Jump to content

ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் தற்போது Reha Clinic‘ல் தெரப்பி செய்து கொண்டு இருக்கும், 25 வயதுடைய ஜேர்மன் இளைஞனும் அவனது நண்பியும், சென்ற வருடம் 2022 மாசி மாதமளவில் “Gotha Go Home“ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு நான்கு கிழமை  ✈️ சுற்றுலாவில் 🛩 சென்றவர்கள்.

பெடியனுக்கு… 25 வயது என்ற படியால், அவன் என்றே தொடர்ந்து குறிப்பிடுகின்றேன். 😁

அவன் போன நேரம்… காலி முகத் திடல் மட்டுமல்லாது பல இடங்களிலும் ஆர்ப்பாட்டாங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்… தங்களை அது பெரிதாக பாதிக்கவில்லை என்றும், பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்ததாக குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா போய் இறங்கிய நேரம் ஒரு ஐரோ  280 ரூபாய் இருந்தது என்றும், பிறகு தினமும் 📈 அதிகரித்து சென்று 380 ரூபாயில் வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார்.

ஒரு முறை  🚅 ரயிலில் போக… ரயில் நிலையத்துக்கு சென்று பயணசீட்டு கேட்ட போது, அங்கு இருந்த அரச 👨🏻‍✈️ ஊழியர் இனி ரயில் ஒண்டும் ஓடாது, வேண்டுமென்றால் மலிவான விலையில் வாடகைக் 🚙 கார், சாரதியுடன்… ஒழுங்கு செய்து தருவதாகவும், இலங்கையில் நிற்கும் காலம் முழுக்க அதனையே பாவிக்கலாம் என்றும்… ஒரு நாள் வாடகை 250 ஐரோ படி, மிகுதி மூன்று கிழமைக்கும் மொத்தமாக முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ரயில் நிலைய அரச அதிகாரி கேட்டாராம். 
தான் ஹோட்டேலுக்கு போய் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாராம்.

அடுத்த நாள் பார்த்தால்… வழமை போல் ரயில் ஒடுவதாகவும். நல்ல காலம் ஒரு ஏமாற்று பேர் வழியிடம் இருந்து தப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

🚂 ரயிலில்… கதவருகே இருந்து… அவனும், நண்பியும் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி போன தருணங்கள் மிக இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிட்டார்.

🐘 யானையில் சவாரி செய்ததையும், யானையை தொட்டு குளிப்பாட்டியதையும் அடிக்கடி குறிப்பிடுவதோடு… மற்றைய ஜேர்மன்காரருக்கும் அந்தப் படங்களை காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். 😀

நான் இலங்கையில் வசிக்கும் போது…. சிவனொளிபாத மலை, சிகிரியா போன்றவற்றை பார்க்கவில்லை என்று அறிந்ததும்… நான் பார்க்காததை, தான் பார்த்து விட்டதாக… அவருக்கு அற்ப சந்தோசமும் உள்ளது. 😂

உணவு வகைகளில்…. விதம் விதமான 🥬 மரக்கறி வகைகள் தமக்கு மிகவும் பிடித்தவை என்றும், தாம் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பதால், தம் வாழ் நாளில் சாப்பிடாத 🥒 மரக்கறிகளை உண்டதாகவும், அதிலும் பிலாக்காய் கறியின் 🌶 சுவையையும் பாராட்டினார்.

 🍌 வாழைப்பழம் எல்லாம்… ஒரே மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த தனக்கு…. இலங்கை சென்ற பின்தான் தெரிந்ததாம் சிவப்பு, பச்சை நிறங்களிலும்… வித்தியாசமான அளவுகளிலும், சுவைகளிலும் வாழைப்பழங்களை பார்த்து ஆச்சரியப் பட்டதாக கூறினார்.

