Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாதிச் சான்றிதழ் சர்ச்சை: இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சரியா? சாதி ஒழிப்பை சாத்தியமாக்குவது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாதிச் சான்றிதழ் சர்ச்சை: இயக்குநர் வெற்றிமாறன் பேசியது சரியா? சாதி ஒழிப்பை சாத்தியமாக்குவது எப்படி?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்
வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை
 
படக்குறிப்பு,

இயக்குநர் வெற்றிமாறன்

பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் என்ற இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. அவர் கூறியது போல், 'சாதியற்றவர்' சான்றிதழைப் பெறுவது இன்றைய சூழலில் அவ்வளவு கடினமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ‘முதல் தலைமுறை சினிமா’ என்ற தலைப்பில் பேசிய இயக்குநர் வெற்றிமாறனிடம், கல்லூரி மாணவர் ஒருவர் ‘பள்ளி, கல்லூரிகளில் சாதியை கண்டிப்பாக குறிப்பிடுமாறு கூறுவது குறித்த உங்கள் கருத்து என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

 

"பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும்"

அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “இது எனக்கே பெரிய கொடுமையான விஷயம் தான். என் பிள்ளைகளுக்கு ‘No caste’ என்ற சான்றிதழை வாங்க முயற்சித்தேன். அவர்கள் தர மறுத்துவிட்டார்கள். அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்றார்கள். நீதிமன்றத்திற்கு சென்றேன். அங்கேயும் கூட, ‘அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. நீங்கள் எதாவது ஒரு சாதியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். இந்து என இருக்கிறதே எதாவது ஒரு சாதியை போடுங்கள்’ என்று கூறிவிட்டனர்.

எனக்கு எதுவுமே வேண்டாம் என கூறினேன் ஒப்புக்கொள்ளவேயில்லை. நான் சாதி சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதற்கான வேலைகளைத்தான் பார்த்துகொண்டிருக்கிறேன். பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்றுதான் நான் நினைக்கின்றேன்” என்றார்.

உடனே அங்கிருந்தவர்கள் கைத்தட்டியதும், இடைமறித்த வெற்றிமாறன், “ஒரு நிமிடம். இது வந்து யாருக்கு தேவையில்லையோ அவர்களுக்கு மட்டும். எனக்கு தேவையில்லை என நான் நினைக்கிறேன்.

வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை

"எல்லோரும் ஒரேயடியாக சாதிச் சான்றை தூக்கி எறிந்துவிட முடியாது"

உரிமையை வாங்கி கொடுக்கும் இடத்தில் அவர்கள் சாதிச் சான்றிதழை கொடுத்துதான் ஆக வேண்டும். சமூக நீதிக்காக சில இடங்களில் நீங்கள் அதை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். எனக்கு அது தேவையில்லை. நான் வேண்டாம் என கூறும் பட்சத்தில், ‘சரி இவன் வேணாம் என்கிறான். இவனை விட்டு விடுவதற்கான வழிவகை அதில் இருக்க வேண்டும்’ என நான் நினைக்கிறேன். ஆகவே, அப்படி பொதுவாக எல்லோரும் ஒரேயடியாக நாம் சாதிச் சான்றிதழை தூக்கி எறிந்துவிட முடியாது. சமூக நீதிக்கு அது தேவைப்படுகிறது” என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.

வெற்றிமாறனின் இந்தப் பேச்சில், "பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும்," என்ற முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு சமூக ஊடகங்களில் பலரும் விவாதப் பொருளாக்கிவிட்டனர். "பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்காவிட்டால் சாதி ஒழிந்து விடுமா? இயக்குநர் வெற்றிமாறன் இப்படி பேசலாமா?" என்று பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடத் தொடங்கிவிட்டனர்.

வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை

"சாதி ஒழிப்பை திருமணங்களில் இருந்தே தொடங்க வேண்டும்"

இதுகுறித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணியிடம் பிபிசி சார்பில் பேசினோம். கல்வியாளர், மனித உரிமைப் போராளி, சமூக ஆர்வலர் என்று பல பரிமாணங்கள் கொண்ட அவர், "சாதி ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழியாக இயக்குநர் வெற்றிமாறன் ஒருவேளை அவ்வாறு பேசியிருந்தால் அது ஏற்கக் கூடியதாக இருக்காது," என்றார்.

"சாதி ஒழிப்பு பற்றி பேசியதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்கப்படுகிறதே? அதனை நிறுத்துவதில் இருந்தே சாதி ஒழிப்பைத் தொடங்க வேண்டும் என்று பேசுவது உயர் நடுத்தர வர்க்க மனோநிலை. அது சரியல்ல. ஏனெனில், இந்த சமூகத்தில் சாதிய கட்டமைப்பை நிலைநிறுத்துவது திருமணங்கள்தான். காதல் திருமணம் தவிர்த்த ஏனைய நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அனைத்துமே சாதி அடிப்படையில்தான் செய்யப்படுகிறது. உண்மையில், சாதி ஒழிப்பு என்பதற்கான தொடக்கம் திருமணத்தில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும்," என்றார்.

வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை
 
படக்குறிப்பு,

பேராசிரியர் கல்யாணி

"பழங்குடியினர் சாதி சான்று பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும்"

"பகுத்தறிவும், பெரியார், அம்பேத்கர் கருத்துகளும் பேசப்படும் தமிழ்நாட்டில் சாதிய கட்டுமானத்தில் இறுக்கம் சற்று தளர்ந்துள்ளது என்பது உண்மைதான். ஆனாலும், நம் சமூகத்தில் அதன் ஆதிக்கம் இன்றும் தொடரவே செய்கிறது. திருமணத்தின் மூலம் அதன் கட்டுமானம் கட்டிக் காப்பாற்றப்படுகிறது.

