Jump to content

"பேனா சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன்" - வைரலாகும் சீமானின் கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலை எந்த அளவுக்குப் பாதிக்கும்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்
பேனா நினைவுச்சின்னம்

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலை பாதிக்கும்?

 

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை மெரீனா கடற்கரையில் அவரது நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது.

 

 

81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடலுக்குள் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்தை சென்றடைய கடற்கரையில் 290 மீட்டர் நீளத்திற்கும் கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திற்கும் பாலம் அமைக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக 8,551.13 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்படவிருக்கிறது.

அரசு தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, இந்த நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்காற்று மண்டலம் (CRZ IA), CRZ II, CRZ IV-A ஆகிய பகுதிகளுக்குள் வருகிறது.

இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையும் இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011ன் படி பகுதி IV(A)ன் கீழ் வருகிறது. IV (A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு புதிதாக எந்தக் கட்டுமானத்தையும் கட்ட முடியாது.

ஆனால், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த விதிமுறையில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. மும்பை கடற்கரையை ஒட்டி சத்ரபதி சிவாஜி சிலையை அமைப்பதற்காக செய்யப்பட்ட அந்தத் திருத்தத்தின்படி, CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் நினைவிடங்கள்/நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்தத் திருத்தத்தின் அடிப்படையில்தான், தற்போது பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் அமைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல்கள் ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆனால், இந்தத் திட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சில மீன்பிடி சங்கங்களும் எதிர்க்கின்றன. இந்தத் திட்டம் தொடர்பாக ஊரூர்குப்பம் மீன் பிடிப்போர் கூட்டுறவு சங்கம் மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் அதற்கான காரணங்களையும் முன்வைத்துள்ளது.

"கடலிலும், கடற்கரையிலும் திட்டங்களை கொண்டுவரும் போது அந்தந்த மாவட்டங்களில் மீனவர்களுக்கு பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதனை அறிந்து கொள்ள கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2011 பத்தி 6(c)ல் மாவட்ட கடற்கரை மண்டல மேலாண்மை குழுமத்தில் (DCZMA) மூன்று மீனவ பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

ஆனால் 21 வருடங்கள் ஆகியும் DCZMAல் மீனவ பிரதிநிதிகள் ஒருவர் கூட கிடையாது. மீனவ பிரதிநிதிகள் இல்லாமலேயே கடலிலும், கடற்கரையிலும் அரசால் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களின் மீன்பிடி தகவல்களை அரசு முறையாக கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்யாமல் கடல் நடுவே கலைஞர் பேனா நினைவுச்சின்ன திட்டத்தை அமைத்தால் கரைத்தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மற்றும் நடுக்கடலை நம்பியுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

ஆகையால் இந்த திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், மீனவர்களின் மீன்பிடி இடங்களை சட்டத்தில் கூறியுள்ள படி TNSCZMP ல் பதிவு செய்ய வேண்டும்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

அதேபோல, அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசியத் தலைவரான ஆண்டன் கோம்சும் இது தொடர்பாக துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார். "சமீபத்தில் தேதிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் தமிழக கடற்கரையில் 422 கி.மீ. அளவுக்கு கடல் அரிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தியாவில் கடல் அரிப்பு அதிகமுள்ள நான்காவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 1990 முதல் 2018வரை 1802 ஹெக்டேர் நிலம் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலரிப்பைத் தடுக்கும் கட்டுமானங்கள் நூற்றுக்கணக்கில் செய்தும் பலனில்லை.

ஆகவே நினைவுச் சின்னத்தின் நிலைப்புத் தன்மை, கடலரிப்பு, CRZ அறிவிப்பாணை, மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும்" என்கிறார் ஆண்டன் கோம்ஸ்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. "இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை காணமுடிகிறது. திட்ட அமைவிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறவில்லை என சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தென் சென்னையைச் சேர்ந்த 14 கிராமங்கள், வட சென்னையைச் சேர்ந்த 20 கிராமங்கள் என 34 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இப்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அப்பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பல ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

பங்குனி ஆமைகள் (Olive Ridley Turtle) திட்ட அமைவிடத்தில் தென்படுவதாக சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் 175வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழிந்து வரும் உயிரினமாக IUCN அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பங்குனி ஆமைகளின் வாழிடமாகவும் முட்டையிடும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளதால். இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் பங்குனி ஆமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயம் உள்ளது.

திட்ட அமைவிடத்தில் இருந்து 130மீ தூரத்தில் கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரப் பகுதி அமைந்துள்ளது. பொதுவாக இந்த முகத்துவாரப் பகுதியில தான் மீன்கள் அதிகம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதனால், கடலின் உயிர் பன்மையம் செழிப்பாக வைத்திருக்க உதவும் இப்பகுதியின் ஆரோக்கியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கூவம் ஆறு கடலில் சேரும் முகத்துவாரத்தின் அருகில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் அப்குதியின் உயிர் பன்மையம் கடுமையாக பாதிக்கப்படும்.

பேனா நினைவுச்சின்னம்

இத்திட்டத்திற்காக கடலில் ஆழ்துளைகள் போடப்பட்டு பிரமாண்ட தூண்கள் அமைக்கப்படவுள்ளன. இது மீட்டெடுக்க முடியாத நிரந்தர சூழலியல் பாதிப்புகளுக்கு வழிவகை செய்து விடும்.

ஏற்கெனவே துறைமுகம் கட்டியதன் விளைவாக ஆண்டிற்கு 20 மீட்டர் அளவிற்கான கடல் அரிப்பை வட சென்னை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டால் மெரினா கடற்கரை உட்பட அருகாமையில் உள்ள பல மீனவ கிராமங்கள் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும்" என அந்த அமைப்பு கூறியிருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கான ஆய்வே முறைப்படி செய்யப்படவில்லை என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன். "திட்ட ஆய்வை 2021 மே - ஜூலை மாதங்களில் செய்ததாகச் சொல்கிறார்கள். இந்த அரசே 2021 மே மாதம்தான் பதவியேற்றது. உடனே இந்த ஆய்வை நடத்தினார்களா?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

"ஏற்கெனவே சென்னைத் துறைமுகத்தால், அதற்கு வடக்க உள்ள காசிமேட்டிற்கு அப்பால் துவங்கி திருவள்ளூர் மாவட்டம் நெட்டுக்குப்பம் வரை பல கிராமங்கள் கடலுக்குள் சென்றுவிட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை - இரண்டு கி.மீ.க்கு கடல் உள்ளே வந்துவிட்டது. பல பட்டா நிலங்கள் தற்போது கடலுக்குள் இருக்கின்றன.

ஆனால், இந்தத் திட்டத்தில் பாலம் போலத்தான் அமைப்பதால் நீரோட்டம் பாதிக்கப்படாது என நம்புகிறோம். அந்தப் பகுதியில் மீன் பிடிக்க அனுமதிப்போம் என்கிறார்கள். ஆனால், அதைச் சட்டப்படி எங்களுக்குச் உறுதி செய்து தர வேண்டும். கடலும் கூவம் ஆறும் கலக்கும் இடத்தில் இந்தக் கட்டுமானம் நடக்கவிருக்கிறது. அது இறால் மீன்கள் அதிகமுள்ள பகுதி. ஆகவே கட்டுமான பணிகள் நடக்கும் நேரத்தில் மீனவர்களுக்கான வாழ்வாதாரத்தை அரசு உறுதிசெய்ய வேண்டும்" என பிபிசியிடம் தெரிவித்தார் அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ்.

