Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிராக பிக்குகளினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர தேசியவாத பௌத்த மதகுருமார்களின் குழுவினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெளத்த தேரர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற இந்த பேரணியானது நாடாளுமன்ற வீதியை செல்லும்போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த போராட்டத்தின் போது 13வது அரசியலமைப்பு திருத்த பிரதியை பிக்குக்கள் தீ வைத்து எரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

 

https://athavannews.com/2023/1323512

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா தொடங்கீட்டாங்கள் பிறகென்ன இனி மகிந்த கோத்தா ரணில் காட்டில் அடைமழை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வாதவூரான் said:

இந்தா தொடங்கீட்டாங்கள் பிறகென்ன இனி மகிந்த கோத்தா ரணில் காட்டில் அடைமழை தான்

உருவாக்கிவிட்டு காத்திருக்கினம் நனைய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை செல்லங்கள், எங்க கை விட்டு விடுவாங்களோ எண்டு கவலைப்பட்டேன். இந்தா வந்துடாங்கள்.

தெய்வங்கள் மாதிரி, வந்து, உலகத்துக்கு, சிங்களத்தினை புரிய வைக்கிறார்கள். 🐕

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13ஐ தீயிட்டு கொளுத்தி பௌத்த தேரர்கள் போராட்டம் நீதிமன்ற தடையுத்தரவை மீறி பாராளுமன்ற வீதிக்குள் பிரவேசிக்க முற்பட்டதால் அமைதியற்ற நிலை

By T. SARANYA

08 FEB, 2023 | 04:03 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்பட்டமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை கொழும்பில் பௌத்த பிக்குகளால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பௌத்த தேரர்களால் 13ஆவது திருத்தத்தின் பிரதியொன்றும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது.

கடந்த ஜனவரி 26ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது 'தனிப்பட்ட பிரேரணையூடாக 13ஐ நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. ' என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அத்தோடு கடந்த 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு அற்றிய விசேட உரையின் போதும் ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வு வழங்கப்படும் என்றும் , எனினும் நாடு பிளவுபட ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும்' குறிப்பிட்டிருந்தார்.

_MG_8695.jpg

இந்நிலையிலேயே பௌத்த பிக்குகளால் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுற கோட்டை பேரகும்பா பிரிவெனாவில் விசேட சங்க மாநாடொன்றும் இடம்பெற்றது. அங்கு ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் பாராளுமன்ற வீதியின் ஊடாக பொல்துவ சந்தியைச் சென்றடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு நுழைய முயற்சித்தனர். இதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட போது அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

அமைதியான போராட்டத்தில் ஈடுபடுவதாக பௌத்த பிக்குகள் அறிவித்திருந்த போதிலும் , குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு இடையூறு விளைக்கும் வகையில் அவர்களை அச்சுறுத்தல் அத்துமீறிச் செல்ல முற்பட்டமையின் காரணமாகவே அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதிகளில் நுழைவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் தடை விதித்திருந்ததன் பின்னணியிலேயே அவர் இவ்வாறு அத்துமீறிச் செல்ல முயற்சித்தனர். எவ்வாறிருப்பினும் இவர்களை பாராளுமன்ற சுற்று வட்டத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.

_MG_8920.jpg

இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் பொல்துவ சந்தியில் வீதியில் அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக குறித்த பகுதியின் ஊடாக போக்குவரத்துக்கள் ஓரிரு மணித்தியாலங்கள் முற்றாக முடங்கின. இதனால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர். அத்தோடு இதன் போது மஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி தம்மரத்ன தேரரினால் 13ஆவது அரசியலமைப்பின் பிரதியொன்று தீயிட்டு கொளுத்தப்பட்டது. 'இனியொரு போதும் இதனை நடைமுறைப்படுத்த முடியாது.' என்று கோஷமெழுப்பியவாறு அவர் அந்த பிரதியை எரித்தார்.

_MG_8771.jpg

இதேவேளை, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பின் காமந்த துஷார என்ற நபர் ஆகியோர் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்ட போதிலும் , அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமையினால் பின்னர் பொலிஸ் பொறுப்பிலெடுக்கப்பட்டனர்.

மேலும் 13ஆம் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜகிரிய - ஜயநேகராமயவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

_MG_9154.jpg

(படப்பிடிப்பு. ஜே.சுஜீவ குமார்)

https://www.virakesari.lk/article/147719

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை... பட்டினி கிடந்தாலும், பிரிட்டிஷ்காரன் பிடிச்சுத்தந்த தமிழர் நாட்டினை விட மாட்டோம்.