என்னைப் பொருத்தவரை, சாதி சான்றிதழ், குறிப்பாக, பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ்கள் கொடுக்கும் நடைமுறை இன்னும் எளிதாக்கப்பட வேண்டும். அதன் மூலம் இருளர் உள்ளிட்ட பழங்குடியினரும் கல்வி, வேலைவாய்ப்புகளை பெற்று சமூகத்தின் மைய நீரோட்டத்தில் ஒன்றிணையும் வாய்ப்பு ஏற்படும். அத்துடன், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். ஒரே பிரிவில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்புகள் தரப்பட வேண்டும்," என்று பேராசிரியர் கல்யாணி வலியுறுத்தியுள்ளார்.

'சாதி மற்றும் மதம் அற்றவர்' சான்றை முதன் முதலாக பெற்ற ஸ்நேகா கூறுவது என்ன?

'சாதியற்றவர்' சான்றிதழ் பெற இன்னும் போராடிக் கொண்டிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டதும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி விட்டிருக்கிறது. அதுகுறித்து, நாட்டிலேயே முதன் முறையாக சாதியற்றவர் சான்றிதழைப் பெற்ற பெருமைக்குரிய திருப்பத்தூரைச் சேர்ந்த ஸ்நேகாவிடம் பேசினோம். சாதியற்றவர் சான்றிதழ் பெற விரும்பியது ஏன்? அதனைப் பெறுவதில் என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டார்? அதன் மூலம் படைக்க விரும்பிய மாற்றம் என்ன? என்பன குறித்த கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

பேச்சைத் தொடங்கியதுமே, "சாதி சான்றிதழை ஒழிப்பதால் மட்டுமே சாதி ஒழிந்துவிடாது, அது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு மட்டுமே," என்று அவர் தீர்க்கமாக குறிப்பிட்டார்.

வெற்றிமாறன் பேச்சால் சர்ச்சை
 
படக்குறிப்பு,

நாட்டிலேயே முதல் ஆளாக 'சாதி மற்றும் மதம் அற்றவர்' சான்றிதழைப் பெற்ற திருப்பத்தூர் ஸ்நேகா

"தாய், தந்தையர் ஆகிய இருவருமே சாதி, மத நம்பிக்கை அற்றவர்களாக இருந்ததால் பள்ளி சான்றிதழ்களிலேயே சாதி, மதம் குறிப்பிடப்படவில்லை. 'மாணவரின் சாதி, மதத்தை குறிப்பிட வேண்டியது கட்டாயம் இல்லை' என்று 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை சுட்டிக்காட்டி வாதிட்டதால் அது சாத்தியமானது.

 

ஆனால், வருவாய்த்துறையில் சாதியற்றவர் என்று குறிப்பிட்டு சான்றிதழை வாங்குவது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. சாதியற்றவர் சான்றிதழைப் பெற 2010-ம் ஆண்டு முதலே தொடர்ச்சியாக விண்ணப்பித்து வந்தேன். கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என அதிகாரிகள் மட்டத்தில் அந்த விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.

சுமார் 10 ஆண்டுகள் தொடர் போராட்டத்தின் பலனாக, நாட்டிலேயே முதல் நபராக எனக்கு 2019-ம் ஆண்டு 'சாதி மற்றும் மதம் அற்றவர்' சான்றிதழ் கிடைத்தது. நான் அளித்த விரிவான விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அப்போதைய திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சாதியற்றவர் சான்றிதழை எனக்கு வழங்கினார்.

என்னை முன்மாதிரியாகக் கொண்டும், சிலர் நீதிமன்ற ஆணை வாயிலாகவும் இன்றைய நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் சாதியற்றவர் சான்றிதழை வாங்கியுள்ளனர்," என்று ஸ்நேகா கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cll3v5pl9jdo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகநாடுகளில் மதம் எனக்கு இல்லை என்றே சுதந்திரமாக கொடுக்கலாம் 👍
இந்தியாவில் ஒரு சாதியை சொல்லியே ஆக வேண்டுமாம்.இப்படியும் இந்தியாவில் நடைபெறுகிறதா.  இலங்கையில் கூட இப்படி இல்லையே இந்தியா தேறுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2023 at 05:49, விளங்க நினைப்பவன் said:

மேற்குலகநாடுகளில் மதம் எனக்கு இல்லை என்றே சுதந்திரமாக கொடுக்கலாம் 👍
இந்தியாவில் ஒரு சாதியை சொல்லியே ஆக வேண்டுமாம்.இப்படியும் இந்தியாவில் நடைபெறுகிறதா.  இலங்கையில் கூட இப்படி இல்லையே இந்தியா தேறுமா ?

அதற்கு பிரதான காரணம் பிற்படுத்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களை சரியாக அடையாளம் காணவும், நிவாரணம் வழங்கவும் என நினைக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தெரிவித்த பதிலுக்கு நன்றி.
ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசைகளை இந்தியாவில் சாதி வெறியர்கள் தீவைத்து எரிக்கிறார்கள்.பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது தானே. பள்ளிகள் கல்லூரிகளில் இருந்தே கட்டாயம் ஒரு சாதியை குறிப்பிட வேண்டும் என்று சாதி முறையை ஏன் திணிக்க வேண்டும்.பாதிகபட்ட மக்களுக்கு நிவாரணம் உதவி வழங்குவதற்காக அரசு  நீங்கள் என்ன சாதி என்று கேட்கின்றது என்றால் நிவாரணம் உதவிகளை சாட்டாக வைத்து சாதி முறையை வளர்க்கவே அரசு விரும்புகின்றது. மேற்குலக நாடுகளில்  சுழல்சூறாவளி, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்புகள் வரும் போது நிவாரணம் உதவி வழங்குகிறார்கள்.பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்குகிறார்கள்.சாதியை கண்டுபிடித்த இந்தியா தான் சாதி அடையாளத்தை மக்களிடம் கேட்கின்றது.சாதிக்கு சான்றிதழ் கொடுத்து சாதி வேற்றுமைகளை ஊக்குவித்து இந்திய அரசியல் கட்சிகள் இலாபம் அடைகின்றன என்று நம்புகிறேன்.
    

