Jump to content

இந்தியா Vs ஆஸ்திரேலியா: இந்தியாவின் டெஸ்ட் தொடர் வரலாற்றை மாற்றி எழுதுமா ஆஸ்திரேலியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

 

வணக்கம் வசி

ஐபிஎல் போட்டிகளில் கரந்த கொள்ளலாமே?

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

vasee

ஆசிய வீரர்கள் போல இவர்கள் பந்து சுழலும் திசைக்கு எதிராக விளையாடமாட்டார்கள், மனதளவில் அப்படி ஒரு நிலைப்பாடு எனோ காணப்படுகிறது. https://www.foxsports.com.au/cricket/no-way-back-aussies-torn-to-sh

vasee

கவுதம் கம்ப்பீர் முன்பு நான் இணைத்த காணொளியில் குறிப்பிடுகிறார் கர்பயன் (எறியம்) போலில்லாமல் ஜடேயா, அஸ்வின் பந்துகளை எதிர்கொள்வது கடினம் என கூறுகிறார். பந்தை கிடையாகவும், கோணத்தினை உருவாக்குவ

Eppothum Thamizhan

இவங்களுக்கு வேற வேலையே இல்லை. யாரை யாரோடு ஒப்பிடுவதென்ற அறிவேயில்லை. அக்சாருக்கும் கபிலுக்கும் இடையேயுள்ள தூரம் மலைக்கும் மடுவுக்குமானது! இந்தியாவில் விளையாடிய 4 டெஸ்ட்டிலேயே எடுத்தது 3 விக்கெட்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

கவுதம் கம்ப்பீர் முன்பு நான் இணைத்த காணொளியில் குறிப்பிடுகிறார் கர்பயன் (எறியம்) போலில்லாமல் ஜடேயா, அஸ்வின் பந்துகளை எதிர்கொள்வது கடினம் என கூறுகிறார்.

பந்தை கிடையாகவும், கோணத்தினை உருவாக்குவது போல வீசுவது  ஜடேஜாவின் பந்து வீச்சு முறைமை என கருதுகிறேன்.

கிடையாக பந்து வீசும் போது பந்தின் அளவினை கணிப்பது கடினமாக இருக்கும் இவ்வாறான பந்து வீச்சு முறை, ஆனாலும் அவுஸ்ரேலிய வீரர்கள் ஏற்கனவே இவர்களது பந்து வீச்சினை எதிர்கொண்டுள்ளனர்.

பொதுவாக பந்தின் அலவினை கணித்தால் ஒரு கடினமான சூழ்நிலையிலும் விளையாடலாம் என கூறுவார்கள், அவுஸ்ரேலியர்கள் ஆடுகளம் மோசமாகவும் பந்தின் அளவினை கணிக்க முடியாமையினாலும் இவ்வாறு மோசமாக விளையாடியிருக்கலாம் என கருதுகிறேன்.

முன்பு கூறியது போல எனக்கு அவ்வளவாக துடுப்பாட்டம் தெரியாது, அறிந்தவற்றின் அடிப்படையில் கருத்து கூறியுள்ளேன் தவறாக இருக்கலாம்.

 

பின்னர் பதில் போடுகிறேன்.

அண்ணா அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் இந்திய‌ ம‌ண்ணில் கூட‌ தோல்விய‌ ச‌ந்திக்கும் அணி

2007க்கு முத‌ல் அவுஸ்ரேலியா ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் இந்திய‌ ம‌ண்ணில் ப‌ல‌ வெற்றிய‌ குவிச்ச‌வை................இப்ப‌ இருக்கும் அவுஸ் வீர‌ர்க‌ளால் அது முடியாத‌ காரிய‌ம்..............அடுத்த‌ விளையாட்டை அவுஸ் வென்றால் விளையாட்டு 2-2ச‌ம‌ நிலையில் முடியும் .
ஆனால் அடுத்த‌ விளையாட்டில் இந்தியா வீர‌ர்க‌ள் வெல்ல‌ முய‌ற்சி ப‌ண்ணுவின‌ம்..............இந்தியா வென்றால் தொட‌ர் 3-1 
அடுத்த‌ விளையாட்டு  விறுவிறுப்பாய் இருக்கும் அண்ணா................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 ஆவது டெஸ்டின் ஆரம்பத்தில் வண்டியில் மைதானத்தைச் சுற்றிவந்த இந்திய, அவுஸ்திரேலிய பிரதமர்கள்

Published By: VISHNU

09 MAR, 2023 | 03:40 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தனது பெயரைக்கொண்ட விளையாட்டரங்கில் கிரிக்கெட்டை சித்தரிக்கும் வண்டியில் பார்வையாளர்களுக்கு கையசைத்தவாறு இந்திய பிரதமர் நரேந்த்ர மோடி சுற்றிவந்தார்.

0903_aus_pm_and_ind_pm_waving_at_crowd_a

அவருடன் அவுஸ்திரேலியா பிரதமர் அன்தனி அல்பான்ஸும் கையசைத்தவாறு வண்டியில் மைதானத்தைச் சுற்றி சென்றபோது பார்வையார்கள் ஆரவாரம் செய்துதங்கள் கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளியிட்டனர்.

0903_asu_pm_and_ind_pm.jpg

அதன் பின்னர் இரண்டு நாடுகளினதும் பிரதமர்கள் பிரமுகர்களுக்கான பார்வையாளர்கூடத்திலிருந்து போட்டியைக் கண்டுகளித்தார்.

போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற எளிமையான ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் அன்தனி அபான்ஸ் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை அங்கீகரித்து போட்டியை வைபவரீதியாக தொடக்கிவைத்தார்.

0903_spectators_at_the_4th_test.jpg

பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்துடன் 'கிரிக்கெட் மூலம் 75 வருட நட்பைக் கொண்டாடுகிறேன்' என்ற வாசகத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் அல்பான்ஸ் பதிவிட்டிருந்தார்.

நரேந்திர மோடி விளையாட்டங்கில் இன்று (09) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு தீர்மானம் மிக்கதாக அமைவதுடன் அப் போட்டியை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட அரங்கில் குழுமியிருந்தனர்.

எவ்வாறாயினும் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மற்றயை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு பிரதமர்களும் புறப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான மக்களும் விளையாட்டரங்கைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்று முடிந்த முதல் 3 டெஸ்ட்களும் 3 நாட்களுக்குள் நிறைவடைந்தன. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றதுடன் 3ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த அவுஸ்திரேலியா முயற்சிக்கும் அதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதை உறுதிசெய்வதற்கு இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் வெற்றி அவசியமாகத் தேவைப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, இந்தியாவுக்கு நான்கு நாள் விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் அன்தனி அல்பான்ஸ், அடுத்த மூன்று நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளார்.

https://www.virakesari.lk/article/150094

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட்: இந்தியாவை சோதித்த ஆஸ்திரேலியா - மைதானத்துக்கு ஆஸி. பிரதமருடன் வந்த நரேந்திர மோதி

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,@NARENDRAMODI

 
படக்குறிப்பு,

இந்திய, ஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் கைகோர்த்து உற்சாகமூட்டும் இரு நாடுகளின் பிரதமர்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அஷ்ஃபாக்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 19 நிமிடங்களுக்கு முன்னர்

ரஹானே தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணிலேயே இந்தியா பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொரை வென்றது நினைவிருக்கிறதா? அந்த தொடரில் இந்தியா மகுடம் சூடியபோது நாடே கொண்டாடியது.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் அதை கச்சிதமாக நிகழ்த்திக் காட்டினார் அஹிங்கியா ரஹானே.

அந்த தொடர் அளித்த பரபரப்பு தற்போது மீண்டும் தொற்றியிருக்கிறது. இந்த முறை ஆமதாபாத்தில்....

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. ஆனால் இந்தூர் டெஸ்ட் இந்தியா பக்கம் வீசிய மகிழ்ச்சிக் காற்றை திசை திருப்பியது.

 

மோசமான தோல்விக்குப் பிறகு தற்போது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது இந்தியா. இந்த போட்டியில் தோற்றால் டெஸ்ட் தொடரை வேண்டும் என்றால் சமன் செய்யலாம் ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு கரைந்துபோய்விடும்.

அஸ்வினின் சுழலும் கவாஜாவின் பொறுமையும்

கிரிக்கெட்

பட மூலாதாரம்,ICC

இப்படியொரு இக்கட்டான தருணத்தில், ஆமதாபாத்தில் நடைபெற்ற 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முந்தைய 3 டெஸ்ட்களை காட்டிலும் இந்த டெஸ்டின் முதல் பகுதி, (session) இந்தியாவுக்கு சற்று சோர்வை தந்திருக்கிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளை விட இந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்களை களைப்படையச் செய்திருக்கிறது.

ஆறாவது ஓவரில் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. ஆனால் இந்திய விக்கெட் கீப்பர் பரத் தவறவிட்டார்.

இருப்பினும் டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தத் தொடங்கியபோது அஸ்வினின் சுழலில் சிக்கினார். லபுசேன் 3, ரன்களில் முகமது ஷமியிடம் ஆட்டமிழந்தார்.

19 ரன்கள் இடைவெளியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்திருந்தது. அனுபவம் வாய்ந்த அஷ்வின், ஷமி இருவரும் அந்த விக்கெட்டை எடுத்திருந்தது. ஆனால், கவாஜா இந்திய பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

சுழல், வேகப்பந்துவீச்சு என இரண்டிலும் நேர்த்தியாக செயல்பட்டார்.

ஸ்டீவ் ஸ்மித், கவாஜா ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு கடுமையான தலைவலியை கொடுத்தனர். ஸ்மித்தை வீழ்த்த ஜடேஜாவை பயன்படுத்தினார் கேப்டன் ரோஹித்.

64வது ஓவரை ஜடேஜா வீச துல்லியமான சுழலில் சிக்கிய விக்கெட்டை பறிகொடுத்தார் ஸ்மித்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவிடம் 7வது முறையாக அகப்பட்டிருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் சுமித்.

38 ரன்களை எடுத்திருந்த ஸ்மித், 135 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். மறுபுறம், 146 பந்துகளை விளையாடி பொறுமையாக அரைசதம் அடித்தார் உஸ்மான் கவாஜா.

