Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும்


Recommended Posts

சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும்

சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும்

பொருளாதாரம் இல்லாது தேசியத்திற்கு முக்கியத்துவமளித்தால், சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எம்மை சிங்கள கட்சி என்கின்றனர். உண்மையில் சிறிலங்கா சுதந்திர கட்சி அனைத்து இனங்கள், மதங்களையும் சமமாக இணைத்து பயணிக்கின்ற தேசிய கட்சி.

அந்த கட்சியின் முக்கிய பதவி ஒன்றில் வடக்கை சேர்ந்த எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்களும் தமிழ்த் தேசியத்துடனேயே பயணிக்கின்றோம்.

இன்று 75வது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்படுகிறது. அதே நேரம் 70 ஆண்டுகளாக நாம் சுதந்திரத்திற்காக போராடுகின்றோம். இன்றுவரை அது கிடைக்கவில்லை.

ஆனால், தேசிய கட்சி ஒன்றின் ஊடாக தமிழ் மக்களிற்கான விடயங்களை நிறைவேற்ற முடிந்துள்ளது. தமிழ்த் தேசியம் பேசி காலத்தை கடத்தியுள்ளோம். உள்ளுராட்சி மன்ற தேர்தல்களிலும் உரிமைக்காக வாக்களிக்க சொன்னார்கள். நீங்களும் வாக்களித்தீர்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல்களிலும் உரிமைக்காக வாக்களிக்க சொன்னவர்கள், உள்ளுர் அபிவிருத்திக்கான தேர்தல்களிலும் உரிமைக்காகவே வாக்களிக்க சொன்னார்கள்.

ஆனால், இன்று உரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும் வாக்களிக்க கோருகின்றனர். அதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். மக்களிற்கு தேசியத்துடனான அபிவிருத்திக்கான பயணத்தையே நாம் முன்னெடுத்தோம். அதனை தமிழ்த் தேசியம் பற்றி மாத்திரம் கூறுபவர்கள் இன்று விளங்கிக் கொண்டுள்ளனர்.

தனியே தேசியத்தை மாத்திரம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தால், சுடுகாட்டிலேயே தமிழ்த் தேசியம் கிடைக்கும். இங்கு மக்கள் எல்லோரும் இறந்து சுடுகாடாக எமது பகுதி இருக்கும்.

சுதந்திர தினத்தை கரிநாள் எனக் கூறுபவர்கள், 5 ஆண்டுகளிற்கு முன்னர் தாமே தேசியக் கொடியை எடுத்து கொடுத்தார்கள். இன்று அரசியலிற்காக மாறி மாறி மக்களை ஏமாற்றுகின்றனர் என மேலும் கருத்து தெரிவித்தார்.
 

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=170443

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நக்கிறதென்று முடிவெடுத்திட்டா.. நாய்க்கு செக்கென்ன.. சிவலிங்கமென்ன.. எல்லாம் ஒன்று தான். யார் யார் எல்லாம் தமிழ் தேசியம் தேசம் பற்றி பேசுறதென்ட விவஸ்தையே இல்லாமல் போயிட்டு.

அதுசரி.. இதோ யாழ் குடாநாடு சிங்கப்பூர் ஆகுதென்றவர்.. அதற்கு செயலி செய்தவர்.. அந்தச் செயலியையைவாது இயக்கிறாரோ இல்லையோ..?! இதில தமிழ் தேசியத்துக்கு ஜோசியம் சொல்ல வெளிக்கிட்டினம்.

