Jump to content

வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை!

வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார்.

வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பதிலளிப்பதற்கான வழிகள் எங்களிடம் உள்ளன’ என கூறினார்.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புடினின் கருத்துகளை விபரிக்க மறுத்துவிட்டார். ஆனால், ஊடகவியலாளர்களிடம், ‘கூட்டு மேற்கு நாடுகளால் புதிய ஆயுதங்கள் வழங்கப்படுவதால், பதிலளிப்பதற்கான அதன் திறனை ரஷ்யா அதிகமாகப் பயன்படுத்தும்’ என்று கூறினார்.

https://athavannews.com/2023/1322954

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு

By Rajeeban

04 Feb, 2023 | 12:05 PM
image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான தனது நாட்டின் போரை இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளிற்கு எதிரான தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சாடியுள்ளார்.

ஸ்டாலின் கிராட்டில் நாஜிப்படையினருக்கு எதிரானவெற்றியின்    80வது வருடத்தை குறிக்கும் நிகழ்வில் புட்டின் இந்தகருத்தை வெளியிட்டிருந்தார்.

எனினும் இதனை கடுமையாக சாடியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் கடந்த வருடம் உக்ரைன் மீதான ரஸ்ய ஆக்கிரமிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அவர் அனைத்து விதமான காரணங்களையும் முன்வைப்பார் ஆனால் பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு எதேச்சதிகாரத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம்  புட்டின் உடையது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்

https://www.virakesari.lk/article/147409

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியின் ஒரு சில நடவடிக்கைகளை பார்க்கும் போது பழைய பழி தீர்க்கும் நடவடிக்கையோ என எண்ணத்தோன்றுகின்றது.

Quote

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு

இவர் ஏன் இப்ப துள்ளுறார்? முழு உக்ரேன் சனத்தையும் அவுஸ்ரேலியா தத்தெடுக்கலாமே? :grinning_face:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் கடும் எதிர்ப்பு

By Rajeeban

04 Feb, 2023 | 12:05 PM
image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீதான தனது நாட்டின் போரை இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளிற்கு எதிரான தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளதை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சாடியுள்ளார்.

ஸ்டாலின் கிராட்டில் நாஜிப்படையினருக்கு எதிரானவெற்றியின்    80வது வருடத்தை குறிக்கும் நிகழ்வில் புட்டின் இந்தகருத்தை வெளியிட்டிருந்தார்.

எனினும் இதனை கடுமையாக சாடியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் கடந்த வருடம் உக்ரைன் மீதான ரஸ்ய ஆக்கிரமிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அவர் அனைத்து விதமான காரணங்களையும் முன்வைப்பார் ஆனால் பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கு எதேச்சதிகாரத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கம்  புட்டின் உடையது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்

https://www.virakesari.lk/article/147409

யாழ் களத்திலேயே  ஒருவரும் மேற்குலகின் சொல்லை நம்புவதிலிருந்து மெதுவாக பின்வாங்க ஆரம்பித்துவிட்டனர். இவரோ  கோமாவிலிருந்து தற்போதுதான் மீண்டு  வந்துள்ளார் போல பழையதையே பேசிக்கொண்டி....😏

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

யாழ் களத்திலேயே  ஒருவரும் மேற்குலகின் சொல்லை நம்புவதிலிருந்து மெதுவாக பின்வாங்க ஆரம்பித்துவிட்டனர். 

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, இணையவன் said:

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

யாழ் களம் சார்பாகவோ அல்லது  ஆதரவாளர்களாக மாறிவிட்டனர் எனக் கூறியதை காட்டுங்கள் பார்க்கலாம் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

இதை எப்படி யாழ் களம் சார்பாகக் குறிப்பிடுவீர்கள் ? ஒரு சிலர் புதின், ஹிட்லர், கிம் யோங், போன்றவர்களின் ஆதரவாளர்களாக இருப்பதற்காக யாழ் களம் இப்படியான சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக ஆகிவிடாது.

நீங்கள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிக்கவில்லையா? 

கிம் -  நான் மட்டும்தான் யாழில் அங்கீகரிக்கப்ட்ட ஒரே ஒரு கிம் ஆதரவாளன். 

வேறு யாரையும் இவ்வாறு அழைத்தால், அல்லது அழைக்க தூண்டினால் சட்ட நடவடிக்க எடுக்கப்படும்.

புட்லர் - பாவத்தை அடிச்சும் பார்த்தாச்சு, அவிழ்த்தும் பார்த்தாச்சு எண்டு இப்ப கொஞ்சம் லீவுல விட்டிருக்கு.

ஹிட்லர் - இது சும்மா குதர்கத்துக்காக எழுதுவது

#கு(தர்க)மாரசாமி அண்ணை 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீங்கள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிக்கவில்லையா? 

உக்ரேன் ? அப்படியென்றால் என்ன ? என்று ஒரு கேள்வி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

😀

  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.