முதல் நாள் ஆட்டம் முடிய 9 ஓவர்கள் இருந்தபோது இந்தியாவுக்கு புதிய பந்து கிடைத்தது. ஆனால் அது பந்துவீச்சாளர்களுக்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை என்பது புதிய பந்தில் வீசப்பட்ட முதல் ஓவரில் ஆஸ்திரேலியா விளாசிய இரண்டு பவுண்டரிகள் மூலம் தெரிந்தது.

புதிய பந்தில் வீசப்பட்ட 9 ஓவர்களில் 54 ரன்களை விளாசித் தள்ளியது ஆஸ்திரேலியா.

இதில் பெரியளவில் அச்சுறுத்தியது கேமரூன் க்ரீனின் ஆட்டம். 64 பந்துகளில் 49 ரன்களை சேர்த்திருந்தார் கேமரூன்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் உஸ்மான் கவாஜா சதம் விளாசினார். நடப்பு தொடரில் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் மட்டுமின்றி, 2017இல் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்த பிறகு இந்திய மண்ணில் சதம் அடிக்கும் ஆஸ்திரேலியர் என்கிற பெருமையை படைத்திருக்கிறார் கவாஜா.

 

போட்டி முடிந்ததும் கவாஜா உதிர்த்த வார்த்தைகள் முக்கியமானவை. சதம் விளாசிய கையோடு பேசிய கவாஜா, இந்தியாவுக்கு 2 முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன்.

அப்போது நடந்த 8 போட்டிகளிலுமே நான் வீரர்களுக்கு குடிநீரையும் ஜூஸ் பாட்டில்களையும் சுமந்தேன். ஆனால் இப்போது நான் சதம் விளாசியிருப்பது ஒரு உணர்வுபூர்வமான தருணம் என குறிப்பிட்டார்.

சுமார் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக தனது விக்கெட்டை பத்திரப்படுத்தி ஆடியிருக்கிறார் கவாஜா.

246 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வலுவான நிலையில் முதல் நாள் ஆட்டம்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்

பட மூலாதாரம்,ICC

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களை சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

இனி வரும் நாட்களில் இந்தியா ஆடும் விதத்தை பொறுத்தே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதி யுத்தம் தீர்மானிக்கப்படும்.

ஆமதாபாத்தில் இந்தியா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. காரணம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகளே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதும்.

முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளன.

ஆனால் 3வது இடத்தில் உள்ள இலங்கை அணி, தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இலங்கை அணி தற்போதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

இலங்கை அபாரமாகவும் இந்தியா சொதப்பலாகவும் விளையாடும் பட்சத்தில், இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு இந்த முறையும் எட்டாமல் போகலாம்.

எந்தவித பரப்பரப்புமின்றி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வேண்டும் எனில் ஆமதாபாத் டெஸ்டை இந்தியா வெல்ல வேண்டியது மிக மிக கட்டாயம்.

மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா பிரதமர்கள்

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி - ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் ஆகிய இருவரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியை காணச் சென்றனர்.

மைதானத்தை வலம் வந்த இரு தலைவர்களும் ரசிகர்களை நோக்கி கை அசைத்தனர். தங்கள் நாட்டு அணி கேப்டன்களுக்கு பிரதமர்கள் தொப்பியை வழங்கி கெளரவித்ததோடு அவர்களுடன் கைகளைக் கோர்த்து உயர்த்தித் தூக்கினார் பிரதமர் மோதி.

ரோஹித் சர்மாவுக்கும் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கலாம். இதை எதிர்பார்க்காத இருவரும் சிரித்தபடியே பிரதமர்களுடன் கைகோர்த்து நின்றனர். இதைத்தொடர்ந்து, ரோஹித் சர்மா, இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது வீரர்களுடன் நின்றார் பிரதமர் மோதி.

போட்டி தொடங்கியதும் இரு தலைவர்களும் மைதானத்தில் இருந்து விடைபெற்றனர். இந்த நிகழ்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 75 ஆண்டுகால நட்பை பிரதமர் நரேந்திர மோதியுடன் கிரிக்கெட்டோடு கொண்டாடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

களத்தில், உலகின் சிறந்த அணிகளான ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகின்றன. களத்தில் வெளியே, நாம் இருவரும் சிறந்த உலகை கட்டமைக்க ஒத்துழைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியா, ஆஸ்திரேலியா இரு நாடுகளுக்குமே ஆர்வத்தோடு ரசிக்கும் விளையாட்டு கிரிக்கெட். ஆமதாபாத்தில் எனது நண்பர் ஆந்தோனியுடன் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை காணச் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. இது ஒரு சிறந்த ஆட்டமாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c6p6p7jnxrzo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா வீர‌ர் ந‌ல்லா விளையாடி இருக்கின‌ம் முத‌ல் இனிங்சில்................இந்த‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு 'ஷோ' காட்டிய கவாஜா: டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு இந்தியாவுக்கு கைகூடுமா?

கிரிக்கெட்

பட மூலாதாரம்,ICC

 
படக்குறிப்பு,

ஒன்று இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். தோல்வியோ, டிராவோ ஆகும் பட்சத்தில், டெஸ்ட் இறுதிப் போட்டிக்குள் நுழைவது இந்தியாவின் கையில் இருக்காது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,அஷ்ஃபாக்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 10 மார்ச் 2023, 13:02 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கவாஜாவும் கேமரூன் க்ரீனும் இந்தியாவுக்கு தாங்க முடியாத தலைவலியை கொடுத்திருக்கின்றனர்.

ஆமதாபாத் டெஸ்டின் 2வது நாள் ஆட்டமும் இந்தியாவுக்கு சிறப்பாக அமையவில்லை. பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்டில் 480 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து ஆடிய இந்தியா 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்துள்ளது.

2வது நாள் ஆட்டத்தை 355 ரன்களுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா. கவாஜாவும் கேமரூன் க்ரீனும் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களை தொடக்கம் முதலே திணறடித்தனர்.

 

உணவு இடைவேளை வரை இந்தியாவால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. களத்தில் நங்கூரமிட்ட உஸ்மான் கவாஜா, இந்திய பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தார். மறுபுறம் கேமரூன் க்ரீன் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். வெறும் 144 பந்துகளில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் கேமரூன் க்ரீன்.

இந்திய மண்ணில் 4 ஆண்டுகள் கழித்து, 6வது அல்லது அதற்கு பிந்தைய இடத்தில் களமிறங்கி சதமடித்த வீரர் எனும் பெருமையையும் க்ரீன் படைத்துள்ளார். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே நிதானமாக ஆடி வரும் கவாஜா, 347 பந்துகளில் 150 ரன்கள் சேர்த்தார்.

கவாஜா - க்ரீன் ஜோடியை பிரிக்க இந்தியா கடுமையாக போராடியது. ஒருவழியாக அஸ்வின் சுழலில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது கீப்பர் வசம் பிடிபட்டார் க்ரீன். 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது.

அதே ஓவரில் அலெக்ஸ் காரே டக் அவுட்டானார். அஸ்வினின் அந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது இந்தியாவுக்கு சற்று நிம்மதி அளித்தது. அடுத்து வந்த ஸ்டார்க்கும் 6 ரன்களில் அஸ்வின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

422 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்கள் விளாசி களத்தில் பலமாக வலம் வந்த ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜாவின் ஆட்டம் 2வது நாள் கடைசி பகுதியில் முடிவுக்கு வந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்சர் படேல் பந்துவீச்சில் அவர் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.

அத்துடன் ஆஸ்திரேலியா 409 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்திருந்தது.

அடுத்த 5 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியா ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அனில் கும்ப்ளே சாதனையை முந்திய அஸ்வின்

ஆனால் மர்ஃபியும், நாதன் லியானும் அவ்வளவு எளிதாக விக்கெட்டை கைவிடவில்லை. டாப் ஆர்டர்கள் தலைவலி கொடுத்ததைத் தாண்டி ஆஸ்திரேலியாவின் டெய்ல் எண்டர்களும் பந்துவீச்சாளர்களை சிரமப்படுத்தினர்.

20 ஓவர்களுக்கும் அதிகமாக பந்துகளை வீசி இந்திய வீரர்கள் சோர்வடைந்தனர். இறுதியாக மர்ஃபியை 41 ரன்களுக்கும் நாதன் லயானை 34 ரன்களுக்கும் ஆட்டமிழக்கச் செய்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான ஆட்டம் ஒருவழியாக 480 ரன்களில் முடிவுக்கு வந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்தியர் எனும் பெருமையை அனில் கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளி படைத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அடுத்ததாக, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 10 ஓவர்கள் வரை விளையாடியது.

ரோஹித் சர்மா, சுப்மல் கில் இருவருமே தொடக்கம் முதல் அதிரடி காட்டினார். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்துள்ளது. 444 ரன்கள் இந்தியா பின் தங்கியுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

உஸ்மான் கவாஜா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற என்ன வாய்ப்பு?

இந்த நிலையில், எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

ஒன்று இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும். தோல்வியோ, டிராவோ ஆகும் பட்சத்தில், டெஸ்ட் இறுதிப் போட்டிக்குள் நுழைவது இந்தியாவின் கையில் இருக்காது. மாறாக, இந்தியா இலங்கையையும் நியூசிலாந்தையும் சார்ந்திருக்க வேண்டும்.

தர வரிசையில் 3ம் இடத்தில் உள்ள இலங்கை தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நியூசிலாந்தை இலங்கை வைட் வாஷ் செய்யும் பட்சத்தில் இந்தியாவின் வாய்ப்பு முற்றிலுமாக பறிபோய்விடும். ஏதேனும் ஒரு போட்டியில் இலங்கை வெற்றியை இழந்தாலும் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். ஆனால் தற்போதைய நிலவரப்படி இலங்கை வலுவான நிலையிலேயே விளையாடி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாக வேண்டும் எனில் நியூசிலாந்தின் வெற்றி இன்றியமையாத ஒன்று!

https://www.bbc.com/tamil/articles/cm512venrnzo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை சுருட்ட ஆஸி. போட்ட திட்டம் - தவிடுபொடியாக்கி சதம் அடித்த சுப்மன் கில்

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

11 மார்ச் 2023, 08:44 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதில் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அதன் இன்றைய ஆட்டத்தில் சுப்மன் கில் அரை சதம் அடித்துள்ளார்.

இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா களமிறங்கினார்கள். சிறப்பான கூட்டணியை இருவரும் அமைத்திருந்தாலும், அஸ்வின் வீசிய 15வது ஓவரில் லாங் ஷாட் ஆட முயன்ற டிராவிஸ், ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 32 ரன்களில் அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷேன் 3 ரன்களிலும் ஆஸி அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்களிலும் பீட்டர் ஹேண்ட்ஸ்கேம்ப் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.

விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தாலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்தார். கேமரூன் கிரீன், கவாஜாவுடன் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினார்கள். கேமரூன் கிரீன் பவுண்டரிகளுக்கு பந்தைத் தட்டிவிட்டுக் கொண்டே இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய கவாஜா வீசப்பட்ட பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு சதம் அடித்தார்.

 

அசராமல் விளாசிய கவாஜா

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி 255 ரன்களைக் குவித்திருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சில், ஷமி 2 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியபோது, தனது அதிரடியைத் தொடர்ந்து காட்டிய கிரீன் அரை சதம் அடித்தார். உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் கூட்டணியை உடைக்க முடியாமல் நீண்டநேரத்திற்கு இந்திய அணி திணறியது. ஆனால், மதிய இடைவேளைக்குப் பிறகு பந்துவீசக் களமிறங்கிய அஸ்வின் 114 ரன்களை எடுத்திருந்த கேமரூன் கிரீனை அவுட்டாக்கினார்.

அதே ஓவரின் கடைசி பந்தில் அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த அலெக்ஸ் கேரியையும் பூஜ்ஜிய ரன்களில் அஸ்வின் வெளியேற்றினார். கவாஜாவும் கிரீனும் இணைந்து 280 ரன்களை எடுத்து ஆஸி. அணியின் முதல் இன்னிங்சுக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தார்கள்.

முதல் நாளைப் போலவே விக்கெட்டுகள் சரிந்தாலும், அசராமல் நின்ற உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் 180 ரன்களை எடுத்திருந்தபோது, அக்ஷர் பட்டேலின் சுழற்பந்தில் சிக்கி வெளியேறினார்.

இறுதியாக 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸி அணி, 480 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, அக்ஷர் பட்டேல் ஆகியோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டும் சுப்மன் – புஜாரா ஜோடி

மூன்றாவது நாள் ஆட்டத்தில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 2-1 என்ற நிலையில் டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருக்கும் இந்திய அணியின் பேட்டிங்கில் முதலில் ரோஹித் ஷர்மாவும் சுப்மன் கில்லும் களமிறங்கினார்கள்.

இரண்டாவது நாள் இறுதியில் இந்தியா 36 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது. ரோஹித் ஷர்மா 17 ரன்களையும் சுப்மன் கில் 18 ரன்களையும் எடுத்திருந்தனர். மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கி மூன்றாவது ஓவரில் இந்த நாளுக்கான முதல் பவுண்டரியை ஷுப்மன் கில் அடித்தார்.

ரோஹித், சுப்மன் கூட்டணி பவுண்டரிக்கு பந்துகளை ஃபோர், சிக்ஸ் என விளாசிக் கொண்டிருந்தது. அதை உடைக்கும் ஆஸ்திரேலியாவின் முயற்சி 21வது ஓவரில் பலன் கிடைத்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் ஷர்மா 35 ரன்களுக்கு அவுட்டானார். இந்தியா 21வது ஓவர் முடிவில் 74 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

மேத்யூ குன்னேமன் பந்துவீச்சில் இந்திய கேப்டனின் பேட்டிங் முடிவுக்கு வந்தது. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, சுப்மன் கில்லுடன் கூட்டணி சேர்ந்தார். ஆஸியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நேதன் லயன், குன்னேமன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை அவர்கள் இருவரும் இயன்ற அளவுக்குச் சமாளித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

27வது ஓவரில் புஜாரா ஆஸிக்கு எதிராகத் தனது 2000வது ரன்னை பூர்த்தி செய்தார். 29வது ஓவரில் சுப்மன் கில் தனது 5வது டெஸ்ட் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்தியா 29 ஓவர்களில் 100 ரன்களை எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து 32வது ஓவரில் நேதன் லயனுக்கு பதிலாக டாட் மர்ஃபி பந்துவீசக் களமிறங்கினார்.

புஜாரா, சுப்மன் இருவரது கூட்டணியில் 50 ரன்களைக் கடந்துவிட்டனர். ஆஸி அணிக்கு சவாலாக அவர்களுடைய பேட்டிங் செய்துகொண்டிருக்கிறார்கள்.

கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட்டான பிறகு இந்திய அணியின் பேட்டிங்கில் எந்தவித தடுமாற்றமும் இல்லை என்பதை சுப்மன் கில், புஜாரா கூட்டணி உறுதி செய்தது. ரோஹித், சுப்மன் கூட்டணி 74 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகத் திறமையாக பேட்டிங் செய்தார்.

மதிய இடைவேளைக்குப் பிறகு 221 பந்துகளில் சுப்மன் கில், புஜாரா கூட்டணி 100 ரன்களைக் கடந்திருந்தது. சுப்மன் கில் 197 பந்துகளில் 103 ரன்களை பெற்று தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸி சுழற்பந்துவீச்சாளர்கள் நேதன் லயன், மேத்யூ குனெமன், டாட் மர்ஃபி ஆகியோர் துல்லியமாகப் பந்து வீசினார்கள். இது ஆரம்பம்தான். ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியா இன்னும் திறம்பட பேட்டிங் செய்ய வேண்டும். கில், புஜாரா இருவரும் கூட்டணியில் இன்னும் அதிக ரன்களைச் சேகரிக்கத் தயாராக இருந்த நேரத்தில் புஜாரா டாட் மர்ஃபி பந்துவீச்சில் அவுட்டானார்.

Twitter பதிவை கடந்து செல்ல
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

புஜாரா 121 பந்துகளில் 42 ரன்களை எடுத்து வெளியேறியதைத் தொடர்ந்து தற்போது விராட் கோலி களமிறங்கியுள்ளார்.

புஜாரா விக்கெட் விழுந்திருந்தாலும்கூட, மதிய உணவுக்குப் பிறகு இந்தியா அபாரமாக விளையாடியது. சுப்மன் கில் இரண்டாவதுட் டெஸ்ட் சதத்தை விளாசியுள்ளார். இரண்டாவது விக்கெட் விழுவதற்கு புஜாராவுடன் கூட்டணியில் 113 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் கடுமையாக உழைத்தனர்.

ஸ்டீவன் ஸ்மித்தின் கேப்டன்சி அருமையாக இருந்தது. புதுமையான களத்தை அமைத்தார். புஜாராவுக்கு எதிராக லெக் ஸ்லிப்பில் களமிறங்கினார். அவரது திட்டத்தின் மூலம் சுப்மன் கில் ரன்களைக் குவிக்க கடுமையாக உழைக்க வைத்தார்.

https://www.bbc.com/tamil/articles/cge9rzwxkzno

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷுப்மான் கில் குவித்த சதத்தின் உதவியுடன் சிறப்பான நிலையில் இந்தியா

11 MAR, 2023 | 07:07 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அஹமதாபத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் போர்டர் - காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4ஆவது போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது.

அவுஸ்திரேலியா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 480 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா, ஷுப்மான் கில் குவித்த சதத்தின் உதவியுடன் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 289 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருக்கிறது.

போட்டியின் 3ஆம் நாளான சனிக்கிழமை (11) காலை தனது முதலாவது இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா, மொத்த எண்ணிக்கை 74 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 35 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்மான் கில் 2ஆவது விக்கெட்டில் சேத்தேஷ்வர் புஜாராவுடன் 113 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் விராத் கோஹ்லியுடன் 58 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டார்.

சேத்தேஷ்வர் புஜாரா 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

235 பந்துகளை எதிர்கொண்ட ஷுப்மான் கில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 128 ஓட்டங்களைப் பெற்றார்.

தனது 15ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஷுப்மான் கில் பெற்ற 2ஆவது சதம் இதுவாகும். அத்துடன் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாக அது பதிவானது.

பங்களாதேஷுக்கு எதிராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவர் பெற்ற 110 ஓட்டங்களே இதற்கு முன்னர் அவரது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையாக இருந்தது.

இதேவேளை, 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விராத் கோஹ்லி 59 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடும் விராத் கோஹ்லி 128 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகளை அடித்துள்ளார்.

அதிசயம் நிகழ்ந்தாலன்றி இப் போட்டி பெரும்பாலும் வெற்றி தோல்வியின்றி முடிவடையும் எனவும் அந்த முடிவுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை இந்தியா எதிர்த்தாடத் தகுதிபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/150281

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2023 at 07:31, ஈழப்பிரியன் said:

வணக்கம் வசி

ஐபிஎல் போட்டிகளில் கரந்த கொள்ளலாமே?

உங்கள் இருவருக்கும் நன்றி, கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் (உறுதியாக கூற முடியாது).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4வ‌து விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌ கூடும்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்கெட்டுகளை எடுக்க திணறும் ஆஸ்திரேலியா - விராட் கோலியின் சதம் கொடுத்த அதிர்ச்சி

இந்தியா- ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் சதம் காரணமாக இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. தற்போது அவர் 150 ரன்களை கடந்து விளாசிக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதில் நான்காவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய 6ஆவது ஓவரிலேயே ரவீந்திர ஜடேஜா அவுட்டானார்.

டாட் மர்ஃபி வீசிய பந்தை அவர் லாங் ஷாட் அடித்தபோது உஸ்மான் கவாஜா அதை கேட்ச் செய்து அவரை அவுட்டாக்கினார். 28 ரன்களில் ஜடேஜா வெளியேறியதைத் தொடர்ந்து ஸ்ரீகர் பரத் களமிறங்கினார்.

மேலும் விக்கெட் சரியாமல் இருவரும் பார்த்துகொண்டனர். இதனால், ரன்கள் எடுப்பது மந்தமானது. 102வது ஓவரில் 300 ரன்களை எட்டிய இந்திய அணி அடுத்த 50 ரன்களை எடுக்க 27 ஓவர்களை எடுத்துக்கொண்டது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் அவர்களை ரன் எடுக்க முடியாதபடி கட்டுப்படுத்த முடிந்ததே தவிர விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இடையே ஒருவித அச்சுறுத்தல் உணர்வு தென்படுகிறது.

