Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் -பசில்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் -பசில்

By RAJEEBAN

08 FEB, 2023 | 04:36 PM
image

இரட்டை பிரஜாவுரிமை தனது அரசியல் எதிர்காலத்திற்கு நடவடிக்கைகளிற்கு தடையாகயிருந்தால்  அமெரிக்க பிரஜாவுரிமையை துறக்க தயார் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

நான் வெற்றிபெறவேண்டுமா அல்லது தோல்வியடையவேண்டுமா என்பதை இந்த நாட்டின் மக்கள் தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

6.9 மில்லியன் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என குறிப்பிட்டுள்ள அவர் அரகலய காரணமாக வீட்டிலிருந்து நாங்கள் வெளியே காலடி எடுத்துவைக்க முடியாத நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ரணில்விக்கிரமசிங்க இந்த நிலைமைய மாற்றினார் எரிபொருளுக்கான வரிசை உட்பட பல விடயங்களிற்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வை காணமுடிந்தது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது நாங்கள் எந்த சமூக பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை  இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணக்கூடிய தனிநபர் என நாங்கள்  நம்பினோம் அவர் அது சரியானது என நிரூபித்துள்ளார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/147736

Link to comment
Share on other sites

47 minutes ago, ஏராளன் said:

தற்போது நாங்கள் எந்த சமூக பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை  இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணக்கூடிய தனிநபர் என நாங்கள்  நம்பினோம் அவர் அது சரியானது என நிரூபித்துள்ளார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடனேறுவது காகத்துக்கு தெரியவில்லை என்றால் எவ்வளவு  நாட்டில் (மக்களில்) அக்கறை உள்ளவர்  என்பது தெரிகிறது. இதற்குள் அமெரிக்க பிரஜா உரிமையை விடப்போறாராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பதவி ஆசை விட்டுப்போகவில்லை. யுத்த வெற்றியை முதலீடாக்கி பிழைச்ச காலம் மலையேறிவிட்டது. மகிந்த கோத்தாவோடு தடைப்பட்டியலில் சேராமல் இருக்க வழிபார்ப்பதே நல்லம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை நம்பி, புருசனை கைவிட்ட கதையாக இருக்கப் போகுது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

6.9 மில்லியன் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என குறிப்பிட்டுள்ள அவர் அரகலய காரணமாக வீட்டிலிருந்து நாங்கள் வெளியே காலடி எடுத்துவைக்க முடியாத நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தும் ஆசை விடவில்லை, ஏழை மக்களின் முதுகில் சவாரி செய்து பழகிவிட்டது இவர்களுக்கு, அதிலிருந்து இறங்கி சொந்தக்காலில் நடக்க மனமில்லை.

2 hours ago, ஏராளன் said:

மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார்

இவ்வளவு காலமும் செய்தது போதும் வழி விடுங்கோ. இனி அமெரிக்க பிரஜா உரிமை இருந்து என்ன? இல்லாமல் என்ன? இலங்கையில் கொள்ளை அடிச்ச பணத்தில் அமெரிக்க சுகபோகம். இனிமேல் முதுகு வளைந்தாற்தான் சோறு. அதுக்கு நாட்டிலே இருந்து பந்தா காட்டலாம் இப்போதைக்கு. எதிர்காலம் எப்படியோ? நீங்கள் நாட்டில தான் இருக்க வேணும்  விதைச்சதை அறுக்க. இல்லாட்டி  பிளேன் பிடிச்செல்லே வரவேணும், அதுவும் எதிர்காலத்தில் சாத்தியமாகுமா தெரியாது?

2 hours ago, ஏராளன் said:

அரகலய காரணமாக வீட்டிலிருந்து நாங்கள் வெளியே காலடி எடுத்துவைக்க முடியாத நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்

அது சரி போன தேர்தலில் எங்களை விரட்டிவிட்டு மீண்டும் ஏன் தெரித்தெடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டவர் அண்ணர் விரட்டிய பின் இவர் ஏன் வருகிறார்?

2 hours ago, ஏராளன் said:

எனினும் ரணில்விக்கிரமசிங்க இந்த நிலைமைய மாற்றினார் எரிபொருளுக்கான வரிசை உட்பட பல விடயங்களிற்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வை காணமுடிந்தது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2 hours ago, ஏராளன் said:

தற்போது நாங்கள் எந்த சமூக பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை  இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணக்கூடிய தனிநபர் என நாங்கள்  நம்பினோம் அவர் அது சரியானது என நிரூபித்துள்ளார்

  தெரிந்தால் ஒதுங்கிக்கொள்ளுங்கோ, மீண்டும் நாட்டில் வன்முறைகளையும், இரத்த ஆறையும் உருவாக்காதீர்கள், உங்கள் திட்டங்களை அவர் நிறைவேற்றுவார். நாட்டில் ஒரு சுடுகாட்டு அமைதி நிலவுகிறது அதுகூடப் பொறுக்கவில்லை இவர்களுக்கு, நாட்டில கொஞ்சம் பணம் வரப்போகுது என அறிந்து வெளிக்கிட்டு விட்டார்கள் கொள்ளையடிக்க.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இன்னும் பதவி ஆசை விட்டுப்போகவில்லை. யுத்த வெற்றியை முதலீடாக்கி பிழைச்ச காலம் மலையேறிவிட்டது. மகிந்த கோத்தாவோடு தடைப்பட்டியலில் சேராமல் இருக்க வழிபார்ப்பதே நல்லம். 

