Jump to content

"பேனா சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்" - வைரலாகும் சீமானின் கருத்து

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"பேனா சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்" - வைரலாகும் சீமானின் கருத்து

"பேனா சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்" - கருத்து கேட்பு கூட்டத்தில் கொந்தளித்த சீமான்

பட மூலாதாரம்,SEEMAN

31 ஜனவரி 2023, 09:54 GMT
புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்

கருணாநிதியின் நினைவாக அமைக்கப்படும் பேனா சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்,” என்று கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்  மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்தி வரும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெரும் மோதலும் சலசலப்பும் ஏற்பட்டது.

மு.கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் கருத்துக்கேட்புக் கூட்டம் கலைவாணர் அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  

கருத்துக் கேட்புக் கூட்டம் காலை 10:30 மணி அளவில் நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை ஒன்பது மணியிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான ஆட்கள் அங்கு திரள ஆரம்பித்தனர். தி.மு.கவினர் பெரும்பாலான அளவில் அங்கே கூடியிருந்தனர்.

மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்று கருத்தைத் தெரிவிக்கப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்ததால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.

கூட்டம் துவங்கியவுடன், இந்தத் திட்டம் குறித்து வீடியோ காட்சி மூலம் விளக்கப்பட்டது. இந்தத் திட்டம் எங்கே, எப்படி அமையும், இதற்கு ஆகும் செலவு, இதன் கட்டுமானப் பணிகள் எப்படி நடைபெறும் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இதற்குப் பிறகு கருத்துக் கேட்புக் கூட்டம் துவங்கியது. இதற்கென பெயர்களைப் பதிவு செய்திருந்தவர்கள் ஒவ்வொருவராகப் பேச அழைக்கப்பட்டனர்.

முதலில் பேசிய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவர் பேசினார்.  "ஏற்கெனவே மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் சூழலில் இத்தகைய நினைவுச் சின்னம் அமைக்கக்கூடாது. கூவம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இந்த நினைவுச் சின்னம் அமைப்பதால் அது மீன் வளத்தைப் பாதிக்கும்," என்று கூறினார்.

அவர் இதுபோல எதிரான கருத்தைத் தெரிவித்ததும் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வந்திருந்த தி.மு.கவினர் கூச்சலிட்டு, அவரை பேச்சை நிறுத்தும்படி கூறினர். அதேபோல, ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.கவை சேர்ந்தவர்களும் இந்த நினைவுச் சின்னத்தைக் கடலுக்குள் அமைக்கக்கூடாது எனக் கூறினர்.

அப்போதும் தி.மு.கவினர் எழுந்து அவர்களைத் தொடர்ந்து பேச அனுமதிக்கக்கூடாது எனக் கூச்சலிட்டனர்.

கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு எழும்போது, பேசவிடாமல் கூச்சலிடும் ஒரு நபர்
 
படக்குறிப்பு,

கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு எழும்போது, பேசவிடாமல் கூச்சலிடும் ஒரு நபர்

இதற்குப் பிறகு திருமுருகன் காந்தி பேசும்போது, திராவிட இயக்க சாதனைகளை பள்ளிக்கூடத்தில் சொல்லித்தர வேண்டும். இதுபோன்ற நினைவுச் சின்னம் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேச அழைக்கப்பட்டார். ஆனால், அவர் பேச ஆரம்பித்ததில் இருந்தே தி.மு.கவினர் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவர் பேசியது சரியாகக் கேட்கவில்லை. தி.மு.கவினரை அமைதிபடுத்தும்படி, அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், தொடர்ந்து கூச்சல் எழுந்த நிலையில், அவரும் தொடர்ந்து பேசினார்.

பிறகு அவரை பேச்சை முடித்துக் கொள்ளும்படி கூட்டத்தை நடத்தியவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் பேச்சை நிறுத்த மறுத்தார். இதையடுத்து அவரது மைக் நிறுத்தப்பட்டது. இதனால், கோபமடைந்த அவர் மேடையிலேயே அமர்ந்து தர்ணா செய்ய ஆரம்பித்தார். பிறகு அவர் காவல்துறையால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

பல்வேறு மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

இதற்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவர் அழைக்கப்பட்டதி இருந்து கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கூச்சல் எழுந்தது.