 

சதம் அடித்த விராட் கோலி

அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீகர் பரத் 44 ரன்கள் எடுத்திருந்ததுபோது நேதன் லயன் பந்துவீச்சில் ஹேண்ட்ஸ்கோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து விராட் கோலியுடன் அக்ஷர் பட்டேல் இணைந்தார். ஆட்டத்தின் 138வது ஓவரின் 2வது பந்தில் 1 ரன் எடுத்து தனது டெஸ்ட் போட்டிகளில் தனது 28வது சதத்தை விராட் கோலி எட்டினார்.

கடைசியாக பங்களாதேஷுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தார். 1200 நாட்களுகுப் பிறகு தற்போது மீண்டும் அவர் சதம் அடித்துள்ளார்.

அதே ஓவரில் இந்தியா 400 ரன்களை எட்டியது. 162 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 486 ரன்களை எடுத்திருந்தது. விராட் கோலி 144 ரன்களுடனும் அக்ஷர் பட்டேல் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்ததும் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஸ்ரீகர் பரத் களமிறங்கினார். அவர் ஆட்டமிழந்த பின்னர், அக்ஷர் பட்டேல் களமிறங்கினார்.

இதனிடையே, "மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் வலி இருப்பதாகப் புகார் கூறினார். அவர் ஸ்கேன் எடுக்கச் சென்றுள்ளார், பிசிசிஐ மருத்துவக் குழு அவரைக் கண்காணித்து வருகிறது," என்று பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தியா- ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா- ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசராமல் விளாசிய கவாஜா

முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி 255 ரன்களைக் குவித்திருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சில், ஷமி 2 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியபோது, தனது அதிரடியைத் தொடர்ந்து காட்டிய கிரீன் அரை சதம் அடித்தார். உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் கூட்டணியை உடைக்க முடியாமல் நீண்டநேரத்திற்கு இந்திய அணி திணறியது. ஆனால், மதிய இடைவேளைக்குப் பிறகு பந்துவீசக் களமிறங்கிய அஸ்வின் 114 ரன்களை எடுத்திருந்த கேமரூன் கிரீனை அவுட்டாக்கினார்.

அதே ஓவரின் கடைசி பந்தில் அவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த அலெக்ஸ் கேரியையும் பூஜ்ஜிய ரன்களில் அஸ்வின் வெளியேற்றினார். கவாஜாவும் கிரீனும் இணைந்து 280 ரன்களை எடுத்து ஆஸி. அணியின் முதல் இன்னிங்சுக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தார்கள்.

முதல் நாளைப் போலவே விக்கெட்டுகள் சரிந்தாலும், அசராமல் நின்ற உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் 180 ரன்களை எடுத்திருந்தபோது, அக்ஷர் பட்டேலின் சுழற்பந்தில் சிக்கி வெளியேறினார்.

இறுதியாக 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸி அணி, 480 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, அக்ஷர் பட்டேல் ஆகியோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்கள்.

https://www.bbc.com/tamil/articles/cv2n51xkjmpo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1205 நாட்களுக்கு பிறகு சதம் அடித்த விராட் கோலி: சாதனை சிகரத்தில் சச்சின், லாராவை மிஞ்சுவாரா?

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கிரிக்கெட்டில் சாதனை நாயகனாகத் திகழும் நட்சத்திர வீரர் விராட் கோலி 1,205 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் கண்டுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் சதத்திற்கான தாகத்தைத் தணித்துக் கொண்டுள்ள அவர் சாதனைப் படிக்கட்டில் மேலும் ஒரு படி ஏறியிருக்கிறார்.

ஆமதாபாத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை விராட் கோலி எட்டியுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் 480 ரன் குவித்த ஆஸ்திரேலியாவுக்கு பதிலடியாக இந்தியாவும் அதிக ரன் குவித்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது.

இருபது ஓவர் போட்டிகளில் சதம், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் என அண்மைக் காலமாக அசத்தி வரும் சுப்மன் கில், தொடக்க வீரராக களமிறங்கி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்றாவது நாள் ஆட்டத்தில் களத்தில் நாயகனாக ஜொலித்த அவர், 235 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

 

ரோஹித் ஷர்மா 35, புஜாரா 42 ரன்கள் எடுத்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களை எடுத்திருந்தது. விராத் கோலி 59 ரன்களுடனும் ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியாவை காட்டிலும் 191 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. கூடுதலாக 20 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் கோலி - ஜடேஜா இணை பிரிந்தது. ஜடேஜா 28 ரன்களில் வெளியேறியபோது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்திருந்தது.

இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணிக்கு கைகொடுக்க, தாம் களத்தில் நிலைத்து நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். ஐந்தாவது விக்கெட்டிற்கு அவருடன் கைகோர்த்த ஸ்ரீகர் பாரத் சற்று அதிரடி காட்ட, கோலி நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 241 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருக்கு 28வது சதமாக அமைந்தது.

சாதனை நாயகன் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவரது முந்தைய சதம் 2019ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக வந்தது. இளஞ்சிவப்பு நிற பந்துகளைப் பயன்படுத்தி இந்தியாவில் நடைபெற்ற முதல் போட்டி என்ற சிறப்புக்குரிய அந்த ஆட்டத்தில் கோலி 136 ரன்களை விளாசியிருந்தார்.

அதன் பிறகு டெஸ்ட் மட்டுமின்றி, ஒருநாள், இருபது ஓவர் போட்டி என அனைத்து வகை கிரிக்கெட்டிலுமே பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் அவர் தவித்து வந்தார். குறிப்பாக மூன்று இலக்க எண்ணை எட்ட முடியாமல் அவர் தடுமாறியதைக் கண்டு ரசிகர்கள் வேதனைப்பட்டனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

ஒருவழியாக, இருபது ஓவர் கிரிக்கெட்டில் தமது முதல் சதத்தை அடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஆண்டுகளாக நீடித்த தாகத்தை அவர் தணித்துக் கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த சதத்தை அவர் அடித்தார்.

அதன் பிறகு, உலகக்கோப்பை இருபது ஓவர் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய கோலி, அதே ஃபார்மை ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்தார். நான்கே போட்டிகளில் 3 சதங்களை அடித்து அவர் அசத்தினார்.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருபது ஓவர், ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதம் கண்ட விராட் கோலி, அதே ஃபார்மை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதற்கு ஏற்றாற்போல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நம்பிக்கை தரும் வகையில் தொடங்கிய அவர், அடுத்து வந்த இரு போட்டிகளிலும் சறுக்கினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தப் போட்டியை குறைந்தபட்சம் டிராவாவது செய்ய வேண்டும் என்ற நிலையில் இந்திய அணிக்கு கடைசிப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

வழக்கம் போல், முக்கியமான ஆட்டங்களில் நெருக்கடியான கட்டத்தில் கை கொடுக்கும் விராட் கோலி இம்முறையும் அதைச் செய்ததோடு, தன்னுடைய டெஸ்ட் சதத்திற்கான தாகத்தையும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

கோலியை ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடும் ஆர்.சி.பி. அணியும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சமூக ஊடகங்களில் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 1,205 நாட்கள் அதாவது சுமார் 40 மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு அவர் இந்த சதத்தை அடித்துள்ளார். 2022ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு டெஸ்டில் 50 ரன்களுக்கு மேல் அவர் குவித்திருப்பதும் இப்போதுதான். முன்பு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 79 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

27வது சதத்திற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை 3 இலக்க ரன்களை பெற அவருக்கு 41 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளன. இந்த இரு சதங்களுக்கும் இடையே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2,633 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.

இரு சதங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் கோலியின் டெஸ்ட் ரன் சராசரி 25.70 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு சவாலாகத் திகழும் இங்கிலாந்தின் ஜோ ரூட் 53, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 56, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் 48 என்கிற சராசரியில் ரன் சேர்த்துள்ளனர்.

சாதனை நாயகன் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் காலகட்டத்தில் மட்டும் ஜோ ரூட் 13 சதங்களை விளாசி கோலியை முந்தி 29 சதங்களை தனது பெயரில் பதிவு செய்துள்ளார். அதாவது, 2019ஆம் ஆண்டு நவம்பரில் 16 சதங்களுடன் இருந்த ஜோ ரூட் தற்போது 29 சதங்களுடன் முன்னிலையில் இருக்கிறார்.

இரு சதங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவரது ரன் சராசரி 6.85 ரன்கள் குறைந்துள்ளது.

டெஸ்டில் 28, ஒருநாள் போட்டிகளில் 46, இருபது ஓவர் ஆட்டங்களில் 1 என சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 75 சதங்களை கோலி விளாசியுள்ளார். 46 வெவ்வேறு மைதானங்களில் இந்த சதங்கள் வந்துள்ளன. அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் கண்டுள்ள ஜாம்பவான் சச்சின் மட்டுமே 53 இடங்களுடன் கோலியை விஞ்சி நிற்கிறார்.

குறைந்த போட்டிகளில் 75 சதங்களை விளாசியவர் என்ற பெருமை விராட் கோலியையே சேரும். இந்த மைல்கல்லை அவர் 552 போட்டிகளில் எட்ட, சச்சினோ 566 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார்.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

40 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் 50வது டெஸ்டில் சதம் விளாசியதை அப்படியே விராட் கோலியும் செய்திருக்கிறார். ஆனால், அது கவாஸ்கருக்கு உள்நாட்டில் 14வது சதமாக அமைந்தது. கோலிக்கோ உள்நாட்டில் இது 13வது சதம். இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 சதங்களுடன் சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இந்திய மண்ணில் 4 ஆயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலிதான். 58.82 ரன் சராசரியுடன் இந்த மைல்கல்லை எட்டியுள்ள அவர், ராகுல் டிராவிட் (88), கவாஸ்கர் (87) ஆகியோரை விஞ்சி குறைந்த இன்னிங்ஸ்களில் இதைச் சாதித்த 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

லாராவை முந்தி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை கோலி பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களுடன் 6,707 ரன்கள் குவித்து இந்த வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c97x1evp79lo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலி நீண்ட‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு ரெஸ் விளையாட்டில் ச‌த‌ம் அடிச்சு இருக்கிறார் ம‌கிழ்ச்சி................

