Jump to content

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி… ஈஸ்டர் தாக்குதலுக்கும் மன்னிப்பு கோரினார் !!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி… ஈஸ்டர் தாக்குதலுக்கும் மன்னிப்பு கோரினார் !!!

சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் துயரச் சம்பவம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதி பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்குவர் என அக்கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

https://athavannews.com/2023/1322502

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சஹ்ரான் அல்ல ! அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் களமிறங்குவேன் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

By DIGITAL DESK 5

31 JAN, 2023 | 06:42 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரானைப் போன்று என்னை பார்க்க வேண்டாம். எனது ஆட்சி காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு கத்தோலிக்க மக்களிடமும் இறைவனிடமும் மன்னிப்பு கோருகின்றேன்.

என்னால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் இழைத்த தவறுக்காக நஷ்ட ஈடு செலுத்த வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் எவருக்கும் தண்டனை வழங்கப்படாத நிலையில் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மாத்திரம் எவ்வாறு நான் பொறுப்பு கூற வேண்டியவனாகின்றேன் என்று கேள்வியெழுப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் தான் களமிறங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் என்னை ஒரு குற்றவாளியைப் போன்று தேசிய ஊடகங்கள் காண்பிக்கின்றன.

நான் சஹ்ரானைப் போன்று கொடூரமான கொலைக்குற்றவாளியல்ல. என்னை ஊடகங்களில் பாரதூரமான குற்றவாளியைப் போன்று சித்தரிப்பது கவலையளிக்கிறது. எனவே ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி சட்டமா அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கையுடன் 100 வீதம் நானும் உடன்படுகின்றேன்.

சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாக சந்தேகிக்கப்படும் 160 சந்தேகநபர்கள் எனது ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது என்னை சஹ்ரானைப் போன்று சித்தரிக்கின்றனர்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சி காலத்தில் கிழக்கில் பொலிஸாரை அமைதிகாக்குமாறும் , அவ்வாறில்லை என்றால் விடுதலைப் புலிகள் பாரதூரமான தாக்குதல்களை மேற்கொள்வர் என்றும் கருணா அம்மான் நிபந்தனை விதித்தார். இதனால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பணிப்புரையை ஏற்று அமைதி காத்தமையால் சுமார் 700 பொலிஸார் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்.

இதே போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அவரது கண்களை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போனது.

இராணுவ தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா படுகாயமடைந்தார். யுத்த காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு யார் பொறுப்பு? இவை தொடர்பில் எவரேனும் கைது செய்யப்பட்டனரா? இவற்றுக்கு அப்போதைய ஜனாதிபதிகளா பொறுப்பு கூற வேண்டும்?

இல்லையல்லவா? அவ்வாறெனில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மாத்திரம் நான் எவ்வாறு பொறுப்பு கூற வேண்டியவனாகின்றேன்? இது தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கின்ற அதே வேளை, இவ்வாறான சதித்திட்டங்களுக்கு அஞ்சுபவன் நான் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் நெல்சன் மண்டேலாவினுடைய வரலாற்றை நன்கு அறிந்தவன். அவர் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். எனவே அவரைப் போன்றே எனக்கும் எவ்வாறான துன்பங்கள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். எவ்வாறிருப்பினும் எனது ஆட்சி காலத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இவ்வாறானதொரு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். அம்மக்களுக்கு என்மீது கோபம் இல்லை. அவர்கள் என்னுடன் அன்புடனேயே பழகுகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்பிலும் எனது தவறுக்காக நான் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக என்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தவறுக்காகவே நான் நஷ்டஈடு செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்ட ஈட்டை செலுத்துவதற்கான பொருளாதார வசதிகள் எனக்கு இல்லை என்பதால் , இயன்றவர்களை உதவுமாறு கோருகின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/147126

