Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மாநகர புதிய முதல்வர் தொடர்பில் மணிவண்ணன் பகிரங்க குற்றச்சாட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர புதிய முதல்வர் தொடர்பில் மணிவண்ணன் பகிரங்க குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் எட்டுக்கோடி ரூபாய் செலவில் எம்மால் புனரமைக்கப்படவிருந்த குளத்தின் புனரமைப்பு பணிகளை வெற்றிகரமாக புதிய முதல்வர் நிறுத்தியுள்ளார் என யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வி.மணிவண்ணன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண நகரின் மத்தியில் ஸ்ரான்லி வீதி – கஸ்தூரியார் வீதி சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள நகரக் குளத்தை புனரமைப்புச் செய்வதற்காக தனியார் நிறுவனமொன்றின் எட்டுக் கோடி பெறுமதியான நிதிப் பங்களிப்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு புனரமைப்புப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது யாவருமறிந்த விடயமே.இந் நிலையிலே எமது ஆட்சியைக் கவிழ்த்து உள்ளூராட்சி ஆணையாளராலே திருட்டுத்தனமாக சட்டவிரோதமாக தெரிவு செய்யப்பட்ட சட்டவிரோத முதல்வர் சட்டவிரோதமாகச் சபையைக் கூட்டி தீர்மானமொன்றை எடுத்ததாகக் அறிந்தோம்.

கல்வியங்காடு பொதுச்சந்தையில் கட்டடமொன்று திறந்து வைக்கப்பட்டது. அதிலே நாட்டப்பட்ட நினைவுக்கல்லையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளதாகவும் அறிந்தேன்.

நான் முதல்வராக இருந்த போது நாடு பொருளாதார நிலையிலே பாதிக்கப்பட்டிருந்தாலும் தனியார் நலன் விரும்பிகள், நிறுவனங்களின் கால்களிலே விழுந்து இவ்வாறான பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தேன். ஆனோல்ட் முதல்வராக இருந்த போது சட்டவிரோதமாக தனது புதுவீட்டைக் கட்டினார். அதுதான் அவர் செய்த விடயம்.

ஒரு முதல்வர் பதவியெடுத்தவுடன் நல்ல விடயங்களை முன்னெடுக்காமல் செய்யும் காரியங்களை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது 8 கோடி செலவில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. நான் தனியாரிடம் மன்றாடிப் பெற்ற நிதியின் மூலம் புனரமைத்த ஆரியகுளத்தை என்ன செய்யப் போகின்றார்களோ தெரியாது.

சட்டவிரோதமாக இரவோடிரவாக தன் பண செல்வாக்கு மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக முதல்வராக வந்தவர் – மாநகர சபை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கினார் என்ற செய்தியும் முகநூல் வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

எனவே இதை மக்கள் சரியாக புரிந்து கொண்டு எதிர்வரும் தேர்தலில் சட்ட விரோதிகளையும் பச்சோந்திகளையும் நகரத்திலிருந்து அடித்து விரட்டவேண்டும்” – என்றார்.

 

https://athavannews.com/2023/1322439

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாதவர் வி.மணிவண்ணன் – ஆனோல்ட் குற்றச்சாட்டு

இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாதவர் வி.மணிவண்ணன் – ஆனோல்ட் குற்றச்சாட்டு

இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாத முன்னாள் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைத்திருக்கின்றார் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றஞ்சாட்டினார்.

யாழ் மாநகர சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,”நேற்று சபை அமர்வுக்கு வரமால் கையெழுத்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். சபை கூட்டத்திலே முழுமையாக கலந்து கொள்ளாமல் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடுவது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம், தாம் கொண்டுவந்த செயல்திட்டங்களை
இடைநிறுத்துகிறார்கள் என கூறுகின்றார். ஆனால் அவர்கள் கல்வெட்டுக்களில் பெயர்போட்ட திட்டங்கள் எல்லாமே எனது காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள்.