பொதுவாக, இதுபோன்ற திட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. மேலும் பதிவுசெய்யப்படும் ஒவ்வொரு எதிர்ப்பிற்குமான பதிலை, திட்டத்தை செயல்படுத்துவோர் தர வேண்டும்.

செவ்வாய்க்கிழமையன்று நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சீமான் மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க அளவில் எதிர்ப்புக் கருத்துகள், ஆட்சேபணைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு மிக முனைப்பாக இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cxwxly7y70vo

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஆர்வகோளாறில் சில சமயம் பதிவுகளை போட்டு விடுவேன்.

வெளிநாடுகளில் சண்டைக்காக காசை செலவளிக்கிறார்கள். இந்தியாவில் எழுத்தின் வலிமைக்காக இப்பிடி காசை கரியாக்குகிறார்கள்.

நீங்கள் சொன்னது போல ஒரு ஆர்வக்கோளாறு :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வெளிநாடுகளில் சண்டைக்காக காசை செலவளிக்கிறார்கள். இந்தியாவில் எழுத்தின் வலிமைக்காக இப்பிடி காசை கரியாக்குகிறார்கள்.

நீங்கள் சொன்னது போல ஒரு ஆர்வக்கோளாறு :rolling_on_the_floor_laughing:

எனக்கு ஆர்வகோளாறு…சிலருக்கு கோளாறே ஆர்வம்🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பையன்26 said:

ஆம்
எல்லாம் ஊழ‌ல் முறையில் ச‌ம்பாதிச்ச‌ காசு 

இல்லை பையா, மக்களின் வரிப்பணத்தில் அரசு செய்வதால் தான் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

இல்லை பையா, மக்களின் வரிப்பணத்தில் அரசு செய்வதால் தான் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது.

அப்ப‌டியா
த‌மிழ் நாட்டில் எல்லாம் த‌லை கீழாக‌ தானே ந‌ட‌க்குது
ம‌க்க‌ளின் அறியாமையால் தான் 
திருட்டு ர‌யில் ஏறி வ‌ந்த‌வ‌ர் குடும்ப‌த்துக்கு அடிச்ச‌ யோக‌ம்

நேற்று க‌ருத்து கேட்க்க‌ கூடின‌ ம‌க்க‌ள் காசு கொடுத்து கூட்டி வ‌ர‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ள் என்று அவ‌ர்க‌ள் வாயால் சொன்னார்க‌ள் என்று இன்னொரு ஊட‌க‌ம் சொல்லுது

த‌மிழ் நாட்டில் எத்த‌னையோ குடும்ப‌ம் வீடு வாச‌ல் இல்லாம‌ ம‌ர‌த்த‌டியில் ச‌மைச்சு சாப்பிட்டு அந்த‌ இட‌த்திலே ப‌டுத்து தூங்குதுக‌ள்

ப‌ல‌ இட‌ங்க‌ளில் ம‌க்க‌ள் உண‌வு இல்லாம‌ ப‌ட்டினியா கிட‌க்கும் போது 

இத்த‌னை கோடி காசு செல‌வு ப‌ண்ணி பேனா வைக்க‌னுமா அண்ணா  😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேனா நினைவுச் சின்னம் - பொதுப்பணித்துறை விளக்கம்

 

பேச வேண்டியது என்னோட கடமை ஏன் தடுக்குறீங்க? கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் - கடும் வாக்குவாதம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kalaignar pen statue ntk seeman vs pasumpon pandiyan - kalaignar pen statue issue | bjp | ntk | dmk

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமலையின் போராட்டமெல்லாம் வேடிக்கையான விஷயம் - சீமான் | Seeman | Kalaignar Pen Statue

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக  மைதானாத'டதில் ஆட்டநாயகன் சீமான்தான் சமுக ஊடகங்கள் எல்லாம் வைராலாகிறது சீமானின்  பேச்சு.இதுவரை சீமானைக்காட்ட மறுத்த ஊடகங்களை  அவர்களின் இட்த்திலேயே போய்  சீமான் சிறப்பான சம்பவம் செய்திருக்கிறார்.திமுக எதிர்க்க எம்ஜியார்  ஜெயலலிதாவுக்குப் பிறகு சீமான்தான் என ஆதிமுகவின் இரத்தத்தின் இரத்தங்கங் நினைத்தால் எல்லாம் தலைகீழாக மாறும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

திமுக  மைதானாத'டதில் ஆட்டநாயகன் சீமான்தான் சமுக ஊடகங்கள் எல்லாம் வைராலாகிறது சீமானின்  பேச்சு.இதுவரை சீமானைக்காட்ட மறுத்த ஊடகங்களை  அவர்களின் இட்த்திலேயே போய்  சீமான் சிறப்பான சம்பவம் செய்திருக்கிறார்.திமுக எதிர்க்க எம்ஜியார்  ஜெயலலிதாவுக்குப் பிறகு சீமான்தான் என ஆதிமுகவின் இரத்தத்தின் இரத்தங்கங் நினைத்தால் எல்லாம் தலைகீழாக மாறும்.

ச‌ரியா சொன்னீங்க‌ள்

நானும் சோச‌ல் மீடியாக்க‌ளை பார்த்து வ‌ருகிறேன் ப‌ல‌ ஆயிர‌ க‌ண‌க்கில் ஆத‌ர‌வு க‌ருத்தை வெளிப் ப‌டுத்தின‌ம்

 

இன்று புதிய‌த‌லைமுறையிலும் ந‌ல்ல‌ பேட்டி

 

இதே வீரிய‌த்தோடு ப‌ய‌ணித்தால் வெற்றிய‌ நெருங்க‌லாம் அண்ணா ❤️🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ச‌ரியா சொன்னீங்க‌ள்

நானும் சோச‌ல் மீடியாக்க‌ளை பார்த்து வ‌ருகிறேன் ப‌ல‌ ஆயிர‌ க‌ண‌க்கில் ஆத‌ர‌வு க‌ருத்தை வெளிப் ப‌டுத்தின‌ம்

 

இன்று புதிய‌த‌லைமுறையிலும் ந‌ல்ல‌ பேட்டி

 

இதே வீரிய‌த்தோடு ப‌ய‌ணித்தால் வெற்றிய‌ நெருங்க‌லாம் அண்ணா ❤️🙏

பையா இந்திய தேர்தலை பணம் தான் தீர்மானிக்குது.

அதையும் மீறி ஆதரவு வர வேண்டுமென்றால்

இன்னும் பல இடங்களிலும் பலருக்கும் வடக்கினரால் அடி விழணும்.

கூட்டங்களிலே வரும் சனத்தைப் பார்த்து நானும் ஆகா ஓகோ என்று எண்ணிய நாட்களும் உண்டு.

