Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் மீண்டும் ஆஷு மாரசிங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் மீண்டும் ஆஷு மாரசிங்க

By DIGITAL DESK 5

03 FEB, 2023 | 12:16 PM
image

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரந்தனாவின் வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக  குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஆதர்ஷா கரந்தனா நடத்தி குறித்த மிருக துஷ்பிரயோகம் தொடர்பில் ஆஷு மாரசிங்க மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனையடுத்து  ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷ கரந்தனவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் கோரி   ஆஷு மாரசிங்க வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/147335

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய் மாறசிங்க(ன்) வந்திட்டார்.

நாய்கள் பத்திரம். 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்கள் ஜாக்கிரதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரி ஆளும் நாட்டில் நாய்க்கேது பாதுகாப்பு🤣

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • (எம்.ஆர் எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதை கொண்டாடுகிறார்கள், உண்மையில் இவர்கள் வெட்கப்பட வேண்டும். கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளைகள் மற்றும் பாராளுமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான  பிரேரணைகள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைத்து விட்டது என்று குறிப்பிட்டுக் கொண்டு கொண்டாடுகிறது.உண்மையில் நாடு என்ற ரீதியில் இந்த கடனை பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு வெட்கப்பட வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்று 1.1 பில்லியன் டொலர் கிடைத்து விட்டது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இவ்வாறே பெருமையாக குறிப்பிட்டார்கள். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி,கடனுக்காக சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை தோற்றுவித்த தரப்பினர் வெட்கமடைய வேண்டும். கடுமையான நிபந்தனைகளுக்கு அமைய கட்டணம் மற்றும் சேவை துறைகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை தொடர்ந்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெற முடியும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், அவ்வாறாயின் நாடு தொடர்ந்து கடன்சுமைக்குள் தான் இருக்கும் உற்பத்தி துறையை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. தற்காலிக தீர்வு மாத்திரம் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது, இதனால் சமூக கட்டமைப்பில் நிலையான மாற்றம் ஏதும் ஏற்படாது.கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. சியத்த அலைவரிசையில் ஒளிப்பரப்பான டெலிவெகிய நிகழ்ச்சி நாட்டின் உண்மை அரசியல் நிலைவரத்தை சுட்டிக்காட்டியது.இந்த நிகழ்ச்சிக்கு எதிராக அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து செயற்படுகிறது, அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு, ஆகவே சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக் கொள்வதை விடுத்து ஊடகங்களை முடக்கினால் அது ஊடக முன்னேற்றத்துக்கு வலுவாக அமையும், ஆகவே ஊடகத்துறை சுதந்திரத்துக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். சர்வதேச நாணய நிதிய நிதியுதவி ஒத்துழைப்புக்கு நாடுஎன்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும் - விஜித ஹேரத் | Virakesari.lk
    • நானும் தமிழ்நாட்டில், கேரளாவில் பிட்டு துன்னு இருக்கிறேன் வன்னியர்.... காததூரம் ஓடித்தான் இருக்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், தேங்காய் பூ சேர்த்த மூங்கில் குழலில் அவித்த பிட்டும், இடிச்ச சம்பலும், முட்டை பொரியலும் சாப்பிட்டு பார்த்தால், அடிமையாகி விடுவீர்கள். ஊருக்கு, ஊரு ஒரு விசேட சாப்பாடு.... யாழ்ப்பாணத்தில் இது ஒரு ஸ்பெஷல். 👍
    • இந்த உலகத்திலேயே பிடிக்காத உணவு எதுவெனில், இந்த "புட்டு" or "பிட்டு" தான். 🤬 கண்ணிலே கண்டால், காத தூரம் ஓடி விடுவேன்..! 😷  
    • மேற்கு ஊடகங்கள் தான் சொல்கின்றன, இந்த குழந்தைகள் ஏற்கனவே பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்கள் என்று. ஆகவே, மேற்கு ஊடகங்களும் ஜோக் அடிகின்றன.
    • அப்படியென்றால் நல்லதுகளை கிரகித்துக்கொள்கின்ற வயதுதான் Goshan. கவனத்தில் கொண்டமைக்கு நன்றி. எப்போதும் வாதிடவோ, நியாயம் கதைக்கவோ, நாம் வாழும் சமூகம் ஒரு நீதிமன்றம் இல்லை.ஒவ்வொருவரும் தாம் செய்வது சரி என்று நினைத்துதான் செய்கிறோம். சிலர் தாம் செய்தது சில பிழை என்பதை பின்பு உணர்ந்து திருத்திக்கொள்ளவாரக்ள். மற்றும் சிலர் திருந்தாமலேயே போய்சேர்ந்துவிடுவார்கள். கட்டாயம் எழுதுகிறேன் Goshan.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.