ஒரு முறை, தான் வாங்கிய ரயில் பயணச் சீட்டு குறிப்பிட்ட ரயிலுக்கு செல்லாது என தெரிந்து கொண்ட உள்ளூர் தம்பதிகள்.. தம்முடைய செலவிலேயே புதிய ரயில் பயணச் சீட்டை வாங்கித் தந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார்.

எப்போ, எங்கு… சாப்பிடப் போனாலும் தினமும் பருப்புக் கறியை தந்து, தனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டார்களாம். 😂
ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடமாகியும் பருப்பை கண்டால் வெறுப்பாக இருக்குதாம். 🤣

பெடியன்… யாழ்ப்பாணம், நயினாதீவு எல்லாம் போயிருக்கிறான்.
🥰யாழ்ப்பாண  பயணம்தான்…  இலங்கையிலேயே தனக்குப் பிடித்த இடம்  என்றான். அது வரை, நான் அங்கு பிறந்ததாக அவனுக்கு சொல்லவில்லை. அவனாகவே சொன்ன கருத்து அது.

ஏன் யாழ்ப்பாணம் பிடிக்கும் என்று கேட்ட போது… வெள்ளைக்காரர் ஒருவரும் இல்லாமல் தாங்கள் மட்டும் அந்த மக்களிடையே வித்தியாசமாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாக கூறினார். 

பிற்குறிப்பு: கிளினிக்கில் இருந்து கைத்தொலை பேசியில் எழுதியதால், பதிவை… வர்ணமயமாக மெருகூட்ட முடியாமைக்கு மன்னிக்கவும்.

இன்னும் இரண்டு நாள்தான் இங்கு இருப்பேன். பெடியனிடம் உங்கள் சார்பாக கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் கீழே எழுதவும். கேட்டு பதில் சொல்கின்றேன். 😁

புதன் கிழமை வீட்டிற்கு செல்வதால்… அதற்குப் பின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராது. 🤪 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 16
  • Thanks 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 122
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல எழுத்துதிறமை உங்களுக்குள்ளது, தொடருங்கள்.

பொருள்கள் சேவைகள் பெறும்போது இலங்கையரைவிட வெளிநாட்டவர்களுக்கு அதிகளவில் விலை செலுத்துகின்ற நிலையினை எவ்வாறு பார்க்கிறார்? (இன நிற வேறுபாடு போல அன்னியர்கள் மீதான தாக்குதல் மாதிரியான உணர்வை பெற்றாரா?)

Edited by vasee
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25ஆவது ஆண்டின் முதல் ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்.✍️🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, vasee said:

நல்ல எழுத்துதிறமை உங்களுக்குள்ளது, தொடருங்கள்.

பொருள்கள் சேவைகள் பெறும்போது இலங்கையரைவிட வெளிநாட்டவர்களுக்கு அதிகளவில் விலை செலுத்துகின்ற நிலையினை எவ்வாறு பார்க்கிறார்? (இன நிற வேறுபாடு போல அன்னியர்கள் மீதான தாக்குதல் மாதிரியான உணர்வை பெற்றாரா?)

ஆட்டோவில்… மீற்றரை விட அதிக காசு கேட்பதாக சொன்னார். அவருக்கு உள்ளதை உள்ள படி பெறாமல்… குறுக்கு வழியில் பணம் பெற முயல்வது ஏமாற்றமாக இருந்தது.

அதனை சிறு குற்றச் சாட்டாக சொன்னாரே தவிர பெரும் பொருட்டாக எடுக்கவில்லை.

துருக்கி போன்ற இடங்களுக்கும் அவர் சென்றுள்ளதால்… வெளி நாட்டவர்களிடம், உள்ளூர் வியாபாரிகள் அதிக பணம் அறவிடுவதை எதிர்பார்த்தே இருந்திருக்கின்றார்.