ஆனாலும் நிலவரம் அப்படியல்ல என்பதை புரிந்து கொண்டேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Karunanidhi Pen Statue: மோதலில் முடிந்த கருத்துக் கேட்பு கூட்டம்; trend ஆன சீமானின் பேச்சு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2023 at 23:09, குமாரசாமி said:

இது ஈழத்தமிழருக்கு தேவையில்லாத விடயம்.  தமிழ்நாட்டு பல அரசியல் விடயங்களுக்குள் ஈழத்தமிழர் மூக்கை நுழைக்கக்கூடாது என்பது என் கருத்து.

தமிழ்நாட்டு அரசியலை பற்றி, கருணாநிதி பல விமர்சனங்கள் என்னில் உண்டு. ஆனால் இந்த விடயத்தில் கருத்து சொல்ல ஈழத்தமிழருக்கு அருகதையில்லை.

ஈழ‌த்து அர‌சிய‌லில் 50வித‌ம் த‌ன்னும் த‌மிழ‌க‌த்தை ஒட்டியே இருக்கு
இத‌ற்க்குள் நாம் மூக்கை நுழைக்காம‌ இருந்தா எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோட‌ த‌மிழீழ‌ க‌ன‌வும் முடிந்து போய் விடும்

புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் பிள்ளைக‌ள்
ரிக்ரொக் காம‌ கூத்துக்குள் மூழ்கி போய் இருக்கின‌ம்............நூற்றில் 20 வித‌ புல‌ம்பெய‌ர் நாட்டு பிள்ளைக‌ள் ஈழ‌ உண‌ர்வோடு ப‌ய‌ணிக்கின‌ம்
மீத‌ம் உள்ள‌வை கார்த்திகை மாத‌ம் 27மாவீர‌ நாளுக்கு போனால் த‌ங்க‌ளின் க‌ட‌மை முடிந்து விட்ட‌தா உண‌ருகின‌ம்

த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ள்
ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனி ப‌ழ‌குவ‌து அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ல்ல‌ம்

க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றி ஈழ‌ம் அமைவ‌து தான் சிற‌ப்பு.................இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை நிறைவேற்றாம‌ த‌மிழின‌ம் கை விட்டா நாம் அவ‌ர்க‌ளுக்கு செய்யும் துரோக‌மாய் போய் விடும்
முடிந்த‌ அள‌வு எம‌து கால‌த்தில் ஒற்றுமையாய் செய‌ல் ப‌டுவோம்
முடிய‌ வில்லை என்றால் அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு க‌ட‌த்தி விட்டு போவோம் அவ‌ர்க‌ளால் கூட‌ முடிய‌ வில்லை என்றால் த‌மிழின‌ம் தோல்வி க‌ண்ட‌ இன‌ம் என்று வ‌ர‌லாற்றில் எழுத‌ ப‌டும்

எம் போராட்ட‌த்தை ப‌ற்றி இப்ப‌ அதிக‌ம் பேசுவ‌து த‌மிழ‌க‌த்தில் தான் அதுக்குள் நாம் மூக்கை நுழைக்க‌ கூடாது என்று சொல்லுவ‌து ச‌ரி என்று ப‌ட‌ வில்லை தாத்தா...................

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

ஈழ‌த்து அர‌சிய‌லில் 50வித‌ம் த‌ன்னும் த‌மிழ‌க‌த்தை ஒட்டியே இருக்கு
இத‌ற்க்குள் நாம் மூக்கை நுழைக்காம‌ இருந்தா எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோட‌ த‌மிழீழ‌ க‌ன‌வும் முடிந்து போய் விடும்

புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் பிள்ளைக‌ள்
ரிக்ரொக் காம‌ கூத்துக்குள் மூழ்கி போய் இருக்கின‌ம்............நூற்றில் 20 வித‌ புல‌ம்பெய‌ர் நாட்டு பிள்ளைக‌ள் ஈழ‌ உண‌ர்வோடு ப‌ய‌ணிக்கின‌ம்
மீத‌ம் உள்ள‌வை கார்த்திகை மாத‌ம் 27மாவீர‌ நாளுக்கு போனால் த‌ங்க‌ளின் க‌ட‌மை முடிந்து விட்ட‌தா உண‌ருகின‌ம்

த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ள்
ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனி ப‌ழ‌குவ‌து அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ல்ல‌ம்

க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றி ஈழ‌ம் அமைவ‌து தான் சிற‌ப்பு.................இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை நிறைவேற்றாம‌ த‌மிழின‌ம் கை விட்டா நாம் அவ‌ர்க‌ளுக்கு செய்யும் துரோக‌மாய் போய் விடும்
முடிந்த‌ அள‌வு எம‌து கால‌த்தில் ஒற்றுமையாய் செய‌ல் ப‌டுவோம்
முடிய‌ வில்லை என்றால் அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு க‌ட‌த்தி விட்டு போவோம் அவ‌ர்க‌ளால் கூட‌ முடிய‌ வில்லை என்றால் த‌மிழின‌ம் தோல்வி க‌ண்ட‌ இன‌ம் என்று வ‌ர‌லாற்றில் எழுத‌ ப‌டும்

எம் போராட்ட‌த்தை ப‌ற்றி இப்ப‌ அதிக‌ம் பேசுவ‌து த‌மிழ‌க‌த்தில் தான் அதுக்குள் நாம் மூக்கை நுழைக்க‌ கூடாது என்று சொல்லுவ‌து ச‌ரி என்று ப‌ட‌ வில்லை தாத்தா...................

நீங்கள் சொல்வது சரியானதே. ஆனால் எல்லா விடயங்களுக்குள்ளும் தலையை கொடுக்கக்கூடாது என்பதே என் கணக்கு. ஒரு சில விடயங்களில் பிரிச்சு மேயலாம்.
அவர்கள் பேனையோ பென்சிலோ சோக்கட்டியோ வைக்கட்டும். நமக்கு ஏது கவலை? :beaming_face_with_smiling_eyes:

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2023 at 19:38, ஈழப்பிரியன் said:

ஒரு பெண்டாட்டிக்கு மூன்று வைத்திருந்தவர்

ஒரு பேனாவை உடைத்தால் வேறு வாங்க மாட்டாரா?

இதை யோசித்து தான் சீமான் விட்டிருப்பார்.

May be an image of ‎1 person and ‎text that says '‎8:24 Vo Create ரு பேனா மூணு மூடி சிலை வைக்க ஆலோசன مدفح Ntk Tiger ' Follow 158k @selvalarm எவன் பார்த்த வேலைடா இது Ntk Tiger Original au 7.8k cor ment...‎'‎‎

ஒரு பேனா... மூன்று மூடி. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=508489888099917  👈

👆 பேனா சிலை சம்பந்தமாக, பழ கருப்பையா அவர்களின் காட்டமான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of ‎1 person and ‎text that says '‎8:24 Vo Create ரு பேனா மூணு மூடி சிலை வைக்க ஆலோசன مدفح Ntk Tiger ' Follow 158k @selvalarm எவன் பார்த்த வேலைடா இது Ntk Tiger Original au 7.8k cor ment...‎'‎‎

ஒரு பேனா... மூன்று மூடி. 🤣

ஆமா ஆமா பேனா இருந்தா மூடி வேணும் தானே.