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மற்றும் அலுவலக விண்ணப்பங்களிலிருந்தே சாதி எனும் கேள்வி இடத்தை அழித்து விட வேண்டும். அதை அரசுதான் முன்னின்று செய்ய வேண்டும்.

எனினும் திராவிடவும் ஆரியமும் இருக்கும் வரை எதுவுமே சாத்தியமில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2023 at 00:19, விளங்க நினைப்பவன் said:

மேற்குலகநாடுகளில் மதம் எனக்கு இல்லை என்றே சுதந்திரமாக கொடுக்கலாம் 👍
இந்தியாவில் ஒரு சாதியை சொல்லியே ஆக வேண்டுமாம்.இப்படியும் இந்தியாவில் நடைபெறுகிறதா.  இலங்கையில் கூட இப்படி இல்லையே இந்தியா தேறுமா ?

இதற்கான காரணத்தை தம்பி ஏராளன் விளக்கி இருக்கிறார் உங்களுக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

சாதியை சான்றிதழில் அழிப்பதால் மட்டும் சாதி அழிந்துவிடாது.

நடைமுறையில், மனங்களில் சாதி(தீ)ய எண்ணம் இருக்கும் வரை சாதி இருக்கும்.

சாதி இருக்கும் வரை - அதனால் பாதிக்கப்பட்டவனை சமநிலை படுத்தி தூக்கி விட, சமூக நீதி செய்ய சாதி சான்றிதழில் இருக்க வேண்டும்.

இதைத்தான் வெற்றிமாறனும் சொல்கிறார். ஒரு உயர்ந்த நிலைக்கு வந்து விட்ட தனக்கு, சுயவிருப்பில் சாதி இல்லை என்று சான்றிதழ் வழங்க வேண்டும், ஆனால் சாதியால் ஒதுக்கப்பட்ட, சமூக நீதி இட ஒதுக்கீடு தேவையுள்ள ஒருவருக்கு அது வழங்கபடவேண்டும்.

 

On 5/2/2023 at 17:21, ஏராளன் said:

ஒரு நிமிடம். இது வந்து யாருக்கு தேவையில்லையோ அவர்களுக்கு மட்டும். எனக்கு தேவையில்லை என நான் நினைக்கிறேன்.

👆🏼👇

On 5/2/2023 at 17:21, ஏராளன் said:

உரிமையை வாங்கி கொடுக்கும் இடத்தில் அவர்கள் சாதிச் சான்றிதழை கொடுத்துதான் ஆக வேண்டும். சமூக நீதிக்காக சில இடங்களில் நீங்கள் அதை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். எனக்கு அது தேவையில்லை. நான் வேண்டாம் என கூறும் பட்சத்தில், ‘சரி இவன் வேணாம் என்கிறான். இவனை விட்டு விடுவதற்கான வழிவகை அதில் இருக்க வேண்டும்’ என நான் நினைக்கிறேன். ஆகவே, அப்படி பொதுவாக எல்லோரும் ஒரேயடியாக நாம் சாதிச் சான்றிதழை தூக்கி எறிந்துவிட முடியாது. சமூக நீதிக்கு அது தேவைப்படுகிறது” என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் சொல்வதில் தப்பில்லை ஆனால் இப்படி சாதியற்றோர் சான்றிதழ் பெறுபவர்களும் அவர்கள் சந்ததியும் சமூக நீதி இட ஒதுக்கீட்டில் பின்னர் இடம் கோர கூடாது.

இல்லாவிடில் உயர்த்தபட்ட சாதியை சேர்ந்தோர் இதை ஒரு தந்திரமாக பாவித்து - இட ஒதுக்கீட்டை பெறுவர்.

அதே போல் வெற்றிமாறன் என்ற தனி மனிதன் முடிவை, அவர் சந்ததி, பிள்ளைகள் மீது திணிக்க முடியுமா? நாளைக்கு 18 வயதான பின், அவரின் பிள்ளை எனக்கு என் சாதி அடிப்படையில் சமூக நீதி இட ஒதுக்கீட்டில் இடம் வேண்டும் என கேட்கலாம் அல்லவா?

ஆகவே இதை கண்மூடித்தனமா எடுத்தாளமுடியாது.

 

14 hours ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலக நாடுகளில்  சுழல்சூறாவளி, வெள்ளம் போன்றவற்றால் பாதிப்புகள் வரும் போது நிவாரணம் உதவி வழங்குகிறார்கள்.பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்குகிறார்கள்.சாதியை கண்டுபிடித்த இந்தியா தான் சாதி அடையாளத்தை மக்களிடம் கேட்கின்றது

இங்கே ஏராளன் நிவாரணம் என சொன்னது - வரலாற்று அடக்கு முறைக்கு எதிரான - மறுவினையாக வழங்கப்படும் - இட ஒதுக்கீட்டை. அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் quota/ reservation system. 
இந்தியாவிலும் இயற்கை பேரிடரின் போது நிவாரணம் சாதி பார்க்காமல்தான் கொடுப்பார்கள்.

