Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி: சி குழுவில் இலங்கை

By DIGITAL DESK 5

08 FEB, 2023 | 09:09 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் மத்திய பகுதியில் நடைபெறவுள்ள 16ஆவது  வலைபந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

2023_Netball_World_Cup_logo.jpeg

சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற இலங்கை தகுதிபெற்றுக்கொண்டது.

இங்கிலாந்தின் லிவர்பூரில் 2019இல் நடைபெற்ற  உலகக் கிண்ண  வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் அவுஸ்திரேலியா, ஸிம்பாப்வே, வட அயர்லாந்து ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த இலங்கை, கடைநிலை அணிகளுக்கான 2ஆம் சுற்றில் சமோஆ, பிஜி ஆகிய  அணி களிடம் தோல்வி அடைந்தது. எனினும் சிங்கப்பூரை 2ஆம் சுற்றில் வீழ்த்திய இலங்கை, 15ஆம், 16ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியிலும் சிங்கப்பூரை வெற்றிகொண்டது.

6 போட்டிகளில் விளையாடிய தர்ஜினி சிவலிங்கம் 348 கோல்களைப் போட்டு அதிக கோல்கள் போட்டவர்கள் பட்டியலில் முதலாம் இடத்தைப் பிடித்தார்.

தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் தர்ஜினி சிவலிங்கம்,  2023   உலகக் கிண்ண  வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கை வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் திலகா ஜினதாச, உதவிப் பயிற்றுநர் பி. டி. பிரசாதி மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தர்ஜினி குறித்து தீர்மானிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜெமெய்க்காவை ஜூலை 28ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்காவை 29ஆம் திகதியும் வேல்ஸை 30ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும்.

முதல் சுற்றில் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஜுலை 31ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் ப்ளே-ஆவ்ஸ், நிரல்படுத்தல் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன ஆகஸ்ட் 4ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதிவரை நடைபெறும்.

asia_cup_netball_champions.jpg

பங்குபற்றும் நாடுகள் (நிரல்படுத்தல் வரிசையில்)

ஏ குழு: அவுஸ்திரேலியா, டொங்கோ, பிஜி, ஸிம்பாப்வே.

பி குழு: இங்கிலாந்து, மலாவி, ஸ்கொட்லாந்து, பார்படோஸ்.

சி குழு: ஜெமெய்க்கா, தென் ஆபிரிக்கா, வேல்ஸ், இலங்கை.

டி குழு: நடப்பு சம்பியன் நியூஸிலாந்து, உகண்டா, ட்ரினிடாட் அண்ட் டுபாகோ, சிங்கப்பூர்.

https://www.virakesari.lk/article/147743

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ விளையாட்டில்

அவுஸ்ரேலியா அணி மிக‌ ப‌ல‌மான‌ அணி

அதோ போல் நியுலாந்தும்

 

பொழுது போகாட்டி சும்மா பார்க்கிற‌து தானே லொல்..................🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண வலைபந்தாட்ட இலங்கை குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம்

Published By: DIGITAL DESK 5

10 FEB, 2023 | 09:27 AM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் இவ் வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 20 வீராங்கனைகளைக் கொண்ட தேசிய வலைபந்தாட்ட உத்தேச குழாத்தில் இலங்கையின் முன்னாள் அணித் தலைவியும் நட்சத்திர மற்றும் சர்வதேச அரங்கில் அதிக கோல்களைப் போட்ட சாதனை வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கமும் இடம்பெறுகிறார்.

இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் விடுத்த கோரிக்கையை ஏற்று இலங்கை குழாத்தில் இணைவதற்கு அவுஸ்திரேலியாவில் தற்போது வாழ்ந்துவரும் தர்ஜினி சிவலிங்கம் இணக்கம் தெரிவித்ததை அடுத்தே அவரை குழாத்தில் இணைத்துக்கொண்டதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளன ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

தர்ஜினி சிவலிங்கம் கடந்த சில வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தொழில்சார் வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிவருவதன்மூலம் அவரது ஆற்றல்களை வெகுவாக முன்னேறியுள்ளதாகவும் அவரது வருகை அணிக்கு நிச்சயமாக வலு சேர்க்கும் எனவும் தேசிய வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள திலகா ஜினதாச தெரிவித்தார்.

