Jump to content

திரும்பும் வரலாறு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பும் வரலாறு: நாசிகள்

அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும், தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம். எனவே, வரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள், நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம். முதலில் ஹிற்லர், நாசிகள் பற்றி ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போர், ஸ்ராலின், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம். ஆர்வமுடையோர் இணைந்திருங்கள். மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன். ஆனால், விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்!

 

ஹிற்லர் எப்படிப் பதவிக்கு வந்தார்?

முதலாம் உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்த போது ஐரோப்பாவின் எல்லைகள் பாரிய மாற்றங்களையடைந்தன. முதல் உலகப் போரின் போது கடல் வழியிலும், தரைவழியிலும் ஜேர்மனியின் படைகள் விளைவித்த மனிதப் பேரழிவு அளப்பரியது (முதலில் நீர்மூழ்கிக் கப்பல்களை  பெருமளவில் பாவித்த நாடாக ஜேர்மனி இருந்தது, அனேக தாக்குதல் இலக்குகள் சிவிலியன் போக்கு வரத்துக் கப்பல்களாக இருந்தன!). ஜேர்மனி தோல்வியடைந்த போது வெர்சை உடன்படிக்கையின் வழியாக கடுமையான தண்டனைச் சுமைகள் ஜேர்மனி மீது சுமத்தப் பட்டன. 33 பில்லியன் டொலர்கள் வரையான போர் நட்ட ஈடு, காலனிகள் உட்பட்ட பல நிலப் பரப்பின் இழப்பு, இராணுவ ஆளணிக் குறைப்பு, ஆயுதங்கள் வாங்க, உற்பத்தி செய்வதற்கான கட்டுப் பாடுகள், என்பன ஜேர்மனியின் தண்டனைகளில் அடங்கின. இந்தப் போரில் காயமடைந்து மீண்ட படையினனான ஹிற்லர் ஆரம்பித்த கட்சி தான் "தேசிய சோசலிஸ்ட் கட்சி" எனப்பட்ட நாசிக் கட்சி. நாசிக் கட்சியின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது. இதற்கு உகந்த நுட்பமாக அவர்கள் தேர்ந்து கொண்டது, அண்மைய வரலாற்றில் ட்ரம்ப், பொல்சனாரோ, மோடி, ப்றெக்சிற்றின் தலைமைச் சிற்பியான நைஜல் பரார் போன்றோர் தேர்ந்து கொண்ட அதே ஜனத்திரள்வாத முறை. ஜனத்திரள் வாதம் நேர்மையான விடயங்களால் பலம் பெறுவதை விட மறைத்தன்மையான மனித உணர்வுகளால் பலம் பெறுவது தான் வரலாற்றில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நாசிக் கட்சி தங்கள் ஜனத்திரள் வாத வெற்றிக்காகத் தேர்ந்து கொண்ட அந்த மறைத்தன்மையான உணர்வு யூதர்கள் மீதான சந்தேகமும், எதிர்ப்புணர்வும்.

 

ஏன் யூதர்கள் மீது எதிர்ப்புணர்வு?

ஏனெனில், ஜேர்மனியில் அந்தக் காலப்பகுதியில் வசித்த வேற்றினத்தவர்களுள், யூதர்கள் தான் பல வழிகளில் பிரபலமான இனக் குழுவாக இருந்தனர். பொருளாதார நடவடிக்கைகளில் மேலாண்மை மட்டுமன்றி, அரசியல் கலாச்சாரப் பரப்பிலும் யூதர்கள் முன்னணி வேற்றினத்தவராக இருந்தனர். கால் மார்க்ஸ் ஒரு யூதர், ஜேர்மனியுட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசக் கட்சிகளின் தலைமையில் அதிகம் யூதர்கள் இருந்தனர். விஞ்ஞானத் துறையிலும் (ஐன்ஸ்ரைன் சிறந்த உதாரணம்) அவர்களுக்கு தனியிடம் இருந்தது. இவ்வாறு ஜேர்மன் மக்கள் ஏற்கனவே உணர்ந்திருந்த ஒரு "யூத மேலாண்மை பற்றிய அச்சம்" நாசிக் கட்சியின் மக்கள்திரள்வாத ஆயுதமாயிற்று!  