"கடலில் 8551.13 சதுர மீட்டரை நீங்கள் எடுக்கிறீர்கள். அதில் பேனா வைக்க வேண்டும் என்றால், கல்லைக் கொட்ட வேண்டும், மண்ணைக் கொட்ட வேண்டும். இதனால் ஏற்படும் அழுத்தத்தால் அங்கிருக்கும் பவளப்பாறைகள் பாதிக்கப்படும்," என்று அந்தத் திட்டத்திற்கு எதிராக கருத்தைத் தெரிவிக்க ஆரம்பித்ததும் தி.மு.கவினர் மேடைக்கு அருகில் நெருங்கி வந்து கூச்சலிட்டனர். "அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை" என்றனர்.

சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன்

அப்போது சீமான், "உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா?

வேண்டுமென்றால் அறிவாலயத்தில் போய் வையுங்கள். நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்தான் வைப்பார்களாம்.

இந்தச் சின்னம் அமைத்தால் 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும்.  சும்மா மீனவ சங்கம் என்ற பெயரில், அனைத்து மீனவ சங்கம், அகில இந்திய மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்துவிட்டு இதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது?" என்றபோது தி.மு.கவினர் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

ஆனால் தொடர்ந்து பேசிய சீமான், "நீ போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? நாங்கள் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம். எனவே அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம். இது உறுதி," என்று பேசிவிட்டு வெளியேறினார். அவருடன் நாம் தமிழர் கட்சியினரும் வெளியேறினர்.

பின்னர் வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்தி, அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை ஏற்பது, எதிர்க் கருத்து தெரிவித்தால், அதை எதிர்த்துக் கூச்சலிடுவது என்பது ரொம்ப அநாகரிகம்.  

சீமான்

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை, ஏற்கிறோம். ஆனால், கடலுக்குள் வைக்கக் கூடாது. அவ்வாறு வைப்பதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். கிட்டத்தட்ட அரை ஏக்கர் பரப்பளவை கடலில் இருந்து எடுக்கின்றனர்.

கடலுக்குள் கல்லையும் மண்ணையும் கொட்டி அதன் மேல் அந்தப் பேனாவை நிறுவ வேண்டும். எதற்காக?

நினைவு மண்டபம் கட்டுகிறீர்கள், அதற்கு முன் வையுங்கள். அறிவாலயத்தின் முன் வையுங்கள். யார் உங்களை எதிர்க்கப் போகின்றனர்?

பள்ளிக் கூடங்களைப் புனரைமைக்க நிதி இல்லை எனக் கூறி நிதி திரட்டும் அரசுக்கு, இந்தப் பேனா வைக்க மட்டும் ரூ. 81 கோடி எங்கிருந்து வருகிறது?" என்றார்.

இதற்குப் பிறகு விருதுநகரைச் சேர்ந்த ஒரு பெண் செயற்பாட்டாளர் பேச வந்தார். அவர் இந்தப் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதற்கும் தி.மு.கவினர் கூச்சலிட்டனர்.

இதற்குப் பிறகு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் பேசும்போது,  "கடல் மட்டம் உயர்வதால் சென்னை நகரம் அபாயத்தில் இருக்கிறது. கருணாநிதி இருந்தால் இதைச் செய்வாரா என்பதை யோசித்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்" என்றார்.

இத்துடன் இந்தக் கூட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கருத்துகளைத் தெரிவிக்க பெயர் கொடுத்திருந்த பலரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கோரினர். இருந்தபோதும் கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் இந்தக் கூட்டம் நடத்தப்பட்ட விதம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.

