Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித எச்சிலின் அபார வலிமை பற்றி தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித எச்சிலின் அபார வலிமை பற்றி தெரியுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,கிறிஸ் கோர்ஸ்கி
  • பதவி,பிபிசி
  • 6 பிப்ரவரி 2023
எச்சிலால் ஏற்படும் நன்மைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எச்சில் என்பது நமது வாயை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள மட்டும் பயன்படுவது அல்ல. நமது சுவைக்கு பின்னால் உள்ள பிரதான காரணிகள் எச்சிலில் உள்ள பொருட்கள்தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக எச்சில் என்பது நாம் உண்ணும் உணவை ஈரப்பதம் ஆக்குவதற்கு உதவும் ஒரு சலிப்பூட்டும் பொருளாகத் தான் தெரியும். ஆனால், உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

 

உமிழ்நீரானது வாயில் நுழையும் அனைத்துடனும் தொடர்பு கொள்கிறது, மேலும் அது 99% தண்ணீராக இருந்தாலும், நாம் சாப்பிடும் மற்றும் குடிக்கும் சுவைகளில் - மற்றும் நமது இன்பத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

“எச்சில் என்பது திரவம், ஆனால், எச்சில் என்பது திரவம் மட்டுமே அல்ல ” என்று கூறுகிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் வாய்வழி உயிரியலாளரான கை கார்பெண்டர்.

எச்சில் பற்களை பாதுகாக்கிறது, பேசுவதை எளிதாக்குகிறது, உணவுகள் வாய்க்குள் எளிதாக செல்லும் சூழலை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் நீண்ட காலமாகவே அறிந்து வைத்துள்ளனர்.

ஆனால், ஆய்வாளர்கள் தற்போது, எச்சில் ஒரு மத்தியஸ்தராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர், உணவு எவ்வாறு வாய் வழியாக நகர்கிறது மற்றும் அது நம் உணர்வுகளை எவ்வாறு தூண்டுகிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எச்சில் மற்றும் உணவுக்கு இடையிலான தொடர்புகள் நாம் சாப்பிட விரும்பும் உணவுகளை வடிவமைக்க உதவும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

எச்சில் மிகவும் உப்பு தன்மை உடையது அல்ல. அதனால்தான், உருளைக்கிழங்கு சிப்ஸின் உப்புத்தன்மையை நம்மால் உணர முடிகிறது. நாம் நினைப்பதுபோன்று மிகவும் அமிலத்தன்மை வாய்ந்ததும் அல்ல, அதனால்தான் எலுமிச்சை சாறு நமக்கு உற்சாகம் அளிக்கிறது. எச்சிலின் நீர் மற்றும் புரதங்கள் ஒவ்வொரு வாய் உணவையும் உயவூட்டுகின்றன, மேலும் அதன் நொதிகளான அமிலேஸ் மற்றும் லிபேஸ் ஆகியவை செரிமான செயல்முறையைத் தொடங்குகின்றன.

 

இந்த ஈரமாக்கல், சுவையின் ரசாயன கூறுகளை அல்லது சுவைகளை எச்சிலில் கரைக்கிறது, இதனால் அவை எச்சில் மூலம் சுவை மொட்டுகளுக்கு பயணிக்கவும் தொடர்பு கொள்ளவும் முடியும் என்கிறார் சீனாவின் ஹாங்சோவில் உள்ள ஜங்க் குங்க்‌ஷங் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானி ஜியான்ஷே சென். “நாங்கள் உணவின் ருசி, சுவை , ரசாயன தகவல்களைக் கண்டறிகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

உணவு அறிவியல், உணவுப் பொருட்களின் இயற்பியல், உணவுக்கான உடலின் உடலியல் மற்றும் உளவியல் மறுமொழிகள் மற்றும் பலவற்றைப் பற்றி 2009 இல் "உணவு வாய்வழி செயலாக்கம்" என்ற சொல்லை அவர் 2022 ஆண்டு உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மதிப்பாய்வில் எழுதினார். மக்கள் சாப்பிடும்போது, அவர்கள் உணவை மட்டும் சாப்பிடுவது இல்லை. அதனுடன் சேர்ந்து எச்சிலையும் சாப்பிடுகின்றனர்.

எடுத்துகாட்டாக, ஒரு உணவில் உள்ள இனிப்பு அல்லது உவர்ப்பு சுவையுடைய மூலக்கூறு நமது சுவைமொட்டை சென்றடையும்போதுதான், நாம் அதன் சுவையை அறியமுடியும். அவ்வாறு மூலக்கூறு சென்றடைய வேண்டுமென்றால் அவை நாக்கின் மேல் இருக்கும் எச்சிலை கடந்து செல்ல வேண்டும்.

எச்சிலால் ஏற்படும் நன்மைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எனினும் இதனை கை கார்பென்டர் மறுக்கிறார். நீண்ட நேரத்துக்கு முன்பே மூடி திறக்கப்பட்ட சோடா ஏன், புதிய சோடாவை விட இனிப்பாக இருக்கிறது என்று கேள்வி எழுப்கிறார். புதிய சோடாவில் கார்பன் டை ஆக்சைட் குமிழ்கள் வெடிப்பது ஒரு அமில தாக்கத்தை அளித்தது, இது இனிப்புத்தன்மையிலிருந்து மூளையை திசை திருப்புகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், கார்பென்டர் மற்றும் அவரது குழுவினர், ஆய்வகத்தில் செயற்கை வாயை உருவாக்கி இது தொடர்பாக ஆய்வு செய்தனர். அப்போது, சோடாவின் குமிழ்கள் நாக்குக்கும் அண்ணத்திற்கும் இடையில் பாய்வதை எச்சில் தடுப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

இந்த குமிழ்கள், சர்க்கரை நாக்கில் உள்ள சுவை ஏற்பிகளை அடைவதை தடுக்கின்றன என்று கார்பென்டர் கருதுகிறார்.

 

நமது சுவை பற்றிய பெரும்பாலான கருத்துக்கு காரணமாகும் உணவில் உள்ள நறுமணத்தையும் எச்சில் பாதிக்கலாம். நாம் சுவைக்கும்போது, உணவில் உள்ள சில சுவை மூலக்கூறுகள் எச்சிலில் கரைந்துபோகும். ஆனால், அவ்வாறு கரையாதவைகள் நம் நாசியை எட்டி உணர்வை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, வெவ்வேறு எச்சில் ஓட்ட விகிதங்கள் அல்லது வெவ்வேறு எச்சில் கலவை கொண்டவர்கள் - ஒரே உணவு அல்லது பானத்திலிருந்து வேறுபட்ட சுவை அனுபவங்களைக் கொண்டிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பழச்சுவை சேர்க்கப்பட்ட ஒயினை பருகிய10 நபர்களின் எச்சில் ஓட்ட விகிதங்களை ஸ்பானிஷ் ஆய்வாளர்கள் அளவெடுத்தனர். அதிக எச்சிலை சுரக்கக்கூடிய நபர்களுக்கு பிறரை விட அதன் சுவையை அதிகம் அறியமுடிந்தது. ஒருவேளை அவர்கள் அடிக்கடி விழுங்குவதால், அதன் நறுமணம் அவர்கள் நாசியை எட்டியிருக்கலாம்.

 

அதிக கொழுப்பு மற்றும் குறைந்த கொழுப்பு உணவுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை உணரவும் எச்சில் உதவுகிறது. இரண்டு தயிர்கள் ஒரே மாதிரி இருந்தாலும், ஒரே அளவில் இருந்தாலும், குறைந்த கொழுப்பு உள்ளது வாயில் குறைவான ஈரப்பதத்துடன் இருப்பதை போன்று தோன்றும் என்கிறார் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானி அன்வேஷா சர்க்கார்.

“நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிப்பது உணவின் தன்மையை அல்ல, ஆனால் உணவு [வாயின்] மேற்பரப்புடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை,” என்று சர்க்கார் கூறுகிறார். பால் கொழுப்பு எச்சிலுடன் இணைந்து துவர்ப்புத்தன்மையை மறைக்கக்கூடிய நீர்த்துளிகளின் அடுக்கை உருவாக்குகிறது. மேலும், தயிரின் சுவையையும் கூட்டுகிறது என்று அவர் கூறுகிறார்.

