Jump to content

இவ்வாண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிக எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் வருகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

இவ்வாண்டு இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருப்பதாக ஜெட்விங் ட்ரவெல்ஸின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஷிரோமல் ஹுரே தெரிவித்துள்ளார்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு சுற்றுலாத்துறை உள்ளடங்கலாக நாட்டிற்கு வருமானம் ஈட்டித்தரக்கூடிய துறைகளை மேலும் வலுப்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை வர்த்தகப்பேரவையினால் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தகக் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் பங்கேற்று, கருத்து வெளியிட்டிருக்கும் ஷிரோமல் ஹுரே, 'எமது பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களிப்புச்செய்யும் நாடாக இந்தியா காணப்படுமென நான் நம்புவதுடன் தற்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பல்வேறு நேர்மறையான நகர்வுகள் பெரிதும் வரவேற்கத்தக்கவையாகும்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையான ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருந்த போதிலும், கடந்த ஆண்டு முழுவதும் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளில் பெரும் எண்ணிக்கையானோர் இந்தியர்களேயாவர்.

கடந்த ஆண்டு இலங்கைக்கு வருகைதந்த 719,978 சுற்றுலாப்பயணிகளில் 123,004 பேர் இந்தியர்களாவர். 

இவ்வாண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிக எண்ணிக்கையான சுற்றுலாப்பயணிகள் வருகை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்தில் எங்கே திரும்பினாலும் வழமையை விட சற்று அதிகமாக இவர்களை இம்முறை காணமுடிந்தது

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

விமான நிலையத்தில் எங்கே திரும்பினாலும் வழமையை விட சற்று அதிகமாக இவர்களை இம்முறை காணமுடிந்தது

எல்லாருமே இந்திய புலனாய்வாளர்களாக இருக்கும்.

தமிழ்கட்சிகளை நடத்துற விதத்திலேயே தெரியுதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லாருமே இந்திய புலனாய்வாளர்களாக இருக்கும்.

தமிழ்கட்சிகளை நடத்துற விதத்திலேயே தெரியுதே.

வணக்கம் அங்கிள்,

யாருக்குத் தெரியும்.. ஆனால் அவர்கள் பல வழிகளில்(புலம்பெயர் தமிழர்கள் ஊடாகவும் கூட) முயற்சிக்கிறார்கள். நிம்மதியாக எங்களை இருக்கவிடமாட்டார்கள் என்பது தெளிவு. 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் அங்கிள்,

யாருக்குத் தெரியும்.. ஆனால் அவர்கள் பல வழிகளில்(புலம்பெயர் தமிழர்கள் ஊடாகவும் கூட) முயற்சிக்கிறார்கள். நிம்மதியாக எங்களை இருக்கவிடமாட்டார்கள் என்பது தெளிவு. 

 

👌

ஆனால் பெரும் பால இந்திய பயணிகள் அதிகம் செலவழிக்க மாட்டார்கள்.

ரஸ்யா, உக்ரேன், மேற்கு, சீனா காரர்தான் செலவழிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

👌

ஆனால் பெரும் பால இந்திய பயணிகள் அதிகம் செலவழிக்க மாட்டார்கள்.

ரஸ்யா, உக்ரேன், மேற்கு, சீனா காரர்தான் செலவழிப்பார்கள்.

உண்மை.. ஆனால் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவான சுற்றுலாப் பயணிகளையே காணமுடிந்தது.. except சிங்கள மக்கள். 

ஆனால் திருகோணமலையில் ஆங்காங்கே வெளிநாட்டவரை நான் போயிருந்த சமயங்களில் காணமுடிந்தது. 

இந்தியா சார்பான புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தவர்களை அனுகும் முறை பற்றி அறிய முடிந்தது. கவலையாக இருந்தது. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.