Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும்


Recommended Posts

சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும்

சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும்

பொருளாதாரம் இல்லாது தேசியத்திற்கு முக்கியத்துவமளித்தால், சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எம்மை சிங்கள கட்சி என்கின்றனர். உண்மையில் சிறிலங்கா சுதந்திர கட்சி அனைத்து இனங்கள், மதங்களையும் சமமாக இணைத்து பயணிக்கின்ற தேசிய கட்சி.

அந்த கட்சியின் முக்கிய பதவி ஒன்றில் வடக்கை சேர்ந்த எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்களும் தமிழ்த் தேசியத்துடனேயே பயணிக்கின்றோம்.

இன்று 75வது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்படுகிறது. அதே நேரம் 70 ஆண்டுகளாக நாம் சுதந்திரத்திற்காக போராடுகின்றோம். இன்றுவரை அது கிடைக்கவில்லை.

ஆனால், தேசிய கட்சி ஒன்றின் ஊடாக தமிழ் மக்களிற்கான விடயங்களை நிறைவேற்ற முடிந்துள்ளது. தமிழ்த் தேசியம் பேசி காலத்தை கடத்தியுள்ளோம். உள்ளுராட்சி மன்ற தேர்தல்களிலும் உரிமைக்காக வாக்களிக்க சொன்னார்கள். நீங்களும் வாக்களித்தீர்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல்களிலும் உரிமைக்காக வாக்களிக்க சொன்னவர்கள், உள்ளுர் அபிவிருத்திக்கான தேர்தல்களிலும் உரிமைக்காகவே வாக்களிக்க சொன்னார்கள்.

ஆனால், இன்று உரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும் வாக்களிக்க கோருகின்றனர். அதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். மக்களிற்கு தேசியத்துடனான அபிவிருத்திக்கான பயணத்தையே நாம் முன்னெடுத்தோம். அதனை தமிழ்த் தேசியம் பற்றி மாத்திரம் கூறுபவர்கள் இன்று விளங்கிக் கொண்டுள்ளனர்.

தனியே தேசியத்தை மாத்திரம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தால், சுடுகாட்டிலேயே தமிழ்த் தேசியம் கிடைக்கும். இங்கு மக்கள் எல்லோரும் இறந்து சுடுகாடாக எமது பகுதி இருக்கும்.

சுதந்திர தினத்தை கரிநாள் எனக் கூறுபவர்கள், 5 ஆண்டுகளிற்கு முன்னர் தாமே தேசியக் கொடியை எடுத்து கொடுத்தார்கள். இன்று அரசியலிற்காக மாறி மாறி மக்களை ஏமாற்றுகின்றனர் என மேலும் கருத்து தெரிவித்தார்.
 

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=170443

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கிறதென்று முடிவெடுத்திட்டா.. நாய்க்கு செக்கென்ன.. சிவலிங்கமென்ன.. எல்லாம் ஒன்று தான். யார் யார் எல்லாம் தமிழ் தேசியம் தேசம் பற்றி பேசுறதென்ட விவஸ்தையே இல்லாமல் போயிட்டு.

அதுசரி.. இதோ யாழ் குடாநாடு சிங்கப்பூர் ஆகுதென்றவர்.. அதற்கு செயலி செய்தவர்.. அந்தச் செயலியையைவாது இயக்கிறாரோ இல்லையோ..?! இதில தமிழ் தேசியத்துக்கு ஜோசியம் சொல்ல வெளிக்கிட்டினம்.

உங்கள் அஜென்டாவே.. சிங்கள பெளத்த பேரினவாதத்தை வளர்த்தெடுத்து பிச்சை வாங்கிக் கொள்வதே. அதை செய்தால் தான் உங்களுக்கு பிழைப்பாகும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் அபிவிருத்தியே வடக்கில் சுடுகாட்டில் எரி கொட்டகை அமைத்துக் கொடுப்பதுதான்...இதை அந்தந்த ஊரில்உள்ள சுடலைகளே சாட்ட்சியம் சொல்லும்..ஏன் இப்ப சொல்லி உறுதிப் படுத்த வேணும்... வாய் கொடுத்து வாங்கிக்கட்டக்கூடாது..தம்பி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியென்ன அபிவிருத்தியை செய்து போட்டார் இவர், அவற்றையும் சேர்த்து சொன்னாற்தானே கேட்கிறவர்களுக்கும் புரியும். பேச, வாழ உரிமையில்லையாம் அபிவிருத்தியை மட்டும் விடுவார்களாம்! இனமுரண்பாடு தோன்றி படுகொலையாகி இன்று இந்த நிலையில் வந்து நிற்பதே  தமிழனின் அபிவிருத்தியை காண பொறுக்காமாற்த்தான் என்பது, இந்தக்கூலிக்கு எங்கே புரியப்போகிறது? அங்கே கேட்டதை இங்கே வந்து கக்குகிறார். முதலில் நாசமாக்கப்பட்டு எரிந்ததெல்லாம் தமிழன்  வியர்வை,  குருதி சிந்தி ஏற்படுத்திய அபிவிருத்தியைத்தானே? அகதியாக சொந்தநாட்டில் அனைத்தையுமிழந்து தன் பிரதேசத்தில்  கால் வைத்தான், உரிமை கேட்கவில்லை. விட்டானா? உங்கள் இடத்துக்கு போ எனக்கலைத்தவன் அங்கேயும் வந்து, தன்இடம் என்று கொன்று குவித்தான். இப்போ நமக்கென்று எதுவுமில்லையாம். இவருக்கு இதிலிருந்து என்ன புரிகிறது? எங்கள் மண்ணில் சிங்களம் விவசாயம் செய்யுது எங்களை விரட்டிவிட்டு, எங்கள் கடற்பிராந்தியத்தில் சிங்கள மீனவர், எங்கள் படித்த பட்டதாரிகள் தெருவில் சிங்கள உத்தியோகத்தர்கள் எங்கள் பிரதேசங்களில், எங்கள் மொழியில் எங்கள் முறைப்பாடுகளை செய்ய முடியவில்லை. சரி..... ...நாங்கள் அபிவிருத்தி செய்து சுயமாக வாழ முடியுமென்றால் சிங்கள அராஜகப்படை ஏன் இன்னும் எங்கள் மண்ணை அடைத்துக்கொண்டிருக்கு என்பதற்கு இவரிடம் பதிலுண்டா? இது எல்லோருக்கும் பொதுவான நாடு என்கிறார்கள் ஏன் எங்களை அடித்து விரட்டினார்கள்? ஏன் எங்கள் கோவில்களை ஆக்கிரமிக்கிறார்கள்? அதுக்காவது பதிலுண்டா இவரிடம்?  நாங்கள் சுதந்திரம் பெற்றதிலிருந்து உழைத்து சாப்பிடவில்லை, கடன்வாங்கியே சாப்பிட்டோம் என அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். அத்தோடு அடித்து, விரட்டி, பிடுங்கி சாப்பிட்டோம் என்பதை இன்னொருநாளில் சுடுகாட்டிலிருந்து ஒத்துக்கொள்வர்.  

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.