On 5/2/2023 at 17:21, ஏராளன் said:

சாதி ஒழிப்பு பற்றி பேசியதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்கப்படுகிறதே? அதனை நிறுத்துவதில் இருந்தே சாதி ஒழிப்பைத் தொடங்க வேண்டும் என்று பேசுவது உயர் நடுத்தர வர்க்க மனோநிலை.

👆🏼இதை நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி அடையாளங்களை தனிமனித பெயர் சூட்டுவதிலும் மாற்றியமைக்க வேண்டும்.
ஊரில் பெயர்களை வைத்தே இன்னார் என கண்டு பிடிக்கலாமாம். அதே போல் இந்தியாவிலும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சாதி அடையாளங்களை தனிமனித பெயர் சூட்டுவதிலும் மாற்றியமைக்க வேண்டும்.
ஊரில் பெயர்களை வைத்தே இன்னார் என கண்டு பிடிக்கலாமாம். அதே போல் இந்தியாவிலும்....

இது கடந்த 75 வருடத்தில் தமிழக்கதில் பெருமளவு மாறி விட்டது. 

வ. உ. சிதம்பரம் பிள்ளை,

காம்ராஜ் நாடார்,

வ. வே. சு ஐயர்,

ஜி. கே நாயுடு,

மூப்பனார்,

ராமசாமி படையாட்சி,

முத்துராமலிங்க தேவர்,

இவ்வாறு ஒரு காலத்தில் தலைவர்கள், சாமான்யர்கள் பெயர்களில் எல்லாம் சாதி மிக சாதாரணமாக ஒட்டி கொண்டிருந்தது.

ஆனால் இன்று, இராமதாஸ், திருமாவளவன், அன்புமணி, முருகன், ஸ்டாலின், வாசன், அண்ணாமலை, ராஜா, சீமான், வைகோ, என எந்த தலைவர் பெயரின் பின்னாலும் சாதி அடையாளம் இல்லை. மக்கள் மத்தியிலும் அதிகம் இல்லை.

ஆனால் வட இந்தியாவில் ஏன் கேரளாவில் கூட இன்னும் இந்த வழக்கம் உள்ளது. 

கீழே இந்தியன் ஒன்றிய அரசின் அமைச்சரவை லிஸ்ட் உள்ளது. இதில் சாதியை ஊகிக்க முடியாத பெயர்களாக இருப்பவை, நிர்மலா சீதாராமனும், சுப்ரமண்யன் ஜெய்சங்கரும்தான்.

https://en.m.wikipedia.org/wiki/Union_Council_of_Ministers

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்தியன் ஒன்றிய அரசின் அமைச்சரவை லிஸ்ட் உள்ளது. இதில் சாதியை ஊகிக்க முடியாத பெயர்களாக இருப்பவை, நிர்மலா சீதாராமனும், சுப்ரமண்யன் ஜெய்சங்கரும்தான்.

 

சீதாராமன், சுப்ரமண்யன் என்றாலே அவா பெயர்தானே… அம்பி. 🤣

இது நோக்கு தெரியாதோன்னா… 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சீதாராமன், சுப்ரமண்யன் என்றாலே அவா பெயர்தானே… அம்பி. 🤣

இது நோக்கு தெரியாதோன்னா… 😂

என்ன நீங்க இப்படிச் சொல்றேள், அது அப்டி இல்லண்ணா, நீங்க ஆல்ரெடி இவா, அவான்னு தெரிஞ்சுண்டு படிக்கறச்சே உங்க மனசில அப்படி தோண்றதுண்ணா.

வேற வேற மனுசாளும் சீதாராமன், சுப்ரமணியன் எண்டு பேர் வச்சுண்டுதானே இருக்காள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

ஆனால் இன்று, இராமதாஸ், திருமாவளவன், அன்புமணி, முருகன், ஸ்டாலின், வாசன், அண்ணாமலை, ராஜா, சீமான், வைகோ, என எந்த தலைவர் பெயரின் பின்னாலும் சாதி அடையாளம் இல்லை. மக்கள் மத்தியிலும் அதிகம் இல்லை.

சாதி, இன அடையாளம் இல்லையெனில் ஏன் ஆளுக்கொரு கட்சி வைத்திருக்கின்றார்கள்?

வேறு கொள்கைகள் ஏதாவது வைத்திருக்கின்றார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

சாதி, இன அடையாளம் இல்லையெனில் ஏன் ஆளுக்கொரு கட்சி வைத்திருக்கின்றார்கள்?

வேறு கொள்கைகள் ஏதாவது வைத்திருக்கின்றார்களா?

இது என் கருத்தல்ல அவர்கள் கருத்து.

சாதி சான்றிதழ் போலவே, தாம் சார்ந்த சாதி மக்களின் உரிமை நிலை நாட்டப்பட, அவர்கள் சார்பாக போராட ஒரு அமைப்பு வேண்டும் என்கிறார்கள்.

அதாவது தந்தை செல்வாவின் தமிழரசு கட்சி இனவாத கட்சி அல்ல, ஆனால் தம் இன உரிமைக்காக போராடிய கட்சி.

அதே போல் இராமதாஸ், திருமா நடத்துவது சாதிவாதி கட்சிகள் இல்லையாம். தத்தம் சாதி மக்களின் உரிமைக்காக போராடும் கட்சிகளாம்.

பிகு

சாதி அடையாளம் தமிழ் நாட்டில் இல்லை என நான் சொல்லவில்லை. 

75 வருடத்தில் வட இந்தியாவுடனும் ஒப்பிட்டு என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை பெயர்களை உதாரணமாக எடுத்து விளக்கியுள்ளேன்.

சாதி அடையாளமே இப்போ இல்லை என்பது என் நிலைப்பாடு என்றால் - சான்றிதழும் தேவையில்லை என்றல்லவா கூறி இருப்பேன்?