அத்துடன் அவருக்கு… நிறைய நல்ல அனுபவங்கள் கிடைத்ததால் இதனை பெரும் குறையாக எடுக்கவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, யாயினி said:

25ஆவது ஆண்டின் முதல் ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்.✍️🙂

நன்றி யாயினி. 🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி நன்றாய் இருக்கின்றது.....மென்மேலும் அவரிடம் இருந்து தகவல்கள் பெற்று பகிரவும் .....முடிந்தால் அவரது நண்பியிடமும் .......அவரது பார்வையில் சம்பவங்கள் வித்தியாசமாயும் இருக்கும்........!  👍  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்… அவன் நண்பியை, வீட்டில் விட்டுட்டு…  இங்கை தனிய வந்து  இருக்கிறான். 😃

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சிறி.
போன இடத்திலும் பொழுதுபோக்க பெடிபெட்டைகள் எப்படியும் அம்புட்டுடும்.

பெடி யூரோ விலை கூடிவிட்டதென்று சந்தோசபட்டவர் இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தால் சாப்பாடே இல்லாமல்த் தான் கிழம்பியிருப்பார்.

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் சிறி.
போன இடத்திலும் பொழுதுபோக்க பெடிபெட்டைகள் எப்படியும் அம்புட்டுடும்.

பெடி யூரோ விலை கூடிவிட்டதென்று சந்தோசபட்டவர் இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தால் சாப்பாடே இல்லாமல்த் தான் கிழம்பியிருப்பார்.

ஈழப்பிரியன்… அந்தப் பெடியனும், பெட்டையும் அங்கை ஸ்கூட்டர் 🛵 எல்லாம் வாடகைக்கு எடுத்து ஒடி இருக்கினம். இவ்வளவிற்கும் அதற்குரிய லைசன்ஸ் இல்லை. ஸ்கூட்டர் வாடகைக்கு கொடுப்பவர்…. வெள்ளைக்காரரை பொலிஸ் சோதிக்க மாட்டுது என்று சொல்லித்தானாம் கொடுத்தவர். 😂

ஆனால் ஒரு நாள் இரண்டு பேரையும் பொலிஸ் மறிக்க, இவையளுக்கு பயங்கர உதறல் எடுத்திருக்கு. இங்கத்தை பொலிஸ் மாதிரி கடுமையான தண்டனை கிடைக்கப் போகுது என்று பயந்து கொண்டிருக்க… பொலிஸ்காரன்  சும்மா கதைத்து விட்டு அனுப்பி விட்டானாம். 😁

பொலிஸ்காரனுக்கு… வெளிநாட்டு ஆட்களுடன் கதைக்க ஆசையாக இருந்திருக்குமாம்‼️, அதுதான் தங்களை மறித்து கதைத்தவனாம் என்று பெடியன் சொல்லுறான். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

முதலாவதாக களமிறங்கிய தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள்.  அவர்கள் இருவருக்கும் பிடித்த ,பிடிக்காதவைகளை  பட்டியலிட கேட்கவும்.🙂
நேற்று ஒரு காணொளி சென்னையை பற்றி ஒரு ஐரோப்பிய சோடி வருணித்து இருந்தார்கள். சென்னையின் மெட்ரோவை ஸ்பெயினின் மெட்ரோவுக்கு இணையானது என குறிப்பிட்டு இருந்தார்கள். சிம் காட் வாங்க சென்னையில் ஒருவரின் இலக்கம் தர வேண்டும் என்று கேட்டு கடுப்பேத்தி விட்டார்கள் என்பது தான் நேர்மறையான கருத்து.  சிறிலங்காவுக்கும் போய் இருக்கிறார்கள் போல. அதை பற்றி சொல்லா விட்டாலும் பாதுகாப்பு கேள்விகள் (எங்கு தங்கு கிறாய், எவ்வளவு நாள் தங்குகிறாய் போன்ற கேள்விகள்) போன்ற கேள்விகள் சிறிலங்காவில் இருக்கவில்லை என ஒப்பிட்டார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுவியர்… அவன் நண்பியை, வீட்டில் விட்டுட்டு…  இங்கை தனிய வந்து  இருக்கிறான். 😃

