Jump to content

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி: சி குழுவில் இலங்கை

By DIGITAL DESK 5

08 FEB, 2023 | 09:09 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் மத்திய பகுதியில் நடைபெறவுள்ள 16ஆவது  வலைபந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

2023_Netball_World_Cup_logo.jpeg

சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற இலங்கை தகுதிபெற்றுக்கொண்டது.

இங்கிலாந்தின் லிவர்பூரில் 2019இல் நடைபெற்ற  உலகக் கிண்ண  வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் அவுஸ்திரேலியா, ஸிம்பாப்வே, வட அயர்லாந்து ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த இலங்கை, கடைநிலை அணிகளுக்கான 2ஆம் சுற்றில் சமோஆ, பிஜி ஆகிய  அணி களிடம் தோல்வி அடைந்தது. எனினும் சிங்கப்பூரை 2ஆம் சுற்றில் வீழ்த்திய இலங்கை, 15ஆம், 16ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியிலும் சிங்கப்பூரை வெற்றிகொண்டது.

6 போட்டிகளில் விளையாடிய தர்ஜினி சிவலிங்கம் 348 கோல்களைப் போட்டு அதிக கோல்கள் போட்டவர்கள் பட்டியலில் முதலாம் இடத்தைப் பிடித்தார்.

தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் தர்ஜினி சிவலிங்கம்,  2023   உலகக் கிண்ண  வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கை வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் திலகா ஜினதாச, உதவிப் பயிற்றுநர் பி. டி. பிரசாதி மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தர்ஜினி குறித்து தீர்மானிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜெமெய்க்காவை ஜூலை 28ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்காவை 29ஆம் திகதியும் வேல்ஸை 30ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும்.

முதல் சுற்றில் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஜுலை 31ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் ப்ளே-ஆவ்ஸ், நிரல்படுத்தல் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன ஆகஸ்ட் 4ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதிவரை நடைபெறும்.

asia_cup_netball_champions.jpg

பங்குபற்றும் நாடுகள் (நிரல்படுத்தல் வரிசையில்)

ஏ குழு: அவுஸ்திரேலியா, டொங்கோ, பிஜி, ஸிம்பாப்வே.

பி குழு: இங்கிலாந்து, மலாவி, ஸ்கொட்லாந்து, பார்படோஸ்.

சி குழு: ஜெமெய்க்கா, தென் ஆபிரிக்கா, வேல்ஸ், இலங்கை.

டி குழு: நடப்பு சம்பியன் நியூஸிலாந்து, உகண்டா, ட்ரினிடாட் அண்ட் டுபாகோ, சிங்கப்பூர்.

https://www.virakesari.lk/article/147743

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ விளையாட்டில்

அவுஸ்ரேலியா அணி மிக‌ ப‌ல‌மான‌ அணி

அதோ போல் நியுலாந்தும்

 

பொழுது போகாட்டி சும்மா பார்க்கிற‌து தானே லொல்..................🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ண வலைபந்தாட்ட இலங்கை குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம்

Published By: DIGITAL DESK 5

10 FEB, 2023 | 09:27 AM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் இவ் வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 20 வீராங்கனைகளைக் கொண்ட தேசிய வலைபந்தாட்ட உத்தேச குழாத்தில் இலங்கையின் முன்னாள் அணித் தலைவியும் நட்சத்திர மற்றும் சர்வதேச அரங்கில் அதிக கோல்களைப் போட்ட சாதனை வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கமும் இடம்பெறுகிறார்.

இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் விடுத்த கோரிக்கையை ஏற்று இலங்கை குழாத்தில் இணைவதற்கு அவுஸ்திரேலியாவில் தற்போது வாழ்ந்துவரும் தர்ஜினி சிவலிங்கம் இணக்கம் தெரிவித்ததை அடுத்தே அவரை குழாத்தில் இணைத்துக்கொண்டதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளன ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

தர்ஜினி சிவலிங்கம் கடந்த சில வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தொழில்சார் வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிவருவதன்மூலம் அவரது ஆற்றல்களை வெகுவாக முன்னேறியுள்ளதாகவும் அவரது வருகை அணிக்கு நிச்சயமாக வலு சேர்க்கும் எனவும் தேசிய வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள திலகா ஜினதாச தெரிவித்தார்.