பின்ன பண்ணிப்பாருங்கோவன்.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பட்டும் அறிவில்லா ஜனங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நெருப்பு வைக்கிற ஆட்களில், இடதுபக்கம், முன்னால நிக்கிறவர், எங்கண்ட மட்டக்கிளப்பு தூசண பிக்கர்.

ஓடி வந்து நிக்கிறார் சிங்கன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக போராட்டத்தில் கையாளும் தடியடி, தண்ணீர் பாய்ச்சலுக்கு என்ன நடந்தது? உலகம் பாக்கட்டும் பிக்குகளின் பயங்கர வாதமும், நாட்டின் பிச்சைத்தட்டு ஏந்தும் பாத்திரமும். உண்மையிலேயே பதின்மூன்றை நடைமுறைப்படுத்துபவர் அதை எதிர்க்கும், எரிக்கும் நாலை பிடிச்சு உள்ளுக்கை நாலு போட்டு விகாரைகளோடு வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் பயங்கரவாதத்தை என்று படிப்பித்தால் அல்லது காவியை களட்டிபோட்டு வந்து போராடுங்கள் என்று அழைத்தால் அடங்கும். மக்கள் இவர்களுக்கெதிராக வீதியில் இறங்கவேண்டும். நடக்கிற தள்ளு முள்ளில பிக்குகளின்ர காவியள் உரியப்போகுது, உள்ளுக்கை ஜொக்கா யொகா போட்டிருக்கிறாங்களோ தெரியலையே?    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 ம் திருத்தத்தை கொளுத்துவது என்பது நாட்டின் அரசியல் சட்டத்தையே தீயிட்டு கொளுத்துவதுக்கு சமன்  என்பது கூட தெரியாத ஜென்மங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழிவில காசு பாக்கிற கூட்டம், இதுக்கு பின்னாலும் ஏதும் திட்டமிருக்கும். ஏன் கடிதத்தை வாங்கும்போது கிழித்தெறிந்து எச்சரித்திருந்திருக்கலாம். மவுனம் சம்மதத்துக்கு அடையாளம். பசிலின்ர அரசியல் மீள் பிரவேசத்துக்கு அடிக்கல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

வழமையாக போராட்டத்தில் கையாளும் தடியடி, தண்ணீர் பாய்ச்சலுக்கு என்ன நடந்தது? உலகம் பாக்கட்டும் பிக்குகளின் பயங்கர வாதமும், நாட்டின் பிச்சைத்தட்டு ஏந்தும் பாத்திரமும். உண்மையிலேயே பதின்மூன்றை நடைமுறைப்படுத்துபவர் அதை எதிர்க்கும், எரிக்கும் நாலை பிடிச்சு உள்ளுக்கை நாலு போட்டு விகாரைகளோடு வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் பயங்கரவாதத்தை என்று படிப்பித்தால் அல்லது காவியை களட்டிபோட்டு வந்து போராடுங்கள் என்று அழைத்தால் அடங்கும். மக்கள் இவர்களுக்கெதிராக வீதியில் இறங்கவேண்டும். நடக்கிற தள்ளு முள்ளில பிக்குகளின்ர காவியள் உரியப்போகுது, உள்ளுக்கை ஜொக்கா யொகா போட்டிருக்கிறாங்களோ தெரியலையே?    

May be a cartoon

Link to comment
Share on other sites

இவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்.
உண்மையான அரசு எனில் பங்கெடுத்த பிக்குகளை உள்ளே தள்ளி இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்து புத்தமதம் எனும் அரக்கன்  விரட்டியடிக்கப்பட போவதை இந்தப்படம் கட்டியம் கூறுதா சிறியர்?

