Jump to content

நாடுகடந்த அரசாங்கம் மறுசீரமைக்கப்பட வேண்டும்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசாங்கம் மறுசீரமைக்கப்பட வேண்டும்? - யதீந்திரா


 

2009இல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்றதை தொடர்ந்து, புலம்பெயர் சமூகம் தமிழ் தேசிய அரசியலில் பிரதான இடத்தை பெற்றது. இந்த பின்புலத்தில்தான் 2010இல் நாடுகடந்த அரசாங்கம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ் புலம்பெயர் சமூகமென்று அழைக்கப்படும் மரபிற்கு மாறாக நாடுகடந்த தமிழ் சமூகமென்னும் அடையாளம் முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த அடிப்படையிலேயே நாடுகடந்த அரசாங்கமென்னும் எண்ணக்கரு தோற்றம்பெற்றது. தமிழ் புலம்பெயர் சமூகமென்று அடையாளப்படுத்தும் போது அது – மேற்குலக நாடுகளில் சிதறிவாழும் ஈழத் தமிழ் மக்களை மட்டுமே குறிக்கும் ஆனால், நாடுகடந்த தமிழ் சமூகமென்று அடையாளப்படுத்தும் போது அது உலகின் பல பாகங்களில் சிதறிவாழும் ஈழத் தமிழ் மக்கள் அiனைவரையும் உள்வாங்கும். இந்த எண்ணக்கருவே பின்னர் நாடுகடந்த அரசாங்கமென்னும் அமைப்பாக துளிர்விட்டது.

இது அடிப்படையில் தொலை தூர தேசியவாதமென்னும் கருத்தாக்கத்திலிருந்தே வருகின்றது. இந்தக் கருத்தாக்கம் பெனடிக் அன்டர்சனால் 1998இல் முன்வைக்கப்பட்டது. அப்படையில் இது ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து அரசியல் காரணங்களால் வெளியேறிவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு தேசியத்துடன் தொடர்புபடுகின்றனர் – என்பது பற்றியது. தாயக மக்களையும் அந்த தாயக பரப்பிலிருந்து வெளியேறி வாழும் மக்களையும் தொலை தூர தேசியவாதம் இணைக்கின்றது. தாயக பிரதேசத்திலிருந்து வெளியேறி பிறிதொரு நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் கூட தங்களை எல்லைதாண்டிய தாயக குடிமக்களாகவே கருதிக் கொள்கின்றனர். இந்தக் கருத்தாக்கத்திலிருந்துதான் தொலை தூர தேசியவாதமென்னும் கருத்தாக்கம் உருவானது.

spacer.png

விடுதலைப் புலிகளின் தோல்வியை தொடர்ந்து அதுவரையில் விடுதலைப் புலிகளின் பிரதான ஆதரவுத் தளமாகவிருந்த புலம்பெயர் சமூகம் தமிழ் தேசிய அரசியலை தீர்மானிக்கும் முக்கிய தரப்பாக மாறியது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிவரையில் ஆயுதப் போராட்டத்திற்கான பிரதான நிதி வழங்குனரென்னும் பாத்திரத்தையே புலம்பெயர் சமூகம் ஆற்றியிருந்தது. புலிகளின் வீழ்சியை தொடர்ந்தே புலம்பெயர் சமூகம் அரசியல்ரீதியான செயற்பாடுகளில் தீவிரம் காண்பித்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தாயகத்தில் தனிநாட்டுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்புலத்தில் புலம்பெயர் சூழலில் தனிநாட்டுக்கான அரசியலை தொடரும் நோக்கில், நாடு கடந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இது அடிப்படையில் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குமரன் பத்மநாதனது (கே.பி) சிந்தனையின் விளைவே நாடுகடந்த அரசாங்கமாகும். எனினும் கே.பி சிறிலங்கா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த அமைப்பினை வழிநடத்தும் பொறுப்பு விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.

