணப்படம் உலக இஸ்லாமியர்கள் மத்தியில் இந்தியாவிற்கு எதிரான கருத்தை வளர்ப்பது நிச்சயம். “நானும் ரௌடிதான்” என அலையும் துருக்கி இந்தியாவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை மேலும் மோசமாக்கும். ஈரான் இந்தியாவுடன் உறவை வளர்க்க விரும்பாது. இப்படிப்பட்ட நெருக்குவாரங்களை இந்தியாவை ஆளும் காவிகளுக்கு கொடுப்பதுதான் மேற்கு நாடுகளின் அதாவது இந்துத்துவா மொழியில் சொல்வதானால் பாவாடைகளின் நோக்கமாகும்.

அதானி குடும்பத்தினருக்கு எதிராக மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடை வருமா?

https://puviarasiyal.blogspot.com/2023/01/blog-post_31.html?spref=bl

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிண்டன்பர்க் விளைவு: அதானி எஃப்.பி.ஓ. பங்கு விற்பனை வாபஸ் - சொன்ன காரணம் என்ன?

அதானி

பட மூலாதாரம்,ADANI GROUP

49 நிமிடங்களுக்கு முன்னர்

ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்(FPO) மூலமாக 20,000 கோடி ரூபாய் திரட்டும் வேலையில் இறங்கியிருந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அந்த முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

பங்கு வாங்குவதற்காகப் பணம் செலுத்திய அனைவருக்கும் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவு தொடர்பாக வீடியோ மூலமாக விளக்கம் அளித்துள்ளார் கௌதம் அதானி.

அதானி குழுமத்தின் அறிவிப்பு

கடந்த ஜனவரி 27ம் தேதி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், ஜனவரி 24ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் மீது தீவிர குற்றச்சாட்டுகளை சுமத்தி ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது.

 

அதானி குழுமம் பங்குச்சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும், ஏராளமான கடன்களை வாங்கியிருப்பதாகவும், வரி ஏய்ப்புக்கு சாதகமான மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் சந்தேகத்துக்கு இடமான நிறுவனங்கள் அதானியில் முதலீடு செய்திருப்பதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குற்றம் சாட்டியது.

இந்த அறிக்கை வெளியான பிறகு பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு சரிந்தது.

இவ்வளவு களேபாரம் நடந்தாலும், திட்டமிட்டபடி தமது எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையை 27ம் தேதி தொடங்கியது அதானி எண்டர்பிரைசஸ். ஆனால், அவற்றை வாங்குவதற்கு முதலீட்டாளர்களிடம் பெரிய ஆர்வம் இல்லை.

எஃப்.பி.ஓ வெளியீட்டில் அதானி குழுமம் வெளியிட்ட பங்குகளுக்கு 112% முதலீட்டாளர்கள் பதிவு செய்திருந்ததாக இருந்ததாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.

அதானி குழுமத்தில் சாதாரண மக்கள் யாரும் முதலீடு செய்யவில்லை என்றும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், பணக்காரர்கள் சிலர் முதலீடு செய்திருந்தாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று கூடிய அதானி குழுமத்தின் இயக்குநர்கள் குழு(Board of Directors) FPO தொடர்பாக விவாதித்தது. கூட்டத்திற்கு பின்னர், வெளியான செய்திக் குறிப்பில் இப்போதையை சந்தைச் சூழலில் ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபரை தொடரப் போவதில்லை என்று அதானி குழுமத்தின் இயக்குநர்கள் குழு முடிவு செய்திருப்பதாக அந்தக் குழுமம் அறிவித்தது.

Twitter பதிவை கடந்து செல்ல
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

கௌதம் அதானி சொன்ன விளக்கம் என்ன?

அதானி

பட மூலாதாரம்,REUTERS/AMIR COHEN

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 'ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்' திரும்பப்பெறப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார் அந்தக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி.

அதில், "அதானி நிறுவனத்தின் பங்குகள் தற்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இப்போது பங்குகளை வெளியிடுவது தார்மீக அடிப்படையில் சரியாக இருக்காது என இயக்குநர்கள் குழுமம் கருதுகிறது. அதனால் முதலீட்டாளர்களின் நலன் கருதி எஃப்.பி.ஓ பங்கு விற்பனையை நிறுத்தி வைக்கிறோம்," என்று பேசி இருக்கிறார்.

“அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையிலும், எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் கட்டுப்படுகிறேன். இப்போதையை சந்தைச் சூழலில் முதலீட்டார்களின் பணத்தை நஷ்டத்தில் இருந்து காக்க, FPO-வை திரும்ப பெறுகிறோம். பங்குகளை வாங்குவதற்குப் பணம் செலுத்தியிருந்த அனைவருக்கும் பணம் திரும்ப வழங்கப்படும். அதானி குழுமத்தின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி,” என்று அதானி தெரிவித்துள்ளார்.

அதானி சொத்து மதிப்பு சரிந்தது எப்படி?

