கருத்துக்கள உறவுகள் பிழம்பு பதியப்பட்டது February 2 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது February 2 (எம்.மனோசித்ரா) நாட்டின் இறையான்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நான்கு பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளன. கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) வியாழக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். இதன் போதே மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்க தொடம்பான ஸ்ரீ சந்திரசிறி தேரர் மற்றும் ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க மல்குலாவே ஸ்ரீ விமல தேரர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்றதிகாரி என்ற ரீதியில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள கருத்து நாட்டுக்குள் பெரும் பதற்றமான சூழல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், மரபு ரீதியானதும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான ஸ்தலங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் மத ரீதியான அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட அதிகாரங்களை செயற்படுத்த மாகாணசபைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றமையானது நாட்டில் பிரிவினைவாதம் செயல்பட வழிவகுக்கும். இதற்கு முன்னர் யுத்தம் பதவி வகித்த நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் நாட்டுக்குள் பதற்றமான நிலைமை உருவாகி விடக் கூடா என்பதனாலாகும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். மக்களின் இறையான்மையைப் பாதுகாப்பதற்காக முன்னின்று செயற்படும் நிறைவேற்றதிகார ஜனாதிபதியொருவர், மத்திய அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மை வீழ்ச்சியடைவதற்கு காரணமாக அமையும் இவ்வாறான அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கின்றமையானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பிராந்திய மற்றும் உலகலாவிய சக்திகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக சில நிபந்தனைகளுக்கு இணக்கப்பாட்டை எட்ட வேண்டிய அழுத்தம் ஏற்படுகின்றது. நாட்டின் இறையான்மை மற்றும் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான யோசனைகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை மகா சங்கத்தினர் என்ற ரீதியில் நாம் வலியுறுத்துகின்றோம். 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடும் நாம் இலங்கையர்கள் என்ற ரீதியில் இனம், மத பேதமின்றி நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கான சான்றுகள் எமது வரலாற்றில் காணப்படுகின்றன. 3 தாசாப்தங்களுக்கும் அதிக காலம் பாரதூரமான உள்நாட்டு யுத்தத்தினை எதிர்கொண்டுள்ளோம். இதன் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது. வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கு அமைச்சரவையில் அங்கத்துவம் வகிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி , அதன் ஊடாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்டவற்றை மாகாண சபைகளுக்கு வழங்குவதானது அரச நிர்வாகத்தை சீர்குலைப்பதாகவே அமையும். இதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மை, இறையான்மை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படக் கூடும். எனவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதை மகா சங்கத்தினர் என்ற ரீதியில் வலியுறுத்துகின்றோம்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது - 4 பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதியிடம் நேரடியாக வலியுறுத்தல் | Virakesari.lk Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் alvayan Posted February 2 கருத்துக்கள உறவுகள் Share Posted February 2 4ம் திகதி ஊர்வலம் போகினம் ..இடையிலை மறித்து அடியுங்கோ....அப்ப சரிவரும் ..தாமதிக்கக்கூடாது... Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted February 2 கருத்துக்கள உறவுகள் Share Posted February 2 (edited) ஒருத்தனிலும் பிழையில்லை, இந்த 13 நம்பரிலதான் பிரச்சனை. 🤣 Edited February 2 by Kapithan 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பகிடி Posted February 2 கருத்துக்கள உறவுகள் Share Posted February 2 44 minutes ago, Kapithan said: ஒருத்தனிலும் பிழையி, இந்த 13 நம்பரிலதான் பிரச்சனை. 🤣 ஆகவே நம்பரை மாத்தினாப் போச்சு.. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nedukkalapoovan Posted February 2 கருத்துக்கள உறவுகள் Share Posted February 2 இவை ஏற்கச் சொன்னாலும்.. தமிழ் மக்கள் வடக்குக் கிழக்கு இணைந்த பூர்வீக தாயகத்தில் அவர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சிக்கு மாற்றீடாக 13 யோ.. 13 + யோ.. 13 ஏ யையோ ஏற்கத் தயாரில்லை. எனவே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமான வகையில் செயற்பட்டு.. சொறீலங்கா அரசுக்கு எல்லா இராணுவ வழிமுறைகளிலும் உதவி செய்து தமிழ் மக்களின் தேச அரசியல் சமூக பொருண்மிய விடுதலைக்கு முட்டுக்கட்டையிட்ட மேற்குலகும்.. ஹிந்தியாவும்.. அடங்கிய சர்வதேசம் தான்.. இப்போ தீர்வைப் பெற்றுக் கொடுத்தாகனும். அவர்களுக்குள்ள கடப்பாட்டை எனியும் சாக்குப் போக்குச் சொல்லி தட்டிக்கழிக்க முடியாது. ஏனெனில்.. விடுதலைப் புலிகளை அழிப்பதனூடாகவே தான் 13 + அமுல்படுத்த நாம் உதவுவோம் என்ற உறுதிமொழியை சிங்களத் தலைமைகள் ஹிந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்திருந்த நிலையில்.. அதையே மீறும் வகையில் அவர்கள் செயற்படும் நிலையில்.. தமிழ் மக்களின் விருப்பத் தீர்வை பெற்றுக் கொடுப்பதை தவிர சர்வதேசத்திற்கு மாற்று வழிக்கு இடமில்லை. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted February 2 கருத்துக்கள உறவுகள் Share Posted February 2 (edited) 2 hours ago, nedukkalapoovan said: ஏனெனில்.. விடுதலைப் புலிகளை அழிப்பதனூடாகவே தான் 13 + அமுல்படுத்த நாம் உதவுவோம் என்ற உறுதிமொழியை சிங்களத் தலைமைகள் ஹிந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்திருந்த நிலையில்.. அதையே மீறும் வகையில் அவர்கள் செயற்படும் நிலையில்.. தமிழ் மக்களின் விருப்பத் தீர்வை பெற்றுக் கொடுப்பதை தவிர சர்வதேசத்திற்கு மாற்று வழிக்கு இடமில்லை. இது முக்கியமான விடயம் 👆 Edited February 2 by Kapithan Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted February 2 கருத்துக்கள உறவுகள் Share Posted February 2 2 hours ago, nedukkalapoovan said: ஏனெனில்.. விடுதலைப் புலிகளை அழிப்பதனூடாகவே தான் 13 + அமுல்படுத்த நாம் உதவுவோம் என்ற உறுதிமொழியை சிங்களத் தலைமைகள் ஹிந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்திருந்த நிலையில்.. அதையே மீறும் வகையில் அவர்கள் செயற்படும் நிலையில்.. தமிழ் மக்களின் விருப்பத் தீர்வை பெற்றுக் கொடுப்பதை தவிர சர்வதேசத்திற்கு மாற்று வழிக்கு இடமில்லை. 17 minutes ago, Kapithan said: இது முக்கியமான விடயம் 👆 இதனைத்தான் நேற்று சொன்னேன். இவர்கள் செய்யும் வேலை எமக்கு உதவும். சுஜ நிர்ணய தேர்தலை நடத்துவதையே நியாயம் என்று உலகு புரிந்து கொள்ளும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted February 3 கருத்துக்கள உறவுகள் Share Posted February 3 1 hour ago, Nathamuni said: இவர்கள் செய்யும் வேலை எமக்கு உதவும். சுஜ நிர்ணய தேர்தலை நடத்துவதையே நியாயம் என்று உலகு புரிந்து கொள்ளும். அது 13 ஐ தராமல் விட்டால். ஆனால் காணி, பொலிஸ் அதிகாரத்தை மத்தியின் கையில் வைத்திருக்கும் ஆணை குழுவை அமைத்து விட்டு, லெட்டர்பேட்டில் மட்டும் மாகாண காணி அமைச்சர், மாகாண பொலிஸ் அமைச்சர் என்ற பெயர்களை உடைய அலங்கார பதவிகளை கொடுத்து, அதை “பொதி” என சம்+சும் உம் ஏற்று கொண்டால்? அதாவது 13 மைனஸ், மைனஸ். ஆனால் பெயர் 13. அப்போ இந்தியாவுக்கும் திருப்தி. மேற்கும் தாம் தமிழருக்கு எதையோ கொடுத்து விட்டதாக பீத்தி கொள்ளலாம். தமிழரை தவிர மிச்சம் எல்லாருக்கும் win-win solution. தமிழருக்கு