spacer.png

கடந்த 13 வருடங்களாக உருத்திரகுமாரனே இந்த அமைப்பை வழிநடத்திவருகின்றார். தற்போதுள்ள புலம்பெயர் அமைப்புக்களில் அமெரிக்கா, கனடா ஜரோப்பா – என பரந்தளவில் ஈழத் தமிழ் புலம்பெயர் சமூகத்தை இணைக்கும் ஒரேயொரு அமைப்பென்றால் அது நாடு கடந்த அரசாங்கத்தை மட்டுமேயாகும். ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் மட்டுமே மட்டுப்பட்டிருக்கின்றன. ஒரு சில அமைப்புக்கள் சில நாடுகளில் வலமைப்புக்களை கொண்டிருந்தாலும் கூட அவற்றால் பரவலான கவன ஈர்ப்பை பெற முடியவில்லை. ஆனால் நாடுகடந்த அரசாங்கம் மட்டும்தான் பரவலான மக்களின் கவன ஈர்பை பெற்றிருக்கின்றது. ஆனால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் பலர் இதனோடு இணைந்திருந்தனர்.

நாடுகடந்த அரசாங்கம் 2010இல் உருவாக்கப்பட்ட போது இதன் ஆலோசகர்களாக பலர் இணைந்திருந்ததாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டிருக்கின்றது. ஆனால் அவர்களில் பலர் இப்போது இந்த அமைப்போடு இல்லை. மேலும் இந்த அமைப்பு மேற்குலக மற்றும் இந்திய ராஜதந்திர சமூகத்தினர் மத்தியிலும் கருத்தில்கொள்ளப்படக் கூடியளவிற்கு வளர்சியடையவில்லை. ஒப்பீட்டடிப்படையில் ஏனைய புலம்பெயர் அமைப்புக்களுக்கிருக்கின்ற அங்கீகாரம் கூட நாடு கடந்த அரசாங்கத்திற்கில்லை. இதற்கு நாடு கடந்த அரசாங்கத்தின் கடடமைப்பிலுள்ள சிக்கல்களே பிரதான காரணமாகும்.

இந்த நிலையில் இந்த அமைப்பின் மறுசீரமைப்பு தொடர்பான கேள்விகள் எழுகின்றன. இந்த மறுசீரமைப்பு இரண்டு அடிப்படையைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒன்று கொள்கை நிலைப்பாடு சார்ந்தது அதாவது அரசியல் ரீதியானது. அடுத்தது கட்டமைப்பு சார்ந்தது. கட்டமைப்பு சார்ந்த விடயங்களுக்குள் நான் அதிகம் செல்லவில்லை. ஏனெனில் இது அந்தச் சூழலிலுள்ளவர்கள் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட வேண்டி ஒன்றாகும். ஆனால் இந்த அமைப்புக்குள் உள் முரண்பாடுகள் இருப்பது தெளிவாகவே தெரிகின்றது. உள்முரண்பாடுகளை பூசிமெழுகிக் கொண்டு செல்வதால் ஒரு போதும் பிரச்சினைகளை கையாள முடியாது. அவை முளையிலேயே கண்டறிந்து சரிசெய்யப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளிருந்த முரண்பாடுகளை சரியான முறையில் கையாண்டிருந்தால் இன்று தாயக தமிழ் தேசிய அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்கியிருக்காது. பிளவுகளும் ஏற்பட்டிருக்காது.