 

4வ‌து ரெஸ் ச‌ம‌ நிலையில் முடியும்...........தொட‌ர‌ இந்தியா வின் ப‌ண்ணிட்டு.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயத்துடிப்பை எகிற வைத்த நியூசிலாந்து - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா

டெஸ்ட் சாம்பியன் - இந்தியா தகுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மீண்டும் தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றதன் மூலம் அந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளைத் தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்ற ஐசிசி அறிமுகப்படுத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கௌரவமிக்கதாகக் கருதப்படுகிறது.

குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி, தோல்வி, டிரா ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கான அணிகள் தேர்வாகின்றன. அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது.

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதப்போகும் அணி எது என்பதற்கான போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இருந்தன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றால் யாருடைய தயவும் இன்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி தொடரை அடுத்தடுத்து வெற்றியுடன் தொடங்கி நம்பிக்கையுடன் இருந்தது.

 

ஆனால், இந்தூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதால் மற்ற அணிகளின், குறிப்பாக நியூசிலாந்து - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவை எதிர்நோக்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேநேரத்தில், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. இதனால், இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்டின் முடிவை இலங்கை ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் வெகுவாக எதிர்நோக்கியிருந்தனர்.

டெஸ்ட் சாம்பியன் - இந்தியா தகுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 355 ரன்களையும் நியூசிலாந்து அணி 373 ரன்களையும் சேர்த்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 302 ரன்களில் ஆட்டமிழந்ததால், நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நான்காவது நாளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை எடுத்திருந்த நியூசிலாந்து அணி கடைசி நாளில் 257 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.

நியூசிலாந்தின் வெற்றியை இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, 5வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணியோ, சிறிது நேரத்திலேயே டாம் லாத்தம், ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.

இதனால், சோர்ந்து போயிருந்த இந்திய ரசிகர்களின் மனதில், அடுத்து வந்த நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டெரைல் மிட்செல் பால் வார்த்தார். ஒருநாள் போட்டிகளைப் போல அதிரடி காட்டிய டெரைல் மிட்செல் சிக்சர், பவுண்டரிகளை விளாசி நெருக்கடியை குறைத்தார்.

டெஸ்ட் சாம்பியன் - இந்தியா தகுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டெரைல் மிட்செல்

மறுபுறம், நட்சத்திர வீரர் கனே வில்லியம்சனும் நிலைத்து ஆடிய அதேநேரத்தில், ஏதுவாக பந்துகளை விளாசவும் தவறவில்லை. கனே வில்லியம்சன் - டெரைல் மிட்செல் ஜோடியின் அபார ஆட்டத்தால் ஆட்டம் மெல்ல மெல்ல நியூசிலாந்து வசமாவது போல் தோன்றியது.

ஆனால், டெரைல் மிட்செல் ஆட்டமிழந்ததும் ஆட்டம் தலைகீழாக மாறியது. டெரைல் மிட்செல் 86 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 81 ரன்கள் குவித்து ரஜிதா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, டாம் ப்ளன்டெல், மிக்கேல் பிரேஸ்வெல், டிம் சவுதி, மாட் ஹென்ரி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, ஸ்டீவன் ஸ்மித், ஜோரூட் போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் வரிசையில் வைத்துப் பார்க்கப்படும் கனே வில்லியம்சன் களத்தில் நிலைத்து நின்றது, நியூசிலாந்து ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்களுக்கும் நம்பிக்கை கொடுத்தது. அந்த நம்பிக்கையை அவரும் காப்பாற்றினார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்தியா தகுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி 2 ஓவர்களில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டதால் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர். கடைசிக்கு முந்தைய ஓவரில் டிம் சௌதி ஆட்டமிழந்து வெளியேறிய போது அந்த அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டன.

இதனால், ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது. அந்த ஓவரில் நியூசிலாந்து அணி மேலும் 4 ரன்களைச் சேர்க்க, அந்த அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டன.

நிமிடத்திற்கு நிமிடம் ஆட்டம் பரபரப்பாக நகர, கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை கனே வில்லியம்சன் அடித்துவிட்டு இரண்டாவது ரன் எடுக்க முயல்கையில் மறுமுனையில் இருந்த ஹென்றி ரன்அவுட்டானார்.

கடைசி 3 பந்துகளில் நியூசிலாந்து அணிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்த பந்தை கனே வில்லியம்சன் பவுண்டரிக்கு விளாசி நெருக்கடியைத் தணித்தார். அஷிதா பெர்னாண்டோ வீசிய அடுத்த பந்தை வில்லியம்சன் அடித்தாட முயலவே, பந்து பேட்டில் படவில்லை.

கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், அஷிதா பெர்னாண்டோ லெக் சைடில் வீசிய பந்தை கனே வில்லியம்சன் மீண்டும் தவறவிட்டார். பந்தை இலங்கை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா பிடித்துவிட்டாலும்கூட நியூசிலாந்து வீரர்கள் வெற்றிக்கான ரன்னை எடுக்க ஓடினர்.

இதையடுத்து, ஸ்டம்பை நோக்கி நிரோஷன் டிக்வெலா பந்தை எறிய, அது ஸ்டம்பை தாக்கவில்லை. பிட்சின் நடுப்பகுதியில் இருந்து பந்தைப் பிடித்த பந்துவீச்சாளர் பெர்னாண்டோ, நான்-ஸ்டிரைக்கர் முனையில் ஸ்டம்பை நோக்கி எறிய, அது குறி தவறாமல் ஸ்டம்பை பெயர்த்தது. அதேநேரத்தில், கிரீசுக்கு சற்று முன்பிருந்து கனே வில்லியம்சன் பாய்ந்து உள்ளே வந்து விழுந்தார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்தியா தகுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வெற்றிக்கான கடைசி ரன்னுக்காக கிரீசுக்குள் பாய்ந்த வில்லியம்சன்

இலங்கை வீரர்கள் ரன் அவுட் கேட்டு முறையிட, மூன்றாவது அம்பயரின் முடிவை நடுவர் நாடினார். வீடியோ ரிவியூவில், பந்து ஸ்டம்புகளை தாக்குவதற்கு முன்பே கனே வில்லியம்சன் கிரீசுக்குள் வந்துவிட்டது தெளிவாகவே, நியூசிலாந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அந்த அணி இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கடைசி வரை பரபரப்பாக நகர்ந்த இந்த டெஸ்டில், கடைசி பந்தில் எக்ஸ்ட்ரா வகையில் அதுவும் கிரீசுக்குள் கனே வில்லியம்சன் டைவ் அடித்து வந்து அந்த அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அவரது அந்த டைவ்தான், இந்திய அணிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது.

ஆம். முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி பெற்ற வெற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இலங்கை அணிக்கு இருந்த வாய்ப்புகளைப் பறித்துவிட்டது. அந்த வாய்ப்பு இந்தியாவுக்கா? இலங்கைக்கா? என்றிருந்த இழுபறி நியூசிலாந்து வெற்றியின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் முறையே முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட், நியூசிலாந்து - இலங்கை மோதும் இரண்டாவது டெஸ்ட் ஆகியவற்றின் முடிவுகள் இந்த வரிசையில் எந்த வகையிலும் பாதிக்காது.

பார்டர் - கவாஸ்கர் கோப்பையுடன் இந்திய, ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பார்டர் - கவாஸ்கர் கோப்பையுடன் இந்திய, ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன்கள்

ஆகவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை நடக்கிறது.

ஜூன் 12ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மழை அல்லது வேறு காரணங்களால் ஆட்டம் தடைபட்டால், அந்த நாளில் ஆட்டம் தொடரும்.

2021ஆம் ஆண்டு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்திய போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்து நியூசிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்த இந்திய அணி, தனக்குக் கிடைத்துள்ள இரண்டாவது வாய்ப்பில் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய அளவில் ரன் குவிக்காமல் திணறி வந்த விராட் கோலி சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பியிருப்பதும், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் போன்ற மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டமும் நம்பிக்கை தருவதாக உள்ளது.

அத்துடன், பார்டர்-கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதும் இந்திய அணிக்கு உத்வேகம் தருவதாக அமையும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c1wdpy14wxjo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து ஏற்படுத்திய திருப்பம்; 'காலி அரங்கில்' முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்

இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

13 மார்ச் 2023, 12:28 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது. முதல் இன்னிங்கிஸ் 186 ரன்கள் குவித்த இந்திய ஆட்டக்காரர் விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கியது.

ஆமதாபாத்தில் நடைபெற்றுவந்த 4வது டெஸ்ட் போட்டியின் முடிவை இன்று முற்பகல் வரை இந்திய ரசிகர்கள் ஒருவித பதற்றத்தோடு எதிர்பார்த்து வந்தனர். இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தாலோ அல்லது ஆட்டம் டிராவில் முடிந்தாலோ ஜூன் மாதம் நடைபெறும் உலகக் கோப்பை டெஸ்ட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியாமல் போகும் என்பதே அதற்கான காரணம். இந்த ஆட்டம் டிராவில் முடியும் சாத்தியமே அதிகமாக இருந்ததால், இந்திய அணி டெஸ்ட் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் போய்விடுமோ என்ற அச்சம் இந்திய ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், 12 மணிக்கு மேல் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்திய ரசிகர்களின் நிம்மதிக்கு காரணம் நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவுதான். இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் நியூசிலாந்தில் வெற்றிபெற்றது. இதனால் டெஸ்ட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் போட்டியில் இந்தியாவுடன் இருந்த இலங்கை அணி, அந்த வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை டெஸ்ட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது.

 

மறுபுறம், ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் டிராவிலேயே முடிந்தது. முத இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்களும் இந்திய அணி 571 ரன்களை எடுத்திருந்தது. 4வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்களை எடுத்திருந்தது.

5-ஆவது மற்றும் கடைசி நாளான இன்று குன்னேமன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் பேட்டிங் செய்ய களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே 6 ரன்கள் சேர்த்திருந்த குன்னேமன், அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த லபூஷனே, டிராவிஸ் ஹெட் உடன் இணைந்தார். இந்த கூட்டணி மிகப்பொறுமையாக ரன்களை சேர்த்தது.