வழமைபோல் சுத்தமான மாத்தறை தொதோல் அல்லது இந்தியன் அல்வா 🤣 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted February 3 கருத்துக்கள உறவுகள் Share Posted February 3 2 hours ago, Nathamuni said: இதனைத்தான் நேற்று சொன்னேன். இவர்கள் செய்யும் வேலை எமக்கு உதவும். சுஜ நிர்ணய தேர்தலை நடத்துவதையே நியாயம் என்று உலகு புரிந்து கொள்ளும். வடக்கு கிழக்கை தனி அலகாகக் கொள்வதற்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக நம்புகிறேன். http://slguardian.org/vatican-urges-to-have-separate-cardinal-for-north-east-of-sri-lanka/ Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஏராளன் Posted February 3 கருத்துக்கள உறவுகள் Share Posted February 3 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் - விமல் வீரவன்ச By DIGITAL DESK 5 03 FEB, 2023 | 11:33 AM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சாதிய அடிப்படையில் முரண்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றம் பெறும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள பௌத்த கேந்திர மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தினாரா என்ற சந்தேகம் காணப்படுகிறது. தவறு என்று தெரிந்தும் தவறான தீர்மானங்களை அவர் செயற்படுத்தினார். பொருளாதார பாதிப்பை முன்னிலைப்படுத்தி தற்போது நாட்டுக்கு எதிராக பல தீய சக்திகள் அரச ஆதரவுடன் செயற்படுகின்றன. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கை இயல்பாகவே சமஷ்டி முறையிலான நாடாக அங்கிகரிக்கப்படும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இலங்கை மீது கட்டப்பட்ட கூர்மையான கத்திகளை போல் உள்ளது,இந்த கத்திகள் அரசியலமைப்பு திருத்தம் என்ற கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாக 13 ஆவது திருத்தம் தொடர்பில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். நாட்டின் சுயாதீனத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பின் ஊடாக ஒருசில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார்.13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சாதிய அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும். வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளாளர் சாதியினர் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்து கீழ் சாதியினரை அடிமைபோல் செயற்படுத்துவார்கள்.வடக்கு மாகாணத்தில் இன்றும் சாதி அடிப்படையிலான வேறுப்பாடுகள் புரையோடி போயுள்ளன. 13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டில் இல்லாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிர் கொடுக்க முயற்சிக்கிறார். 1987 ஆம் ஆண்டு முதல் மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால் மக்களாணை இல்லாமல் மக்களால் வெறுக்கப்படும் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கிறார். நாட்டுக்கு எதிரான இவரது செயற்பாடுகளுக்கு மகாசங்கத்தினர் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டின் சுயாதீனத்தை பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/147309 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted February 4 கருத்துக்கள உறவுகள் Share Posted February 4 17 hours ago, ஏராளன் said: .13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சாதிய அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும். எப்படியெல்லாம் தமிழரை பிரித்து அடிபட விட்டார்கள் என்பதற்கு இவரின் கூற்று நல்ல சான்று. இனி வெளிப்படையாக சாதி, சமயம், பிரதேசம், தமிழன், முஸ்லிம் என்று களை கட்டி பதின்மூன்றை இவர்களை வைத்தே இல்லாமற் செய்யப்போகிறார்கள். 