Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் ; வெகு விரைவில் 'திசைக்காட்டி'யின் ஆட்சி வரும் - அநுர குமார


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் ; வெகு விரைவில் 'திசைக்காட்டி'யின் ஆட்சி வரும் - அநுர குமார

By T. SARANYA

29 JAN, 2023 | 09:35 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையில் வெகுவிரைவில் திசைக்காட்டி ஆட்சி அமைக்கவுள்ளதால் தொழில் வல்லுநர்கள் உள்ளிட் அனைத்து தரப்பினரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  அநுரகுமார திஸாநாயக்க  பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். உணர்ச்சியற்ற தலைவர்கள் எம்மை ஆளத் ‍தேவையில்லை என  நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார்.   

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

" நமது நாட்டை ஆள்வது யார்? மதுபான தொழிற்சாலை உரிமையாளர்கள், மணற் கடத்தல்கார்கள், மதுக்கடை உரிமையாளர்கள், கொள்ளையர்கள், குற்றவாளிகள் போன்றவர்களாவர்.  நெஞ்சில் ஈரம் இல்லாதவர்களால் இந்த நாடு ஆளப்பட்டது. உணர்ச்சியற்ற தலைவர்கள் , மக்களின் சம்பளத்தில் கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

தொழில்முறை பணியாளர்கள் 15 சதவீதம் உள்ளனர். அவர்களின் ஊதியத்திற்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.

வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் 500 பேர் வரையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது வைத்தியர்கள் 500 பேர் இந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறு இவர்கள் நாட்டை விட்டு செல்வதால் நாடு பெரும் பின்னடைவை எதிர்கொள்ளும்.

வெகு சீக்கிரமே எமது திசைக்காட்டியின் அரசாங்கம் தோன்றும். எவரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டாம் "   என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/146935

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏகேடி க்கு தெரியுமா? திசைகாட்டி வந்திடும் எண்டு பயந்துதான் பாதி பணக்காரான் ஓடுறான் எண்டது🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஏகேடி க்கு தெரியுமா? திசைகாட்டி வந்திடும் எண்டு பயந்துதான் பாதி பணக்காரான் ஓடுறான் எண்டது🤣

 

தெரிஞ்சு  தான்  மிச்சத்தையும்  ஓடச்சொல்கிறார்  போல??☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

 

தெரிஞ்சு  தான்  மிச்சத்தையும்  ஓடச்சொல்கிறார்  போல??☺️

உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் முன்னுக்கு வந்தால் அடுத்த இரெண்டு வருட அவகாசத்தை பல முதலீட்டாளர் பயன்படுத்தி வெளியேறலாம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.