Jump to content

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி அரசியலமைப்பிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் - மாவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

( எம்.நியூட்டன்)

கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை தமிழரசு கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் புதிய அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்  இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

இதற்காக  இம் மாதம் இரண்டாம் வாரத்தில்  இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஒழுக்காற்று நடவடிக்கைகாக ஒழுக்காற்று குழுவையும் கூட்டபடவுள்ளது .

உள்ளுராட்சிமன்ற தேர்தலில்

இலங்கை தமிழரசுகட்சியினுடைய மத்திய குழு சிபாரிசை செய்திருந்தது அந்த சிபாரிசின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக  தேர்தலிலே போட்டியிடுவதன் மூலம் வட்டார அடிப்படையிலே வருகின்ற கட்சிகளும் அதைவிட விகிதாசார அடிப்படையில் ஏனைய கட்சிகளும் பெறுகின்ற எஞ்சிய வாக்குகளால்  வருகின்ற அந்த பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் பெறலாம்  வடக்கு கிழக்கு  மாகாணங்களில்  பெரும்பான்மையினை நாங்கள் பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு புதிய அணுகுமுறையை செயல்படுத்தி இந்த முறை தேர்தலில் களமிறங்குவோம் என கலந்து பேசினோம் அந்த தீர்மானத்தை இறுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வைக்கின்ற கட்சிகள் அதில் அதிகம் விருப்பம் இல்லாமல் இருந்தார்கள்  எனினும் தமிழரசு கட்சி தன்னுடைய செயற்குழுவில் சிபார்சு செய்தது

அதற்கு அமையவே தனித்து போட்டியிடுகின்றோம் எனினும்

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள்  ஏனைய கட்சிகளை விமர்சித்தல் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றன அந்த வகையில் தமிழரசு கட்சியின்  தலைவர் என்ற ரீதியில் நான்  நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்துகின்றார்கள் பல முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளது

குறிப்பாக சுமந்திரன்,  தவராசா ஆகியோரின் அறிக்கையின்  அடிப்படையிலும்  மிகவும் அதிருப்தி அடைந்த மக்கள் அவர்களுடைய பிரதிநிதிகள் கட்சி பிரதிநிதிகள் என்னிடம்விடுத்த கோரிக்கையை அடுத்து இம்மாதம் இரண்டாம் வாரத்தில் மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு கட்சி பிளவுபடுத்தக்கூடிய வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தவர்கள் பிரச்சார மேடைகளில் ஏனைய கட்சிகளை  விமர்சித்தவர்கள்  எந்த பொறுப்பில் இருந்தாலும்   அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கின்றேன்

இதற்காக கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்கவுள்ளோம் .

எங்கள் மக்களுடைய ஒற்றுமை ஒற்றுமையான அரசியல் தீர்மானத்தை முன்வைத்து பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் நடத்தி இனப் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இவ்வாறான  சக்திகள் கட்சியில் இருந்தால் என்ன வெளியில் இருந்தால் என்ன இதற்கு  இடமளிக்கக்கூடாது என்பதற்காக மிக பொருத்தமான வகையில் தமிழரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு இந்த விடயங்களை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான வகையில்  ஒழுங்கு விதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி அரசியலமைப்பிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் - மாவை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிழம்பு said:

இதற்காக கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்கவுள்ளோம் .

முதல் நடவடிக்கை மகனுக்கு எதிராகவே எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவையருக்கு..பிரசர் வந்திட்டுது..இனி யாரும் அவரை கட்டுபடுத்த முடியாது பாருங்கோ....ஒரு முடிவு கண்டுதான் நிற்பார்...அவ்ரின் ஆவேசத்தை கொழும்பில் சின்ன வயதிலை கண்டனான் ...சிறைமீண்டு ..வந்தபோது..ராமகிருஸ்ண காலில் நடந்த கூட்டம் ...இப்பவும் நினைக்க வைக்குது..அந்த நேரம் அவருக்கு ஆட்கள் வைத்த இரத்தப்பொட்டை பார்த்து கண்டு வளர்ந்த நான் சோல்லுறன் ..இனி மாவையை கண்ட்ரோல் பண்ணமுடியாது..தமிழரசை சுக்கு நூறாக்கிப் போட்டுத்தான் நிற்பார்..😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

