Jump to content

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது ஏன் அவர்களுக்காக நீதி கேட்கவில்லை:அருட்தந்தை ஜெபரத்தினம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இரு மாகாணங்களுக்கும் தனியான கர்தினால் ஒருவரை நியமிக்குமாறு வத்திக்கானிடம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் சிறுபான்மை தமிழ் கத்தோலிக்கர்கள் இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் வஞ்சிக்கப்படுவதாக உணர்ந்ததன் காரணமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்ததாக அருட்தந்தை ஜோசப் பத்திநாதர் ஜெபரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு நீதி கேட்கவில்லை

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது ஏன் அவர்களுக்காக நீதி கேட்கவில்லை:அருட்தந்தை ஜெபரத்தினம் | Separate Cardinal For North East Of Sri Lanka

மேலும் கூறுகையில்,“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக கொழும்பு பேராயர் நீதி கேட்பதில் தவறில்லை, ஆனால் வடக்கு கிழக்கு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வழங்க எவரும் முன்வராத காரணத்தினால் தான் நீதியை நிலைநாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி புனித பேதுரு தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர். 

அப்போது, வடக்கு மற்றும் கிழக்கு ஆயர்களின் கவனம் இந்த விடயத்தில் ஈர்க்கப்பட்டது, ஆனால் தெற்கில் இருந்து எந்த பதிலும் இல்லை.

ஏழு பாதிரியார்கள் மற்றும் பல கன்னியாஸ்திரிகள் போரில் இறந்தனர்.

1995 இல், ரெவரெண்ட் மேரி பாஸ்டியன் தனது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியா செல்வதற்கு முன்னர் அவர் பகிரங்கமாக கொல்லப்பட்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது ஏன் அவர்களுக்காக நீதி கேட்கவில்லை:அருட்தந்தை ஜெபரத்தினம் | Separate Cardinal For North East Of Sri Lanka

நினைவு தினத்தில் பங்கேற்க விரும்பவில்லை

யாழ்ப்பாண கன்னியாஸ்திரியின் தலைமையில் நடத்தப்பட்ட மேரி பாஸ்டியனின் நினைவு தினத்தில் கொழும்பு கன்னியாஸ்திரி ஒருவர் பங்கேற்க விரும்பவில்லை என தென்பகுதி ஆயர்கள் தெரிவித்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களுக்காக கொழும்பு பேராயர் நீதி கேட்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதேபோன்று தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது ஏன் தமிழ் மக்களுக்கு நீதி கேட்கவில்லை?

வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேச தலையீடு தேவையற்றது என தென்னிலங்கை ஆயர்கள் கூறியுள்ள நிலையில், வடக்கு கிழக்கு ஆயர்கள் சர்வதேச தலையீட்டை கோருகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/separate-cardinal-for-north-east-of-sri-lanka-1675455094

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி புனித பேதுரு தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர். 

வத்திக்கானும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

எல்லாம்  சதியா விதியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

வத்திக்கானும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

எல்லாம்  சதியா விதியா?

சதி. கொழும்பில் தாங்கள் வெள்ளையும் சுள்ளையுமாக அலையனுன்னா.. சிங்களவர்களிடம் நல்ல பெயர் வாங்கனுன்னா.. தமிழர்களுக்கு எதிராகப் பேசனும்.. என்ற அடிமட்ட புத்தியோடு வாழ்பவர்கள் தான் தென்னிலங்கை வாழ் ஆயர்களும்.. போராயர்களும். இதில் முன்னாள் மட்டக்களப்பு பேராயரும் அடக்கம். 

ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்கள்.. தேவாலயத்தில் வைச்சு சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனமோ.. விசாரணையோ கோராதவர்கள்.. அவர் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற கணிப்பைக் கூட வழங்கத் தவறியவர்கள்...இன்று சர்வதேச கவனம் பெற்றுவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக 2019 தாக்குதலுக்கு முன்னுரிமை கொடுத்து தங்களை மனிதாபிமானிகள் போலக் காட்டிக்கொள்ள போலி வேடம் போடுகின்றனர் அவ்வளவே.

அல்லைப்பிட்டியில்.. ஈபிடிபி மற்றும் கடற்படையால்.. கொல்லப்பட்ட பாதிரியாருக்கு இல்லாத நீதி.. முள்ளிவாய்க்காலின் பின் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பாதிரியாருக்கு இல்லாத நீதி.. இப்படி எத்தனையோ சம்பவங்கள். 2019 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சார்ப்பாக இவர்கள் வடிக்கும் கண்ணீரை.. நீலிக்கண்ணீராகத்தான் காட்டுது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தார்மீக மான தமிழீழக் கோரிக்கையை நிராகரிக்கும் இவர்கள்.. அண்மையில் சூடானில் இருந்து பிரிந்து தனிநாடான தென் சூடானுக்கு பாப்பரசர் விஜயம் செய்திருப்பதை கண்டிப்பினமாமோ... பதவி கிழிஞ்சிடும். 

Pope and archbishop on historic peace mission to South Sudan

https://www.bbc.co.uk/news/world-africa-64500535

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

வத்திக்கானும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

எல்லாம்  சதியா விதியா?