41335368_933493130177781_785936160843313

2018, 2022 ஆகிய இரண்டு ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் இலங்கை சம்பியனாவதற்கு பெரிதும் உதவிய தர்ஜினி சிவலிங்கம், இங்கிலாந்தின்  லிவர்பூலில் 2019இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை சார்பாக தர்ஜினி சிவலிங்கம் 348 கோல்களைப் போட்டு சாதனை நிலைநாட்டியிருந்தார்.

அத்துடன் முன்னாள் அணித் தலைவிகளான செமினி அல்விஸ், கயனி திசாநாயக்க, சத்துராங்கி ஜயசூரிய, சமகால தலைவி கயஞ்சலி அமரவன்ச, உதவி அணித் தலைவி துலங்கி வன்னிதிலக்க ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுவது இலங்கையை மேலும் பலப்படுத்துவதாக அமைகிறது.

gayani_chatu_sl_vs_mal.jpg

சிங்கப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டியில் சம்பியனான அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளும் உத்தேச குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

உத்தேச குழாம்

தர்ஜினி சிவலிங்கம், செமனி அல்விஸ், கயனி திசாநாயக்க, திசலா அல்கம, சத்துராங்கி ஜயசூரிய, கயஞ்சலி அமரவன்ச, துலங்கி வன்னித்திலக்க, ஷானிக்கா பெரேரா, ஹன்சிமா திசாநாயக்க, இமாஷா பெரேரா, ரஷ்மி பெரேரா, ருக்ஷலா ஹப்புஆராச்சி, பாரமி கொடிதுவக்கு, சமுதி விக்ரமரட்ன, மல்மி ஹெட்டிஆராச்சி, தரூஷி நவோத்யா, துலஞ்சலி சுரவீர, காயத்ரி கௌஷல்யா, இஷானி மதுஷிக்கா, பாஷினி யோஷித்தா (சுகயீன விடுமுறை).

சிங்கப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கிண்ண  வலைபந்தாட்டத்தில் சிங்கப்பூரை வெற்றிகொண்டு ஆசிய சம்பியனானதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட ஆசிய வலயத்தில் இருந்து இலங்கை தகுதிபெற்றது.

Dulangi.jpg

16 நாடுகள் பங்குபற்றும் 16ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

சி குழுவில் இலங்கை

உலகக் கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஜெமெய்க்கா, வரவேற்பு நாடான தென் ஆபிரிக்கா, வேல்ஸ் ஆகிய நாடுகளுடன் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜெமெய்க்காவை ஜூலை 28ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்காவை 29ஆம் திகதியும் வேல்ஸை 30ஆம் திகதியும் இலங்கை சந்திக்கவுள்ளது.

asia_cup_netball_champions.jpg

முதல் சுற்றில் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஜுலை 31ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் ப்ளே-ஆவ்ஸ் மற்றும் நிரல்படுத்தல் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன ஆகஸ்ட் 4ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதிவரை நடைபெறும்.

https://www.virakesari.lk/article/147845

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் விடுத்த கோரிக்கையை ஏற்று இலங்கை குழாத்தில் இணைவதற்கு அவுஸ்திரேலியாவில் தற்போது வாழ்ந்துவரும் தர்ஜினி சிவலிங்கம் இணக்கம் தெரிவித்ததை அடுத்தே அவரை குழாத்தில் இணைத்துக்கொண்டதாக இலங்கை வலைபந்தாட்ட சம்மேளன ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.