41335368_933493130177781_785936160843313

2018, 2022 ஆகிய இரண்டு ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் இலங்கை சம்பியனாவதற்கு பெரிதும் உதவிய தர்ஜினி சிவலிங்கம், இங்கிலாந்தின்  லிவர்பூலில் 2019இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை சார்பாக தர்ஜினி சிவலிங்கம் 348 கோல்களைப் போட்டு சாதனை நிலைநாட்டியிருந்தார்.

அத்துடன் முன்னாள் அணித் தலைவிகளான செமினி அல்விஸ், கயனி திசாநாயக்க, சத்துராங்கி ஜயசூரிய, சமகால தலைவி கயஞ்சலி அமரவன்ச, உதவி அணித் தலைவி துலங்கி வன்னிதிலக்க ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுவது இலங்கையை மேலும் பலப்படுத்துவதாக அமைகிறது.

gayani_chatu_sl_vs_mal.jpg

சிங்கப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டியில் சம்பியனான அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளும் உத்தேச குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

உத்தேச குழாம்

தர்ஜினி சிவலிங்கம், செமனி அல்விஸ், கயனி திசாநாயக்க, திசலா அல்கம, சத்துராங்கி ஜயசூரிய, கயஞ்சலி அமரவன்ச, துலங்கி வன்னித்திலக்க, ஷானிக்கா பெரேரா, ஹன்சிமா திசாநாயக்க, இமாஷா பெரேரா, ரஷ்மி பெரேரா, ருக்ஷலா ஹப்புஆராச்சி, பாரமி கொடிதுவக்கு, சமுதி விக்ரமரட்ன, மல்மி ஹெட்டிஆராச்சி, தரூஷி நவோத்யா, துலஞ்சலி சுரவீர, காயத்ரி கௌஷல்யா, இஷானி மதுஷிக்கா, பாஷினி யோஷித்தா (சுகயீன விடுமுறை).

சிங்கப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ண  வலைபந்தாட்டத்தில் சிங்கப்பூரை வெற்றிகொண்டு ஆசிய சம்பியனானதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட ஆசிய வலயத்தில் இருந்து இலங்கை தகுதிபெற்றது.

Dulangi.jpg

16 நாடுகள் பங்குபற்றும் 16ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

சி குழுவில் இலங்கை

உலகக் கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஜெமெய்க்கா, வரவேற்பு நாடான தென் ஆபிரிக்கா, வேல்ஸ் ஆகிய நாடுகளுடன் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜெமெய்க்காவை ஜூலை 28ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்காவை 29ஆம் திகதியும் வேல்ஸை 30ஆம் திகதியும் இலங்கை சந்திக்கவுள்ளது.

asia_cup_netball_champions.jpg

முதல் சுற்றில் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஜுலை 31ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் ப்ளே-ஆவ்ஸ் மற்றும் நிரல்படுத்தல் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன ஆகஸ்ட் 4ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதிவரை நடைபெறும்.

https://www.virakesari.lk/article/147845

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் விடுத்த கோரிக்கையை ஏற்று இலங்கை குழாத்தில் இணைவதற்கு அவுஸ்திரேலியாவில் தற்போது வாழ்ந்துவரும் தர்ஜினி சிவலிங்கம் இணக்கம் தெரிவித்ததை அடுத்தே அவரை குழாத்தில் இணைத்துக்கொண்டதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளன ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

தர்ஜினி சிவலிங்கம் கடந்த சில வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தொழில்சார் வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிவருவதன்மூலம் அவரது ஆற்றல்களை வெகுவாக முன்னேறியுள்ளதாகவும் அவரது வருகை அணிக்கு நிச்சயமாக வலு சேர்க்கும் எனவும் தேசிய வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள திலகா ஜினதாச தெரிவித்தார்.

 

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தர்சினி சிவலிங்கம்! 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.