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையல்லவா? அவ்வாறெனில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மாத்திரம் நான் எவ்வாறு பொறுப்பு கூற வேண்டியவனாகின்றேன்? இது தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கூட, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கின்ற அதே வேளை, இவ்வாறான சதித்திட்டங்களுக்கு அஞ்சுபவன் நான் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மைத்திரி அவர்களே நீங்கள் உங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவுகட்டத்தான் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வென்று வர திட்டமிடுவதாக தெரிகிறது. மக்கள் உங்கள் மீது வேண்டாத பழி சுமத்துவதுபோல உணர்வதாகவும் அறியமுடிகிறது.
அப்படி ஒருவேளை நீங்கள் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகி வந்தால் செலுத்திய அபராத தொகையையும் மீள கையகப்படுத்தலாம். தீர்ப்பளித்த நீதிபதியை தரமிறக்கலாம் அல்லது தண்ணியில்லாக் காட்டுக்கு இடம் மாற்றலாம். உங்களை சஹ்ரானுடன் ஒப்பிட்டு பேசுவோரை சிறையில் அடைக்கலாம். ஆகவே நம்பிக்கையை தளர விட வேண்டாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இந்த நஷ்ட ஈட்டை செலுத்துவதற்கான பொருளாதார வசதிகள் எனக்கு இல்லை என்பதால் , இயன்றவர்களை உதவுமாறு கோருகின்றேன் என்றார்.

இவ்வளவு உள்குத்து, வெளிக்குத்து, ஆலாபனை எல்லாம் பிச்சை எடுப்பதற்கே என்று கடைசியில் முடித்து விட்டார். மீண்டும் எதற்கு அரசியல்? இழந்ததை மீட்கவா அன்றி இன்னும் தொடரவா? தனக்கு விதிக்கப்பட்ட நஷ்ட ஈட்டை செலுத்த வக்கில்லாதவர் ஏற்கெனவே பிச்சை எடுக்கும் நாட்டை எப்படி மீட்கப்போறாராம்? உலக நாடுகளிடம் கேக்கிற கடனோடு இதையும் சேர்த்து கொள்ளலாம்.

4 hours ago, ஏராளன் said:

யுத்த காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் எவருக்கும் தண்டனை வழங்கப்படாத நிலையில் , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு மாத்திரம் எவ்வாறு நான் பொறுப்பு கூற வேண்டியவனாகின்றேன்

அந்தத் துணிவுதான் உங்களை இப்படி நடக்கத்தூண்டியதோ? அதே போல் உங்களை மீண்டும் அரியணை ஏற்றுவார்கள் என நினைக்கிறீர்கள் போலுள்ளது. தமிழரின் வாக்கினால் தப்பினீர்கள் முன், அதற்கு கைம்மாறு பதவி இறங்குமுன்னே கையோடு அவர்களுக்கு கொடுத்துள்ளீர்கள். நீங்கள் நன்றி மறவாதவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி, மன்னிப்பு… என்றஒரு வார்த்தையை கூற,
தேர்தல் என்ற ஒன்று வரவேண்டி உள்ளது.
அரசியல்வாதிகள் எல்லோரும், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, vanangaamudi said:

அல்லது தண்ணியில்லாக் காட்டுக்கு இடம் மாற்றலாம். உங்களை சஹ்ரானுடன் ஒப்பிட்டு பேசுவோரை சிறையில் அடைக்கலாம்.

முன்னர் தான் தண்ணி இல்லா காட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று வெருட்டு

இப்ப அங்க தான்யா வாழ்க்கை.

சந்தோசமா போவாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

மைத்திரி, மன்னிப்பு… என்றஒரு வார்த்தையை கூற,
தேர்தல் என்ற ஒன்று வரவேண்டி உள்ளது.
அரசியல்வாதிகள் எல்லோரும், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள்.

அதே! ஆனால் மன்னிப்பு என்று கூறி விட்டு கொடுக்கப்பட்ட விளக்கம் அவரது உண்மைநிலையை எடுத்துக்காட்டியுள்ளது. அந்த மன்னிப்புக்குப்பின்னால் வைக்கப்படும் கோரிக்கை, ஒன்று பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு வேண்டாம் என்று சொல்வதை எதிர் பார்ப்பதோடு தேர்தலில் என்னைத் தெரிந்தெடுங்கள் என்பதாகும். முன்னே தான் யாரென்பதை காட்டிவிட்டார். இவர் மக்களை காப்பாற்றவல்ல சுயநல அரசியல் செய்யப்போகிறார் என்பதே காட்டிய உதாரணங்கள் விளக்குகின்றன. உண்மையாக மன்னிப்பு கோரினால் இனியொரு அழிவுக்கு நான் காரணமாக மாட்டேனென அரசியலிலிருந்து ஒதுங்கிப்போவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரானைப் போன்று என்னை பார்க்க வேண்டாம். எனது ஆட்சி காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கு கத்தோலிக்க மக்களிடமும் இறைவனிடமும் மன்னிப்பு கோருகின்றேன்.

