Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஷ்யாவின் எச்சரிக்கையினால் தடுமாறும் மேற்குலக நாடுகள்! உக்ரைனை கைவிட்ட பிரித்தானியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் - ரஷ்ய போர் 343 ஆவது நாளாக நீடித்துள்ள நிலையில் ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என உக்ரைன் விடுத்த கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் நிராகரித்தமையை உறுதி செய்துள்ளது.

தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறைக்கு சாத்தியமல்லை எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரஷ்யாவின் எச்சரிக்கையினால் தடுமாறும் மேற்குலக நாடுகள்! உக்ரைனை கைவிட்ட பிரித்தானியா | Ukrain Russian War Britain Supply Typhoon

போர் விமானங்களை வழங்க திட்டமில்லை

உக்ரைனுக்கு RAF Typhoon மற்றும் F-35 போர் விமானங்களை வழங்குவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை.தொடர்புடைய விமானங்களை இயக்க உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க கால தாமதமாகலாம்.

ரஷ்யாவின் எச்சரிக்கையினால் தடுமாறும் மேற்குலக நாடுகள்! உக்ரைனை கைவிட்ட பிரித்தானியா | Ukrain Russian War Britain Supply Typhoon

மேலும், பிரித்தானியாவின் RAF மற்றும் F-35 போர் விமானங்கள் மிகவும் அதிநவீனமானவை என்பதுடன், அந்த விமானங்களை இயக்க பயிற்சி மேற்கொள்ள பல மாதங்கள் ஆகும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்ய படைகளின் தாக்குதலை முறியடிக்க ஆயுத உதவி அதிகளவு தேவையென அமெரிக்க உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்த நிலையில், உக்ரைனுக்கு எப்-16 பைட்டர் போர் விமானத்தை அமெரிக்கா அனுப்பாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://tamilwin.com/article/ukrain-russian-war-britain-supply-typhoon-1675273308

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் தொடர்பே இல்லை. 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2023 at 06:35, Kapithan said:

தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் தொடர்பே இல்லை. 

😏

ஆனால் போய் வாசித்தோம் அல்லவா??😭

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைட கையிலேயே அதுதான் லேட்டஸ்.. அதையும் கேட்டால்.. கேட்பதை எல்லாம் கொடுத்திட்டு.. இவை என்ன வாயா பார்க்கிறது. எப்படி கெத்துக் காட்டிறது. சிலுங்கி ஒரு யூதக் காமடி.. அதுக்கு சப்போட் பண்ணப் போய் இவை கோவணமும் கிழிஞ்சுகிட்டு இருக்கினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி!

உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி!

உக்ரைனுக்கு தாக்குதல் வரம்பை இரட்டிப்பாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

அமெரிக்காவின் சமீபத்திய 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இராணுவ தொகுப்பில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2022 பெப்ரவரி முதல் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியின் மொத்தத் தொகையை 29.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகக் கொண்டுவருகிறது

150 கிமீ (93 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் இந்த தொகுப்பில் அடங்கும்.

ஆனால், இணைக்கப்பட்ட கிரிமியாவின் சில பகுதிகளைத் தாக்குவதற்கு வெடிமருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்ற ஊகத்தின் பேரில் அதிகாரிகள் பெற மறுத்துவிட்டனர்.

‘நடவடிக்கைகள் குறித்த உக்ரைனிய திட்டங்களைப் பொறுத்தவரை, அது அவர்களின் முடிவு’ என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிக் ஜெனரல் பாட் ரைடர் ஊடகங்களிடம் கூறினார்.

‘இது மீண்டும், தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவர்களின் இறையாண்மை பிரதேசம், ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை திரும்பப் பெறவும் உதவும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகள் பலமுறை உக்ரைனுக்கு தாக்குதல் ஆயுதங்களை வழங்குவதை நிராகரித்துள்ளன.போர் விமானங்கள் போன்றவையை கொண்டு உக்ரைன் ரஷ்யாவையே தாக்கும் என்ற அச்சத்தால் இது தவிர்க்கப்பட்டது.

 

https://athavannews.com/2023/1323019

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப Ukraine க்குள் போனால் நிறைய சாமாங்களை அறா விலைக்கு வாங்கலாம் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின்ட எல்லாம் தகர டப்பா எண்டு சொல்லீட்டு  ஒரு வருசமா  முக்குறானுகள்....:rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.