17 hours ago, ஏராளன் said: வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளாளர் சாதியினர் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்து கீழ் சாதியினரை அடிமைபோல் செயற்படுத்துவார்கள். நீங்கள் அதிகாரத்தை வைத்து தமிழரை எப்படி நடத்தினீர்கள்? அது நமது பிரச்சனை, அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆடு நனையுதென்று அழுததாம் ஓநாயொன்று. இந்த கள்ளனுக்கு கொஞ்சம் புத்தி வேலை செய்யுது. இனக்கலவரம், இரத்த ஆறு என்று எச்சரித்து மாட்டுப்படாமல் மாத்தி வாசிக்கிறான். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ragaa Posted February 4 கருத்துக்கள உறவுகள் Share Posted February 4 On 4/2/2023 at 02:15, ஏராளன் said: வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளாளர் சாதியினர் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்து கீழ் சாதியினரை அடிமைபோல் செயற்படுத்துவார்கள்.வடக்கு மாகாணத்தில் இன்றும் சாதி அடிப்படையிலான வேறுப்பாடுக ஏன் சிங்களவங்களுக்குள் சாதிய முறை பிரச்சனை இல்லயே? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted February 4 கருத்துக்கள உறவுகள் Share Posted February 4 அவர்களுக்குள்ளும் இருக்கு, நம்மைப்போல் தீவிரமில்லை. இல்லாதிருந்தால் இவ்வளவு யதார்த்தமாக தக்க சமயத்தில் தங்களது அடக்குமுறைக்கு நிகராக இவரால் இந்த காரணத்தை கையிலெடுக்க முடிந்திருக்காது. ஆனால் சமகால களநிலை அவர்சொல்வதுபோல் இல்லை நம்மிடை. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted February 4 கருத்துக்கள உறவுகள் Share Posted February 4 (edited) தமது ஊத்தைகள் தெரியாத மாதிரி, அடுத்தவர்கள் விடயமாக அழுகுது ஓநாய். சிங்களத்திலும் சாதிய வேறுபாடு தாராளம். சஜித் ஜதேக யில் இருந்து வெளியே போய் தனிக்கட்சி ஆரம்பித்த காரணம் சாதீயம். ஜேஆர் இடமிருந்து, காமினி, லலித் வசம் ஜதேக கைமாறாமல் இருக்க, சஜித் தகப்பன் பிரேமதாச பட்டபாடு வேறு கதை. கிரிக்கட் சனத் ஜெயசூரியா, தலைமத்துவத்துக்கு வர முடியாது போனதும் சாதியம். கண்டிச்சிங்கள சிறிமாவோ மகள் சந்திரிகா கட்டியது, குறைவான, நடிகர் விஜயகுமாரதுங்கவை என்று சகோதரர் அனுர ஒதுக்கி வைத்து இருந்தார். வின்ஸ்ரன் சேர்சில், இந்தியாவுக்கு ஏன் சுதந்திரம் தரக்கூடாதென சொன்ன நொண்டிசாக்கு போல, இந்த இனவாதியின் கதை இருக்குது. இனத்துக்குள், சாதியம், புரையோடிப் போய் இருப்பதால், இனமே, சிங்களத்துக்கு அடிமைகளாக இருக்கவேண்டும். பலே வெள்ளையத்தேவா.... 🥹😊 1 hour ago, ragaa said: ஏன் சிங்களவங்களுக்குள் சாதிய முறை பிரச்சனை இல்லயே? Edited February 4 by Nathamuni Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted February 4 கருத்துக்கள உறவுகள் Share Posted February 4 1 hour ago, satan said: அவர்களுக்குள்ளும் இருக்கு, நம்மைப்போல் தீவிரமில்லை. இதுதான் உண்மை. அண்மையில் திண்ணையில் இங்கிலாந்து, ஜேர்மன் மக்கள் தமக்கிடையே பிரதேசவாதம் பார்ப்பதை பற்றி பலரும் கதைத்திருந்தோம். அதில் கூட…ஒரு அளவுக்கு மேல் இந்த மக்கள் இந்த பிரிவினைகளை இறுக்கி பிடிக்கமாட்டார்கள் என கதைத்தோம். சிங்களவரின் மேல்/கீழ் நாட்டு சிங்களவர், சாதிய பிரிவினைகளும் இப்படித்தான். குறிப்பாக அநகாரிக தர்மபாலவின் வருகையின் பின் அவர்கள் மத்தியில் இந்த பிரிவினைகள் எம்மளவுக்கு தீவிரமில்லை என்பதே உண்மை. எம்மிடையே 83-2009 வரை தணிந்திருந்தது. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted February 4 கருத்துக்கள உறவுகள் Share Posted February 4 1 hour ago, satan said: தக்க சமயத்தில் தங்களது அடக்குமுறைக்கு நிகராக இவரால் இந்த காரணத்தை கையிலெடுக்க முடிந்திருக்காது 2009 க்கு பின்னாக தமிழர் இடையே சாதி வாதங்களும், மதவாதங்களும் உருவேற்றி வளர்க்கப்பட்டமை ஒன்றும் தற்செயலானதும் அல்ல, விபத்தும் அல்ல. இப்படி ஒரு கட்டம் வரும் போது … இதை காரணம் காட்டி பொலிஸ், காணி அதிகாரங்களை தருவதை தவிர்க்கலாம் என்பது பேரினவாதிகளின் நீண்ட காலத்திட்டம். கிழக்கில்…அதிகாரங்களை பகிர்வது தமிழ்-முஸ்லீம் கலவரத்தை தூண்டும். வடக்கில்…அது சாதி கலவரத்தை தூண்டும். இப்படித்தான் இந்தியா, மேற்க்குக்கு சொல்லி, 13 ஐ யானை தின்ற விளாம்பழம் ஆக்க போகிறார் நரி. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted February 5 கருத்துக்கள உறவுகள் Share Posted February 5 இனமுரண்பாடு, இனக்கலவரம், இனப்படுகொலை, இரத்த ஆறு, என்கிற எச்சரிக்கை சுருதி மாறி சாதிய முரண்பாடு, சமயமுரண்பாடு, பிரதேசவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்று இழுப்பார்கள் அவர்கள், அதற்கு நம்மவர் சிலரும் ஒத்தூதுவார்கள். நரியார் பதவிக்கு வந்ததும் வராததுமாக அவசர அவசரமாக தட்டு வைத்து அழைத்தவர்களைப்பார்க்க அது புரிகிறது. தான் போடுற திட்டத்தை இம்மியளவேனும் பிசகாமல் நிறைவேற்றுபவர்களை சிங்களம் நன்றாகவே அறிந்து தக்க நேரத்தில் கையாளுகிறது. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted February 5 கருத்துக்கள உறவுகள் Share Posted February 5 சாதீய தொல்லையால் யேசுவின் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தமிழர்களும் இனக்கலவரங்களிலும், இனவாத குண்டு வெடிப்புகளிலும் பலியானார்கள்.உலக கிறிஸ்தவர்கள் யாராவது குரல் கொடுத்தார்களா? இதற்கு ஆண்டவர் வந்து பதில் சொல்ல வேண்டாம். உயிர்ப்புடன் இருக்கும் வத்திக்கானாவது வந்து பதில் சொல்லுமா? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted February 5 கருத்துக்கள உறவுகள் Share Posted February 5 16 minutes ago, குமாரசாமி said: சாதீய தொல்லையால் யேசுவின் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தமிழர்களும் இனக்கலவரங்களிலும், இனவாத குண்டு வெடிப்புகளிலும் பலியானார்கள்.உலக கிறிஸ்தவர்கள் யாராவது குரல் கொடுத்தார்களா? இதற்கு ஆண்டவர் வந்து பதில் சொல்ல வேண்டாம். உயிர்ப்புடன் இருக்கும் வத்திக்கானாவது வந்து பதில் சொல்லுமா? வத்திக்கானை நீங்கள் என்ன யேசுவின் போதனை படி நடக்கும் அமைப்பு என்றா நினைக்கிறீர்கள். இந்து மடாலயங்கள், சைவ ஆதீனங்கள் போல் வத்திகானும் ஒரு அதிகார மையமே. அது வரலாறில் தானாகவே முன்னின்று நடாத்திய அநியாயங்களும், கண்டுகொள்ளாமல் விட்ட அநியாயங்களும் ஏராளம். நிற்க - இது இந்து, சைவ, பெளத்த, யூத, எல்லா மடாலயங்களுக்கும் மேல் வைக்கப்பட கூடிய குற்றச்சாட்டுத்தான். வத்திக்கான் எமக்கு குரல் கொடுக்க வேண்டுமாயின், நமது கத்தோலிக்கர்கள் கொழும்பின் பிடியில் இருக்கும் சிங்கள கர்தினாலிடம் இருந்து விலகி, நமக்கென ஒரு தமிழ் கருதினாலை பெற்று கொள்ள வேண்டும். அப்போது நமது சொல்லும் வத்திகானில் அம்பலம் ஏறும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted February 5 கருத்துக்கள உறவுகள் Share Posted February 5 9 minutes ago, goshan_che said: வத்திக்கான் எமக்கு குரல் கொடுக்க வேண்டுமாயின், நமது கத்தோலிக்கர்கள் கொழும்பின் பிடியில் இருக்கும் சிங்கள கர்தினாலிடம் இருந்து விலகி, நமக்கென ஒரு தமிழ் கருதினாலை பெற்று கொள்ள வேண்டும். ஓ....மதத்திலும் இனவாதம் மிஞ்சி நிற்கின்றதோ? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted February 5 கருத்துக்கள உறவுகள் Share Posted February 5 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையாக அமுல்படுத்தத் தீர்மானித்த 13ஏ சட்டத்தை அமுல்படுத்துவது மற்றுமொரு சீர்குலைந்த அரசியல் பிரச்சினையாகும். இந்த வார தொடக்கத்தில் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர்களுடனும் (பெரும் வணக்கத்திற்குரிய திபொட்டுவாவே ஸ்ரீ சித்தாராத சுமங்கல தேரர்) அஸ்கிரிய பீடத்துடனும் (பெரும் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்) இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 13ஏவை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அவர்கள் இருவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், முன்னைய ஜனாதிபதிகள் எவரும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதைப் பார்ப்பது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி விக்கிரமசிங்க விளக்கமளித்திருந்தார். 