சிங்களத்திற்கு இனவாதத்தை விட்டால் வேறு ஏது முதலீடு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிங்களத்திற்கு இனவாதத்தை விட்டால் வேறு ஏது முதலீடு?

அதெல்லாம் முந்தி.

பிக்குகள் கொழுத்தாடு பிடிக்கும் விளையாட்டின் பின்னால மகிந்தர் எண்டு உலகத்துக்கே தெரியும்.

இப்படி செய்து போட்டு கடனையும் கேட்டால் கிளிஞ்சுது போங்க.

பங்களாதேஸ் நிதியமைச்சர், நவம்பிரிலாவது இருநூற்றம்பது மில்லியன் டொலர் திருப்பி தருவியல் எண்டு நம்புறம் எண்டு போட்டார்.

அரசியல் ஸ்திரம் இல்லாத நாட்டில், முதலிடவும் வராரார், நம்பி கடன் தரவும் முன்வரார்.

சிங்களவர் செய்யும் இந்த தவறுகள், எமக்கு பலனலிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

மக்களுக்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார் -பசில்

அங்கு போனால் கோமணத்துடன்  அனுப்புவார்கள் என்று சிங்கனுக்கு உறுதியாக தெரிந்து விட்டது அதனால் அந்தர் பல்டி அடித்து உள்ளார் அதற்காக அமெரிக்கா ஒன்றும் நீதி நியாயம் பார்க்கும் நாடு என்று நினைக்க வேண்டாம் . உள்நாட்டில் இருப்பதே போர் குற்ற சாட்டுகளில் இருந்து தப்ப சொந்த நாடு தான் ஒரே வழி  என்று உணர்ந்து விட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

மக்களிற்கு பணியாற்றுவதற்காக அமெரிக்க பிரஜாவுரிமையை மாத்திரமல்ல எதனையும் விட்டுக்கொடுக்க தயார்

நீங்கள் அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுப்பதால் நாட்டுக்கு எந்த நன்மையையும் வரப்போவதில்லை, அதை விடுங்கள், வைத்திருங்கள் அது உங்கள் சவுகரியம். ஆனால் சொன்னீர்கள் பாருங்கள்! எதனையும் விட்டுக்கொடுக்கத்தயார் என்று, ஒன்று கொள்ளையடித்து பதுக்கி வைத்துள்ள பணத்தை திருப்பி மக்களுக்கு, அபிவிருத்திக்கு செலவழியுங்கள், அரசியலில் இருந்து வெளியேறுங்கள். அதுவே நீங்கள் மக்களுக்கு ஆற்றும் பெரிய, சிறந்த பணி! சொறிஞ்ச கையை சும்மா வைத்திருக்க மாட்டீர்கள் நீங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

May be a cartoon

  • Like 2
Link to comment
Share on other sites

13 hours ago, satan said:

மக்களே இவர் போன்றவர்களை நிராகரித்து விட்டால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார்கள்.

14 hours ago, Nathamuni said:

பங்களாதேஸ் நிதியமைச்சர், நவம்பிரிலாவது இருநூற்றம்பது மில்லியன் டொலர் திருப்பி தருவியல் எண்டு நம்புறம் எண்டு போட்டார்.

ஆசை தோசை அப்பளம் வடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

May be a cartoon

ரணில் இவர்களை சுமந்து, இவர்களின் ஊழல்களை மறைத்து, களைத்து விழும்போது; இவர்கள் அவர்மேல் ஏறி நின்று (இவரை சிறையில் கூட போடலாம்) அரசியல் செய்வார்கள். நரியார் தமிழரை சிதைப்பதில் வல்லவராய் இருந்தாலும் இனவாதிகளை காப்பதில் சிறந்தவர் என்பது இவரது கடந்தகால அரசியல் சாட்சி. ஐ. நாவில் ராஜபக்ஸாக்களை காப்பாற்றியது, தான் அரச கட்டிலேறிய போது அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியது, அவர்களது ஊழல்களை நீதிமன்றின்முன் கொண்டுவந்து நடவடிக்கை எடுக்காதது, தன்னை பாதியில் கலைத்த சந்திரிக்காவோடு கூட்டுச்சேர்ந்தது, இறுதியாக ஆர்பாட்டக்காரரை அடக்கி பக்ஸாக்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களை மீண்டும் அரசியலுக்கு அனுமதிப்பது. ஆனால் பக்சாக்கள் தருணம் பாத்துக்கொண்டு, இவரை பாவிச்சுக்கொண்டு இருக்கிறார்கள்.          

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.