Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

US.Under_.Secretary.for_.Political.Affai

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இக்கட்டான காலங்களில் அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு முயற்சிகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை உறுதியளித்திருந்தார்.

பொருளாதார நெருக்கடி, இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கி இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஏனைய அம்சங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடியதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
 

 

https://thinakkural.lk/article/236982

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம் குக்கி நூலான்ட் 

இலங்கையில் திரும்பவும் பிரச்சனைக்கு அடியிடுகிறாவோ ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் - பிரதி இராஜாங்க செயலாளர் நூலண்ட் ஜனாதிபதியிடம் உறுதி

By NANTHINI

01 FEB, 2023 | 06:43 PM
image

(எம்.மனோசித்ரா)

லங்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட், புதன்கிழமை (பெ. 1) புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது நன்றி தெரிவித்தார்.

இலங்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், எழுந்துள்ள பிரச்சினைகளுக்கான அவசரத் தீர்வுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் விக்டோரியா நூலண்ட் மேலும் குறிப்பிட்டார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது உட்பட அது தொடர்பில் சிறிய கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அவருக்கு தெளிவுபடுத்தினார்.

அதிகரித்து வரும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டன. அமெரிக்கா அதற்கு தனது முழு ஆதரவையும் வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/147206

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் - நுலன்ட்

By RAJEEBAN

01 FEB, 2023 | 05:33 PM
image

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப சீர்திருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்ளிற்கான உதவி செயலாளர் விக்டோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார்

செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இலங்கை பயங்கரவாத தடைசட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்,அதன் மூலம் அது சர்வதேச தராதரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவேண்டும்,

இன்நு எங்களிற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கும்இந்த குழப்பமான தருணத்தில் இலங்கைகக்கான அமெரிக்காவின் உதவி குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிப்பதற்கான எங்களின் ஆதரவு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம்  கிடைத்தது.

மேலும் அமெரிக்கா 13 மில்லியன் டொலர்களை இலங்கையின் 850 அரசபாடசாலைகளை சேர்ந்த மாணவர்களிற்கு மதிய உணவை வழங்குவதற்காக வழங்குகின்றது என்பதையும் நான் இன்று அறிவிக்கின்றேன்.

https://www.virakesari.lk/article/147217

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா அணிலைப் பார்த்துப் போக வந்தவவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தின விழாவுக்கு சமுகமளிக்க முடியாதென்றும் வருத்தம் தெரிவித்திருப்பாவோ?

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.