தர்ஜினி சிவலிங்கம் கடந்த சில வருடங்களாக அவுஸ்திரேலியாவில் தொழில்சார் வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிவருவதன்மூலம் அவரது ஆற்றல்களை வெகுவாக முன்னேறியுள்ளதாகவும் அவரது வருகை அணிக்கு நிச்சயமாக வலு சேர்க்கும் எனவும் தேசிய வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள திலகா ஜினதாச தெரிவித்தார்.

 

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தர்சினி சிவலிங்கம்! 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்றது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 4- ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. அதுவரையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக வைக்கப்படும்? ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அந்த அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. அதோடு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 69 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, கடும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த நடைமுறை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த அறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் எனப்படும் வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். படக்குறிப்பு,கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம். வாகனங்களுக்கு அனுமதி இல்லை ஒரு தொகுதிக்கு ஒரு ‘ஸ்ட்ராங் ரூம்’ இருக்கும். உதாரணமாக, சென்னையில் உள்ள தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் முறையே 3 ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதேபோன்று, நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்குள்ள அரசு பொறியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு, 220 காவல்துறை துணை ராணுவப் படையினர் அடங்கிய மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் முன்னிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தைச் சுற்றி 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று ஸ்ட்ராங் ரூம் திறக்கப்படும் போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அந்த அறையின் சீல் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னரே திறக்கப்படும். அந்த அறை திறக்கப்படும் நடைமுறையும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேட்பாளர்கள் முகவர்களை நியமிப்பர். இந்த முகவர்கள் அறையின் வெளிப்புற அடுக்கில் அமைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து கண்காணிக்கலாம். அங்கிருந்து ஸ்ட்ராங் ரூம் தெரியவில்லையென்றால், சிசிடிவி வசதி செய்து தரப்பட வேண்டும். அதன்மூலம், அந்த அறையின் கதவை முகவர்கள் கண்காணிக்கலாம். அறையை கண்காணிக்க யாரேனும் உள்ளே செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்தே செல்ல முடியும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் எந்த அதிகாரியோ அல்லது அமைச்சர்கள் அல்லது எந்த அரசியல் தலைவர்களின் வாகனங்களுக்கும் அனுமதி தரப்படாது.   பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? ஸ்ட்ராங் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, ஸ்ட்ராங் ரூமில் ஒரேயொரு கதவு மட்டுமே இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கதவுகள் இருந்தாலோ அல்லது அறையில் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் அவை செங்கற்களால் மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த அறைக்கு வலுவான இரட்டை பூட்டு அமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில், ஒரு பூட்டின் சாவி அந்த அறையின் பொறுப்பாளரிடமும் மற்றொன்றின் சாவி மாவட்ட அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரியிடமும் இருக்க வேண்டும். தீ மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அந்த அறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த அறையில் 24 மணிநேரமும் சி.ஏ.பி.எஃப் எனப்படும் மத்திய காவல் ஆயுதப் படையினரின் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பக்கத்திலேயே இருக்கக் கூடிய கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 24 மணிநேரமும் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரி ஒருவர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும். அந்த அறையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக, மின்சார வாரியத்தின் தலைவரை தலைமை தேர்தல் அதிகாரி தொடர்புகொண்டு உறுதி செய்யலாம். ஜெனரேட்டர்கள் அங்கு உள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.   மூன்றடுக்குப் பாதுகாப்பு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர்த்து, ஸ்ட்ராங் ரூம்-ஐ சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். முதல் அடுக்கில் சி.ஏ.பி.எஃப் படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பர். இதற்காக 20 முதல் 50 பேர் அடங்கிய படைப்பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். இப்படையினர்தான் அந்த அறையை சுற்றிய உள்ளடுக்கில் பாதுகாப்புக்காக இருப்பர். இரண்டாம் அடுக்கில் மாநில காவல்துறையின் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். மூன்றாம் அடுக்கில் மாவட்ட நிர்வாகப் படையின் காவல் பிரிவினர் பாதுகாப்பில் இருப்பர். https://www.bbc.com/tamil/articles/czvj47rl7qko
    • முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை. இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.
    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.