இல்லாவிட்டால் மை காய்ந்திடுமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகனே சிலை வைப்பதா மரியாதை? | உலகமே பார்த்து சிரிக்கும் | Dr Shalini Interview | Kalaingar Pen Statue

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2023 at 23:09, குமாரசாமி said:

இது ஈழத்தமிழருக்கு தேவையில்லாத விடயம்.  தமிழ்நாட்டு பல அரசியல் விடயங்களுக்குள் ஈழத்தமிழர் மூக்கை நுழைக்கக்கூடாது என்பது என் கருத்து.

தமிழ்நாட்டு அரசியலை பற்றி, கருணாநிதி பல விமர்சனங்கள் என்னில் உண்டு. ஆனால் இந்த விடயத்தில் கருத்து சொல்ல ஈழத்தமிழருக்கு அருகதையில்லை.

உண்மை

ஈழத்தமிழர்கள்  எல்லோரும் இந்த நிலைக்கு  வந்தாலே முதல்  வெற்றி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்குள் கட்டுமானங்கள்: சூழலியல் - சமூகவியல் பார்வை! : வறீதையா கான்ஸ்தந்தின்.

1675245941-7881.jpg


சென்னைத் துறைமுகம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடல் கட்டுமானங்கள் கடலியல் சூழலிலும், கடற்கரை பரப்புகளிலும், மீனவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய  விளைவுகள் என்ன..என்பதையெல்லாம் ஆராயும் போது, அதிர்ச்சிகரமான சில உண்மைகள் தெரிகின்றன” என்கிறார் கடல் சூழலியல் ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தின்!
உலகக் கடல்கள் ஒரு பேரியக்கம். நகர்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டம். காற்று, அலை, ஓதம், நீரோட்டம், மேல்நோக்கிய பெயர்வு (upwelling) என்பதாக விரியும் இவ்வியக்கமே கடலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதன் பல்லுயிர்த் திரட்சிக்கும், அங்கிருந்து பெறுகிற மீன்வளத்துக்கும் இதுவே ஆதாரம். கரையில் நாம் பார்க்கிற கடல், பெருங்கடலல்ல, கடலின் குளம். குடா, வளைகுடா, கரைக்கடல் எனப் பலவாறாக நாம் அழைக்கும் இப்பகுதியில் அலையும் ஓதமும் தவிர, கரைக்கடல் நீரோட்டம் முக்கியமான பங்கு வகிக்கிறது.

பெருங்கடல் நீரோட்டங்களால் கொண்டு வரப்படும் மீன்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள் பருவம் தவறாமல் கரைக்கு வந்து சேர கரைக்கடல் / நெடுங்கரை நீரோட்டம் (Longshore current) அடிப்படையானது. அதன் ஒரு பகுதியாக மணல் நகர்வு நிகழ்கிறது. உலகின் 3,12,000 கிலோமீட்டர் கடற்கரைகளைத் தழுவிக்கிடக்கும் கரைக்கடலிலும் இந் நகர்வு ஊடறுப்பற்றும், சுழற்சியாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பருவம் தோறும் கரையில் நிகழும் மணல் குவிப்பும் மணல் அரிமானமும்  இந் நகர்வின் விளைவுகள்.

இப்படிக் கரையில் குவிகிற மணலின் ஒரு பகுதி, காற்றினால் நகர்த்தப்பட்டு, மணல் குன்றுகளாக மாறுகின்றன. அடிப்படையில், கரையோர மணல் பகிர்மான இயக்கத்தின் (coastal sand sharing system) அடிப்படைக் காரணி இந்த நெடுங்கரை நீரோட்டமே. மனிதக் குறுக்கீடு எழாத வரை கடற்கரை தன்னைப் பராமரித்துக் கொள்ளும். ஆனால், நெடுங்கரை நீரோட்டத்துக்குக் குறுக்காக ஒரு கட்டுமானத்தை அமைத்தால், அதன் இருபுறமும் உள்ள கடற்கரைப் பகுதிகள் சிதையத் தொடங்கும்.

தமிழ்நாட்டில் துறைமுகக் கட்டுமானங்களால் கடற்கரை விளிம்புகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதைக் காலவாரியான செயற்கைக்கோள் தொலையுணரி வரைபடங்களில் தெளிவாய்ப் பார்க்கலாம். முக்கியமாக, கரைக்கடல் மணல் நகர்வில் நேர்ந்துள்ள பாரிய மாற்றங்கள்.

1908இல் சென்னைத் துறைமுகத்துக்காக அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர், மெரினா என்னும் செயற்கை மணல்வெளி உருவாகக் காரணமானது. ஆனால், துறைமுகத்துக்கு விலையாக வடக்கில் நிறையக் கடற்கரைகளைக் காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. மெரீனாவின் ஒரு பகுதி சமாதிகளால் நிரம்பிக் கொண்டிருப்பது கடல் சூழலியலுக்கு ஆரோக்கியமானதல்ல. தலைவர்கள் நம் மதிப்புக்குரியவர்கள் தான், சந்தேகமேயில்லை. அவர்கள் பெயரைச் சொல்லிக் கடற்கரைகளையும் கடலையும் காயப்படுத்த நமக்கு உரிமை இருக்கிறதா என்பது தான் கேள்வி. ஒரு காலத்தில் சூழலியல் புரிதல் இல்லாதிருந்தோம். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. கருணாநிதியின் சமாதிக்கு நேராக கடலுக்குள்ளே ஏறத்தாழ 360மீட்டர் தொலைவில் ஒரு பாதை உட்பட 8,452சதுரமீட்டர் பரப்பளவில் திட்டமிடப்படுவதாய்ச் சொல்கிறார்கள். நினைவுச் சின்னத்தின் அடித்தளம் கரைக் கடல் நீரோட்டத்தை மறித்து நிற்கும் கட்டுமானமாகும்.

சென்னை துறைமுகத்தால் உருவானதே மிகப் பெரிய மெரீனா கடற்கரை!

சென்னைத் துறைமுகம் தென்புறம் மெரினாக் கடற்கரையை உருவாக்கிவிட்டு, வடபுறத்துக் கடற்கரைகளை விழுங்கத் தொடங்கியது. எண்ணூர் காமராசர் துறைமுகமும் நிறுவப்பட்ட பிறகு, அதன் வடக்காக அமைந்துள்ள கிராமங்களை காணாமலாக்கிவிட்டுள்ளது.

மெரினா உருவாகுமுன், அக்கடற்கரைகள் எப்படியிருந்தன? மீனவர்களுக்கே உரிய தொழில்தள, வாழிடமாகவும் இருந்தவை அப்பகுதிகள். துறைமுகமும் மெரீனாவும் அக் குப்பங்களுக்குப் புதிய சிக்கல்களைக் கொணர்ந்தன.

எம்ஜிஆர் ஆட்சியில், 1985- ல் மெரீனாவை அழகுபடுத்துவதற்காக நொச்சிக்குப்பம் பகுதியில் இரவோடு இரவாக மீனவர்களின் படகுகள் அப்புறப்படுத்தப்பட்டபோது மீனவர்கள் போராடினர். சில உயிர்கள் பலியாயின. பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டது. 2003இல் மலேஷியத் தூதரகம் அமைக்க அப்பகுதியைக் கையகப்படுத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியும் மீனவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டன. பிறகொரு கெடுவிதியின் நாளில் விசாலமான அவர்களின் வாழிடங்கள் அடுக்ககங்களாய்ச் சுருக்கப்பட்டன. தையெழுச்சியின்போது நடுக்குப்பம் மீனவர்கள் காவல்துறையினரால் காரணமின்றித் தாக்கப்பட்டனர். பரம்பரைக் குற்றவாளிகள்போல் சித்திரிக்கப்பட்டனர்.