 

தமிழ்நாட்டில் சாதி 600-1000 வருட புற்று நோய். அதை 75 வருடத்தில் குணப்படுத்த முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சாதியை சான்றிதழில் அழிப்பதால் மட்டும் சாதி அழிந்துவிடாது.

நடைமுறையில், மனங்களில் சாதி(தீ)ய எண்ணம் இருக்கும் வரை சாதி இருக்கும்.

தான் உயர்ந்த சாதி என்று உயர்வாகவும் மற்றவர் தாழ்ந்த சாதி என்று தாழ்வாகவும் நம்பும்  மனநிலை ஒழிய வேண்டியது முக்கியம். சாதிகள் இல்லை என்று சொல்லி கொண்டு சாதிக்கு சான்றிதழ் கட்டயபடுத்தி வழங்கினால் இந்தியாவில் சாதி வேற்றுமைகள் தொடர்ந்து பாதுகாப்பாக பாதுகாக்கபடும். அந்த சினிமாவை சேர்ந்தவர் கூட சொல்கிறார் எதாவது ஒரு சாதியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும்   என்று தன்னை கேட்டார்கள்.

24 minutes ago, goshan_che said:

தமிழ்நாட்டில் சாதி 600-1000 வருட புற்று நோய்.

அந்த புற்று நோயை மேலும் தீவிரமாக பரவவைப்பதற்கு சிகரெட் குடிப்பது போன்றது சாதிக்கு ஒரு சான்றிதழ் கொடுப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சாதி சான்றிதழ் போலவே, தாம் சார்ந்த சாதி மக்களின் உரிமை நிலை நாட்டப்பட, அவர்கள் சார்பாக போராட ஒரு அமைப்பு வேண்டும் என்கிறார்கள்.

அதாவது தந்தை செல்வாவின் தமிழரசு கட்சி இனவாத கட்சி அல்ல, ஆனால் தம் இன உரிமைக்காக போராடிய கட்சி.

சாதி வேறு. இனம் வேறு. இரண்டையும் சேர்த்து குழப்புவதால் இன்னும் பல பிரச்சனைகள் தோன்றும்.
எனது மன அடிப்படையில் ஆரியத்தையும் திராவிடத்தையும் ஒதுக்க தமிழினம் மிளிரும்.

இலங்கை தமிழர்கள் தமிழினத்திற்காக மட்டும் போராடியவர்கள். என்றுமே சாதி ஒழிப்பிற்காக போராடவில்லை. போராட வேண்டிய அவசியமும் இல்லை. சாதி வேற்றுமைகள் இருந்தாலும் தமிழினம் என்ற ஒற்றைக்கோட்டில் பயணித்தார்கள்.

அடுத்தது சாதீயம் என வரும் போது பிராமணீயம் அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் சாதீயத்தின் ஆணி வேரே பிராமணீயம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தான் உயர்ந்த சாதி என்று உயர்வாகவும் மற்றவர் தாழ்ந்த சாதி என்று தாழ்வாகவும் நம்பும்  மனநிலை ஒழிய வேண்டியது முக்கியம். சாதிகள் இல்லை என்று சொல்லி கொண்டு சாதிக்கு சான்றிதழ் கட்டயபடுத்தி வழங்கினால் இந்தியாவில் சாதி வேற்றுமைகள் தொடர்ந்து பாதுகாப்பாக பாதுகாக்கபடும். அந்த சினிமாவை சேர்ந்தவர் கூட சொல்கிறார் எதாவது ஒரு சாதியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும்   என்று தன்னை கேட்டார்கள்.

அந்த புற்று நோயை மேலும் தீவிரமாக பரவவைப்பதற்கு சிகரெட் குடிப்பது போன்றது சாதிக்கு ஒரு சான்றிதழ் கொடுப்பது.

சரி கீழே ஒரு உதாரணம் தருகிறேன்.

சாதி சான்றிதழ் தேவையா இல்லையா என இதை வைத்து உங்கள் முடிவை சொல்லுங்கள்.

பாபு - இவன் ஒரு தாழ்த்தப்பட்ட/பழங்குடி வீட்டில் பிறந்தவன். அவன் தந்தை ஒரு மலம் அள்ளும் தொழிலாளி. தாய் - விவசாய கூலி. இவர்கள் பரம்பரையில் யாரும் 8ம் வகுப்பு தாண்டவில்லை. நில உரிமை இல்லை.

ஆயிரம் ஆண்டுகளாக நில, வழிபாட்டு, கல்வி உரிமை உனக்கு கொடுக்ககூடாது என வர்ணாசிரமம் சொல்கிறது என்று சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் மகன்.

இந்த வரலாற்று பிழையை முடிந்தளவு சரி செய்ய, இவனுக்கு உயர் கல்வியில் முன்னுரிமை (85% மார்க் எடுத்தாலே போதும்) என இந்திய சட்டங்கள் சொல்லி, அது நடைமுறையிலும் உள்ளது.

கோபு - இவன் ஒரு டாக்டரின் மகன். தாய் கலெக்டர். இரு வழி பாட்டாக்களும் உயர் அரச அதிகாரிகள். கொள்ளு பாட்டா பிரிடிஸ் காலத்தில் ஜட்ஜ். அவரின் அப்பா ஒரு ராஜாவின் மந்திரி. 

காலாகாலமாக வருணாசிரம முறை படிக்க, படிபிக்க, இறைவனோடு ஏனையோர் சார்பில் கதைக்க, அரசருக்கு ஆலோசனை சொல்ல, இன்னும் உள்ள எல்லா உயர் தொழிலும் செய்ய வேண்டிய உயர் சாதி என கூறி வளர்த்த சாதியில் பிறந்த மகன். 