உங்கள் அஜென்டாவே.. சிங்கள பெளத்த பேரினவாதத்தை வளர்த்தெடுத்து பிச்சை வாங்கிக் கொள்வதே. அதை செய்தால் தான் உங்களுக்கு பிழைப்பாகும். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவரின் அபிவிருத்தியே வடக்கில் சுடுகாட்டில் எரி கொட்டகை அமைத்துக் கொடுப்பதுதான்...இதை அந்தந்த ஊரில்உள்ள சுடலைகளே சாட்ட்சியம் சொல்லும்..ஏன் இப்ப சொல்லி உறுதிப் படுத்த வேணும்... வாய் கொடுத்து வாங்கிக்கட்டக்கூடாது..தம்பி..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியென்ன அபிவிருத்தியை செய்து போட்டார் இவர், அவற்றையும் சேர்த்து சொன்னாற்தானே கேட்கிறவர்களுக்கும் புரியும். பேச, வாழ உரிமையில்லையாம் அபிவிருத்தியை மட்டும் விடுவார்களாம்! இனமுரண்பாடு தோன்றி படுகொலையாகி இன்று இந்த நிலையில் வந்து நிற்பதே  தமிழனின் அபிவிருத்தியை காண பொறுக்காமாற்த்தான் என்பது, இந்தக்கூலிக்கு எங்கே புரியப்போகிறது? அங்கே கேட்டதை இங்கே வந்து கக்குகிறார். முதலில் நாசமாக்கப்பட்டு எரிந்ததெல்லாம் தமிழன்  வியர்வை,  குருதி சிந்தி ஏற்படுத்திய அபிவிருத்தியைத்தானே? அகதியாக சொந்தநாட்டில் அனைத்தையுமிழந்து தன் பிரதேசத்தில்  கால் வைத்தான், உரிமை கேட்கவில்லை. விட்டானா? உங்கள் இடத்துக்கு போ எனக்கலைத்தவன் அங்கேயும் வந்து, தன்இடம் என்று கொன்று குவித்தான். இப்போ நமக்கென்று எதுவுமில்லையாம். இவருக்கு இதிலிருந்து என்ன புரிகிறது? எங்கள் மண்ணில் சிங்களம் விவசாயம் செய்யுது எங்களை விரட்டிவிட்டு, எங்கள் கடற்பிராந்தியத்தில் சிங்கள மீனவர், எங்கள் படித்த பட்டதாரிகள் தெருவில் சிங்கள உத்தியோகத்தர்கள் எங்கள் பிரதேசங்களில், எங்கள் மொழியில் எங்கள் முறைப்பாடுகளை செய்ய முடியவில்லை. சரி..... ...நாங்கள் அபிவிருத்தி செய்து சுயமாக வாழ முடியுமென்றால் சிங்கள அராஜகப்படை ஏன் இன்னும் எங்கள் மண்ணை அடைத்துக்கொண்டிருக்கு என்பதற்கு இவரிடம் பதிலுண்டா? இது எல்லோருக்கும் பொதுவான நாடு என்கிறார்கள் ஏன் எங்களை அடித்து விரட்டினார்கள்? ஏன் எங்கள் கோவில்களை ஆக்கிரமிக்கிறார்கள்? அதுக்காவது பதிலுண்டா இவரிடம்?  நாங்கள் சுதந்திரம் பெற்றதிலிருந்து உழைத்து சாப்பிடவில்லை, கடன்வாங்கியே சாப்பிட்டோம் என அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். அத்தோடு அடித்து, விரட்டி, பிடுங்கி சாப்பிட்டோம் என்பதை இன்னொருநாளில் சுடுகாட்டிலிருந்து ஒத்துக்கொள்வர்.  

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பையடுத்து மீண்டும் உயர்வடைந்தது ரூபாவின் பெறுமதி Published By: VISHNU 21 MAR, 2023 | 05:30 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பையடுத்து இன்று (21) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வடைந்துள்ளது.  நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட பணவீக்க அதிகரிப்பினால் கடந்த காலங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துசென்றது. இருப்பினும் கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் சடுதியான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டதுடன், ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்துச்சென்றது.  ஆனால் நேற்று (20) திங்கட்கிழமை மீண்டும் ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன்படி நேற்று (20) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 331.71 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 349.87 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்திருப்பதாக இன்று (21) உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து மீண்டும் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.  அதன்படி இன்று (21) செவ்வாய்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவுப்பெறுமதி 316.84 ரூபாவாகவும், விற்பனைப்பெறுமதி 334.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/151098
  • அது தான் பெயரைப் பார்த்தாலே அதிருதில்ல. சீனர்களின் கடைகளில் தாமரைக்கிழங்கு கிடைக்குமே.
  • 16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம் - அரசாங்கம் Published By: DIGITAL DESK 5 21 MAR, 2023 | 11:43 AM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம். எனினும் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. எனவே நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , சர்வதேச நாணய நிதியத்துடனான எந்தவொரு நிபந்தனைகளையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது. இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை அனைத்தும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அரசியலமைப்பிற்கமைய நிதி தொடர்பான சகல அதிகாரங்களும் பாராளுமன்றத்திடமே காணப்படுகிறது. இந்த கடனுதவி திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில் , கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படவுள்ள 48 மாதங்களும் யார் ஆட்சி செய்தாலும் , எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய அதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சர்வதேசத்துடன் எம்மால் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் முன்னெடுக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கு எதிர்ப்புக்கள் காணப்பட்டாலும் அல்லது அவற்றை ஏற்றுக் கொண்டாலும் அது தொடர்பில் சகல கட்சிகளும் பாராளுமன்றத்தில் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்குமானால் அது சிறந்ததாகும். அத்தோடு இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியிருக்கின்றோம். ஆனால் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. இதற்காக அரசியல் வேறுபாடுகள் இன்றி தேசிய ரீதியில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அரச நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாணய நிதியத்தினால் நீடிக்கப்பட்ட கடன் வசதித்திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் வழங்கப்படும். இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மீது ஏற்படும் நம்பிக்கையின் அடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான கடன்களாக இவ்வருடத்திற்குள் 7 பில்லியன் டொலர் கிடைக்கப்பெறும். நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்தினை பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளன. அவை தொடர்பில் விரைவில் நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னரே அவற்றை வெளிப்படுத்த முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட உரை நிகழ்த்துவார். நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த முழுமையான பொறுப்புக்கள் நாட்டு மக்களுடையது. வேலைத்திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாவிட்டால் , நாடு பாரிய நெருக்கடிகளையே எதிர்கொள்ளும். நாட்டை நேசிக்கும் மக்கள் அதைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவார் என்று நம்புகின்றோம். சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டில் காணப்படும் நிபந்தனைகளில் ஒன்று ஊழல் , மோசடிகளை ஒழிப்பதற்கான சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/151027
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.