இது தமிழர்கள் மீதான தாக்குதல் இல்லையா?

தாக்குதல்தாரிகள் ஏன் தமிழர்கள் செல்லும் தேவாலயங்களை தேர்ந்தெடுத்தார்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியலுக்கு தமிழரை பலிகொடுத்து, பலியெடுத்தாற்த்தான் கதிரை கிட்டும். அதற்கு வேண்டியது தமிழரின் குருதி. எவ்வளவு இலகுவாக தமிழர் என்கிற பதத்தை மறைத்து கத்தோலிக்கர் என்று விளித்து தமிழரின் வாக்குக்கு சுழி போட்டிருக்கிறார். அவரை கதிரைக்கு அனுப்பியது, சிங்கள கத்தோலிக்க, தமிழ் வாக்குகளே. அதில் எல்லா மதமும் அடங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பிரதேசங்களில் இல்லாத கத்தோலிக்க தேவாலயங்களா என்ன? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்குதான் அவர் மறைத்த இரகசியமே மறைந்திருக்கு. கேட்க நாதியற்றவன் இங்கேதான் இருக்கிறான். வாக்கு கொடுக்கும் வாத்துகள். சிங்களவன் செத்தால் விழும் வாக்குகள் குறையுமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிங்கள பிரதேசங்களில் இல்லாத கத்தோலிக்க தேவாலயங்களா என்ன? 😎

சாமியார்! மைத்திரியின் பாசாங்கு மன்னிப்பு கோரலுக்கு இலங்கை கத்தோலிக்க சபை தக்க பதிலடி கொடுத்திருக்கு. மைத்திரிக்கு  வாசிப்பில், விளங்குதலில்  ஏதோ குறைபாடுபோலுள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்புக் கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிவிட முடியாது மைத்திரிக்கு வாக்களிக்குமளவிற்கு மக்கள் முட்டாள்களல்ல - பேராயர் இல்லம்

By Digital Desk 5

01 Feb, 2023 | 09:56 AM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை முன்னரே அறிந்திருந்தும் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயம் சிறை செல்வார். ஊடகங்களில் மன்னிப்பு கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து அவரால் தப்பி விட முடியாது என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் சமூக தொடர்புகளுக்கான பணிப்பாளர் அருட் தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு தாக்குதல்களும் முன்னரே அறிவிக்கப்பட்டவையல்ல. அதன் அடிப்படையில் அவற்றுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சமப்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டிய அருட்தந்தை  ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களிக்குமளவிற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நேற்று தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் , ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அருட்தந்தை இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த 30 ஆண்டுகளாக வடக்கில் நிலவிய யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். யுத்த காலத்தில் இடம்பெற்றவற்றையும் , இதனையும் சமப்படுத்த முடியாது என்பதை முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவர் அறியவில்லையா?

யுத்த காலத்தில் பயங்கரவாதிகள் தமது எதிர்தரப்பினர் மீது தாக்குதல்களை மேற்கொள்வர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இந்த தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையிலும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் யுத்த காலத்தில் இவ்வாறு முன்னரே அறிவிக்கப்பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இவ்விரண்டையும் தொடர்புபடுத்த முடியாது. தாக்குதல் தொடர்பில் முன்னரே அறிந்திருந்தும் அது தொடர்பில் அறிவிக்காமையே இங்கு இழைக்கப்பட்ட பாரிய குற்றமாகும்.

தனக்கு கீழ் செயற்பட்ட அதிகாரிகளின் தவறால் தான் அவருக்கு நஷ்ட ஈடு செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பினை நன்றாக பார்க்குமாறு அவரிடம் வலியுறுத்துகின்றோம். தீர்ப்பு ஆங்கில மொழியில் காணப்பட்டமையால் அவர் அதனை சரியாக புரிந்து கொள்ளவில்லை போலும்.

அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தாக்குதல்கள் தொடர்பில் அவருக்கு அறிவிக்கவில்லை என்றால் , அதற்கான சூழலை ஏற்படுத்தாமலிருந்தது ஜனாதிபதி என்ற ரீதியில் அவர் இழைத்த தவறாகும் என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு ஜனாதிபதியும் வெளிநாடு செல்லும் போது பதில் ஜனாதிபதியொருவரை அல்லது பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமித்துச் செல்ல வேண்டியது அத்தியாவசியமானதாகும். அவர்  அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமையும் தவறாகும். நாட்டில் பல மாதங்களாக தேசிய பாதுகாப்பு சபை கூட்டப்படவில்லை. அரச தலைவர் என்ற ரீதியில் தேசிய பொறுப்பினை அவர் தட்டிக்கழித்துள்ளமையும் பெருந்தவறாகும்.

அவரது இந்த தட்டிக்கழிப்பினால் 270 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. பலர் அங்கவீனமுற்றவர்களாகியுள்ளனர். பலர் தமது உறவினர்களை இழந்துள்ளனர். எனவே இதனை சாதாரணமானதாகக் கருத முடியாது. இவை அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. நீதிமன்ற தீர்ப்பினை அறியாமல் ஊடகங்கள் முன்னிலையில் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்.

கத்தோலிக்க அருட்தந்தைகள் இந்த தீர்ப்பினை நன்றாக படித்தறிந்து கொண்டுள்ளனர். எனவே எம்மிடம் பொய்யுரைக்க வர வேண்டாம். கத்தோலிக்க மக்கள் அவரை அன்புடன் வரவேற்பதாகக் கூறுவதும் முற்றிலும் பொய்யாகும். கொச்சிக்கடை பிரதேசத்திற்குச் சென்றால் மக்கள் அவரை எவ்வாறு வரவேற்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இறைவனுக்காக மன்னிப்பு கோருவதாகக் கூறும் அவர் இறைவனின் பிரதிநிதி அல்ல. கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கோருவதால் நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது. உண்மையில் மன்னிப்பு கோர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருந்தால் , தாக்குதல்கள் இடம்பெற்ற அன்றைய தினமே மன்னிப்பு கோரியிருக்க வேண்டும் என்பதோடு மாத்திரமின்றி , ஜனாதிபதி பதவியிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். மாறாக தற்போது வசனத்தினால் மன்னிப்பு கோருவதால் மாத்திரம் எம்மை ஏமாற்றிவிட முடியாது.

நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியமைக்காக அவர் முழு இலங்கையர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும். மாறாக ஊடகங்களில் அவர் மன்னிப்பு  கோருவதால் அனைத்தும் வழமைக்கு திரும்பப் போவதில்லை. நீதிமன்ற தீர்ப்பின் படி நஷ்ட ஈட்டை வழங்குவதற்கு தன்னிடம் வசதியில்லை என்று அவர் பொய் கூறினாலும் , அவரிடமுள்ள சொத்து விபரங்களை நாம் அறிவோம். தேர்தல் அண்மித்துள்ளமையின் காரணமாகவே அவருக்கு கத்தோலிக்க மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தோன்றியுள்ளது.

இதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று எண்ண வேண்டாம். எமது மக்கள் அவருக்கு வாக்களிக்கும் வகையில் முட்டாள்கள் அல்ல. தேர்தல் முடிவுகளின் பின்னர் அவர் அதனை உணர்ந்து கொள்வார். தெரிந்தே இழைத்த தவறுக்காக அவர் நிச்சயம் சிறை செல்வார். 

அதிலிருந்து ஒருபோதும் அவரால் தப்பிக்க முடியாது. அரசியல் ரீதியில் அவர் தோல்வியடைந்தவராவார். அவரது உறவினர்கள் கூட உதவ முன்வராத நிலைமையிலேயே அவர் காணப்படுகின்றார். இவ்வாறானவரால் எவ்வாறு அடுத்த ஜனாதிபதியாக முடியும்? ஜனாதிபதி மாத்திரமல்ல , அவர் அதற்கு முன்னர் கிராம உத்தியோகத்தராகக் கூட ஆக முடியாது என்றார்.
 

https://www.virakesari.lk/article/147145

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எந்தவொரு ஜனாதிபதியும் வெளிநாடு செல்லும் போது பதில் ஜனாதிபதியொருவரை அல்லது பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமித்துச் செல்ல வேண்டியது அத்தியாவசியமானதாகும். அவர்  அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமையும் தவறாகும்.