இந்தக் கட்டுரையாளர் அதிகம் அரசியல்ரீதியான மறுசீரமைப்பு தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றார். புலம்பெயர் சூழலில் இயங்கும் அமைப்புக்கள் தொலை தூர தேசியவாதமென்னும் கருத்தாக்கத்தின் கீழ் தாயகத்தோடு இணைகின்ற போது தாயக அரசியல் சூழலையும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்க வேண்டும். போர் முடிவுற்றதை தொடர்ந்து அவசர அவசரமாக உரையாடப்பட்டே நாடு கடந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அன்றைய சூழலில் ஆழமான பரிசீலினைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதே வேளை விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து சுயவிமர்சனம் சார்ந்த உரையாடல்களிலும் எவரும் ஈடுபடவில்லை. முக்கியமாக இந்தியாவின் வகிபாகம் தொடர்பில் தெளிவான புரிதல்கள் புலம்பெயர் சமூகத்திடம் இருந்திருக்கவில்லை. வெறுமனே மேற்குல நாடுகளில் சத்தம் போடுவதன் மூலம் விடயங்களை கையாண்டுவிட முடியுமென்னும் மேலோட்டமானதொரு பார்வையுடனேயே புலம்பெயர் சமூக அரசியல் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டன. ஆனால் கடந்த பதின்மூன்று வருடகால அனுபவங்கள் பிராந்திய அரசியல் சூழலை புறம்தள்ளி ஒரு போதுமே செயற்பட முடியாதென்னும் அனுபவத்தை நமக்கு வழங்கியிருக்கின்றது. உலகம் ஒழுங்கு பல்துருவ நிலையிருக்கின்ற போது மேற்குலகில் இங்குவதன் மூலம் விடயங்களை கையாள முடியாது. அது ஒரு துருப்புச் சீட்டாக இருக்கலாம் ஆனால் அதனைக் கொண்டு மட்டும் நகர முடியாது. இது நமது விருப்பு வெறுப்புக்கள் சார்;ந்த விடயமல்ல. இதுதான் உலக அரசியல் யதார்த்தமாகும். இந்த பின்புலத்தில் சிந்தித்தால் நாடுகடந்த அரசாங்கத்தை அரசியல்ரீதியில் மறுசீரமைக்க வேண்டிய கட்டாயமுண்டு. ஏனெனில் எவ்வாறு தாயக தமிழ் தேசிய அரசியல் சிதைவுற்றிருக்கின்றதோ அவ்வாறானதொரு நிலையில்தான் புலம்பெயர் யெற்பாடுகளும் அமைந்திருக்கின்றன.

முதலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பெயர் மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கான நாடுகடந்த அரசாங்கமென்று பெயரை மாற்றியமைக்கலாம். அதாவது தனிநாட்டுக்கான நிலைப்பாடு கைவிடப்பட வேண்டும். ஏனெனில் தாயகத்தில் அவ்வாறான நிலைப்பாட்டுக்கான அரசியல் சூழல் முற்றிலும் இல்லை. அத்துடன் அது பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் பின்புலத்தில் நோக்கினால் முற்றிலும் ஒரு கற்பனாவாதம் மட்டுமே. முக்கியமாக பிராந்திய அரசியல் சூழலுக்கு அது ஏற்புடைய வாதமல்ல. எனவே, அதற்கு பதிலாக உள்ளக சுயநிர்ணய உரிமையென்னும் நிலைப்பாட்டை கைக்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு செல்லும் போது உள்ளக சுயநிர்ணய உரிமையென்னும் நிலைப்பாட்டுடன்தான் சென்றிருந்தனர். நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஒரு தாராளவாத வெளித் தோற்றத்தை காண்பிக்க வேண்டும். அப்போதுதான் மேற்குலக ராஜதந்திர சமூகத்தோடு ஊடாடும் வாய்ப்பை பெறலாம். அங்கீகாரமே அரசியல் லொபிக்கான அடிப்படையாகும். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு இராணுவ கட்டமைப்பாக இருந்த போது பயன்படுத்திய அடையாளங்களை போருக்கு பின்னரான ஜனநாயக அரசியல் இயக்கத்திற்கு பன்படுத்த முடியாது. அது அடிப்படையிலேயே தவறானது.