ஆனால், யூதர்களுக்கு மேலதிகமாக, ஏனைய மத, இனக்குழுக்கள், ரஷ்யாவின் சிலாவிக் இன மக்கள் ஆகியோரும் நாசிக்கட்சியின் வெறுப்பிலக்குகளாக விளங்கினர். இந்த சிலாவிக் இன மக்கள் மீதான வெறுப்பிற்கு வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜேர்மனியின் நீண்ட கால இலக்கும் ஒரு காரணமாக இருந்தது. ஆரிய இனமான நீலக் கண்ணும், வெள்ளைத் தோலும் கொண்ட ஜேர்மனியர்கள், லூதரன் கிறிஸ்தவ நெறிப்படி குடும்பங்களில் நிறையப் பிள்ளைகள் பெற்றுப் பெருகும் போது, அவர்கள் வாழ அவசியமான நிலம், சோவியத் ரஷ்யாவிடமிருந்து பறிக்கப் பட வேண்டுமென்பது நாசிக் கட்சியின் கொள்கை. எனவே, சிலாவிக் மக்கள், "மனித இனத்திற்குக் கீழானவர்கள்" என்ற வெறுப்புணர்வை நாசிக் கட்சியினர் பரப்பத் தயங்கவில்லை. இந்தக்கீழ்மனிதர்களான” சிலாவிக் மக்களை விடக் கீழான நிலையில் தான் யூதர்கள் வைத்துப் பார்க்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.     

1921 அளவில், நாசிக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹிற்லர் வெளிப்படையாக இந்தக் கொள்கைகளைப் பேசி வந்திருக்கிறார். சாதாரண அரசியல் கட்சிகள் போலல்லாது, நாசி கட்சிக்கு ஒரு ஆயுதப் படையும் இருந்தது. Storm troopers என்று அழைக்கப் பட்ட இந்தப் படையில், ஹிற்லர் போலவே முதல் உலகப் போரிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த முன்னாள் படையினர் இருந்தனர். பல்லாயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்த படை, பவாரியாவின் மாநில அரசைக் கவிழ்க்க முயன்று தோற்ற போது தான் ஹிற்லர் மற்றும் நாசிக் கட்சி பற்றிய முதல் எச்சரிக்கை ஜேர்மன் அரசுக்குக் கிடைத்தது. ஜேர்மன் அரசினால் ஒரு வருடம், இதற்காக சிறை வைக்கப் பட்ட போது தான் ஹிற்லர் தனது ஜனத்திரள்வாத, இனவெறிக் கொள்கைகளை நூலாக (Mein Kampf) எழுதினார். இந்த நூல், 1932 இல் ஜேர்மன் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக நாசிக் கட்சி விளங்க ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதனால், ஜேர்மன் ஜனாதிபதியினால், ஹிற்லர் வேந்தராக நியமிக்கப் படும் நிலையும் உருவானது.

 

ஜேர்மன் மக்கள் என்ன நினைத்தனர்?

தீவிர இனவெறிக் கொள்கை கொண்ட ஹிற்லரையும், நாசி கட்சியையும் 1932 பொதுத் தேர்தலில் ஜேர்மன் வாக்காளர்கள் ஆதரித்துப் பெரும்பான்மை வழங்க பல காரணங்கள் அப்போது இருந்தன. ஜேர்மனி முதல் உலகப் போரில் மிகவும் அவமானப் படுத்தப் பட்டதாக ஜேர்மனிய மக்களில் பெரும்பகுதியினர் உணர்ந்தனர். அதன் பின்னான தண்டனைகளால் ஜேர்மனியின் பணவீக்கம், வேலையில்லாதோரின் வீதம், என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த வொன் ஹிண்டன்பேர்க் வயசாளி, நோய்வாய்பட்ட நிலையில் தனது ஓய்வு வாசஸ்தலத்தில் இருந்தவாறே, கீழதிகாரிகளூடாக ஆட்சி செய்து  கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில், மூன்று இளமையும், துடிப்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் முன் வலம் வந்தனர்: ஹிற்லர், ஹெஸ், கோயபல்ஸ் ஆகிய மூவரும் தான் அந்த "ஜனத்திரள்வாத" இளம் தலைவர்கள். எனவே, ஒரு நம்பிக்கையான எதிர்காலம் வேண்டி, ஜேர்மன் வாக்காளர்கள்  நாசிக் கட்சிக்கு வாக்களித்தனர். இந்த மானசீகமான ஆதரவோடு, நாசிக் கட்சியின் ஆயுதப் படையினர் நாசிக் கட்சி எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்த வன்முறை அச்சுறுத்தலும் சேர்ந்து தான் நாசிக் கட்சியும், ஹிற்லரும் ஜேர்மனியின் ஆட்சியைப் பிடித்தனர்.  

பதவிக்கு வந்த பின்னர் ஹிற்லரின் நடவடிக்கைகள்

ஹிற்லர் வேந்தராகப் பதவியேற்று சில மாதங்களில், ஜேர்மன் பாராளுமன்றம் தீயூட்டப் பட்டது. இந்த எரியூட்டலுக்கு ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் காரணமெனப் பிரச்சாரம் செய்த நாசிகள், ஒரு ஒல்லாந்து நாட்டு கம்யூனிஸ்டைக் கைது செய்தனர். ஹிற்லரின் விமானப் படையைப் பின்னாளில் கட்டியெழுப்பிய தீவிர நாசியான ஹேர்மன் கோறிங் நேரடியாக நீதிமன்றம் சென்று, கைது செய்யப் பட்ட ஒல்லாந்துக் கம்யூனிஸ்டின் மரண தண்டனையை உறுதி செய்தார். அதே நேரம் மிக முக்கியமான இன்னொரு விடயமும் நாசி ஜேர்மனியின் எதிர்காலப் போக்கை நிர்ணயித்தது: பாராளுமன்றம் எரிக்கப் பட்ட சம்பவத்தைக் காரணம் காட்டி, ஹிற்லர் ஜேர்மன் ஜனாதிபதியை அவசரகாலச் சட்டத்தை அமல் படுத்தத் தூண்டினார். இதனால், சகல அரசியலமைப்பு வழியான மக்கள் உரிமைகளும் ஒரே இரவில் ரத்துச் செய்யப் பட்டன. இந்த உரிமைகள் ரத்தினால், நாசிகளை ஆதரித்த ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை- ஆனால், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், நாசி எதிர்ப்பாளர்கள், ஊடக சுதந்திரம் என்பன நன்கு பாதிக்கப் பட்டன. ஹிற்லரின் கட்சிக் கொள்கைகள் செயல் வடிவம் பெற ஆரம்பித்தன!

 

-இன்னும் வரும்

ஜஸ்ரின்

  • Like 17
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

திரும்பும் வரலாறு: நாசிகள் அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வ

Justin

திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும்

Justin

இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக  வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்: உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்த

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நேரத்துக்கு

தொடர்ந்து எழுதுங்கள் சகோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.

சரித்திரம் அறிய ஆவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகிண்றீர்கள் ........தொடருங்கள் .........ஜெர்மனியின் அவ்வளவு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் என்ன நடந்தது.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணை வரலாற்று பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபாரம்….

காலத்துக்கு தேவையான எழுத்து….

பட்டுக்கோட்டை எழுதி இருப்பார்…

உப்புகல்லை வைரம் என்று சொன்னால்…

நம்பி ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால்…

நாம் கதறி என்ன? குழறி என்ன

ஒன்றுமே நடக்கவில்லை தோழா

ரொம்ப நாளா….

உங்களுக்கும் பல இடங்களில் இது பொருந்தும் 🤣.

ஆனால் கதறுவதை கை விட வேண்டாம்👏🏾

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

இன்னும் வரும்

 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதும்போது ஏனோ நவீன நாசிகள் கண்முன் வருவதை தவிர்க்கமுடியவில்லை.

வரலாறு தந்த பாடத்தை படிக்காமல் போனால் என்ன நடக்கும் என்பதையும் திரும்ப திரும்ப வரலாறே படிப்பிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக  வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்:

20 hours ago, goshan_che said:

 

 

🤣

ஆனால் கதறுவதை கை விட வேண்டாம்👏🏾

உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்திகள், சதிக் கதைகள், திரித்த வரலாறுகளின் பின் செல்லுதல் ஆகியவற்றால் வரக் கூடிய தீமைகளைச் சொல்லி வந்தும் அதனால் எவ்வளவு பயன் விளைந்தது எனத் தெரியவில்லை. சலிப்பு வந்தாலும், என் பிள்ளை வாழப் போகும் உலகை இப்படியே விட்டுப் போக முடியாது என்பதால் ஒரு சிறு முயற்சி, கடைசி முயற்சி என்று கூடச் சொல்லலாம்.

இதை நான் ஆரம்பிக்க 2 முன்மாதிரிகள் அல்லது ஊக்கிகள்:

1. மரியோ லிவியோ, ஒரு அமெரிக்க பௌதீகவியலாளர், விஞ்ஞான மறுப்பிற்கெதிராகச் செய்லபடும் ஒரு எழுத்தாளர். அவர் கருத்தின் படி இளம் வயதினர் (impressionable age? யாழை வாசிப்போரில் இவர்கள் எத்தனை வீதமென அறியேன்!) விஞ்ஞானத்தையும், வரலாற்றையும்  அறியச் செய்தால் 10 வருடங்களில் உலகம் இப்போதிருப்பதை விட முன்னேற்றகரமாக இருக்கும் என்கிறார்.

2. யாழ் கள ரஞ்சித்தும் நன்னியரும்: சளைக்காமல் எங்கள் இனம் பற்றிய பதிவுகளைத் தொடராகப் பதிவதில் அவர்கள் காட்டும் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கவை. இவர்களின் உழைப்பு எனக்கு வராதெனினும், தொலைவிலாவது பின் தொடர முனைகிறேன்.       

  • Like 4
  • Thanks 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2023 at 11:54, suvy said:

நன்றாக எழுதுகிண்றீர்கள் ........தொடருங்கள் .........ஜெர்மனியின் அவ்வளவு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் என்ன நடந்தது.......!   👍

சுவியர், 1,100 வரையான நீர்மூழ்கிகளை இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாசி ஜேர்மனி வைத்திருந்தது. இவற்றுள் 700 வரையானவை எதிரிப் படைகளால் அல்லது விபத்துக்களால் மூழ்கடிக்கப்  பட்டன (ஆனால், எதிரி நாடுகளின் 3000 வரையான கடற்கலங்களை நாசி நீர்மூழ்கிகள் மூழ்கடித்தன!).

எஞ்சிய நூற்றுக் கணக்கானவை ஜேர்மனி சரணடைவதற்கு முன்னராக நாசிகளால் அழிக்கப் பட்டன. சில சரணடைந்தன அல்லது கைப்பற்றப் பட்டன. அவ்வாறு அமெரிக்காவினால் கைப்பற்றப் பட்ட ஒரு ஜேர்மன் நீர்மூழ்கி இன்னும் சிக்காகோவில் பார்வைக்கு இருக்கிறது.

https://www.msichicago.org/press/press-releases/u-505-submarine/

நாசிகளின் ஜேர்மன் நீர்முழ்கிகள்  பற்றி அறிந்து கொள்ள "Das Boot" (The Boat) என்ற திரைப்படத்தைப் பார்க்கலாம்.