பதில் ஜனாதிபதியை நியமித்துச் செல்லும் அவசியம் அவருக்கு இருக்கவில்லை காரணம் புதிய ஜனாதிபதி, அமைச்சரவையை எதிர்பார்த்தே தாக்குதல் நடக்கும்வேளை நாட்டில் தான் இருக்கக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே திட்டம் போட்டு வெளியேறினார். அரசாங்கத்தில் உள்ள பலருக்கு தாக்குதல் நடத்தப்பட இருந்தது முன்பு தெரிந்தே இருந்தது, கொல்லப்படுவது தமிழர் உயிர்களே, யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை பத்தோடு பதினொன்றாக போகட்டுமேன் என்று எண்ணியிருப்பார். நஷ்டஈடு அறிவிக்கும்வரை இறந்த மக்களுக்காக மனம் வருந்தவில்லை, மன்னிப்பு கேட்க மனம் வரவில்லை. அவர் கொடுத்த விளக்கம் அவரது தெனாவட்டை நிரூபிக்குது. அதாவது தமிழர் கொல்லப்பட்டால் அதற்கு யாரும் தண்டகப்படமாட்டார்கள் என்பது இந்த நாட்டில் எழுதப்படாத சட்டம்.  அப்பாவிகளை பலிகொடுத்து பெற்ற பதவி பாதியிலே இழந்து பரிதவிக்கிறார் ஒருவர், அடுத்தது இவர் அனுபவியாமல் போகார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

சாமியார்! மைத்திரியின் பாசாங்கு மன்னிப்பு கோரலுக்கு இலங்கை கத்தோலிக்க சபை தக்க பதிலடி கொடுத்திருக்கு. மைத்திரிக்கு  வாசிப்பில், விளங்குதலில்  ஏதோ குறைபாடுபோலுள்ளது!

இதை தமிழர் பிரச்சனை ஆக்கி விட்டிருந்தால் ஆள் தப்பியிருக்கலாம் :face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் இனத்தை சார்ந்த சக மதத்தவனை பலி கொடுக்க….

சிங்களவர்கள் ஒன்றும் தமிழர்கள் அல்ல.

திட்டமிட்டே தமிழர் கூடும் தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டன.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்புக்கு '2024' தேர்தல் காரணமா? கிறிஸ்தவ மக்களின் நிலை என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
இலங்கை மைத்திரிபால சிறிசேன

பட மூலாதாரம்,PMD SRI LANKA

இலங்கையில் மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலான ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டு, நான்கு வருடங்களை அண்மித்துள்ள இந்த சூழ்நிலையில், அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் முறையாக இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கோரினார்.

 

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவொன்றை பிறப்பித்தது.

இதன்படி, 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அத்துடன், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோர் 75 மில்லியன் ரூபா விதமும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 50 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் 10 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு செலுத்த வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நட்டஈட்டு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த நட்டஈட்டை தொகையிலிருந்து, தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் தலா ஒரு மில்லியன் ரூபா வீதமும், தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 லட்சம் ரூபா வீதமும் நட்டஈட்டை வழங்குமாறும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மைத்திரி கோரிய பகிரங்க மன்னிப்பு

இவ்வாறான நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் தான் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தன்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறிழைத்துள்ளமையினால், அந்த அதிகாரிகளை நியமித்த தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதைவிடுத்து, தனக்கும், இந்த தாக்குதலுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என கூறிய அவர், இவ்வாறான தாக்குதலொன்று நடத்தப்படவுள்ளமை தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

இலங்கை மைத்திரிபால சிறிசேன

பட மூலாதாரம்,EPA

 

 

 

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் உடல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

''நான் அறிந்த விதத்தில் கத்தோலிக்க மக்கள், என்மீது வைராக்கியமோ, குரோதமோ வைக்கவில்லை. எனது ஆட்சிக் காலத்தில் வேறு நபர்களினால் செய்யப்பட்ட தவறு காரணமாக இன்று எனக்கு நட்டஈடு செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சிக் காலத்தில், இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றமை குறித்து உயிரிழந்த மக்கள், அங்கங்களை இழந்து, ஓரிடத்தில் முடங்கியுள்ள மக்களிடமும், இறைவனிடமும் விசேடமாக மன்னிப்பு கோருகின்றேன்.

