Jump to content

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி..?

2-2.jpg

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 15-ந் தேதி அவர் தனது முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. நிக்கி ஹாலே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது உறுதியானால் குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிரான முதல் போட்டியாளராக அவர் இருப்பார்.

தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக 2 முறை பதவி வகித்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான 51 வயதான நிக்கி ஹாலே, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். அதோடு டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு எதிராக களம் இறங்க மாட்டேன் எனவும் நிக்கி ஹாலே கூறிவந்தார். ஆனால் சமீப காலமாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது சமீபத்திய பேட்டிகளில், “இது ஒரு புதிய தலைமுறைக்கான நேரம். நாட்டை ஒரு புதிய தலைவர் ஆள வேண்டும்” என பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=237015

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசை யாரைத் தான் விட்டது. பாத்திட்டால் சோலி முடிந்தது.
    • கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை. சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂
    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள்... எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.