முதல் விக்கெட்டை இன்றைய ஆட்டம் தொடங்கிய 5-ஆவது ஓவரிலேயே வீழ்த்திய இந்திய அணி அடுத்த விக்கெட்டை வீழ்த்த 60-ஆவது ஓவர் வரை காத்திருக்க வேண்டிருந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் எடுத்திருந்தபோது அக்சர் படேலிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக ரன் குவிக்க பெரிதாக ஆர்வம் காட்டாமல், நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

ஆஸ்திரேலியா அணி விக்கெட்டுகளை விரைவாக இழக்கவில்லை என்றாலும், ரன் குவிப்பில் சொல்லிக்கொள்ளுமளவு வேகம் தென்படவில்லை. ஒருகட்டத்தில், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் புஜாராவும் பந்துவீச்சில் ஈடுபடும் அளவுக்கு ஆட்டம் மிக பொறுமையாக நகர்ந்துகொண்டிருந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டம் முடிய சுமார் 15 ஓவர்கள் மீதமிருந்த போது இரு அணி கேப்டன்களும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர். அப்போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் லபூஷனே 63 ரன்களும், ஸ்மித் 10 ரன்களும் எடுத்து அப்போது களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்திய அணி 2-1 என்ற கணக்கில் பார்டர்- கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.

ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் அவர் 186 ரன்களை எடுத்திருந்தார். தொடர் நாயகர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டனர். போட்டிக்கு பின் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, `டெல்லி டெஸ்ட் போட்டி நான் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று என்று நினைக்கிறேன், ஏனென்றால் நாங்கள் விளையாட்டில் மிகவும் பின்தங்கியிருந்தோம். மீண்டு வர வேண்டியிருந்தது என்றார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 17ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

https://www.bbc.com/tamil/articles/cqle2j8k880o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இர‌ண்டு அணிக‌ளும் அதிக‌ ர‌ன்ஸ்ச‌ அடிச்ச‌ படியால்

நீண்ட‌ ஓவ‌ர் தாக்கி பிடிச்ச‌ ப‌டியால் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிஞ்ச‌து..................க‌வாஜா சூப்ப‌ரா விளையாடினார் இந்த‌ தொட‌ரில்..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலி, ரோகித்தை விட அதிக ரன் சராசரி: அக்ஷர் படேல் அடுத்த கபில் தேவ் ஆவாரா?

அக்ஷர் படேல் ஆல்ரவுண்டர் ஆவாரா?

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

அக்ஷர் படேல்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,விதான்ஷு குமார்
  • பதவி,விளையாட்டுப் பிரிவு செய்தியாளர், பிபிசி இந்தி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பார்டர்-கவாஸ்கர் டிராஃபியின் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் பல வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

இந்த வீரர்கள் தொடரின் வெவ்வேறு கட்டங்களில் தங்கள் முத்திரையை பதித்துள்ளனர். ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி மற்றும் க்வாஜாவின் அதிரடியான சதங்களும், அஷ்வின், ஜடேஜா மற்றும் லயன் ஆகியோரின் மேட்ச் வின்னிங் ஸ்பெல்களும் இதில் அடங்கும்.

இந்த வீரர்கள் சில அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடி அல்லது சில சிறந்த ஸ்பெல்கள் பந்து வீசி தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.. ஆனால் இந்த பேட்ஸ்மேன்கள் அல்லது பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார்களா?

இந்தத் தொடரில் வீரர்களின் தொடர்ச்சியான நல்ல செயல்பாடு பற்றி நாம் பேசினால் இந்த நட்சத்திர வீரர்களிடமிருந்து நாம் விலகிச்செல்லவேண்டும். நாக்பூரின் சுழல்பந்து வீச்சுக்கு உதவிடும் ஆடுகளமாக இருந்தாலும் சரி, அகமதாபாத்தின் பேட்டிங்கிற்கு துணைபுரியும் ஆடுகளமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு இன்னிங்ஸிலும் முழு நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவித்த ஒரு வீரரை நாம் பார்க்கவேண்டும்.

 

களத்தின் ஒரு முனையில் இருந்து தொடர்ந்து பந்துவீசிய அவர் சில முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்தபோதும் அதிக ரன்களை குவித்து, பந்துவீச்சில் குறைந்த எண்ணிக்கையில் ஓவர்கள் கிடைத்தபோதும் அதில் தாக்கத்தை ஏற்படுத்திய அக்ஷர் படேலைப் பற்றி நாம் பேசுகிறோம்.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அக்ஷர் படேலால் இன்றுவரை டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 ஆகியவற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

எந்த ஒரு பெரிய வீரரும் இல்லாத நிலையில் அவருக்குப் பதிலாக அணியில் வரும் அக்ஷர் படேல் உண்மையில் ’இடத்தை இட்டு நிரப்பும் வீரரா’ அல்லது அவரது திறமைக்கு முழு நீதியை தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் செய்யவில்லையா?

அக்ஷர் படேல் ஆல்ரவுண்டர் ஆவாரா?

பட மூலாதாரம்,ANI

பேட்டிங் வரிசையில் கீப்பருக்கு முன் களம் இறக்கப்பட வேண்டும்

முதலில் இந்த தொடரில் அக்ஷர் படேலின் ஆட்டத்தை பார்ப்போம். இந்தத் தொடரின் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றார், அதில் அவர் 88 என்ற சராசரியில் 264 ரன்கள் எடுத்தார்.

அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் இரண்டு முறை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது சராசரி இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக இருந்தது. க்வாஜா, கோலி அல்லது ரோஹித்தின் சராசரி இவரது சராசரியை நெருங்க முடியவில்லை.

அவர் நாக்பூரில் 84 ரன்கள் எடுத்தார், கவாஸ்கர், மார்க் வாஹ் மற்றும் பிற வர்ணனையாளர்களும் இதை மேட்ச்-வின்னிங் இன்னிங்ஸ் என்று அழைத்தனர். படேல் விரைவில் ஆட்டமிழந்திருந்தால், அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்திருக்கலாம். மேலும் இந்தத் தொடருடன் கூடவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் காட்சியும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

இதற்கு அடுத்த போட்டியில், அவர் 74 ரன்கள் எடுத்து ஒரு முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார். இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் டாப் ஆர்டரை விட அதிக ரன்களை எடுத்தனர், இதில் அக்ஷர் பட்டேலின் இன்னிங்ஸ் மிகப்பெரிய பங்கு வகித்தது.

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில், ஸ்பின்னிங் டிராக்குகள் தயாரிக்கப்பட்டன. அதில் பேட்டிங் செய்து ரன்களை எடுப்பது பெரிய பேட்ஸ்மேன்களுக்கே கடினமான காரியம். இந்தூர் ஆடுகளத்தில் இந்தியா மோசமான பேட்டிங் காரணமாக போட்டியை இழந்தபோதிலும் கூட, அக்ஷர் படேல் இரண்டு இன்னிங்ஸிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அவர் ரன்கள் குவிப்பதையும், ஆடுகளத்தில் முதல் பந்திலேயே மிகவும் உறுதியான பேட்ஸ்மேனாக தோற்றமளிப்பதையும் கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் அவரை பேட்டிங் வரிசையில் முன்னால் கொண்டுவந்திருக்க வேண்டாமா?

இவருடன் ஒப்பிடும்போது ஸ்ரீகர் பாரத் மற்றும் கே.எல்.ராகுல், மிகக் குறைவான ரன்களே எடுத்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை பேட்டிங் வரிசையில் முன்னே கொண்டுசெல்லாமல் நிர்வாகம் ஒரு வாய்ப்பை தவறவிட்டது. அப்படி செய்திருந்தால் ஒருவேளை இந்தூரில் அவர் இன்னும் அதிக ரன்களை எடுத்திருப்பார், அந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றிருக்க்க்கூடும்.

இந்தத் தொடரில் அவர் அதிகபட்ச சராசரியுடன் ரன்களை குவித்தது மட்டுமல்லாமல், அதிகபட்ச சிக்ஸர்களையும் விளாசினார். அவர் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்தார். விக்கெட்டுகள் விரைவாக விழும்போது கவனமாக விளையாடினார். மேலும் வேகமாக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை அணிக்கு ஏற்பட்டபோது அவர் அதையும் செய்துகாட்டினார்.

அகமதாபாத் டெஸ்டில் கூட சில ரன்களில் அவர் சதத்தை தவறவிட்டார். ஆனாலும் இங்கும் நான்கு சிக்சர்கள் அடித்தார். அணியின் நலன் கருதி ஸ்கோர் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவுட் ஆனார்.

அக்ஷர் பந்துவீச்சில் ரோஹித்திற்கு நம்பிக்கை இல்லையா?

அக்ஷர் படேல் ஆல்ரவுண்டர் ஆவாரா?

பட மூலாதாரம்,ANI

இந்த தொடரில் படேலின் பந்துவீச்சைப் பார்த்தால், அவர் அதிகம் செய்யவில்லை என்றே தோன்றும். உண்மையில் அக்ஷர் படேல் ஒரு பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அடையாளம் காணப்பட்டாலும், இந்த தொடரில் அவருக்கு பேட்டிங்கில் வாய்ப்புகள் கிடைத்தது, ஏனெனில் டாப் ஆர்டரால் சிறப்பாக எதுவும் செய்ய முடியவில்லை. பந்துவீச்சில் அவருக்கு குறைவான ஓவர்களே வழங்கப்பட்டன.

அஷ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி அணியில் இருக்கும்போது, மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் அரிதாகவே வாய்ப்பு பெறுகிறார்.

அவர் அகமதாபாத்தில் சிறந்த வெற்றியைப் பெற்றார். ஏனென்றால் மறுமுனையில் விக்கெட்டுகள் விழாததால் கேப்டன் அவருக்கு அதிக ஓவர்களைக் கொடுத்தார்.

அணி நிர்வாகத்திற்கு அவருடைய பந்துவீச்சில் நம்பிக்கை குறைவாக இருப்பது போல் தெரிகிறது. மேலும் அஷ்வின்-ஜடேஜா மற்றும் சீமர்கள் விக்கெட்டுகளை எடுக்கும் பணியை முடித்து விடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது திறமையை முழுமையாகப் பயன்படுத்தாதது போல உள்ளது. அணிக்கு எந்த வகையிலும் இது உதவாது. நல்ல பேட்டிங், பந்துவீச்சிலும் ஆல்-ரவுண்டருக்கு உதவுகிறது, அதிக ஓவர்கள் கொடுத்திருந்தால் அவர் இன்னும் சில விக்கெட்டுகளை எடுத்திருக்கக் கூடும்.