அதேபோன்று, நான் எந்தவொரு விடயமும் அறியாமல், இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இவ்வாறு உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டமை தொடர்பில் கத்தோலிக்க மக்களிடமும் நான் மன்னிப்பு கோருகின்றேன்.

நான் தவறிழைத்ததாக இந்த தீர்ப்பில் கூறப்படவில்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஏதேனும் பாரிய குற்றங்களை இழைத்திருப்பார்களாயின், அந்த குற்றத்திற்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என மிகவும் தெளிவாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது." என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

 

2024ம் ஆண்டு தேர்தலில் மைத்திரிபால போட்டி

இலங்கை

பட மூலாதாரம்,REUTERS

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோரிய அடுத்த நிமிடமே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஈஸ்டர் தாக்குதலில் மன்னிப்பு கோரும் வகையில் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

''தென் ஆபிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா 27 வருடங்கள் சிறைச்சாலையில் இருந்தார். 27 வருடங்கள் சிறை வாழ்க்கையை முடித்து விட்டு வெளியில் வந்த அவரை, அந்த நாட்டு மக்கள் நாட்டின் தலைவராக்கினார்கள். அதனால், ஒரு விடயத்தை மிகவும் தெளிவாக கூற வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் பின்வாங்கும் மனிதன் அல்ல.

எந்தவொரு சூழ்ச்சியை கண்டும் நான் அஞ்சப் போவதில்லை. நீதிமன்றத்திற்கு நான் மதிப்பளிக்கின்றேன். சட்டத்தை மதிக்கின்றேன். நீதிமன்றத்திற்கு தலைவணங்குகின்றேன். நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை நான் முழுமையாக வாசித்துள்ளேன். எனக்கு எவ்வாறான துன்புறுத்தல்கள் கொடுத்தாலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எனது கட்சியின் ஆதரவுடன் எனக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதனை மிகவும் தெளிவாக கூறிக் கொள்கின்றேன்." என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.

 

மன்னிப்பை ஏற்க மறுப்பு

அருட்தந்தை எம்.சக்திவேல்
 
படக்குறிப்பு,

அருட்தந்தை எம்.சக்திவேல்

 

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பகிரங்கமாக கோரப்பட்ட மன்னிப்பானது, சுயநல மன்னிப்பே தவிர, ஆன்மீக மன்னிப்பு கிடையாது என கூறிய அருட்தந்தை எம்.சக்திவேல், இந்த மன்னிப்பை தம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

''மன்னிப்பு கேட்பது வேறு. மன்னிப்புடன் சேர்த்து அடுத்த தேர்தலில் போட்டியிட போகின்றேன் என்று சொன்னால், இது உண்மையான மன்னிப்பு கிடையாது. இது அடுத்த தேர்தலுக்கு, நான் மன்னிப்பு கேட்டு விட்டேன்;. இதுவரை எந்தவொரு தலைவரும் செய்யாத ஒன்றை, நான் செய்திருக்கின்றேன் என்பதை காட்டி ஒரு பக்கம் அரசியலை கொண்டு வருகின்றார்.

இந்த மன்னிப்பு, இறந்து போன உயிர்களை மீள கொண்டு வந்து கொடுக்குமா?. இல்லை. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை இவர் வெளிப்படுத்த விரும்பவில்லை. இவருக்கு அது தெரியும். மன்னிப்பு கேட்கும் அதேநேரம், இவருக்கு தெரிந்த உண்மையையும் வெளியிட்டிருக்க வேண்டும். உண்மைகள் அனைத்தையும் சொல்வதாக நாடாளுமன்றத்தில் அவர் கூறியிருந்தார். ஆனால், எந்தவொரு உண்மையையும் அவர் சொல்லவில்லை. மன்னிப்பு என்பது ஆழத்தில் இருந்து வரவேண்டும். எதற்கு மன்னிப்பு கேட்கின்றார்?. தான் செய்ததற்கு மட்டுமா? தான் செய்யாமல் விட்டதற்கு மட்டுமா? அல்லது உண்மையை இன்னும் மறைத்து வைத்திருக்கின்றேன். அதற்காக மன்னிப்பு கேட்கின்றாரா?

