Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதீத உடலுறவு காரணமாக இறந்ததா அரியவகை உயிரினம்?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதீத உடலுறவு காரணமாக இறந்ததா அரியவகை உயிரினம்?

36cfd630-a22a-11ed-999e-1915adf104e8-780

ஆஸ்திரேலியாவில் உள்ள வடக்கு க்வோல் எனப்படும் விலங்கு தூக்கத்தை தொலைத்து அதீத உடலுறவில் ஈடுபடுவதாகவும் இதுவே அவற்றின் இறப்புக்கு காரணமாகிவிடுவதாகவும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண் க்வோல்கள் உடலுறவுக்காக பெண் க்வோலைத் தேடி தூக்கத்தையும் மறந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பெண் க்வோல்கள் நான்கு ஆண்டுகள் வரை வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.

“ அவை கூடுமானவரையில் இணையை சேர்வதற்கு அதிக தூரத்தை கடக்கின்றன, மேலும் அவற்றின் உந்துதல் மிகவும் வலுவாக இருப்பதால், இணையைத் தேடுவதற்காக அதிக நேரம் தூங்குவதைத் தவிர்த்து விடுகின்றன”என்று சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கிறிஸ்டோபர் கிளெமெண்டே கூறினார். இவரது பல்கலைக்கழகம் குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வின் முடிவுகள் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேச கடற்கரையில் உள்ள க்ரூட் ஐலாண்ட் தீவில் உள்ள வடக்கு க்வோல்கள் உடலில் டிராக்கர்கள் பொருத்தி 42 நாட்கள் ஆராய்ந்து இந்த தரவுகளை சேகரித்துள்ளனர்.

https://akkinikkunchu.com/?p=237099

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஆண் க்வோல்கள் உடலுறவுக்காக பெண் க்வோலைத் தேடி தூக்கத்தையும் மறந்து நீண்ட தூரம் பயணிக்கின்றன என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உப்புடித்தான் தமிழ் மனிச  க்வோல்களும் நாயாய் பேயாய்  அலைஞ்சு திரிஞ்சு நித்திரை இல்லாமல் இப்ப செத்தேன் சிவனே எண்டு இருக்கினம் :cool:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

உப்புடித்தான் தமிழ் மனிச  க்வோல்களும் நாயாய் பேயாய்  அலைஞ்சு திரிஞ்சு நித்திரை இல்லாமல் இப்ப செத்தேன் சிவனே எண்டு இருக்கினம் :cool:

ஆனால் தமிழர்கள் அரியவகையில் சேர்மதி இல்லை!🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆனால் தமிழர்கள் அரியவகையில் சேர்மதி இல்லை!🤭

உலகத்திலை தமிழனுக்கெண்டு நாடுமில்லை ஊருமில்லை ஓடுமில்லை எண்டபடியாலை அரியவகை இனம்  எண்டு பிழையாய் விளங்கீட்டன்...:rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

உப்புடித்தான் தமிழ் மனிச  க்வோல்களும் நாயாய் பேயாய்  அலைஞ்சு திரிஞ்சு நித்திரை இல்லாமல் இப்ப செத்தேன் சிவனே எண்டு இருக்கினம் :cool:

எப்படிச் சொன்னாலும்.. தமிழரை நாய் என்று சொல்லிடாதேங்க. நாய் ஒன்றை ஒன்று பார்த்துக் குலைச்சாலும் தெருநாய் ஆச்சென்றால்.. குட்டை விழுந்தாலும் கூடிக் கிடக்கும். ஆனால்.. தமிழனிடம் அந்த ஒற்றுமையைக் கூட காண முடியாது. அதிலும் சம் சும் மாவை கும்பல் இருக்கே அது இருக்கிறதையும் கெடுக்கிற ஒரு புதியவகை உயிரினம். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.