"பல கருத்துக் கேட்புக் கூட்டங்கள் மாலை வரை நடந்திருக்கின்றன. குஜராத்தில் அடுத்த நாள் அதிகாலை வரை நடந்திருக்கிறது. இவர்கள் இப்படி முடிக்கிறார்கள். யாரையும் பேசவிடவில்லை. இது அரசுக்கு அவப்பெயரைத்தான் ஏற்படுத்தும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது" என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c1w0exjjjjdo

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஏராளன் said:

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை, ஏற்கிறோம். ஆனால், கடலுக்குள் வைக்கக் கூடாது. அவ்வாறு வைப்பதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். கிட்டத்தட்ட அரை ஏக்கர் பரப்பளவை கடலில் இருந்து எடுக்கின்றனர்.

கடலுக்குள் கல்லையும் மண்ணையும் கொட்டி அதன் மேல் அந்தப் பேனாவை நிறுவ வேண்டும். எதற்காக?

நினைவு மண்டபம் கட்டுகிறீர்கள், அதற்கு முன் வையுங்கள். அறிவாலயத்தின் முன் வையுங்கள். யார் உங்களை எதிர்க்கப் போகின்றனர்?

பள்ளிக் கூடங்களைப் புனரைமைக்க நிதி இல்லை எனக் கூறி நிதி திரட்டும் அரசுக்கு, இந்தப் பேனா வைக்க மட்டும் ரூ. 81 கோடி எங்கிருந்து வருகிறது?" என்றார்.

உண்மையைத் தான் சொல்கிறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

81 கோடியா? 

ஒதுக்கியது

கட்டி முடிய 20 காணும்.

மிகுதி பகிர்ந்தளிக்கப்படும்.(மந்திரிமாருக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெரினா கடற்கரையே நல்லாதான் இருக்கு! எதுக்கு இப்படி? - கலைஞர் பேனா நினைவுச் சின்னம் | IBC Tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

81 கோடியா? 

ஆம்
எல்லாம் ஊழ‌ல் முறையில் ச‌ம்பாதிச்ச‌ காசு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இந்த விடயத்தில் சீமான் சொல்வது நூறுவீதம் சரி.

101%

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

81 கோடியா? 

ச‌வுக்கு ச‌ங்க‌ர் இவ‌ர்க‌ளின் ஊழ‌ல்க‌ளை ஆதார‌த்தோடு சோச‌ல் மீடியாக்க‌ளில் துணிவோடு சொல்லுகிறார்.............திராவிட‌  முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்திட‌ம் இருந்து இதுவ‌ரை ப‌தில் இல்லை...............🤣😁😂
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் பேனாவை  அவரது சட்டைப்பையில் இருந்து எடுத்து எழுதிவிட்டு  திரும்பவும் அவரது சட்டைப்பைக்குள் வைத்துவிடுவேன் என்று முன்பு ஒருமுறை சீமான் கூறியிருந்தார். அப்படி அந்தளவுக்கு   அவருடன் நெருக்கமான நண்பராக நீண்ட காலம்   இருந்த போதே அந்த பேனாவை எடுத்து  உடைத்திருக்கலாம். 😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

கலைஞர் பேனாவை  அவரது சட்டைப்பையில் இருந்து எடுத்து எழுதிவிட்டு  திரும்பவும் அவரது சட்டைப்பைக்குள் வைத்துவிடுவேன் என்று முன்பு ஒருமுறை சீமான் கூறியிருந்தார். அப்படி அந்தளவுக்கு   அவருடன் நெருக்கமான நண்பராக நீண்ட காலம்   இருந்த போதே அந்த பேனாவை எடுத்து  உடைத்திருக்கலாம். 😂

ஒரு பெண்டாட்டிக்கு மூன்று வைத்திருந்தவர்

ஒரு பேனாவை உடைத்தால் வேறு வாங்க மாட்டாரா?

இதை யோசித்து தான் சீமான் விட்டிருப்பார்.

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு பெண்டாட்டிக்கு மூன்று வைத்திருந்தவர்

ஒரு பேனாவை உடைத்தால் வேறு வாங்க மாட்டாரா?