13ஏ பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக அரசியலமைப்பில் நிலைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அது பொருந்தவில்லை என்றால், திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். இது செய்யப்படவில்லை. இரண்டு பீடாதிபதிகளும் மற்ற இரண்டு நிக்காயேகளின் (பிரிவுகள்) தலைவர்களும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு 13A ஐ அமுல்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தி விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 13ஏவை முழுமையாக அமுல்படுத்துவதாக பெப்ரவரி 8ஆம் திகதி தனது கொள்கை அறிக்கையில் உறுதிமொழி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.# sundytimes.lk Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted February 5 கருத்துக்கள உறவுகள் Share Posted February 5 29 minutes ago, குமாரசாமி said: சாதீய தொல்லையால் யேசுவின் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தமிழர்களும் இனக்கலவரங்களிலும், இனவாத குண்டு வெடிப்புகளிலும் பலியானார்கள். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது இதுதான் சாமியார்! அதை அவர்கள் யாரையும் குறை கூறாமல், விட்டோடாமல் தாங்குகிறார்கள். 36 minutes ago, குமாரசாமி said: உலக கிறிஸ்தவர்கள் யாராவது குரல் கொடுத்தார்களா? பெயர்க் கிறிஸ்தவர்களுக்கும் அதாவது போதனைக்கும் வாழ்வுக்கும் இடையில் நிறைய வித்தியாசமுண்டு. போதனையை வாழ்வாக்குவதே உண்மையான சாதனை! 38 minutes ago, குமாரசாமி said: உயிர்ப்புடன் இருக்கும் வத்திக்கானாவது வந்து பதில் சொல்லுமா? மனித நேயம் என்று கூவும் தாபனங்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனவா? பிறகு எதற்கு வீணான விளம்பரம் இவர்களுக்கு? 9 minutes ago, குமாரசாமி said: ஓ....மதத்திலும் இனவாதம் மிஞ்சி நிற்கின்றதோ? ஓம்! இல்லையென்றால் தமிழர்கள் கொத்துக்கொத்தாக மத ஆலயங்களில் கொன்று குவிக்கப்படும்போது ஏன் அது மவுனம் காத்தது? எப்போதாவது தனது பிரதிநிதியை அழைத்து விளக்கம் கேட்டதா? அறிக்கை விட்டதா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னதா? இன்று தமிழ் ஆயர்கள் தங்களுக்கு தனியொரு பிரதிநிதியை நியமிக்குமாறு கேட்க்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு முன்னால் பாப்பாண்டவர் அதை செய்திருக்க வேண்டும், ஏன் செய்யவில்லை? சிங்கள படுகொலையாளர் அவரை சந்திக்க சென்றபோது மறுப்பாவது தெரிவித்தாரா? முன்னாள் பாப்பானவர் ஒருவர் மறுத்ததாக அறிந்தேன் உண்மை தெரியவில்லை. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted February 5 கருத்துக்கள உறவுகள் Share Posted February 5 17 minutes ago, குமாரசாமி said: ஓ....மதத்திலும் இனவாதம் மிஞ்சி நிற்கின்றதோ? நிச்சயமாக. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் satan Posted February 5 கருத்துக்கள உறவுகள் Share Posted February 5 காரணம் இந்த சிங்கள பிரதிநிதியின் பொய்களை நம்பியுள்ளனர். அதனாலேயே கொழும்பில் குண்டுவெடிப்பில் இறந்த மக்களுக்கு சிறு தொகையாயினும் இழப்பீடு கொடுக்கப்பட்டது ஆனால் வடக்கில் இறந்தவர்களுக்கு எதுவுமில்லை. காரணம் கர்தினாலின் சந்தர்ப்பவாத குரல்! அதனாலேயே தங்கள் இழப்புகளை வெளிப்படுத்த தமிழ் ஆயர்கள் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டுமென்று கேட்க்கிறார்கள். இதுவும் தமிழருக்கு பதின்மூன்றை கொடுப்பதுபோல் சிங்களம் கூவும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நியாயத்தை கதைப்போம் Posted February 5 கருத்துக்கள உறவுகள் Share Posted February 5 யாருக்கு எண் கணித சாத்திரத்தில் நம்பிக்கை உண்டு? மேலைநாடுகளில் 13தவிர்க்கப்படும் ஒரு எண். சில வேளைகளில் 13ல் கூறப்படும் மேற்கண்ட சட்ட சரத்துக்கள் வேறோர் இலக்கத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டால் ஏதும் விமோசனம் கிடைக்குமோ? 13என எழுதாமல் மேற்கண்ட செய்தியை வேறு எப்படி தலைப்பிட முடியும்? சும்மா ஒரு மாற்று யோசனை தான் யாழ் கருத்துக்களத்தின் விஞ்ஞானிகள், பகுத்தறிவாளர்கள் கோபிக்க வேண்டாம் 😝 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts