Jump to content

இழப்பும் துக்கமும்! - சத்குரு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பும் துக்கமும்!

KaviFeb 11, 2023 07:23AM
2VmHzJvp-sadhguru.jpg

சத்குரு

கேள்வி: நெருக்கமான பிரியமான ஒருவரை இழந்து நிற்கும் தருவாயில், அவரை இழந்த துக்கத்தையும் துயரையும் ஒருவர் எவ்வாறு தாங்கிக்கொள்வது?

பதில்

நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் துக்கம் யாரோ ஒருவர் இறப்பதால் ஏற்படுவதல்ல. ஏதோ ஒரு உயிர் விட்டுச்செல்வது எந்த விதத்திலும் உங்களைப் பாதிக்காது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களை விடுகிறார்கள். உங்களின் நகரத்தில் மட்டும் பலர் இறந்து போகிறார்கள். அதனால் பலர் துக்கத்தில் இருக்கிறார்கள். எனினும் அந்த துக்கம் உங்களைப் பாதிப்பதில்லை. அது உங்களுக்குள் ஒரு வெறுமையை உருவாக்குவதில்லை.

பிரச்சனை என்னவெனில், ஒரு குறிப்பிட்ட உயிர் விட்டுச்செல்வது உங்கள் வாழ்வில் ஒரு வெறுமையை உருவாக்குகிறது. அடிப்படையில் உங்கள் துக்கத்திற்கான காரணம் உங்கள் வாழ்வின் அங்கமாக பல வழிகளில் இருந்த ஒருவர் இல்லாமல் போய்விடுவதுதான். உங்கள் வாழ்வின் ஒரு பகுதி வெறுமையாகிவிட்டது. அந்த வெறுமையை உங்களால் கையாள முடியவில்லை. இது எவ்வாறெனில், நீங்கள் ஒரு குழுவினராக ஒரு விளையாட்டை விளையாடுகிறீர்கள். தற்போது திடீரென ஒருவர் அதிலிருந்து விலகிவிட்டார். அதனால் அந்த விளையாட்டில் இப்போது ஒரு பிளவு ஏற்பட்டுவிட்டது. அதை உங்களால் கையாள முடியவில்லை.

யாரோ ஒருவரைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக் கொண்டீர்கள். உங்கள் மனதில் பல திட்டங்களை வகுத்துள்ளீர்கள் – “நான் இந்த நபரை மணந்துகொள்ளப் போகிறேன், நான் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளப் போகிறேன், நான் அந்த குழந்தைகளை இவ்வாறு வளர்க்கப் போகிறேன்” என்றெல்லாம் பல்வேறு திட்டங்கள். ஆனால் தற்போது இந்த நபர் உங்கள் வாழ்க்கையில் இருந்து மறைந்துவிட்டப் பின்னர் திடீரென உங்கள் கனவுகள் எல்லாம் நொறுக்கப்பட்டு விட்டன. உங்களை எவ்வாறு கையாள்வது என்று உங்களுக்கே தெரியவில்லை. நீங்கள் ஒரு ஏமாற்றத்தில் ஆழ்ந்து போகிறீர்கள்.

உங்கள் மருட்சி நீங்குகிறது என்றால் பிழையான ஒரு எண்ணத்தை நீங்கள் நீக்குகிறீர்கள் என்று பொருள். உங்களின் மருட்சி அழியும் போது மாயை அகன்றுவிடுகிறது – உண்மையை ஒப்புக்கொள்ள இதுதான் தகுந்த தருணம். துரதிருஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் மிகுந்த துன்பமும், நாசம் விளைவிக்கும் செயல்முறையாகும் விதமாக தங்களுக்குள் இதை மாற்றிவிடுகிறார்கள்.

Loss and grief sadhguru

உங்கள் துக்கம் என்பது நீங்கள் முழுமையடையாமல் இருப்பதால் நிகழ்வது. துக்கம் என்பது ஒருவர் இறக்காத போதுகூட நிகழக்கூடும். மக்கள் தாங்கள் வெற்றிகரமாக இல்லாத காரணத்தினால் கூட துக்கமாக இருக்கலாம். மக்கள் தாங்கள் அடைய நினைத்ததை அடையாமல் போனதாலோ அல்லது அவர்களின் வீடு எரிந்து போனதாலோ அல்லது அவர்களின் கார் தொலைந்து போனதாலோ கூட துக்கமாக மாறலாம்.

ஒரு குழந்தை தன்னுடைய பொம்மை தொலைந்து போனால் கூட துக்கமாக இருக்கக்கூடும். அந்த குழந்தை தன் பெற்றோர்களை விட அந்த பொம்மையின் இழப்பை பெரிதாகக் கருதக்கூடும். தன்னுடைய நாய்க்குட்டி தொலைந்து போனால் தன் தாத்தாவை இழந்ததைக் காட்டிலும் பெரிதாக துக்கப்படக்கூடும். நான் இத்தகைய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். மக்கள் இவற்றால் மிக அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனால் இதுதான் மனித இயல்பு. அந்த குழந்தைக்கு தன் நாய்க்குட்டியிடம் இருக்கும் பந்தம் தன் தாத்தாவோடு கொண்டிருக்கும் பந்தத்தைவிட மிக ஆழமானது.

ஒருவரை நீங்கள் இழந்து போவதால் எதனால் முழுமையற்றவராக உணருகிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் ஆராய வேண்டும். இந்த உயிர் முழுமையானதாகவே இங்கு வந்திருக்கின்றது. இந்த உயிரை அதன் தன்மையிலேயே நீங்கள் உணர்ந்து கொண்டால் முழுமையற்று இருப்பது என்பது பற்றிய கேள்வியே அங்கு எழாது. இந்த உயிர் முழுமையானது. முழுமையற்ற உயிர் இருக்கின்றதென்றால் படைத்தவன் மோசமான வேலையை செய்திருக்கிறான் என்று அர்த்தம்.

அவ்வாறில்லை, இது மிகவும் மகத்தான வேலை – பெரும்பாலான மக்கள் உணர்ந்து கொள்வதற்கெல்லாம் அப்பாற்பட்டது இது. இது மிக அற்புதமான வேலையும் கூட. உயிரை அதன் தன்மையில் நீங்கள் உணர்ந்திருந்தால் எதுவும் உங்களுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தாது. ஏனெனில் இது முழுமையான உயிர். இதை நீங்கள் உங்கள் தொழிலைக் கொண்டோ, உங்கள் காரைக் கொண்டோ, உங்கள் வீட்டைக் கொண்டோ, உங்கள் குடும்பத்தைக் கொண்டோ, வேறு எதைக் கொண்டும் நிரப்ப முடியாது.

இந்த உயிர் பலவற்றோடு தொடர்பு கொள்ளலாம், உறவு கொள்ளலாம், உடன் இருக்கலாம் அல்லது உள் வாங்கலாம். எனினும் அது தானாகவே ஒரு முழுமையான உயிர். அதன் தன்மை அவ்வாறானதே. இத்தகைய ஒரு அனுபவ நிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் எதை இழந்தாலும் சரி – உங்கள் வேலை, பணம் அல்லது உங்களுக்கு பிரியமான ஒருவர் – எதை இழந்தாலும் நீங்கள் துக்கமடைய மாட்டீர்கள்.

மனிதர்களைப் பொறுத்தவரையில், ஒருவரை அவரது இறப்பினால் நாம் இழந்துவிட்டால், அந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நாம் இழந்த உடமைகளை திரும்பப் பெற இயலும், இழந்த பதவிகளை திரும்பப் பெறலாம், பணம் மற்றும் செல்வத்தையும் திரும்பப் பெறலாம். ஆனால் ஒரு மனிதரை இழந்தால் அதை ஈடுசெய்ய முடியாது. அந்த வகையில் அது மிக ஆழமான துக்கமாக இருக்கும்.

இவ்வாறு நிகழ்வதற்கான காரணம் நம் தன்மையை நாம் படத்தொகுப்பு போல உருவாக்கியுள்ளோம். நாம் எதை வைத்திருக்கிறோம், நம் பதவிகள், நாம் கொண்டுள்ள உறவுகள் மற்றும் நம் வாழ்வில் உள்ள மனிதர்கள் ஆகியவற்றை வைத்தே நாம் யார் என்பது அமைகிறது. இதில் ஏதோ ஒன்றை நாம் தொலைத்துவிட்டால் நம் தன்மையில் அது ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிடுகிறது. அதனால்தான் நாம் துன்பப்படுகிறோம்.
 

 

https://minnambalam.com/featured-article/loss-and-grief-sadhguru-article-in-tamil/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.