இதை யோசித்து தான் சீமான் விட்டிருப்பார்.

இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் ப‌ல‌ மாற்ற‌ங்க‌ள் வ‌ர‌ வாய்ப்பு இருக்கு ஏற்க‌ன‌வே 10வ‌ருட‌ம் கூப்பில‌ இருந்த‌ கூட்ட‌ம் மீண்டும் ஆட்சியை பிடித்து செய்யிற‌ ச‌கித்து கொள்ள‌ முடிய‌ வில்லை

மீண்டும் இவ‌ர்க‌ளை கூப்பில‌ உக்கார‌ வைச்சா தான் த‌மிழ‌க‌த்துக்கு விடிவு கால‌ம் இல்லையெனில் க‌ருணாநிதி குடும்ப‌மும் 39திருட‌ர்க‌ளின் ஆத்தில் அடை ம‌ழை தான் க‌ட்ட‌த்துரை 🤣😁😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பையன்26 said:

பையா இன்னும் 10 வருடத்தில பிஜேபி தான் தமிழகத்தை ஆழும் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இன்னும் 10 வருடத்தில பிஜேபி தான் தமிழகத்தை ஆழும் போல இருக்கு.

ஆம்.

திமுக, பிஜேபி இவைதான் ஆளும், எதிர்கட்சிகள் என்ற நிலை வருவது கிட்டதட்ட தவிர்க முடியாதது.

இடையில் யாரேனும் புதிதாக வந்து வெற்றிடத்தை நிரப்பினால் நிலமை மாறலாம். அல்லது பிஜேபி மைய அரசை இழந்தால் இது தடைப்படலாம்.

அடுத்த 10 ஆண்டி இவை இரெண்டும் நடக்க  வாய்ப்பு அதிகம் இல்லை.

மேற்கு வங்கம், மஹராஸ்டிரா, இப்படி பல இடங்களில் நடந்ததுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு பெண்டாட்டிக்கு மூன்று வைத்திருந்தவர்

ஒரு பேனாவை உடைத்தால் வேறு வாங்க மாட்டாரா?

இதை யோசித்து தான் சீமான் விட்டிருப்பார்.

அண்ணை வேற லெவல் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

101%

என்ன 101%? 

சும்மா அவர் வந்து உடைக்க, திராவிடர் நாம விட்டிருவமா ?

கட்டுமரதாருக்கு, கட்டத்தான் போறம், ஏலுமெண்டா பண்ணிப்பார்க்கட்டும். 😜😅

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

என்ன 101%? 

சும்மா அவர் வந்து உடைக்க, திராவிடர் நாம விட்டிருவமா ?

கட்டுமரதாருக்கு, கட்டத்தான் போறம், ஏலுமெண்டா பண்ணிப்பார்க்கட்டும். 😜😅

கட்டு மரத்தை கடலில ஏத்த வெளிகிட்டு, யாழ் களத்தை பாடையில ஏத்தாதவரை ஓகே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இன்னும் 10 வருடத்தில பிஜேபி தான் தமிழகத்தை ஆழும் போல இருக்கு.

ம‌த‌வாத‌ ச‌க்தி த‌னித்து நின்று த‌மிழ‌க‌த்தில் ஆட்சியை பிடிக்க‌ முடியாது............ஆனால் திமுக்கா த‌ங்க‌ளுக்கு எதிரி பாஜ‌க்கா தான் என்று ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் புல‌ம்புவ‌தை பார்க்க‌ முடியுது

ம‌த‌வாத‌ க‌ட்சிய‌ த‌மிழ‌க‌த்தில் வ‌ள‌த்து விட்ட‌தில் ஓர் ப‌ண்ணீர் செல்வ‌த்தின் ப‌ங்கு பெரிய‌து

த‌ர்ம‌ யுத்த‌ வீர‌னால் தான் இர‌ட்டை இழை காண‌ம‌ல் போன‌து..............ஆதிமுக்காவை அழிச்ச‌ பெருமை ப‌ண்ணீர் செல்வ‌த்துக்கு தான் எல்லாம் ப‌த‌வி ஆசையால் க‌ட்ட‌த்துரை

