Jump to content

வடபகுதி முஸ்லிம்களுக்கு முறையான வகையில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்படவில்லை - பள்ளிவாசல் பிரதிநிதிகள் எடுத்துரைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.நியூட்டன்)

வடபகுதி முஸ்லிம்களுக்கு முறையான வகையில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்படவில்லை சர்வமத தலைவர்களிடம் பள்ளிவாசல் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.

ஸம் ஸம் பவுண்டேஷன் மற்றும் தர்ம சக்தி அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்யும் சர்வமத தலைவர்களின் வடக்கு மற்றும் தெற்கு மத நல்லிணக்க உரையாடல் நிகழ்ச்சி திட்டத்தின் ஒருபகுதியாக சர்வமதத் தலைவர்களது வடக்கிற்கான விஜயம் இன்று செவ்வாய்க்கிழமை  இடம் பெற்றது.

20230207_133339.jpg

இச் சந்திப்பில் அமரபுர,ராமாஞ்சியம் பெளத்த பீடங்களைச் சேர்ந்த பெளத்த மதகுருக்கள், இந்து மத குருக்கள், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மெளலவிகள், கிறிஸ்தவ அருட்தந்தைகள் என சுமார் 40 பேர் கொண்ட தூதுக் குழுவினர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள பச்சைபள்ளிவாசலில் இடம்பெற்ற சந்திப்பிலே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது இதில் கலந்து கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்,

1990 ஆண்டு முஸ்லிம்களின் வெளியேற்றம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து 2002 ஆம் தொடக்கம் மிளக்குடியமரத் தொடங்கினார்கள். இவ்வாறு மீளக் டியமர்ந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு முறையான மீள் குடியேற்ற உதவிகள் கிடைக்கவில்லை நாம் இது தொடர்பாக மிள் குடியேற்ற அமைச்சர் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தி கலந்துரையாடியிருந்தோம் குறிப்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ ஆகியேரிடமும் கலந்துரையாடி மீள் குடியேற்றத்தை இலகுபடுத்துமாறு கோரியிருந்தோம்.

20230207_132433.jpg

எனினும் எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை 1990 ஆம் ஆண்டு வெளியேறியபோது 3,500 குடும்பங்களாக இருந்தோம்  தற்போது 15 ஆயிரம் குடும்பங்களாக விரிவடைந்துள்ளோம் அவ்வாறாயின் எமது மீள் குடியேற்றத்திற்கு என்ன நடந்த்து தற்போது சுமார் ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ள போதும் இதுவரை சுமார்  250 குடும்பங்களுக்கே வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது அவ்வாறாயின் முஸ்லிம் மீள்ள்குடியேற்றத்திற்கு என்ன நடந்த்து சுமார் 13 ஆண்டுகளாக இடம்பெற்ற மீள்குடியேற்றத்தில் 250 வீடுகள் வழங்கப்பட்டால் எனையவர்களுக்கு எத்தனைகாலம் எடுக்கும் என்பதே எமது கேள்வியாகவுள்ளது எனவே தெற்கில் இருந்து எமது பிரச்சினைகளை ஆராய விஐயம் மேற்கொண்டுள்ள சர்வமத தலைவர்களான நிங்கள் எமக்கு எங்களுடைய வீட்டுதிட்ட ம் தொடர்பில்உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள் இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும்  வழங்கிவைத்தார்கள்.

20230207_134208.jpg

இந்த சந்திப்பில் யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம், பச்சை பள்ளிவாசல் மௌலவி, பச்சை பள்ளிவாசல் தலைவர் எம்.மூபின்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் ஆர்.கே. சுவர்கான்மற்றும் சமூக செயல்பாட்டாளர் அம்ஐத்கான்,பள்ளிநிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்துவதன் மூலம் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பயணத்தில் ஸம் ஸம் நிறுவனம் மற்றும் தர்மசக்தி அமைப்பும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதி முஸ்லிம்களுக்கு முறையான வகையில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்படவில்லை - பள்ளிவாசல் பிரதிநிதிகள் எடுத்துரைப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 3,500 குடும்பங்களாக இருந்தோம்  தற்போது 15 ஆயிரம் குடும்பங்களாக விரிவடைந்துள்ளோம் அவ்வாறாயின் எமது மீள் குடியேற்றத்திற்கு என்ன நடந்த்து தற்போது சுமார் ஆயிரம் குடும்பங்க

சபாஸ்...30 வருசத்தில் 15 ஆயிரம்..இன்னும் 10 வருசத்தில் 30 ஆயிரம்.. ஒரு குடும்பம்  5 அங்கத்தவர்  ..ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம்..  இன்னும் 5 வருடத்தில்.. 5 லட்சம்..அப்புறம் யாழ்ப்பாணம் சின்ன காத்தான் குடி...அதாவது யாழ்க்குடி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சொந்தக்காணியை மீட்க முடியவில்லை இராணுவம் விவசாயம் செய்யுது, இதில  இவை வேற புதுக்கணக்கோட, இடைவெளியில் மடம் கட்ட நிக்கினம். வடக்கும் கிழக்கும் இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என எச்சரிப்பவர்களிடமும் ஆலோசனை கேட்கலாமெல்லோ? 

  • Like 1
Link to comment
Share on other sites

வடக்கும் கிழக்கும் இணைய கூடாது என்பதும் இவர்கள் தான்.
அலி சப்ரி ஜெனிவா வரை சென்று கூவினவர். அவரிடம் உதவியை கேட்கலாமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2500 குடும்பம் இருக்கையில் உந்தப் பெரிய மசூதி யாழ் நகரில்....15000 குடும்பம் வந்தால் எவ்வளவு பெரிய மசூதி கட்டுவியள்... ரவுன் முழுக்க பேரீச்சை மரமும் நடுவியள்...வவுனியாவில்கூட உந்தப் பெரிய மசூதியைரவுனில் கட்டி வைத்திருக்கினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தம் தனது மதத்தை முன்னிலைப்படுத்தி தன்னை ஒரு இனம் என்கிறது.
முஸ்லீம்களும் தன் மதத்தை முன்னிலைப்படுத்தி தன்னை ஒரு இனம் என்கிறது.
ஆனால் சைவர்களோ இந்துக்களோ அல்லது கிறிஸ்தவ தமிழர்களோ தமிழினம் தமிழினம் என போராடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.