கடந்த பதின் மூன்றுவருடகால அரசியல் நகர்வுகளை உற்று நோக்கினால் நாம் ஒரு விடயத்தை காணலாம். அதாவது அரசியல் பலமில்லாமல் நாம் ஒரு அடிகூட முன்நோக்கி பயணிக்க முடியாது. இந்த பின்புலத்தில் நோக்கினால் பதின்மூன்று வருடகால அரசியல் முன்னெடுப்புக்களானது வெறுமனே வெளியாரின் கருணைக்காக காத்திருந்த காலமாகவே கழிந்திருக்கின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் மீதான நம்பிக்கை அமெரிக்க அழுத்தங்களின் மீதான நம்பிக்கை மேற்குலக நாடுகளின் மீதான நம்பிக்கை இப்படித்தான் கடந்த பதின்மூன்றுவருடங்கள் நகர்ந்திருக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில் தாயகத்திலுள்ள மக்களால் முன்னோக்கி பயணிக்க முடியவில்லை. இந்தக் காலத்தில் இடம்பெற்ற விடயங்களை திரும்பிப் பார்த்தால் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகள் சில இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் பயணத் தடைகள் தற்போது கனடிய அரசு ராஜபக்சக்கள் மீது விதித்திருக்கும் தடைகள் போன்ற சில விடயங்கள் மட்டுமே நமக்கு முன்னாலிருக்கின்றன. ஆனால் தாயக மக்களுக்கான அரசியல் தீர்வில் ஒரு துரும்பளவு கூட நம்மால் முன்னநகர முடியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் மீளவும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்படுகின்றது. இலங்கைத் தீவு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற சூழலில்தான் மீளவும் அரசியல் தீர்வு விடயம் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அங்கமான 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்னும் வாதம் மேலேழுந்திருக்கின்றது. பிராந்திய சக்தியான இந்தியா தொடர்ந்தும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையானஇ 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் மட்டுமே வலியுறுத்திவருகின்ற நிலையில்இ அதனை ஓரமாக வைத்துவிட்டு ஈழத் தமிழர்களால் நகர முடியாது. இது தொடர்பில் ஈழத் தமிழர் புலம்பெயர் அமைப்புக்கள் கண்களை மூடிக் கொண்டிருக்கக் கூடாது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெயசங்கர் இந்தியாவின் நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துச் சென்றிருக்கின்றார். இதன் பின்னரும் நாங்கள் இந்தியாவிடம் வலியுறுத்துகின்றோம் என்றெல்லாம் பேசுவதும் விவாதிப்பதும் பயனற்றது. இந்தக் கட்டுரையாளர் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்பங்களில் இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தியிருக்கின்றார். அதாவது இந்தியாவின் எல்லையை புரிந்துகொள்ளாமல் இந்தியாவிடம் செல்வதில் பயனில்லை. அதே வேளை இந்த விடயத்தில் இந்தியாவை மீறி வேறு எவராலும் ஈழத் தமிழர்களுக்கு உதவவும் முடியாது. உதவினால் இந்தியாதான் உதவ முடியும் ஆனால் இந்தியா அதனால் உதவக்கூடிய எல்லையை தெளிவாக குறிப்பிட்ட பின்னர் அதற்கப்பால் சிந்தித்துக் கொண்டிருப்பதில் பொருளில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் ஆனால் அதுவரையில் அரசியல் அசைவற்ற நிலையில் இருக்க முடியுமா?

இந்தியாவுடன் ஊடாடுவது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம். நான் மேலே குறிப்பிட்டது போன்று நாடு கடந்த அரசாங்கத்தினை அரசியல்ரீதியில் மறுசீரபைபுச் செய்தால்தான் அது சாத்தியப்படும். தவிர, நாடு கடந்த அரசாங்கம் மத்திய அரசு பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்களை எதிர்ப்பதை ஒரு அரசியல் நிகழ்சிநிரலாகக் கெண்டிருக்கும் தமிழ்நாட்டு குழுக்களிலிருந்தும் அமைப்புக்களிலிருந்தும் முற்றிலும் வெளியில் வரவேண்டும். பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் விவகாரங்கள் முற்றிலும் உள்நாட்டு விவகாரங்களாகும். அது தொடர்பில் எந்தவொரு நிலைப்பாடும் ஈழத் தமிழர்களுக்கு இருக்கக் கூடாது. அவர்களுடன் உறவுகளை பேணிக்கொள்ள முடிந்தால் நல்லது. ஒரு வேளை முடியாவிட்டால் அமைதியாக இருக்கலாம்.