 

எச்சிலால் ஏற்படும் நன்மைகள்

பட மூலாதாரம்,FLAVIA MORLACHETTI/GETTY IMAGES

 

உணவு வாய் வழியாக நகரும்போது என்ன நடக்கிறது மற்றும் அது உண்ணும் உணர்ச்சி அனுபவத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உருவகப்படுத்துவதற்காக செயற்கை எச்சிலில் நனையவைக்கப்பட்ட இயந்திர நாக்கை தனது ஆராய்ச்சிக்கு சர்க்கார் பயன்படுத்தினார். குறைந்த கொழுப்புள்ள ஒரு ஸ்மூத்தி, முதலில் பார்க்கும்போது கிரீம்தன்மையாக தோன்றலாம். ஆனால், எச்சிலுடன் கலக்கும்போது, கொழுப்பு வழங்கும் தன்மையை அது இழக்கிறது.

எச்சில், உணவு மற்றும் வாய் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த தொடர்புகளை முழுமையாக புரிந்துகொள்வது - மற்றும் தகவல் மூளைக்கு எவ்வாறு மாற்றப்படுகிறது என்பதை அறிந்துகொள்வது ஆரோக்கியமான உணவுகளை வடிவமைக்க வழிவகுக்கும் என்று சர்க்கார் கூறுகிறார்.

 

ஆனால் அத்தகைய உணவுகளை உருவாக்குவதற்கு இந்த இடைவினைகளை நன்கு புரிந்துகொள்வது எளிதானது அல்ல, ஏனெனில் எச்சில் மற்றும் உணர்தல் நாள் முழுவதும் மற்றும் தனிநபர்களிடையே மாறுபடும். பொதுவாகவே, எச்சில் காலையில் மெதுவாகவும், பிற்பகலில் வேகமாகவும் பாயும். மேலும், தனி நபர்களின் எச்சில் கூறுகளும் நாள் முழுவதும் மாறுபடும்.

இதை ஆய்வு செய்வதற்காக, போர்ச்சுகலில் உள்ள எவோரா பல்கலைக்கழகத்தின் வாய்வழி உயிர்வேதியியல் நிபுணர் எல்சா லாமி, சில நபர்களை கண்களை கட்டிக்கொண்டு ரொட்டியின் சில துண்டுகளை சில நிமிடங்களுக்கு நுகரும்படி செய்தார். அவர்களின் எச்சிலில் மாற்றம் ஏற்படுகிறதா என்று கண்காணித்தார்.

சுவை உணர்திறன் உடன் தொடர்புடைய அமிலேஸ்கள் மற்றும் சிஸ்டாடின்கள் என்று அழைக்கப்படும் இரண்டு வகை புரதங்கள், ரொட்டியின் சுவையை நுகர்ந்த பின்னர் அதிகரிப்பதை அவர்கள் கண்டறிந்தனர். வென்னிலா, எலுமிச்சை என பல பொருட்களை வைத்து அவர்கள் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு முறையும், எச்சிலில் உள்ள புரதத்தின் அளவு மாறுபடுவதை அவர்கள் கண்டறிந்தனர். இது என்ன செயல்பாட்டைச் செய்யக்கூடும் என்பதை கண்டறியும் ஆய்வில் அவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

எச்சிலால் ஏற்படும் நன்மைகள்

பட மூலாதாரம்,WESTEND61/GETTY IMAGES

எச்சிலின் ஒப்பனை நபருக்கு நபர் மாறுபடும் - அது ஒரு நபரின் கடந்தகால உணவுத் தேர்வுகளைப் பொறுத்தது என்று பஃபலோவில் உள்ள பல்கலைக்கழகத்தின் நடத்தை நரம்பியல் விஞ்ஞானி ஆன்-மேரி டோரெக்ரோசா கூறுகிறார். டோரெக்ரோசா எலிகளுக்கு கசப்பான சுவை சேர்க்கும் உணவுகளை அளித்தபோது, எச்சில் புரதங்களில் குறிப்பிடத்தக்க பல வகை அதிகரிப்புகளைக் கண்டார். அந்த மாற்றங்கள் நடந்ததால், எலிகள் தங்கள் உணவில் உள்ள கசப்பை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். "இதைப் பற்றி நாங்கள் நினைக்கும் விதம் என்னவென்றால், நீங்கள் எப்போதும் ப்ரோக்கோலியை சாப்பிட்டால், ப்ரோக்கோலி உங்களுக்கு மோசமாக சுவைக்காது" என்கிறார் டோரெக்ரோஸ்ஸா.