பட்டினப்பாக்கம் பகுதியில் ஏற்படும் கடுமையான கடலரிமானத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட மெரீனா லூப் ரோடு என்னும் அதிவிரைவுச் சாலை, நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கும் கடலுக்கும் இடையே கண்ணுக்குப் புலப்படாத மதில்சுவராய் நிற்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் அச் சாலை பொதுப் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுவிட்டது.

எழில்மிகு சென்னைக்கு கடற்குடிகளின் வாழ்நிலம் தேவைப்படுகிறது. விளைவாக கடற்குடிகள் சிறுத்து, காணாமலாகிக் கொண்டிருக்கிறார்கள். குரலெழுப்பத் திறனற்றுப்போன அவர்களுக்கான சமநீதி விலகியே நிற்கிறது.

பட்டினப்பாக்கமும் அதற்குத் தெற்கிலுள்ள கடற்கரைகளிலும் நேர்ந்துவரும் கடலரிமானமும் துறைமுகத்தின் தாக்கமே. கருணாநிதி நினைவுச்சின்னம் அமையும் தளத்துக்கு இருபுறமாகவும் கரைக்கடல் நீரோட்டம் திசைதிரும்பி மணல்நகர்வைத் தீவிரமாக்கும் அபாயமும் உண்டு

கடந்த 50 ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரைகள் கடுமையான அரிமானத்துக்கு உள்ளானதற்குப் பல காரணங்கள் உண்டு: 1978இல் விழிஞம் மீன்பிடி துறைமுகம் நிறுவப்பட்ட போது நீரோடி முதல் குறும்பனை வரையுள்ள கடற்கரைகள் அழிவுக்குள்ளாயின. ஏறத்தாழ அதே காலத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் குமரிமுனையில் நிறுவிய போக்குவரத்துப் படகுத் துறையினால் கன்னியாகுமரி- சின்னமுட்டம் கடற்கரை பாதிக்கப்பட்டது. நீரோட்டத்துக்குச் செங்குத்தாக ஏராளமான தடுப்புச் சுவர்களை (vertical groynes) அமைத்தார்கள். 2010களில் அமைக்கப்பட்ட தேங்காய்ப் பட்டணம் துறைமுகத்தின் மேற்கு அலைத் தடுப்புச் சுவர் பூத்துறை, இரயுமன்துறை, முள்ளூர்துறை, இராமன்துறை உள்ளிட்ட கடற்கரைகளில் பெரும் கடலரிமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. முட்டம் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத் தடுப்புச் சுவரின் மிகையான நீட்சியால் அழிக்கால் கிராமத்தை மணல் மூடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதக் கடல் சீற்றத்தின் போது அக் கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.

குமரி முனையில் திருவள்ளுவர், விவேகானந்தர் நினைவிடங்கள் பாறைகளின் மீது அமைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் காலம் தொட்டு கடல் தரையின் தன்மையைத் தழுவி கரைக் கடல் நீரோட்டங்கள் அவற்றின் வழியைத் தீர்மானித்து விட்டிருக்கின்றன என்பதால் இக் கட்டுமானங்களால் சிக்கலில்லை. இருப்பினும், 2004 சுனாமியலை திருவள்ளுவர் சிலைக்கு மேலாக உயர்ந்ததை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஒரு கடற்கோளை எதிர்கொள்ள என்றுமே நாம் தயாராயில்லை.

குமரி முனையில் பூம்புகார்க் கப்பல்துறையின் படகுத்துறை சூழலியல் சிக்கலை ஏற்படுத்தியது. சிறு கடல்பாலங்கள் கூட பாதிப்பை ஏற்படுத்துபவைதான். குளச்சலில் அவ்வாறான ஒரு கடல் பாலம் இருக்கிறது. அது ஓர் இயற்கைத் துறைமுகம் என்றாலும் கூட கடலரிமானத்தில் அதன் தாக்கத்தைப் பார்க்க முடியும். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைத்தடுப்புச் சுவரின் கிழக்கு நோக்கிய நீட்சியினால் அரிமானம் மேலும் கடுமையாகியுள்ளது. அதானியின் 10,000 ஏக்கர் காட்டுப்பள்ளி துறைமுகக் கட்டுமானத்தின் பின்னால் குரலற்ற மக்களின் துயரக்கதை உள்ளது. விழிஞம் அதானி துறைமுகம் கேரள அரசியலைக் கொதிநிலைக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை கடலரிமானத்திலிருந்து பாதுகாப்பதற்கெனப் போடப்பட்டுள்ள தடுப்புச்சுவர், வடக்குப் பகுதியில் அரிமானத்தை வேகப்படுத்துகிறது. வட சென்னைக் கடற்கரை நெடுக எழும்பிவரும் தொழில் கட்டுமானங்களால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு நேர்ந்து போன சிதைவை சமவெளிச் சமூகம் கவனிக்கவேயில்லை. எண்ணூர் விரைவுச் சாலை, துறைமுகம் அமைப்பதற்காக இருப்பிடம் பறிக்கப்பட்ட மீனவர்கள் அலைகுடிகள் ஆகியிருக்கிறார்கள்.

வடசென்னை நிகழ்காலத்தின் துயர காவியம்.

சென்னையின் ஒட்டுமொத்தத் தொழில் வளர்ச்சியின் கழிவுச் சுமையை அக் குரலற்ற எளிய மனிதர்களின் தலையில் ஏற்றி வைத்துவிட்டோம். 2014-2018இல் தாழங்குப்பம், முகத்துவாரக் குப்பம் தொடங்கி கூனன்குப்பம் வரையுள்ள கடற்கரைகளில் மீனவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது வறண்டுபோன முகங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை முற்றாக இழந்திருப்பதைப் பார்த்தேன்.

“வளர்ச்சியைச் சொல்லி அவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும், வாழ்வாதாரமான கடலையும், கழிமுகங்களையும் பறித்துக்கொண்டு, அங்கு அனல் மின் நிலையச் சாம்பல் கழிவுகளையும் கொதி நீரையும் கொட்டிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கான சமூக நீதியை மறுத்து வந்திருக்கிறோம். அதைக் குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் நமக்கு இல்லை.” என்கிறார் சூழலியல் செயல்பாட்டாளார் நித்தியானந்த் ஜெயராமன். சென்னை, திருவள்ளூர்க் கடற்கரைகள் ‘வளர்ச்சியின் காயங்களை’ச் சுமந்துகொண்டிருக்கின்றன.