ஆரிய குளம் தவிர முன்னாள் முதல்வரால் புனரமைக்கப்பட்ட அனைத்து குள திட்டங்களும் நான் முதல்வராக இருக்கும் போதே முன்மொழியப்பட்ட திட்டங்களாகும்.

என்னால் ஆரம்பிக்கப்பட்ட செயல்திட்டங்களை தான் முன்னாள் முதல்வர் செயற்படுத்தினரே தவிர அவர் ஒன்றும் புதிதாக ஒன்றும் செய்யவில்லை. டயலொக் நிறுவனத்தினருடன் ஒப்பந்தமே இல்லாத போது குளத்தின் அண்மையில் பதாகைகளை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.இது ஒரு வியப்பான விடயமாக உள்ளது.

தங்களுடைய விளம்பரத்திற்காகவும் தங்களுடைய சுயலாப அரசியல் முன்னேற்றத்திற்காகவும் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட விடயமே தவிர புதிதாக அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது வேறு திட்டங்களை செயற்படுத்தவில்லை.

நான் முதல்வராக இருக்கும்போது அரசாங்கத்திடமிருந்து 720 மில்லியன் ரூபா நிதியினை பெற்று பல திட்டங்களை நிறைவேற்றி இருந்தேன். கம்பரெலியா திட்டம் வேறு பல திட்டங்களை செயற்படுத்தி யாழ் நகரத்தினை பல வேலை திட்டங்களை செயற்படுத்தி இருக்கின்றோம்.

யுத்தத்தின் போது அழிவடைந்த யாழ் மாநகர சபையின் நிரந்தர கட்டிடத்தினை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அந்த கட்டிடத்தினை கட்டுவதற்கு அடித்தளமிட்டது நான் தான்.

2023 ம் ஆண்டு பாதீடு தோற்கடிக்கப்பட்டதுஇரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க வக்கில்லாத முன்னாள் முதல்வர் மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைக்கிறார் வெட்கம் இல்லையா? அவருக்கு ஒரு சட்டம் தெரிந்த சட்டத்தரணி திருட்டுத்தனமாக நான் முதல்வராக வந்ததாக தெரிவிக்கின்றார். இது ஒரு வியப்பான விடயம் என்றார்.
 

https://athavannews.com/2023/1322613

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

கம்பரெலியா திட்டம் வேறு பல திட்டங்களை செயற்படுத்தி யாழ் நகரத்தினை பல வேலை திட்டங்களை செயற்படுத்தி இருக்கின்றோம்.

அந்த வேலைத்திட்டங்கள் என்னவென்பதையும் தெரிவிக்கிறது. சும்மா பலவேலைத்திட்டங்கள் என மொட்டையாய்ச் சொன்னால் எப்படி? 

18 hours ago, கிருபன் said:

அவர்கள் கல்வெட்டுக்களில் பெயர்போட்ட திட்டங்கள் எல்லாமே எனது காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள்.

ஆமா.... அங்கஜனும் திட்டங்கள் போட்டவர், தாடியரும் போட்டவர், நீங்களும் சளைத்தவர்களல்லர் திட்டங்களை காட்டி மக்களை ஏமாற்றுவதில். திட்டங்களை நீங்கள் போட்டீர்கள் என்பதற்காக  மாற்றாமல் அதை அப்படியே  நிறைவேற்றுவதே சாதனை!

18 hours ago, கிருபன் said:

2023 ம் ஆண்டு பாதீடு தோற்கடிக்கப்பட்டதுஇரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க வக்கில்லாத முன்னாள் முதல்வர் மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைக்கிறார் வெட்கம் இல்லையா?

உங்களின் கடந்த காலத்தையும் கொஞ்சம் நினைத்துப்பார்த்து கருத்து தெரிவித்தால் பின்னர் வரும் விமர்சனங்களை தவிர்க்கலாம்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.