ஒப்பீட்டளவில் ஆல்ரவுண்டர் வரிசையில் அக்ஷர் எங்கே இருக்கிறார்?

அக்ஷர் படேல் ஆல்ரவுண்டர் ஆவாரா?

பட மூலாதாரம்,ANI

அக்ஷர் படேல் 2014ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 2015 ஆம் ஆண்டு முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய அவர், 2022ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

அவர் 40 டி20 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தி 288 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 49 போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுகளை வீழ்த்தி 381 ரன்கள் எடுத்துள்ளார்.

அவரது திறமை டெஸ்ட் பந்தயங்களில்தான் அதிகமாக வெளிப்பட்டுள்ளது. தற்போதைய டெஸ்டுக்கு முன்புவரை அவர் விளையாடிய 11 போட்டிகளில் 16.14 சராசரியில் 48 விக்கெட்டுகளையும், 33.38 சராசரியில் 434 ரன்களையும் எடுத்துள்ளார்.

அவரது ஆட்டத்தை ஜடேஜா அல்லது அஷ்வினின் ஒட்டுமொத்த ஆட்டத்திறனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்றால், போட்டியின் எண்ணிக்கையில் படேல் இருவரையும் விட மிகவும் பின்தங்கியிருப்பதால் சராசரியைப் பார்க்க வேண்டியது அவசியம்.

டெஸ்ட் போட்டிகளில், அஸ்வின் 23.97 சராசரியிலும், ஜடேஜா 23.84 சராசரியிலும் விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். மறுபுறம் பேட்டிங்கில் அஷ்வினின் ரன் சராசரி 27.14. ஜடேஜா சராசரியாக 36 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒரு பேட்ஸ்மேனாக அவர் அஷ்வினுக்கு மேல் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் பந்துவீச்சில் அவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டால் இந்த எண்ணிக்கை மேலும் முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கேப்டன் ரோஹித் ஷர்மாவைப் பற்றி பேசினால், அவர் இந்த சூழ்நிலையைப் பற்றி கவலைப்பட மாட்டார். இது உண்மையில் 'ப்ராப்ளம் ஆஃப் பிளென்டி'. பெரும்பாலான போட்டிகளில் அவர் மூன்றில் இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், படேல் இப்படியே தொடர்ந்து பேட் செய்தால் ஒருநாள் அவர் பேட்ஸ்மேனாக அணியில் இடம் பெறுவார். அவருக்குத்தேவை தொடர்ச்சியான வாய்ப்புகள்.

https://www.bbc.com/tamil/articles/cgeqy2lzr0no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு வேற வேலையே இல்லை. யாரை யாரோடு ஒப்பிடுவதென்ற அறிவேயில்லை. அக்சாருக்கும் கபிலுக்கும் இடையேயுள்ள தூரம் மலைக்கும் மடுவுக்குமானது! இந்தியாவில் விளையாடிய 4 டெஸ்ட்டிலேயே எடுத்தது 3 விக்கெட்தான். அதுக்குள்ள பௌலிங் ஆல்ரவுண்டராம்!!🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Eppothum Thamizhan said:

இவங்களுக்கு வேற வேலையே இல்லை. யாரை யாரோடு ஒப்பிடுவதென்ற அறிவேயில்லை. அக்சாருக்கும் கபிலுக்கும் இடையேயுள்ள தூரம் மலைக்கும் மடுவுக்குமானது! இந்தியாவில் விளையாடிய 4 டெஸ்ட்டிலேயே எடுத்தது 3 விக்கெட்தான். அதுக்குள்ள பௌலிங் ஆல்ரவுண்டராம்!!🤣

இவ‌ரின் பந்து வீச்சு பெரிசா எடுப‌ட‌ வில்லை

ஆனால் அதிர‌டியா ஆட‌க் கூடிய‌ வீர‌ர்...............
இவ‌ர் போன்ற வீர‌ர்க‌ள் க‌ன்டிப்பாய் அணியில் தேவை................ஜ‌டேஜா ம‌ற்றும் அஸ்வின் இந்த‌ தொட‌ரில் அதிக‌ விக்கேட் எடுத்த‌வை..............இவ‌ரை விட‌ அஸ்வின் ரெஸ் விளையாட்டில் 4 செஞ்ச‌ரி அடிச்ச‌வ‌ர் நிறைய‌ 50ர‌ன்ஸ்................இன்னும் 26 விக்கேட் எடுத்தா கிரிக்கேட் வ‌ர‌லாற்றில் 500விக்கேட் எடுத்த‌வை லிஸ்ரில் அஸ்வினின் பெய‌ரும் இருக்கும்...........முர‌ளித‌ர‌ன்ட‌ 800 விக்கேட் சாத‌னையை இனி எந்த‌ ப‌ந்து வீச்சாள‌ரும் உடைக்க‌ வாய்பில்லை..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

இவங்களுக்கு வேற வேலையே இல்லை. யாரை யாரோடு ஒப்பிடுவதென்ற அறிவேயில்லை. அக்சாருக்கும் கபிலுக்கும் இடையேயுள்ள தூரம் மலைக்கும் மடுவுக்குமானது! இந்தியாவில் விளையாடிய 4 டெஸ்ட்டிலேயே எடுத்தது 3 விக்கெட்தான். அதுக்குள்ள பௌலிங் ஆல்ரவுண்டராம்!!🤣

அவங்களுக்கு எழுத ஒன்றும் சிக்காட்டி, இப்பிடி ஏதும்....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுகளுக்கு நன்றி ஏராளன் .....!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அவங்களுக்கு எழுத ஒன்றும் சிக்காட்டி, இப்பிடி ஏதும்....

எழுதும் போது கூட‌ அண்ணா ச‌ரியா எழுதின‌ம் இல்லை

இன்னொரு திரியில் இல‌ங்கை நியுசிலாந் ரெஸ் விளையாட்டை ப‌ற்றி பிழையான‌ புள்ளி விப‌ர‌த்தோடு எழுதினவை...............ம‌ழை பெய்த‌ நேர‌த்தில் இருந்து குறைக்க‌ப் ப‌ட்ட‌ ஓவ‌ரில் இருந்து எல்லாம் பிழையான‌ செய்தியை ஊட‌க‌ம் மூல‌ம் ம‌க்க‌ளுக்கு தெரிய‌ப் ப‌டுத்தின‌ம்............................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ்: இந்திய சுழல் கூட்டணியின் மேஜிக் ஆஸ்திரேலியாவின் வேகத்தை மட்டுப்படுத்துமா?

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், வான்கடே

பட மூலாதாரம்,YEARS

16 நிமிடங்களுக்கு முன்னர்

சில காயங்கள், சிலருக்கு நம்பிக்கையிழப்பு, கேப்டன், துணை கேப்டன் விவாதம் எனப் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே இன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி களம் காண்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தனது பலம், பலவீனத்தைச் சோதிக்க இந்தத் தொடர் ஒரு பொன்னான வாய்ப்பு.

சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அதைத் தொடர்ந்து நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் உலகின் இரண்டு வலுவான அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா போதுகின்றன.

 

வரவுள்ள உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஒருநாள் போட்டி எங்கு நடைபெறுகிறது?

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், வான்கடே

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையிலும் நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கான அட்டவணை

  • முதல் போட்டி – 17 மார்ச் 2023 (வெள்ளிக்கிழமை)
  • 2வது போட்டி – 19 மார்ச் 2023 (ஞாயிற்றுக்கிழமை)
  • 3வது போட்டி – 22 மார்ச் 2023 (புதன்கிழமை)

இந்தியா vs ஆஸ்திரேலியா யாருக்கு கூடுதல் பலம்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒருநாள் தரவரிசை பட்டியலின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் அணி 114 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் 112 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்தில் உள்ளது.

தரவரிசையில் இந்தியா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை இந்தத் தொடரின் முடிவு தீர்மானிக்க இருக்கிறது.

2022-23ஆம் ஆண்டில் இந்திய அணி சொந்த மண்ணில், இலங்கை, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தியுள்ளது. அதேநேரத்தில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு எதிராக வெளிநாட்டில் ஒருநாள் போட்டித் தொடரை இழந்துள்ளது.

  • இந்தியா - நியூசிலாந்து தொடர் - நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வெற்றி
  • இந்தியா - வங்கதேசம் தொடர் - வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என வெற்றி
  • இந்தியா - இலங்கை தொடர் - இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வெற்றி
  • இந்தியா - நியூசிலாந்து தொடர் - இந்தியா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வெற்றி
இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், வான்கடே

பட மூலாதாரம்,YEARS

2022-23ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, சொந்த மண்ணில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் தொடரை இழந்தது.

  • ஆஸ்திரேலியா - இலங்கை தொடர் - இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என வெற்றி
  • ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே தொடர் - ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என வெற்றி
  • ஆஸ்திரேலியா - இங்கிலாந்து தொடர் - ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வெற்றி
  • ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர் - ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வெற்றி

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் சமீபத்திய செயல்திறனைப் பார்க்கும்போது, சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்றுள்ள வெற்றி இது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளின் கேப்டன்கள்

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், வான்கடே

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதில் இருந்து, இந்திய அணியின் கேப்டன்ஷிப்பில் அடிக்கடி மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

இந்திய அணிக்கு இப்போது ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தாலும், ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஆகியோரும் சில காலம் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விடுப்பில் இருப்பதால் அவர் கேப்டனாக செயல்பட முடியாது. இந்நிலையில் முதல் முறையாக ஹர்திக் பாண்டியா இந்திய ஒருநாள் அணியை வழிநடத்துவார் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முதல் போட்டியைத் தவிர எஞ்சிய 2 போட்டிகளிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய அவர், ஒருநாள் போட்டிகளில் தனது திறமையைக் காட்ட முடியுமா இல்லையா என்ற கேள்விக்கு இந்தத் தொடர் விடையளிக்கும்.