‘காசிமேட்டுக்கும் எண்ணூருக்கும் இடையில் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பம் என்றொரு மீனவர்களின் பெரிய குப்பம் 2017 வரை இருந்தது’ என்கிறார் ஊடகர் தயாளன்:

“இன்று அந்த ஊர் நடைமுறையில் இல்லை. ஆவணங்களிலும் இல்லை. அந்த மக்கள் தூக்கி வீசப்பட்டு விட்டார்கள். காசிமேட்டிலிருந்து தொடர்ச்சியாக ஏராளமான ஊர்களின் பட்டா நிலங்கள் கடலுக்குள் இருக்கின்றன. ஒரு பெரிய கோவில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்குள் இருக்கிறது. இவை எல்லாம் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் நிகழ்ந்து போன மாற்றங்கள். மெரினா கடற்கரையும், பெசண்ட் நகர் கடற்கரையும் செயற்கையாக உருவானவை. இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் திருவான்மியூர் கடற்கரையும் செயற்கையானதே. ஏன்? என்ற கேள்விக்கு பதில் தேடினால் கடலுக்குள் கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது என்று புரியும்.”

சென்னை துறைமுகம்

இராணுவம், துறைமுகம் போன்ற சில கட்டுமானங்களை அனுமதிப்பதால் கூட கடற்கரையோர வாழிடங்களுக்கும், வாழ்வாதாரத்துக்கும் பாதிப்புகள் எழவே செய்கின்றன. அவை நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத் தேவைகள் என்கிற அளவில் சூழலியல், சமூகவியல் தாக்கங்களைக் காய்தல், உவத்தலின்றி ஆய்ந்து, பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்வதும், அங்கு வாழும் பாரம்பரியத் திணைக் குடிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை நிறுவுவதை உறுதி செய்து கொள்வதும் பொறுப்பார்ந்த அரசின் கடமை.

‘‘நகராட்சி எல்லைக்குள் கடற்கரையில் ஒரு பனிக்கட்டி உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு, ஒரு வணிக மையம் அமைப்பதற்கு, கடற்கரை மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு பெரும் கெடுபிடி செய்யும் கடற்கரை ஒழுங்காற்று / சுற்றுச்சூழல் ஒழுங்காற்று விதிகள் பெரும் கட்டுமானங்களை அனுமதிக்கும் என்றால் சட்டம் யாருக்கானது?’’

2013- ல் நேர்காணல் செய்தபோது மேனாள் குளச்சல் நகராட்சித் தலைவர் ஜேசையா எழுப்பிய கேள்வி இது!

கடலுக்குள் நினைவுச் சின்னம் எழுப்பும் இப்போதைய முயற்சியின் அரசியல் நீட்சி என்னவாக இருக்கும்? அது ஒரு கொடுங்கனவு. இன்று அரசியலில் செல்வாக்குப் பெற்றிருக்கிற பல புள்ளிகளுக்கும் இம்மாதிரி ஆசை முளைத்து, அவர்களின் வாரிசுகளும், ஆதரவாளர்களும் தமிழ்நாட்டுக் கடல் நெடுக இது போன்ற பலப்பல கட்டுமானங்களைக் கொண்டு வரலாம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைச் சிலாகித்து வேறொரு தரப்பினர் கடலுக்குள் ஒரு ஸ்க்ரூ டிரைவரை நிறுவலாம்; சமய நினைவிடங்களை நிறுவலாம். அந் நாளுக்காக வாய்பிளந்து காத்திருக்கின்ற தரப்புக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுகிற வாய்ப்பு. அரசின் கருவூலம் கரையும்; அல்லது, தகுதியுள்ள மக்களுக்கு வந்துசேர வேண்டிய நிதிச் சேகரங்கள் விதிமீறலாக மடைமாற்றம் ஆகும். பட்டேல் சிலை நிறுவுவதற்கு 2,880 கோடி பணம் அவ்வழியில் திரட்டப்பட்டதே. கெடுவிதியாக, அந்த நிதி ஓக்கி (2017) கேரளப் பெருவெள்ளம் (2018) போன்ற பேரிடர்களின் போது நிவாரணத்துக்குக் கையேந்தி நின்ற மக்களுக்கு உதவவில்லை.

உள்ளூர்ச் சிக்கல்களின் கதை ஒரு புறம் இருக்க, கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.  அபத்தமாக, வளர்ந்த நாடுகள் கீழை நாடுகளின் மீது பழி போடுகின்றன. பருவநிலை நடவடிக்கைக் குழு என்னும் ஓர் அமைப்பு, அதன் அண்மைக்கால ஆய்வுகளில் அச்சமூட்டும் பல உண்மைகளை வெளியிட்டுள்ளது. கடல் மட்டம் 25 சென்டிமீட்டர் உயர்ந்தால் கடல்தொட்டுக் கிடக்கும் சென்னைப் பெருநகரத்தின் பல கிலோமீட்டர் தொலைவு வரை கடலுக்குள் மூழ்கிப் போகும் என்கிறது ஒரு குறிப்பு. எம்.ஜி.ஆர், கருணாநிதி சமாதி உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளை 2050 இல் கடல் மூழ்கடித்து விடும் என்கிறது இன்னொரு குறிப்பு. கடல் மட்டம் உயர்தலின் முதல் பாதிப்புகளில் ஒன்று நிலத்தடிநீர் உவர்ப்பாகும் நிலைமை. கழிமுகங்களின் சிதைவும் உவர்நீர் இறால் பண்ணைகளின் பெருக்கமும் நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகக் கடற்கரை இயல்பிலேயே செழிப்பானது, வனங்களும், நன்னீர் நிலைகளும் நிறைந்தது. இன்று ஏறத்தாழ எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். கிண்டி,  திருமறைக்காடு வனங்கள் மட்டுமே இன்று மீந்திருக்கின்றன.

2015 சென்னை, கடலூர் பெருவெள்ள நிகழ்வு வெறும் இயற்கைச் சீற்றமல்ல, கடலையும் கடற்கரையையும் இனிமேல் கவனமாய் அணுக வேண்டும் என்னும் இறுதி எச்சரிக்கை மணி.

சேது சமுத்திரம் என்கிற பெயரில் திமுக பங்கேற்ற மைய அரசு 2005 ஏப்ரலில் தொடக்கிவைத்து சற்றொப்ப 2000 கோடி பணத்தைக் கடலில் கொட்டி கோப்பை மூடிவிட்டது. அந்தத் திட்டம் நிற்காது, பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இன்று போல அன்றைக்கும் சூழலியலாளர்கள் சொன்னார்கள். தொழில்நுட்ப- வணிக அளவிலும், சூழலியல் – வாழ்வாதார அளவிலும் அது பெருந்தோல்வியைச் சந்தித்ததைத் தமிழ்நாடு அறியும்.

இன்றைக்கு அத் திட்டத்தை மீண்டும் துவங்க மாநில, மைய அரசுகள் முனைப்பு காட்டுகின்றன. மன்னார்க் குடாவில் 10,500 சதுர கிலோமீட்டர்ப் பரப்பைக் கடலுயிர்க்கோளம் என ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில் மாநில அரசு கடந்த செப்டம்பரில் பாக் நீரிணை பகுதியில் 458ச.கி.மீ பரப்பை கடற்பசு சேமப் பகுதியாக அறிவித்து, கடலைப் பாதுகாப்பது குறித்து மீனவர்களுக்கு நிறைய அறிவுறுத்தல்களை வழங்கியது. அதே அரசு இன்று கரைக்கடலில் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னத்தை நிறுவ முயல்கிறது. இயற்கைச் சீற்றம் பேரிடர்களாய் மாறுவது மனிதர்களால் தான். சில பேரிடர்கள் மனிதர்களால் நிகழ்த்தப்படுகின்றன. சேதுக் கால்வாய்த் திட்டம் அண்மைக்கால சான்று.