மாவையருக்கு..பிரசர் வந்திட்டுது..இனி யாரும் அவரை கட்டுபடுத்த முடியாது பாருங்கோ....ஒரு முடிவு கண்டுதான் நிற்பார்...அவ்ரின் ஆவேசத்தை கொழும்பில் சின்ன வயதிலை கண்டனான் ...சிறைமீண்டு ..வந்தபோது..ராமகிருஸ்ண காலில் நடந்த கூட்டம் ...இப்பவும் நினைக்க வைக்குது..அந்த நேரம் அவருக்கு ஆட்கள் வைத்த இரத்தப்பொட்டை பார்த்து கண்டு வளர்ந்த நான் சோல்லுறன் ..இனி மாவையை கண்ட்ரோல் பண்ணமுடியாது..தமிழரசை சுக்கு நூறாக்கிப் போட்டுத்தான் நிற்பார்..😄

இவர் என்ன சொல்ல வருகிறார் மக்களைப் பிளவு படுத்துவது சரி அது என்ன அரசியல் அமைப்பு விடையத்தில் குழப்பம் விளைவிக்கிறது. இவர் எந்த நாட்டில் வாழ்கிறார் எந்த நாட்டின் அரசியல் அமைப்பு விடையம் இலங்கைத் தீவு என்றால் அங்கு தமிழர்க்கான அரசியல் அமைப்பு என ஏதாவது இருக்குதா 

அவர் அடிமையாக வாழ்ந்து பழகிப்ப்போய் அதுவே தமக்கான அரசியல் அமைப்பு என நினைக்கிறாரா அதையே மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறாரா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே பிளவுகளை தூண்டிவிட்டுட்டு.. பிறர் பிளவை ஏற்படுத்துவதாக பாசாங்கு செய்வது அசிங்கம். உங்களுக்குள் சொந்த இனத்திற்காக ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.. சுயநல அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்றிருக்கும் நிலையில்... ஒருவர் மற்றவரை சாட்டுச் சொல்லி உங்களை நீங்களே காட்டிக்கொடுக்காதீர்கள். மக்கள் உங்களை எல்லாம் பார்த்துக் காறித்துப்பும் நிலையில் இருக்கிறார்கள்.

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் ஒன்று புறப்படுது, இனி எல்லாரையும் துவம்ஷம் செய்யாமல் குகை திரும்பாது. சுமந்திரனுக்குப்பின்னால வாலை குழைச்சுக்கொண்டு திரிந்து இந்தளவுக்கு வளர்த்துவிட்டவரே இவர்தானே. இனி நடவடிக்கை எடுக்கப்போனால் நடடிக்கை எடுபவருக்கே சேதாரம் அதிகம்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

முதல் நடவடிக்கை மகனுக்கு எதிராகவே எடுக்க வேண்டும்.

என்ன நீங்கள் பாசக்கயிறை எறிஞ்சு அவரின் கையைக் கட்டப்பாக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

என்ன நீங்கள் பாசக்கயிறை எறிஞ்சு அவரின் கையைக் கட்டப்பாக்கிறீர்கள்? 

இதைத் தான் மாவையிடம் சுமந்திரன் சொல்லுவார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடவடிக்கை அறிக்கையோடு நின்றுவிடும். சுமந்திரன்மேல் நடவடிக்கை என்று கேள்விப்பட்டால் சிங்களம் வெகுண்டெழும், அதற்காகவே அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பதை நினைவில் வைத்திருக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நாடகம் ஆடுறாங்கள்.:pouting_face:

பாவம் தமிழ்ச்சனம். 2023லும் 1950 நினைவிலையே வாழ வேண்டியுள்ளது.:frowning_face:

அவன் இவன் என சொல்ல எனக்கு உரிமையுண்டு :rolling_on_the_floor_laughing: :cool:

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.