இந்தியாவை போலவே ஆஸ்திரேலிய அணியும் கேப்டன் பதவியை வெவ்வேறு வீரர்களிடம் வழங்கி வருகிறது.

கடந்த 5 ஒருநாள் தொடர்களில் ஆஸ்திரேலிய அணிக்கு 4 வீரர்கள் கேப்டனாக இருந்துள்ளனர்.

கடந்த செப்டம்பரில் ஆரோன் ஃபின்ச் ஓய்வு பெற்றதை அடுத்து கம்மின்ஸ் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் ஜோஸ் ஹேசில்வுட் நவம்பரில் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்திய அணிக்கு எதிரான தொடரில் இப்போதைய கேப்டனான பேட் கம்மின்ஸ் ஆடவில்லை. எனவே 51 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிராவை ஆஸ்திரேலியாவுக்காக பெற்றுத் தந்தார்.

இந்தியாவுடன் 10 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக கேப்டனாக செயல்பட்டுள்ள ஸ்மித், 5 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.

காயங்கள் தலைவலியாக இருக்குமா?

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், வான்கடே

பட மூலாதாரம்,YEARS

ஏற்கெனவே இந்திய அணியின் நட்சத்திர பவுலரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக அணியில் இல்லை. இவர் மீண்டும் ஜூன் மாதத்திற்குப் பிறகு அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்ததால், அவரும் இன்று தொடங்கும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அடுத்து வரும் போட்டிகளில் அவருக்குப் பதிலாக இந்திய அணியில் யார் களமிறக்கப்படுவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பன்ட் இன்னும் அணிக்குத் திரும்பவில்லை.

மறுபுறம், ஆஸ்திரேலியாவின் முக்கிய பந்துவீச்சாளர் ஹேசில்வுட்டும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

அந்த அணியின் ஆக்ரோஷமான ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லும் கடந்த நவம்பர் மாதம் முதல் காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ளார். அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் மேக்ஸ்வெல் அணிக்குத் திரும்புவது உறுதியாகவில்லை என ஊடக செய்திகள் கூறுகின்றன.

  • இரு அணிகளும் இதற்கு முன்பு 143 முறை ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 80 முறையும் இந்தியா 53 முறையும் வென்றுள்ளன.
  • கடைசியாக இரு அணிகளுக்கும் இடையே நடந்த 20 போட்டிகளில் இந்திய அணி 12 போட்டிகளும் ஆஸ்திரேலிய அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
  • இந்திய அணி கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 10 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. எஞ்சிய 9 போட்டிகளையும் தன்வசமாக்கியுள்ளது.

நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் 8 இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 63 முறை விக்கெட்டுகளை இழந்தது. இதில் 50 முறை அந்த அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களே.

ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சஹால் ஆகியோர் அடங்கிய சுழல் கூட்டணி மீண்டும் மேஜிக்கை நிகழ்த்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து இரு அணிகளும் விளையாடும் என்பதால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் - அர்னாவ், அபிஜித் ஸ்ரீவஸ்தவா

https://www.bbc.com/tamil/articles/cl467n0z121o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் தொட‌ரில் முத‌லாவ‌து விளையாட்டில் அவுஸ்ரேலியா தொல்வி....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்த கே.எல்.ராகுல்: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

17 மார்ச் 2023

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளின் கேப்டன்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை, நெருங்கிய உறவினர் திருமணத்தில் பங்கேற்பதால் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

 

இதேபோல், ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், டெஸ்ட் போட்டியின்போதே தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஆஸ்திரேலியா திரும்பினார். அவரது தாயார் உயிரிழந்த நிலையில், ஆஸ்திரேலியாவிலேயே குடும்பத்தினருடன் அவர் உள்ளார்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே டிராவிஸ் விக்கெட்டை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணிக்கு முகமது சிராஜ் அதிர்ச்சியளித்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிட்செல் மார்ஷ் அதிரடி

டிராவிஸ் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 2 ஓவர்களுக்கு 5 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் - ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். குறிப்பாக, மிட்செல் மார்ஷின் பேட்டிங் மிரட்டலாக அமைந்தது. சிராஜ் வீசிய 4வது ஓவரில் மூன்று பவுண்டரிகளை மார்ஷ் விளாசினார்.

மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த ஸ்டீவன் ஸ்மித், ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை ஆட முயன்றபோது பேட்டின் முனையில் பட்ட பந்து விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்சாக தஞ்சம் புகுந்தது.

அப்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை எடுத்திருந்தது. 2 விக்கெட்களை இழந்திருந்தாலும் எவ்வித அழுத்தமும் இல்லாமால் தனது அதிரடியை மார்ஷ் தொடர்ந்தார்.

குல்தீப் யாதவ் வீசிய 17வது ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்து தனது அரை சதத்தை கடந்த மார்ஷ் அடுத்த பந்தையும் பவுண்டரிவுக்கு விரட்டினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 100 ரன்களை கடந்தது.

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்பம் தந்த ஜடேஜா

ஜடேஜா வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்டிய மார்ஷ், குல்தீப் யாதவ் வீசிய 19ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.

அவரது விக்கெடை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிக்கு அடுத்த ஓவரில் பலன் கிடைத்தது. ஜடேஜா வீசிய 20வது ஓவரின் 3வது பந்தை பவுண்டரிக்கு விளாசிய மார்ஷ் அடுத்த பந்தையும் தூக்கியடிக்க முயன்றார். ஆனால், அதை முகமது சிராஜ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இதையடுத்து 5 சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட 81 ரன்களில் மிட்செல் மார்ஷ் வெளியேறினார்.

அடுத்தடுத்து விக்கெட்கள் இழப்பு

அடுத்த மூன்று ஓவர்களிலேயே மார்னஸ் லபுஷேன் 15 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முகமது ஷமி வீசிய ஆட்டத்தின் 28வது ஓவரில் ஜோஷ் இங்க்லிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷமி வீசிய 30 ஓவரில் கேமரூன் கிரீன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து களத்தில் ஆடி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

19 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா

அதன் பின்னர் ஆட்டம் முழுக்க முழுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் பக்கம் திரும்பியது. மேக்ஸ்வெல் (8), மார்கஸ் ஸ்டோனிஸ் (5), சீன் அப்போட் (0), ஆடம் ஜாம்பா(0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து நடையை கட்டினர். இறுதியில் 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 188 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. இந்திய தரப்பில் முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் என்ற வலுவான நிலையிலேயே ஆஸ்திரேலியா இருந்தது. ஆனால், முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோரின் தாக்குதலில் அடுத்த 16 ஓவர்களில் 7 விக்கெட்களை ஆஸ்திரேலிய அணி இழந்தது. 169 - 5 என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா மேற்கொண்டு 19 ரன்களை மட்டும் சேர்த்து 5 விக்கெட்களை இழந்தது.

தொடக்கமே அதிர்ச்சியளித்த இந்தியா

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. இஷான் கிஷன்- சுப்மான் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே நிரூபித்தனர். ஸ்டோனிஸ் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து இஷான் கிஷன் வெளியேறினார்.

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் டாப் ஆர்டரை சிதைத்த ஸ்டார்க்

5 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த இந்தியாவுக்கு 5வது ஓவரிலேயே மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து ஸ்டார்க் மிரட்டினார். அப்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து சுப்மான் கில், கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தனர். சுப்மான் கில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்னில் இருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்தை தூக்கி அடிக்க அவர் முயற்சித்தபோது லபுஸ்சேனிடம் கேட்சாக அது மாறியது.

இதையடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். பவுண்டரியுடன் தனது இன்னிங்க்ஸை தொடங்கிய பாண்டியா கே.எல். ராகுலுடன் இணைந்து மேற்கொண்டு விக்கெட் சரியாமல் பார்த்துகொண்டார். ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட் சரியாமல் இருவரும் பார்த்துகொண்டனர். இவர்கள் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றனர். எனினும் 20வது ஓவரில்தான் அவர்கள் முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஸ்டோனிஸ் வீசிய பவுன்சரை பாண்டியா கூக்‌ஷாட் ஆட முயன்றபோது கேமரூன் கிரீனிடம் கேட்சாக அது மாறியது. அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 83 ஆக இருந்தது.

இதையடுத்து கே.எல். ராகுலுடன் ரவிந்திர ஜடேஜா இணைந்தார்.

ஆஸி. கனவை தகர்த்த கே.எல்.ராகுல் - ஜடேஜா

ஆஸ்திரேலியா அணியை போன்று இந்திய அணியின் தொடக்க விக்கெட்களும் மளமளவென சரிந்ததால் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் சென்றபோது போன்ற தோற்றம் ஏற்பட்டது. மீதமுள்ள விக்கெட்களையும் விரைவாக வீழ்த்திவிட்டு வெற்றி வாகை சூடிவிடலாம் என்று ஆஸ்திரேலியா நினைத்தது. ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் கே.எல்.ராகுல்- ஜடேஜாவின் ஆட்டம் இருந்தது. வெற்றி இலக்கு குறைவானதாக இருந்ததால் ஷாட் அடித்து மேற்கொண்டு விக்கெட் வீழ்வதை தவிர்த்து ஒவ்வொரு ரன்னாக சேர்ப்பதில் இருவரும் முனைப்பு காட்டினர். கிடைத்த நல்ல பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அனுப்பினர். இவர்கள் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை.

கடந்த சில ஆட்டங்களாகவே ரன்கள் குவிக்க தவறிவந்த கே.எல்.ராகுல், இந்த முறை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேமரூன் கிரீன் வீசிய 34 ஓவரின் 3வது பந்தில் ஒரு ரன் அடித்து தனது 13வது அரை சதத்தை ராகுல் எட்டினார். அதே ஓவரின் கடைசி பந்தை கே.எல்.ராகுல் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 150 ரன்களை கடந்தது. அரை சதத்தை கடந்ததும் கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆடம் ஜம்பா வீசிய 36வது ஓவரில் கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் இந்தியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தது. ஆட்டமும் இந்தியா பக்கம் திரும்பியது.

இறுதியில் 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றனர். கே.எல்.ராகுல்- ஜடேஜா இணை 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்து அணியின் வெற்றிக்கு பெரிய பங்காற்றினர்.

https://www.bbc.com/tamil/articles/cj57rrlv965o

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.