Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2 வருட சிறைத்தண்டனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2 வருட சிறைத்தண்டனை

By SETHU

03 FEB, 2023 | 02:45 PM
image

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

தனது பிள்ளைகளுக்காக மோசடியான கல்வித் தகைமைகள் தொடர்பில் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்தமைக்காக முன்னாள் நீதியமைச்சர் சோ குக்கு  இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துறை விரிவுரையாளராக பணியாற்றிய சோ குக், 2019 செப்டெம்பர் முதல் 2019 ஒக்டோபர் வரை நீதியமைச்சராக பதவி வகித்தார். 

எதிர்காலத்தில், தென் கொரியாவின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்படுவார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். 

இந்நிலையில், தனது மகனும், மகளும் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவதற்காக போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் சோ குக் குற்றவாளியாக காணப்பட்டார். 

இதனால் அவருக்கு 2 வருட சிறைத்தண்டனையும்,  60 லட்சம் வொன் (5000 டொலர்) அபராதமும் விதித்து சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

https://www.virakesari.lk/article/147364

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.