பாதுகாப்பு🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

முதலாவதாக களமிறங்கிய தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள்.  அவர்கள் இருவருக்கும் பிடித்த ,பிடிக்காதவைகளை  பட்டியலிட கேட்கவும்.🙂
நேற்று ஒரு காணொளி சென்னையை பற்றி ஒரு ஐரோப்பிய சோடி வருணித்து இருந்தார்கள். சென்னையின் மெட்ரோவை ஸ்பெயினின் மெட்ரோவுக்கு இணையானது என குறிப்பிட்டு இருந்தார்கள். சிம் காட் வாங்க சென்னையில் ஒருவரின் இலக்கம் தர வேண்டும் என்று கேட்டு கடுப்பேத்தி விட்டார்கள் என்பது தான் நேர்மறையான கருத்து.  சிறிலங்காவுக்கும் போய் இருக்கிறார்கள் போல. அதை பற்றி சொல்லா விட்டாலும் பாதுகாப்பு கேள்விகள் (எங்கு தங்கு கிறாய், எவ்வளவு நாள் தங்குகிறாய் போன்ற கேள்விகள்) போன்ற கேள்விகள் சிறிலங்காவில் இருக்கவில்லை என ஒப்பிட்டார்கள்.

இலங்கையை பொறுத்தவரை  தேவை இல்லாமல் வாகன ஒலி எழுப்புவது எரிச்சலை ஊட்டியதாக மட்டும் குறிப்பிட்டார். வேறு குறைகளை தெரிவிக்கவில்லை. 🙂

ஆனால் பிடித்தவைகளை நிறைய பட்டியலிட்டார்.
1) திருகோணமலையில் நீருக்கு அடியில் நீந்தும் பயிற்சியை ஜேர்மன் மொழியில் பெற்று அங்கேயே கடலுக்கு அடியில் சென்று பவளப் பாறைகளை பார்த்து ரசித்தமை…
2) நுவரேலியாவில் 🫖 தேயிலை தோட்டம்,  தேயிலை பதனிடும் முறைகளை அறிந்து கொண்டமை….
3) கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் குடித்த சுவையான ️ கோப்பியைப் போல் வேறு எங்கும் குடிக்கவில்லையாம். அந்த வீட்டுக்காரர் அவர்கள் தோட்டத்தில் விளைந்த கோப்பியை வறுத்து தயாரித்த கோப்பி என்றார். வரும் போது அவர்களிடம் அதே கோப்பித் தூளை வாங்கி வந்து, இங்கு கோப்பி தயாரித்தால்… அந்த வாசனையும், சுவையும் வரவில்லை என்றார்.

4) இலங்கை போன கையுடன்… மரத்தால் செய்த ஒன்றரை அடி உயரமான யானை 🐘 சிற்பம் ஒன்றை 40 ஐரோவிற்கு வாங்கி விட்டு அதை பாதுகாப்பாக எங்கு வைப்பது என்று தெரியாமல்…. யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, நுவரேலியா எல்லாம் காவிக் கொண்டு திரிந்தவராம்.

அந்த யானையை வைக்க… சீன போலி தயாரிப்பான Adidas Rucksack 🎒 ஒன்று மலிவு விலையில் வாங்கி, அதற்குள் வைத்துக் கொண்டு திரிய வசதியாக இருந்ததாம்.

இலங்கையில் பிரச்சினை கொடுக்காத அந்தப் பை… திரும்பி வரும் வழியில், டுபாயில் விமானம் மாறும் போது, அறுந்து விட்டதாம். 😁

பிறகென்ன… டுபாய் டியூட்டி free’யில், ஒறிஜினல் Adidas பை வாங்கி… ஜேர்மனி வந்து சேர்ந்தாராம். 🤣

  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நந்தன் said:

பாதுகாப்பு🤣

க்கும்…  யாருக்கு…. யாரிடம் இருந்து பாதுகாப்பு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்… அந்தப் பெடியனும், பெட்டையும் அங்கை ஸ்கூட்டர் 🛵 எல்லாம் வாடகைக்கு எடுத்து ஒடி இருக்கினம். இவ்வளவிற்கும் அதற்குரிய லைசன்ஸ் இல்லை. ஸ்கூட்டர் வாடகைக்கு கொடுப்பவர்…. வெள்ளைக்காரரை பொலிஸ் சோதிக்க மாட்டுது என்று சொல்லித்தானாம் கொடுத்தவர். 😂

ஆனால் ஒரு நாள் இரண்டு பேரையும் பொலிஸ் மறிக்க, இவையளுக்கு பயங்கர உதறல் எடுத்திருக்கு. இங்கத்தை பொலிஸ் மாதிரி கடுமையான தண்டனை கிடைக்கப் போகுது என்று பயந்து கொண்டிருக்க… பொலிஸ்காரன்  சும்மா கதைத்து விட்டு அனுப்பி விட்டானாம். 😁

பொலிஸ்காரனுக்கு… வெளிநாட்டு ஆட்களுடன் கதைக்க ஆசையாக இருந்திருக்குமாம்‼️, அதுதான் தங்களை மறித்து கதைத்தவனாம் என்று பெடியன் சொல்லுறான். 🤣

வாழ்த்துகள் சிறி அண்ணை.

தண்டப் பணம் அறவிட்டால் சுற்றுலா பயணிகளை எவ்வாறு கவருவது? அப்புறம் எப்ப நாடு வல்லரசாகிறது!
யாழ்ப்பாண நகரில் இன்று பெற்றோலுக்கு தட்டுப்பாடாம், சனம் வரிசை கட்டினதாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையை பொறுத்தவரை  தேவை இல்லாமல் வாகன ஒலி எழுப்புவது எரிச்சலை ஊட்டியதாக மட்டும் குறிப்பிட்டார். வேறு குறைகளை தெரிவிக்கவில்லை. 🙂

ஆனால் பிடித்தவைகளை நிறைய பட்டியலிட்டார்.
1) திருகோணமலையில் நீருக்கு அடியில் நீந்தும் பயிற்சியை ஜேர்மன் மொழியில் பெற்று அங்கேயே கடலுக்கு அடியில் சென்று பவளப் பாறைகளை பார்த்து ரசித்தமை…
2) நுவரேலியாவில் 🫖 தேயிலை தோட்டம்,  தேயிலை பதனிடும் முறைகளை அறிந்து கொண்டமை….
3) கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் குடித்த சுவையான ️ கோப்பியைப் போல் வேறு எங்கும் குடிக்கவில்லையாம். அந்த வீட்டுக்காரர் அவர்கள் தோட்டத்தில் விளைந்த கோப்பியை வறுத்து தயாரித்த கோப்பி என்றார். வரும் போது அவர்களிடம் அதே கோப்பித் தூளை வாங்கி வந்து, இங்கு கோப்பி தயாரித்தால்… அந்த வாசனையும், சுவையும் வரவில்லை என்றார்.

4) இலங்கை போன கையுடன்… மரத்தால் செய்த ஒன்றரை அடி உயரமான யானை 🐘 சிற்பம் ஒன்றை 40 ஐரோவிற்கு வாங்கி விட்டு அதை பாதுகாப்பாக எங்கு வைப்பது என்று தெரியாமல்…. யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, நுவரேலியா எல்லாம் காவிக் கொண்டு திரிந்தவராம்.

அந்த யானையை வைக்க… சீன போலி தயாரிப்பான Adidas Rucksack 🎒 ஒன்று மலிவு விலையில் வாங்கி, அதற்குள் வைத்துக் கொண்டு திரிய வசதியாக இருந்ததாம்.