ஆதிமுக்காவின் அழிவு ம‌த‌வாத‌ க‌ட்சியுட‌ன் கூட்ட‌னி வைச்ச‌ ப‌டியால் அதில் இருந்து இதுவ‌ரை அவ‌ர்க‌ளால் மீல‌ முடிய‌ வில்லை............மோடியா இல்லை இந்த‌ லேடியா என்று சொன்ன‌ ஜெய‌ல‌லிதா..............அவா க‌ட்டி எழுப்பிய‌ க‌ட்சிய‌ மோடியிட‌ம் அட‌மான‌ம் வைச்ச‌த‌ன் விலைவு தான் இம்புட்டுக்கும் கார‌ண‌ம்

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் பாப்போம் என்ன‌ ந‌ட‌க்குது என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இந்த, பன்னீரும், எடப்பாடியும் தாங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற நினைப்பில் ஆடும் வரை, இரட்டை இலை துளிர்க்கப்போவதில்லை.

அதனை முடக்கி, அதன் mla களை தனது 4 mla களுடன் சேர்த்து, அப்படியே, திமுகவில் இருந்து கொஞ்சம் mla களை கிளப்பி, பிஜேபி ஆட்சி அமைக்கும்.

இது எப்ப என்பதுதான் இப்ப கேள்வி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இந்த, பன்னீரும், எடப்பாடியும் தாங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற நினைப்பில் ஆடும் வரை, இரட்டை இலை துளிர்க்கப்போவதில்லை.

அதனை முடக்கி, அதன் mla களை தனது 4 mla களுடன் சேர்த்து, அப்படியே, திமுகவில் இருந்து கொஞ்சம் mla களை கிளப்பி, பிஜேபி ஆட்சி அமைக்கும்.

இது எப்ப என்பதுதான் இப்ப கேள்வி?

அவையை விலைக்கு வேண்டினாலும் ம‌க்க‌ளின் மன‌ங்க‌ளில் மாற்ற‌ம் வ‌ந்தாத் தான் அந்த‌ தொகுதியில் மீண்டும் வெல்ல‌ முடியும்

ஈபியேஸ் ஓபியேஸ் இவ‌ர்க‌ளுக்குள் ஒற்றுமை இல்லை , ஜெய‌ல‌லிதாவின் ம‌றைவோடு அந்த‌ க‌ட்சியின் க‌தை முடிந்து விட்ட‌து

ம‌த‌வாத‌ க‌ட்சி த‌மிழ‌க‌த்தில் ஆட்சியை பிடிப்ப‌து க‌ஸ்ர‌ம்.............அப்ப‌டி பிடிச்சா ஹிந்தியை தினிப்பாங்க‌ள்.............வ‌ட‌ நாட்டானுக்கு இன்னும் ந‌ல்ல‌ வ‌ச‌தி த‌மிழ‌க‌த்தில் செய்து கொடுப்பாங்க‌ள்

விஜேப்பியின் வெறுப்பு ஓட்டில் இப்போது குளிர் காயும் க‌ட்சி திமுக்கா............அவ‌ர்க‌ள் தாங்க‌ள் தான் கிருஸ்த‌வ‌ர்க‌ளுக்கு முஸ்லிம்க‌ளுக்கு உண்மையான‌ பாதுகாவ‌ல‌ர் போன்ற‌ ப‌ர‌ப்புரை மூல‌ம் முஸ்லிம் கிருஸ்த‌வ‌ர்க‌ளின் ஓட்டுக்க‌ள் திமுக்காவுக்கு போய் விட்ட‌து...............சீமான் ச‌ங்கியின் ஆள் அவ‌ருக்கு ஓட்டு போட‌ வேண்டாம் என்று திமுக்கா கார‌ர்க‌ள் ம‌க்க‌ள் ம‌த்தியில் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது பிர‌ச்சார‌ம் செய்தார்க‌ள் 
நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்க‌ இருந்த‌ ப‌ல‌ ஓட்டுக்க‌ள் கிடைக்காம‌ போன‌து

இனி வ‌ரும் தேர்த‌லில் இந்த‌ சித்து விளையாட்டு எடுப‌டாது............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

இந்த, பன்னீரும், எடப்பாடியும் தாங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற நினைப்பில் ஆடும் வரை, இரட்டை இலை துளிர்க்கப்போவதில்லை.

