Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு-கருப்பு எது சரி? | பிழையுடன் பயன்படுத்தும் சொற்கள்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ல்,ள்,ழ் எது எங்கே வரும்? | ல ள ழ எழுத்துப் பிழைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பிலேயே எழுத்துப்பிழை இருக்கின்றது! 🤪

காணோளி - தவறு

`காணொளி` என்பதுதான் சரியானது. அச் சொல்லே நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது. அண்மையில்தான் `காணொலி` என மிகைத் திருத்தம் செய்துள்ளார்கள். `Video` என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லாகவே `காணொளி` என்ற சொல்லாக்கம் செய்யப்பட்டது. `Video` என்ற சொல்லின் வேர்ச்சொல்லும் காண் (videre > see ) என்ற பொருளிலேயே வந்துள்ளது. பின்னர் இச் சொல்லிருந்தே பல ஆங்கிலச் சொற்கள் உருவாகின.

அந்த வகையில் காணொளி எனச் சரியாகவே எழுதி வந்த எம்மைச் சிலர் Video இல் காண்பதுடன் கேட்கவும் செய்கின்றோமே என்று சொல்லி, `காணொலி`என மிகைத் திருத்தம் செய்துவிட்டார்கள். இதற்கு இவர்கள் `வானொலி` என்ற எடுத்துக்காட்டினைக் காட்டுவார்கள். வானிலிருந்து வந்த ஒலி என்ற வகையிலும், அதில் கேட்டலே முதன்மை என்பதாலும் அச் சொல் சரியானதே. இங்கு காணொளியில் காட்சியே முதன்மையானது. தமிழில் இரு சொற்கள் சேரும் போது இரண்டாவது சொல்லின் பொருளே முதன்மை பெறும் (எ.கா = பேருந்து ). இதற்கமைய `காணொலி` என்றால் அங்கு ஒலியே முதன்மையாகிவிடுமல்லவா! அது தவறு. காட்சியே முதன்மை. எனவே காணொளி தான் சரியானது.

தமிழில் `எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே` என்கின்றது தொல்காப்பியம். அந்த விதிக்கமையச் சொல்லாக்கினால்; ஒளியினைத் தான் காண முடியும், காணும் ஒளி (காண் + ஒளி = காணொளி) என்ற பொருளில் காணொளி என்பதே சரியாகும்.

"காண் ஒளி என்பது கண்ட ஒளி, காண்கின்ற ஒளி, காணும் ஒளி என்று வினைத்தொகையாய் அமைந்து தெளிந்த பொருள் தருகிறது" என்பார் கவிஞர் மகுடேசுவரன். "காண்+ஒலி=காண்கின்ற ஒலியாகி, பொருளே மாறி விடும்" என்பார் முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான்.

எனவே முடிவாகக் கூறினால் `காணொளி` என்பதே சரியான தமிழ்ச்சொல்லாகும்.

ஆதாரம்: குவேரா

https://qr.ae/prMaay

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கிருபன் அண்ணை மேலே காணொளி பிழை என்று எழுதிவிட்டு, அது தான் சரி என கீழே குவேரா சுட்டியை போட்டிருக்கிறீர்களே! 
காணோளியா? காணொலியா? சரி?
சரி போட்ட இணைப்புகளில் குற்றம் இல்லை தானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

கிருபன் அண்ணை மேலே காணொளி பிழை என்று எழுதிவிட்டு, அது தான் சரி என கீழே குவேரா சுட்டியை போட்டிருக்கிறீர்களே! 
காணோளியா? காணொலியா? சரி?
சரி போட்ட இணைப்புகளில் குற்றம் இல்லை தானே? 

9 hours ago, கிருபன் said:

காணோளி - தவறு

நான் போட்ட பதிவை பொறுமையா வாசிக்கவேண்டும் @ஏராளன்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

நான் போட்ட பதிவை பொறுமையா வாசிக்கவேண்டும் @ஏராளன்😎

மன்னிச்சு அண்ணை. மிகத் தவறு எனப் புரிந்தது. நன்றி.

நிர்வாகத்திற்கு திருத்தச் சொல்லி முறையிட்டுள்ளேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • இணையவன் changed the title to தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
  • கருத்துக்கள உறவுகள்

காணொளி என்று முன்பு எழுதினேன். காணொளி தவறு காணொலி சரி என கூறப்பட்டது. காணொலி எனக்கு சரியாக தென்படுகின்றது. ஒளி + ஒலி = காணொலி

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பசும்பாலா பசுப்பாலா சரி?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறானவை        சரியானது  

பசும் பால்  .....>    பசுப்பால் (பசுவின் பால்)

தேனீர்       ..........>   தேநீர் ( தேயிலை நீர் )

எண்ணை   .........> எண்ணெய்   ( எள் = நெய் )

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.