தமிழ் கத்தோலிக்க சமூகத்தின் மீதான அத்தனை வன்முறையின் பின்னும் மகிந்தவை நேரில் அழைத்து ஆசீர்வதிதவர் போப்பாண்டவர். இதன் முக்கிய காரணம் - கர்தினால் என்ற வகையில் கொழும்பு பேராயர் சொல்வதன் படி வத்கிக்கான் ஒழுகுவதே.

முன்பே சொன்னதுதான்.

தமிழர் அல்லாதோர் எம்மை தமிழராக மட்டுமே பார்கிறனர். இதில் வத்திகனும், கொழும்பின் பேராயரும் (கர்தினாலும்) அடங்குகிறனர்.

நாம்தான் சைவன், கத்தோலிக்கன், புரடஸ்தாந்து என நமக்குள்  பார்க்கிறோம்

இந்த மாற்றாந்தாய் அணுகுமுறையை இப்போதாவது சுட்டி காட்டி, பரிகாரமாக தமிழ் பேசும் இரு மாகாணங்களுக்கும் ஒரு கர்தினாலை நியமிக்க அருட்தந்தை பத்திநாதர் கோருவது நியாயமானது, காலத்தின் தேவை.

இதை சமய வேறுபாடுகளை மறந்து ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

சதி. கொழும்பில் தாங்கள் வெள்ளையும் சுள்ளையுமாக அலையனுன்னா.. சிங்களவர்களிடம் நல்ல பெயர் வாங்கனுன்னா.. தமிழர்களுக்கு எதிராகப் பேசனும்.. என்ற அடிமட்ட புத்தியோடு வாழ்பவர்கள் தான் தென்னிலங்கை வாழ் ஆயர்களும்.. போராயர்களும். இதில் முன்னாள் மட்டக்களப்பு பேராயரும் அடக்கம். 

ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்கள்.. தேவாலயத்தில் வைச்சு சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனமோ.. விசாரணையோ கோராதவர்கள்.. அவர் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற கணிப்பைக் கூட வழங்கத் தவறியவர்கள்...இன்று சர்வதேச கவனம் பெற்றுவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக 2019 தாக்குதலுக்கு முன்னுரிமை கொடுத்து தங்களை மனிதாபிமானிகள் போலக் காட்டிக்கொள்ள போலி வேடம் போடுகின்றனர் அவ்வளவே.

அல்லைப்பிட்டியில்.. ஈபிடிபி மற்றும் கடற்படையால்.. கொல்லப்பட்ட பாதிரியாருக்கு இல்லாத நீதி.. முள்ளிவாய்க்காலின் பின் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பாதிரியாருக்கு இல்லாத நீதி.. இப்படி எத்தனையோ சம்பவங்கள். 2019 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சார்ப்பாக இவர்கள் வடிக்கும் கண்ணீரை.. நீலிக்கண்ணீராகத்தான் காட்டுது.

நன்றி அருமையான கருத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

நாம்தான் சைவன், கத்தோலிக்கன், புரடஸ்தாந்து என நமக்குள்  பார்க்கிறோம்

கத்தோலிக்கர் புரட்டஸ்தான்து என்று  அவர்கள் தங்களுக்குள்  பார்க்கிறார்களோ தெரியவில்லை பிரான்ஸ் லூர்து மாதவிடமும் வொசிங்கம் சேர்சிலும் அழுது பிரார்தனை  செய்து சேவிப்பவர்கள்  இலங்கை சைவர்கள் தான் அதிகம் . 

புறாவுக்கு  தெரியாது அடிக்கிற மணி சேர்சில் இருந்து வருதா இல்லை சைவ கோயிலில் இருந்து வருதா என்பது போல் இருந்த இலங்கை தமிழர்களுக்குள் புலிகள் இல்லாமல் போன காலத்துக்குள் பிரிவினைகளை உருவாக்க மறவன் புலவு .. வேலன் சுவாமி  போன்றவர்கள் இந்திய இலங்கை அரசுகளால் இறக்கி விடபட்டுள்ளார்கள் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வத்திக்கானும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

எல்லாம்  சதியா விதியா?

ஒரு முடிவுக்கான ஆரம்பம். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் புனித யாகப்பர் ஆலயம், மடுமாதா ஆலயம் இப்படி இவர்களால் குண்டு வீசி அழிக்கப்பட்ட தேவாலயங்கள், அடைக்கலம் புகுந்து, வழிபட சென்று கொல்லப்பட்டவர்கள் இவர்களைப்பற்றி வாயே திறக்கவில்லை கர்தினால், போப்பும் கேள்வி கேட்கவில்லை, மனவருத்தம் தெரிவிக்கவுமில்லை, அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லவுமில்லை. நொந்த பிள்ளையை தாயும் பாரமென்று நினைத்து கைவிட்டாளோ? மந்தையை மறந்த ஆயர்கள். என்னோடு என் சிலுவையை சுமந்துகொண்டு என்பின்னே வாருங்கள் என்று அந்த கிறிஸ்து அழைத்தாரோ தமிழரை?

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.