 

மற்றொரு பரிசோதனையில், கசப்பான உணவுகளை உண்ணும் பழக்கமுள்ள எலிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட எச்சிலை, அப்பழக்கம் இல்லாத எலிகளின் வாயில் மாற்றுவதற்கு டோரெக்ரோசா வடிகுழாய்களைப் பயன்படுத்தினார். கசப்பு சுவை தொடர்பான அனுபவம் இல்லாத எலிகள் அவற்றின் வெளிப்பாடு இல்லாவிட்டாலும், கசப்பான உணவை மிகவும் சகித்துக்கொண்டன. ஆனால், வடிகுழாய்கள் வழியாக எச்சில் வழங்கப்படாத எலிகள், தொடர்ந்து கசப்பு சுவையுடைய உணவுகளை தவிர்த்தன. இந்த சகிப்புத்தன்மைக்கு எந்த புரதங்கள் காரணம் என்பதை அவரும் அவரது குழுவும் இன்னும் சரியாகக் கண்டுபிடிக்கவில்லை என்று டோரெக்ரோசா கூறுகிறார்.

 

நிச்சயம், எலிகள் மனிதர்கள் அல்ல- ஆனால், மனிதர்களின் சுவை உணர்வுகளிலும் எச்சில் இத்தகைய செயல்களை செய்கிறது என்பதற்கான குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். “மனித உணவுகள் மற்றும் அனுபவங்களில் பல விஷயங்கள் உள்ளன, அவை நமது அன்றாட அனுபவத்தை பாதிக்கின்றன, குறிப்பாக உணவுகள் மற்றும் சுவைகளுடன், ஆனால் எலிகள் இவற்றை சமாளிக்க வேண்டியது இல்லை” என்கிறார் சுவை மற்றும் அதன் செயல்பாடுகளை படிக்கும் புர்டூ பல்கலைக்கழகத்தின் உணர்வு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வாளர் லிசா டேவிஸ்.

ஆனால் இந்த வடிவங்களை கண்டறிந்து புரிந்து கொள்ள முடிந்தால், சாத்தியம் அதிகம் என்கிறார் லாமி. “குழந்தைகளின் எச்சிலில் ஏற்படும் மாற்றங்களை ஊக்குவிக்கும் ஒரு சேர்க்கையை நீங்கள் எப்படியாவது குழந்தைகளுக்கு வழங்க முடிந்தால், கசப்பான காய்கறியுடன் அவர்களின் அனுபவத்தை மிகவும் சுவையாக மாற்றினால், அது ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும். அநேகமாக அவர்கள் அந்த காய்கறியுடன் ஒன்றிபோவார்கள்” என்று அவர் கூறுகிறார்.

இன்னும் விரிவாக, எச்சில் சுவையை எவ்வாறு பாதிக்கிறது - மற்றும் உணவு எச்சிலின் கலவையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்குவது மற்றும் புறக்கணிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி உணவு விருப்பங்களைத் தூண்டுவதற்கு புதிய வழிகளைத் திறக்கலாம். “உணவுகளை வெறுப்பவர்களை அந்த உணவுகளை விரும்புவோராக மாற்ற முடியுமா? என்பதை அறிய தான் நான் ஆவலுடன் உள்ளேன்” என்று டோரெக்ரோசா கூறுகிறார்.

- இந்தக் கட்டுரை முதலில் நோவபிள் இதழில் வெளிவந்தது மற்றும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் மீண்டும் வெளியிடப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c51l8x0wgv0o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஊரில்  முன்னெரெல்லாம் சிலர்   கீறல் காயங்கள் ஏற்பட்டால் எச்சிலை மருந்தாக தடவுவர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 ஊரில்  முன்னெரெல்லாம் சிலர்   கீறல் காயங்கள் ஏற்பட்டால் எச்சிலை மருந்தாக தடவுவர்.

நான் இப்பவும் தடவிறன்…!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரில் இருப்பவர்களை காயப்படுத்தவும் எச்சிலை துப்பி விட்டு போவார்கள்.......!

ஆனால் என்ன சிலர் எச்சில் துப்புவதும் அழகாக இருக்கும்......!  😂

oop_00_01 | Find & Make GIFs on Gfycat

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

நான் இப்பவும் தடவிறன்…!

மௌனம் கலைத்த மௌனசாமியே வருக வருக 

:welcome3:

:grinning_face_with_smiling_eyes:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2023 at 08:01, suvy said:

எதிரில் இருப்பவர்களை காயப்படுத்தவும் எச்சிலை துப்பி விட்டு போவார்கள்.......!

