Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை – சஜித், டலஸ் அறிவிப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை – சஜித், டலஸ் அறிவிப்பு !

Digital News Team  

 

 

 

dullas-alahapperuma-sajith-premadasa.jpg

நாளை (04) நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் குழுவினரும் இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் உடன்பட முடியாத காரணத்தினால் தான் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளனர்.

 

https://thinakkural.lk/article/237456

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை – சஜித், டலஸ் அறிவிப்பு !

ஏன் இவைக்கு என்ன நடந்தது? அப்பிடி என்ன வேலைத்திட்டம் இவைக்கு சரி வரேல்லை?  :upside_down_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

230 மில்லியன் செலவழிச்சு.. உக்கிப் போன உக்ரைன் ஆயுதங்களுக்கு ராங்கி.. பல்குழல் பீரங்கி உட்பட்ட கனரக வாகனங்களுக்கு பெயின்ட் அடிச்சு.. சும்மா கிடக்கிற இராணுவத்துக்கு புதுச் சீருடைகளும்.. நவீன ஆயுதங்களும் வழங்கி உள்ளதை வடிவு பாக்கிறதை விட்டிட்டு.. புறக்கணிக்கிறதாமோ.

ஒரு பக்கம் மின்வெட்டு. இன்னொரு பக்கம் இப்படியான நிகழ்வுகளின் சோடிப்புக்கு.. மின்சார சீரழிவு.

அங்கால சிங்கள மக்கள் தெருவில சந்திக்கு சந்தி பிச்சை எடுப்பது சிங்கள இராணுவத்தின் கண்களில் கூட படவில்லை என்பது மகா கொடுமை. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாத மைத்திரி , மஹிந்த , சஜித் : நிகழ்ச்சி நிரலில் கோட்டா, சந்திரிகாவின் பெயர்கள் இல்லை

By DIGITAL DESK 5

04 FEB, 2023 | 02:51 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சனிக்கிழமை (04) கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது.

நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் , முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது பெரும்பாலானோரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சுதந்திர தின நிகழ்வின் நிகழ்ச்சி நிரலில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

எனினும் அவ்விருவரும் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரது பெயர்கள் நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

எனவே இம்முறை சுதந்திர தின நிகழ்வு முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் பங்குபற்றாத நிகழ்வாக அமைந்துள்ளது.

இதே வேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அந்த அழைப்பினை நிராகரித்துள்ளார்.

இதே போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளும் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/147420

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.