இலங்கையில் பிரச்சினை கொடுக்காத அந்தப் பை… திரும்பி வரும் வழியில், டுபாயில் விமானம் மாறும் போது, அறுந்து விட்டதாம். 😁

பிறகென்ன… டுபாய் டியூட்டி free’யில், ஒறிஜினல் Adidas பை வாங்கி… ஜேர்மனி வந்து சேர்ந்தாராம். 🤣

நன்றிகள் தமிழ் சிறிக்கு. இளையோர் என்றாலும் திட்டமிட்டு சுற்றுலாவை ரசிக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஆக்கம் @தமிழ் சிறி அண்ணா. வாசிக்க எழுத்தாளர் மதனின் சாயல் அடித்தது.

பெடியனிட்ட எனக்கு ஒரே கேள்விதான்…..

ஜேர்மனியில் கிடைக்கும் அதே சம்பளம், உறவுகள், நட்புகள் எல்லாம் அப்படியே கிடைக்கும் என்றால், அவரின் தெரிவு ஜேர்மனியா? இலங்கையா?

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

3) கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் குடித்த சுவையான ️ கோப்பியைப் போல் வேறு எங்கும் குடிக்கவில்லையாம். அந்த வீட்டுக்காரர் அவர்கள் தோட்டத்தில் விளைந்த கோப்பியை வறுத்து தயாரித்த கோப்பி என்றார். வரும் போது அவர்களிடம் அதே கோப்பித் தூளை வாங்கி வந்து, இங்கு கோப்பி தயாரித்தால்… அந்த வாசனையும், சுவையும் வரவில்லை என்றார்.

இலங்கைத் தண்ணீரின் சுவை அது. அதேபோல் லண்டனில் PG தேயிலையில் பிளேன் டீ குடித்தபோது நல்ல சுவையாக இருந்தது. 3 பெட்டிகளை வாங்கி கனடாவில் பிளேன் டீ போட்டால் அதே சுவை இல்லாது இருந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி அவர்களே சிறப்பு. பாராட்டுகள்!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

வாழ்த்துகள் சிறி அண்ணை.

தண்டப் பணம் அறவிட்டால் சுற்றுலா பயணிகளை எவ்வாறு கவருவது? அப்புறம் எப்ப நாடு வல்லரசாகிறது!
யாழ்ப்பாண நகரில் இன்று பெற்றோலுக்கு தட்டுப்பாடாம், சனம் வரிசை கட்டினதாம்.

நன்றி ஏராளன்.
மீண்டும் பெற்றோலுக்கு தட்டுப்பாடா?
”றணில் கோ ஹோம்” ஆரம்பிக்கப் போகிறார்களே. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

நன்றிகள் தமிழ் சிறிக்கு. இளையோர் என்றாலும் திட்டமிட்டு சுற்றுலாவை ரசிக்கிறார்கள்.

நுணாவிலான்….  பெடியன், இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள, தீயணைப்பு படைப் பிரிவில் வேலை செய்கின்றான். 
சிலவேளை அங்கு பெற்ற பயிற்சி, திட்டமிடல், ஒழுங்கு முறை போன்றவை…
அவனது சுற்றுலாவையும் சரியாக திட்டமிட உதவி இருக்கலாம் என எண்ணுகின்றேன்.

அவன் கூறிய கொசுறு செய்தி ஒன்று…
1972’ம் ஆண்டு ஜேர்மனியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடந்த போது… இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப் பட்ட நிகழ்வின் பின், இன்று வரை… இஸ்ரேலில் இருந்து வரும் எந்த விமானம் என்றாலும் விமான நிலையத்தில் உள்ள பொதுமக்கள் பாவிக்கும்  சில வீதிகள் மூடப்பட்டு, இரண்டு  இராணுவ கவச வாகனங்களின் பாதுகாப்புடன் தரை இறங்கிய பின்னரே… வீதிகள் திறக்கப் படுமாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

நன்றிகள் தமிழ் சிறிக்கு. இளையோர் என்றாலும் திட்டமிட்டு சுற்றுலாவை ரசிக்கிறார்கள்.

இதெல்லாம் எம்மாத்திரம் நான் சுற்றுலாவை ஒரு இராணுவ நடவடிக்கை போல் திட்டமிடுவேன் தெரியுமா🤣.