மாநில அரசு சென்னை நகரைப் பெருவெள்ளத்திலிருந்து பாதுகாப்பது எப்படி என்று அறிஞர் குழுவை அமர்த்தி ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையின் பெருவெள்ள மேலாண்மையில் பக்கிங்ஹாம் கால்வாய், கொற்றலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு ஆகியவற்றுக்கும் மாமுனி ஏரி, புழல், செம்பரம்பாக்கம், பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம் போன்ற நன்னீர் நிலைகளுக்கும் பங்குண்டு. 2004 சுனாமியிலிருந்து சென்னை நகரத்தைக் காத்தது பக்கிங்ஹாம் கால்வாய். நிலமோ, கடலோ- நீரின் வழமையான தடங்களை இடைமறிப்பது, பேரிடரை நம் வரவேற்பறைக்குள் கொண்டு வரும் மடமையே.

மெரீனா என்னும் உலகின் இரண்டாவது நீளமான மணல்வெளியை உருவாக்கிய கடலின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. மெரீனாவைப் பார்க்கிற ஒவ்வொரு முறையும் அப் பெருமணல்வெளியின் அழகியலைத் தாண்டி கடலின் பேராற்றல் குறித்த அச்சமே விஞ்சி நிற்கிறது. சென்னை மீனவர்களைத் துயர்  மேகம் சூழ்ந்திருப்பதாக உள்ளுணர்வு எச்சரிக்கிறது. பேனா திட்டமிடப்படும் இடத்துக்கு வடக்காக சிறு தொலைவிலேயே கூவம் கழிமுகம் கடலில் இணைகிறது. நினைவுச் சின்னத்தின் முதற்பலி கூவம் கழிமுகம் ஆகும் அபாயமுண்டு. சிக்கல் நினைவுச் சின்னம் அல்ல, அதைக் கடலுக்குள் அமைப்பதுதான்.

பேரிடர்கள் அரசியல் நில எல்லைகளைப் பொருட்படுத்துவதில்லை. அமெரிக்காவோ, ஆரியமோ, கிழக்கோ- எதையும் அவை சட்டை செய்யாது. பருவநிலை மாற்றமும் கடல்மட்ட உயர்வும் உடனடியாய் முகம் கொடுத்தாக வேண்டிய நிகழ் பேரிடர். ஒரு பொறுப்பான அரசு தன் நிலத்தையும் மக்களையும் பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் வழிகளை ஆய்ந்து, முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடற்கரை நம் நிலத்துக்கு அரணாய் நிற்பது. நிலத்தைப் பாதுகாப்பதன் தொடக்கம் கடற்கரையையும் கரைக்கடலையும் பாதுகாப்பது.

மரம் இல்லையேல் மானுடம் இல்லை!

சூழலியலாளர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்கிற ஒரு தோற்ற மாயை கார்ப்பொரேட்டுகளால் உருவாக்கப்படுகிறது. அவர்களால் பொய்களை எளிதாக மக்களிடம் விற்க முடிகிறது. ஊடகம் அவர்கள் கையில் இருக்கிறது. மக்கள் பகுத்துப்பார்க்கவும் விவாதிக்கவும் நேரமற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடித் தீர்வுகள் தேவைப்படுகின்றன. கண்களை விற்று ஓவியம் வாங்குவானேன் என்பதுதான் காந்தியப் பொருளாதார வல்லுநர் ஜே.சி.குமரப்பாவைப் போன்றவர்கள் முன்வைக்கும் பார்வை. உடனடி நன்மைகளின் பகட்டு வெளிச்சம் நம்மைச் சூழ்ந்திருக்கும் பேரிருளை மறைத்து விடுகிறது. தனிமங்களின் மீதான பேராசையால் வடகிழக்கில் வனங்களை அழித்தபோது எழுந்த அதே எச்சரிக்கைக் குரல் இன்று கடலின் அழிவு குறித்து எச்சரிக்கிறது. நாட்டுப் பற்றையும் வளர்ச்சியையும் அம்பானிகளின், அதானிகளின் கண்கள் வழியாய்ப் பார்ப்பவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை.

‘கடல் மட்டம் உயர்தல்’ உலகளாவிய சிக்கல். அதிலிருந்து மீள போர்க்கால அடிப்படையில் முயற்சியெடுக்க வேண்டிய நேரத்தில் உள்ளூரில் புதிய சிக்கல்களை ஏற்படுத்துவது நன்றன்று. கடலை நோண்டினால் அது நம்மைத் தோண்டி வீசி விடும். அதன் இயல்பான இடத்தையும் இயக்கத்தை நாம் மதிக்கவேண்டும். தவறினால், லூதர் பியுரோங்க் சொன்னது போல, ‘நமக்கு நாமே கொடுந்தீர்ப்பு எழுதிக் கொள்கிறவர்கள் ஆவோம்’.

கட்டுரையாளர்:

வறீதையா கான்ஸ்தந்தின்,

பேராசிரியர், கடல் சூழலியல் ஆய்வாளர்,

தொடர்புக்கு: vareeth2021@gmail.com

நன்றி: அறம் இணைய இதழ்.

https://aerithazh.blogspot.com/2023/02/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2023 at 16:23, ஏராளன் said:

மகனே சிலை வைப்பதா மரியாதை? | உலகமே பார்த்து சிரிக்கும் | Dr Shalini Interview | Kalaingar Pen Statue

இவா பெரியாரை பெரிதும் நேசிக்கிற‌வா அதோடு திமுக்காவுக்கு க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஆத‌ர‌வு கொடுத்த‌வா

சாலினி அக்காவே திமுக்காவை விம‌ர்சிக்கும் போது............திமுக்கா ஆட்சி சொல்லி கொள்ளும் அள‌வுக்கு இல்லை என்று அவாக்கு தென் ப‌டுது......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2023 at 23:09, குமாரசாமி said:

இது ஈழத்தமிழருக்கு தேவையில்லாத விடயம்.  தமிழ்நாட்டு பல அரசியல் விடயங்களுக்குள் ஈழத்தமிழர் மூக்கை நுழைக்கக்கூடாது என்பது என் கருத்து.

தமிழ்நாட்டு அரசியலை பற்றி, கருணாநிதி பல விமர்சனங்கள் என்னில் உண்டு. ஆனால் இந்த விடயத்தில் கருத்து சொல்ல ஈழத்தமிழருக்கு அருகதையில்லை.