Poster for Das Boot

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி jastin விளக்கத்துக்கு......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று பதிவு சிறப்பாக உள்ளது.  பல புதிய விடயங்களை தெரிந்து கொண்டுள்ளோம். நன்றிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக  வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்:

உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்திகள், சதிக் கதைகள், திரித்த வரலாறுகளின் பின் செல்லுதல் ஆகியவற்றால் வரக் கூடிய தீமைகளைச் சொல்லி வந்தும் அதனால் எவ்வளவு பயன் விளைந்தது எனத் தெரியவில்லை. சலிப்பு வந்தாலும், என் பிள்ளை வாழப் போகும் உலகை இப்படியே விட்டுப் போக முடியாது என்பதால் ஒரு சிறு முயற்சி, கடைசி முயற்சி என்று கூடச் சொல்லலாம்.

இதை நான் ஆரம்பிக்க 2 முன்மாதிரிகள் அல்லது ஊக்கிகள்:

1. மரியோ லிவியோ, ஒரு அமெரிக்க பௌதீகவியலாளர், விஞ்ஞான மறுப்பிற்கெதிராகச் செய்லபடும் ஒரு எழுத்தாளர். அவர் கருத்தின் படி இளம் வயதினர் (impressionable age? யாழை வாசிப்போரில் இவர்கள் எத்தனை வீதமென அறியேன்!) விஞ்ஞானத்தையும், வரலாற்றையும்  அறியச் செய்தால் 10 வருடங்களில் உலகம் இப்போதிருப்பதை விட முன்னேற்றகரமாக இருக்கும் என்கிறார்.

2. யாழ் கள ரஞ்சித்தும் நன்னியரும்: சளைக்காமல் எங்கள் இனம் பற்றிய பதிவுகளைத் தொடராகப் பதிவதில் அவர்கள் காட்டும் உழைப்பும் ஆர்வமும் மெச்சத்தக்கவை. இவர்களின் உழைப்பு எனக்கு வராதெனினும், தொலைவிலாவது பின் தொடர முனைகிறேன்.       

தொடர்ந்து எழுதும் போது எனிக்மா இயந்திரம் பற்றியும், அலன் டூரின் பற்றியும் தொட்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.

ஓரின சேர்க்கயாளரை (தன் உள்ளக ஓரின சேர்க்கை உந்தலால் என்கிறனர்) வெறுத்த, அழித்த ஹிட்லரின் கோட்டை என்கிற யானையின் காதில் புகுந்த (ஓரின சேர்க்கையாளர்) எலி டூரின்.

ஹிட்லரின் கோட்டை சரிய டூரின் ஆற்றிய பங்கு poetic justice.

ஆனால் அதே டூரினை, தற்கொலை வரை தள்ளிய அன்றைய பிரிதானிய அமைப்பு - இந்த நூற்றாண்ட்டின் வெட்கக்கேடு.

முன்பும் டூரின் பற்றி எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2023 at 02:41, Justin said:

திரும்பும் வரலாறு: நாசிகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் போர் அழிவுகள் இனியும் வேண்டாம் என பாராமுகமாக இருந்த ஜேர்மனி மீண்டும் ஆயுதங்களை தூக்க ஆரம்பித்து விட்டது.

எனினும்  ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களை விட நாஷிகள் எதுவுமே பெரிதாக செய்து விடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பச்சை போட்டு விட்டு காத்திருக்கிறேன் ஜயா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகள் என்ன செய்தன?

ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது.

நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற .நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது.  இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது.

மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது.

பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள்

கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது  ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன.

வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து  அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர்.

ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி  வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது. 

இருளிரவின் ஆரம்பம்  

இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்?

 

இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது.

