Jump to content

மெய்தீண்டாக் காதல்........!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                    மெய்தீண்டாக் காதல் டூயட் பாடல் .

 

ஆண் :  அன்பே .....!

பெண் : அத்தான்....!

மௌனம் 

அவன் மடியில் சாய்ந்து சொல்லுங்கள் அத்தான்.....!

ஆண் : நிலவை மூடி அசையும் முகிலாடையை 

               விலக்கிடவே கரம் தயங்கிடுதே 

பெண்: நாணம் கொண்ட நானும் 

               நாணம் கெட்டு நிக்கிறேன் 

                மனசாலும் உன் செயலை தடுக்கலையே 

ஆண் : பாட்டன் வழி வந்த பழக்கதோசம் 

              பேரன் என்னிடமும் நிறைந்திடுதே 

பெண் : பூட்டி வழி வந்த பண்பாட்டை -- முழுதாய் 

               என் உடலும் காத்திடுதே 

இருவரும்: மலர்மாலை சூடி மங்கலநான் சுமந்து 

                     மங்கியதோர் நிலவினில் 

                     மறைபொருள் யாவும் தேடியே 

                     மகிழ்ந்தே உறவாடலாம்

                      இருவரும் இணைந்தே இன்பம் காணலாம்......!

 

யாழ் அகவை 25 க்காக 

ஆக்கம் சுவி ......!

 

 

 

Edited by suvy
அகவை திருத்தம்......!
  • Like 11
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தான கவிதை அண்ணை.

மெய்நிகர் காதல் மலிந்து விட்ட உலகில் மெய்தீண்டா காதல் கவிதையிலாவது வாழ்கிறதே.

சிறப்பு🙏🏾.

1 hour ago, suvy said:

                                                    மெய்தீண்டாக் காதல் டூயட் பாடல் .

 

ஆண் :  அன்பே .....!

பெண் : அத்தான்....!

மௌனம் 

அவன் மடியில் சாய்ந்து சொல்லுங்கள் அத்தான்.....!

ஆண் : நிலவை மூடி அசையும் முகிலாடையை 

               விலக்கிடவே கரம் தயங்கிடுதே 

பெண்: நாணம் கொண்ட நானும் 

               நாணம் கெட்டு நிக்கிறேன் 

                மனசாலும் உன் செயலை தடுக்கலையே 

ஆண் : பாட்டன் வழி வந்த பழக்கதோசம் 

              பேரன் என்னிடமும் நிறைந்திடுதே 

பெண் : பூட்டி வழி வந்த பண்பாட்டை -- முழுதாய் 

               என் உடலும் காத்திடுதே 

இருவரும்: மலர்மாலை சூடி மங்கலநான் சுமந்து 

                     மங்கியதோர் நிலவினில் 

                     மறைபொருள் யாவும் தேடியே 

                     மகிழ்ந்தே உறவாடலாம்

                      இருவரும் இணைந்தே இன்பம் காணலாம்......!

 

யாழ் அக்காவை 25 க்காக 

ஆக்கம் சுவி ......!

 

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..! அதையும் தாண்டிப் புனிதமானது!😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மடியில் சாய்ந்து சொல்லுங்கள் அத்தான்.....!

 

மடியில் சாய விட்டா போதுமே

மிகுதியை மாப்பிள பார்த்துக்குவார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு அண்ணா.

அது சரி யார் யாழ் அக்கா 🤣

ஒரு நிமிடம் பயப்படவைத்து விட்டீர்கள் அண்ணா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்…  மெய்தீண்டாக் காதல் பாடல் அருமை.
இந்தப் பாடலில் வரும் நாயகனும், நாயககியும் யார் என்று ஆவல். 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

மெய்தீண்டாக் காதல் டூயட் பாடல் .

தீண்டாக் காதல் பல வருடங்கள் நினைவில் நில்லாத “தீண்டாய் மெய் தீண்டாய்” பாடலை சுண்டிவரச் செய்துவிட்டது!

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

6 hours ago, suvy said:

                                             

பெண்: நாணம் கொண்ட நானும் 

நாணம் கெட்டு நிக்கிறேன் 

 மனசாலும் உன் செயலை தடுக்கலையே 

பெண் : பூட்டி வழி வந்த பண்பாட்டை -- முழுதாய் 

என் உடலும் காத்திடுதே         

 

....ஆனாலும் இந்த வரிகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதே...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

ஆண் : பாட்டன் வழி வந்த பழக்கதோசம் 

              பேரன் என்னிடமும் நிறைந்திடுதே 

பெண் : பூட்டி வழி வந்த பண்பாட்டை -- முழுதாய் 

               என் உடலும் காத்திடுதே 

 தலைவா!  வாவ்.....அருமை.:hundred_points:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

கருத்தான கவிதை அண்ணை.

மெய்நிகர் காதல் மலிந்து விட்ட உலகில் மெய்தீண்டா காதல் கவிதையிலாவது வாழ்கிறதே.

சிறப்பு🙏🏾.