ஆனால் என்ன சிலர் எச்சில் துப்புவதும் அழகாக இருக்கும்......!  😂

oop_00_01 | Find & Make GIFs on Gfycat

இது எச்சிலல்ல சளி.  கண்றாவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2023 at 03:01, suvy said:

எதிரில் இருப்பவர்களை காயப்படுத்தவும் எச்சிலை துப்பி விட்டு போவார்கள்.......!

ஆனால் என்ன சிலர் எச்சில் துப்புவதும் அழகாக இருக்கும்......!  😂

oop_00_01 | Find & Make GIFs on Gfycat

 

43 minutes ago, karu said:

இது எச்சிலல்ல சளி.  கண்றாவி.

சுவி, கரு, என் கண்ணுக்கு ஏன் இது எச்சிலும், சளியுமில்லாத இன்னொன்று மாதிரித் தெரியுது? என் சாக்கடை மனசா?😵

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, karu said:

இது எச்சிலல்ல சளி.  கண்றாவி.

 

13 minutes ago, Justin said:

 

சுவி, கரு, என் கண்ணுக்கு ஏன் இது எச்சிலும், சளியுமில்லாத இன்னொன்று மாதிரித் தெரியுது? என் சாக்கடை மனசா?😵

justin நீங்கள் ஒரு வைத்தியர் எங்களின் பார்வைக்குது தெரியாதது உங்களுக்குத் தெரியும்.......எனக்கு அழகாய்த் தெரிந்த ஒன்று karu வுக்கு கண்றாவியான சளியாகவும் உங்களுக்கு இரண்டுமில்லாத இன்னொன்றாகவும் தெரிகிறது என்றால் நான் அதை நம்புகின்றேன்....ஆனால் அப்படி இருக்காது என்று உள்மனம் சொல்கின்றது.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, karu said:

இது எச்சிலல்ல சளி.  கண்றாவி.

உங்கள் பாசையில் எல்லா கன்றாவிகளையும் எமது உடல் தானே உற்பத்தி செய்கின்றது. மலம் கூட உடலுக்குள் பல நாட்களாக தங்கியிருக்கின்றது.எமது  உடலின் பல இடங்களில் வரும் துர்நாற்றங்களை நாய் கூட முகர மாட்டாது.

சும்மா  கண்ட கண்ட வாசனைதிரவியங்கள் எல்லாம் என்னத்துக்கு விக்குது????? உந்த ஸ்பிறேக்கள் சொல்லி வேலையில்லை. வீட்டை விட்டு வெளியில வெளிக்கிடேக்க.....
ஒரே இஸ்க்...இஸ்க்:rolling_on_the_floor_laughing:
கைய தூக்கி ஒரு இஸ்க்:grinning_face_with_sweat:
கால தூக்கி ஒரு இஸ்க்:beaming_face_with_smiling_eyes:
இடக்கையால ஒரு இஸ்க்:grinning_face:
வலக்கையால ஒரு இஸ்க்:face_with_tears_of_joy:
முன் பக்கம் ஒரு றவுண்ட் அடிச்சு  இஸ்க்...இஸ்க்கு :face_savoring_food:

ஏன்?:cool:

Vadivelu Dubai Return GIF - Vadivelu Dubai Return - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவை பூச்சிகள். இலைகள்  அல்ல.
    • டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி ஸ்திரமடையும் - ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை Published By: T. SARANYA 20 MAR, 2023 | 05:22 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெறுவதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டவுடன், அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்படியாக அதிகரித்துச்செல்லுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன்வழங்குனர்களின் நிதியியல் உத்தரவாதம், பொருளாதார மறுசீரமைப்பு உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் இலங்கையால் பூர்த்திசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இச்செயற்திட்டத்துக்கான சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதி குறித்த இறுதி அறிவிப்பு செவ்வாய்கக்ிழமை (21) வெளியாகவுள்ளது. இதுஇவ்வாறிருக்க கடந்த ஒருவாரகாலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி படிப்பயாக அதிகரித்துச்சென்றதுடன், மீண்டும் கடந்தவார இறுதியில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் படிப்படியாக அதிகரித்துச்செல்லுமெனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதனையொத்த கருத்தொன்றை வெளியிட்டிருந்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்ததன் பின்னர் வெளியகக்கடன்மறுசீரமைப்புச் செயன்முறையை ஆரம்பிக்கமுடியும் எனவும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 185 - 200 க்குள் பேணமுடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தளம்பல் நிலையில் காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இருப்பினும் தற்போது டொலர் நெருக்கடிக்குத் தீர்வுகாணப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் இலங்கை தொடர்பில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலோங்கும் என்றும், அதனூடாகப் பெருமளவான முதலீடுகளை ஈர்த்துக்கொள்ளமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/150994
    • அம்ரித்பால் சிங்: 'ஐஎஸ்ஐ தொடர்பு, வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை' என சந்தேகம் எழுப்பும் பஞ்சாப் போலீஸ் - இதுவரை நடந்தவை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, அம்ரித்பால் சிங் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பிடிப்பதற்கான நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தனர். இதுவரை, ‘வாரிஸ் பஞ்சாப் டி’ செயல்பாட்டாளர்கள் மீது ஆறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பஞ்சாப் காவல்துறை தலைமையக தலைவர் (ஐ.ஜி) சுக்செயின் சிங் கில், தல்ஜித் கால்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் புக்கன்வாலா, பக்வந்த் சிங், அமிர்த் பாலின் மாமா ஹரிஜீத் சிங் ஆகியோர் அசாமின் திப்ருகார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஹர்ஜீத் சிங் என்பவர் அசாமுக்கு செல்லும் வழியில் இருப்பதாகவும் கூறினார். போலீஸாரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டுள்ள தல்ஜித் சிங் கால்சி, அமிரித்பால் சிங்குக்கு நெருக்கமானவர் மற்றும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புக்கு நிதி வழங்குபவர்.   அம்ரித்பால் சிங்கின் மாமா ஹர்ஜீத் சிங், ஓட்டுநர் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸிடம் சரண் அடைந்தனர். ஜலந்திரின் ஷால்கோட்டில் மார்ச் 19-20ஆம் தேதி இரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று ஜலந்தர் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஸ்வரன்தீப் சிங் கூறுகிறார். ஹர்ஜீத் சிங் துபையில் தொழில்முறை டிரான்ஸ்போர்ட்டர் தொழிலை செய்து வருகிறார். மேலும், அம்ரித்பால் சிங் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆடம்பர சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். அந்த கார், ஹர்ஜீத் சிங் வசம் இருந்துள்ளது. இந்த ஐந்து பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று கூறிய அவர், பஞ்சாப் அமைதியான மாநிலம் என்றும், பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதுவரை கைதானவர்கள் எத்தனை பேர்? அம்ரிபால் சிங் தொடர்புடைய வன்முறை விவகாரத்தில் இதுவரை 114 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் வன்முறை நடந்த முதல் நாளிலேயே 78 பேரை போலீஸார் பிடித்தனர். இரண்டாம் நாளில் 34 பேரும் மூன்றாம் நாளில் 2 பேரும் பிடிபட்டனர். அனைவரும் மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள் என்று காவல்துறை ஐ.ஜி கில் தெரிவித்தார். "இந்த வழக்கில் வெளிநாட்டு நிதி மற்றும் ஐஎஸ்ஐ தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்," என்கிறார் ஐ.ஜி கில். அம்ரித்பால் சிங் விவகாரத்தில் இதுவரை நாம் அறிந்தவை மற்றும் பதிலளிக்கப்படாத கேள்விகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:- “நாங்கள் ஏன் காலிஸ்தான் கோரிக்கையை முன் வைக்கிறோம்?” – அம்ரித்பால் சிங் நேர்காணல்5 மார்ச் 2023 'நான் இந்தியன் இல்லை' - இந்தியாவுக்கு அச்சத்தை விளைவிக்கும் இந்த மத போதகர் யார்?1 மார்ச் 2023 அம்ரித்பால் சிங்: யார் இந்த மத போதகர்? திடீரென இவர் பிரபலம் அடைந்தது எப்படி?2 மார்ச் 2023 கடந்த சில நாட்களில் என்ன நடந்தது? அம்ரித்பால் சிங் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் போலீஸ் ஐ.