வேலையை ரிலாக்ஸ்டாகவும், சுற்றுலாவை வேலை போல் ஸ்டிரிக்டாகவும் செய்வேன் என வீட்டில் அலுத்துக்கொள்வார்கள்🤣

1 minute ago, தமிழ் சிறி said:

நுணாவிலான்….  பெடியன், இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள, தீயணைப்பு படைப் பிரிவில் வேலை செய்கின்றான். 
சிலவேளை அங்கு பெற்ற பயிற்சி, திட்டமிடல், ஒழுங்கு முறை போன்றவை…
அவனது சுற்றுலாவையும் சரியாக திட்டமிட உதவி இருக்கலாம் என எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அருமையான ஆக்கம் @தமிழ் சிறி அண்ணா. வாசிக்க எழுத்தாளர் மதனின் சாயல் அடித்தது.

பெடியனிட்ட எனக்கு ஒரே கேள்விதான்…..

ஜேர்மனியில் கிடைக்கும் அதே சம்பளம், உறவுகள், நட்புகள் எல்லாம் அப்படியே கிடைக்கும் என்றால், அவரின் தெரிவு ஜேர்மனியா? இலங்கையா?

கோசான்… உண்மையாக சொல்கிறீர்களா, அல்லது பகிடி விடுகிறீர்களா. 😁
எதுக்கும் எழுத்தாளர் மதனின் இணைப்புகள் ஒன்றிரண்டை தரவும். 🙂
எனக்கும் ஒப்பிட்டுப் பார்க்க, ஆசை இருக்கும் தானே… 🤣

நீங்கள் கேட்ட கேள்வி… பெடியனின், அடிமடியில் கை வைக்கும்… பொறுத்த கேள்வியாக உள்ளது. 😂
எனக்கும், என்ன பதில் சொல்லப் போகிறான் என்று… அறிய ஆவலாக உள்ளது.
நாளைக்கு, அவனிடம்  கேட்டு பதில் சொல்கின்றேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vaasi said:

இலங்கைத் தண்ணீரின் சுவை அது. அதேபோல் லண்டனில் PG தேயிலையில் பிளேன் டீ குடித்தபோது நல்ல சுவையாக இருந்தது. 3 பெட்டிகளை வாங்கி கனடாவில் பிளேன் டீ போட்டால் அதே சுவை இல்லாது இருந்தது.

ஆம் வாசி, நானும் குறிப்பிட்ட சில இடங்களின் தண்ணீர், குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களுக்கு… மேலதிக சுவையை கொடுக்கும் என்று சொன்னேன்.
தண்ணீரின் வகிபாகம், முக்கிய பங்கு வகிக்கின்றது.

அத்துடன்… இலங்கையில் உள்ள அன்னாசிப்பழம் போன்ற சில பழங்களை இங்கு கொண்டு வந்தால்… அங்குள்ள வாசனையும், சுவையும் பெரிதாக இங்கு இருப்பதில்லை என்பதை அனுபவ பூர்வமாக கண்டிருக்கின்றேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

எதுக்கும் எழுத்தாளர் மதனின் இணைப்புகள் ஒன்றிரண்டை தரவும். 🙂
எனக்கும் ஒப்பிட்டுப் பார்க்க, ஆசை இருக்கும் தானே… 🤣

https://pdf.tnrecruitment.in/2021/01/vandhargal-vendrargal-by-madhan.html?m=1

வந்தார்கள் வென்றார்கள் என்ற மொகாலயர் பற்றிய புத்தகம் இங்கே.

எங்காவது புத்தக கடை போனால் ஹாய் மதன் கேள்வி பதில் வாங்கி வாசியுங்கள். மேலே சொன்ன பாணியில் நகைச்சுவை+தரவு+சமூக சிந்தனை சேர்த்து எழுதி இருப்பார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான எழுத்துகள். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.