புடின் ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டினார்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் குற்றச்சாட்டு!

By
கிருபன்
in உலக நடப்பு
-
Tell a friend
-
Topics
-
Posts
-
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பையடுத்து மீண்டும் உயர்வடைந்தது ரூபாவின் பெறுமதி Published By: VISHNU 21 MAR, 2023 | 05:30 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பையடுத்து இன்று (21) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வடைந்துள்ளது. நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது. இருப்பினும் கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சடுதியான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டதுடன், ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்துச்சென்றது. ஆனால் நேற்று (20) திங்கட்கிழமை மீண்டும் ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன்படி நேற்று (20) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 331.71 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 349.87 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்திருப்பதாக இன்று (21) உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து மீண்டும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. அதன்படி இன்று (21) செவ்வாய்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 316.84 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 334.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/151098
-
By ஈழப்பிரியன் · Posted
அது தான் பெயரைப் பார்த்தாலே அதிருதில்ல. -
16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம் - அரசாங்கம் Published By: DIGITAL DESK 5 21 MAR, 2023 | 11:43 AM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம். எனினும் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. எனவே நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , சர்வதேச நாணய நிதியத்துடனான எந்தவொரு நிபந்தனைகளையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது. இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை அனைத்தும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அரசியலமைப்பிற்கமைய நிதி தொடர்பான சகல அதிகாரங்களும் பாராளுமன்றத்திடமே காணப்படுகிறது. இந்த கடனுதவி திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில் , கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படவுள்ள 48 மாதங்களும் யார் ஆட்சி செய்தாலும் , எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய அதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சர்வதேசத்துடன் எம்மால் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் முன்னெடுக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கு எதிர்ப்புக்கள் காணப்பட்டாலும் அல்லது அவற்றை ஏற்றுக் கொண்டாலும் அது தொடர்பில் சகல கட்சிகளும் பாராளுமன்றத்தில் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்குமானால் அது சிறந்ததாகும். அத்தோடு இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியிருக்கின்றோம். ஆனால் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. இதற்காக அரசியல் வேறுபாடுகள் இன்றி தேசிய ரீதியில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அரச நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாணய நிதியத்தினால் நீடிக்கப்பட்ட கடன் வசதித்திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் வழங்கப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மீது ஏற்படும் நம்பிக்கையின் அடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான கடன்களாக இவ்வருடத்திற்குள் 7 பில்லியன் டொலர் கிடைக்கப்பெறும். நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்தினை பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளன. அவை தொடர்பில் விரைவில் நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னரே அவற்றை வெளிப்படுத்த முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட உரை நிகழ்த்துவார். நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த முழுமையான பொறுப்புக்கள் நாட்டு மக்களுடையது. வேலைத்திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாவிட்டால் , நாடு பாரிய நெருக்கடிகளையே எதிர்கொள்ளும். நாட்டை நேசிக்கும் மக்கள் அதைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவார் என்று நம்புகின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டில் காணப்படும் நிபந்தனைகளில் ஒன்று ஊழல் , மோசடிகளை ஒழிப்பதற்கான சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/151027
-
By ஏராளன் · பதியப்பட்டது
நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள் எத்தனையோ மனிதர்களை நட்புக்கு எடுத்துக்காட்டாய் நாம் சுட்டுகிறோம். படித்து அதிசயிக்கிறோம். ஆனால் எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலேயே நட்புக்கு எடுத்துக்காட்டாய் பார்த்த கணத்திலிருந்து இறந்து வீழ்ந்த கணம் வரை வாழ்ந்தவர்கள் என்றால் கர்ணனையும் துரியோதனனையுமே சுட்டலாம். அவர்களின் சிறப்பான பக்கங்களைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. அஸ்தினாபுர அரண்மனையில் மன்னர்களுக்கிடையே ஒரு வில்வித்தைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபோட்டியில் விஜயன் வென்றுவிட அங்கே தேரோட்டியின் மகனான கர்ணன் பங்கெடுக்க விரும்புகிறான். ஆனால் துரோணரோ அது க்ஷத்திரிய மன்னர்களுக்கான போட்டி என நிராகரிக்கிறார். உடனே துரியோதனன் கர்ணனைத் தன் நண்பனாக ஏற்று அங்க தேசத்தின் அரசனாக அறிவிக்கிறான். இங்கே ஆரம்பிக்கிறது அவர்களின் மாசற்ற நட்பும் கர்ணனின் செஞ்சோற்றுக் கடனும். ப்ரக்ஜோதிஷ்பூரை ஆண்ட பகதத்தன் என்பவரின் மகள் பானுமதி. இவளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொள்ளை கொள்ளும் அழகுடைய பானுமதியைக் கரம்பிடிக்கஅங்கே அனைத்து தேசத்து அரசர்களும் அணிவகுத்திருந்தனர். அப்போட்டியில் பங்கேற்க துரியோதனனும் சென்றிருந்தான். அவனுக்குத் தோழனாக கர்ணனும் சென்றிருந்தான். பார்த்ததுமே பானுமதியின் அழகில் மயங்கினான் துரியோதனன். ஆனால் அவளோ சுயம்வர மாலையோடு துரியோதனன் பக்கம் வந்ததும் வேறு பக்கம் திரும்பி விட அவளைக் கடத்திச் சென்று மணக்கத் துடிக்கிறான். இச்சந்தர்ப்பத்தில் கர்ணன் தேரோட்டியாக இருந்து பல்வேறு மன்னர்களுடன் போரிட்டு இருவரையும் அஸ்தினாபுரத்துக்குக் கொண்டு வந்து சேர்க்க அவர்கள் திருமணம் அதன் பின் இருமனம் இணைந்த திருமணமாக முடிந்தது. ஒருமுறை பானுமதியும் கர்ணனும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே துரியோதனன் வருகை புரிந்தான். கணவனைக் கண்ட பானுமதி மரியாதை நிமித்தமாக எழுந்தாள். தோற்கும் நிலையில் இருந்த அவள் ஆட்டத்தைவிட்டு வெளியேறுவதாக நினைத்த கர்ணன் வேகமாக அவள் உடையைப் பற்றி அமரவைக்க எத்தனித்தான். ஆனால் அவள் இடுப்பில் அணிந்திருந்த மணிமேகலை என்னும் ஆபரணம் அறுபட்டு அதிலிருந்து மணிகள் தரையெங்கும் உருண்டோடின. இருவருமே பதற்றத்தில் ஆழ்ந்தனர். அதற்குள் பக்கத்தில் வந்துவிட்ட துரியோதனன் ” எடுக்கவோ, கோர்க்கவோ” என சூழ்நிலையை இயல்பாக்க முயன்றான். தன் மனைவியுடன் தன் சிநேகிதனே ஆனாலும் தனிமையில் அமர்ந்து சொக்கட்டான் ஆடுவதையோ அவன் பற்றியதால் அவளது ஆடையின் மேகலை அறுந்து உதிர்ந்ததையோ பெரிதாக எண்ணாமல் சூழ்நிலையை இலகுவாக்க முயன்ற துரியோதனன் தன் நண்பன் கர்ணனின் மேல் வைத்த நம்பிக்கை கர்ணனைத் தன் வாழ்நாள் முழுவதும் அசைத்துக் கொண்டிருந்தது. இது எப்போது வெளிப்பட்டது என்றால் குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கும் சமயம் பாண்டவர்களின் தாயான குந்தி, கர்ணன் தன் மகன் என்ற உண்மையை கர்ணனிடமே உரைக்க வந்தாள். மேலும் போரில் அவன் பாண்டவர் பக்கம் சேர்ந்து கௌரவர்களை எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள வந்தாள். அப்போது கர்ணன் வாய்மொழியாகவே இந்நிகழ்வு வெளிப்பட்டது. கர்ணன் தன் தாயிடம்” பிறந்தவுடனே என்னைக் கைவிட்ட தாயான நீங்கள் இப்போதுதான் மகனாக ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறீர்கள். ஆனால் என் நண்பனான துரியோதனனோ நான் யாரென்று தெரியாமலே என் வீரத்தைப் பார்த்துச் சகோதரனாக ஏற்று அங்க தேச அரசனாக்கினான். அங்கேயே ஆரம்பித்துவிட்டது என் செஞ்சோற்றுக் கடன். இதைவிடத் தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடும்போது அவள் மேகலை அறுந்து வீழ்ந்ததைக் கூடத் தப்பாக எண்ணாமல் எடுக்கவோ கோர்க்கவோ என்று கேட்ட அவன் பண்பின் முன் என் எல்லா அன்பும் இணைந்துவிட்டது அம்மா. ” ”நான் இன்றுவரை தானதர்மம் செய்துவரும் பொருட்களெல்லாமே துரியோதனனைச் சேர்ந்ததுதானேம்மா. மாயக் கிருஷ்ணனின் துணையை நீங்களெல்லாம் நம்பும்போது என் வில்திறமையை மட்டுமே நம்புகிறான் அம்மா. இப்படிப்பட்ட என் நண்பனுக்குனுக்கு என் உடல் பொருள் ஆவியைத் தியாகம் செய்யாவிட்டால், செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்காவிட்டால் நான் வாழ்ந்ததன் பயன் ஏது?” என்று கேட்க அர்ஜுனன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் ஏவக்கூடாது என்றும், அர்ஜுனனைத் தவிர பாண்டவர்கள் யாருடனும் பொருதக் கூடாது என்றும் கர்ணனிடம் வரம் பெற்றுச் செல்கிறாள் குந்தி. இப்படித் தன் நண்பனுக்காகத் தாயே வந்து கேட்டும் மாறாத கர்ணனின் பண்பு உயர்ந்ததுதானே. அதனினும் குருக்ஷேத்திரப் போரின் போது பீஷ்மர் தடுத்ததால் அவன் வெறும் படைவீரனாகவே போரிட நேருமென்பதால் போரிடப் புகமாட்டேன் என்று மறுத்ததையும் துரியோதன் ஏற்றான். அதன்பின் பீஷ்மர் விழுந்ததும்தான் அவன் தன் நண்பன் துரியோதனுக்காகப் போர்க்களம் புகுந்தான். இதுவே இவர்களின் இணைபிரியாத புரிதலுள்ள நட்பினுக்கு எடுத்துக்காட்டு என்பதைப் பார்த்தோம் இல்லையா குழந்தைகளே. Posted by Thenammai Lakshmanan at பிற்பகல் 8:07 http://honeylaksh.blogspot.com/2023/03/blog-post_19.html -
சிறித்தம்பி! நல்ல வடிவாய் பாருங்கோ அவர் மண்ணெண்ணை தகரத்தோட எல்லோ திரியிறவர்? என்ன விசர்க்கதை கதைக்கிறியள் ? புட்டின் அருமை தெரியாதவர் யாரிருக்கிறார்கள்?
-
Recommended Posts