கோபுவுக்கு உள்ள வரலாற்று அனுகூலத்தை கணக்கில் எடுத்து, இவனுக்கு உயர் கல்வியில் முன்னுரிமை கொடுக்க தேவையில்லை (92% மார்க் எடுக்க வேண்டும்) என இந்திய சட்டங்கள் சொல்லி, அது நடைமுறையிலும் உள்ளது.

இப்போ பரீட்சையில் பாபு 89% கோபு 90%  எடுக்கிறார்கள். உயர் கல்வி வாய்ப்பில் ஒரு இடம்தான் உள்ளது.

இந்திய சட்டபடி, சாதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட பாபுவுக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கவேண்டும் (இது சட்டம் இதை நீங்கள் மாற்ற முடியாது). 

சாதி சான்றிதழ் பார்க்காமல் எப்படி பாபு இந்த சாதிதான் என உறுதி செய்து அந்த இடத்தை பாபுக்கு கொடுப்பீர்கள்?

Edited by goshan_che
என்னை அறியாமலேயே பாபுவை இவன் என்றும். கோபுவை இவர் என்றும் எழுதியுள்ளேன். Unconscious bias.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

சாதி வேறு. இனம் வேறு. இரண்டையும் சேர்த்து குழப்புவதால் இன்னும் பல பிரச்சனைகள் தோன்றும்.
எனது மன அடிப்படையில் ஆரியத்தையும் திராவிடத்தையும் ஒதுக்க தமிழினம் மிளிரும்.

இலங்கை தமிழர்கள் தமிழினத்திற்காக மட்டும் போராடியவர்கள். என்றுமே சாதி ஒழிப்பிற்காக போராடவில்லை. போராட வேண்டிய அவசியமும் இல்லை. சாதி வேற்றுமைகள் இருந்தாலும் தமிழினம் என்ற ஒற்றைக்கோட்டில் பயணித்தார்கள்.

அடுத்தது சாதீயம் என வரும் போது பிராமணீயம் அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் சாதீயத்தின் ஆணி வேரே பிராமணீயம் தான்.

மேலே சாதியையும் இனத்தையும் ஒன்றாக குழப்பவில்லை. ஒப்பீடு செய்துள்ளேன்.

செல்வா இன வெறியர் அல்ல. ஆனால் யு என் பி யில், சுதந்திர கட்சியில் இருந்து தமிழருக்கு உரிமை பெற முடியாது என உணர்ந்து தமிழருக்கு தனி கட்சி தொடங்கினார்.

அவர்களின் கூற்றுப்படி, ஏனைய சாதிகளின் பிடியில் இருக்கும் காங்கிரஸ், திமுக, அதிமுக, பிஜேபியில் இருந்து வன்னியருக்கும், தலித்துகளுக்கும் உரிமையை பெற முடியாது என்பதால் தனி கட்சி கண்டோம் என்கிறார்கள் இராமதாசும், திருமாவும்.

இங்கே இனத்துக்கும், சாதிக்கும் லாஜிக் ஒன்றுதான்.

30 minutes ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் தமிழினத்திற்காக மட்டும் போராடியவர்கள்.

30 minutes ago, குமாரசாமி said:

என்றுமே சாதி ஒழிப்பிற்காக போராடவில்லை

இல்லை நிச்சயமாக சாதியை தமது கட்டுப்பாட்டு பகுதியில் பொது வாழ்க்கையில் கடைபிடிப்பதை முற்றாக தடை செய்தார்கள். சாதிய வசவுகள் சொல்லியோர் கூட எச்சரிக்க/தண்டிக்கப்பட்டார்கள்.

அவர்களின் ஆளுகைக்குள் வாழ்ந்த எவரும் இதை உண்மை என ஒத்து கொள்வார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

போராட வேண்டிய அவசியமும் இல்லை.

புலிகள் வர முன்னம் அவசியம் இருந்தது. ஆலய பிரவேசம் உட்பட பல போராட்டங்களும் நடந்தன.

புலிகள் சாதியத்தை அடித்து நொறுக்கியதால் அவர்கள் காலத்தில் சாதியம் தலை எடுக்காமல் இருந்தது, அல்லது வெளி நாட்டுக்கு ஓடி வந்திருதது, ஆகவே 83-2009 கால்பகுதியில் மட்டும் போராட வேண்டிய அவசியம் இருக்கவில்லை (காரணியை புலிகள் அடக்கி விட்டமையால்). 

37 minutes ago, குமாரசாமி said:

அடுத்தது சாதீயம் என வரும் போது பிராமணீயம் அழிக்கப்பட வேண்டும். ஏனெனில் சாதீயத்தின் ஆணி வேரே பிராமணீயம் தான்.

நிச்சயமாக. புலிகளால் ஈழத்தில் சாதியை இலகுவில் அடக்க முடியுமாய் இருக்க அங்கே பிராமணியம் அதிகம் வேரூன்றாமையும் காரணமாகியது.

அதே போல் நாராயணன்களும், சோக்களும், சுப்ரமணிய சுவாமிகளும் புலிகளை ஜென்மபகைவராக கருத - வர்ணாசிரம/சாதிய/பிரமணிய மேலாண்மை பருப்பு அவர்களிடம் வேகாது என்பதும் ஒரு பிரதான காரணியாகியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

சரி கீழே ஒரு உதாரணம் தருகிறேன்.

சாதி சான்றிதழ் தேவையா இல்லையா என இதை வைத்து உங்கள் முடிவை சொல்லுங்கள்.