அதனை முடக்கி, அதன் mla களை தனது 4 mla களுடன் சேர்த்து, அப்படியே, திமுகவில் இருந்து கொஞ்சம் mla களை கிளப்பி, பிஜேபி ஆட்சி அமைக்கும்.

இது எப்ப என்பதுதான் இப்ப கேள்வி?

அப்ப‌டி அவ‌ர்க‌ள் ஆட்சியை பிடிச்சால் பெரியார் ம‌ண் திராவிட‌ கொள்கை எல்லாம் ம‌ண் தோன்டி புதைச்ச‌தாய் போய் விடும்............🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஈழத்தமிழருக்கு தேவையில்லாத விடயம்.  தமிழ்நாட்டு பல அரசியல் விடயங்களுக்குள் ஈழத்தமிழர் மூக்கை நுழைக்கக்கூடாது என்பது என் கருத்து.

தமிழ்நாட்டு அரசியலை பற்றி, கருணாநிதி பல விமர்சனங்கள் என்னில் உண்டு. ஆனால் இந்த விடயத்தில் கருத்து சொல்ல ஈழத்தமிழருக்கு அருகதையில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த, பன்னீரும், எடப்பாடியும் தாங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற நினைப்பில் ஆடும் வரை, இரட்டை இலை துளிர்க்கப்போவதில்லை.

அதனை முடக்கி, அதன் mla களை தனது 4 mla களுடன் சேர்த்து, அப்படியே, திமுகவில் இருந்து கொஞ்சம் mla களை கிளப்பி, பிஜேபி ஆட்சி அமைக்கும்.

இது எப்ப என்பதுதான் இப்ப கேள்வி?

இதுதான் கள நிலவரம்.

திமுக அல்லாத மிகுதி எல்லா கட்சிகளையும் இணைத்து பாஜக ஒரு மெகா கூட்டணி அமைக்கும். 

It’s only a matter of time.

1 hour ago, குமாரசாமி said:

இது ஈழத்தமிழருக்கு தேவையில்லாத விடயம்.  தமிழ்நாட்டு பல அரசியல் விடயங்களுக்குள் ஈழத்தமிழர் மூக்கை நுழைக்கக்கூடாது என்பது என் கருத்து.

தமிழ்நாட்டு அரசியலை பற்றி, கருணாநிதி பல விமர்சனங்கள் என்னில் உண்டு. ஆனால் இந்த விடயத்தில் கருத்து சொல்ல ஈழத்தமிழருக்கு அருகதையில்லை.

காலம் தாழ்த்தி வந்தாலும் நல்ல ஞானோதயம்தான்.

ஈழத்தமிழர் பிரச்சனையில், அர்ஜூன் அண்ணா, கற்பகதரு முன்னர் எடுத்த, நீங்கள் கடுமையாக எதிர்த்த நிலைப்பாட்டுக்கு வந்து விட்டீர்கள் என இன்னொரு திரியில் கண்டு கொண்டேன்.

இப்போ - நான் அண்மைகாலமாக யாழில் தமிழக செய்திகளை வெறும் பார்வைக்கு மட்டும் விட வேண்டும் என எழுதி வந்த நிலைக்கு கிட்ட வந்துள்ளீர்கள் (முன்பு ஆக்ரோசமாக தமிழக செய்தியில் களமாடி இருப்பினும்).

இந்த விசயத்தில் உங்கள் நிலைப்பாடுதான் எனக்கும்.

ஆர்வகோளாறில் சில சமயம் பதிவுகளை போட்டு விடுவேன்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.