Jump to content

சனிக்கிழமை வரை மழை தொடரும் ! காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளதாம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை வரை மழை தொடரும் ! காற்றின் வேகம் அதிகரிக்கவுள்ளதாம் !

By DIGITAL DESK 5

02 FEB, 2023 | 10:49 AM
image

யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118. 5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  திருகோணமலையின் சீனன்குடாவுக்கும் உப்புவெளிக்கும் இடைப்பட்ட பகுதியினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வெளிவளையம் நிலப் பகுதிக்குள் நுழைய ஆரம்பித்து இன்று  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுவதுமாக கரையைக் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று காலை முதல் இன்று வரையான கடந்த 24 மணி நேரத்திற்குள்  யாழ் மாவட்டத்தில் 118.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது, தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை நாளை மறுதினம் வரை தொடரும்.

மேலும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் தற்போது காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ வேகத்தில் வீசுகின்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாம். வடக்கு  மக்கள் தொடர்ந்து அவதானமாக இருப்பது அவசியம் என்றார்.

https://www.virakesari.lk/article/147232

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது !

By DIGITAL DESK 5

02 FEB, 2023 | 09:41 AM
image

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையின் கிழக்கு கரையோரமாக நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் விதைப்பவர்கள் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகள்:

காலியிலிருந்து கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகமானது மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும் மற்றும் (06N - 12 N) மற்றும் (77E - 85E) இடைப்பட்ட கடல் பகுதிகளில் மணிக்கு 60-70 kmph வரை அதிகரிக்கலாம். மேற்படி கடற்பரப்பில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை மற்றும் மிகவும் கொந்தளிப்பான அல்லது கொந்தளிப்பான கடற்பரப்புகளை எதிர்பார்க்கலாம்.

எனவே, கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்குறிப்பிட்ட கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு மீனவ மற்றும் கடற்படை சமூகம் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. காலியில் இருந்து கொழும்பு, புத்தளம், மன்னார் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மாத்தறையிலிருந்து கொழும்பு, புத்தளம், மன்னார் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகள் (சுமார் 2.5 – 3.0 மீ உயரம்) வரை கொந்தளிப்பாகவும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

https://www.virakesari.lk/article/147225

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

அடிக்கிற காத்து கொஞ்சம் ஊண்டி அடிச்சுதெண்டால் சர்வதேசம் கொஞ்ச காசுகுடுக்கும். அழியிறது தமிழ்ப்பக்கங்கள் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் வீசிய சுழல் காற்றால் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகள் சேதம்

நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் மரத் தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன.

z_p01-GUSTY-WINDS-300x168.jpg

குறித்த சம்பவம் புதன் இரவு வீசிய சுழல் காற்றினால் பருத்தித்துறை, தும்பளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த புதன் கிழமை பிற்பகலிலிருந்து கன மழை பெய்துவந்த நிலையில் நள்ளிரவு வேளை குறித்த சுழல் காற்று குறித்த மரத்தளபாடத் தொழிற்சாலை சூழலில் வீசியமையால் கட்டிடத்தின் கூரைத் தகடுகள் சேதமடைந்தமையாலும் காற்றினால் தூக்கி வீசப்பட்டமையாலும் மழை நீரில் இயந்திரங்கள் நனைந்து பெறுமதி வாய்ந்த மரத்தள பாட உற்பத்தி இயந்திரங்கள், கணினிகள், நிழற்பட பிரதி இயந்திரங்கள், மின் இணைப்பு சாதனங்கள் உட்பட சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன.

 

 

https://thinakkural.lk/article/237461

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு

By NANTHINI

03 FEB, 2023 | 11:44 AM
image

வுனியா நகரில் நேற்று (2) காலை முதல் இன்று (3) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா நகரில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் பல தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் குளங்கள் நிரம்பி வழிகின்றன. வயல் நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்தோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி தொடக்கம் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணிநேர காலப் பகுதியில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி வவுனியா நகரில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட தகவலில் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/147325

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் கடும் மழை : 63 பேர் பாதிப்பு : 2 வீடுகள் பகுதியளவில் சேதம்

By VISHNU

03 FEB, 2023 | 03:36 PM
image

வவுனியாவில் இன்று (03) பெய்த கடும்மழை காரணமாக 23 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

 

IMG_20230203_095904.jpg

குறிப்பாக திருநாவற்குளம், மகாறம்பைக்குளம், வெங்கலச்செட்டிக்குளம், பிரமநாலங்குளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் சில வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.  

IMG_20230203_090113.jpg

இதேவேளை அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

IMG_20230203_090729.jpg

மேலும் வவுனியா நகரில் நேற்று (02) காலை முதல் இன்று (03) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் 189.2மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_20230203_080839.jpg

IMG_20230203_080531.jpg

IMG_20230203_075942.jpg

IMG_20230203_075503.jpg

https://www.virakesari.lk/article/147362

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.