அதானி

பட மூலாதாரம்,FORBES

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சந்தையில் கடுமையாக சரிவை சந்தித்தது. இதையடுத்து, அந்த நிறுவனங்களில் பங்குகளை வைத்திருந்த கௌதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பும் கடுமையாக சரிந்தது.

இதனால், உலகப் பணக்காரர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருந்த கௌதம் அதானி, சடசடவென சரிந்து வீழ்ந்தார். ஒரே வாரத்தில் அவர் வியாழக்கிழமை நிலவரப்படி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்துக்குத் தள்ளப்பட்டார் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியல்.

 
Play video, "ரூ.88,000 கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்", கால அளவு 4,55
04:55p0dzb3cj.jpg
காணொளிக் குறிப்பு,

அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மதிப்பு சரிவு

https://www.bbc.com/tamil/articles/cd1y318d8d2o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானி எடுத்த யூ டர்ன் - முதலீட்டாளர்களின் நெருக்கடி காரணமா?

அதானி FPO

பட மூலாதாரம்,REUTERS

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நிதி திரட்டும் முயற்சியில், புதிதாக உருவாக்கிய தனது நிறுவனத்தின் பங்குகளை விற்பனைக்கு அறிவித்து இருந்த அதானி எண்டர்பிரைஸ் நிறுவனம், அந்த முடிவை திரும்பப்பெற்றுள்ளது.

2,348 ரூபாய்க்கு கிடைக்கும் பங்குகளை 3,112 ரூபாய் கொடுத்து வாங்கியவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா?

அதானி குழுமத்தின் அறிவிப்பு

கடந்த ஜனவரி 27ம் தேதி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்காக தனது நிறுவனத்தின் ஒரு பங்கை 3,112 ரூபாய்க்கு எஃப்.பி.ஓ-வில் வாங்கலாம் என்று அந்தக் குழுமம் அறிவித்து இருந்தது.

 

 

ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்(FPO) மூலமாக 20,000 கோடி ரூபாய் திரட்டும் வேலையில் இறங்கியிருந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், திடீரென நேற்று இரவு அந்த முடிவில் இருந்து பின் வாங்கியது.

Twitter பதிவை கடந்து செல்ல
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

அதானி குழுமம் எஃப்.பி.ஓ-வில் அளித்திருந்த பங்குகள் முழுவதும் விற்பனை ஆகியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதானியின் முடிவுக்கு என்ன காரணம்?

"அதானி எண்டர்பிரைஸ் நிறுவனம் தனது கடன் சுமையை குறைப்பதற்காக கூடுதலாக பங்குகளை உருவாக்கி சந்தையில் நிதி திரட்டவே இந்த FPOவை அறிவித்து இருக்கும். ஆனால் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதன் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் புதிய பங்குகளை வாங்க விண்ணப்பித்து இருந்த முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கக்கூடும். இதன் காரணமாகவே அதானி நிறுவனம் தனது ஃஎப்.பி.ஓ-வை திரும்பப்பெற்றுள்ளது," என்று நிதி ஆலோசகரான விவேக் கர்வா பிபிசி தமிழிடம் கூறினார்.

அதானி FPO

பட மூலாதாரம்,FACEBOOK/VIVEK KARWA

 
படக்குறிப்பு,

விவேக் கர்வா, நிதி ஆலோசகர்

இது குறித்து விளக்கமளித்த அவர், "அதானி நிறுவனம் சார்பாக ஃஎப்.பி.ஓ-வில் அந்த நிறுவனத்தின் பங்குகள் 3 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்காக பங்குகளை வாங்க விரும்பிய முதலீட்டு நிறுவனங்கள் இந்த தொகையை அதானி குழுமத்திற்கு வழங்கி இருப்பார்கள். ஆனால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சரிந்துள்ள நிலையில், அவர்களின் ஒரு பங்கின் விலை நேற்று சந்தை முடிந்தபோது 2,348 ரூபாய்க்கு கிடைத்தது. இந்த விலை தொடர்ந்து குறைந்து கொண்டே போகும் நிலையில், புதிய பங்குகளை யாரும் 3,000 ரூபாய் கொடுத்து வாங்கமாட்டார்கள்."

"எனவே பணத்தை கொடுத்த முதலீட்டாளர்களின் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவை கௌதம் அதானி எடுத்திருக்கக்கூடும்," என்று விளக்கினார்.

புதிய பங்குகளின் விற்பனை ரத்து செய்து பணத்தை திருப்பித் தருகிறேன் என்று சொல்லி இருப்பதன் மூலம், சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அந்நிறுவனம் பெற முயல்கிறது என்று கருதுவதாக அவர் கூறினார். இப்போது ஒத்தி வைத்து இருக்கும் நிதியை திரட்டும் இந்த முயற்சியை மீண்டும் அதானி நிறுவனம் மேற்கொள்ளும். ஆனால் மீண்டும் நடக்க 6 மாதம் முதல் 1 வருடம் ஆகும், என்று விவேக் கர்வா தெரிவித்தார்.