சரியான கருத்துகள்...ஆனால் நீங்கள் எப்படி சொன்னாலும் சின்ன பையன்களுக்கு புரியப்போவதில்லை .. 🤣 இருந்தாலும் தாத்தாமார்   சொல்லி கொண்டே இருப்பார்கள்  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

சரியான கருத்துகள்...ஆனால் நீங்கள் எப்படி சொன்னாலும் சின்ன பையன்களுக்கு புரியப்போவதில்லை .. 🤣 இருந்தாலும் தாத்தாமார்   சொல்லி கொண்டே இருப்பார்கள்  

ஜ‌யா என்ன‌ இது
இது க‌ருத்துக் க‌ள‌ம் விவாத‌ம் ப‌ல‌ வித‌மாய் இருக்கும்...........யார் என்ன‌ சொன்னாலும் நான் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல‌ ஓர‌ம் க‌ட்ட‌ மாட்டேன்..............பிடிக்காத‌வ‌ர்க‌ள் ஒதுங்கி இருங்கோ..............நான் பெரிதும் நேசிக்கும் அண்ண‌ன் த‌ம்பி மார் அங்கு அர‌சிய‌ல் ப‌ணிக‌ள் செய்யின‌ம்...............
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ஜ‌யா என்ன‌ இது
இது க‌ருத்துக் க‌ள‌ம் விவாத‌ம் ப‌ல‌ வித‌மாய் இருக்கும்...........யார் என்ன‌ சொன்னாலும் நான் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல‌ ஓர‌ம் க‌ட்ட‌ மாட்டேன்..............பிடிக்காத‌வ‌ர்க‌ள் ஒதுங்கி இருங்கோ..............நான் பெரிதும் நேசிக்கும் அண்ண‌ன் த‌ம்பி மார் அங்கு அர‌சிய‌ல் ப‌ணிக‌ள் செய்யின‌ம்...............
 

தம்பி   பையன்   தமிழ்நாடு அரசியல் பற்றி  எந்த இலங்கை தமிழர்கள்  எவ்வாறு.....எவ்வளவு...கதைத்தாலும். ஒரு மிக மிக சிறிதளவு மாற்றங்கள் கூட எற்ப்படப்போவதில்லை   இதை நீங்கள் புரிந்து...தெரிந்து கொள்ளும் போது உங்கள் வயது 65 ஆண்டுகளுக்கு மேலே வந்து விடும்    மேலும் நெடுமாறன்.   வை.கோ.  இருவரும் இலங்கை தமிழர்கள் இல்லை  ....அவர்கள் இலங்கை தமிழருக்கு ஆக உழைக்க வேண்டிய அவசியமில்லை...ஆனாலும் அந்த காலத்திலிருந்தே எந்தவொரு எதிர்பார்ப்புகளும் இன்றி நிறையவே செய்திருக்கிறார்கள்   ஒரு இலங்கை தமிழனும் அப்படி உழைக்கவில்லை   அவர்கள் மாநில மத்திய அரசாங்கம்களில்  நல்ல பதவியுடனும். செல்வாக்கு உடனும்   வலம் வந்திருக்க முடியும்  எங்களுக்குக்காக உழைத்ததில் அவர்கள் இழந்தது மிகவும் அதிகம்   அப்படி இருந்தும்  தடம் புரளவில்லை  தலைவர் பிரபாகரன் போல் கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டுடனிருக்கிறார்கள்.   

உங்கள் எழுத்தை பார்த்து விட்டு நினைத்து பார்த்தேன் ஏன் இவர்கள் சுப்பிரமணியசுவாமி போல் வாழ்க்கை நடத்தி இருக்க கூடாது?.  என்று !

தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என அவருடைய அமைப்பு அறிவித்தல் செய்து ஏன் மாவீரன்  நிகழ்வுகள் செய்யவில்லை ?   பரிபூரணமாக  தெரியாது...அவர் உயிர்ருடன். வந்தாலும் என்ற பயம்    இங்கே அவர் இறந்தார் என்று உறுதிபட சொல்லுவது இலங்கை அரசு மட்டுமே.....இலங்கை அரசு கூட   தலைவர் இருக்கிறார் என்று சொன்னால்  அந்த இடத்தை முற்றுகையிட்டு   சோதனைகள் செய்யும் நிலையில் தான் இருக்கிறார்கள்  ஏன்?...பிரபாகரன் இறந்து விட்டாரா?.   என்ற கேள்விக்கு...1...ஆமாம் 2009 இறந்து விட்டார்  அல்லது 2...இல்லையே இல்லை அவர் உயிருடன் இருக்கிறார்   என. இரண்டு பதில்கள் சொல்ல முடியும்  இந்த இரண்டு பதிவுகளும். இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

தம்பி   பையன்   தமிழ்நாடு அரசியல் பற்றி  எந்த இலங்கை தமிழர்கள்  எவ்வாறு.....எவ்வளவு...கதைத்தாலும். ஒரு மிக மிக சிறிதளவு மாற்றங்கள் கூட எற்ப்படப்போவதில்லை   இதை நீங்கள் புரிந்து...தெரிந்து கொள்ளும் போது உங்கள் வயது 65 ஆண்டுகளுக்கு மேலே வந்து விடும்    மேலும் நெடுமாறன்.   வை.கோ.  இருவரும் இலங்கை தமிழர்கள் இல்லை  ....அவர்கள் இலங்கை தமிழருக்கு ஆக உழைக்க வேண்டிய அவசியமில்லை...ஆனாலும் அந்த காலத்திலிருந்தே எந்தவொரு எதிர்பார்ப்புகளும் இன்றி நிறையவே செய்திருக்கிறார்கள்   ஒரு இலங்கை தமிழனும் அப்படி உழைக்கவில்லை   அவர்கள் மாநில மத்திய அரசாங்கம்களில்  நல்ல பதவியுடனும். செல்வாக்கு உடனும்   வலம் வந்திருக்க முடியும்  எங்களுக்குக்காக உழைத்ததில் அவர்கள் இழந்தது மிகவும் அதிகம்   அப்படி இருந்தும்  தடம் புரளவில்லை  தலைவர் பிரபாகரன் போல் கொண்ட கொள்கையில் உறுதிப்பாட்டுடனிருக்கிறார்கள்.   

உங்கள் எழுத்தை பார்த்து விட்டு நினைத்து பார்த்தேன் ஏன் இவர்கள் சுப்பிரமணியசுவாமி போல் வாழ்க்கை நடத்தி இருக்க கூடாது?.  என்று !

தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என அவருடைய அமைப்பு அறிவித்தல் செய்து ஏன் மாவீரன்  நிகழ்வுகள் செய்யவில்லை ?   பரிபூரணமாக  தெரியாது...அவர் உயிர்ருடன். வந்தாலும் என்ற பயம்    இங்கே அவர் இறந்தார் என்று உறுதிபட சொல்லுவது இலங்கை அரசு மட்டுமே.....இலங்கை அரசு கூட   தலைவர் இருக்கிறார் என்று சொன்னால்  அந்த இடத்தை முற்றுகையிட்டு   சோதனைகள் செய்யும் நிலையில் தான் இருக்கிறார்கள்  ஏன்?...பிரபாகரன் இறந்து விட்டாரா?.   என்ற கேள்விக்கு...1...ஆமாம் 2009 இறந்து விட்டார்  அல்லது 2...இல்லையே இல்லை அவர் உயிருடன் இருக்கிறார்   என. இரண்டு பதில்கள் சொல்ல முடியும்  இந்த இரண்டு பதிவுகளும். இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை 

 

நீங்க‌ள் ப‌ல‌ உண்மைக‌ளை எழுதி இருக்கிறீங்க‌ள்

ச‌ரி ந‌ன்றி ஜ‌யா 🙏🙏🙏 

  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.