Jump to content

13 ஐ முழுமையாக அமுல்படுத்த மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் - கம்மன்பில


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அமையவே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவதுதிருத்தத்திற்கு அமைய காணி அதிகாரம் மற்றும் 9 மாகாணங்களுக்கும் பிரத்தியேக பொலிஸ் ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் மாத்திரம் தற்போது மிகுதியாகவுள்ளது.

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் பகிர்ந்தளிக்கும் போது இலங்கை இயல்பாகவே சமஷ்டியாட்சி முறையிலான நாடாக அங்கிகரிக்கப்படும்.

69 இலட்ச மக்கள் சுபீட்சமான கொள்கை திட்டத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து ஜனாதிபதியாக கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதிலாக 'பஷில் ராஜபக்ஷ இலக்கு' கொள்கை திட்டத்தை அமுல்படுத்தியதால் நாட்டு மக்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்ஷவை விரட்டியடித்தார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்களின் ஆதரவினால் தெரிவு செய்யபட்டார். சுபீட்சமான இலக்கு கொள்கை திட்டத்தில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிடப்படவில்லை.

அரசியல் திருத்தங்களுக்கு பதிலாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே மக்கள் பொதுஜன பெரமுன தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்.

ஆகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்ற மக்களாணையுடன் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பதவி வகிக்கிறார், ஆகவே அவர் சுபீட்சமான கொள்கை திட்டத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட கூடாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து பதவி வகித்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை, ஏனெனில் இதன் பாரதூரத்தை அவர்கள் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் பிரதிநியல்ல என்பதால் இதன் பாரதூர தன்மையை அறிந்துக் கொள்ளும் தேவை அவருக்கு இல்லை.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதே தனது முக்கிய பொறுப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இவர் கடந்த ஆறு மாத காலமாக எதனையும் செய்யவில்லை.

பேச்சளவில் மாத்திரம் மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் அதற்கு அவர் மக்கள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்.13 ஆவது திருத்தம் தேவையா,இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கே உண்டு என்றார்.

13 ஐ முழுமையாக அமுல்படுத்த மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் - கம்மன்பில | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.

அதையே, தமிழர் தரப்பும் கோரி, அப்படியே சுஜநிர்ணய தேர்தலாக்க வேண்டும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில பிரிந்து செல்ல விரும்பும் மக்களிடம் தான் கருத்துக் கேப்பாங்கள்.. பிரிந்து செல்ல விருப்பமோ இல்லையோன்னு. 

கிழக்கு திமோர்.. கொசாவோ.. தென் சூடான்.. ஸ்காட்லாந்து.. கியூபெக்.. என்று அண்மைய தசாப்தப் பட்டியல் நீளும்.

ஆனால் சொறீலங்காவில் உள்ளவை மட்டும் தான்.. பிரிந்து செல்ல வேண்டிய அவசியமற்றவையிடம்.. பிரிந்து செல்ல மற்றவர்களை அனுமதிப்பதா இல்லையான்னு வாக்குக் கேட்கிறது. அதிலும் அடக்கி ஆளும் எண்ணம் தான். இவங்கள் எல்லாம் சனநாயகம் பேசுறதும் அதை உலகம் அங்கீகரிப்பதும் தான் மகா கொடுமை. 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.