இது ஒரு அரசியல் ரீதியிலான, சுயநலம் கொண்ட ஒரு மன்னிப்பே தவிர, இதில் ஆன்மீக ரீதியிலான மன்னிப்பு கிடையாது. ஆன்மீக ரீதியிலான மன்னிப்பு என்பது வேறு. இதற்குள் அரசியல் தான் இருக்கின்றது. இதுவொரு சுயலன மன்னிப்பு. அதனால், இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. மீண்டும் மீண்டும் தான் ஒரு அரசியல்வாதி என்பதை காட்ட வருகின்றாரே தவிர, ஒரு மனிதனாக காட்டவில்லை. மனிதன் என்று சொன்னால், ஆன்மீகத்தில் இருந்து சொல்ல வேண்டும். ஆன்மீகத்திலிருந்து சொல்லும் போது, உண்மை வெளிவரும். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஏன் காத்திருந்தார்.

அதுவரை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. நான் ஒன்றும் செய்யவில்லை. நான் ஒன்றும் செய்யவில்லை, என்னை குற்றவாளியாக்கிவிட்டார்கள் என்று சொன்னாரே தவிர, ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது எப்படி மனம் திருந்தினார். தேர்தலில் நிற்க போகின்றேன் என்று வரும் போது தான், மனம் திருந்துகின்றார். அதற்கு முன்பு மனம் திருந்தவில்லை. இந்த மனம் திருந்தலானது, அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. இதில் ஆன்மீகம் கிடையாது. மனிதம் கிடையாது. உண்மை கிடையாது." என அருட்தந்தை எம்.சக்திவேல் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c6pw3ded1p3o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வக்கில்லை, ஜனாதிபதியாக்கி அழகு பாத்த மக்களை காக்க துப்பில்லை, தீர்ப்பை வாசித்து விளங்க அறிவில்லை, குற்றத்தை ஏற்க தென்பில்லை, மன்னிப்புக்கேட்க மனமில்லை, அதிலை மீண்டும் ஜனாதிபதியாகும் கனவு இவருக்கு ஒரு கேடு. மொத்தத்தில் சாதாரண கிராம சேவகர் பதவிக்கே லாயக்கற்றவர் இவர். மக்கள் என்ன முட்டாள்களா மீண்டும் இவரை தெரிவு செய்து தங்களுக்கு கிடங்கு வெட்ட?

9 hours ago, குமாரசாமி said:

இதை தமிழர் பிரச்சனை ஆக்கி விட்டிருந்தால் ஆள் தப்பியிருக்கலாம் :face_with_tears_of_joy:

தமிழரின் வாக்குப்பலம் தெரிந்தவர் அப்படிச் சொல்வாரா? கிறிஸ்தவர்களை விட்டாலும் மற்றவர்களின் வாக்கை இழக்க விரும்பாமல் இருந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளிடமே மன்னிப்புக் கோரினேன்; கத்தோலிக்க தேவாலயத்திடம் அல்ல! - மைத்திரி

By NANTHINI

02 FEB, 2023 | 03:45 PM
image

 

யிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க தேவாலயத்திடம் மன்னிப்பு  கேட்கவில்லை. கடவுளிடமே மன்னிப்பு கோரினேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற பயங்கரவாத  தாக்குதல்களுக்கு சமூகத்திடம் அவர் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் கோரிய மன்னிப்பை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/147281

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

யிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க தேவாலயத்திடம் மன்னிப்பு  கேட்கவில்லை. கடவுளிடமே மன்னிப்பு கோரினேன்

தன்னால் பாதிக்கப்பட்ட, கண்முன்னே இருக்கும்  மக்களிடம் மன்னிப்பு கேளாதவர், காணாத கடவுளிடம் மன்னிப்பு கேட்டாராம். கடவுள் என்ன பதில் சொல்லியிருப்பார் என்பது எதிர்வரும் காலத்தில் தெரிய வரும். மன்னிப்புகேட்பதிலேயே இத்தனை மாறுபாடு, இதிலிருந்து இவரது தாக்குதல் உள்நோக்கம் புரியுது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.