தமிழ் நாட்டிலுள்ள அரச எதிர்ப்பு குழுக்களுடன் தொடர்புகளை பேணிக்கொள்வது அடிப்படையிலேயே தவறானது மற்றும் ஆபத்தானது. இன்றைய அரசியல் ஒழுங்கு புரட்;சிகர வாதங்களுக்கானதல்ல. அதற்கு ஒரு காலமிருந்தது. இன்றைய உலக அரசியல் ஒழுங்கென்பது அடிப்படையிலேயே பலம் பொருந்திய நாடுகளின் நலன்களுக்கான உலக ஒழுங்காகும். ஒவ்வொரு நாடும் அதன் நீ;ண்டகால நலன்களை கருத்தில் கொண்டுதான் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் தலையீடு செய்கின்றது. இதில் சரி – பிழை, நீதி – அநீதி என்னும் சொற்களுக்கு எவ்வித பெறுமதியும் இல்லை. தந்திரம் தெரிந்தவர்கள் தப்பித்துக் கொள்ள முடியுமென்பதுதான் இந்த ஆட்டத்திற்கான விதியாகும். இதனை புரிந்துகொண்டுதான் நாம் செயற்பட வேண்டும்.

புலம்பெயர் சமூகங்கள் தேசக்கட்டுமானங்களில் வரலாற்று ரீதியான பங்களிப்புக்களை வழங்கியிருக்கின்றது. குறிப்பாக இஸ்ரேல் ஜரிஸ் ஆர்மேனியா ஸ்லேவேனியா குரோஸியா போன்ற தேசங்களின் கட்டுமானங்களில் புலம்பெயர் சமூகம் வரலாற்றுரீதியான பங்களிப்பை வழங்கியிருக்கின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால் ஈழத் தமிழ் புலம்பெயர் சமூகம் – தாயகத்தின் கட்டுமானங்களில் பெரியளவில் பங்களிக்க முடியும். புலம்பெயர் சமூகம் ஈழத் தமிழர்களுக்கான பலமென்பதில் இரு வேறுகருத்தில்லை. ஆனால் அது சரியாக கையாளப்படாவிட்டால் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். கடந்த பதின்மூன்று வருடகால புலம்பெயர் நகர்வுகள் சுயவிமர்சனத்திற்கும் மறுசீரமைப்பிற்கும் உள்ளாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் புதிய போக்குகளுக்கு புலம்பெயர் சமூகத்தினால் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடும்.
 

 

http://www.samakalam.com/நாடுகடந்த-அரசாங்கம்-மறுச/

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

முதலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பெயர் மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கான நாடுகடந்த அரசாங்கமென்று பெயரை மாற்றியமைக்கலாம். அதாவது தனிநாட்டுக்கான நிலைப்பாடு கைவிடப்பட வேண்டும். ஏனெனில் தாயகத்தில் அவ்வாறான நிலைப்பாட்டுக்கான அரசியல் சூழல் முற்றிலும் இல்லை.

இது பற்றிச் சில நாட்களுக்கு முன் யாழிணையத்தில் நித்தியானந்தாவின் திரி ஒன்றில் எழுதப்பட்டது. 😀

தமிழீழத்துக்கான தேவை வெளிநாட்டில் அருகி வருகிறது. ஏனென்றால் யாரும் தமிழீழம் கிடைத்தாலும் திரும்பிப் போகப் போவதில்லை. 

இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் கொஞ்சம் ஏற்பட்டால் அங்குள்ளவர்களுக்கும் தமிழீழத்தை மறந்து விடுவார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.