-இன்னும் வரும்

ஜஸ்ரின்      

     

  • Like 6
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் யஸ்டின் வாசிக்க ஆவல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 17:51, goshan_che said:

தொடர்ந்து எழுதும் போது எனிக்மா இயந்திரம் பற்றியும், அலன் டூரின் பற்றியும் தொட்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.

ஓரின சேர்க்கயாளரை (தன் உள்ளக ஓரின சேர்க்கை உந்தலால் என்கிறனர்) வெறுத்த, அழித்த ஹிட்லரின் கோட்டை என்கிற யானையின் காதில் புகுந்த (ஓரின சேர்க்கையாளர்) எலி டூரின்.

ஹிட்லரின் கோட்டை சரிய டூரின் ஆற்றிய பங்கு poetic justice.

ஆனால் அதே டூரினை, தற்கொலை வரை தள்ளிய அன்றைய பிரிதானிய அமைப்பு - இந்த நூற்றாண்ட்டின் வெட்கக்கேடு.

முன்பும் டூரின் பற்றி எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

நிச்சயமாக. இரண்டாம் உலகப் போரின் கதையை, பிரிட்டன், சேர்ச்சில், ப்ளெட்ச்லி பார்க், RAF இவையெல்லாம் குறிப்பிடாமல் எழுதவே முடியாது! - அலன் ரூரிங்கும் வருவார்!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள்.

fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர்.   அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர்.

 ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. 

ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது.

திட்டமிட்ட யூத ஒதுக்கல்

முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன

(இது முழுமையான பட்டியல் அல்ல!):

1.  யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன.

2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர்.

3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன.

4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர்.  

5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன.

யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல்

முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர்.   

இறுதித் தீர்வு  - “Final Solution”

1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை  முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன.

1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர்.

இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை.  

“மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை.

 

ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்!

சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை!

- வெற்றிக் கதை தொடரும்-

-ஜஸ்ரின் 

  • Like 6
  • Thanks 4
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வாசிப்புக்களாலும், திரைப் படங்கள் பார்த்ததாலும் தெளிவில்லாமல் அறிந்திருந்த வரலாறு, உங்கள் பதிவுகளை வாசித்த பின்னர் ஒரு தொடுவையாக அமைகின்றது…!

தொடருங்கள், ஜஸ்ரின்…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்டின்........!

அன்று அழிவின் எல்லையில் இருந்த யூதர்கள்தான் இன்று உலகை ஆட்டிப் படைக்கின்றனர்.....அன்றைய தமது நிலையை மறந்து இன்று இலங்கை அரசுடன் கை கோர்த்துக் கொண்டு எம்மினத்தை அழிக்கவும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2023 at 03:42, suvy said:

தொடருங்கள் ஜஸ்டின்........!

அன்று அழிவின் எல்லையில் இருந்த யூதர்கள்தான் இன்று உலகை ஆட்டிப் படைக்கின்றனர்.....அன்றைய தமது நிலையை மறந்து இன்று இலங்கை அரசுடன் கை கோர்த்துக் கொண்டு எம்மினத்தை அழிக்கவும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.......! 

"புத்தியுள்ளவனுக்கே உலகம் சொந்தம்" என்று யூதர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த எளிய விளக்கத்தை ஒதுக்கி விட்டு "யூதர்கள் உலகை ஆட்டிப் படைக்கிறார்கள்" என்ற சதிக் கோட்பாடு கலந்த ஒரு கருத்தை சிலர் பரப்பி வருவது உண்மை. "தகுதியே இல்லாமல் யூதர்கள் ஜேர்மனியில் மேலாண்மை செய்கிறார்கள், எனவே அழிக்க வேண்டும்!" என்று முழுமையான சதிக் கோட்பாட்டை வைத்துத் தான் நாசிகள் யூதப் படுகொலையை நியாயப் படுத்தினர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜஸ்ரின்

இதே யூத இனம் மாதிரி எமது தமிழ் சமூகமும் வரக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன.

பல காரணங்களால் இப்போதைக்கு முடியவில்லை என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.