மிகவும் சிக்கலான கேள்வியை வைத்துள்ளீர்கள்.
நீங்கள் சொல்வது சரி.பாபுவுக்கு  சாதி சான்றிதழ் தேவை. அப்படி தேவையானவர்கள் விண்ணப்பித்து சாதி சான்றிதழை பெற்று கொள்ளலாம் என்று இருக்க வேண்டும். மற்றும்படி சாதியே வேண்டாம் என்பவர்களிடம் நீ ஒரு சாதியை கட்டாயம் போட வேண்டும் என்பது அநீதியானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மிகவும் சிக்கலான கேள்வியை வைத்துள்ளீர்கள்.
நீங்கள் சொல்வது சரி.பாபுவுக்கு  சாதி சான்றிதழ் தேவை. அப்படி தேவையானவர்கள் விண்ணப்பித்து சாதி சான்றிதழை பெற்று கொள்ளலாம் என்று இருக்க வேண்டும். மற்றும்படி சாதியே வேண்டாம் என்பவர்களிடம் நீ ஒரு சாதியை கட்டாயம் போட வேண்டும் என்பது அநீதியானது.

ஓம். இதைதான் வெற்றிமாறனும் சொல்கிறார்.

இதை நானும் ஏற்கிறேன்.

கூடவே சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் கூட, ஆணும் பெண்ணும் சாதியாவது ஹைகோர்ட்டாவது என சொல்லி மணம் முடித்த பின், பிறக்கும் பிள்ளைக்கு இருவரில் ஒருவர் சாதியை போடுங்கள் என சொல்லுவார்கள். எவ்வளவு அநியாயம் இது!

நிச்சயம் - சாதி அற்றோர் என சுயவிருப்பில், அதிக தடங்கல் இன்றி போடப்படும் நடைமுறை வர வேண்டும். 

ஆனால் இப்படி போடுபவர்களும், சந்ததியினரும் இட ஒதுக்கீட்டு நடைமுறையில் இருந்து சுயமாக விடுப்பு எடுத்தோராக கருதப்பட வேண்டும்.

ஆனால் சாதி மறுப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் முகமாக - ஒரு உயர்த்தப்பட்ட+தாழ்தப்பட்ட தம்பதியின் பிள்ளைகள் சாதி அற்றோர் என வழங்க்ப்பட்டாலும், அவர்களுக்கு தாழ்தப்பட்ட சாதியினருக்குரிய சலுகைகை வழங்கலாம்.