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கவிதையின் முக்கிய கரு “ அண்ணன் கூறிய” என்ற விடயத்தை  கூறவில்லை. கடைந்தெடுத்த பிற்போக்குதனத்துக்கு நியாயம் கற்பிக்கவே “அண்ணன் கூறிய” என்ற வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன,  என்பதை விளங்காத அளவுக்கு நாம் இல்லை.   அண்ணன் படையில் சேர்ந்த புலி வீராங்கனைகளையே  உங்களை போன்ற அதே பிற்போக்கு கண்ணோட்டத்துடன் விமர்சித்தவர்களும் உள்ளார்கள்.  விடுதலை புலிகள் இருந்திருந்தால் இந்த கவிதையை தீயிட்டு கொளுத்தியிருப்பார்கள்.  அவர்கள் இல்லாத இடைவெளியை பயன் படுத்தி சிலர் தமது பிற்போக்குத்தனத்திற்கு வலு சேர்க்க புலிகளை துணைக்கு இழுக்கின்றனர். 
    • நடராஜன் ரிட்டர்ன்ஸ்: 'அடங்காத காளையாக' வெளுத்த சஞ்சு சாம்சனை வீழ்த்தினார் பட மூலாதாரம்,BCCI 2 ஏப்ரல் 2023, 12:06 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரின் மூன்றாவது நாளான இன்று மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முதல் போட்டியில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக உள்ளார். ராஜஸ்தான் தரப்பில் ஜாஸ் பட்லரும் யஷஸ்வி ஜைஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரிலேயே பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்ட ஜைஸ்வால் தனது அணிக்கான முதல் பவுண்டரியை அடித்தார். புவனேஸ்வரும் பட்லரின் ஆட்டத்தைப் பரிசோதிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனால், இரண்டாவது ஓவரை ஃபஸல்ஹக் ஃபரூக்கி வீசியபோது, அவர் வீசிய பந்துகளைப் பறக்கவிட்டுக் கொண்டேயிருந்த ஜைஸ்வாலும் பட்லரும் அந்த ஒரு ஓவரில் மட்டும் 14 ரன்களை சேர்த்தனர்.     முதல் இரண்டு ஓவர்களில் மட்டுமே 20 ரன்களை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் கணக்கை இருவரும் அதிரடியாகத் தொடக்கி வைத்தனர். தொடர்ச்சியாக பட்லரும் ஜைஸ்வாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவர் பிளே முடிவில் 85 ரன்களை குவித்தனர். ஃபரூக்கி, புவனேஸ்வர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்துவீச்சில் முதல் நான்கு ஓவர்களில் 56 ரன்களை இருவரும் இணைந்து குவித்திருந்தனர். 5-வது ஓவரை வீச வந்த நடராஜனுக்கு முந்தைய மூன்று பேருக்கு கொடுத்ததைவிட கூடுதலான அதிர்ச்சியைக் கொடுத்தார் ஜாஸ் பட்லர். நடராஜன் தான் வீசிய ஒரே ஓவரில் 17 ரன்களைக் கொடுத்திருந்தார். பட்லர் 5வது ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை அடித்து நடராஜன் வீசிய பந்துகளை துவம்சம் செய்தார். ராஜஸ்தான் அணிக்காகக் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜாஸ் பட்லர் 22 பந்துகளில் அரை சதம் அடித்துக் கலக்கினார். ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜைஸ்வால் இருவரது கூட்டணி 85 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், பவர் பிளே இறுதியில் ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை, பலமான விக்கெட்டை ஃபரூக்கி வீழ்த்தி ஹைதராபாத் அணிக்குச் சிறிய ஆசுவாசத்தை வழங்கினார்.   ஜாஸ் பட்லர் ஃபரூக்கி பந்தில் அவுட்டாகி வெளியானதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ஆனால், அவரும் அதிரடியை தொடர்ந்தார். களமிறங்கியதில் இருந்தே விளாசத் தொடங்கினார். 10 ஓவர் முடிவில் அவர் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை அடித்து 13 பந்துகளில் 28 ரன்களை எடுத்திருந்தார். யஷஸ்வி ஜைஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, 8 பவுண்டரிகளை அடித்திருந்தார். 11வது ஓவர் முடிவில் அவர் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஒரு மொத்த போட்டியின் ஹைலைட்ஸை 10 ஓவர்களில் பார்த்தைப் போல், அதற்குள்ளாகவே ஹைதராபாத் வீரர்கள் 17 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசியிருந்தார்கள். ஜைஸ்வாலை தடுக்க முடியும் என்பதைப் போல் களத்தில் நிலைமை இருக்கவில்லை. இன்னொருபக்கம் சஞ்சுவும் விளாசுவதை நிறுத்துவதைப் போல் தெரியவில்லை. அவர் உம்ரான் பந்துவீச்சில் ஒரு பந்தைத் தூக்கி அடிக்கவே, பந்து வேலியைத் தாண்டிச் சென்றது. பத்தாவது ஓவர் முடிவில் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்திருந்தது. பட