 

காதலின் சிறப்பே அதுதானே....... கடுகளவு தவறினும் அது காமத்தில் சேர்ந்து விடும்........!  😁

நன்றி கோஷான்-சே வருகைக்கும் கருத்துக்கும்......!

15 hours ago, Justin said:

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல..! அதையும் தாண்டிப் புனிதமானது!😎

உண்மைதான் justin 90 க்கு முற்பட்ட காதல் பெரும்பாலும் புனிதமானதுதான்.......! 😁

நன்றி justin வருகைக்கும் கருத்துக்கும்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை, சுவியர்...!

ஏதோ முக்கியமான விசயம் சொல்ல வாறியள் எண்டு மட்டும் விளங்குது..!😄

அது என்ன எண்டு மட்டும் பிடிபடுகுது இல்லை...! தொடரட்டும் உங்கள் களப்பணி....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 17:07, ஈழப்பிரியன் said:

மடியில் சாய விட்டா போதுமே

மிகுதியை மாப்பிள பார்த்துக்குவார்.

அவையெல்லாம் தன்னிச்சையாக நடப்பது ........!  😍

On 7/2/2023 at 17:10, முதல்வன் said:

நல்லா இருக்கு அண்ணா.

அது சரி யார் யாழ் அக்கா 🤣

ஒரு நிமிடம் பயப்படவைத்து விட்டீர்கள் அண்ணா

அகவை அக்காவாகி விட்டது .......திருத்தியாச்சுது...... நன்றி முதல்வன்.......!  👍

On 7/2/2023 at 20:22, தமிழ் சிறி said:

சுவியர்…  மெய்தீண்டாக் காதல் பாடல் அருமை.
இந்தப் பாடலில் வரும் நாயகனும், நாயககியும் யார் என்று ஆவல். 😁

வேறுயார் உங்களது ஜெர்மன் poy யும் girl லும்தான்......அவர்கள்தான் ஒரு முத்தம்கூட குடுக்கவில்லை  தெரியாதா......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியிண்ணை

காதல்  கசக்காது  ?

ஆனால் இன்று  மெய்  தீண்டாக்காதல்  ஏது?❤️

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 20:54, கிருபன் said:

தீண்டாக் காதல் பல வருடங்கள் நினைவில் நில்லாத “தீண்டாய் மெய் தீண்டாய்” பாடலை சுண்டிவரச் செய்துவிட்டது!

 

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன்.......இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.......அரவிந்தசாமியின் காதலில் ஒரு கம்பீரம் இருக்கும்......ar ரகுமான் & வைரமுத்து சொல்லி வேல இல்ல.....!  😍

 

On 7/2/2023 at 21:57, நிழலி said:

....ஆனாலும் இந்த வரிகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதே...

 அவ மனசால தடுக்கேல்ல ......ஆனால் உடுக்கை இழந்தவன் கை போல தன்னிச்சையாக அவள் உடல் காக்கிறது என்றும் கொள்ளலாம் நிழலி.....உங்களின் பார்வையின் கூர்மை சூப்பர்.....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிழலி.......!  👍

பக்கத்தில் "தையல்கடை" திறந்திருக்கு ஒரு நடை எட்டிப் பார்க்கிறது.....!  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 காதல் இன்னும் தொடருமா ?  😃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிலாமதி said:

 காதல் இன்னும் தொடருமா ?  😃

இது ஒரு டூயட் பாடல்தானே சகோதரி.......இதுக்கு மேலே போனால் இயக்குனர் வெட்டுவேன் என்கிறார்.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ போங்கோ.நீங்கள் பேய்க்காய்.😗

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 08:55, suvy said:

 

ஆண் :  அன்பே .....!

பெண் : அத்தான்....!

 

ஐயா, உங்கள் காதல் அழகு.  இப்போது ஆண், பெண் இருவரும் ஊரில் பெரும்பாலும் பேபி பேபி என்று தான் அழைக்கின்றார்கள். காதால் கேட்டேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மெய் தீண்டாக்காதலை வாசித்து மெய் தீண்டியதால் இவ்விடத்தில் மீளவும்.... 90 இற்கு முந்திய காதல்கள் பலரிடம் பசுமையாக இருப்பதற்குக் காரணமே மெய் தீண்டாததினால்தான் சுவியார் மெய் தீண்டப்பட்டதால் நான் அறிந்த நண்பர்கள்  பலரின் தேடல்கள் வெறுமையாகிவிட்டன. எழுத்துக்களில் நல்ல மெருகேற்றம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வல்வை சகாறா said:

மெய் தீண்டாக்காதலை வாசித்து மெய் தீண்டியதால் இவ்விடத்தில் மீளவும்.... 90 இற்கு முந்திய காதல்கள் பலரிடம் பசுமையாக இருப்பதற்குக் காரணமே மெய் தீண்டாததினால்தான் சுவியார் மெய் தீண்டப்பட்டதால் நான் அறிந்த நண்பர்கள்  பலரின் தேடல்கள் வெறுமையாகிவிட்டன. எழுத்துக்களில் நல்ல மெருகேற்றம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி சகோதரி.......!   😁

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.