Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!

மசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!

கடமை நேரத்தின் போது மசாஜ் நிலையத்திற்கு சென்று அங்கு பெண்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெலிகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் எந்தவித அறிவிப்பும் இன்றி பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறி மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2023/1323548

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கடமை நேரத்தின் போது மசாஜ் நிலையத்திற்கு சென்று அங்கு பெண்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஓசி மசாஜ் தானே? :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

ஓசி மசாஜ் தானே? :beaming_face_with_smiling_eyes:

உண்மையில் மசாஜ் தான் நடக்குதோ அல்லதும் வேறு சமாசாரங்கள் நடக்குதே என்று செக் பண்ண சாதாரண வாடிக்கையாளார் போல, போய்..... பழக்க தோசத்தில காசு தர ஏலாது எண்டு சொல்ல, அவர்கள் 115 மூலம் போலீசை அழைக்க மாட்டுப்பட்டுவிட்டார்கள். அவர்களது சொந்த, லோக்கல் பெலிகொட போலீசை அழைத்திருந்தால் தப்பியது மட்டுமல்லாமல், நடத்தியவர்கள், அங்கிருந்த பெண்கள் அனைவரும் உள்ள போயிருப்பார்கள். :beaming_face_with_smiling_eyes:

வந்த போலீசிடம் தாம் செக் பண்ண வந்தோம் என்று சொல்ல, இல்லை, இவர்கள் பணம் தராமல் பயமுறுத்திக்கிறார்கள் என்று சொல்ல.... கதை கந்தல்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஓசி மசாஜ் தானே? :beaming_face_with_smiling_eyes:

animiertes-massage-bild-0004.gif   animiertes-massage-bild-0001.gif  animiertes-massage-bild-0003.gif

போலிஸ்காரன் எப்பவாவது.... காசு குடுத்து பொருள் வாங்கி இருக்கிறானா? 😎
அவர்களுக்கு வாங்கித்தான் பழக்கம். இந்த மசாஜும் அதே மாதிரித்தான். 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-massage-bild-0004.gif   animiertes-massage-bild-0001.gif  animiertes-massage-bild-0003.gif

போலிஸ்காரன் எப்பவாவது.... காசு குடுத்து பொருள் வாங்கி இருக்கிறானா? 😎
அவர்களுக்கு வாங்கித்தான் பழக்கம். இந்த மசாஜும் அதே மாதிரித்தான். 🤣

பொலிஸ்காரன் தேய்த்து போலீஸ்காரன். ஆகி  விட்டது…🙏… இன்னும் தேய்த்து பால்காரன்.  ஆகிவிடும் 🤣😂 பால்காரனுக்கு.   அங்கே என்ன வேலை?.  டிஸ்கி....பொழுதுபோகவில்லை.   சும்மாவே பகிடிக்கு......ஆமா பிரசர். குளிசைகள்  கைவசம் உண்டா  ?. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

பொலிஸ்காரன் தேய்த்து போலீஸ்காரன். ஆகி  விட்டது…🙏… இன்னும் தேய்த்து பால்காரன்.  ஆகிவிடும் 🤣😂 பால்காரனுக்கு.   அங்கே என்ன வேலை?.  டிஸ்கி....பொழுதுபோகவில்லை.   சும்மாவே பகிடிக்கு......ஆமா பிரசர். குளிசைகள்  கைவசம் உண்டா  ?. 

யாழ். களத்தில் சேர்ந்த நாளில் இருந்து,
உங்களைப் போல ஆட்களுக்காக, பிரசர் குளிசை போட ஆரம்பித்து விட்டேன்.  😂 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

பொலிஸ்காரன் தேய்த்து போலீஸ்காரன். ஆகி  விட்டது

தமிழ் நாட்டில் எண்ணை மசாஜை மாலிஷ் (அரபிக்?) என்பார்கள்.

பொலிஸ்…மாலிஷ் போய்…அங்க இழுத்த இழுவையில்…போலீஸ் ஆகீட்டு🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

யாழ். களத்தில் சேர்ந்த நாளில் இருந்து,
உங்களைப் போல ஆட்களுக்காக, பிரசர் குளிசை போட ஆரம்பித்து விட்டேன்.  😂 🤣

நான் விட்டு இருந்த தண்ணியை திருப்பியும் அடிக்க வெளிக்கிட்டது கந்தையர்ரை சில்லெடுத்த நோடாளங்களாலை தான்.....:rolling_on_the_floor_laughing:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2023 at 23:38, குமாரசாமி said:

நான் விட்டு இருந்த தண்ணியை திருப்பியும் அடிக்க வெளிக்கிட்டது கந்தையர்ரை சில்லெடுத்த நோடாளங்களாலை தான்.....:rolling_on_the_floor_laughing:

நீங்கள் எப்போது தண்ணியை விட்டுயிருந்தீர்கள்?.  மீண்டும் எப்போது அடிக்க தொடங்கினீர்கள் ? இவையெல்லாம் எனக்கு புதிய செய்தி மட்டுமல்லாமல் நம்பவும் முடியவில்லை  .....எப்படியிருந்தாலும் நீங்கள் தண்ணியடிப்பது வரவேற்கவேண்டியவிடயம்.   மிகவும் மகிழ்கிறேன் தொடர்ந்தும் குடியுங்கள்.  ஒரே விஸ்கி குடியாது. வெவ்வேறு விஸ்கியாக குடியுங்கள 🤣🤣. பல நாட்டு தாயரிப்புக்களையும்   சுவைத்து குடியுங்கள்.  🤪 வாழ்க குமாரசாமியண்ணை   வளர்க அவரது குடிப்பழக்கம். 🙏

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.