மூலாதாரம்,IPL/TWITTER நடராஜன், ஃபரூக்கி, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் என்று பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ராஜஸ்தானின் ரன் மழையை நிறுத்த பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனாலும் அதற்குப் பலன் கிடைப்பதைப் போல் தெரியவில்லை. ஜாஸ் பட்லரை போலவே ஜைஸ்வாலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே கேட்ச் அவுட்டானார். ஜைஸ்வால் 37 பந்துகளில் 54 ரன்களை எடுத்து அவுட்டானார். ஃபரூக்கி தனது நீண்ட நேர போராட்டத்திற்குப் பலனாக இரண்டாவது விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். ஆனால், அவரை உம்ரான் மாலிக் இரண்டே ரன்களோடு திருப்பி அனுப்பி ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டினார். அடுத்ததாக ரியான் பராக் களமிறங்கினார்.   ஆனாலும் மிக முக்கிய விக்கெட்டான சஞ்சு சாம்சன் தொடர்ந்து வெளுத்துக்கொண்டே இருந்தார். 14வது ஓவரில் அசுரத் தனமான சிக்ஸ் ஒன்றை விளாசினார். 15 ஓவர் இறுதியில் ராஜஸ்தான் மூன்று விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்திருந்தது. அடுத்தபடியாக 16வது ஓவரை வீச வந்த ரஷீத்தை பிரமாண்டமான சிக்ஸ் ஒன்றோடு சஞ்சு சாம்சன் வரவேற்றார். தொடக்க ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்லரும் யஷஸ்வி ஜைஸ்வாலும் சேர்ந்து இடி இடித்ததைப் போல் ஆடிவிட்டுச் சென்றனர். அவர்கள் கொடுத்துச் சென்ற ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்கிறார் சஞ்சு சாம்சன்.   ரன்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த எதிரணியைத் தடுக்க யார்க்கர் நடராஜன் உள்ளே நுழைந்தார். அவர் வந்தவுடனேயே ஒரு விக்கெட்டை எடுத்தார். ரியான் பராக் அவரது பந்தை எதிர்கொண்டபோது, ஃபரூக்கி அதை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அதற்கு முந்தைய ஓவரில் ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்ட ஃபரூக்கி, 17வது ஓவரில் நடராஜ் வீசி, பராக் அடித்த பந்தை அழகாக கேட்ச் பிடித்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார். ஆனால், 28 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் அடித்த சஞ்சு சாம்சன், 17வது ஓவரில் தொடர்ந்து யாராலும் அடக்காத முடியாத காளையாக ஆடிக் கொண்டிருந்தார். அந்தக் காளையை நான் அடக்குகிறேன் என்பதுபோல் பந்துவீசிய நடராஜன், வைட் யார்க்கராக வீசினார். அதை சிக்சரை குறிவைத்து சஞ்சு பறக்க விடவே, பவுண்டரி எல்லையின் நுனியில் நின்று கச்சிதமாக கேட்ச் பிடித்தார் அபிஷேக் ஷர்மா. ராஜஸ்தான் அணியின் ரன் ரேட், பவர் பிளேவின்போது 14.17 ரன் ரேட் இருந்தது. அதற்கு அடுத்ததாகவும் 7-15 ஓவர்களில் 8.33, 16-20 ஓவர்களில் 8.21 என்ற அளவில் வீரர்கள் சிறப்பாகக் கொண்டு சென்றனர். ராஜஸ்தான் வைத்த இலக்கு 16வது ஓவர் இறுதியில் ராஜஸ்தான் 3 விக்கெட் இழப்பில் 170 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் புவனேஸ்வர் குமார், நடராஜன் இருவரும் ரன்களைக் குறைக்க முயன்றார்கள். 20 ஓவர் முடிவில் களத்தில் அஸ்வின், ஹெட்மியர் இருவரும் அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்திருந்தது. https://www.bbc.com/tamil/articles/cld133kgn35o
    • இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் காவ் செஞ்ச‌ரி அடிச்சார் த‌மிழ் சிறி அண்ணா   நியுசிலாந் அக்குலாந் மைதான‌ம் சின்ன‌ மைதான‌ம்.............20ஓவ‌ர் ச‌ம‌ நிலையில் முடிவ‌து 50விளையாட்டில் இருக்கா அல்ல‌து இர‌ண்டு த‌ட‌வை...........இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டும் ச‌ம‌ நிலையில் முடிந்து சூப்ப‌ர் ஓவ‌ரில் இல‌ங்கை வெற்றி........................
    • தாங்கள் இந்தக் காலத்தில் வாழாதிருந்திக்கலாம்.. அல்லது பயந்து ஓடிஒளிந்திருக்கலாம். அதனால் அந்தக் காலத்தின் தன்மை புரியவில்லை. கவிதை கடந்த கால நிஜம்.. காணாமல் போன.. ஏக்கங்களை விதைக்கிறதையே புரியமுடியவில்லை.. தங்களால். 
    • @satan உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாம் எல்லாரும் வெயிட்டிங்🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.