எப்படி பார்த்தாலும் ஏதோ ஒரு வகை அடையாளப்படுத்தல், சான்றிதழ் தேவையே. 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நடராஜன் ரிட்டர்ன்ஸ்: 'அடங்காத காளையாக' வெளுத்த சஞ்சு சாம்சனை வீழ்த்தினார் பட மூலாதாரம்,BCCI 2 ஏப்ரல் 2023, 12:06 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரின் மூன்றாவது நாளான இன்று மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முதல் போட்டியில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக உள்ளார். ராஜஸ்தான் தரப்பில் ஜாஸ் பட்லரும் யஷஸ்வி ஜைஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரிலேயே பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்ட ஜைஸ்வால் தனது அணிக்கான முதல் பவுண்டரியை அடித்தார். புவனேஸ்வரும் பட்லரின் ஆட்டத்தைப் பரிசோதிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனால், இரண்டாவது ஓவரை ஃபஸல்ஹக் ஃபரூக்கி வீசியபோது, அவர் வீசிய பந்துகளைப் பறக்கவிட்டுக் கொண்டேயிருந்த ஜைஸ்வாலும் பட்லரும் அந்த ஒரு ஓவரில் மட்டும் 14 ரன்களை சேர்த்தனர்.     முதல் இரண்டு ஓவர்களில் மட்டுமே 20 ரன்களை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் கணக்கை இருவரும் அதிரடியாகத் தொடக்கி வைத்தனர். தொடர்ச்சியாக பட்லரும் ஜைஸ்வாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவர் பிளே முடிவில் 85 ரன்களை குவித்தனர். ஃபரூக்கி, புவனேஸ்வர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்துவீச்சில் முதல் நான்கு ஓவர்களில் 56 ரன்களை இருவரும் இணைந்து குவித்திருந்தனர். 5-வது ஓவரை வீச வந்த நடராஜனுக்கு முந்தைய மூன்று பேருக்கு கொடுத்ததைவிட கூடுதலான அதிர்ச்சியைக் கொடுத்தார் ஜாஸ் பட்லர். நடராஜன் தான் வீசிய ஒரே ஓவரில் 17 ரன்களைக் கொடுத்திருந்தார். பட்லர் 5வது ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை அடித்து நடராஜன் வீசிய பந்துகளை துவம்சம் செய்தார். ராஜஸ்தான் அணிக்காகக் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜாஸ் பட்லர் 22 பந்துகளில் அரை சதம் அடித்துக் கலக்கினார். ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜைஸ்வால் இருவரது கூட்டணி 85 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், பவர் பிளே இறுதியில் ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை, பலமான விக்கெட்டை ஃபரூக்கி வீழ்த்தி ஹைதராபாத் அணிக்குச் சிறிய ஆசுவாசத்தை வழங்கினார்.   ஜாஸ் பட்லர் ஃபரூக்கி பந்தில் அவுட்டாகி வெளியானதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ஆனால், அவரும் அதிரடியை தொடர்ந்தார். களமிறங்கியதில் இருந்தே விளாசத் தொடங்கினார். 10 ஓவர் முடிவில் அவர் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை அடித்து 13 பந்துகளில் 28 ரன்களை எடுத்திருந்தார். யஷஸ்வி ஜைஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, 8 பவுண்டரிகளை அடித்திருந்தார். 11வது ஓவர் முடிவில் அவர் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஒரு மொத்த போட்டியின் ஹைலைட்ஸை 10 ஓவர்களில் பார்த்தைப் போல், அதற்குள்ளாகவே ஹைதராபாத் வீரர்கள் 17 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசியிருந்தார்கள். ஜைஸ்வாலை தடுக்க முடியும் என்பதைப் போல் களத்தில் நிலைமை இருக்கவில்லை. இன்னொருபக்கம் சஞ்சுவும் விளாசுவதை நிறுத்துவதைப் போல் தெரியவில்லை. அவர் உம்ரான் பந்துவீச்சில் ஒரு பந்தைத் தூக்கி அடிக்கவே, பந்து வேலியைத் தாண்டிச் சென்றது. பத்தாவது ஓவர் முடிவில் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்திருந்தது. பட மூலாதாரம்,IPL/TWITTER நடராஜன், ஃபரூக்கி, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் என்று பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ராஜஸ்தானின் ரன் மழையை நிறுத்த பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனாலும் அதற்குப் பலன் கிடைப்பதைப் போல் தெரியவில்லை. ஜாஸ் பட்லரை போலவே ஜைஸ்வாலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே கேட்ச் அவுட்டானார். ஜைஸ்வால் 37 பந்துகளில் 54 ரன்களை எடுத்து அவுட்டானார். ஃபரூக்கி தனது நீண்ட நேர போராட்டத்திற்குப் பலனாக இரண்டாவது விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். ஆனால், அவரை உம்ரான் மாலிக் இரண்டே ரன்களோடு திருப்பி அனுப்பி ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டினார். அடுத்ததாக ரியான் பராக் களமிறங்கினார்.   ஆனாலும் மிக முக்கிய விக்கெட்டான சஞ்சு சாம்சன் தொடர்ந்து வெளுத்துக்கொண்டே இருந்தார். 14வது ஓவரில் அசுரத் தனமான சிக்ஸ் ஒன்றை விளாசினார். 15 ஓவர் இறுதியில் ராஜஸ்தான் மூன்று விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்திருந்தது. அடுத்தபடியாக 16வது ஓவரை வீச வந்த ரஷீத்தை பிரமாண்டமான சிக்ஸ் ஒன்றோடு சஞ்சு சாம்சன் வரவேற்றார். தொடக்க ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்லரும் யஷஸ்வி ஜைஸ்வாலும் சேர்ந்து இடி இடித்ததைப் போல் ஆடிவிட்டுச் சென்றனர். அவர்கள் கொடுத்துச் சென்ற ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்கிறார் சஞ்சு சாம்சன்.   ரன்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த எதிரணியைத் தடுக்க யார்க்கர் நடராஜன் உள்ளே நுழைந்தார். அவர் வந்தவுடனேயே ஒரு விக்கெட்டை எடுத்தார். ரியான் பராக் அவரது பந்தை எதிர்கொண்டபோது, ஃபரூக்கி அதை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அதற்கு முந்தைய ஓவரில் ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்ட ஃபரூக்கி, 17வது ஓவரில் நடராஜ் வீசி, பராக் அடித்த பந்தை அழகாக கேட்ச் பிடித்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார். ஆனால், 28 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் அடித்த சஞ்சு சாம்சன், 17வது ஓவரில் தொடர்ந்து யாராலும் அடக்காத முடியாத காளையாக ஆடிக் கொண்டிருந்தார். அந்தக் காளையை நான் அடக்குகிறேன் என்பதுபோல் பந்துவீசிய நடராஜன், வைட் யார்க்கராக வீசினார். அதை சிக்சரை குறிவைத்து சஞ்சு பறக்க விடவே, பவுண்டரி எல்லையின் நுனியில் நின்று கச்சிதமாக கேட்ச் பிடித்தார் அபிஷேக் ஷர்மா. ராஜஸ்தான் அணியின் ரன் ரேட், பவர் பிளேவின்போது 14.17 ரன் ரேட் இருந்தது. அதற்கு அடுத்ததாகவும் 7-15 ஓவர்களில் 8.33, 16-20 ஓவர்களில் 8.21 என்ற அளவில் வீரர்கள் சிறப்பாகக் கொண்டு சென்றனர். ராஜஸ்தான் வைத்த இலக்கு 16வது ஓவர் இறுதியில் ராஜஸ்தான் 3 விக்கெட் இழப்பில் 170 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் புவனேஸ்வர் குமார், நடராஜன் இருவரும் ரன்களைக் குறைக்க முயன்றார்கள். 20 ஓவர் முடிவில் களத்தில் அஸ்வின், ஹெட்மியர் இருவரும் அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்திருந்தது. https://www.bbc.com/tamil/articles/cld133kgn35o
    • இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் காவ் செஞ்ச‌ரி அடிச்சார் த‌மிழ் சிறி அண்ணா   நியுசிலாந் அக்குலாந் மைதான‌ம் சின்ன‌ மைதான‌ம்.............20ஓவ‌ர் ச‌ம‌ நிலையில் முடிவ‌து 50விளையாட்டில் இருக்கா அல்ல‌து இர‌ண்டு த‌ட‌வை...........இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டும் ச‌ம‌ நிலையில் முடிந்து சூப்ப‌ர் ஓவ‌ரில் இல‌ங்கை வெற்றி........................
    • தாங்கள் இந்தக் காலத்தில் வாழாதிருந்திக்கலாம்.. அல்லது பயந்து ஓடிஒளிந்திருக்கலாம். அதனால் அந்தக் காலத்தின் தன்மை புரியவில்லை. கவிதை கடந்த கால நிஜம்.. காணாமல் போன.. ஏக்கங்களை விதைக்கிறதையே புரியமுடியவில்லை.. தங்களால். 
    • @satan உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாம் எல்லாரும் வெயிட்டிங்🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.