இன்று காலை 2,348 ரூபாயுடன் தொடங்கிய அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மாலை பங்குச்சந்தை முடிந்த போது 1,565 ரூபாயாக இருக்கிறது

 

FPO என்றால் என்ன?

அதானி FPO

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்(FPO) என்பது, ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் அறிமுகமான பின்பு நிதியை திரட்டுவதற்காக புதிதாக பங்குகளை உருவாக்கி சந்தைக்குள் கொண்டு வரும் நடைமுறை ஆகும். அதானி குழுமம் தனக்கு இருக்கும் கடன் தொகையை குறைப்பதற்காக புதிதாக பங்குகளை உருவாக்கி, மீண்டும் தனது பங்குகளை விற்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அறிவித்து இருந்தது.

இனிசியல் பப்ளிக் ஆஃபர்(IPO) என்பது, புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனம் பங்குச்சந்தையில் நுழையும் போது நிதியை திரட்ட தனது நிறுவனத்தின் பங்குகளை முதல்முறையாக விற்பனைக்கு அளிக்கும் நடைமுறை ஆகும்.

https://www.bbc.com/tamil/articles/c7218jd92x9o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரூ.8 லட்சம் கோடி சரிவை கண்ட அதானியின் ராஜ்ஜியம் - மீண்டு வருவது சாத்தியமா?

அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானி, தனது ஃஎப்.பி.ஓ(FPO) பங்கு விற்பனையை நிறுத்தியதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க முயன்றார்.

 

இந்த விற்பனை மூலம் திரட்டப்பட்ட 2,000 கோடி ரூபாயை(2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தருவதாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.

இந்த முடிவு "தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை" பாதிக்காது என்று அதானி தெரிவித்திருந்தார்.

தொடர் சரிவில் அதானி குழுமம்

அதானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க பங்குச் சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டை அதானி மறுத்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 8.8 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதானி அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 3.9 லட்சம் கோடி) இழந்து, இப்போது ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் 22வது இடத்தில் உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பட்டியலில் 3வது இடத்திலும் நேற்று 16வது இடத்திலும் கௌதம் அதானி இருந்தார்.

என்ன நடந்தது?

அதானி

பட மூலாதாரம்,REUTERS

அதானி குழுமம் பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும் கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்டது.

இதற்குப் பதிலளித்த அதானி குழுமம், “தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது, ஒன்றைவிட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டது,” என்று கூறியிருந்தது.

நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதானி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அதானி குழுமத்தின் கீழ் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் ஏழு வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகி்ன்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் பதிவு செய்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்துள்ளன.

அதானி குழுமத்தில் பல இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. சில வங்கிகள் பல லட்சம் கோடி ரூபாயை கடனாக அதானி குழும நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை அறிக்கையாக சமர்பிக்குமாறு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தின் பங்குகளின் வீழ்ச்சி தொடர்பாக இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) விசாரணை நடத்தி வருவதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

சரிவில் இருந்து எப்போது மீளும்?

அதானி

பட மூலாதாரம்,REUTERS

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் அதானி நிறுவனத்தின் போக்கு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகரான சதீஷ், அதானி நிறுவனத்தின் பங்குகளில் 20% வரை பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன.

பங்குச் சந்தையின் வீழ்ச்சி காரணமாகவும், வெளியில் இருந்து எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாகவும் தங்கள் பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டிய நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டன. இதன் காரணமாகவும், அதானி நிறுவனம் தனது ஃஎப்.பி.ஓ-வை திரும்பப் பெற்றதன் காரணமாகவும் அதானி எண்டர்பிரைஸ் நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே வருகின்றன.

இதன் தாக்கம் சில்லறை முதலீட்டாளர்களிடம் தொடர்கிறது. அதானி குழுமத்தில் முதலீடு செய்த பணத்தைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது சிக்கலானது என்று கூறினார்.

இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் நம்பிக்கை மிகுந்தவையாகவும், ஒட்டுமொத்த பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்தது.

ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட விளைவைத் தடுக்கும் வகையில் சந்தையில் இழந்த நம்பிக்கையைப் பெறும் விதமாக அதானி தனது நிறுவனத்தின் ஃஎப்.பி.ஓ-வை திரும்பப் பெற்றாலும், சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன.

இதற்கு முக்கியக் காரணம், அந்த நிறுவனம் பெற்றுள்ள கடன்கள் தான். மொத்த கடனில், 25% பொதுத்துறை வங்கிகளிடம் இருந்தும், 37% பொதுத்துறை காப்பீடு நிறுவனம், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் பத்திரங்களாக உள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையில் அதானி குழுமத்திற்கு இருக்கும் அதிக கடன்களைச் சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், சந்தையில் அந்த நிறுவனத்தின் மீது எதிர்மறை தாக்கம் ஏற்படும்போது பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தது. அதே போலத்தான் இப்போது நடந்து வருகிறது," என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cy6j048pe16o

Link to comment
Share on other sites