ஜி சுக்செயின் சிங் கில் தெரிவித்தார். பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, சனிக்கிழமை பிற்பகல் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஷாகோட்-மால்சியன் சாலையில் 'வாரிஸ் பஞ்சாப் டி' (WPD) இன் செயல்பாட்டாளர்கள் ஏழு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மாநில அளவிலான நடவடிக்கையின் போது இதுவரை ஒரு '.315' போர் ரைபிள், ஏழு 12 போர் ரைபிள்கள், ஒரு ரிவால்வர் மற்றும் 373 லைவ் கார்ட்ரிட்ஜ்கள் (பயன்படுத்தப்படாத தோட்டா பேழைகள்) உட்பட 9 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஜலந்தர் போலீசார் உரிமை கோரப்படாத ஆடம்பர சொகுசு வாகனம் ஒன்றையும் மீட்டுள்ளனர். இந்த வாகனத்தை அம்ரித்பால் சிங் தப்பியோட பயன்படுத்தியதாக போலீசார் கூறுகின்றனர். கைவிடப்பட்ட வாகனத்தில் இருந்து .315 போர்த்துப்பாக்கி, 57 தோட்டாக்கள், வாள் மற்றும் வாக்கி-டாக்கி பெட்டி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு தோட்டாக்களையும் மீட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பஞ்சாபில் போராட்டங்கள் பட மூலாதாரம்,ANI பஞ்சாபில், அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக குவாமி இன்சாஃப் மோர்ச்சாவின் சில செயல்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மொஹாலியில் உள்ள விமான நிலைய சாலையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அந்த இடத்தில் 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உள்ளனர். இதுவரை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்திற்கு செல்லும் சாலையின் ஒரு பகுதி போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், கர்னாலில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் ஹரியாணா சீக்கியர்களை மார்ச் 21ஆம் தேதி கர்னாலில் ஒன்றுகூடி அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக சண்டீகர் மற்றும் பஞ்சாபின் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மூன்றாவது நாளாக காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இராக்கில் சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் - இருபது வருடங்களுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏஜென்சி மோசடி: கனடாவாழ் இந்தியர்கள் பலரது எதிர்காலம் கேள்விக்குரியதாகிறதா?5 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்மா லக்ஷ்மிக்கு சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டு5 மணி நேரங்களுக்கு முன்னர் பஞ்சாபில் இப்போது நிலைமை என்ன? அம்ரித்பால் சிங் விவகாரம் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புடன் தொடர்புடைய இமான் சிங் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்ரித்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது. பதற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாநில உள்துறை செல்பேசி இணைய சேவையை சனிக்கிழமை முதல் இடைநிறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடு மார்ச் 21ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை தொடரும். விடை தெரியாத கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES அம்ரித்பால் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் கூறி வருகின்றனர். சனிக்கிழமையன்று, அம்ரித்பால் சிங் ஷாகோட்டின் குருத்வாரா சாஹிப்பில் இருப்பதாக சில ஊடக தகவல்கள் வந்தன. ஆனால், அன்று மாலையே அவர் தப்பியோடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அம்ரித்பால் சிங்கைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அம்ரித்பால் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அம்ரித்பால் சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை எவ்வளவு காலம் தொடரும் என்பதை பஞ்சாப் போலீசார் தெரிவிக்கவில்லை. பஞ்சாப் போலீசார் மத வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக கிராமங்களில் உள்ள குருத்வாராக்கள் முன்பு நிறுத்தப்பட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது எந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஜலந்தர் காவல்துறையின் கூற்றுப்படி, வாரிஸ் பஞ்சாப் டி செயல்பாட்டாளர்கள் மீது சமூக அமைதியின்மையை உருவாக்குதல், உள்நோக்கத்துடன் கொலை செய்தல், காவல்துறை அதிகாரிகளைத் தாக்குதல் மற்றும் அரசு ஊழியர்கள் சட்டபூர்வமாக தங்களுடைய கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. அஜ்னாலா காவல் நிலையம் மீதான தாக்குதலுக்காக 'வாரிஸ் பஞ்சாப் டி' செயல்பாட்டாளர்கள் மீது 24-02-2023 தேதியிட்ட வழக்கு எண் 39 பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES உள்ளூர் மற்றும் தேசிய ஊடகங்கள் பஞ்சாபில் நடக்கும் முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமையன்று, அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டு அசாமில் உள்ள திப்ருகாருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலையிலவ் சில ஊடக நிறுவனங்கள் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதாகக் கூறி, அது தொடர்பான தகவல்களை அவற்றின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தன. பிறகு அவற்றை நீக்கின. பஞ்சாப் காவல்துறை, அம்ரித்பால் சிங் கைது தொடர்பான செய்தி பொய்யானது என்றும் மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2vp4yrppzo
    • பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன் அண்ணா, வாழ்க வளத்துடன்.
    • இணையவனுக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.